வியாழன், 28 டிசம்பர், 2017

சிரார்த்த மந்திரம்

நீங்கள் இறந்து போன உங்களின் தாய்க்கு பார்பனனை வைத்து காரியம் செய்தது உண்டா ?

காரியம் செய்யும் பொது அந்த  புரோஹிதன் சொல்லும் மந்திரத்தின் பொருள் உங்களுக்கு தெரியுமா ?

"என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம..."
------------------------------------------------------------

"எங்க அம்மா ராத்திரி வேலைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னை பெற்றாலோ தெரியாது.ஆனால் ...நான் ஒரு உத்தேச நம்பிக்கையில் தான் அவளை என் அப்பாவின் மனைவியாக கருதுகிறேன் .அவளுக்கு என் சிரார்த்ததை செய்கிறேன் ..."

என்பது தான் அந்த மந்திரத்தின் அர்த்தம் .உன் தாயை நடத்தை கெட்டவள் என சொல்வது தான் ..அதையும் உன்னை வைத்தே மறுபடி உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்திரத்தின் நோக்கம்.இப்படிப்பட்டதுதான் இறுதி சடங்கு.

இதை அவன் தமிழில் சொன்னால் அவனை விட்டு வைப்பீர்களா ?

-அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் - பார்ப்பனர்."சடங்குகளின் கதை"

திங்கள், 25 டிசம்பர், 2017

எட்டு வயதுக்குள் திருமணம்

எட்டு வயதுக்குள் மகளை திருமணம் செய்து கொடுக்காத தந்தைக்கு மனுஸ்மிருதி கூறும் தண்டனை -  இந்து மத வக்கிரத்தின் கொடூரம்...

இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்..

அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

ஸ்சுலோகம்:

“மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...”

இந்த ஸ்மிருதி விதியை விளக்கி பதிவிட எனக்கே கூசுகிறது, தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என பயப்படுகிறேன்.

விளக்கம் :

உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும்.

தவறிவிட்டாய். அவள் இப்போது (கன்னி) ருதுவாகிவிட்டாள்.
ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்,  அவள் பிருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு (மாதவிடாய்) அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமா..?  மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா?

அடப்பாவிகளா?... வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ.. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.

அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மனு தண்டனை எத்தனை கொடுமை..?

இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க அதற்க்கான பரிகாரத்தையும் மனு ஸ்மிருதி கூறுகிறது..

பரிகாரம்:

நீ இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின் (மாதவிடாய்)  போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.

அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ, அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா...எங்கு போய் எங்கு வருகிறார் மனு என்று ?

(அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?)

கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டதென்றால் அடுத்த ஒருவருஷம் வரை அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும்.

ஒளபாசனம் என்றால் "அக்னி காரியம்" தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் அந்த ஒரு வருடம் வரை அவள் கணவன் வீட்டில் இருந்தாலும், கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும், ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது .

ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.

இதற்கிடையில்... ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன்.

அவன்... இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.

இப்பழக்கம் ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை..

அந்த ஒரு வருஷம் 6 மாசங்களானது. அப்போதும் கஷ்டம். என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று. கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது.
அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள் 15 நாள்கள் ஆக்கினார்கள்.
அதுவும் தேய்ந்து 7 நாள்களானது.
பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து.. இப்போது காலையில் கல்யாணம் ராத்திரி சாந்தி முகுர்த்தம்.
பார்ப்பனர்கள் சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் செய்து தொடர்கின்றனர்..

-தாதாசாரியார்

- முகமது நசீம்,(பகுத்தறிவாளர்கள் vs மதவாதிகள் குழு) முகநூல் பதிவு, 26.12.17

செவ்வாய், 5 டிசம்பர், 2017

ஆபாச திருமண மந்திரங்கள்


#திருமணம்

'சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா மருந்ததீம் / யத் த்ருவதாகும் ஹ நிந்யுஷ் ஷட்க்ருத்திகா முக்ய யோகம் வஹந்தீய மஸ்மாக மேத த்வஷ்டமீ //

“ஸப்தரிஷிகள், கிருத்திகை எனப் பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலான வளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ, அப்படி மற்ற ஆறு கிருத்திகைகள் அருந்ததியின் முக்கியமான சேர்க்கையைச் செய்கின்றனர். இந்த அருந்ததியைத் தரிசனம் செய்ததால் என்னுடைய இந்த மனைவி எட்டாமவளாக வளர்ச்சி பெறட்டும்.”

“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்/
மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி/
விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே/
பஷேபம்….”

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார் (புரோகிதர்). இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும்பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்…. என் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

உதீர்ஷ்வாதோ விஸ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா / அந்யா மிச்ச ப்ரபர்வயகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்ருஜ//

விசுவாசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.”

“உதிர்ஷ்வாத: பதிவதீ ஹ்யேஷா விஸ்வாஸுந் நமஸா கீர்ப்பிரீட்டே / அந்யாமிச்ச பித்ருபதம் வ்யக்தாகும் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி //

“இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறானல்லவா? விசுவாசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும் இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டதென்பதை நீ அறிவாயாக.”

குறிப்பு : திருமணத்துக்கு மட்டுமல்ல, “முதல் இரவுக்கும்” மந்திரங்கள் இருக்கின்றன. முதலிரவில் படுக்கையில் தம்பதிகளுக்கு இடையே படுத்திருக்கும் கந்தர்வனை எழுப்பிப் போகச் சொல்லி தம்பதிகள் உறவு கொள்ள அனுமதி கோருகிறது, மேற் குறிப்பிட்ட மந்திரம். திருமணத்துக்கு பார்ப்பனர் களை வைத்து ‘மந்திரம்’ ஓத விரும்புவோர்கூட முதலிரவுக்கு சாஸ்திரப்படி மந்திரங்கள் ஓதுவதை கைவிட்டு விட்டார்கள். அத்தகைய சடங்குகள் விபரீதமாகிவிடும் என்பதை பகுத்தறிவோடு புரிந்து கொள்ளும் பழமைவாதிகள், திருமணங்களில் புரோகித மந்திரங்களை ஏன் கைவிடக் கூடாது?

காசு கொடுத்து ஐயரை வரவழைத்து இந்த சமஸ்கிருத மந்திரங்கள் ஓதுவதால் என்ன மாறுதல் நடந்துவிடப்போகிறது?

-நன்றி ராமானுஜ_தாத்தாச்சாரியார்.

தாம்பரம் மாவட்டக் குழு, கட்செவி பதிவு
( சீனிவாசன்)

வியாழன், 23 நவம்பர், 2017

பசுவைக் கொன்று யாகம்!

மாட்டை புனிதம் என கருதி மாட்டுகறி  உண்டதற்காக அப்பாவி முஸ்லீம்கள் மற்றும் தலித் மக்களை இன்றுவரை படுகொலை செய்துவரும் RSS/BJP இந்து மத வெறியர்களின் பசு புனிதத்தை நீங்களே பாருங்கள்.

யஜுர் வேதத்தில் பசுவைக் கொன்று
யாகம்!

1. கோஸவம் - பசுமாடு காளைமாடு இவைகளைக் கொல்லும் யாகம்.

2. வாயவீய ஸ்வேதபக - வாயு வேதனைக்காக வெள்ளைப் பசு யாகம்.

3. லத்ஸோப கரணம்- கன்றுக்குட்டியை கொலை செய்து நடத்தும் யாகம்.

4. அஷ்டதச பசு விதானம் - பதினெட்டு பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.

5. ஏகாதசீன பசுவிதானம்-
பதினொன்று பசுக்களை கொல்லும் யாகம்.

6. க்ராமாரண்ய பசு ப்ரசம்ஸா-
நாட்டிலும் காட்டிலும் உள்ள பசுவைக்கொன்று யாகம் செய்தல்.

7. உபாகரண மந்த்ரம் - யாகத்தில் கொல்லப்படும் பசுவைச் சுத்தி
செய்யும் மந்திரம்.

8. கவ்ய பசுவிதானம்- பசு மாட்டைக்கொன்று நடத்தும் யாகம்.

9. ஆதித்ய தேவ தாகபசு - சூரிய தேவதைக்கு பசு யாகம்.

இது இன்றும் இந்து மதத்தில் பார்ப்பனர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

மத விசாரணை நூல். பக்கம் 79,80 -சிவானந்த சரஸ்வதி

இந்த மத வெறியர்கள்தான் பசு காவலர்களாம். மோடி முதல் பார்ப்பான பத்திரிக்கை வரை இவ்வாறே அழைக்கின்றனர்..

-டக்ளசு முத்துகுமார் முகநூல் பதிவு,23.11.17

புதன், 15 நவம்பர், 2017

Full text of "Four Vedas English Translation"

https://archive.org/stream/FourVedasEnglishTranslation/Four-Vedas-English-Translation_djvu.txt

பெரியாரின் கோபமும், நான் கண்ட வேதமும்

பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது"-எழுத்தாளர் சாரு நிவேதிதா..

பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும் இதிகாசங்களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம். இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது. முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான். வேதத்தில் இல்லாததே இல்லையென்று இன்றளவும் கருதப்படுகிறது. நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலை கீழாகவும் ஓதத்தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது... தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன.

இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுபவர்கள் புரோகிதர்கள். `வாத்தியார்’ என்று பார்ப்பனர்களின் பேச்சு மொழியால் அழைக்கப் படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின்போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள். அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்!

ஒரு சுப தினத்தின்போது `என்னை எதிர்ப்பவர்கள் நாசமாகப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள்வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக்கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அரு வருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித் துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக: `நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு’ `எனது சலனம் தேன் மயம். என் கமனம் தேன்மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்’ (அதர்வண வேதம்; காண்டம் : 1,34 தேன் மயம்)

ஆனால் இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம், எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக்கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள். `இந்திரன் தனது வச்சிராயுதத்தால் அவர்களது சிரங்களைத் துண்டித்திடுக’ `எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல்வோம்’ (அத்தியாயம்:சம்ஹாரம்).
`எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’
`சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’
`தனது மகனையும் சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக’
`அக்னியே! எங்களைத் துவேஷிப்பவனை உனது சுடரால் எரித்து விடு’
`இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்;
உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’
`இந்திரா’ சத்துரு சேனையை மயக்கம் செய்க. அதன் கண்களைப் பிடுங்கு’`அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக’`இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனதுவயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள்.எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு’

இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சா°திரங்களுக்கு விரோதமானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செடீநுவது? 3000 ஆண்டு-களுக்கு முன்பு இப்போது இருப்பதுபோல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன. எதிரிகளும் தங்களுக்கு அடிமை-யாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற `அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு `உன்னத’ குணாம்சம்; சுய நலம். நானும் என் இனத் தைச் சார்ந்தவர்களும் மட்டு-மே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்-திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேத மந்திரங்கள் முழக்கவும் இத்த-கைய சுய நலத்தையும் துவேஷத்தை யும்தான் முழங்குகின்றன. இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரி களைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது. `ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ருதம் நம்முடையது. தேஜ° நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது’ அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம். `நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி’

அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம். `அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற `உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதிக காமம் பற்றியசில கவித்துவமான பகுதிகள் உள்ளன. ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப்பாடல்கள் `இந்திரனே இங்கு வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும் எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய கால கட்டத்தில் இத்தகைய வெற்றுச்சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது. நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருந்த ஓர் இனம் (clan) எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகஇயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது. ஆனால், தமிடிநப் பாரம்பரியமோ `இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக் கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை. எனவே `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ்மரபுக்கு `இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய `ஜீபூம்பா’ கருத்துகள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.

----------- நன்றி--"ராஜமுத்திரை" - 22-3-2006

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிராமணத் துவேஷமா?



மின்சாரம்



நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த டி.கே.மாடசாமி என்னும் தோழர் ‘தின மலரில்’ வெளி வந்த ஒரு கத்தரிப்பை நமக்கு அனுப்பி வைத்தார். அது பெட்டிச் செய்தியாக தனியே இதே பக்கத்தில் வெளி யிடப்பட்டுள்ளது.

* பார்ப்பனத் துவேஷம்

* ஹிந்தி எதிர்ப்பு

* சமஸ்கிருத எதிர்ப்பு

இந்த மூன்றையும் வைத்து தி.க.வும், தி.மு.க.வும் சுயநல வியாபாரத்தை செய் கின்றனவாம்.

லாலா லஜபதி ஒருமுறை சொன்னது தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைகிறது.

“தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங் களே துவேஷ வாதியாக இருந்து, மற்றவர் களைப் பார்த்து ‘பிராமண துவேஷி, பிரா மண துவேஷி’ என்று சொல்லுவார்கள்” என்று சொன்னதுதான் அது.

பார்ப்பனர்களும், இந்துத்துவாவாதி களும் தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டு இருக்கிறார்களே, அந்த விவே கானந்தர்தான் என்ன சொல்லுகிறார்?

“ஓ, பிராமணர்களே! சமுதாயத்தில் நீங்கள் கக்கிய விஷத்தை  நீங்கள் தான் உறிஞ்சி எடுக்க வேண்டும்” என்று சொன்னாரே எந்த அர்த்தத்தில்?

நான்கு வருணத்தையும் நானே படைத் தேன். படைத்தவனாகிய நானே நினைத் தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது.

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவயோனியில் பிறந்தவர்கள் (அத்தியாயம் 9, சுலோகம் 32)

இவற்றை எல்லாம் சொன்னவர் பகவான் கிருஷ்ணன் என்று சொல்லுவது யார்? இந்த கீதையை தேசிய நூலாக அறிவிக்கப் போகிறோம் என்கிற சுஷ்மா ஸ்வராஜ் யார்?

சூத்திரர்களையும், பெண்களையும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லுவது துவேஷம் இல்லையாம்!

எங்களை சூத்திரர்கள், வேசி புத்திரர்கள் என்று சொல்லலாமாம் -  அது துவேஷம் இல்லையாம். அதே நேரத்தில் சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று தன்மானக் குரல் கொடுத்தால், அதற்குப் பெயர் பிராமண துவேஷமாம்.

அந்தப் பிரம்மானானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங் களைத் தனித் தனியாகப் பகுத்தார்.

(அத்தியாயம் 1 சுலோகம் 100)

சூத்திரன் என்றால் யார்?

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்.

2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்.

3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன்.

4. விபசாரி மகன்

5. விலைக்கு வாங்கப்பட்டவன்.

6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.

7. தலைமுறை தலைமுறையாக ஊழி யம் செய்கிறவன்.

(அத்தியாயம் 8, சுலோகம் 415)

இவ்வளவையும் சொல்லுகிற மனுதர்ம சாத்திரத்தை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் அலங்கரித்து எடுத்துச் செல்லுகிறார்களே, இவர்கள் துவேஷவாதிகள் இல்லையா?

பிராமணனுக்கு மிஞ்சிப் புல்லினாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணை ஒத்த முறுவற் புல்லினாலும், வைசியனுக்கு க்ஷணப்ப நாரினாலும் மேடு பள்ளமில்லா மல் மெல்லியதாகப் பின்னி மூன்று வட மேலறை ஞாண் கட்ட வேண்டியது

(மனுதர்மம் அத்தியாயம் 2,

சுலோகம் 42)

இதில் சூத்திரர்களுக்கு  பஞ்சமர்களுக்கு இடமில்லை என்பதைக் கவனிக்க வேண் டும். இதன் பொருள் என்ன? ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பனர்கள் ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப் பதன் தாத்பரீயம் என்ன?

நாங்கள் பிராமணர் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், நீங்களோ சூத்திரர்கள் - வேசி மக்கள் என்பதை அடையாளப்படுத்தத்தானே இந்தப் பூணூல் அடையாளம்.

இந்த இழிவை எதிர்த்து குரல் கொடுத் தால் துவேஷமா? இந்த இழிவுக்குக் காரண மானவர்கள் துவேஷமே அறியாத பரிசுத்த ஆவியில் பொரித்து எடுக்கப்பட்டவர் களாம்.

மனுவாதி ஒரு குலத்துகொரு நீதி என்று மனோன்மணியம் சுந்தரனார் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதானே!
எந்தக் காலத்திலோ நடந்தவையை யெல்லாம் எடுத்துக்காட்டி பேசலாமா என்று சில அதிமேதாவிகள் துள்ளி குதிக்கக் கூடும்!

இன்றைக்கும் பூணூல் அணியவில் லையா? இப்பொழுதும் ஒவ்வொரு வருட மும் பூணூலைப் புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண்டாட வில்லையா பார்ப்பனர்கள்?

பூணூல் அணிவதே துவிஜாதி (இரு பிறவியாளன்) பார்ப்பான் என்ற உயர்ஜாதி தத்துவத்தின் ஏற்பாடுதானே.

இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் - அதற்குரிய பயிற்சியைப் பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் பெரியார் திட்டத்தை செயல் வடிவமாக்க அரசு சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் பார்ப் பனர்கள் செல்லுவது ஏன்?

சூத்திரன் சாமி சிலையைத் தொட்டால் அந்த சாமி தீட்டுப்பட்டு விடும், சாமி செத்து விடும் என்று உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்பவர்கள் துவேஷம் சிறிதும் அற்ற தூய மாமணிகளா?

பார்ப்பான் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் வரை அதன் அடையாளமாக பூணூலைத் தரித்துக் கொண்டிருக்கும் வரை, ஜாதியின் கடைசிச் செதில் இருக்கும் வரை - சங்கரமடத்தில் பார்ப்பனர் தவிர மற்றவரும் அமரும் நிலை ஏற்படும் வரை - அனைத்து ஜாதியினருக் கும் அர்ச்சகர் உரிமை என்ற நிலைப்பாடு நிலை நிறுத்தப்படும் வரை, நீங்கள் சொல் லும் ‘அந்தப் “பிராமண துவேஷம்”, ஓங்கி ஒலிக்கவே செய்யும். ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி’ என்பது இடி முழக்க மாகவே ஒலிக்கும்!  ஒலிக்கும்!!

-விடுதலை ஞா.ம.2.9.17

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

அவாள் ‘தர்மம்’ இதுதான்!


அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.
“ஸ்தா தமஸ்வம், கஜமத்தம்
ரிஷபம் காம மோஹிதம்
சூத்தரமக்ஷர சம்யுக்தம் தூரதப்
பரிவர்ஜ்ஜையேல்"
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும்-மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும், எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.
"ஜப, ஸ்தப, தீர்த்த யாத்திர,
பிரவர்ஜ்ஜய, மந்தர சாதனம்,
தேவதாராதனம் சசய்வஸ்தீரி
சூத்திர பதிதானிஷன்”
அதாவது ஜபம், தபசு, தீர்த்த யாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்தக் காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக்கூடாது என்பது கருத்தாகும்.
“நபடேல் சமஸ்கிருதம்
வாணீம்”
(சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்,
“நைவ சாஸ்திரம் படேநைவ
சுருனுபாத் வைதிகா கஷரம்
நஸ்நாயாது தயால் பூர்வம்
தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்"
(சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ வேதத்தைக் கேட்கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூர்ய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.
"இதிஹாச புராணானி
நபடேச்ரோது மர்ஹசி”
இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.
“சாதுர் வர்ணியம்
மயா சிருஷ்டம்
பரிசரியாத்மகன்
கர்மம் சூத்ரஸ்ஸியாபி பாவனாம்"  (கீதா ஸ்லோகம்)
நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்கு பிராம்மண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.

-விடுதலை,ஞாயிறு மலர்,1.7.17