திங்கள், 26 மார்ச், 2018

பிராமண போஜனமும் சட்டிச் சோறும்        

நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்        
(இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-600 098.
தொலைபேசி: 044-26251968, 26258410, 26241288
www.ncbhpublisher.in  email:info@ncbh.in   
விலை: ரூ.75/-
பிராமண போஜனம்
தமிழ்க் கல்வெட்டுகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆராய்ந்து வகைப்படுத்தினால் கொடையை மையமாகக் கொண்ட கல்வெட்டுகளே மிகுதியாக இருப்பதைக் காண முடியும். நிலம், பொன், பணம், உலோகப் படிமங்கள், ஆடு, மாடு என்பன கொடைப் பொருளாக விளங்கியுள்ளன. மனிதர்களையும்கூட அடிமைகளாகக் கோவிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர். இவைதவிர பொருட்கள், நிலங்கள் மீதானசில வரிகளும் கொடையாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கும் வழங்கப்பட்டது.
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், வணிகர், கைவினைஞர், நில உரிமையாளர் என்போர் கொடை வழங்குவோராக விளங்கியுள்ளனர். விதிவிலக்குப் போன்று குடிஊழியம் செய்வோரும் கொடை வழங்கியுள்ளனர். பெரும்பாலும் சைவ, வைணவக் கோவில்களும், சமண, பௌத்தப் பள்ளிகளும் இவர்களிடம் இருந்து கொடை பெற்ற அமைப்புகளாக விளங்கியுள்ளன. புதிதாக அமைக்கப்படும் நீர் நிலைகள் ஊர்ப் பொதுவாக வழங்கப்பட்டன. இவை தவிர பிராமணர்களுக்குக் கொடை வழங்கிப் பேணும் வழக்கமும் நிலவியுள்ளது.
பிராமணக் கொடை
பிராமணர்களுக்குக் கொடை வழங்கல் மிகப் பெரிய புண்ணியச் செயல் என்று மனுதர்மம் (3:98) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
கல்வி தவம் முயன்ற வேதியர்க்களித்தல் தீயிலிட்டுச் செய்த ஓமம் போல் ஒளிர்விடும். மேலும் இம்மையில் நோய், பகை, ராஜ பீடை இவற்றால் உண்டான அச்சத்தினின்றும், மறுமையில் நரகத்தினின்றும் விடுவிக்கும்.
பிராமணர்களுக்கு வழங்கும் கொடையானது இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதுடன் மட்டுமின்றி, பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடை வழங்க வேண்டியதை வலியுறுத்தி மனு(3:79) மேலும் கூறுவது வருமாறு:
பெரும் காணிக்கைகளுக்குரிய அஸ்வமேத முதலிய வேள்விகளை நடத்தி அந்தணர்க்கான அறச் சாலைகளை நியமித்து கொடை வழங்க வேண்டியது.
மனுதர்மத்தின் செல்வாக்கு மன்னர் ஆட்சிக்காலத் தமிழகத்தில் நிலை பெற்றிருந்தது. பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரிலான பிராமணக் குடியிருப்புகள் மன்னர்களால் உருவாக்கப்பட்டன. இதுகுறித்து செப்பேடுகளும் கல்வெட்டுகளும் விரிவான செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
பிராமண போஜனம்
நிலம் தவிர உணவும் கொடைப்பொருளாக விளங்கியுள்ளது. வழிபாட்டின்போது உணவு படைத்து வழிபடுவது சைவ, வைணவ சமய மரபு. இதைத் திருஅமுது செய்தல் என்று கூறுவர். இவ்வாறு திருஅமுது செய்யவும், சிவனடியார், பயணம் செய்வோர், பிராமணர் ஆகியோரின் பசி போக்கவும் உணவுக் கொடை வழங்கப்பட்டது. இவற்றுள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக் கொடை பிராமண போஜனம் எனப்பட்டது.
இப்பிராமண போஜனமானது மூன்று வகையில் நிகழ்ந்துள்ளது. முதலாவது நாள்தோறும் நிகழ்த்தப்படுவது. இதை நிசிதம் (ஏற்பாடு) என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாவது அம்மாவாசையன்று நிகழ்வது. மூன்றாவது கோவில் திருநாட்களின்போது நிகழ்வது.
வழங்கிய முறை
பிராமண போஜனத்திற்குரிய செலவுத் தொகையை நிலம், பொன், பணம் ஆகிய மூன்று வடிவங்களில் வழங்கியுள்ளனர். நிலத்தில் இருந்து கிட்டும் நெல் உணவுக்கான அரிசிக்கும் உணவு தொடர்பான இதர செலவுகளுக்கும் பயன்பட்டுள்ளது. பொன், பணம் ஆகியன வட்டிக்கு விடப்பட்டு அவ்வட்டித் தொகையில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திலுள்ள பிரமமதேசம் ஊரிலுள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் கல்வெட்டொன்று அம்மாவாசைதோறும் பிராமணர்களுக்கு உணவளிப்பதைக் குறிப்பிடுகிறது. இதற்காக இருகழஞ்சுப்பொன் முதலீடாக வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு உணவளிக்க கோவிலின் கணப்பெருமக்கள் (சபை உறுப்பினர்கள்) ஒத்துக் கொண்டுள்ளனர். (தெ.இ.க.30:142)
வழங்கியோரும் வழங்கியதன் நோக்கமும்
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் ஆகியோரும், குடிமக்களும் மேற்கூறிய முறைகளில் பிராமண போஜனத்திற்கான செலவுத் தொகையை வழங்கியுள்ளனர்.
