செவ்வாய், 20 மார்ச், 2018

மனுஸ்மிருதி குறிப்புகள்

*சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் (மனுநூல் 9:96)._*

_சூத்திரர்கள் முன்னிலையில் பிராமணர் வேதத்தைப் படித்துக் காட்டக்கூடாது (மனுநூல் 4:99)._

_சூத்திரன் மனப்பாடம் செய்யும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்றவேண்டும். அவன் வேதம் ஓதினால் ஓதிய நாக்கு துண்டிக்கப்படவேண்டும். வேதத்தில் முழு தேர்ச்சி அடைந்தால், அவனது உடல் துண்டு துண்டாக வெட்டி சிதைக்கப்படவேண்டும் (மனுநூல் 12:4)._

_சூத்திரன் பிராமணனைப் பார்த்து “நீர் இதைச் செய்ய வேண்டும்” என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் (மனுநூல் 8:272)._

_சூத்திரன் பிராமணனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்தால், சூத்திரனுடைய இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது அவனை ஊரைவிட்டுத் துரத்தவேண்டும்; அல்லது அவனது ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண் ஏற்படுத்தவேண்டும் (மனுநூல் 8:281)._

சங்கராச்சாரியை சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் APJ அப்துல் கலாம் போன்றவர்களை தரையில் உட்காரவைத்து பேசியிருக்கிறார் சங்கராச்சாரியார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விஜயேந்திரரை சந்தித்தபோது நிற்கவைத்து பேசியிருக்கிறார். அதற்கு காரணம் அவர்கள் சூத்திரர்களாம். ஆனால், சுப்பிரமணிய சாமி என்னும் அரசியல்வாதி அவரை சந்திக்க போனபோது அவரை சரிசமமாக நாற்காலியில் அமரவைத்து பேசினார் சங்கராச்சாரியார். ஏனெனில் சுப்பிரமணிய சாமி பார்ப்பனராம். என்ன கொடுமை சார் இது!

_பிராமணனுடைய தலைமயிர் தாடி, மீசை, கால், கழுத்து, விதை இவைகளைப் பிடித்து இழுத்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் வெட்டவேண்டும் (மனுநூல் 8:283)._

_சூத்திரன் பிராமணனை எந்த அங்கத்தினால் தாக்கினானோ அல்லது புண்படுத்தினானோ அந்த அங்கத்தை துண்டிக்கவேண்டும் (மனுநூல் 8:279)._

_சூத்திரன் வருணாசிரமப்படி நடக்காவிட்டால், பிராமணர்கள் ஆயுதமேந்தி அவர்களை தாக்கவேண்டும் (மனுநூல் 8:348)._

_அரசன் சூத்திரனை பிராமணர் போன்ற உயர்சாதியினருக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்கவேண்டும் (மனுநூல் 8:410)._

_சூத்திரனுக்கு கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம் (மனுநூல் 8:413)._

_பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால், அடிமையாகிய சூத்திரன் எவ்வித பொருளுக்கும் உரிமையாளனாக மாட்டான் (மனுநூல் 8:417)._

_பிராமணனால் சூத்திர பெண்ணுக்கு பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு தந்தையின் சொத்தில் பங்கு இல்லை (மனுநூல் 8:455)._

_சூத்திரன் பிராமணனை கையினாலும் தடியினாலும், அடித்தால் கையையும் , உதைத்தால் காலையும் வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:280)._

_சூத்திரன் பிராமண சாதிக்குறியான பூணுால் முதலியதைத் அணிந்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:224)._

_சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால், சூத்திரனை சித்ரவதை செய்து கொல்லவேண்டும் (மனுநூல் 9:248)_

_சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானாகிய பிராமணனுக்கு சேரவேண்டுமே தவிர சம்பாதித்தவனுக்கு சேராது (மனுநூல் 9:416)._

_பிராமணன் சாப்பிட்டு மீந்த எச்சில் உணவு, உடுத்தி கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம் இவைகளை பிராமணன் சூத்திரனுக்கு வாழ்வாதாரமாக கொடுக்கவேண்டும் (மனுநூல் 10:125)._

_சூத்திரன் கட்டாயம் பிராமணர்களுக்கு தொண்டூழியம் செய்யவேண்டும் (மனுநூல் 10:122)._

_சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடியும்போதும் அவ்வாறு திரட்டி செல்வம் சேர்க்கக்கூடாது. ஏனெனில், செல்வந்தனான சூத்திரன் பிராமணனுக்கு துன்பம் தருகிறான் (மனுநூல் 10:129)._

_செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும், கேளாமலும், பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் (மனுநூல் 11:13)._

_படைப்புப் பொருட்களில் உயிருடையவை சிறந்தவை; உயிருள்ளவற்றுள் அறிவுள்ளவை சிறந்தவை; அறிவுள்ளவற்றில் மனிதன் சிறந்தவன்; மனிதருள் பிராமணர் சிறந்தவர் (மனுநூல் 1:96)._

_பிராமணனைக் காப்பாற்றும்பொருட்டு பிராமணன் அல்லாதவரை கொல்வது பாவம் அல்ல (மனுநூல் 8:143)._

_அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால், அதில் பாதியை பிராமணர்களுக்கு தானம் செய்து மீதியை அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும் (மனுநூல் 8:38)._

_பிராமணன் எத்தகைய கொடிய பாவம் செய்தாலும் அவனைக் கொல்லக்கூடாது; அவன் தலையை மொட்டை அடிப்பதே மரண தண்டனையாகும். பிறருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் (மனுநூல் 8:379)._

_எத்தகைய பாவம் செய்தாலும், பிராமணனை கொல்லாமலும், அவன் பொருளைக் கவர்ந்துகொள்ளாமலும் ஊரைவிட்டு துரத்தவேண்டும் (மனுநூல் 8:380)._

_பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரிய ஒரு பாவம் இல்லை. எனவே, பிராமணனைக் கொல்வதுபற்றி அரசு நினைக்கவேகூடாது (மனுநூல் 8:381)._

_அறிவாளியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுநூல் 9:317)._

_ஒளியுள்ள தீ மயானத்தில் பிணத்தை எரித்தாலும், நிந்தனை இல்லாமல் எப்படி வேள்வியில் வளர்க்கப்படுகிறதோ அப்படியே பிராமணன் கெட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் வணங்கத்தக்கவன்; மேலானவன் (மனுநூல் 9:318)._

_பிறப்பினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும், உயர்ந்த குலத்தாலும், வேதங்களை பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும், பூணூல் அணிந்துள்ள சிறப்பினாலும் பிராமணன் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளான் (மனுநூல் 10:3)._

_சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணன் இல்லாத இடத்தில் க்ஷத்திரியனுக்கோ, க்ஷத்திரியன் இல்லாவிட்டால் வைஷ்யனுக்கோ தொண்டு செய்யவேண்டும். அதிகமான பசுக்களையும், செல்வங்களையும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால் களவு செய்தாவது அல்லது பலாத்காரம் செய்தாவது பிராமணன் எடுத்துக்கொள்ளலாம் (மனுநூல் 11:12)._

_திருடிய பிராமணனை தண்டிக்கக்கூடாது (மனுநூல் 11:20)._

_பெண்களையும் சூத்திரரையும் கொல்வது மிகவும் சிறிய பாவமாகும் (மனுநூல் 11:66)._

_ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்யவேண்டிய பிராயச்சித்தம் எதுவோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும் (மனுநூல் 11:131)._

என்று  இந்துத்துவத்தின் புனிதநூலாகிய மனுநூல் கூறுகிறது.

திருப்பி அடிக்கவேண்டும் என்னும் கொள்கை உடையவர்களை துன்புறுத்துவதை ஒத்துக்கொள்ளலாம்.

இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட எல்லா கோயில்களிலும் *"இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது"* என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்தவ தொழுகை இடங்களில் யாரையும் ஏற்றுக்கொள்கிறார்கள். உண்மையான கடவுள் இந்துக்கள் அல்லாதவர்களை புறக்கணிக்குமா?

வேதங்கள், வேதாந்தங்கள், இதிகாசங்கள், உபநிஷத்துகள் எல்லாவற்றையும் மனப்பாடமாக கற்றுத் தேர்ந்தாலும் பிராமணர் அல்லாதவர்கள் பூசாரியாக முடியாது.
நான் சொல்வதை *பகுத்தறிவுள்ள இந்துக்கள்* ஒத்துக்கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக