பார்ப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மார்ச், 2024

அடித்தவர்களே, அழும் நாடகம் இதோ! ஏமாறமாட்டோம்!! (பார்ப்பனர்களின் இனவெறி)

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

 அடித்தவர்களே, அழும் நாடகம் இதோ! ஏமாறமாட்டோம்!!

—கி.வீரமணி

பார்ப்பனர் நலன் பாதுகாப்பதையே தனது ஒரே லட்சிமாய் கருதி நடத்தப்பெறும் ஏடுகளில் ஒன்றான ‘தினமலரில்' ஒரு பார்ப்பனர் தாங்கள் ஏதோ யூதர்களை ஜெர்மனியில் ஹிட்லர் வாட்டி யதைப்போல தங்களை தமிழ்நாட்டு திராவிடர்கள் - பார்ப்பனரல்லாதவர்கள் நடத்துகிறார்கள் என்று பொய்யழுகை அழுதிருப்பதற்கு ‘விடுதலை' தனது தலையங்கத்தில் மிகத் தெளிவான முறையில் பதில் அளித்துள்ளது (12.6.2021).

திராவிடர் இயக்கத்தின்மீது இந்த பார்ப்பன ‘பிரகஸ்பதிகள்' வைக்கும் குற்றச்சாற்றுகள் என்ன?

"எந்த ஓர் இனத்தையும் தவறாகப் பேசுதல், தாக்குவது இந்தியச் சட்டப்படி குற்றம். ஆனால், ஆட்சியிலிருப்போர் அந்தக் குற்றத்தைச் செய்கின்றனர்.

‘பார்ப்பனர்' என்பதே, அந்த சமூகத்தினரை இழிவுபடுத்தும் சொல்தான். ஆனால், சிறுபான்மை இனமான அவர்கள், அந்த சொல்லுக்குக்கூட எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒதுங்கி, ஒதுங்கி இருக்கின்றனர்."

- இந்த முதல் குற்றத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கலாமா?

1. ‘எந்த ஓர் இனத்தையும் தவறாகப் பேசுதல், தாக்குதல் இந்திய சட்டப்படி குற்றம்.

இதைச் செய்தது பார்ப்பனர்களான ஆரியர்கள் அல்லவா? ஆரிய வேதங்களில் கறுப்பின மக்களை ‘தஸ்யூக்கள்', ‘சண்டாளர்கள்', ‘சூத்திரர்கள்', ‘தொடக்கூடாதவர்கள் என்று எழுதியதோடு, மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பகவத் கீதை முதலானவற்றில் பகிரங்கமாகவே இழிவுபடுத்தி வைத்து, அதற்கு சட்ட அங்கீகார முத்திரை பதித்தவர்கள் - திராவிட இயக்கத்தவர்களா? பெரியாரா? அண்ணாவா? கலைஞர் கருணாநிதியா? இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினா? கி.வீரமணியா? யார்?

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்.

2. அந்த மக்களின் எண்ணிக்கை பெரும் பான்மையாக இருந்தும்,  மக்களிடையே புழக்கத்தி லிருக்கும் தொகை 8 முதல் 10 கோடியாக இருக்கும் அவர்களின் தாய்மொழியான தமிழ் மொழியைத் தாழ்த்தி, ‘‘நீச்ச பாஷை - அல்ல நீஷ பாஷை, எந்த கோவிலுக்குள்ளும் அர்ச்சனைக்குத் தகுதி யற்ற மொழி, மக்களின் புழக்கத்தில் இல்லாத ‘செத்த மொழியாக' இருந்தாலும், வழிபாடுகளில், கடவுளுக்கு உகந்த மொழி ‘தேவ பாஷை'யான ஆரிய மொழியான சமஸ்கிருதம் என்று கூறி, இன்றும் தமிழ்நாட்டுக் கோவில்களில் - தமிழன் - திராவிடன் கட்டிய கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழை அனுமதிக்க மறுப்பது யார்? திராவிடர்களா? திராவிடர் இயக்கத்தவர்களா? பார்ப்பனர்களாகிய ஆரியர்களா?

3. அனல் வாதம் - புனல் வாதம் என்ற பெயரால் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து, கழுவிலேற்றி அதை ஆண்டுதோறும் விழாக்கள் செய்வது ஏறத்தாழ ஒரு ‘இனப் படுகொலை'யைக் கொண்டாட வைப்பது அல்லவா?

4. மனுதர்மத்தில் சூத்திரன், பஞ்சமன் என்ற நான்கு ஜாதிகளையும், ஜாதி, அடுக்குக்குக் கீழே 5 ஆவது பஞ்சமனையும் - தீண்டத்தகாதவர்கள் - ஆறாவது மிக மிகக் கீழான  மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள பெண்கள் அனைவரும் படிக்கக் கூடாதவர்களாகவும், பிறவி இழிவானவர்கள் என்றும் இன்னும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும், கேரளாவில் சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று கச்சை கட்டி நின்று, பெண்களின் உரிமை பறித்து, அவர்களைக் கேவலப்படுத்துவது பார்ப்பன சனாதனம்தானே!

மனிதாபிமானத்தோடு அவர்கள் என்றாவது பார்த்ததுண்டா?

விதவைகளை உயிருடன் எரித்தவர்கள் யார்? எரிக்கப்பட்ட அவர்களுக்குக் ‘கோவில் கட்டி' தெய்வமாக்கி - ‘சதி மாதா'வாக்கிய சதிகாரக் கூட்டம் எது?

5. பகவத் கீதையில் 9 ஆம் அத்தியாயத்தில் 32ஆவது சுலோகத்தில் பெண்களையும், ‘சூத் திரர்கள்' என்று இழிபெயரைச் சூட்டிய உழைக்கும் மக்களையும் ‘‘பாவ யோனி''யிலிருந்து பிறந்தவர்கள் என்று எழுதி வைத்து, இழிவுப்படுத்தி வருபவர்கள் யார்?

பார்ப்பனர்களா? மற்றவர்களா?

தங்கள் தாயையே கொச்சைப்படுத்துவதுபோல் பெண்கள்மீது இப்படி ஒரு பிறவி இழிவை வீசி அடிமைகளாக்கி மகிழும் இனம் எது?

‘பார்ப்பனர்' தங்களை ‘பிராமணன்' என்று அழைக்கச் சொல்லும்போது, அதன் வர்ணாசிரம படிக்கட்டு வரிசை கதவைத் தட்டி எடுத்து வருவது ‘சூத்திரன்' என்ற இழிச் சொல்தானே?

எனவேதான் தந்தை பெரியார், ‘பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர்' என்று இழிவைத் துடைக்க அந்த மக்களுக்கு அழைப்பு விடுத்தார். தங்கள் மீதுள்ள கறையைப் போக்க, அவமானத்தை நீக்கவே தவிர, வேறில்லை.

6. ‘பிராமணன்' என்ற சொல்லை பெரியாரும், திராவிட இயக்கம் மட்டுமா தவிர்த்து வருகிறது?

தமிழ் இலக்கியங்களில் எங்காவது பிராமணன் என்ற சொல்லாட்சி உள்ளதா?

(வீ) மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (குறள் 134)

என்பதில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவரின் திருக்குறளில் உள்ள சொல் அல்லவா?

(வீவீ) மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலம் செய்வது காண்பார்க ணோன்பென்னை - சிலப்பதிகாரத்தில்

(கோவலன் - கண்ணகி மாந்த திருமணத்தைக் குறிக்கும் செய்யுளில் உள்ள சொல் ‘பார்ப்பான்' என்பதுதானே!

(வீவீவீ) ‘பார்ப்பன மாந்தர்காள், பகர்வது கேண்மின்

நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நீர் நாட்டினீர்'

- பார்ப்பனர் என்று கூறப்படும் -

பார்ப்பனர் கபிலர் அகவலில் பயன்படுத்தப் பட்டுள்ள சொல் ‘பார்ப்பனர்'தானே!

பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட வேந்தர்க்கும் பொல்லாத வியாதியாம்

திருமூலர்

திருமந்திரத்தில் கூற்று அல்லவா!

பழைய இலக்கியங்களை விட்டு பாரதியார் யுகத்திற்கு வருவோம்!

(அ) பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே!

- பாரதி பயன்படுத்தியது இச்சொல்தானே!

(ஆ) ‘‘சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயினும் அது சாத்திரமல்ல

சதியென்று கண்டோம்''

இப்படி இலக்கியத்தினுள் நுழைந்தால் இன்னும் ஏராளமான தரவுகள் உண்டு!

அனைவரும் உறவினர் - யாதும் கேளிர் என்ற பண்பாடு திராவிடப் பண்பாடு - சமத்துவ சங்கநாதம்!

பெயர் வைப்பதில்கூட பேதமும், இழிவும் கீழ் மக்களாக்கப்பட்ட சூத்திரர்களுக்கு சூத்திரர்களுக்கு மனுவின் கட்டளை என்ன தெரியுமா?

‘‘பிராமணனுக்கு மங்களத்தையும், க்ஷத்திரி யனுக்கு பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகின்ற பெயரை இடவேண்டியது!

உண்ணும் பதார்த்தங்களில்கூட அவமானம் உருவாக்கியது மனு. படிக்கும்போது எங்கள் நெஞ்சங்கள் கொதிக்காதா?

மனு 3 ஆவது அத்தியாயத்தில் 241 ஆம் சுலோகத்தில்

‘‘பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும்,  நாய் பார்வையினாலும் சூத்திரன் தொடுவதாலும் பதார்த்தம் அசுத்தமாகிறது!

என்னே கேவலம்!

பன்றியை விட -

கோழியை விட -

நாயை விட

ஆறறிவு படைத்த, இந்த மண்ணின் உழைப்புச் செல்வம் தொட்டாலே ‘தீட்டு' - அசுத்தமாகிறதாம்!

(சூத்திரன் தொட்டுக் கொடுக்கும் ரூபாய் நோட்டு, தங்க நகைகள், கறந்த பால், கடைந்த வெண்ணை, உருக்கிய நெய் ‘சூத்திரன் - சூத்திரச்சிகளின்' கைபடாமலா உருவானது?

அவற்றை மட்டும் ‘நன்னா' ரசிச்சு, ருசிச்சு சாப்பிடறேளே, அப்போது எங்கே போச்சு சூத்திர - பஞ்சமத் தீட்டு?

இவ்வளவுக் கொடுமைகளை, அடிமைத்தனத்தை ஓராண்டு, ஈராண்டு அல்ல - பல்லாயிரம் ஆண்டுகள் தொடங்கி, இன்று ஓர் இனம் - மண்ணுக்குச் சொந்தக்கார இனம் இழிவைத் தூக்கி எறிந்து, சுயமரியாதையைப் பெற்று முழு மனிதனாவது கூடாதா?

பேதத்திற்கு விடை கொடுக்க உங்களைப் பார்ப்பனர் என்று அழைப்பதால், உங்கள் அந்தஸ்து ‘ஆவி'யாகப் போய்விட்டதா? என்னே நீலிக் கண்ணீர்!

இன்னும் கல்வி யாரிடத்தில்?

இன்னும் பதவிகள் எவரிடத்தில் ஏகபோகம்?

இன்னும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் யார் வசம் ஆதிக்கத்தில்?

இன்னும் வறுமையில் யார் வாடுபவர்கள்?

ஊடகங்கள் யார் வசம்?

தொழில் அமைப்புகளின் ஆதிக்கம் எவர் கையில்?

அதிகாரவர்க்கம் அக்கிரகாரம்தானே!

மறுக்க முடியுமா?

எனவே, உண்மையில்,

வஞ்சிக்கப்பட்டவர்கள்

வாழ்வாதாரம் இழந்தவர்கள்

அவமானத்தைச் சுமந்து

பஞ்சைகளாய், பராரிகளாய், பாழ்பட்ட மக்களாகி வாழ்பவர்கள் எந்த இனத்தவர்?

இவ்வளவு அநீதி, உரிமைப் பறிப்புக்குப் பின்னரும்,

சமூகநீதி வகுப்புரிமைப்படி உங்கள் (பார்ப்பனர்) மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உங்கள் பங்கை நீங்கள் பெறுவதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை; ஆனால், மற்றவரைப் படிக்கவோ, உத்தியோகம் பார்க்கவோ அனுமதிக்கவே முடியாது என்று இன்னமும் சூழ்ச்சி கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்து, எங்கள் இன மீட்சிக்குப் பெருந்தடையாக உள்ளவர்கள் நீங்கள்தானே!