இவர்களள் சிலர் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமின்றி புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கையில் கொடை வழங்கியுள்ளனர். சிலர் இறந்தோரின் ஆன்ம அமைதிக்காக வழங்கியுள்ளனர். சிலர் குறிப்பிட்ட விழா நாளையும், சிலர் தம் பிறந்த நாளையும் மையமாகக் கொண்டு வழங்கியுள்ளனர். பிராமணர்களுக்கு உணவு வழங்கியதன் அடிப்படை நோக்கம் மறுமை வாழ்வுக்குப் புண்ணியம் கிட்டும் என்பதுதான்.
பிராமணர்களில், வேதம் வல்லோருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற குறிப்பும் சில கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. சான்றாக ராஜகேசரிவர்மன் என்ற சோழ மன்னனின் 23ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்று கற்றறிந்த, வேதமறிந்த 12 பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த செய்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டின்படி பிரம்மாதி ராஜா என்பவன் 200 கழஞ்சு பொன்னை ஊர்ச்சபையிடம் வைப்புத் தொகையாக வழங்கியுள்ளான். இத்தொகையில் இருந்து கிட்டிய வட்டியில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.3:11:1).
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள குத்தாலத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் (கி.பி.992) சாமவேதம், தைத்திரிய சாண்டியோக சாமவேதம் வல்லார்க்கு உணவு வழங்கியதைக் குறிப்பிடுகிறது. (மேலது: 170). வேதக்கல்வியை ஊக்குவிப்பதும் வேதம் வல்லாரைப் பேணுவதும் பிராமணப் போஜனத்தின் நோக்கமாக இருந்துள்ளமை இச்செய்திகளால் புலப்படுகிறது. பல்லவர்களின் செப்புப் பட்டயங்கள் சிலவற்றில்,
பிராமணர்களின் சொத்து கொடிய விஷம். மற்ற விஷம் விஷமல்ல. அந்த விஷம் ஒருவனையே கொல்லும். பிராமணன் சொத்தோ புத்திர பௌத்திரர்களையும் கொல்லும் என்ற காப்புரைத் தொடர் இடம் பெற்றுள்ளது. இத்தொடர் பிராமணர்களுக்குப் பல்லவ மன்னர்களால் வழங்கப்பட்ட பிரம்மதேயக் கொடைச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது. பிராமணரின் சொத்துக்குப் பாதுகாப்பு அரணாக இக்காப்புரையை அமைத்துள்ளனர். இதன் தாக்கம் பிற்காலச் சோழர் காலத்திலும் இருந்துள்ளது. பிராமணருக்கு உரிமையான சொத்தைப் பறிமுதல் செய்தாலும், அச்சொத்தின் பயன்பாடு பிராமணர்களுக்கு மட்டுமே கிட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்துள்ளது.
முதலாம் இராஜராஜசோழனின் அண்ணான இரண்டாம் ஆதித்த கரிகாலன் சோழநாட்டின் வட்டாரத் தலைவர்களால் கொலை செய்யப்பட்டான். முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தவுடன் இக்கொலையுடன் தொடர்புடைய பிராமணர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து விலைக்கு விற்றான். அதை விலைக்கு வாங்கியவர்கள் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்தி காட்டுமன்னார் கோவிலில் உள்ள சிவன் கோவிலில் நாள்தோறும் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். (A.R.E.1921:97 பத்தி 31.)
வழங்கப்பட்ட உணவு
பிராமணபோஜனத்தைக் குறிப்பிடும் கல்வெட்டுகளில், வழங்கப்பட்ட உணவு குறித்தும் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலே குறிப்பிட்ட ராஜசேகரவர்மனின் 23ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 12 பிராமணர்களுக்கான நண்பகல் உணவில் சோறுடன் ஆழாக்கு (அரைக்கால் படி) நெய், அய்ந்து வகைக்கறி, அய்ந்து உழக்குத் தயிர் ஆகியனவும் இரண்டு பாக்கும், வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன. சமையல் செய்வாருக்கும், விறகிடுவாருக்கும் தனியாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளது (தெ.இ.க.3 பகுதி.1). கோவிலில் உணவுச் சாலை ஒன்றை நிறுவி 25 பிராமணர்களுக்கு உணவளிக்க செம்பியன் மாதேவி, ஏற்பாடு செய்துள்ளார். இதன் பொருட்டு 12 வேலி நிலத்தை வழங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலத்தில் இருந்து ஆண்டுதோறும் 1590 கலம் நெல் கிடைத்துள்ளது. இதில் 937 கலம் ஒரு தூணி (நான்கு மரக்கால்), ஒரு பதக்கு (இரண்டு குறுணி) நெல்லைக் கொண்டு சோறும், காய்கறி, நெய், தயிர், பலவகைக் கறிகள், வெற்றிலைப் பாக்கு ஆகியனவும் நாள்தோறும் வழங்கப்பட்டுள்ளன. விறகும் இக்கணக்கில் அடங்கும். சமையல் செய்பவருக்கு நாள்தோறும் ஒரு குறுணி (இரண்டு நாழி) நெல் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.வீவீவீ & வீஸ்: 151)
காஞ்சன் தாமோதரன் என்பவன் வேதம் வல்ல பிராமணருக்கு நண்பகல் உணவளிக்க எழுபது கழஞ்சு பொன்னை திருச்சி மாவட்டம் திருவெள்ளரை கோவிலின்மூலபரிஷத்திடம் (சிவன் கோவில் நிருவாகத்தை நடத்தி வந்த சபை) கி.பி.985இல் வழங்கியுள்ளான். இது தவிர தாலம், வட்டில் ஆகிய சமையல் பாத்திரங்களையும் வழங்கியுள்ளான். நாள்தோறும் 18 நாடுறி குத்தல் படியரிசி சமைக்கப்பட்டதுடன், கும்மாயம் (சிறுபயிறு பருப்பிட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம்) ஆழாக்கு நெய், பழம் 2, காய்கறி, புளிக்கறி, நாழி தயிர், பொறிக்கறி, வெற்றிலை ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள திருவெறும்பியூர் ஆழ்வார் கோவிலில் உள்ள 955ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் வேளாண் வீர நாராயணன் என்ற செம்பியன் வேதிவேளார் என்பவன் 15 பிராமணர்கள் நாள்தோறும் உள்ள, சத்திரம் அமைத்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இச்சத்திரத்தில் உணவு வழங்க ஆகும் செலவிற்காக இரண்டு வேலி, ஏழு மா அளவுள்ள நிலம் வழங்கியுள்ளான். இச்சத்திரத்தில் இரு நாழி அரிசி, கறிகாய்கறி ஒன்று, புளிக்கறி ஒன்று, புழுக்குக்கறி ஒன்று, நெய் அரைப்படி ஆகியவற்றுடன் வெற்றிலை, பாக்கு இரண்டும் வழங்கப்பட்டுள்ளன. (தெ.இ.க.13: 110).
இதே கோவிலில் உள்ள 985ஆம் ஆண்டுக் கல்வெட்டு திருப்பேர்பாலாசிரியன் என்பவன் நாலு மா நிலம் வழங்கி, பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் இருநாழி அரிசியும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி, புழுக்குக்கறியுடன் உரிஅளவு தயிரும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்க ஒழுங்கு செய்துள்ளான்.(தெ.இ.க.13:138).
இதே கோவிலுக்கு 985ஆம் ஆண்டில் ஆறு மா நிலத்தைக் கொடையாக திருப்பேர் பாப்பானி காரிநக்கன் என்பவன் வழங்கியுள்ளான். இந்நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நில வருவாயைக் கொண்டு வேதம் வல்ல பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் திருவெறும்பியூராழ்வார் கோயிலில் உள்ள சத்திரத்தில் இருநாழி அரிசிச் சோறும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி புழுக்குக்கறியும், தயிர் உரியும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்கியுள்ளான். (தெ.இ.க.13:139-). விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள உலகாபுரம் (உலகமாதேவிபுரம்) என்ற கிராமத்தில் உள்ள சிதைவடைந்த சிவன் கோவிலில் கி.பி.988ஆம் ஆண்டுக் காலத்தியக் கல்வெட்டு ஒன்றுள்ளது. கங்கன் அம்பலவன் கண்டராதித்தான் என்ற சோழ அரசு அதிகாரி 56 பிராமணர்களுக்கு உணவளிக்க 19 வேலி நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு சோறுடன் நாலுகறி ஒருமுட்டை அளவு (சிறு கரண்டி அளவு) நெய், நாழி அளவு மோர் ஆகியவற்றுடன், அய்ந்து வெற்றிலையும் பாக்கும் வழங்கியுள்ளனர். (தெ.இ.க.13:61).
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள ஊர் உடையார் கோயில். இங்குள்ள அனந்தீஸ்வரர் கோவிலில் 985ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றுள்ளது. உத்தமசந்திரன் என்ற செம்பியன் பல்லவதரையன் மூன்று பிராமணர்களுக்கு இக்கோவிலில் நண்பகல் உணவளிக்க முக்காலே இரண்டு (பரப்பளவு குறிப்பிடப்படவில்லை). நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இருநாழி பழவரிசியும் (குத்தி நீண்ட நாட்கள் ஆன அரிசி), ஆழாக்கு பருப்பும், காய்கறி ஒன்றும், புளிக்கறி ஒன்றும், அக்காரலட்டு (இனிப்பு லட்டு) இரண்டும், வாழைப்பழம் இரண்டும், பொரிக்கறி ஒன்றும், தயிர் நாழியும், நான்கு பாக்கும், பத்து வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிரஅடுவான் (சமைப்பவன்) ஊதியன் வழங்கவும், விறகு, உப்பு, காயம் ஆகியன வாங்கவும் ஒழுங்கு செய்யப்பட்டது (தெ.இ.க.13:91).
நாள்தோறும் உணவு வழங்க இயலாதவர்கள் சில குறிப்பிட்ட நாட்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன.
மணிக்கிராமம் என்ற பெயரிலான வணிகக் குழுவைச் சேர்ந்த மஞ்சன் மணிய மராத்தான் என்பவன் இக்கோவிலில் அய்ந்து கழஞ்சுப் பொன்னை முதலீடாக வைத்துள்ளான். இதிலிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இருபத்தைந்து அந்தணர்களுக்கு மாசித் திருநாளில் உணவு வழங்கப்பட்டுள்ளது. (கிருட்டிணன் 2001: 130)
செல்வனடிகள் என்பவன் நாற்பது பொன் கொடையாக வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டியில் மாசிமகத் திருவிழாவின்போது இருபத்தி அய்ந்து அந்தணர்களுக்கு சோறுடன் மூன்று கறி, அரைப்படி நெய், தயிர், வெற்றிலைப் பாக்கு ஆகியன வழங்கப்பட்டன (மேலது: 131).
திருச்செங்கோடு மலைமேல் நாகர் குன்றுக்கு மேற்கில் உள்ள பாறையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன் றுள்ளது. இக்கல்வெட்டு இளங்கோனடிகள் என்பவனின் மனைவி மூரிக்காமக்கனார் என்பவள் வழங்கிய கொடையைக் குறிப்பிடுகிறது. இப்பெண் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம் இருபது கழஞ்சுப் பொன்னை வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஏகாதசி நாளில் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. (மேலது: 168).
இதுபோல் திருவாதிரைதோறும் இருபது அந்தணர்களுக்கு உணவு வழங்க இருபது கழஞ்சு பொன் வழங்கப்பட்ட செய்தியை இதே பகுதியில் உள்ள 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது (மேலது: 170). துவாதசி, திருவாதிரை, திருவோணம் ஆகிய விழா நாட்களிலும் பிராமண போஜனம் நடத்தக் கொடை வழங்கப்பட்டதை பத்து, 13ஆம் நூற்றாண்டுக் கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.பெரிய அளவில் முதலீடு செய்து அதிக எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் முறையில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் குறைந்த எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உணவு வழங்கும் முறையானது, அதிகப் பொருள்வளம் இல்லாதோறும் இச்செயலில் ஈடுபட்டதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. சில கல்வெட்டுகள் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்குவதைக் குறிப்பிட்டாலும் வழங்கும் நாள் ஒருநாள்தான் (தெ.இ.க.13: 243).
பிராமண போஜனத்தின் விளைவு
மறுமை குறித்த நம்பிக்கையின் தூண்டுதலால் மக்கள் கோவில்களை மையமாகக் கொண்டு பல கொடைச் செயல்களை மேற்கொண்டுள்ளனர். கோவிலுக்கு பொன் அணிகலன்கள், உலோகப் படிமங்கள், பாத்திரங்கள் ஆகியனவற்றை வழங்கியுள்ளனர். கோவிலில் சந்திவிளக்கு, நந்தாவிளக்கு எரிக்க கால்நடைகளையும், நிலங்களையும் கொடையாக வழங்கியுள்ளனர். இவ்வரிசையில் பிராமண போஜனமும் இணைகிறது.
இவை அனைத்திலும் காணப்படும் பொதுவான தன்மை குடிமக்களின் உபரிப்பணம் இவற்றில் முதலீடாக இடப்பட்டதுதான். தமிழ்நாட்டிலும் அயல் நாடுகளிலும் செயல்பட்ட தமிழ் வணிகக் குழுக்களும், இவற்றின் உறுப்பினர்களான வணிகர்களும், நெசவாளர், உலோகத் தொழில் புரிவோர் ஆகிய கைவினைஞர்களும், கால்நடை வளர்ப்போர், நிலவுடைமையாளர் ஆகியோரும் தம்மிடம் இருந்த உபரிப் பணத்தை பிராமணர்களுக்கு உணவு வழங்குவதில் முடக்கியுள்ளனர்.
இம்முதலீடு இவ்வுலக வாழ்வுக்குப் பயன் தராத முதலீடாக அமைந்தது. ஆதாயம் எதுவும் தராத இயங்கா முதலீடாக (dead capital)  இம்முதலீடுகள் அமைந்து சமூக வளர்ச்சிக்குத் துணை புரியாது போய்விட்டது. வருவாய் ஈட்டும் துறைகளில் உபரியை முதலீடு செய்திருந்தால் பொருளியல் வளர்ச்சி மிகுந்திருக்கும். அல்லது நலத்திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் மக்கள் பயன் பெற்றிருப்பர். பிராமணரை மையமாகக் கொண்டு பிராமண போஜனம் மறுமையைக் கருதியே வழங்கப்பட்டதால் இம்மைக்கு உதவாமல் போய்விட்டன. இதனால் சமூக வளர்ச்சி தடைபட்டுப் போனது.
சான்றாதாரம் தென்னிந்திய கல்வெட்டுகள்.

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...
நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்         (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்)
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்
வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
    தொலைபேசி: 044-26251968, 26258410, 26241288
    ஷ்ஷ்ஷ்.ஸீநீதீலீஜீuதீறீவீsலீமீக்ஷீ.வீஸீ  மீனீணீவீறீ:வீஸீயீஷீ@ஸீநீதீலீ.வீஸீ  
        விலை: ரூ.75/-
பிராமண போஜனம்
தமிழ்க் கல்வெட்டுகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் ஆராய்ந்து வகைப்படுத்தினால் கொடையை மையமாகக் கொண்ட கல்வெட்டுகளே மிகுதியாக இருப்பதைக் காண முடியும். நிலம், பொன், பணம், உலோகப் படிமங்கள், ஆடு, மாடு என்பன கொடைப் பொருளாக விளங்கியுள்ளன. மனிதர்களையும்கூட அடிமைகளாகக் கோவிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளனர். இவைதவிர பொருட்கள், நிலங்கள் மீதானசில வரிகளும் கொடையாக வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கும் வழங்கப்பட்டது.
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், வணிகர், கைவினைஞர், நில உரிமையாளர் என்போர் கொடை வழங்குவோராக விளங்கியுள்ளனர். விதிவிலக்குப் போன்று குடிஊழியம் செய்வோரும் கொடை வழங்கியுள்ளனர். பெரும்பாலும் சைவ, வைணவக் கோவில்களும், சமண, பௌத்தப் பள்ளிகளும் இவர்களிடம் இருந்து கொடை பெற்ற அமைப்புகளாக விளங்கியுள்ளன. புதிதாக அமைக்கப்படும் நீர் நிலைகள் ஊர்ப் பொதுவாக வழங்கப்பட்டன. இவை தவிர பிராமணர்களுக்குக் கொடை வழங்கிப் பேணும் வழக்கமும் நிலவியுள்ளது.
பிராமணக் கொடை
பிராமணர்களுக்குக் கொடை வழங்கல் மிகப் பெரிய புண்ணியச் செயல் என்று மனுதர்மம் (3:98) பின்வருமாறு குறிப்பிடுகிறது:
கல்வி தவம் முயன்ற வேதியர்க்களித்தல் தீயிலிட்டுச் செய்த ஓமம் போல் ஒளிர்விடும். மேலும் இம்மையில் நோய், பகை, ராஜ பீடை இவற்றால் உண்டான அச்சத்தினின்றும், மறுமையில் நரகத்தினின்றும் விடுவிக்கும்.
பிராமணர்களுக்கு வழங்கும் கொடையானது இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதுடன் மட்டுமின்றி, பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடை வழங்க வேண்டியதை வலியுறுத்தி மனு(3:79) மேலும் கூறுவது வருமாறு:
பெரும் காணிக்கைகளுக்குரிய அஸ்வமேத முதலிய வேள்விகளை நடத்தி அந்தணர்க்கான அறச் சாலைகளை நியமித்து கொடை வழங்க வேண்டியது.
மனுதர்மத்தின் செல்வாக்கு மன்னர் ஆட்சிக்காலத் தமிழகத்தில் நிலை பெற்றிருந்தது. பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரிலான பிராமணக் குடியிருப்புகள் மன்னர்களால் உருவாக்கப்பட்டன. இதுகுறித்து செப்பேடுகளும் கல்வெட்டுகளும் விரிவான செய்திகளைக் குறிப்பிடுகின்றன.
பிராமண போஜனம்
நிலம் தவிர உணவும் கொடைப்பொருளாக விளங்கியுள்ளது. வழிபாட்டின்போது உணவு படைத்து வழிபடுவது சைவ, வைணவ சமய மரபு. இதைத் திருஅமுது செய்தல் என்று கூறுவர். இவ்வாறு திருஅமுது செய்யவும், சிவனடியார், பயணம் செய்வோர், பிராமணர் ஆகியோரின் பசி போக்கவும் உணவுக் கொடை வழங்கப்பட்டது. இவற்றுள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட உணவுக் கொடை பிராமண போஜனம் எனப்பட்டது.
இப்பிராமண போஜனமானது மூன்று வகையில் நிகழ்ந்துள்ளது. முதலாவது நாள்தோறும் நிகழ்த்தப்படுவது. இதை நிசிதம் (ஏற்பாடு) என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இரண்டாவது அம்மாவாசையன்று நிகழ்வது. மூன்றாவது கோவில் திருநாட்களின்போது நிகழ்வது.
வழங்கிய முறை
பிராமண போஜனத்திற்குரிய செலவுத் தொகையை நிலம், பொன், பணம் ஆகிய மூன்று வடிவங்களில் வழங்கியுள்ளனர். நிலத்தில் இருந்து கிட்டும் நெல் உணவுக்கான அரிசிக்கும் உணவு தொடர்பான இதர செலவுகளுக்கும் பயன்பட்டுள்ளது. பொன், பணம் ஆகியன வட்டிக்கு விடப்பட்டு அவ்வட்டித் தொகையில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திலுள்ள பிரமமதேசம் ஊரிலுள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் கல்வெட்டொன்று அம்மாவாசைதோறும் பிராமணர்களுக்கு உணவளிப்பதைக் குறிப்பிடுகிறது. இதற்காக இருகழஞ்சுப்பொன் முதலீடாக வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு உணவளிக்க கோவிலின் கணப்பெருமக்கள் (சபை உறுப்பினர்கள்) ஒத்துக் கொண்டுள்ளனர். (தெ.இ.க.30:142)
வழங்கியோரும் வழங்கியதன் நோக்கமும்
மன்னர்கள், மன்னர் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் ஆகியோரும், குடிமக்களும் மேற்கூறிய முறைகளில் பிராமண போஜனத்திற்கான செலவுத் தொகையை வழங்கியுள்ளனர்.
இவர்களள் சிலர் குறிப்பிட்ட நோக்கம் எதுவுமின்றி புண்ணியம் கிட்டும் என்ற நம்பிக்கையில் கொடை வழங்கியுள்ளனர். சிலர் இறந்தோரின் ஆன்ம அமைதிக்காக வழங்கியுள்ளனர். சிலர் குறிப்பிட்ட விழா நாளையும், சிலர் தம் பிறந்த நாளையும் மையமாகக் கொண்டு வழங்கியுள்ளனர். பிராமணர்களுக்கு உணவு வழங்கியதன் அடிப்படை நோக்கம் மறுமை வாழ்வுக்குப் புண்ணியம் கிட்டும் என்பதுதான்.
பிராமணர்களில், வேதம் வல்லோருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற குறிப்பும் சில கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. சான்றாக ராஜகேசரிவர்மன் என்ற சோழ மன்னனின் 23ஆவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்று கற்றறிந்த, வேதமறிந்த 12 பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்த செய்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டின்படி பிரம்மாதி ராஜா என்பவன் 200 கழஞ்சு பொன்னை ஊர்ச்சபையிடம் வைப்புத் தொகையாக வழங்கியுள்ளான். இத்தொகையில் இருந்து கிட்டிய வட்டியில் இருந்து உணவு வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.3:11:1).
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள குத்தாலத்தில் கிடைத்துள்ள கல்வெட்டில் (கி.பி.992) சாமவேதம், தைத்திரிய சாண்டியோக சாமவேதம் வல்லார்க்கு உணவு வழங்கியதைக் குறிப்பிடுகிறது. (மேலது: 170). வேதக்கல்வியை ஊக்குவிப்பதும் வேதம் வல்லாரைப் பேணுவதும் பிராமணப் போஜனத்தின் நோக்கமாக இருந்துள்ளமை இச்செய்திகளால் புலப்படுகிறது. பல்லவர்களின் செப்புப் பட்டயங்கள் சிலவற்றில்,
பிராமணர்களின் சொத்து கொடிய விஷம். மற்ற விஷம் விஷமல்ல. அந்த விஷம் ஒருவனையே கொல்லும். பிராமணன் சொத்தோ புத்திர பௌத்திரர்களையும் கொல்லும் என்ற காப்புரைத் தொடர் இடம் பெற்றுள்ளது. இத்தொடர் பிராமணர்களுக்குப் பல்லவ மன்னர்களால் வழங்கப்பட்ட பிரம்மதேயக் கொடைச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளது. பிராமணரின் சொத்துக்குப் பாதுகாப்பு அரணாக இக்காப்புரையை அமைத்துள்ளனர். இதன் தாக்கம் பிற்காலச் சோழர் காலத்திலும் இருந்துள்ளது. பிராமணருக்கு உரிமையான சொத்தைப் பறிமுதல் செய்தாலும், அச்சொத்தின் பயன்பாடு பிராமணர்களுக்கு மட்டுமே கிட்ட வேண்டும் என்ற நடைமுறை இருந்துள்ளது.
முதலாம் இராஜராஜசோழனின் அண்ணான இரண்டாம் ஆதித்த கரிகாலன் சோழநாட்டின் வட்டாரத் தலைவர்களால் கொலை செய்யப்பட்டான். முதலாம் இராஜராஜன் ஆட்சிக்கு வந்தவுடன் இக்கொலையுடன் தொடர்புடைய பிராமணர்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து விலைக்கு விற்றான். அதை விலைக்கு வாங்கியவர்கள் அதிலிருந்து வரும் வருவாயைப் பயன்படுத்தி காட்டுமன்னார் கோவிலில் உள்ள சிவன் கோவிலில் நாள்தோறும் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்தனர். (கி.ஸி.ணி.1921:97 பத்தி 31.)
வழங்கப்பட்ட உணவு
பிராமணபோஜனத்தைக் குறிப்பிடும் கல்வெட்டுகளில், வழங்கப்பட்ட உணவு குறித்தும் சில குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலே குறிப்பிட்ட ராஜசேகரவர்மனின் 23ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் 12 பிராமணர்களுக்கான நண்பகல் உணவில் சோறுடன் ஆழாக்கு (அரைக்கால் படி) நெய், அய்ந்து வகைக்கறி, அய்ந்து உழக்குத் தயிர் ஆகியனவும் இரண்டு பாக்கும், வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன. சமையல் செய்வாருக்கும், விறகிடுவாருக்கும் தனியாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளது (தெ.இ.க.3 பகுதி.1). கோவிலில் உணவுச் சாலை ஒன்றை நிறுவி 25 பிராமணர்களுக்கு உணவளிக்க செம்பியன் மாதேவி, ஏற்பாடு செய்துள்ளார். இதன் பொருட்டு 12 வேலி நிலத்தை வழங்கியுள்ளார். இந்த நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலத்தில் இருந்து ஆண்டுதோறும் 1590 கலம் நெல் கிடைத்துள்ளது. இதில் 937 கலம் ஒரு தூணி (நான்கு மரக்கால்), ஒரு பதக்கு (இரண்டு குறுணி) நெல்லைக் கொண்டு சோறும், காய்கறி, நெய், தயிர், பலவகைக் கறிகள், வெற்றிலைப் பாக்கு ஆகியனவும் நாள்தோறும் வழங்கப்பட்டுள்ளன. விறகும் இக்கணக்கில் அடங்கும். சமையல் செய்பவருக்கு நாள்தோறும் ஒரு குறுணி (இரண்டு நாழி) நெல் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. (தெ.இ.க.வீவீவீ & வீஸ்: 151)
காஞ்சன் தாமோதரன் என்பவன் வேதம் வல்ல பிராமணருக்கு நண்பகல் உணவளிக்க எழுபது கழஞ்சு பொன்னை திருச்சி மாவட்டம் திருவெள்ளரை கோவிலின்மூலபரிஷத்திடம் (சிவன் கோவில் நிருவாகத்தை நடத்தி வந்த சபை) கி.பி.985இல் வழங்கியுள்ளான். இது தவிர தாலம், வட்டில் ஆகிய சமையல் பாத்திரங்களையும் வழங்கியுள்ளான். நாள்தோறும் 18 நாடுறி குத்தல் படியரிசி சமைக்கப்பட்டதுடன், கும்மாயம் (சிறுபயிறு பருப்பிட்டுச் செய்யும் இனிப்புப் பண்டம்) ஆழாக்கு நெய், பழம் 2, காய்கறி, புளிக்கறி, நாழி தயிர், பொறிக்கறி, வெற்றிலை ஆகியனவும் வழங்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள திருவெறும்பியூர் ஆழ்வார் கோவிலில் உள்ள 955ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் வேளாண் வீர நாராயணன் என்ற செம்பியன் வேதிவேளார் என்பவன் 15 பிராமணர்கள் நாள்தோறும் உள்ள, சத்திரம் அமைத்துள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இச்சத்திரத்தில் உணவு வழங்க ஆகும் செலவிற்காக இரண்டு வேலி, ஏழு மா அளவுள்ள நிலம் வழங்கியுள்ளான். இச்சத்திரத்தில் இரு நாழி அரிசி, கறிகாய்கறி ஒன்று, புளிக்கறி ஒன்று, புழுக்குக்கறி ஒன்று, நெய் அரைப்படி ஆகியவற்றுடன் வெற்றிலை, பாக்கு இரண்டும் வழங்கப்பட்டுள்ளன. (தெ.இ.க.13: 110).
இதே கோவிலில் உள்ள 985ஆம் ஆண்டுக் கல்வெட்டு திருப்பேர்பாலாசிரியன் என்பவன் நாலு மா நிலம் வழங்கி, பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் இருநாழி அரிசியும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி, புழுக்குக்கறியுடன் உரிஅளவு தயிரும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்க ஒழுங்கு செய்துள்ளான்.(தெ.இ.க.13:138).
இதே கோவிலுக்கு 985ஆம் ஆண்டில் ஆறு மா நிலத்தைக் கொடையாக திருப்பேர் பாப்பானி காரிநக்கன் என்பவன் வழங்கியுள்ளான். இந்நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நில வருவாயைக் கொண்டு வேதம் வல்ல பிராமணன் ஒருவனுக்கு நாள்தோறும் திருவெறும்பியூராழ்வார் கோயிலில் உள்ள சத்திரத்தில் இருநாழி அரிசிச் சோறும், காய்கறி ஒன்றும், நெய் அரைப்படியும், புளிக்கறி புழுக்குக்கறியும், தயிர் உரியும், இரண்டு வெற்றிலைப் பாக்கும் வழங்கியுள்ளான். (தெ.இ.க.13:139-). விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள உலகாபுரம் (உலகமாதேவிபுரம்) என்ற கிராமத்தில் உள்ள சிதைவடைந்த சிவன் கோவிலில் கி.பி.988ஆம் ஆண்டுக் காலத்தியக் கல்வெட்டு ஒன்றுள்ளது. கங்கன் அம்பலவன் கண்டராதித்தான் என்ற சோழ அரசு அதிகாரி 56 பிராமணர்களுக்கு உணவளிக்க 19 வேலி நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கிய செய்தி இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு சோறுடன் நாலுகறி ஒருமுட்டை அளவு (சிறு கரண்டி அளவு) நெய், நாழி அளவு மோர் ஆகியவற்றுடன், அய்ந்து வெற்றிலையும் பாக்கும் வழங்கியுள்ளனர். (தெ.இ.க.13:61).
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள ஊர் உடையார் கோயில். இங்குள்ள அனந்தீஸ்வரர் கோவிலில் 985ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்றுள்ளது. உத்தமசந்திரன் என்ற செம்பியன் பல்லவதரையன் மூன்று பிராமணர்களுக்கு இக்கோவிலில் நண்பகல் உணவளிக்க முக்காலே இரண்டு (பரப்பளவு குறிப்பிடப்படவில்லை). நிலம் விலைக்கு வாங்கிக் கொடையாக வழங்கியுள்ளான். இந்நிலத்தின் வருவாயைக் கொண்டு இருநாழி பழவரிசியும் (குத்தி நீண்ட நாட்கள் ஆன அரிசி), ஆழாக்கு பருப்பும், காய்கறி ஒன்றும், புளிக்கறி ஒன்றும், அக்காரலட்டு (இனிப்பு லட்டு) இரண்டும், வாழைப்பழம் இரண்டும், பொரிக்கறி ஒன்றும், தயிர் நாழியும், நான்கு பாக்கும், பத்து வெற்றிலையும் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிரஅடுவான் (சமைப்பவன்) ஊதியன் வழங்கவும், விறகு, உப்பு, காயம் ஆகியன வாங்கவும் ஒழுங்கு செய்யப்பட்டது (தெ.இ.க.13:91).
நாள்தோறும் உணவு வழங்க இயலாதவர்கள் சில குறிப்பிட்ட நாட்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். சேலம் நகரில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்றன.
மணிக்கிராமம் என்ற பெயரிலான வணிகக் குழுவைச் சேர்ந்த மஞ்சன் மணிய மராத்தான் என்பவன் இக்கோவிலில் அய்ந்து கழஞ்சுப் பொன்னை முதலீடாக வைத்துள்ளான். இதிலிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு இருபத்தைந்து அந்தணர்களுக்கு மாசித் திருநாளில் உணவு வழங்கப்பட்டுள்ளது. (கிருட்டிணன் 2001: 130)
செல்வனடிகள் என்பவன் நாற்பது பொன் கொடையாக வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டியில் மாசிமகத் திருவிழாவின்போது இருபத்தி அய்ந்து அந்தணர்களுக்கு சோறுடன் மூன்று கறி, அரைப்படி நெய், தயிர், வெற்றிலைப் பாக்கு ஆகியன வழங்கப்பட்டன (மேலது: 131).
திருச்செங்கோடு மலைமேல் நாகர் குன்றுக்கு மேற்கில் உள்ள பாறையில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன் றுள்ளது. இக்கல்வெட்டு இளங்கோனடிகள் என்பவனின் மனைவி மூரிக்காமக்கனார் என்பவள் வழங்கிய கொடையைக் குறிப்பிடுகிறது. இப்பெண் திருச்செங்கோட்டுப் பன்னிரண்டு நாட்டுப் பெருமக்களிடம் இருபது கழஞ்சுப் பொன்னை வழங்கியுள்ளான். இதில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு ஏகாதசி நாளில் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. (மேலது: 168).
இதுபோல் திருவாதிரைதோறும் இருபது அந்தணர்களுக்கு உணவு வழங்க இருபது கழஞ்சு பொன் வழங்கப்பட்ட செய்தியை இதே பகுதியில் உள்ள 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது (மேலது: 170). துவாதசி, திருவாதிரை, திருவோணம் ஆகிய விழா நாட்களிலும் பிராமண போஜனம் நடத்தக் கொடை வழங்கப்பட்டதை பத்து, 13ஆம் நூற்றாண்டுக் கால கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.பெரிய அளவில் முதலீடு செய்து அதிக எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கும் முறையில் இருந்து ஒன்று, இரண்டு, மூன்று எனக் குறைந்த எண்ணிக்கையிலான பிராமணர்களுக்குக் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உணவு வழங்கும் முறையானது, அதிகப் பொருள்வளம் இல்லாதோறும் இச்செயலில் ஈடுபட்டதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. சில கல்வெட்டுகள் இருபது பிராமணர்களுக்கு உணவு வழங்குவதைக் குறிப்பிட்டாலும் வழங்கும் நாள் ஒருநாள்தான் (தெ.இ.க.13: 243).
பிராமண போஜனத்தின் விளைவு
மறுமை குறித்த நம்பிக்கையின் தூண்டுதலால் மக்கள் கோவில்களை மையமாகக் கொண்டு பல கொடைச் செயல்களை மேற்கொண்டுள்ளனர். கோவிலுக்கு பொன் அணிகலன்கள், உலோகப் படிமங்கள், பாத்திரங்கள் ஆகியனவற்றை வழங்கியுள்ளனர். கோவிலில் சந்திவிளக்கு, நந்தாவிளக்கு எரிக்க கால்நடைகளையும், நிலங்களையும் கொடையாக வழங்கியுள்ளனர். இவ்வரிசையில் பிராமண போஜனமும் இணைகிறது.
இவை அனைத்திலும் காணப்படும் பொதுவான தன்மை குடிமக்களின் உபரிப்பணம் இவற்றில் முதலீடாக இடப்பட்டதுதான். தமிழ்நாட்டிலும் அயல் நாடுகளிலும் செயல்பட்ட தமிழ் வணிகக் குழுக்களும், இவற்றின் உறுப்பினர்களான வணிகர்களும், நெசவாளர், உலோகத் தொழில் புரிவோர் ஆகிய கைவினைஞர்களும், கால்நடை வளர்ப்போர், நிலவுடைமையாளர் ஆகியோரும் தம்மிடம் இருந்த உபரிப் பணத்தை பிராமணர்களுக்கு உணவு வழங்குவதில் முடக்கியுள்ளனர்.
இம்முதலீடு இவ்வுலக வாழ்வுக்குப் பயன் தராத முதலீடாக அமைந்தது. ஆதாயம் எதுவும் தராத இயங்கா முதலீடாக (பீமீணீபீ நீணீஜீவீtணீறீ) இம்முதலீடுகள் அமைந்து சமூக வளர்ச்சிக்குத் துணை புரியாது போய்விட்டது. வருவாய் ஈட்டும் துறைகளில் உபரியை முதலீடு செய்திருந்தால் பொருளியல் வளர்ச்சி மிகுந்திருக்கும். அல்லது நலத்திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் மக்கள் பயன் பெற்றிருப்பர். பிராமணரை மையமாகக் கொண்டு பிராமண போஜனம் மறுமையைக் கருதியே வழங்கப்பட்டதால் இம்மைக்கு உதவாமல் போய்விட்டன. இதனால் சமூக வளர்ச்சி தடைபட்டுப் போனது.
சான்றாதாரம் தென்னிந்திய கல்வெட்டுகள்.

-  உண்மை இதழ், 1-15.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக