சனி, 27 ஜூலை, 2019

இந்து மதத்தில் திராவிடர் நிலை

05.04.1947 - குடிஅரசிலிருந்து...

இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.

இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு. இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப் படுகிறது.  ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.

1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)

2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)

3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)

இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இது மற்றொரு உரைப்பு

பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)

பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.

நீதி விசாரணை

பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டானமில்லாத பிரா மணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.

சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)

எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)

இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)

சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சியாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)

பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).

பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித்தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண்டியது. (அ.8. சு. 279)

கையினாலாவது, தடியினாலாவது அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும் (அ.8. சு. 280)

பிராமணனுடைய ஆசனத்தில் உட்கார்ந்த சூத்திரனை இடுப்பில் சூடு போட்டாவது, ஆசன பாகத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டு விரட்டி விட வேண்டும். (அ.8 சு. 281)

சூத்திரன் பிராமணன்மீது எச்சிச் துப்பினால் சூத்திரனின் உதட்டை அறுத்துவிட வேண்டும். (அ.8. சு. 282)

இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு பிறகு இன்னம் இரண்டு உரைப்பு உரைக்கலாம்.

- விடுதலை நாளேடு, 27.7.19

வெள்ளி, 26 ஜூலை, 2019

கடவுளுக்கு மேலே பார்ப்பனர்கள்!

காஞ்சியில் அத்திவரதர் பற்றி அள்ளி விடுகிறார்கள். அதே காஞ்சியிலே ஸ்தலப் புராண அடிப்படையில் இதோ:

காஞ்சியிலுள்ள பஞ்ச தீர்த்தம் என்னும் குளம்பற்றிய ஸ்தலப் புராணக் கதையில் உள்ளது.

பூர்வம் பிருகு மகரிஷி (பார்ப்பனர்) சத்வப் பிரதாபன் என்ற தேவன் சாபம் நீங்க ஓர் தீர்த்தத்தை அறிய வைகுண்டம் சென்றார்.

அப்போது விஷ்ணு, பாம்பின்மேல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

பிருகு வந்ததை அறியாது தூங்கினார். இதைக் கண்டு அந்தப் பிருகு தன்னை விஷ்ணு வரவேற்று மரியாதை செய்யாமல், அவமதித்து விட்டதாக ஆத்திரமடைந்தார். விஷ்ணுவின் வச்சஸ்தலத்தில் (மார்பில்) தன் காலால் உதைத்தார்.

(விஷ்ணுவின் மார்பில் லட்சுமி இருப்பதாக புராணக் கதை - எனவே, பார்ப்பனன் உதைத்த உதை லட்சுமிமேலும் பட்டு இருக்கும்).

இதைக் கண்டு கோபமடைந்த மகாவிஷ்ணுவின் மனைவி சிறீதேவி (லட்சுமி), அந்த பிருகுவைப் பார்த்து, நீர் பிரம்ம தேஜோ பலங்களை இழந்து விடுவீர்' என்று சபித்தார். (அதாவது பார்ப்பனத் தன்மையிழந்த சூத்திரனாக வேண்டும்)

பிருகு ரிஷி (பார்ப்பனர்) காலால் உதைத்ததால் தூக்கம் கலைந்து விஷ்ணு, கண் விழித்து எழுந்தார்.

பிருகுவின் பாதங் களைத் தன் கைகளால் பிடித்து, தண்ணீர் ஊற்றிக் கழுவி, அநேக உபசாரங்களைச் செய்தார்.''

உதைத்தவன் ஒரு பார்ப்பனன் என்ற ஒரே காரணத்தால், விஷ்ணு கடவுளே, உதைத்த காலுக்கு முத்தமிடுவதைக் கவனிக்கவேண்டும்.

9.10.2002 அன்று சென்னை நாரதகான சபாவில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சங்கராச்சாரியார் கடவுளுக்கு மேலே பிராமணன் என்று கூறினாரே (நக்கீரன், 15.11.2002) தெரிந்துகொள்வீர் பார்ப்பனர்களை!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 20.7.19

வியாழன், 25 ஜூலை, 2019

பைபிளைப் பற்றிய நீங்கள் அறியா உண்மைகள்.*

பைபிள் என்பது இரு பகுதிகளைக் கொண்டது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.

*பழைய ஏற்பாடு என்பது யூத மதத்தின் மதநூலான Torah ல்  இருந்து திருடப்பட்டது*.

புதிய ஏற்பாடு என்பது ஏசு என்ற கதாபாத்திரத்தின் காலத்தில் அவருக்கு இருந்ததாக கூறப்படும் சீடர்கள் கூறியதாக கூறப்பட்ட செய்திகளை, சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் காலத்தில் இருந்து சுமார் *300-400 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட தொகுப்பு*. அதாவது 42 ஆட்களின் பெயர்களினால் எழுதப்பட்ட 66 - 73 சிறு புத்தகங்களின் தொகுப்பு. பைபிள் 1400 வருடங்களாக தொடர்ந்து மாற்றப்பட்டு கொண்டே வந்திருக்கிறது.
  
      *உதாரணமாக 1642 ஜனவரி 8 தேதி அன்று வரை பூமியின் நான்கு மூலைகளிலும் நான்கு தூண்களை உருவாக்கி அதற்கு பாதுகாவலாக நான்கு தேவதைகளை நியமித்து  தட்டையான பூமியிலிருந்த கர்த்தர்*,  (இந்த நாளில் தான் பூமி உருண்டை வடிவமாக இருக்கிறது அதுதான் சூரியனை சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி  கலிலியோவை  'கர்த்தருக்கு எதிராக பேசுகிறார்'  என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிறிசவம் விஷம் கொடுத்து கொன்றது) தற்போது சுமார் 200 ஆண்டுகளாகத்தான் உருண்டை வடிவமான பூமிக்கு மாறி இருக்கிறார்.🧐

*பைபிளில் குறிப்பிடப்படும் இந்த 42  ஆட்களின் பெயர்களில் எழுதப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒருசில ஆட்களால் எழுதப்பட்டவைகள். மாறாக அந்தந்த நபர்கள் அல்ல.* உதாரணத்திற்கு மாற்கு சுவிசேஷம் என்பது மாற்கு என்பவரால் எழுதப்பட்டது அல்ல.. மாறாக அவருடைய பெயரில்  இன்னொருவர் எழுதியது. இவ்வாறு அனைத்து சுவிசேஷங்களும் இரண்டு அல்லது மூன்று ஆட்களினால் எழுதப்பட்டிருக்கிறது என்பது *வார்த்தை பிரவாகம், நடை, சம்பவங்களின் தொகுப்பு, சம்பவங்களின் முக்கியத்துவம்**  ஆகியவைகளின்  மூலம் மிகத் தெளிவாக அறியப்படுகிறது.

*ஜான் சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்*.👇

https://youtu.be/AJMd5UiTeys

*மார்க்கு சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்.👇*

https://youtu.be/kyfuv46z5pM

*லூக் சுவிசேஷம் போலி என்பதைக் காண்பிக்கும் ஆதாரம்.* 👇

https://youtu.be/X1Aj_KQliAc

    பைபிளில் காணப்படும்அனைத்து சம்பவங்களும் ஏற்கனவே *பாபிலோனிய பகுதிகளில் புழக்கத்தில்  இருந்திருக்கின்ற பல புத்தகங்களில் காணப்படும்  கதைகளும் ஒரு சில சம்பவங்களும் தான்.* அவைகள் தான் மீண்டும் பைபிளில் ஏசு என்ற கற்பனை கதாநாயகன் சொல்வதாக,  செய்ததாக திரிப்பு செய்யப்பட்டுள்ளது.👇

https://youtu.be/8b77JQ50ews

*அத்திமரம் கனி தராததால் ஏசு சாபமிட்டு அத்தி மரம் பட்டுப் போன சம்பவம்   Josephus என்ற மத குரு ஒருவர் செய்ததாக பைபிளுக்கு முந்தைய பாபிலோனிய கதைகளில் இருக்கிறது. ஆதாரம்*👇
https://youtu.be/VBcnRJ73E

ஏசு என்பது ஒரு கற்பனை. அதனால்தான் அவர் பிறந்த தேதியோ, மாதமோ, வருடமோ ஒன்றும் இல்லை என்பது மட்டும் இல்லாமல் அவர் இறந்த  தேதியும்  மாதமும் வருடமும் கூட கிடையாது. *ஏசு என்ற கற்பனை கடவுளை பற்றி உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவித  வரலாற்று குறிப்போ, அந்த காலத்தைய மற்றும் அதற்கு பின் உருவான உலக  வரலாற்றுப் புத்தகங்களிலோ, அந்த காலத்தைய  பாலஸ்தீன உள்ளூர்  அரசு ஆவணங்களிலோ ஒரு வரி குறிப்பு கூட இல்லை என்பதுதான் உண்மை.*👇

https://youtu.be/TPO3xxHo0ao

*ஏசு கதை என்பது ஒரு ஜோடிக்கப்பட்ட கதை.*👇

https://youtu.be/0Xj

*எகிப்து நாட்டில் சுமார் 4000 வருடங்களுக்கு முந்தைய Horus என்ற கடவுளின் கதையான கன்னிக்கு  பிறத்தல், அதிசயங்களை செய்தல், மலை பிரச்சாரங்கள் செய்தல் மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல், போன்ற கதைகளை அப்படியே ஏசுவும் தாங்கி கொண்டு நடக்கிறார் என்பது அதிகம் வெளி வராத கூடுதல் தகவல்.*

https://youtu.be/ocW8DRVfeMA     ( மலையாளம்)

சுருக்கமாக சொல்வதென்றால்,  கிறிசவம் என்பது நல்ல மனதை மழுங்கடிக்க செய்து மக்களை ஒருவிதமான மன நோயாளியாக மாற்றி சமுதாயத்தில் உலவ விடுவது தான். அதன்  முக்கிய நோக்கம்
மக்களை அதாவது  ஏசுவை நம்பாதவர்களை  நரகத்தில்  எண்ணெயில் வறுத்து எடுத்தல், தீர்ப்பு நாள், பரலோகம், பாவத்திற்காக மரித்தார், என்று  பயமுறுத்தி அதன் மூலம்தசமபாகம் வாங்குவதற்கும் நாடுகளையும், இடப் பகுதிகளையும்  கைப்பற்றுவதற்கும்   உண்மைபோல உருவகப்படுத்தப்படும் ஒரு கதை என்பதே நிதர்சனமான உண்மை.👇

*https://youtu.be/J4pFa6KIZ0E*

https://youtu.be/_PNxPgpz5QA

*பைபிளை  நம்புவதன் மூலம் அது மக்களை முட்டாளாக்குகிறது   என்பதை அமெரிக்க கிறிஸ்தவரே  தெளிவுபடுத்துவதை பாருங்கள்.*👇
https://youtu.be/URr0O9aHW38

     *மனித சமுதாயத்தை, பிற மத வெறுப்பை உருவாக்கி  மனநோயாளிகளாக மாற்றி வரும் கிறிசவத்தை பற்றி உண்மை நிலையை விளக்கிச் சொல்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த சமுதாய கடமையை உங்கள் நண்பருக்கு பகிர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தமிழர்களும் அறிய செய்யுமாறு மிகவும் தாழ்மையோடு வேண்டுகிறோம். உங்களின் மூலம் ஒருவர் தன் தவறை உணர்ந்து உண்மையை அறிந்து அதிலிருந்து மீண்டு வருவார் என்றால் நீங்கள் மனித குலத்திற்கு செய்த மிகப் பெரும் கடமை என்பதை நினைத்து பெருமிதம்  கொள்ளுங்கள்.*🙏🙏🙏

செவ்வாய், 23 ஜூலை, 2019

மாட்டிறைச்சி புனிதமானது!

"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!" - #விவேகானந்தர். (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536).  

"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" -#ரிக்வேதம் (10/85/13)  

"இந்திரனுக்குப் பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". - #ரிக்வேதம்  (6/17/1)    

"பரோபகரம் இடம் சரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில் இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான். - #மனுஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)  

#அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்குப் பலியிடும் விலங்காக உருவெடுப்பான். -#மனுஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)    

#ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார். #வசிஷ்டமுனிவர் (11/34)   

#விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - #அபஸ்டாம் #கிரிசூத்திரம்(1/3/10)   

#மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன். - இராமாயணத்தின் மகரிசி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) #சத்பத்பிராமணம்   -

அம்பேத்கார் எழுதிய "Did the Hindus never eat beef?’ நூலிலிருந்து சில பகுதிகள்.

வெள்ளி, 5 ஜூலை, 2019

சிரார்த்தப் பித்தலாட்டம் ஒரு பார்ப்பனர் கருத்துகாலஞ்சென்ற திரு. ஏ. ராமச்சந்திர அய்யர் என்பார் - கொச்சி சமஸ்தானத்தில் திவான் பேஷ்காராக இருந்து பென்ஷன் பெற்றும், கவர்மென்ட் வித்தியா இலாகா வில்  வேலை பார்த்தவர். சித்தூரில் கவர் மென்ட் ஸ்கூல் இருந்தபொழுது அவர் அதன் தலைமை உபாத்தியாயராகவும் இருந்தவர். அவர் காலமாவதற்கு முன்பு எழுதி வைத்த உயிலில் அபூர்வமான சில உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன! அவை வருமாறு:

சுயேட்சை பெரிதும் பாராட்டும் பிராம ணர்களின் விஷயமாய், சவுண்டி, ஒத்தன், கொத்தன், காவேரிஸ்நானம், தசதானம் முதலியவைகளுக்காக ஒரு தம்படி கூடச் செலவழிக்கக்கூடாதென்று என்னுடைய வாரிசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கி றேன். மேலே கண்ட சவுண்டி, ஒத்தன் முதலிய கர்மாக்கள் சம்பந்தமாய் செலவு செய்யப்படும் பணத்தினால் எள்ளளவும் பயனில்லையென்று நான் நிச்சயமாய் நம்புகிறேன். தங்களுடைய சுய நலத்தி னால், பிராமணர்கள் - இறந்து போனவர்கள் சந்ததியாரிடமிருந்து பணத்தை உறிஞ்சுவதற்காகவே அவைகளை ஏற்படுத்தி யிருக்கிறார்களே யொழிய - வேறில்லை. இட்டாருக்கு இட்டபலன் சித்திக் கு மென் னும் முதுமொழி உண்மையே.

ஒருவன் இறந்து போன பிறகு அவனுக் காக மகனொருவன் செய்யும் கிரியைகளால் இறந்து போனவனுக்கு நற்கதி கிடைக்கு மென்று நான் நம்பவே இல்லை. நம்முடைய முன்னோர்களைக் கவுரவப்படுத்தவே ண் டு ம் என்பதையும், அவர்களை மறந்துவிடக் கூடாதென்பதையும் நான் ஒப்புக் கொள்ளு கிறேன். இறந்துபோனவனைக் குறித்து வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடி அவனு டைய கண்ணியத்திற்குக் குறைவில்லாமல் அவனுடைய சந்ததியாரும் பந்து மித்திரர் களும் நன்னடத்தையுடன் நடந்து கொள் வது போதும். ஒரு பிறவியில் செய்த கன் மங்களுக்கு ஏற்றபடி அடுத்த பிறவி சந்திக் கும், ஆதலின் ஒருவன் சந்தோஷத்துடன் சுகித்திருப்பதற்குக் காரணம், அவனுடைய செய்கைகளேயாகும்.

சாம சுலோகங்களைப் பெரிதாகப் பாராட்டுவது பாவமாகாவிட்டாலும், அது கெட்ட சுபாவமென்றே நினைக்கிறேன். ஆகவே, இதைக் கண்ணுறும் நண்பர்கள் இனி மேலாவது சுயமரியாதை இயக்கத்தின் மீது சீறி விழாமல் அவர்கள் என்ன சொல்லு கிறார்களென்பதைக் கவனித்துப் பார்த்து குருட்டு எண்ணங்களையும், மூடப் பழக் கங்களையும் அடிமைப் புத்தியையும் அடி யோடு அகற்றி, சுயமரியாதை பெற்று மனி தத் தன்மையுடன் கூடிய சுகவாழ்வு வாழ் வாராக!

- குமரன்,

'குடிஅரசு, 19.10.1930

-  விடுதலை ஞாயிறு மலர், 29.1.19