மீண்டும் மனு யுகத்திற்கு இந்த நாட்டை அழைத் துச் சென்று அமர வைக்க அயராது பாடுபடும் சமூக ‘‘அட்டைகள்'' உங்களைத் தவிர வேறு யார்?

மனசாட்சியுடன் பதில் கூறுங்கள்!

செவ்வாய், 6 ஜூலை, 2021

பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்

பார்ப்பான் தான் கடவுள்; பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்
‘’பூமியில் பிராமணனாக பிறந்துள்ளேன்(கிருஷ்ணன்).
(ஆஸ்வமேதிக பர்வம், பக்கம்-285)

தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தன் மந்திரம் பிரம்மாணா தீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
(ரிக் வேதம் சுலோகம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)
பொருள்: உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது கடவுள்கள் மந்திரங் களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங் கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என்ப தாகும்.
இதை சொல்லித்தான் இராமன் சம்பூகனை {தலையை)வெட்டிக் கொன்றான்(இராமாயணப்படி).
-17.11.2013 எனது முகநூல் பதிவு

செவ்வாய், 17 நவம்பர், 2020

பார்ப்பானே கடவுளாம்!

பார்ப்பான் தான் கடவுள்; பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்
‘’பூமியில் பிராமணனாக பிறந்துள்ளேன்(கிருஷ்ணன்).
(ஆஸ்வமேதிக பர்வம், பக்கம்-285)

தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தன் மந்திரம் பிரம்மாணா தீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
(ரிக் வேதம் சுலோகம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)
பொருள்: உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது கடவுள்கள் மந்திரங் களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங் கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என்ப தாகும்.
இதை சொல்லித்தான் இராமன் சம்பூகனை {தலையை)வெட்டிக் கொன்றான்(இராமாயணப்படி).
- செ.ர.பார்த்தசாரதி
17.11.13, முகநூல் பதிவு

திங்கள், 9 டிசம்பர், 2019

பார்ப்பானும் மாட்டுக்கறியும்!

*"பார்ப்பானும்  மாட்டுக்கறியும்"*

⚫ ஆரிய பிராமணன் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள், கோடரி பயன்படுத்தினார்கள் என்று...

*ரிக்வேதம் [10/ 72/ 6] சுலோகம்* சொல்லுகிறது

⚫ ரிக்வேதகால ஆரிய பிராமணன், உணவுக்காக பசுக்களை கொன்றர்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உணடார்கள் என்பதனை...

*ரிக்வேதம் [10/ 86/14] தெளிவுப்படுத்துகிறது*

⚫ இந்திரன் கூறுகிறான்" அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்து சாப்பிட்டார்கள்".

⚫ அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளையும், காளை மாடுகளையும்,  கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் கொன்றார்கள் என... 

*ரிக்வேதம் [10/ 91/14] கூறுகிறது*

⚫ அறுத்து பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன் 21 ஜென்மங்களுக்கு பலியிடும் விலங்காக உருவெடுப்பான்.

*மனு ஸ்மிருதி [பாகம் 5/ வசனம் 35]*

⚫ இறைச்சிக்குறிய மிருகங்களை உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் *பிரம்மனே படைத்தான்.*

*மனு ஸ்மிருதி [பாகம் 5/ வசனம் 30]*

⚫ பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்.

*ரிக் வேதம் [6/17/1]*

⚫ வேதகாலத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டன.  பசு வின் இந்த புனித்தன்மை காரணமாகவே பசுமாடுக்கறியை ஆரிய பிராமணனர்கள் உண்டார்கள்.

⚫ ராமாயணத்தில் ராமன் தன்னுடைய மனைவி சீதையை மடியில் படுக்க வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்த மாட்டுக்கறியை சீதைக்கு ராமன் ஊட்டினான் என்று வால்மீகி ராமாயண குறிப்பு கூறுகிறது.

⚫ *அதே வால்மீகி  ராமாயணத்தில்...* ராமனுடைய தந்தை தசரதனுக்கு மகடபேறு பாக்கியம் இல்லாத காரணத்தால் , நூற்றுக்கணக்கான பசுமாடு , குதிரை , பன்றி, பாம்பு , ஆமை போன்ற விலங்குகளை யாகத்தில் போட்டு எரித்து கொன்றார்கள். இதில் நன்றாக வெந்த மாட்டுக்கறி பாகத்தை யாகம் செய்த பிராமணன் சாப்பிட்டார்கள் என்று *[பால காண்டம்]* குறிப்பு சொல்லுகிறது.

 ⚫ "இந்து வேதங்களில் மாட்டுக்கறியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது.

*[ The Complete Work Of Swami Vivekananda Vol 3 Page 536 ]*

பட்டியலிடப்பட்ட மக்களை விட பிராமணன்தான் அதிகளவு மாட்டுக்கறியை சாப்பிட்டான் . ஏனென்றால் ? அக்காலகட்டத்தில் பட்டியலிடப்பட்ட மக்களுக்கு பசுமாட்டுக்கறி கிடைப்பது அவர்களுடைய பொருளாதார வசதிக்கு கடினம் . ஆனா பிராமணனுக்கு மாட்டுக்கறி தினதோறும் ஈசியாக கிடைத்துவிடும்.

*எப்படி என்றால்...?*

பிராமணன் எங்கெல்லாம் யாகம் செய்ய போகிறானனோ  அங்கெல்லாம் பசுமாட்டை பலி கொடுப்பதை இந்துகள் ஒரு புனிதமான காரியமாகவே கருதினார்கள். எனவே யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட பசுமாட்டுகறியை பிராமணனுக்கு கொடுப்பது இந்துகளின் வழக்கம்.

இன்றுகூட நம்முடைய நடமுறை வாழ்கையில் , எதாவது ஒரு இந்து வீட்டில் யாகம்  செய்தால் யாகத்தில் படைக்கப்பட்ட பொருட்களை அப்படியே பிராமணன் எடுத்துக் கொண்டு போயிவிடுவான். 

*உதாரணத்துக்கு...*

இந்து வீட்டில் யாராவது இறந்தால் , இறந்தவருக்கு 16- ஆவது நாள் காரியம் செய்வது வழக்கம். இதில் பச்சஅரிசி , தேங்காய் , வாழைபழம் , ஒன்பது வகையான காய்கறிகள் வைப்பது நடமுறை . இதில் பயன்படுத்தும் பொருட்களை அப்படியே ஆரிய பார்ப்பனீயன் கொண்டு சென்று விடுவார்கள்.

ஏன் பிராமணன் மாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்த்தான் ?

கிமு 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு வாக்கில் இந்தியாவில் *"புத்தம் மதம்"* வீரியமாக வளந்தது . புத்த மதம் வீரியமாக வளர்வதற்கு முக்கிய காரணம் புத்த மதம் கடவுளு என்கிற பெயரில் பலியிடுவதை எதிர்த்தது . இதன் காரணமாக மக்களுக்கு புத்த மதத்தின் மீது ஒருவகையான ஈர்ப்பு ஏற்பட்டு மக்கள் புத்த மதத்துக்கு மாறினார்கள் அல்லது அதனை ஏற்றுக் கொண்டார்கள். 

இதனை சகித்துக் கொள்ள முடியாத ஆரிய பார்ப்பனீய கூட்டம் புத்த மதத்தை அழிக்க முயற்சி எடுத்தது . இதன் நீட்சியாக ஆரிய பிராமணன் புத்த மதத்தை அழிக்க புத்திஸ்ட்கள் எடுக்கும் ஆயுதத்தையே கைலெடுத்தார்கள்

ஒருவனை அழிக்க அவனுடைய கோணத்திலே சென்று அவன் பயன்படுத்திய ஆயுதம் எடுத்து அழிப்பது ஒருவகையான ராஜதந்திரம்  

*"அதுதான் மாடு"*

ஆரிய பார்ப்பனீயன் புத்த மதத்தை அழிபதற்குகாக பசுமாட்டை கடவுளாக வழிபடவும் மாட்டுக்கறியை இனி திங்க மாட்டோம் என்கிற முடிவை எடுத்தார்கள். பார்ப்பனீயன் பசுமாட்டுமீதுள்ள அக்கரையால் பசுமாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்க்கவில்லை . மாறாக அவன், அவன் இறக்குமதி செய்த  கடவுளை காப்பாற்றிக் கொள்ளவும், தன் மதத்தை விரிப்படுத்துவும்தான் பசு மாட்டுக்கறியை திங்குவதை நிறுத்தினார்கள். இதற்கு ஆதாரம்தான் மேலே உள்ள ஆதாரங்கள்...

ஆரிய பிராமணன் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதனை விளக்க நாம ஒன்றும் *டாக்டர் அம்பேத்கர் நூலிருந்தோ..., அறிவுலக ஆசான்  தந்தை பெரியார் நூலிருந்தோ...,  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூலிருந்தோ ஆதாரத்தை மேற்கோள்களாக நாம் காட்டவில்லை.* 

மாறாக அவர்களுடைய புனித நூலான... (?) *மனு ஸ்மிருதி, மனுதரும சாஸ்திரம் மற்றும் விவேகானந்தர் நூலி* ருந்துதான் ஆதாரத்தை காட்டுகிறோம்.

கம்ப இராமாயணத்தில் கம்பன், ராமன் மற்றும் பிராமணன் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டார்கள் என்று சொல்லிருப்பது  பச்ச பித்தலாட்டமேயொழிய வேறொன்றுமில்லை.

வால்மீகி ராமயணத்தில் வால்மீகி ராமனையும் பார்ப்பனீயர்களை வெகுசாதாரணமான மனிதர்களாகவே காட்டியிருப்பார். ஆனா கம்ப ராமாயணத்தில் கம்பன் ராமனையும் பார்ப்பனீயர்களையும் கடவுளாக வெளிபடுத்திருப்பார்.

"இடைநிலை சூத்திர பாரப்பனர் அல்லாத சாதிகாரர்கள் ஏன் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்திக்  கொண்டார்கள்"...?

எப்போதும் மனித இனம் ஒருவன் செய்வதையே தானும் அப்படியே செய்ய வேண்டுமென நினைப்பான். பார்ப்பனீயனை போல இடைநிலை சூத்திர பிரமனர் அல்லாத சாதிகாரனும் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டுக்கறி திங்குவதை  நிறுத்திக் கொண்டார்கள். 

சில இடைநிலை சாதிகாரர்கள் பிராமணன் போல முதுகில் பூணூல் போடும் பழகத்தையும் கடைபிடித்தான். இன்றும் நம்முடைய சமகாலத்தில் சில இடைநிலை சாதிகாரன் பூணூல் அணிவதை காணமுடியும் . 

*பிராமணன் இரண்டு புரட்சிகளை செய்தார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொல்லுகிறார் கேளுங்கள்...*

1. பிராமணன் பசுமாட்டுக்கறியை தவிர்த்தது ஒரு புரட்சி"

2. காய்கறி உணவு உண்பவர்களாக மாறியது மற்றொரு புரட்சி" என்று *டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய "தீண்டப்பாடதவர்கள்"* நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திய சமூகத்தில் பட்டியலின மக்கள் மட்டுமே மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள் என்பது முழுமையான வடிகட்டிய பொய்.

மாட்டுக்கறியை பட்டியலின மக்களை விட ஆரிய பிராமணன் அதிகளவில் சாப்பிட்டான் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.

*- திராவிடக்குயில் -*

வியாழன், 8 ஆகஸ்ட், 2019

பார்ப்பனர்கள் மற்றும் ஏனைய இந்துக்களும் கட்டாயமாக மாட்டுக்கறி உண்ண வேண்டும்

இந்து மத வேத புத்தகத்தில், பார்ப்பணர்கள் மற்றும் ஏனைய இந்துக்களும் கட்டாயமாக மாட்டுக்கறி உண்ண வேண்டும் என்பதற்கான ஆதாரம்.

#வேள்விகளுக்காக_மாட்டை_அறுப்பார்கள்,

ஏற்றுமதிக்காக மாட்டை அறுப்பார்கள்,

யாகம் நடத்துவதற்கும் மாட்டை அறுப்பார்கள்.

இந்து மத வேதத்தில் மாட்டுக் கறி சாப்பிடுவதற்கான வசணங்களாவது.

யாதொரு மனிதன் கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது.
( மனு : 235 )

நான்கு கால் மிருகங்களில் பசுவும், ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
( மனு : 185 )

பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும்.
( மனு : 63 )

சாப்பிடுகிற மனிதன் சாப்பிடப்படுகிற விலங்குள் இவை இரண்டையும் பிரம்மனே படைத்துள்ளான். அதனால் இறைச்சி உண்பது ஒன்றும் பாவச் செயல் அல்ல.
( மனு: 5-30 )

மதச் சடங்குகளில் முறையாக ஈடுபட்டுள்ள ஒருவன் இறைச்சி உண்ணவில்லை எனில், அவன் இறைச்சி உண்ணாத பாவத்திற்காக அடுத்து வரும் 21 பிறப்புகளிலும் பலியிடப்படுகிற விலங்காகவே பிறப்பான். (மனு: 5-35)

நான் மாட்டிறைச்சி உண்பதற்குக் காரணம் அது மென்மையானதாகவும் சுவை மிக்கதாகவும் உள்ளது என்பதனால்தான். சத்பத பிராமணம் மகரிஷி யாக்யவல்கியின் வசணங்கள். (3: 1, 2, 21)

”திருமணத்தின் போதும், மூதாதையர்களுக்கு திவசம் கொடுக்கும் போதும் பசுவைக் கொன்று விருந்து படைக்க வேண்டும்”
அபஸ்தம்ப கிரிசூத்திரம். (1, 3, 10)

பெண்ணின் திருமணத்தின் போது பசுவையும், எருதையும் கொன்று விருந்து படைக்க வேண்டும்.
ரிக் வேதம் (10, 85, 13).

பசு, கன்று, குதிரை, எருமைக் கறியை இந்திரன் விரும்பி சாப்பிடுவான்.
ரிக் வேதம் (6, 17, 1).

வழிபாட்டின் போதோ, திவசத்தின் போதோ தனக்கு வழங்கப்படும் மாட்டிறைச்சியை மறுக்கும் பிராமணன் நரகத்திற்குச் செல்வான்.
வஷிஸ்த தர்ம சூத்திரம் (11, 34).

மாட்டிறைச்சியை சாப்பிடாத ஒரு மனிதன் நல்ல இந்து அல்ல.

விவேகானந்தர் தொகுப்பு : பகுதி:3, பக்கம்: 536.

இது மட்டுமல்ல, பசுவைக் கொன்று யாகம் நடத்த வேண்டும், அப்படி யாகம் நடத்துகையில் அதற்காக சில விஷேச மந்திரங்களும் ஓத வேண்டும்.

23 பசுக்கள் பலியிடப்படுவது வாஜ்பேய யாகம்,
99 பசுக்கள் பலியிடப்படுவது அசுவமேத யாகம் என்று வேத புத்தகங்களில் அழைக்கப்டுகிறது. இதற்கென்று தனி மந்திரங்களும் உண்டு.

இந்த யாகங்களில் ஓத வேண்டிய வேத சுலோகங்கள் யசூர் வேதத்தில் பின்வருமாரு கூறப்பட்டுள்ளது.

பசுவைக் கொல்லும் போது புரோகிதன் சொல்ல வேண்டிய மந்திரம்.

“அத்ரிகோ சமீத்வம் ஸூசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத் “

(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

இதன் பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்பதாகும்.

பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை குறித்தும் கூறும் மந்திரமாவது:-

“அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹூ சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.”

(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள் : மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்

“ஸர்வமாயுரேதிய ஏவம் வேத “

பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.

“வபாயாமா ஹூ`தாயாம் ஸ்வரக்கோ லொக: ப்ராக்யாயத.”

பொருள்: கொழுப்பை சேமித்தால் சுவர்க்க லோகம் கிடைக்கும்.

இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்றும் கீழ்குறித்த மந்திரம் சொல்லுகிறது.

தத் ஸ்வர்க்காஸ்ச லொகானாப்னு வந்தி ப்ராணேஷூ சைவதத் ஸ்வர்க்கேஷூ ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1).

_____________////___________///_________/////

மேலே நான் குறிப்பிட்டுள்ள இந்த வசணங்கள் அனைத்தும், இந்து மத வேத புத்தகங்களான ரிக் வேதம், மனு, போன்ற அடிப்படை நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட,

இந்து மத மக்கள் மாட்டுக் கறியை தாராளமாக உண்ணலாம் என்பதற்கான சான்றுகள்.

இதைப் பார்த்து விட்டு, இஸ்லாமியப் பெயரில் ஒளிந்துக் கொண்டிருக்கும் காவிப் பன்னி Liyakath Liyakathali,

பன்னி பக்தாள்ஸ் Ramesh Rajiah,

அண்டா பிரியாணியை வெங்காயப் பச்சடியோட ஆட்டைய போட்ட Nagarajan Dpe டவூசர் பாய்ஸ் தூக்கில் தொங்காமல் இருந்தால் சரி.

இப்படிக்கு Ayub Khan மற்றும்

Jafar Rabbi,     Marutha Muthu,   மாணிக்கம் ரஹ்மான்,      Sathish Kumar,     Poornima Mythreyan.

- பகிரி வழியாக

வெள்ளி, 26 ஜூலை, 2019

கடவுளுக்கு மேலே பார்ப்பனர்கள்!

காஞ்சியில் அத்திவரதர் பற்றி அள்ளி விடுகிறார்கள். அதே காஞ்சியிலே ஸ்தலப் புராண அடிப்படையில் இதோ:

காஞ்சியிலுள்ள பஞ்ச தீர்த்தம் என்னும் குளம்பற்றிய ஸ்தலப் புராணக் கதையில் உள்ளது.

பூர்வம் பிருகு மகரிஷி (பார்ப்பனர்) சத்வப் பிரதாபன் என்ற தேவன் சாபம் நீங்க ஓர் தீர்த்தத்தை அறிய வைகுண்டம் சென்றார்.

அப்போது விஷ்ணு, பாம்பின்மேல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

பிருகு வந்ததை அறியாது தூங்கினார். இதைக் கண்டு அந்தப் பிருகு தன்னை விஷ்ணு வரவேற்று மரியாதை செய்யாமல், அவமதித்து விட்டதாக ஆத்திரமடைந்தார். விஷ்ணுவின் வச்சஸ்தலத்தில் (மார்பில்) தன் காலால் உதைத்தார்.

(விஷ்ணுவின் மார்பில் லட்சுமி இருப்பதாக புராணக் கதை - எனவே, பார்ப்பனன் உதைத்த உதை லட்சுமிமேலும் பட்டு இருக்கும்).

இதைக் கண்டு கோபமடைந்த மகாவிஷ்ணுவின் மனைவி சிறீதேவி (லட்சுமி), அந்த பிருகுவைப் பார்த்து, நீர் பிரம்ம தேஜோ பலங்களை இழந்து விடுவீர்' என்று சபித்தார். (அதாவது பார்ப்பனத் தன்மையிழந்த சூத்திரனாக வேண்டும்)

பிருகு ரிஷி (பார்ப்பனர்) காலால் உதைத்ததால் தூக்கம் கலைந்து விஷ்ணு, கண் விழித்து எழுந்தார்.

பிருகுவின் பாதங் களைத் தன் கைகளால் பிடித்து, தண்ணீர் ஊற்றிக் கழுவி, அநேக உபசாரங்களைச் செய்தார்.''

உதைத்தவன் ஒரு பார்ப்பனன் என்ற ஒரே காரணத்தால், விஷ்ணு கடவுளே, உதைத்த காலுக்கு முத்தமிடுவதைக் கவனிக்கவேண்டும்.

9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சங்கராச்சாரியார் கடவுளுக்கு மேலே பிராமணன் என்று கூறினாரே (நக்கீரன், 15.11.2002) தெரிந்துகொள்வீர் பார்ப்பனர்களை!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 20.7.19