வியாழன், 28 பிப்ரவரி, 2019

வேதங்களா? விபரீதங்களா?


கவிஞர் இரா.கண்ணிமை


இந்து சமய வளர்ச்சிக்கு ஆதாரமும் பயன் களுமாயுள்ளவை - வேதங்கள் நான்காம். அவை இருக்கு, யசுர் (எதுர்), சாமம், அதர் வணம் என்பவை. இந்த நான்கு வேதங்களும் பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து வந்த தாய் கதை. இவை சமஸ்கிருத மொழியில் எழு தப்பட்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் கடல்கோள் உண்டான பொழுது பிரம்மாவின் மகன் சுயம்புமனு, இந்த வேதங்களை காப்பாற்றி, வேதாந்தத்தை உண் டாக்கினானாம். மனுவின் காலத்தில் உள்ள பல வித்வான்கள் அக்காலத்தின் பாரம்பரிய செயல்களை சூத்திரங்களாகக் கட்டி வேதங் களை உண்டாக்கினார்களாம்.

இவற்றை எழுதியவர்களில் முக்கியமான வர்கள் - மனு அலர்க்கன், மார்க்கண்டன், விசு வாமித்திரன், பரத்துவாசன், தன் நூறு மகன் களை சபித்து சண்டாளர் ஆக்கிய வசிஷ்டர், வாமதேவன், அகஸ்தியன், தன் தாயின் தலையை அறுத்த பிருகுமுனி, சமதக்கினி, கவுதமன், பிரகஸ்பதி, நாரதன் முதலானவர்கள். இவர்கள் விரிவாக எழுதிவைத்தவைகளைத் தன் உடன் பிறந்தான் மனைவியை சேர்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற வியாச ரிஷி வேதத்தை எல்லாம் சேர்த்து, இருக்கு வேதத்தை, பாலி என்னும் பைலன் ரிஷிக்கும், யசுர் வேதத்தை வைசாம்பாயன் ரிஷிக்கும், சாம வேதத்தை சயமுனி ரிஷிக்கும், அதர்வண வேதத்தை சோமன் என்னும் ரிஷிக்கும் போதிக்க, இவர்கள் மற்றவர்களுக்குப் போதித் தார்களாம்.

வியாசரிடம், யசுர் வேதத்தைப் பெற்ற வைசம் பாயஷ ரிஷி, தன் சீடன் யாஜ்ஞ வல்லியருக்கு கற்பித்தானாம். ஒருநாள் இவ் விருவருக்கும் கடுமையான சண்டை நடந்த போது தன் குரு வைசம்பாயனரிடம் கற்ற வேதத்தை முழுமையாக வாந்தி எடுத்து விட்டானாம். இதைப்பார்த்துக் கொண்டிருந்த தித்திரி என்னும் பறவை அதை எடுத்து விழுங் கியபின் பாட ஆரம்பித்ததாம். இதன் காரண மாய் இதற்கு தைத்தரீயம் என்னும், கிருஷ்ண யசுர் வேதம் - என்ற பெயர் உண்டாயிற்றாம். பிறகு யாஜ்ஞவல்கி ரிஷி சூரியனை வணங்கி சுக்கில யசுர் வேதம் என்னும் ஓர் புது வேதத்தை கற்றுக் கொண்டாராம். இதற்கு வாஜஸ்னேயீ என்று பெயராம்.

வேதத்தில் பிராமணோ என்னும் உபதேச பிரமாணங்களும், சங்கீத்தா எனப்பட்ட மந்தி ரங்களும் உண்டாம். இந்த மந்திரங்களில் சூரியன், சந்திரன், பூமி, நீர், காற்று, நெருப்பு, வானம், புல் பூண்டு, மரங்கள் முதலியவற்றை நோக்கி செய்யும் மந்திரம் - இவைகளைப் பல ரிஷிகள் உண்டாக்கியதாய் தெரிகிறது.

கற்பிக்கும் பிரமாணங்களோ, பிராமணர் கள் (பார்ப்பனர்கள்) செய்யும் பூஜைகளின் விவரங்களை குறித்தும், மந்திர உபதேசங் களை குறித்தும்,  சடங்காச்சார விதி நியமனங் களைக் குறித்தும் கற்பிக்கிறது.

இந்த வேதங்களில் பெரும்பாலும் நடை முறைகளை பல அசிங்கமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. பரப்பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறது என்றும், அது உலகத்தின் மாயை என்றும், எந்தப் பொருளும் அதன் தோற்றம் என்றும், இவ்வுலகத்தை உண்டாக்கி அதை ஏற்க மும்மூர்த்திகளை படைத்தா ரென்றும், அந்தக் கடவுளை வணங்குவதே உயர்ந்த ஞானமென்றும், மனிதர் அவரை அறிந்துக்கொள்ள கூடாமையால், மும்மூர்த்தி களையும், முப்பத்து முக்கோடி தேவர்களை யும், அக்கினி முதலிய பஞ்ச பூதங்களை யும் சிலைகளையும் வணங்க வேண்டும் என்று கற்பித்து இருக்கிறது. இதில் கடவுளுக்கு பிரம்மம் என்னும் பெயர் உண்டு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் வேதத்தில் வரவுக்கும் மனதுக்கும், புசிப்புக்கும் ஊழியனுக்கும், துர்ச்சன னுக்கும் வழங்கும்  பொதுப் பெயராயும் இருக்கிறது.

உயிரும் உடலும் ஓரிடத்தில் நித்திய மென்றும் மற்றொரு விடத்தில் - கட வுளில் ஒரு பங்கு என்றும் உயிர்கள் தாம் செய்த பாவ புண்ணியத்தின்படி உடலை விட்டபின், மற்றொரு உடலில் பாய்கிறது என்றும் சொல்லுகிறது. பிறப்பைப் பற்றி மேலே பூலோகம், வலோகம், சுவலோ கம், சன்லோகம், தபோலோகம், மகோ லோகம், சத்திய லோகம் என்ற ஏழும்; கீழே அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதளம், பாதாளம் என 7 ஆக 14 லோகங்கள் உண்டாம். இதன் விளக்கங்களை சாங்கிய சாத்திரத்தில் தெளிவாக காணலாம். இதுவல்லாமல், அக்கினியில் சூரியன் பிறந்தானென்றும், சூரியனில் சந்திரனும், சந்திரனில் மழை யும், மழையால் மின்னலும் உண்டாவ தாய் சொல்லுகிறது. இவையன்றி பகை வரைக் கொல்லவும், தேவர்களுக்கு சில மந்திரங்கள் உண்டாம்.

மனுவின் தர்ம சாத்திரத்தில், ருக்கு வேதம் முழுவதும் கற்றறிந்த ஆசாரியன் மூன்று உலகத்திலுள்ள குடிகளையெல் லாம் கொலை செய்த பின் சண்டாள ரோடு இருந்து புசித்தாலும் அவனுக்கு பாவமில்லை என்றும் சொல்லப்பட்டி ருக்கிறது. வேதம் இந்த கருத்துள்ள நடையிலிருந்தால் - இதை வைத்து மாற் றானை கொலை செய்யும் வழியும் உண் டாம். இந்த நான்கு வேதங்களுக்கும் நான்கு துணை வேதங்களும் உண்டாம். நான்கு வேதங்களின் உபதேச பிரமா ணங்களிலிருந்து வேத நுட்பங்கள் என் னும் 32  உபநிடதங்களும் உண்டாக்கப் பட்டிருக்கிறதாம். இவற்றைப் பின்வரும் பிரிவுகளில் காணலாம்.

மகா ஞானியாகிய கபிலமா முனிவர் தமது அகவலில் இந்த நான்கு வேதங் களும் வந்த வரலாற்றை எழுதி இருக் கிறார். பிர்மாவின் பேரனாகிய மனு விற்கு பின் - பிரம்மாவுக்கு வைப்பாட்டி - கூத்தியாகிய ஊர்வசி வயிற்றில் விபச்சாரத்தில் பிறந்த வசிஷ்டர் முதலில் இவ்வுலகிற்கு வேதத்தைக் கொண்டு வந்தானாம். அவர்தம் போதனையில் அனைவரும் - அனைத்து மாமிசங்க ளையும், மச்சங்களையும் (மீன்கள்) சாப்பிடவும் போதித்தாராம். இதுகுறித்து சில ராஜாக்களும், பிரபுக்களும் விவா திக்கவே அனைத்து மக்களும் வாழ்வ தற்கு முன்மாதிரியாக வசிஷ்டர் அருந் ததி என்ற சக்கிலிச்சிப்பெண்ணை திரு மணம் செய்து வேதத்தை  நிலைநாட்ட முனைந்ததாய் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சக்கிலிச்சி சாதி பரை பெற்று இரு வரும் தன்  தந்தை வசிஷ்டரை போல் அதே வேதத்தை போதித்து சாதி வேறு பாடின்றியிருக்க ஒரு பறைச்சியை மணந்து அவளிடத்தில் பராசர் பிறந் தாராம். பராசரும், தம் பெற்றோரைப் போல் அதே வேதத்தை போதிக்கையில் ராஜாக்களும், பிரபுக்களும் அவருடன் நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்கிறோம். ஆனால் மச்சம் (மீன்) மிகவும் நாற்ற மானதால் அதை மட்டும் புசியோம் என்று சொன்னதால் பராசர் மச்சகந்தி என்னும் பெண்ணை புணர்ந்து - மச்சராஜாக் களையும், மச்ச குருக்களையும் உண்டாக்க அவளிடத்தில் வேதவியாசரைப் பெற்றா ளாம். எவ்வாறெனில் பிரம்மாவின் சாபத் தால் ஒரு பெண் மீனாக மாறி யமுனை யாற்றில் இருந்தாளாம். வசுநாகன் என்பான் தூக்கத்தில்தன் விந்து கசிந்து விட, விழித் ததும், வீரியத்தை வீணாக்கினால் குற்ற மென்று இலைத் தொன்னையில் வைத்து தன் வல்லூறு பறவை வழி அரண்மனையி லிருக்கும் கிரியை என்னும் தன் மனை வியிடம் கொடுக்க சொன்னதால் வல்லூறு அதைக் கொத்திக் கொண்டு போகும்போது ஒரு ராஜாளி கண்டு இரு பறவைகளும் எதிர்த்து சண்டை போட்டதில் - இலை கிழிந்து அதிலிருந்து விந்து யமுனை ஆற்றில் விழுந்து மிதந்ததாம். மீனாய் சாபம் பெற்ற பெண் இரு பிரிவாக்கி புசித்து கர்ப்பமானாளாம். இந்த மீனான பெண் - வலையர் வலையில் சிக்கி, தாச ராஜனிடம் கொடுக்க அவன் அதன் வயிற்றைக் கீறவே ஆண் பெண்ணான இரு பிள்ளைகள் வெளிப்பட்டதால் வசுராஜன். ஆண் பிள்ளையை மச்சராஜன் என்று பெயரிட்டு தாசராஜன் வளர்த்தானாம். பெண் பருவம் அடைந்ததும் தான் விரும்பியபடியே தந்தையான தாசராஜன் படகு ஒன்றை செய்துகொடுக்க அவள் யமுனையாற்றில் - ஓட்டிக் கொண்டிருந்தாளாம்.

பராச மகா முனியோ இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் உச்சமா கும் போது ஒருபெண்ணை கூடி ஒரு பிள் ளையைப் பெற்றால் உலகத்திற்கு நன்மை உண்டாகும் என்றுசிந்தித்து, அதேநேரம் கூடி வரும் வரை தவத்திலிருந்தாராம். காலம் கூடி வருவதை கண்டு தவத்தை விட்டெழுந்து நரகத்திற்கு வேகமாய் போகும்போது - யமுனை வெள்ளப் பெருக் குடன் குறுக்கிடவே - பராசர் ஆற்றின் படகு விடும் மச்சகெந்தியைப் பார்த்து - என்னை அக்கரையில் விட்டுவிடு என்றாராம். படகில் ஏறி நடு ஆற்றில் வருகையில் நட்சத்திரங்கள் உச்சம் பெற்று விட்டதால், காலம் தப்பாமல் படகோட்டும் பெண்ணிடத் திலாவது சேர வேண்டும் என்று நினைத்து மச்சகந்தியைப் பார்த்து நீ அருள் கூர்ந்து திரண்டு பரந்து, நிமிர்ந்து வளர்ந்து வருகிற முலையை என் மார்பில் அழுத்தி அணை வாயாகில் என் கோரிக்கை நிறைவேறும், நீயும் உலகில் அழிவில்லா புகழ் அடைவாய் என்று சொன்னான். மச்சகெந்தி வெட்க முற்று - பெரியவரான இவர் தம்மை புணர அழைக்கிறார் என்று நினைத்து அய்யா! நீங்களோ மகாதவயோகி, நானோ பருவ மடையா இளம்பெண். நீங்கள் என்னைச் சேர விரும்புவது தகுதியா? அரும்பை கசக்கி முகர்ந்தால் பரிமளிக்குமா? பருவமில்லா என்னை கூடலாமா? என் மேலெங்கும் மச்ச கந்தம் வீசுவதையும் எப்படி சகிப்பீர்? என்று கூறினாள். பராசர் - இன்று முதல் உன் பெயர் பரிமளகந்தியாய் இருக்கட்டும் - உன் மச்சகந்தம் நீங்கும் என சொல்லி ஆற்றின் நடுவில் திட்டு போல் தோன்ற செய்து இரு வரும் அதில் இறங்கி கூடி கலந்தார்களாம். பிறகு பராசர் எழுந்து சொல்லாமல் ஓடி விட்டாராம்.

