திங்கள், 23 ஜூலை, 2018

கிருத்துவ மதத்திலும் தீட்டு

பெண்களுக்கு மாதவிடாய் உடற்கூறு இயற்கையா? மாத‌விடாய் பாவங்களின் ப‌ல‌னா?(கிருஸ்த்துவ பெண்களால் துணிவுடன் தூக்கி குப்பையில் வீசப்பட்ட புனித பைபிள் ? சட்டங்கள்)
--------------------------------------------------------------------------
லேவியராகமம் 15 அதிகாரம்
19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
20 அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.
21 அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
22 அவன் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.
25 ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.
26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
28 அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக, அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.
29 எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.
30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
31 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்
- A மாணிக்கவேலு மாணிக்கம் - முகநூல் பதிவு, 22.7.18

சனி, 21 ஜூலை, 2018

உறவு கொள்வது எந்த முறையில் - பழைய ஏற்பாடு

என் அன்பிற்கினிய கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் கூமுட்டைகளே நலமா.... உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன்...
லேவியராகமம் 18 மற்றும் 20 அதிகாரங்களில் யார் யாரெல்லாம் யாருடன் சயனிப்பது(உறவு கொள்வது) பாவம் என்று கூறப்பட்டுள்ளது..
ஒரு ஆண்  தன் அம்மா தன் அப்பாவின் இரண்டாம் மனைவி மற்றும் அவருடைய மகள்கள் மற்றும் தன் சகோதரி தன் சகோதரன் மனைவி தன் மகள் மகளின் மகள் தன் மகனின் மகள் மகளின் மகள் தன் சகோதரனின் மகள் .. ஆகியோருடன் சயனிப்பது பாவம் என்று கூறுகிறது...

இப்போ இத யாரெல்லாம் மீறிருக்காங்கன்னு பாக்கலாம்..
1)ஆதியாகமம் 20:12 ஆப்ரஹாமுக்கு சாராய் தங்கை முறை...
2)ஆதியாகமம் 19:31,36
லோத்தின் இரு மகள்களும் லோத்துடன் உறவு கொள்ளல்(இது அந்த அப்பாவிற்கு தெரியாது பரவாயில்லை இருக்கட்டும்)
3)ஆதியாகமம் 24:47
ரெபேக்காள் ஈசாக்கிற்கு மகள் முறை..
4)ஆதியாகமம்38:8
யூதா மகன் ஓனான் தன் அண்ணன் மனைவியுடன் உறவு கொள்ளல்
5)யூதா தன் மறுகளுடன் உறவு கொள்ளல் (இது மறுமகள் என அவனுக்கு தெரியாதாம்.. ஆனால் மருமகளுக்கு தெரியும் அல்லாவா... பரவாயில்லை)

இதில் நான் கேட்பது இவர்களெல்லாம் விதி மீறினார்கள் தானே... அவர்களுக்கு உங்கள் தேவன் or யெகோவா or பிதா என்ன விதமான தன்டனைகளை கொடுத்தார் என்று அறிய விரும்புகிறேன்...
இந்த மாதிரி கேவலங்கள் நிறைந்ததுதான் உங்கள் கிறிஸ்தவம்...
யாராவது ஆதியாகமத்தையெல்லாம் இப்போ யாரும் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என்று கூறுபவர்களுக்கு ...
:அப்படியெனில் பழைய ஏற்பாடை எரித்துவிட்டு அதன் வீடியோவை கீழே பதிவிடவும் என்று கமிட்டி சார்பாக தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறது...
-ஸ்கிப்பர்  - ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 21.7.18

புதன், 4 ஜூலை, 2018

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கடிதமும் நமது விளக்கமும்

புதுச்சேரியில் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் இந்து மதம் குறித்து கூறியதற்கு 'விடுதலை'யில் ஒரு திறந்த மடலை எழுதியிருந்தோம் (25.6.2018). அது தொடர்பாக கவிப்பேரரசு அவர்கள் நமக்கொரு மடல் எழுதியுள்ளார் (29.6.2018).

அந்தக் கடிதம் வருமாறு:

இந்துமதம் என்பது ஒன்றன்று

கவிஞர் வைரமுத்து விளக்கம்

'விடுதலை'யில் கருஞ்சட்டை எழுதிய திறந்த மடலை நான் பெரிதும் மதிக்கிறேன்.

பகுத்தறிவுச் சிந்தனைகள்மீதும், திராவிடச் சித்தாந்தங்கள் மீதும் மற்றும் என் மீதும் 'விடுதலை' இதழ் கொண்டிருக்கும் அன்பான அக்கறை என்றே அதை நான் புரிந்து கொள்கிறேன். அதைப் போலவே புதுச்சேரியில் மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் நான் பேசியதும் புரிந்து கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

ஒருவரின் மேடைப் பேச்சைப் பத்திரிகைகள் பெரும் பாலும் தங்களுக்கு வசப்பட்ட மொழியில், தாங்கள் புரிந்து கொண்ட கருத்தில், குறைந்த சொல் எண்ணிக் கையில் மட்டுமே வெளியிடுகின்றன.

'முரசொலி'யில் கலைஞரின் பேச்சும், 'விடுதலை'யில் ஆசிரியர் வீரமணி அவர்களின் பேச்சும், அதிகாரத்தில் உள்ளவர்களின் அச்சடிக்கப்பட்ட உரைகளும் மட்டுமே சொல்லுக்குச் சொல் வெளி வந்திருக்கின்றன; வெளி வருகின்றன. என்னைப் போன்றவர்களின் சொற்பொழிவு சொல்லிய சொல்லில் பெரும்பாலும் முழுமையாய் வெளி வருவதில்லை. அதனால் பல சொற்பொழிவுகள் பிறழ உணர்ந்து கொள்ளப்படுகின்றன.

பௌத்த மதத்திற்கு மாறிய அண்ணல் அம்பேத்கர் பெரியாரையும் அம்மதத்திற்கே அழைத்தார் என்றும், பெரியார் அதை மறுத்தார் என்றும் வாசித்திருக்கிறேன். பெரியாரின் மறுப்பைச் சொல்ல வந்த போது தான் இந்து மதத்தில் கடவுள் மறுப்புக்கும் வழி இருக்கிறது. அப்படி வழி விட்டதை நான் மதிக்கிறேன் என்ற பொருளில் உரையாற்றினேன்.

வேத மதங்களின் கருத்துக்கள் ஆதி காலத்திலேயே மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன.அப்படி மறுத்தவர்களை உலகாயதர்கள் என்றும், சார்வாகர்கள் என்றும் வான்மீகி ராமாயணம் பேசுகிறது. மணிமேகலையில் அவர்கள் பூதவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

உருவ வழிபாட்டை எதிர்த்த சிவவாக்கியர் போன்ற சித்தர்களும் இந்து மதத்தின் கீழ்தான் அமைகிறார்கள். இந்துமதம் என்பது  ஒன்றல்ல. அதன் பன்முகத் தன்மையில் நாத்திகமும் உண்டு. அப்படி அது வழி விட்டதை மட்டும் தான் குறிப்பிட்டுப் பேசினேன். அரங்கத்தில் நான் பேசியது சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பதற்கு அவையின் ஆரவாரமே சாட்சி. அந்தப் பேச்சின் காணொலி கிட்டும்; காணலாம்.

இப்படி ஒரு கருத்து விளக்கம் காண்பதற்கு மேடை அமைத்துத் தந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திற்கும், நெஞ்சில் பட்டதை நேர்மையாகச் சொன்ன கருஞ்சட்டைக்கும், அதை முதல் பக்கத்தில் வெளியிட்ட 'விடுதலை'க்கும் நான் நன்றி சொல்லத் தான் வேண்டும்."

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் ஒரு முக்கிய பகுதி தந்தை பெரியார் அவர்களின் கருத்து பற்றியதாக இருப்பதால் இதற்கொரு பதிலும், விளக்கமும் கொடுக்க வேண்டியது நமது கடமையாகி விட்டது.

விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால் நமது கொள்கை எதிரிகள் அதனை வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ள இடம் கொடுத்ததாகி விடும் அல்லவா?

"பௌத்த மதத்திற்கு மாறிய அண்ணல் அம்பேத்கர் பெரியாரையும் அம்மதத்திற்கே அழைத்தார் என்றும், பெரியார் அதை மறுத்தார் என்றும் வாசித்திருக்கிறேன். பெரியாரின் மறுப்பைச் சொல்ல வந்த போது தான் இந்து மதத்தில் கடவுள் மறுப்புக்கும் வழி இருக்கிறது. அப்படி வழி விட்டதை நான் மதிக்கிறேன் என்ற பொருளில் உரையாற்றினேன்" என்று கவிப் பேரரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த மதத்தில் தந்தை பெரியார் சேர மறுத்ததற்குக் காரணம் கடவுள் மறுப்புக்காக மட்டுமல்ல. அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் தந்தை பெரியார் தெரிவித்த கருத்து என்ன?

பர்மா - இரங்கோனில் நடைபெற்ற உலக புத்த அறநெறி மாநாட்டில் (5.12.1954) தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் பங்கு கொண்டனர்.

புத்த மார்க்கத்தில் சேர்வது பற்றி அவர்கள் இருவரும் கருத்துப் பரிமாறிக் கொண்டனர். தன்னோடு பெரி யாரையும் புத்த மார்க்கத்தில் சேருமாறு அம்பேத்கர் அழைப்பு விடுத்தார்.

அதற்குத் தந்தை பெரியார் சொன்ன பதில்தான் முக்கியமானது.

"நான் இப்போது ஜாதி ஒழிப்புப் பற்றித் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்துக் கடவுள்கள்  எனப்படும் விநாயகர், இராமன் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும் இந்து மதத்தில் உள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, இப்பொழுது பிரச்சாரம் செய்வதுபோல், அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் 'நீ அதைச் சொல்லக் கூடாது' என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான் 'இன்னொரு மதக்காரனாக' இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது. எனவே நான் வெளியிலிருந்து கொண்டு புத்த மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்து வருகிறேன்" என்று டில்லி பகார்கஞ்சில் நடைபெற்ற கூட்டத்தில் (15.2.1959) தந்தை பெரியார் பேசினார். ('குடிஅரசு' 22.2.1959).

கோடானு கோடி மக்கள் ஒடுக்கப்பட்டுக் கிடக் கிறார்கள். அவர்கள் உரிமைக்கு இங்கு இருந்து கொண்டு தான் பாடுபட முடியும் - பிரச்சாரம் செய்ய முடியும் என்ற கருத்தையும் பல இடங்களில் தந்தை பெரியார் கூறியுள்ளார்.

இன்னொரு முக்கிய கருத்தும் உண்டு. இந்து மதத்தில் கடவுள் மறுப்பு என்பது நாத்திகமல்ல. இது குறித்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தெளிவுபடுத்தியிருப்பதைத் தங்கள் கவனத் துக்குக் கொண்டு வருகிறோம்.

"நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்பொழுது நாம் நினைத் துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.

அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.

வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கையாகவும் இருந் திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல!" ('தெய்வத்தின் குரல்' இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408)

இந்து மதத்தில் முக்கிய நூலாகக் கூறப்படும் மனுதர்மமும் இதையே தான் கூறுகின்றது.

"வேதம் (ஸ்ருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ் விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான்" (மனுதர்மம் அத்தியாயம் 1 - சுலோகம் 11).

இந்த நிலையில் இந்து மதத்தில் கடவுள் மறுப்புக்கும் வழியிருக்கிறது என்பதற்காக இந்து மதத்தைக் கொண் டாடுகிறேன் என்று பகுத்தறிவாளரான கவிப் பேரரசு சொல்லும்போது ஒரு நெருடல் முரண் இருக்கிற காரணத்தாலும், இதனை நமது கொள்கை எதிரிகள் பயன்படுத்திவிடக் கூடாது, என்ற நிலையிலும், தந்தை பெரியார் கொள்கையைத் திரிபுவாதத்திற்கு இடங் கொடுத்து விடக் கூடாது என்ற அக்கறையுடன் இந்த மடல் எழுதப்படுவதை கவிப்பேரரசு புரிந்து கொள்வார் என்றே நம்புகிறோம்.

இது போன்ற பகிர்வுகள் வெளிப்படைத் தன்மையில் இருப்பது - பயனளிக்கக் கூடியது என்பதாலும்தான் இந்த வெளிப்படையான மடலாகும்.

மற்றபடி கவிப்பேரரசுவிடம் உள்ள இன உணர்வு, மொழி உணர்வு சார்ந்த நட்புறவு என்றும்போல் ஊனமின்றித் தொடரவே செய்யும்.

தங்களின் பாசமுள்ள சகோதரன்

"கருஞ்சட்டை"

-  விடுதலை நாளேடு, 30.6.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

சகோதரர் கவிப்பேரரசுக்கு ஓர் திறந்த மடல்



கடவுள் மறுப்புக்கும், நாத்திகத்திற்கும் வழி இருப்பதால், நான் இந்து மதத்தைக் கொண்டாடுகிறேன்'' என்று தலைப்பிட்டு, தமிழ் இந்து' நாளிதழில் ஒரு செய்தி (23.6.2018) தாங்கள் புதுச்சேரியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஒரு கருத்தரங்கத்தில் பேசி யுள்ளதாக வந்துள்ளது.


இது சரியாக இருக்குமானால், சில விளக்கங்களை தங்களுக்குத் தெரிவிக்கவேண்டியது கருஞ்சட்டை சகோதரனின் கடமையாகும்!

நீங்கள் ஒரு கோணத்தில் கூறினாலும், அதை இன்றைய, நாளைய இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். சக்திகள் - எந்த சக்திகள் ஆண்டாள்' தமிழாற்றுப் படைக்காகத் தங்களை வறுத்தெடுத்தார்களோ, அவர்களே அதை மட்டுமே வைத்து இந்து மதத்தை வைரமுத்துவே கொண்டாடுகிறார்' என்று பெருமிதப்படுத்தி திசை திருப்பிட எல்லாவித வாய்ப்புகளும் உண்டு என்பதால், இப்படி நினைக்கும் அல்லது வாதிடும் பலருக்கும் பதிலாக அமையும் என்று கருதி இவ்விளக்கத்தை - மடலை எழுதுகிறேன்.

முதலாவது,

இந்து மதம் கடவுள் மறுப்பை, நாத்திகத்தை அனு மதிப்பதற்குக் காரணம் அதற்கெனத் தனிக் கொள்கையோடு உருவான மதமே அல்ல - அந்த பார்ப்பன, ஆரிய, சனாதன, வேத மதம்.

வேதங்களே அதற்குப் பிரதானம். அவர்களின் அகராதி யில் நாத்திகன் என்பவன் கடவுள் மறுப்பாளன் அல்ல; வேதத்தை ஏற்க மறுப்பவனே! (ஆதாரம்: காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திரரின் தெய்வத்தின் குரல்')

இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்லு கிறோமே, இதற்கு உண்மையில் ஹிந்துப் பெயர் கிடையாது. நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ஹிந்து' மதம் என்கிற வார்த்தையே கிடையாது!''

(ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திரரின் தெய்வத்தின் குரல்', முதல் பகுதி: பக்கம் 122).

இரண்டாவது,

வேதங்களில் மும்மூர்த்திகள் கிடையாது. அதனால் இந்து மதத்தில் மதச் சண்டை - சைவம் - வைணவம், சிவன் - விஷ்ணு, பிறகு ஆக்கும் கடவுள் பிரம்மாவின் சண்டைகளும், விஷ்ணு மட்டுமே அவதாரம் எடுத்தார் என்று கூறுவதும், சிவனோ, பிரம்மாவோ அந்த கீழே இறங்கிவரும்' அவதாரங்களாகவில்லை என்பதும், எவ்வப்போது மக்களிடம் செல்வாக்கு எந்தக் கொள்கை - திட்டங்களுக்குப் பெருகியதோ, அதனை தன்னுள் இழுத்து, தன்னுடையதைப்போல, வெளியே உருமாற்றத் தோடு காட்டும் கலையே இந்து மதத்தின் மாறி மாறி வந்த கொள்கைகள். எடுத்துக்காட்டு பவுத்தத்தின் யாகக் கொள்கை எதிர்ப்பினால், அது புலால் உண்ணாமையை பிறகு ஏற்ற ஒன்று. முன்னாளில் யாகம், அவிர்ப்பசுக்கள், சாந்தோக்கிய உபநிஷதம் முதல் பலவற்றிலும் மாட்டுக்கறி முதலிய பல உண்ணும் பழக்கம் உண்டு. ஆதாரம் உபநிஷத் மட்டுமல்ல; மனுதர்மத்திலும் உண்டு.

இதன் கொள்கை, லட்சியம் என்பது வரையறுத்துக் கூற முடியாதபடியால், மைக்கேல் vs வெங்கடேசுவரன் என்ற வழக்கில் தீர்ப்பு எழுதிய  சென்னை உயர்நீதி மன்றத்தின் அந்நாள் தலைமை நீதிபதி டாக்டர் ஜஸ்டீஸ் பி.வி.இராஜமன்னார்,

‘‘When I speak of Hinduism, I am actually conscious of the vague connotation of that word'' Michael vs Venkateswaran case: MLJ 239/1952-1)

நீதியரசர் இராசமன்னார் கருத்து


தம்முடைய நிலைக்குப் பக்கத் துணையாக மாண்புமிகு இராசமன்னார் அவர்கள் இந்தியப் பண்பாட்டு மரபு' என்னும் நூலிலிருந்து கீழ்வருவதைச் சான்று காட்டினார்.

மதம் என்ற சொல்லை இப்போது நாம் புரிந்துகொள்ளும் பொருளின்படி ஹிந்துவியல் என்பது ஒரு மதம் இல்லை. அச்சொல் இந்திய மூலத்தைக் கொண்டதன்று அல்லது ஹிந்துக்கள் என்பவர்களால் அச்சொல் தங்களின் மதத்திற்குப் பெயராக ஒருபோதும் பயன்படுத்தப் பெற்றதே கிடையாது.''

"Hinduism is not a religion in the sense in which we now understand the word. The word is not Indian in origin; nor was it ever used by the Hindus as the same name of their religions" (மைக்கேல் ஸ் வெங்கடேசுவரன் வழக்கில் தீர்ப்பு)(The Cultural Heritage of India, Haridass Battacharia: ILR 1953 (Madras 106)
But the word has come to stay and convenience requires that the word should be retained to describe a typical mode of life inclusive of religion and philosophy in the strict sense of those terms. It has been rightly said that:''

இதுபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உண்டு.

மூன்றாவது,

கடவுள் இல்லை என்பது பார்ப்பனர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். கல் கடவுளை அதன் மனைவியையும் அர்ச்சகர் கழுவி குளிப்பாட்டும்போது ஆண் கடவுளுக்குக் கோபமே வராததே அவர் அதைக் கடவுள் என்று நம்ப வில்லை என்பதற்கு ஆதாரம்.

அண்மையில் திருட்டுப் போய், மீட்கப்பட்டு வரும் கடவுள், கடவுளச்சிகள் சிலைகளும், அதன் நிலையுமே ஓர் ஆதாரம் ஆகும்.

நான்காவது,

தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்த்ராதீனம் து தெய்வதம்

தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்

தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்''

என்ற சமஸ்கிருத சுலோகப்படி,

உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது

கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டது

மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது

(கடவுளை விட) எனவே, பிராமணனே பூஜிக்கத்தக்கவன்.


இச்சுலோகம்மூலம் கடவுள் மேலானவன் அல்ல; பார்ப்பனரே மேலானவன் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவாள் பேசும் பாஷை தேவ பாஷை' அவாள் பூதேவர்கள்' எனவே, இதுதான் இந்து மதம் - கடவுள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம், முக்கியமானதே அல்ல.

இதற்காக இந்து மதத்தைக் கொண்ட உங்களையும், என்னையும், நம்மை சூத்திரன், பஞ்சமன், சண்டாளன், நீச்சன், தஸ்யூ, அடிமை, தாசி புத்திரன்கள் என்று இன்றும் சட்டத்தில் (இந்து லா படி) கூறும் பிறவி இழிநிலை அவ மானத்தைத் தரும் வர்ணாசிரமம்தானே ஜாதி முறைதானே - இந்து மதத்தின் முக்கிய அடித்தளம்.

அதன்படி அத்துணை பெண்களும், கீழான ஜாதி களுக்கும் கீழான ஜாதி என்ற இழிநிலை அடிமைகள்தானே!

இது வேறு எந்த மதத்தில் உண்டு?

விதவைகள் மற்ற மதங்களில் உண்டு.

திணிக்கப்பட்ட விதவைத்தன்மை - நமது தாய்களை  அவமானச் சின்னங்களாக்கி,  எதிரேகூட வரக்கூடாது என்று (இருந்த நிலை) ஆக்கியுள்ளது வேறு எங்கே உள்ளது?

உயிருடன் அவர்களை எரித்து சதி மாதா'' கோவில் கட்டும் கொடுமை வேறு எந்த மதத்தில் உண்டு?

அருள்கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்!

கடவுள் கருத்து சுதந்திரத்தைவிட, இந்த மனித அவமானம் - நம் தாய்மார்களை தேவடியாள்களாக'' (மனுதர்மம் அத்தியாம்-8  சுலோகம்-415) எழுதி வைத்துள்ள துடைக்க முடியாத களங்கம் வேறு உண்டா?

சற்றே எண்ணிப் பாருங்கள்.

உலகில் எந்த மதம் கீழ்ஜாதிக்காரர்களுக்கு, சூத்திரர் களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று மறுத்தது? கல்விக் கண்ணைப் பிடுங்கிய கோர மதம் மனுதர்ம இந்து மதம்தானே! இல்லையா!

நாயை, பன்றியை தொடுதல், மலத்தைத் தொட்டால் அந்த இடத்தைக் கழுவிக் கொள்ளலாம் - ஆனால், தாழ்த்தப்பட்ட சகோதரரான மனிதனைத் தொடாதே என்று கூறும் மதம் அதே இந்து மதம் அல்லவா?

ஒரு கருத்துக்காகப் பாராட்டினால், இத்தனைக் கோளாறுகளுக்காக அதனை எத்தனை முறை வெறுக்கவேண்டும்? யோசியுங்கள்!

உங்களிடம் குற்றம் காண அல்ல இப்படிக் கூறுவது - இந்தக் கடிதம். உங்கள் கூற்றை, இன எதிரிகள், பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் தவறாகப் பயன் படுத்திக் கரையேற முயற்சிப்பர்.

எனவே, இனிமேலாவது இப்படி வாய் தவறியும் பாராட்டி விடாதீர்கள்!

கடவுள் மறுப்பு, நாத்திகத்திற்காக ஒரு மதத்தைப் பாராட்ட நீங்கள் விரும்பினால், புத்த மதத்தைவிட சீரிய பகுத்தறிவு நெறி மனிதநேயம் வேறு உண்டா?

புரட்சியாளர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறி (நான் இந்துவாக சாகமாட்டேன் எனக் கூறி) பவுத்த நெறியில் சேர்ந்தார்?

எனவே, புத்தநெறியைப் புகழுங்கள்!

அது பகுத்தறிவு சுதந்திரத்திற்கு எல்லையற்று வழிவகை செய்த மார்க்கம் அல்லவா!

பல கோடி தாழ்த்தப்பட்ட, சூத்திர சகோதர, சகோதரி களும் இந்து மதத்தால் திண்டாடும்போது, நீங்கள் அதைக் கொண்டாடலாமா?

தங்களின் பாசமுள்ள

சகோதரன்

"கருஞ்சட்டை

- விடுதலை நாளேடு, 25.6.18