வேதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஏப்ரல், 2025

வர்ணஜாதி முறையை வலியுறுத்தும் ஸ்மிருதிகளும், வேதங்களும், பகவத் கீதையும்- அண்ணல் அம்பேத்கர்

 


விடுதலை நாளேடு
மற்றவை

(இந்து மதத்திற்கு ஆதாரமான வேதங்கள் (ஸ்ருதிகள்), தர்ம சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), கீதை ஆகியன குறித்து அண்ணல் அம்பேத்கர் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே தந்துள்ளோம். மூலம் Dr. Babasaheb Ambedkar Writings and Speeches -Vol. 3 பக்கங்கள் 77-81)

இந்து மதத்தை மனித நேயம் கொண்டதெனக் கூறமுடியாது. அதன் காரணமாகவே, இந்து மதம் மக்களின் வாழ்வில் ஊடுருவிய போதும். மனிதத்தன்மை கொண்ட சாதாரண மக்களின் உள்ளுறை வாழ்வை ஒளிமயமானதாக அது ஆக்குவதில்லை. அது எதனையாவது செய்வதாக இருப்பின், மக்களின் வாழ்வை செயலற்றதாகவே ஆக்குகிறது எனக் கூறலாம். சாதாரண மக்களின் ஆன்மாக்களுக்கான உணவோ, துயரங்களுக்கான ஆறுதலோ, பொதுவான மனித பலவீனத்தைப் போக்க உதவியோ எதுவும் இந்து மதத்தில் இல்லை. பிறக்கவும், பயனற்ற ஒரு சில போராட்டத்துக்குப் பின் இறக்கவும், சிந்தனை அற்ற இயற்கை ஆற்றல்களை மனிதர்கள் நேருக்கு நேர் சந்திக்கும்படி இந்து மதம் மனிதர்களை இருளில் விட்டுவிடுகிறது. மிகக் கொடிய ஒரு மதத்தினை விடக் கொடுமை நிறைந்ததாக, இந்து மதம் மக்களை கடவுளுடன் தொடர்பற்றவர்களாகச் செய்து விடுகிறது. இதுவே இந்து மதத்தின் தத்துவமாகும். அது உயர்ஜாதி மனிதர்களின் சொர்க்கமாகவும், சாதாரண மக்களின் நரகமாகவும் இருப்பதாகும்.

தர்மசாஸ்திரத்தை முதலில் எழுதிய கவுதமர், பவுதாயனா போன்றோருக்கு ரிஷி என்ற அந்தஸ்து எப்போதும் அளிக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் மனுவும், யாக்ஞவல்கியரும் ரிஷிகள் எனவே கருதப் பட்டனர். ஸ்மிருதிகளின் அந்தஸ்து ஸ்ருதிகளின் அந்தஸ்துக்கு சமமானதாக ஆக்கப் பட்டதென்பதே இதன் பொருளாகும். இழந்துபோன ஸ்ருதியை நினைவிலிருந்து பெறப்பட்ட ஆவணமே ஸ்மிருதி என்று கருதப் பட்டது. ஸ்ருதியிலிருந்து மாறுபட்ட ஒன்று என்று ஸ்மிருதி கருதப்படுவதற்கு மாறாக, ஸ்ருதியும் ஸ்மிருதியும் ஒன்றே என்பது போலவும், ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுத்திக் காண இயலாதது என்றும் கருதப்பட்டது.

ஒருவர் ஸ்மிருதி, அல்லது வேதங்கள் அல்லது பகவத் கீதையை ஏற்றுக் கொள்கிறாரா என்பது ஒரு பெரிய விஷயமல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஸ்மிருதிகள் கூறுவதில் இருந்து அடிப்படை யாக மாறுபட்ட எதனையாவது வேதங்கள் தெரிவிக்கின்றனவா? ஸ்மிருதியின் கட்டளைகளி லிருந்து கீதை எந்த விதத்திலும் மாறுபட்டதைக் கூறுகிறதா? ஒரு சில எடுத்துக் காட்டுகள் இதனை தெளிவு படுத்தும்.

புருஷசூக்தா என்றறியப்படும் பகுதியில் சதுர்வர்ணக் கோட்பாட்டை வேதங்கள் கூறுகின்றன என்பது மறுக்க இயலாத ஒன்று. இந்த புருஷசூக்தா இரண்டு அடிப்படைக் கொள்கைகளை அங்கீகரித்துள்ளது. சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது சரியானது என அது அங்கீகரிக்கிறது. இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் இடையே உள்ள உறவு அவர்கள் சமமற்றவர்கள் என்பதையும் அது அங்கீகரிக்கிறது.

மனுஸ்மிருதியைச் சுருக்கமாகக் கூறுவதே கீதை. வேதங்களும், கீதையும் பொதுக் கோட்பாட்டைப் பற்றி விளக்கும்போது, மனுஸ்மிருதி அந்தக் கோட்பாட்டினைப் பற்றிய விவரங்களை விவரித்துக்கூறுகிறது
பகவத் கீதை கூறுவதும் கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டதே ஆகும். கிருஷ்ணர் கூறியதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளதை சுருக்கமாகக் கீழ்க்கண்ட நான்கு வகையாகப் பிரித்துக் கூறலாம்.

(1) நான்கு ஜாதிகளான பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சமூகத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கும் ஏற்பாட்டை நானே உருவாக்கினேன். அவர்களது குல ஆற்றல்களுக்கு ஏற்ப அவர்களுக்கான பல்வேறு தொழில்களை நானே நிர்ணயித்துள்ளேன் இந்த சதுர்வர்ணத்தை உருவாக்கியவனே நான்தான் – கீதை -IV-13

(2) மற்றொரு வர்ணத்தினரின் தொழிலைச் செய்வது ஒருவருக்கு எளிதாக இருப்பினும், அவரவர் வர்ணத்துக்கான தொழில்களை, அவற்றை அவரால் திறம்படச் செய்ய இயலாத போதும், செய்வதே மிகவும் சிறந்தது. தனது வர்ணத்துத் தொழிலைச் செய்வதனால் இறப்பு நேர்ந்தாலும் அதனைச் செய்வதிலேயே மகிழ்ச்சி உள்ளது; ஆனால் மற்றொரு வர்ணத்தின் தொழிலைச் செய்ய முற்படுவது ஆபத்து நிறைந்தது – கீதை IIIசெ 35

13) தங்களது தொழிலின் மேல் பெரு விருப்பம் கொண்ட கல்வியறிவற்றவர்களின் நம்பிக்கையை, கல்வி கற்றறிந்தவர்கள் கெடுக்கக் கூடாது. கல்வி கற்றவர் தனது வர்ணத் தொழிலையே செய்வதுடன். மற்றவர்களையும் அவ்வாறே செய்ய வைக்க வேண்டும் கல்வி கற்ற ஒரு மனிதன் தனது தொழிலுடன் ஓட்டுதல் கொண்டவனாக இருக்கக் கூடாது. ஆனால், தங்களது தொழிலுடன் ஒட்டுதல் கொண்ட கல்வி அறிவற்ற, மந்த புத்தியுள்ள மக்களை

அவர்களது தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில்களை மேற்கொள்ளும் தவறான பாதையைக் காட்டி கற்றறிந்தவர்கள் கெடுக்கக் கூடாது. கீதை II 1.26.29

(4) ஓ, அர்ஜூனா கடமைகள் தொழில்கள் என்னும் இம் மதம் (சதுர்வர்ண மதம்) எப்போ தெல்லாம் கீழ்நிலையை அடைகிறதோ, அப்போ தெல்லாம் நானே பிறந்து, அதன் அழிவுக்குக் காரணமானவர்களைத்  தண்டித்து, அதனை மீண்டும் நிலைநாட்டுவேன். – கீதை (V -7,8.

கீதையின் நிலைப்பாடு இதுதான் இதற்கும் மனுஸ்மிருதிக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது? மனுஸ்மிருதியைச் சுருக்கமாகக் கூறுவதே கீதை – மனுஸ்மிருதியை விட்டுவிட்டு ஓடி கீதையில் அடைக்கலம் தேட விரும்புபவர்கள் ஒன்று கீதையைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும். அல்லது மனுஸ்மிருதியைப் போலவே உள்ள கீதையின் மய்யக் கருத்தைக் கொள்ளாமல் புறந்தள்ளத் தயாராக இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

இந்து மதத் தத்துவத்தைப் பற்றி விளக்குவதற்கு நான் எடுத்துக் கொண்ட மனுஸ்மிருதியில் உள்ளவற்றை வேதங்களும், கீதையும் கூறுவன வற்றுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் அவற்றில் ஒருவர் என்ன வேறுபாட்டைக் காண முடியும்? வேதங்களும், கீதையும் பொதுக் கோட்பாட்டைப் பற்றி விளக்கும்போது. மனுஸ்மிருதி அந்தக் கோட்பாட்டினைப் பற்றிய விவரங்களை விவரித்துக் கூறுகிறது. ஆனால், ஸ்மிருதிகள். வேதங்கள் பசுவத் கீதை ஆகிய அனைத்தின் மய்யக் கருத்துமே. ஒரே நூலால் ஒரே மாதிரி நெய்யப்பட்ட ஒரே மாதிரியான துணியின் பகுதிகளாகவே உள்ளவையாகும்.

ஞாயிறு, 7 மே, 2023

வேதங்கள் - பேதங்கள்

 

 சு.அறிவுக்கரசு

s3
பாரதம் என்பதும் மகாபாரதம் என்பதும் இதிகாசம் எனப்படும் இரண்டில் ஒன்றுமற்றொன்று இராமாயணம்பாரதக்கதையை எழுதியது வியாசன் என்கிறார்கள்வேத வியாசன் என்றும் கூறுவார்கள்ஹிந்து மதத்தின் நான்கு வேதங்களைப் பிரித்த ஆள் என்பதால் இந்தப் பெயர்ஹிந்து மதத்தின்படி நான்கு யுகக்கணக்கு சொல்லப்படுகிறதுஅவை:

1) க்ருதயுகம் அல்லது சத்யயுகம், 17,28,000 ஆண்டுகள்

2) த்ரேதாயுகம், 12,96,000 ஆண்டுகள்

3) த்வாபரயுகம், 8,64,000 ஆண்டுகள்

4) கலியுகம், 4,32,000 ஆண்டுகள்

கலியுகம் பிறந்து 18,000 ஆண்டுகள் ஆகின்றனவாம்கலியுகப் பிறப்புக்கு முன்னால் த்வாபர யுகத்தின் இறுதியில் வியாசன் வேதங்களை நான்காகப் பிரித் தானாம்அவை ரிக்யஜூர்ஸாமஅதர்வண எனப்பெயர்வேதங்கள் எழுத்து வடிவில் இல்லாதவைகாதால் கேட்டுமனப்பாடம் (அத்யயனம்பண்ணிமற்றவர்க்குச் சொல்லிஅவர்கள் அத்யயனம் பண்ணி... இப்படிச் சங்கிலித் தொடர் போல காக்கப்பட்டு வருவது வேதங்கள்ஒருவனேநான்கையும் மனப்பாடம் செய்வது இயலாது எனக்கருதியோ என்னவோஅவை நான்கு ரிஷிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டதாம்ஸீமந்துபைலர்ஜைமினிவைசம்பாயனன் என்பவர்கள் அந்நான்கு ரிஷிகள்ஸீமந்துவிடம் ரிக்வைசம் பாயனனிடம் யஜூர்ஜைமினியிடம் சாமபைலரிடம் அதர்வன வேதமும் ஒப்படைக்கப்பட்டனவாம்அவர்களின் சிஷ்யப் பரம்பரையினர் அத்யயனம் செய்து காப்பாற்றி வருமாறு ஏற்பாடுஅதாவது பார்ப்பனர் மட்டுமே படித்துவருவதற்கான ஏற்பாடு.

பார்ப்பனர் தவிர மற்றையோர் படிப்பதற்காகச் செய்யப்பட்டதுதான் புராணங்கள்சூத்ரன் வேதம் படிக்கக்கூடாதுஎனினும் ஹிந்துமதத்தில் நீடிக்க வேண்டுமானால் அதன் தத்துவங்கள் தெரிந்து இருக்க வேண்டும் என்பதற்காகப் புராணங்கள் எழுதப்பட்டனமகாபாரதக் கதையும் அய்ந்தாம் வேதம் எனப்பட்டது. “பாரதம் பஞ்சமோ வேத” என்று எழுதிக் கொண்டனர்ஸீத வம்சத்தில் பிறந்த ஸீத புராணிகர் என்பவருக்கு உபதேசம் செய்தார் வியாசர்பிறகு பிரம்ம சூத்திரம் நூலை வியாசன் எழுதியதால் பாதராயணர் எனவும் பெயர் பெற்றார்இதற்கு பிக்ஷீஸூத்ரம் என்றும் வியாச சூத்ரம் என்றும் பெயர்கள்வேதங்கள் எல்லாம் ஒரே பொருளைத்தான் பேசுகின்றனவாம். “பரே பும்ஸி” என்று உபநிஷத்கள் கூறுகின்றன.

வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே வேதப்ராசேதஸாஸீத் ஸாஷோத் ராமாயணாத்மநா” இதன் பொருள் இதுதான்வேதத்தினால் அறியப்பட வேண்டியவன் - பரேபும்ஸி - நாராயணனேஅவன் தான் இராமனாக அவதாரம் செய்தான்தசரதனின் புத்ரன்வால்மீகியின் (புத்ரன்படைப்பாகிய இராமாயண மாக வேதம் பிறந்ததுகோபுரம் கட்டுவதுகுளம் வெட்டுவது போன்றவை சித்தத்தைச் சுத்தம் செய்துபரமாத்மாவை அடைவதற்குத் துணை புரிவதுதானாம்வேதத்தின் பொருள் இராகவனேஅவனை அடையத் தான் சாஸ்திரங்கள்யக்ஞங்கள்தபஸ்தியானம் எல்லாம்வேதங்கள் வால்மீகியின் குழந்தையாகசாட்சாத் இராமாயணமாக அவதாரம் செய்துவிட்டதாம்அப்படி என்றால் வேதம் தான் இராமாயணம்இராமா யணம் படித்தால் வேதம் படித்ததாக ஆகிவிடும்எனவே சூத்ரர்கள்  இராமாயணம் படித்தால் போதும்வேதம் படிக்க நினைக்கக் கூடாதுமீறிப்படித்தால் நாக்கை அறுமீறிப்படிப்பதைக் கேட்டால் காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றுபடிப்பவன் பக்கத்தில் உட்கார்ந்தால்பிருஷ் டத்தை அறுஎனத்தண்டனைகளை மனுசாஸ்திரம் கூறும்ஆகவே சூத்ரன் வேதம் படிப்பதைத் தடுப்ப தற்கான பார்ப்பனச் சூழ்ச்சி.

ஆனால் காலக்கொடுமைவேதத்தை சூத்ர பாஷையில் மொழி பெயர்த்து அச்சுப் போட்டுக் கூவிக்கூவி விற்கிறர்கள்.

இந்த வேதம் மனிதனால் உருவாக்கப்படவில்லையாம்அபவுரு ஷேயம் என்கிறார்கள்ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் அடுத்த யுகம் தொடங்கும் போதும் ஏற்கெனவே படைக்கப்பட்ட வேதங்கள் காற்று வெளியில் இருப்பவற்றை ரேடியோவின் ஒலி வாங்கியைப் போலரிஷிகள் கிரஹித்துசுவடிகளில் பதிவு செய்து வைத்ததை வியாசன் நான்காகப் பிரித்தாராம்.

வேதகாலம் என்பதுபார்ப்பனர்க்குப் பிரியமான ஜெர்மானிய மாக்ஸ்முல்லர் கணக்குப்படிகிறித்து பிறப்புக்கு 1200 ஆண்டுகளுக்கு முன் எனப்படுகிறதுமராத்திப் பார்ப்பனர் பால் கங்காதர் திலக்கின் கூற்றுப்படி எட்டாயிரம் ஆண்டுகள் என்கிறார்ஆதாரம் எதுவும் இல்லாமல் அவனவன் கற்பனைக்கு ஏற்ப காலத்தைக் கணக்கீடு செய்கிறார்கள்.

தொடக்கத்தில்மூன்று வேதங்கள் மட்டுமாம்பகவானிடமிருந்து கேட்கப்பட்டதால்ஸ்ருதியாம்கேட்டதை மனப்பாடம் அடிக்கடி செய்ததால் ஸ்மிருதி யாம் எழுத்தில்நூலாக இல்லாமல் வழிவழியாக வருவ தால் ஆம்னாயம் என்பதாம்வேதங்களில் மந்த்ரங்கள் சம்ஹிதைகள்பிராம்மணங்கள் என மூன்று பகுதிகள்வேதங்களைச் சரியான ஸ்வரத்தில் சொல்லவும் எழுத்துகளை கால அளவுப்படி (மாத்திரைஉச்சரிக்கவும் விளக்கங்கள் தருவதற்கும்சடங்கு களுக்குப் பொருத்த மான பகுதியைத் தேர்ந்தெடுக்கவும் வழிகாட்டிட வேதாந்தங்கள் தோன்றினவாம்இது தவிரவேதாங்கம் என மூன்று உண்டாம்.

ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியான உபநிஷத்கள் உண்டாம்நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்கள் உள்ளன. 1400 ஆண்டுகட்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட அரபுச் சொல் அல்லா என்பதுமுகலாயர் ஆட்சியில் வந்த சொல்.

அதன் பெயரிலேயே உபநிஷத் என்றால் எத்தகைய பித்தலாட்டம்இந்தக் கேள்வி கேட்டால் பதில் கூறச் சங்கடப்பட வேண்டியதைத் தவிர்க்கும் வகையில் முக்கியமான உபநிஷத்கள் பத்து என்று நிறுத்திக் கொள்கிறார்கள்.

1) பிரச்னோப நிஷத் 2) .சோப நிஷத் 3) தேனோப நிஷத் 4) கடோப நிஷத் 5) அய்தரேய நிஷத் 6) தைத்ரிய நிஷத் 7) முண்டக நிஷத் 8) மாண்டூக்ய நிஷத் 9) பிருஹதாரண்ய நிஷத் 10) சாந்தோக்ய நிஷத்

என்பவையே எல்லோரும் ஏற்கும் உபநிஷத்களாம்.

இவை தவிர வேதங்களுக்குக் கிளைகள் உண்டாம்அவை சாகைகள் எனப்படுகின்றனரிக் வேதத்திற்கு 21 சாகைகள் இருந்தனவாம்இறந்தவை போக இருப்பவை ஆறு மட்டுமாம்.

1) சாகலம் 2) பாஷ்கலம் 3) ஆசுவலாயனம் 4) சாங்காயனம் 5) அய்தரேயம் 6) மாண்டூகாயனம் இவற்றுள் அதிகம் பின்பற்றப்படுவது ஆசுவலாயன சாகை மட்டுமே.                                                               (தொடரும்)