மச்சகந்தி உடன் கருவுற்று மூன்றேமுக் கால் நாழிகைக்குள் வேதவியாசர் பிறந் தாராம். அவர் பிறக்கும் போதே மான்தோல் புலித்தோலுடன் சடாவிரதராகி காவி காம் பராய் வேதத்தை கையில் பிடித்துக் கொண்டு உதயமானாராம். உடனே வேதவியாசர் தாயை வணங்கி என் தந்தை எங்கே என்று கேட்க, அதோ போகிறார் என, தன் தந்தையை பின் தொடர்ந்துபோய் தவம் செய்து, தன் தந்தை மறைந்த பின் உலகில் வேதங்கள் கருத்து -  வேற்றுமையாய் மாறுபட்டு கிடந்ததை சிக்கறுத்து,  இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்து கொடுத்ததுமல்லாமல், அய்ந்தாம் வேதமாக பதினெண் புராணத்தோடு, பாரத மும் வெளிப்பட்டது. பாரதம் ஆதி பருவம் வேதவியாசர் விளக்கத்தில் இதை தெளி வாய் பார்க்கலாம்.

மச்சகெந்தி, பரிமளகந்தியாகி பராசரைப் பெற்ற பின் சூரியவம்ச மன்னரான சந்தன ராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு, மூன்று பிள் ளைகளைப் பெற்று அவர்கள் மூவருக்கும் பெண் கொண்டு வாழும் சமயம் அம்மூவ ரும் இறந்து, தன் கணவரும் இறந்து, தானும் தன் மருமகள் மூவரோடும் விதவைகளா னார்களாம். தன் முந்தைய கணவனுக்கு விபச்சாரத்தில் பெற்ற முதல் மகன் வியா சரை அழைத்து தன்பிந்தின கணவனுக்கு பிறந்த மக்களுக்கு கட்டினார்களாம். வித வையான மருமகளோடு சேர்ந்து சந்தானம் உண்டாக்க கேட்க அவர்கள் மூவர்களை யும் வேதவியாசர் கூடி, மச்சராஜாக்கள் ஆகிற குருகுலத்து அரசர்கள் பிறந்தார்களாம்.

சிவவாக்கியர்

அய்ம்பத்தொன் றிலக்கர மடங்கவோ ரெழுத்துளே

விண் பரந்த மந்திரமும் வேதநான்கு மொன்றாமோ

திருமூலர்

கடவுளோனொருவனுண்டே - வேதம் மொன்றே என்ற பாடலில் பார்க்கலாம். வேதவியாசரிடமிருந்து பிராமணர் (பார்ப் பனர்) அந்த ஒரே வேதத்தைப் பெற்றுக் கொண்டபோது சில செயல்களை வேத வியாசர் கட்டளையிட்டார்.

அவை

1) அனைவரும் தங்கள் மெய்யுடலை சுத்தமாக வைத்துக்கொள்வதும்,

2) ஒரே ஒருவரை நினைத்துக் கொள் வதும்,

3) சாதி வேற்றுமையின்றி நீச்சல் முத லான சக்கிலியர் வீட்டிலும் சாப்பிடலா மென்பதும் ஆகும்.

- விடுதலை ஞாயிறு மலர், 9.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக