கைவல்யம் - வேதாந்தம்

வேதம் குறித்த உண்மை விளக்கம்

குருமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குருமூர்த்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மார்ச், 2023

கோயபல்சு குருமூர்த்தியே, பதில் சொல்! ( கந்தன் பிறப்பு)

 

      September 27, 2022 • Viduthalai
மின்சாரம்


புராணம் என்றாலே புளுகு மூட்டைதான். புராணங்களுக்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்திகள் அதைவிடப் புளுகுணியாகத்தானே இருப்பார்கள்!

பார்வதி தேவியின் அழுக்கில் பிறந்தவன் தான் விநாயகன் என்று அவர்கள் எழுதிய புராணத்தை ஆதாரம் காட்டியே எழுதுகிறோம்.

அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை - அல்லது உண்மையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் இல்லை என்கிறபோது, இவர்களாகவே இன்னொரு பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவார்கள்.

இதோ ஒரு புளுகுணித்தனம்:

"மனு நீதியில் (சனா தனத்தில்) பல ஆபாசங்களும் பார்வதி தன் அழுக்கைத் திரட்டியதே விநாயகர் என்றும் - கம்யூனிஸ்டுகளும் ஹிந்து எதிர்ப்பாளர்களும் கூறுவதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. நீங்கள் உதவ முடியுமா?" என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வாசகர் ஈ. இளங்கோவன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  சனாதனம் என்பது (சோ எழுதியது போல) ஒரு மஹா சமுத்திரம். அதில் சிறு துளிகளே இந்த நூல்கள், கதைகள். ஹிந்து மதம் பற்றிய கேவலமான ஏச்சுக்கு எப்படிப் பதிலளிப்பது என்று பார்ப்போம்.

"ஹிந்து மதத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்று துவேஷ பாவத்தில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது சுலபம்." 

"பார்வதி தன்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்பது நம் அய்தீகம் - இதற்குப் பதில் நாம் எல்லோருமே கேவலமான அழுக்கில் பிறந்தவர்கள்தான், விநாயகர் அந்தக் கேவலமான அழுக்கில் பிறக்கவில்லை என்பதே, அவதாரங்கள் எல்லாம் மனிதர்களாக, நம்மை போலப் பிறந்தவர்கள் தான்! ஆனால், விநாயகர் அப்படிப் பிறக்கவில்லை என்று திருவாளர் கோணிப் புளுகர் குருமூர்த்தி எழுதித் தள்ளியுள்ளார் ('துக்ளக்' 28.9.2022 பக்கம் 8).

இது உண்மையா? விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று  Motilal Banarsidass Publishers, Delhi  வெளியிட்டுள்ள The Skanda Purana எனும் நூலின் பக்கம் 277 என்ன கூறுகிறது?

"In the meantime, the goddess cleansed her person and applied perfumes and unguents over her body. With the dirt of the cleansing therefrom she created a human body with the elephantine face"

இந்த நிலையில் , பார்வதி வாசனைத் திரவியங்களை பூசிக்கொண்டு இருந்தார். பின்னர்  குளிக்கச்செல்லும் போது தன் மேல் இருந்த அழுக்குகளைத் திரட்டி மனித உடலை உருவாக்கினார்.

இவ்வளவு வெளிப்படையாக பார்வதி தேவி தன் உடல் அழுக்கிலிருந்து (ஞிவீக்ஷீt) விநாயகனை உருவாக்கினாள் என்று இருக்கும் பொழுது - அதை மாற்றி தன் உடல்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்று எழுதுகிறார் - ஆடிட்டராக இருந்து எடிட்டரான குருமூர்த்தி என்றால், இவர்களின் மூளையில் படிந்த அழுக்கை என்னவென்று சொல்லுவது!

இன்னொரு கேள்வியும் உண்டு - அழுக்காகட்டும், மஞ்சளாகவே இருக்கட்டும் - இவற்றிலிருந்து பிள்ளை பிறக்குமா? 'கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப் பிளான் ஓட்டும்' என்பான்.

விநாயகர் அழுக்கில் பிறந்தார் என்பது கேள்வி கேட்டவருக்கே தெரிந்து இருக்கிறது. பதில் சொல்லும் குருமூர்த்தியோ - கேவலமான அழுக்கில் பிறந்தவர் அல்ல விநாயகர் என்று எழுதுகிறார்.

விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று அவர்களின் ஸ்கந்தபுராணத்திலிருந்தே நாம் எடுத்துக்காட்டிய நிலையில், விநாயகன் பிறப்பு கேவலமானது என்று அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்களே!

இதைப் போன்ற புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் போது கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா?

'என்பது அய்தீகம்' என்றுதான் முடிப்பார்கள்.

அய்தீகத்தின் யோக்கியதையும் இதன் மூலம் அம்பலமாகவில்லையா?

குருமூர்த்திகளே, குருமூர்த்திகளே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 3:24 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கந்தன், குருமூர்த்தி, மின்சாரம்

வியாழன், 22 செப்டம்பர், 2022

குருமூர்த்தியே, ஓடாதே நில்! மனுதர்மம் சொல்வது என்ன?


குருமூர்த்தியே, ஓடாதே நில்!
  September 21, 2022 • Viduthalai

மின்சாரம்

இந்த வார 'துக்ளக்' இதழில் (28.9.2022 பக்கம் 7) இவ்வாறு எழுதியுள்ளார்.

"சூத்திரனை வேசி மகன் என்று மனுஸ்மிருதி கூறுவதான வாதம் தவறு. அப்படி எங்கும் கூறப்படவில்லை. மனுதர்மம் அத்தியாயம் 8 - ஸ்லோகம் - 415, ஏவலர்களாக பணிபுரியத்தக்கவர்கள் எழு வகையினர் யாவர் என்றே விளக்குகிறது.

போர்க் கைதிகள், பக்தித் தொண்டு செய்ய வந்தவர்கள், வைப்பாட்டியின் மகன், விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகள், பிறரிடமிருந்து பெறப்பட்ட அடிமைகள், பரம்பரையாகப் பணி செய்பவர்கள், அபராதத் தொகையை வேலை செய்து தீர்ப்பவர்கள் என்பது அந்த ஏழு வகை. இந்தப் பட்டியலில் வைப்பாட்டியின் மகன் என்று இருப்பதை 'வேசியின் மகன்' என்று கருதிக் கொண்டும் ஏவலர்கள் என்பதை சூத்திரர்கள் என்று நினைத்துக் கொண்டும் ராசா பிதற்றியிருக்கலாம். பஞ்சமன், தீண்டத்தகாதவன் என்பதெல்லாம் அவரின் கற்பனை."

- என்று தன் மனம் போன போக்கில் கிறுக்குகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்.

நாம் எதைச் சொன்னாலும் ஆதாரத்தை எடுத்துக்காட்டும் அறிவு நாணயம் உள்ளவர்கள்.

உண்மையிலேயே மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடி யாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.

(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).

'பார்த்தீர்களா? மனுதர்மத்தில் தொழிலாளர்களைப் பற்றி தானே சொல்லியிருக்கிறது. இவர்கள் சூத்திரர்கள் என்று கூறுவது எப்படி' என்று அவசரப்பட வேண்டாம் முந்திரிக்கொட்டையாக! 

அதே எட்டாம் அத்தியாயம் 417ஆம் சுலோகம் அந்தத் தொழிலாளர்கள் யார் என்பதை மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்தும் சொல்லி விட்டது. அது இதோ:

பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.

ஆதாரம்: திருவைந்திரபுரம் கோமாண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியரை புதுவை நா. முத்துரங்க செட்டியார் கேட்டுக் கொண்டபடி, அவர் தமிழில் மொழி பெயர்த்து வசன ரூபமாகச் செய்த தருமநூலை செட்டியார் சகோதரராகிய முத்துகோவிந்த செட்டியார்.

பு.க. சுப்பராய முதலியாரால் பிழைத்திருத்துவித்த சுத்த பிரதிக்கிணங்க, சென்னை ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. (1919) இதன் விலை ரூ.2லு.

உண்மை இவ்வாறு இருக்க மனுதர்மம் எட்டாம் அத்தியாயம் 415ஆம் சுலோகத்தில் கூறப்பட்டுள்ள வாசகங்களைத் தங்களுக்கே உரித்தான திரிபுதனத்தின் அடிப்படையில் பொருள் மாறும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி இருப்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

தன்னுடைய தேவடியாள் மகன் என்று இருப்பதை வைப்பாட்டி மகன் என்று திருத்துவது ஏன்?

இதைவிட பித்தலாட்டம் என்ன தெரியுமா?

இங்கே தெரிந்து  கொள்ள வேண்டியது சூத்திரர் களை வைப்பாட்டி மக்கள் அல்லது தேவடியாள் மக்கள் என்று சொல்வது மனுதர்மமே தவிர, ஆ. இராசா அல்ல - என்பதை திருவாளர் குருமூர்த்தி அய்யர் ஒப்புக் கொண்டு விட்டாரே!

உண்மை இவ்வாறு இருக்கும்போது மானமிகு ஆ. இராசாமீது அவதூறு பரப்புவது கடைந்தெடுத்த பித்தலாட்டமா இல்லையா? அப்பட்டமான பொய்யா இல்லையா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம் என்பது. 

குருமூர்த்திகள் எழுதியுள்ளபடியே பார்த்தாலும் மனி தர்களை இப்படி இழிவுபடுத்துவதை ஏற்க முடியுமா?

நான்கு வர்ணங்களும் வாழ்வு முறைக்கு ஏற்ப வரையறுக்கப்பட்டவையாம்.

மேலே  கூறப்பட்ட ஏழு வகைத் தன்மை கொண்ட சூத்திரனுக்குத்தான் இவ்வளவு கேவலமான வரையறைகளா?

அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக் கும் உபயோகமான தருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (மனு - அத்தியாயம் ஒன்று, சுலோகம் 87)

பிர்மா படைக்கும் போதே பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று படைத்துவிட்ட பிறகு, வாழ்வு முறைக்கு ஏற்பவும், குண நலன்களுக்கு ஏற்பவும் அமைந்திருப்பதுதான் வர்ண தர்மம் என்று சாதிக்க முயலுவது பார்ப்பனப் புத்தி தானே! இம்மைக்கு மட்டுமல்லவாம். மறுமைக்கும் இதே நிலைதானாம் - எவ்வளவு ஜாதி ஆணவத் திமிரின் உச்சம்!

"நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப் பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது"

-இவ்வாறு கூறுவது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் (கீதை அத்தியாயம் 4 - சுலோகம் 13).

அவசரப்படாதீர்கள். அவாளின் முகத்திரையை பகவான் கிருஷ்ணனின் ஆயுதத்தைக் கொண்டே கிழிப்போம்!

"பெண்களும் வைஸ்யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாயம் 16 - சுலோகம் 44)

ஒரு கடவுளின் வாயிலிருந்து எவ்வளவு சாக்கடைத் தனமான சொற்கள்.

ஆகப் படைக்கும் போதே இந்த வருணங்களை ஏற்படுத்தி விட்ட பிறகு - வருணம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணம் கர்மங்களில் அடிப் படையில் என்பதே என்று புளுகுவது எவ்வளவு அயோக்கியத்தனம் - போக்கிரித்தனம்! 

பிர்மாதான் படைத்தான் நான்கு வருணங்களை என்று மனு கூறுகிறது. கிருஷ்ணன்தான் படைத்தான் என்று கீதை கூறுகிறது. ஏனிந்த முரண்பாடு? 

வேறு ஒன்றும் இல்லை. தந்தை பெரியார் என்ற சகாப்தத் தலைவர் தோன்றி ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளையும், தில்லுமுல்லுகளையும், ஜாதி ஆணவத் திமிரையும் தோலுரித்துத் தொங்க விட்ட நிலையில், அவர்களின் சாஸ்திரத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லும் திராணி இல்லை.

திரிபு வேலை செய்து, உள் குத்து செய்து எதையாவது உளறித் தப்பிக்கும் தந்திரம் என்பதல்லாமல் வேறு என்ன?

குருமூர்த்தி கூட்டமே சரக்கு இருந்தால் மிளகு முனை அளவுக்கு அறிவு நாணயமிருந்தால் ஆதாரத் தோடு மறுப்பு சொல்லுங்கள் பார்க்கலாம்!

எதிர் பார்க்கலாமா?

சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு! இல்லையேல் சலாம் போட்டு ஓடி விடு!


இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:39 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: குருமூர்த்தி, துக்ளக், பதிலடி, மனுதர்மம்

சனி, 9 பிப்ரவரி, 2019

குருமூர்த்தியாரே ஓடாதே நில்! ஒழுக்கமுள்ள ஒரே ஒரு கடவுள் உண்டா உங்களிடத்தில்?

மின்சாரம்

"இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவேகானந்தர்) மகா பண்டிதர் மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் முல்லர் 'இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையிரல் எரிந்து விடும்' என்றார்" என்று கைவல்யம் அவர்கள் குறிப்பிடுகின்றார் (கைவல்ய சாமியார் கட்டுரைத் தொகுதி எண் 2 - பக்கம் 21).

இது ஏதோ மேம்போக்காகச் சொன்னதல்ல. இந்துக் களின் கடவுள்கள் எந்தத் தரத்தில், காட்டுமிராண்டித்தனத்தில், ஆபாசத்தில், ஒழுக்கக் கேட்டில் உழன்று, திரண்டு உருக்குலைந்து கிடக்கின்றன என்பதற்கு இதோ ஒரு பட்டியல்.

(1). சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இருகால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து இவன் பிறந்தவன். இவன் இந்திர சபை வினோதங் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந் நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்துவர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரவேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான். இதனால் சுக்ரீவன் பிறந்தான்.

(2). நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தன.

(3). தவ வலிமை மிக்க பஸ்மாசுரன் சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது, மகாவிஷ்ணு மோகினி வேடம் பூண்டு பஸ்மாசூரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்த விஷ்ணுவை, உயிருக்குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண் புணரும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?

(4). பரமசிவன் பார்வதியுடன் வனத்தில் உலாவச் சென்றிருந்தபோது, அங்கிருந்த சித்திரகூடத்தில் ஆண்-பெண் யானைகள் கலவி செய்வதைப் போன்ற ஓவி யத்தைப் பார்த்துக் காமவெறி கொண்டு, பக்கத்தில் இருந்த பார்வதியைப் பெண் யானையாக்கிப் புணர்ந்து, கணபதியைப் பெற்றான்.

(5) சூரியன் பெட்டைக் குதிரையாயிருந்த சஞ்சிகையைக் கூடியதன் பயனாக, அஸ்வினி தேவர்கள் பிறந்தனர்.

(6) பிரமன் திலோத்தமையைப் படைத்து, அவளழகைக் கண்டு மோகிக்க, அவள் பிரமன் செயல் கண்டு பயந்து பெண் மானுருக் கொண்டு ஓட, பிரமன் அவளைத் துரத்திக்கொண்டு போய்ப் புணர்ந்தான்,

(7) பிரமன், ஒரு நாள் காமவெறி உச்சமடைந்தவனாய் வனத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது, ஒரு புதரில் பெண் கரடி ஒன்றிருக்கக் கண்டு அதனுடன் புணர, அதன் பலனாக ஜாம்பவந்தன் பிறந்தான்,
(8) பாரிஷதன் என்பவனின் மனைவி வபுஷ்டமை என்பவள் மீது இந்திரன் காமங்கொள்ள, அவள் அவனுக்கு இணங்காமற் போக, இந்திரன் எப்படியாவது அவளைச் சேர்ந்தேயாகவேண்டும் என்று எண்ணிச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அச்சமயம் பாரிஷதன் அஸ்வமேதம் நடத்தினான். யாக குதிரையுடன் யாக கர்த்தாவின் மனைவியைப் புணரவைப்பது அஸ்வமேதத்தின் முக்கியச் சடங்கு ஆகையால், தான் யாக குதிரையாக இருந்தால் பாரிஷதன் மனைவியாகிய வபுஷ்டமையிடத்து யாகப் புரோகிதர்களே சேர்த்து வைப்பார்கள். ஆகையால் தான் யாக குதிரையாக வேண்டுமென்று இந்திரன் உறுதி செய்து கொண்டான். அதன்படி அஸ்வமேதம் நடந்தபோது, இந்திரன் யாகக் குதிரையைக் கொன்று அதனுடலில் தான் புகுந்துகொண்டான். யாக முறைப்படி யாககர்த்தாவாகிய பாரிஷதனின் மனைவியாகிய வபுஷ்டமையின் பெண் குறியில் யாக ஆண் குதிரையின் குறியை யாகப் புரோகிதர்கள் சேர்த்து வைத்த சமயத்தில் இந்திரன் தம் காம எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

9). அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாக கர்த்தாவின் பத்தினியை, யாக மிருகத்துடன் புணர வைக்கும்  வேலையை பாக்கர்த்தாவும், யாகப் புரோகி தர்களும் சேர்ந்து செய்வர்.

10). பூமியைப் பாய் போலச் சுருட்டிக் கொண்டு கடலில் போய் ஒளித்த இரண்யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக் கண்டு பூதேவி மோகித் துக் கலவிசெய்ய, இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்.

இவை மிருகப் புணர்ச்சி செய்யும் வழக்கத்தைக் காட்டுபவை அல்லவா?

(11). பிரமன் சரஸ்வதியைப் படைத்தான். அவளழகைக் கண்டு மோகித்து, அவள் பயந்தோடியும் விடாமல் அவளைப் புணர்ந்து தம் மனைவியாக்கிக் கொண்டான். தாம் படைத்த மகளையே இவ்வாறு மனைவியாக்கிக் கொண்டதைப் பரிகசித்த முனிவர்களாகிய மரீச புத்திரர் 6 பேர்களையும் சினந்து அசுரர்கள் ஆகுமாறு சபித்தான். இதேபோன்று இந்திரன் வேண்டுகோளின் மீது திலோத் தமையைப் படைத்து அவளையும் மோகித்துக் கூடினான்.

(12). பிரமன் இதே போன்று தாமரை மலரிலிருந்து பத்மை என்ற பெண்ணைப் படைத்து அவளைப் புணர முயல, அவள் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவளைப் பலவந்தமாகக் கற்பழிக்க, அவள் அதனால் கருக்கொள்ள, தேவர்கள் இதையறிந்து நையாண்டி செய்ய, இதைச் சகிக்காத பிரமன் மீண்டும் அவளைப் புணர்ந்து அவள் கருவிலிருந்த தன் விந்துவைத் தன் ஆண் குறி மூலம் உறிஞ்சி இழுத்து விட்டான்.

இவை மகளைத் தகப்பனே புணரும் வழக்கத்தைக் காட்டுவதல்லவா?

(13). பெற்ற தாய் மீது மோகங்கொண்டு, அதற்குப் பாதகமாயிருக்கும் தந்தையைக் கொன்று, தாயுடன் கலவி செய்து இன்ப வாழ்வு நடத்திய ஒரு பார்ப்பனப் பைய னுக்குப் பரமசிவன் முக்தியளித்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

இது தாயை புணர்ந்தாலும் முக்தி நிச்சயமென்பதன் மூலம் தாயைப் புணரும் வழக்கத்தைக் காட்டவில்லையா?

(14). தாருகாவனத்து ரிஷிபத்தினிகள் அழகிகள் என்ப தற்காகப் பரமசிவன் அவர்களை மயக்கிப் புணர்ந்து அவர்கள் கற்பை அழித்தான்.

(15). பிரமனோ தன் பேர்த்தியாகிய தாக்ஷாயணியின் அழகைக் கண்டு மோகித்து வீர்யத்தை விட்டான். பரமசிவன் மனைவியாகிய பார்வதி தேவி மீது பிரமன் காமமுற்றுப் பரமசிவனைப் போல் 5 தலைகளுடன் சென்று அவளை அணைத்தான்; கவுரி கல்யாணத்தில் அவள் தொடையழகைக் கண்டு காமுற்று விந்தை விட்டான். அசுவமேத யாகம் செய்யத் தொடங்கி அதற்கு வந்திருந்த தேவபத்தினிகளைக் கண்டு காமமுற்று வீரியம் விட்டான்.

(16). இந்திர சபையில் ஊர்வசி நடனமாட பிரமன் அவளைப் பார்த்து மோகித்து வீரியத்தை வெளியே விட்டான்.

(17). துரோணரின் மனைவி கிருபியின் அழகினை அறிந்த பரமசிவன் அவள் மீது காமவெறி கொண்டு, அவளை நிர்வாணமாக்கி நிற்க வைத்துப் பார்த்து வீரியத்தைவிட, அதன் பலனாக அஸ்வத்தாமன் பிறந்தான்.

(18). கவுதம முனிவர் மனைவி அகலிகை அழகி எனக் கேள்விப்பட்ட இந்திரன், இரவு நடுச்சாமத்தில் முனிவரை ஏய்த்து வெளியேறச் செய்து, அம் முனிவர்போல இந்திரன் வேடம் பூண்டு, அகலிகையைப் புணர்ந்தான். இதே போன்று அவரவரின் கணவர்களைப் போன்று நடித்து, இந்திரத் துய்மன் மனைவியையும், தேவசன்மன் மனைவி யையும், கவி முனிவர் மனைவியையும், பாரிஷதன் மனைவியையும் கற்பழித்தான்.

(19). அக்னி பகவானின் மருமகளை எமதரும பகவான் கண்டு மோகித்து, அவள் கணவன் இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்தான்.

20). அக்னி பகவான் சப்தரிஷிகளின் யாகத்திற்குச் சென்று அந்த ரிஷிகளின் மனைவிகள் மீது மையல் கொண்டான். சுதரிசனை என்பவளைப் பலாத்காரத்தினால் மணந்தான்.

(21). சலந்திரன் மனைவி விருந்தை மீது மகாவிஷ்ணு மோகங்கொண்டு, சலந்திரனைச் சூதால் கொன்று, அவனைப் போன்று வேடம் பூண்டு, விருந்தையைக் கற்பழித்தான்.

(22). அனசூயை அழகி என்று கேள்விப்பட்டு அவளைக் கற்பழிக்கவென்று - பிர்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும் மூர்த்திகளும் புறப்பட்டுச் சென்று அவளை நிர்வாண மாக்கினர்.

இவை பிறர் மனைவிகளைக் கண்டு காமுறுதலும் கற்பழித்தலுமான செயலைக் காட்டவில்லையா?

(23). திரவுபதி மகா பதிவிரதைகளுள் ஒருத்தி, இவளுக்கு 5 கணவர்கள். இவர்கள் போதாதென்று 6ஆவதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.

(24), மகா பதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை. இவள் தேவகுரு  பிரகஸ்பதியின் மனைவி. இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில், தன் கணவரி.டம் படிக்க வந்திருந்த சந்திரன் என்னும் மாணவனை மோகித்து, அவனுடன் கலவி செய்து, நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியாய் இருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவி யானாள்.

(25). கவி முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது. அவனோ இவளைச் சேர மறுத்து விட்டான். அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மய்யல் ஏற்பட்டு அதே விகாரத்திலிருக்கையில், இதையறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான்.
இவை பிற புருஷரை இச்சிக்கும் குணத்தைக் காட்டவில்லையா?

(26). ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷ்ணுவின் அவதாரங் களில் ஒருவர். இவர் சிறு பிள்ளையிலேயே வெண்ணெய் திருடி மத்தால் அடி பட்டவர். வளர்ந்து பருவ வயதைய டைந்தவுடன் பெண் சாயல் எந்த வீட்டில் காணப்பட்டாலும் சரி, உடனே திருட்டுத்தனமாக - அப்பெண்ணைக் கூடியவர். இவ்வாறாகச் சுமார் 60,000 பெண்களைத் திருட்டுத்தனமாக அவர்களுடைய கணவர்கள் அறியாமல் - கலவி செய்தவர். 
இவை திருட்டுச் செயலைக் கற்பிப்பவையாக இல்லையா?

(27). தேவர்கள் சுராபானம்-சோமபானம் செய்தனர் என்பதாக இதிகாச - புராணங்கள் கூறுகின்றன.
இது மது அருந்துதலைக் காட்டுவதாக இல்லையா?

(28). கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு பெற்றவர்களும், இந்திராதி தேவர்களின் புதல்வர்களுமான தர்மர் ஆகியோர் தங்களின் மனைவி உள்பட எல்லாவற்றையும் சூதாட்டத்தில் வைத்துத் தோற்று, அதன் பலனாகச், சூதாட்டத்தில் தோற்கப்பட்ட பொருளாகிய திரவுபதையை, இராஜசபையில் வைத்துச் சேலையை அவிழ்த்து, மானபங்கம் செய்தனர்-சூதாட்டத்தில் வென்றவர்கள்.
இது சூதாடுவதைக் கற்பிக்கவில்லையா?

(29), கொலையைக் கற்பிக்கும் சம்பவங்கள் பல: 
காம வெறியால் விருந்தையின் கணவனை விஷ்ணு கொன்றான்.

(30). தக்க பருவமடையாத-ருதுவாகாத மச்சகந்தி என்னும் பெண்ணைப் பட்டப்பகலில் நடு ஆற்றில் படகில் பராசரமுனி காமமுற்றுக் கற்பழித்து விட்டான்.

(31). இதே போன்று குந்தி பருவமடையாத சிறுமியா யிருக்கையில் சூரியன் காமுற்றுக் கற்பழித்து விட்டான்.
இவை சின்னஞ்சிறுமிகளையும் விடாமல் புணரும் புத்தியைக் காட்டவில்லையா?

(32). வால்மீகி பாம்புப் புற்றில் பிறந்தார். அஸ்வத்தாமன் குதிரை வயிற்றில் பிறந்தார். மாண்டவ்யர் தவளையிடம் பிறந்தார். சவ்னகன் நாயிடம் பிறந்தார். கவுதமர் பசுவினிடம் பிறந்தார். அகஸ்தியர் பானையில் பிறந்தார். காங்கேயன் கழுதையிடம் பிறந்தார். பிரமன் தாமரையில் பிறந்தார். இலஷ்மி கடலில் பிறந்தாள். பார்வதி மலைக்குப் பிறந்தாள். மச்சகந்தி மீனிடம் பிறந்தாள். கணபதி யானைக்குப் பிறந்தார். விரலில் கங்கை பிறந்தாள். கொட்டாவியில் சிந்தூரன் பிறந்தான். தும்மலில் குபன் பிறந்தான். கண்ணீரில் வாநரன் பிறந்தான். உரோமத்தில் உரோமாஞ்சன் பிறந்தான்.
இவை அறிவுக்குப் பொருந்தாத பிறப்புகளாக இல்லையா?

இவ்வாறாக ஆணை ஆண் புணர்வதும், மிருகப் புணர்ச்சி செய்வதும், மகளைத் தந்தை புணர்வதும், பெற்ற தாயைத் தனயன் புணர்வதும், பிறர் மனைவிகள் மீது மோகங்கொண்டு கற்பழிப்பதும், பிற புருஷர் மீது காமுற்றுக் கூடுவதும், திருட்டு, மது அருந்துதல், சூதாடுதல், கொலை செய்தல், பருவமெய்தாக் கன்னிப் பெண்களைக் கற் பழித்தல், அறிவுக்குப் பொருந்தாத விபரீதங்களைக் கூறுதல் ஆகிய திருவிளையாடல்கள் இன்றும் ஆரியர் களுடைய புராண - இதிகாச - சாஸ்திரங்களில் மலிந்து கிடப்பதைக் காணலாம்.

என்ன குருமூர்த்தி மீtநீ களே! இவை போதுமா, இன்னும் வேண்டுமா?

இவைதான் உங்கள் தெய்வங்களா? தெய்வ நூல்களா? இவற்றை இன்று வரை இம்மியளவும் பிசகாமல் தூக்கிச் சுமக்கின்றீர்களே - தெய்வாம்சம் என்று கண்ணில் ஒத்திக் கொள்கிறீர்களே - இதன் மூலம் உங்கள் தகுதி, தரம், ஒழுக்கம், பண்பாடு எந்தத் தரத்திலிருக்கிறது என்பது விளங்கவில்லையா?

இவற்றை நம்பும், மதிக்கும், தொழும், கடைபிடிக்கும் உங்களிடம் நல்லொழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

தனி மனிதனைத் தொடர்ந்து சமூகத்தில் நல்லொழுக் கத்தை, கலாச்சாரத்தை சீரழிப்பது, வாழையடி வாழையாக வந்த குருதியில் குமிழுகின்ற மரபணுக்களில் கலந்த இந்தக் கேடு கெட்ட இந்துத்துவக் குணாம்சங்கள் தானே காரணம்? உங்களின் ஜெகத் குருக்களே மடத்துக்கு வந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்கவில்லையா?

இந்த இலட்சணத்தில் இந்த ஆபாசங்களை, அரு வருப்பை, ஒழுக்க மீறல்களை, மனிதத் தன்மைக்கு எதிரான வைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து மனமாற்றம் செய்து வருகின்ற, பகுத்தறிவுச் சிந்தனையை ஊட்டுகின்ற ஓர் இயக்கத்தை - அதன் தோற்றுநரைத் தூற்றுவது சரியானதுதானா? அந்தத் தூற்றல்காரர்களைத் தோலுரிப்பது நல்லோரின் கடமையல்லவா?

எதையும் தலை கீழாகப் புரட்டிப் பேசுவதுதான் குரு மூர்த்திகளே உங்கள் புத்தியா? ஓடாதே நில்லும் - நாளையும் சாட்டை சுழலுகிறது.

- விடுதலை நாளேடு, 27.4.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:42 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆபாசம், கடவுள், குருமூர்த்தி

சனி, 19 ஜனவரி, 2019

குருமூர்த்திகள் எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும்...



இந்தக் கார்ட்டூன் மூலம் துக்ளக் வழியாக திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் என்ன சொல்ல வருகிறார்?

கோயில் ஒன்றுக்குச் சென்ற ராகுல்காந்தி அர்ச்சகர் பார்ப்பனர் கேட்ட கோத்திரம் உள்ளிட்டவைகளுக்கு, நான் காஷ்மீர் கவுல் பிராமணர், தாத்தாத்ரேய கோத்ரம் என்று சொல்லிவிட்டாராம்.

அப்படிப்பட்ட ஒருவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், திமுக தலை வர் மு.க.ஸ்டாலினும் ஆதரிக்கிறார்களாம்.

இதற்காகத் திருவாளர் குருமூர்த்தி அய் யர் கேலி சித்திரம் வரைந்து தள்ளியுள்ளார்.

இவர்கள் விரும்பும் ஹிந்து ராஷ்டிரம் என்பது கூடக் கடவுள் நம்பிக்கையற்றவரான சாவர்க்கர் கண்டு பிடித்ததுதான். அதை வைத்து நாம் கூட கேலிச்சித்திரம் வரைய முடியுமே!

அதுசரி, திருவாளர் கு.அய்யர் என்ன ஜாதி ஒழிப்பு வீரரா? தன் முதுகுப் பூணூலை அறுத்து எறிந்தவரா?

இன்னும் தங்களுடைய பிராமணத் திமிரை கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்க முன்வராத மூர்க்கத்தனம் பிடித்தவர்களுக்கு ஜாதி குறித்துப் பேசத் தகுதி உண்டா?

சென்னை நாரத கான சபையில் தாம் ப்ராஸ் எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங் கத்தின் ஏற்பாட்டில் அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் எனும் நூலை வெளியிட்ட இவாளின் ஜெகத்குரு - கொலை வழக்கில் ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந் தவரான திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறினார்?

எந்த ஆட்சியாக இருந்தாலும்; அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த தீக்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவர். ஆண்டவன் கூட அப்புறம்தான் - அந்தணன் தான் முதலில் (நக்கீரன் 15.11.2002)

இந்த ஜாதி - வருணத்திமிர் பிடித்த கூட்டம்தான் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல சலங்கை கட்டி ஆடுகிறது.

காங்கிரசை ஆதரிப்பது, ராகுலை ஆதரிப்பது எல்லாம், இந்தப் பார்ப்பன ஆதிக்க - மனுதர்மக் கொடியினை கையில் ஏந்தி புறப்படுகின்ற ஹிந்து வெறி பிடித்த பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்து வதற்குத்தான் - சங்பரிவார் வட்டாரத்தின் வாலை ஒட்ட நறுக்கத்தான் என்பதைக் குருமூர்த்திகள் நெஞ்சில் குறித்து வைத்துக் கொள்ளட்டும்!

- - -


2.1.2019 நாளிட்ட துக்ளக் இதழில் கீழ்க் கண்ட கேள்வி பதில் இடம் பெற்றிருக்கிறது.

கே: ஹிந்து மதத்தில் வர்ணம்தான் உண்டு, ஜாதி இல்லை' என்கிறார் திரு.சோ. ஆனால், காஞ்சிப் பெரியவரோ, 'டிவிஷன் ஆஃப் லேபர் பிரச்னையை ஜாதி - மூலம் ஹிந்து மதம் அழகாகச் சரி செய்தது' என்கிறார். முரணாக உள்ளதே?

(Division of Labour அல்ல; Division of Labourersதொழிலையல்ல - தொழிலா ளர்களை பிரிக்கிறது இந்து மதவர்ணம் என்றுதான் அண்ணல் அம்பேத்கர் சொல் லுகிறார் - அதனைத் தலைகீழாகப் புரட்டு வது ஏன்?)

ப: மகாத்மா காந்தியும், காஞ்சி பெரிய வரும் வர்ணத்தைப் பற்றி ஒரே மாதிரி கருத்து கூறுகிறார்கள். - சோவும், திலகரும் வேறு மாதிரி கருத்து கூறுகிறார்கள். - "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி'' ('உண்மை ஒன்றே. அதை விஷய மறிந்தவர்கள் பலவிதமாகப் பார்க்கிறார்கள்) என்று கூறுகிறது ரிக் வேதம். அதுபோலத்தான் காஞ்சிப் பெரியவரும், காந்தியும்; திலகரும் சோ-வும் கூறுவது முரணாகத் தோன்றுகிறது. உலக விஷயங்களில் மாற்றுக் கருத்து, மாற்று நடத்தை எல்லாமே முரணாகவே தோன்றும். இதை சோ பலமுறை கூறியிருக் கிறார். உதாரணமாக, தந்தைக்குப் பணிந் தான் ராமன், அதனால் அவன் உயர்ந்தவன். தந்தையை மீறினான் பிரஹலாதன், அதனால் அவன் உயர்ந்தவன். கணவனை வணங்கினாள் சீதை, அதனால் அவள் உயர்ந்தவள்.

கணவனை மீறினாள் மீரா, அதனால் அவள் உயர்ந்தவள். அண் ணனை மீறினான் விபீஷணன், அதனால் அவன் உயர்ந்தவன். அண்ணனுக்குப் பணிந்தான் கும்பகர்ணன், அதனால் அவன் உயர்ந்தவன். எனவே எது சரி, எது தவறு என்பது தர்ம சங்கடமான விஷயம். தர்மம் என்றாலே தர்மசங்கடம்தான். இந்த வேறு பாடுகளைப் புரிந்து கொள்ள, மற்றவர் களின் கருத்துக்களை ஏற்கா விட்டாலும், சகித்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் ஹிந்து மதத்துக்கு சகிப்புத்தன்மை இயற்கையாக உருவாகியது. ஒரு கருத்து மட்டுமே சரி என்று கூறும் சித்தாந்தங்கள் காரணமாக உலகில் இரத்த ஆறுதான் ஓடியது. எனவே, இரு முரணான கருத்துக் களை ஏற்கும் நமது சித்தாந்தம், நமக்கு சகிப்புத்தன்மையை வளர்த்தது. - இதுதான் துக்ளக்கின் குருமூர்த்தியாரின் பதில்.

ஹிந்து மதத்தில் வர்ணம் உண்டு - ஜாதி இல்லை என்று சொல்லிவிட்டாராம் சோ - இதை விடப் பித்தலாட்டம் ஒன்று இருக்க முடியாது. சோ கூட்டமும் குருமூர்த்தி கும்பலும் அய்யர், அய்யங்கார்கள் பற்றிக் கேள்வி பட்டதில்லையா? தந்தை பெரியா ராலும், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கத்தாலும் இவர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை வெட்டிக் கொண் டாலும் இவாளின் தோப்பனார் பெயர்களில் ஒட்டியிருந்த அய்யர் வா(ல்)ள் என்பது ஜனாதிபதி வழங்கிய பத்மசிறீ பட்டமா?

காந்தியார் தீண்டாமை ஒழிக என்று சொன்னாரே தவிர, வர்ணம் - ஜாதிகளில் நம்பிக்கை உள்ளவர் தானே! காந்தியாரையும், சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியையும் ஒப் பிட்டு எழுதுகிறதே துக்ளக் - இது எவ்வள வுப் பெரிய மோசடி - பாஷாணத்தில் மூழ்கி எழுந்த போக்கிரித்தனம்.

இதே சங்கராச்சாரியாரை பாலக்கோட் டில் காந்தியார் சந்திக்கவில்லையா? (15.10.1927) மாட்டுக் கொட்டகையில் வைத்து காந்தியாரை அந்த சங்கராச்சரியார் சந்திக்க வில்லையா? தீண்டாமை ஒழிப்புக்கு சங்கராச்சாரியார் ஒத்துழைக்க காந்தியார் வேண்டுகோள் வைத்தபோது, இவாளின் யோகக்குருவான சங்கராச்சாரியார் அதனை நிராகரிக்கவில்லையா? (ஆதாரம்: தமிழ் நாட்டில் காந்தி: பக்கம் 575-576)

இந்த நிலையில் காந்தியாரையும், சங்க ராச்சாரியாரையும் ஒப்பிடுவது யாரை ஏமாற்றிட?

ஹிந்துமதத்தில் வர்ணம் உண்டு, ஜாதி யில்லை என்று சோ கூறிவிட்டாராம். குருமூர்த்திகளின் - ஆர்.எஸ்.எஸ்.காரர்க ளின் குருநாதரான கோல்வாக்கர் ஜாதிபற்றி என்ன கூறுகிறார்?

"நீண்டகாலமாக ஜாதி அமைப்பு முறையை சிலர் எதிர்த்து வருகிறார்கள். பழங்காலத்திலேயே ஜாதி அமைப்பு முறை இருந்து வந்திருக்கிறது. நாம் அதன் உச்சியில் இருந்தோம். ஆனால் ஜாதி முன்னேற்றத்திற்கு முட்டுக்கட் டையாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது; உண்மையில் சொல்லப்போனால் இந்த ஜாதி அமைப்பு என்பது சமூகத்தில் ஒற்றுமை யைக் காப்பதற்கே உதவி செய்திருக்கிறது என்ற தமது “BUNCH OF THOUGHTS” என்ற நூலில் கோல்வாக்கர் எழுதிய தற்கு என்ன பதில்?

சோ சொல்லுவது சரியா - கோல்வாக்கர் சொல்லுவது சரியா? அறிவு நாணயத்தோடு பதில் சொல்லட்டும் குருமூர்த்தி அய்யர் வாள்.

குணத்தின் அடிப்படையில் தான் வருணம் என்று சாதிக்க முற்படும் சோ என்ன சொல்லுகிறார்?

"இந்த நிலையிலே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் மனிதர்கள் இப்படி வகைப்படுத்தப் பட்டனர். இது பற்றி 'எங்கே பிராமணன்' தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ் விஷயத்தைப் பார்க்க நேரிடலாம். குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படை யில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற் படுகிற பிரிவுகளாக உருவெடுத்து விட்டன'' என்று சாதிக்கிறார். சோவின் கட்டுரையில் பிற்பகுதி முழுவதுமே இதனை மய்யமாக வைத்தே புனையப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி  கொடுத்து விட்டாலே அந்த எல்லா வற்றிற்குமே போதுமானதாகிடும்.

வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படை யிலானது அல்ல என்பது சோலின் வாதம்.

இது அடிப்படையிலேயே தவறானது என்பது இந்து மதத்தின் அடிப்படை ஆதா ரங்களைக் கொண்டே தகர்த்து விடலாம். 'சோ' குறிப்பிடும் வேதங்களுள் 'யஜுர் வேதம் ஒன்று; அதன் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது? ''ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய: க்ருத: 1 ஊரூத்தஸ்ய யத்வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(கடவுளின் முகத்தினின்றும் பிராமணன் பிறந்தான், தோள்களினின்றும் க்ஷத்திரியன் பிறந்தான், துடைகளினின்று வைசியன் பிறந்தான், பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான்.) அதர்வண வேதம் என்ன கூறுகிறது? ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்யோபவத் 1

மத்யம் ததஸ்ய யத் வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத 11

(அத்தியாயம் 19 சுலோகம் 6) யஜுர் வேதத்தில் கூறப்பட்ட அதே பொருள்தான் இதற்கும்.

மனுர்வையத் கிஞ்சிதவத் தத் பேஷஜம் - இதன் பொருள் மனு எதைச் சொன்னாரோ அது மருந்து என்பதாகும். பதினெட்டு ஸ்மிருதிகள்; மனுஸ் மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லி யிருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத்தக்க தன்று என்று மனுதர்ம சாத்திரம் பீடிகை கூறுகிறது. அவ்வளவுப் பெரிய அந்தஸ்து மனுதர்ம சாத்திரத்துக்கு!

அந்த மனுவானப்பட்டவரும் என்ன கூறுகிறார்?

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத் தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று முண்டான பிராமண ஷத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனி யாகப் பகுத்தார் (அத்தியாயம் ஒன்று சுலோகம் 87) வேதங்களும், மனுதர்ம சாத்திரமும் இதன் மூலம் எதை உறுதிப்படுத்துகின்றன?

பிரம்மா என்ற கடவுள் படைப்பிலேயே பிறப்பின் அடிப்படையிலேயே தன் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பிராம ணன், சத்திரியன், வைசியன், சூத்திரர்க ளைப் படைப் பித்து இருக்கிறான் என்பது திட்டவட்டமாகத் தெளிவாக்கப் பட்டுள் ளதா இல்லையா?

படைக்கப்படும் போதே இந்தப் பிரிவு களை பிறப்பின் அடிப்படையில் பிரம்மா படைத்து விட்டார் என்று இந்து மத வேதங்களும், ஸ்மிருதியும் கூறிவிட்ட நிலையில், பிறப்பின் அடிப்படையில் இவை உண்டாக்கப்படவில்லை என்று சோ கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். வேதங்களையும் ஸ்மிருதிகளையும் மறுக்கும் மகா புரட்சி யாளராக சோ மாறி விட்டாரா? அல்ல - அல்ல! வேதங்கள், ஸ்மிருதிகள் கூறியவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விவாதிக்க முயற்சித்தால் அவாளின் இந்துத்துவா கபாலம் கழன்று விடும் என்பது அவர்களுக்கு மிக நன்றா கவே தெரியும். கடவுளேயானாலும், காந்தி யாரே ஆனாலும் அவர்களைப் பொருத்த வரை அவர்கள் காரியத்துக்கு எந்த அள வுக்குப் பயன்படும் என்பதைப் பொறுத் ததேதான்.

சோ வியாக்கியானம் செய்வது போலவே வேறு சிலரும் இந்தக் காரியத்தில் ஈடுபடு கிறார்கள். இதற்கு ஆப்பு அடிக்கும் வகை யில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார் விளக்க மாகவே கூறி இருக்கிறார். இந்து மத சமாச்சாரங்களுக்கு வியாக் கியானம் கூற சோவைவிட சங்கராச்சாரி யார் தான் தகுதியானவர் என்பதை சோவே மறுக்க முடியாதே!

காஞ்சி சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்' - முதல் பாகம் (பக்கம் 1001-1003) என்ன கூறுகிறது?.

"ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை: ஆனால், பிறப் பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். 'சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச' என்றே சொல்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால், எத்தனை வயசுக்கு மேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநு சரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந் தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வரு ஷங்களில் தன் தொழிலுக்கானவற்றைப் படித்து விட்டுப் பிறகு அவற்றில்தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண் டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான - காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப்  பேசியிருப்பாரா?

அப்படியானால் அவர் 'தியரி'யில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், 'ப்ராக்டிஸில்' (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆத ரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? - "நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்துமித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக்கொள்வதைவிட, ஆண்டிப் பரதே சியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்த னையோ மேல், என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக் ரஹம் பண்ணிவிட்ட அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்?. "நீ க்ஷத்ரிய ஜாதி யில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை - போடு சண் டையை" என்றுதான் அவனைவிடப் பிடி வாதம் பிடித்து அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

அப்படியானால் தர்ம புத்திரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விட வேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்தி லிருந்து இருந்து வந்திருக்கிறார்?. அவரை யும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அனுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் "ஸ்வதர்மம் என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்று தான் அர்த்தமாகும். பிராமணராகப் பிறந்தும் க்ஷத்ரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியானவர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர்களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்றவர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக் காட்டிப் பேசியபோதெல்லாம் பகவான் ஆக்ஷேபித் ததில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் குணகர்ம விபாகச: என்றார் என்றால்,

இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றே தான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று - வெவ்வேறு விஷயங் களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை . என்று சங்கராச்சாரியார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்கிறார் திரு வாளர் சோ? குணத்தின் அடிப்படையில் வர்ணம் - அதற்குரிய தொழில்கள் என்பது சாத்தியமில்லை என்று பாஷ்யம் கூறி விட்டாரே - இதற்குமேல் சோவோ, குரு மூர்த்திகளோ முண்ட முடியுமா?

ஜாதி வேறு வர்ணம் வேறு என்று பிரிக்க முயலுவதற்கும் இதில் பதில் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்?

ஆகா - இந்த முரண்பாடுகளை எவ்வளவு சாமார்த்தியமாக சப்பைக்கட்டுக் கட்டி பம்மாத்து வேலை பண்ணுகிறார் குருமூர்த்தி அய்யர்வாள்!

தர்மம் என்றாலே தர்ம சங்கடம் தானாம், இந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ள மற்றவர்களின் கருத்துக்களை ஏற்காவிட்டாலும் சகித்துக் கொள்ள வேண்டுமாம்!

திருவாளர் குருமூர்த்தி அய்யர் அவர் களே! வேறு பாடு என்பது வேறு, முரண் பாடு என்பது வேறு, இங்கே சோ கூறுவது - சங்காராச்சாரியார் கூறுவது முரண்பாடே தவிர வேறுபாடல்ல. இதனை நாணயமாக ஒப்புக்கொள்ளும் ஒழுக்கம் குருமூர்த்திக்கு இல்லாததை நாம் புரிந்து கொள்ள முடியும். அவாளிடம் முரண்பாடு ஏற்பட்டால் அதைச் சகித்துக் கொள்ள வேண்டு மாம், எப்படி?

காரணம் சோவும், சங்கராச்சாரியாரும் அவாள் அல்லவா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பற்றை யும் தாண்டிய வெறித்தனம் என்பது.

ஒரு பார்ப்பான் இன்னொரு பார்ப் பானை விட்டுக் கொடுக்க மாட்டான் என் கிறபோது குருமூர்த்தி அய்யர் மட்டும் எப்படி விட்டுக் கொடுப்பார் என்று எதிர்ப் பார்க்க முடியும்? இதைத்தான் நம்மின மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், குருமூர்த்திகள் என்ன தான் குட்டிக் கரணம் போட்டாலும் பெரியார் மண் அவர்களின் முகத்திரையை கிழித்தே தீரும் என்பது நினைவில் இருக்கட்டும்!

- விடுதலை ஞாயிறு மலர்,5.1.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:43 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: குருமூர்த்தி, வருணம், வேதம்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

கைவல்ய சாமியார்

கைவல்ய சாமியார்

வேதம்

வேதம்

பகவத்கீதை

பகவத்கீதை

மனுதர்ம சாஸ்த்திரம்

மனுதர்ம சாஸ்த்திரம்

மனுதர்ம சாஸ்த்திரம்

மனுதர்ம சாஸ்த்திரம்

புதிய ஏற்பாடு

புதிய ஏற்பாடு
கிருத்தவ வேதம்

திருக்குர் ஆன்

திருக்குர் ஆன்
இஸ்லாமிய வேதம்

விவாக மந்திரம்

விவாக மந்திரம்
Powered By Blogger

சிறப்புடைய இடுகை

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார் விமர்சிக்கவில்லையா!

 கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து  என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம...

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

பின்பற்றுபவர்கள்

லேபிள்கள்

  • -மனுதர்மம்
  • :துக்ளக்
  • அண்ணல் அம்பேத்கர்
  • அய்யப்பன்
  • அரக்கர்
  • அறிக்கை
  • அறிவுக்கரசு
  • ஆசிரியர் பதில்
  • ஆட்சி
  • ஆண்
  • ஆபாசம்
  • ஆய்வு-1
  • ஆய்வு-2
  • ஆய்வு-3
  • ஆய்வு-4
  • ஆரிய வேதம்
  • ஆரியம்
  • ஆரியர்
  • ஆரியர் வருகை
  • ஆரியர்களின் தீ
  • இந்து தர்மம்
  • இந்து நாளேடு
  • இந்து மதம்
  • இந்துமதம்
  • இரு பிறப்பு
  • இருக்கு வேதம்
  • இலக்கியம்
  • இஸ்லாம்
  • உஞ்சவிருத்தி
  • உத்தர கீதை
  • உபநயனம்
  • எரிப்பு
  • ஏவாள்
  • ஒழுக்கக்கேடு
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • கடவுள்
  • கதை
  • கந்தன்
  • கல்வி
  • கலாச்சாரம்
  • கலைஞர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • காந்தி
  • காயத்ரிமந்திரம்
  • காராம் பசு
  • கி.வீரமணி
  • கிரகபிரவேசம்
  • கிருத்துவம்
  • கிருஷ்ணன்
  • கீதை
  • குங்குமம்
  • குணம்
  • கும்பிடுதல்
  • குரான்
  • குருமூர்த்தி
  • குழந்தை திருமணம்
  • கைவல்ய சாமியார்
  • கைவல்யம்
  • கொடுமை
  • கோத்திரம்
  • கோரக்ஷணை
  • கௌதம மஹரிஷி
  • சங்க இலக்கியம்
  • சங்கரர்
  • சங்கராச்சாரி
  • சடங்குகள்
  • சண்டாளர்
  • சவரம்
  • சனாதன தர்மம்
  • சனாதனம்
  • சாமி கைவல்யம்
  • சாமியார்
  • சிரார்த்தம்
  • சிருங்கேரி சங்கராச்சாரியார்
  • சிலை
  • சீர்திருத்தம்
  • சுக்ல யஜுர்
  • சூத்திரன்
  • சோழர்காலம்
  • தமிழ் வேதம்
  • தமிழ்க் கடவுள்
  • தர்ம சூத்திரம்
  • தலையங்கம்
  • தஸ்லிமா
  • தாத்தாச்சாரியார்
  • தாலி
  • தானம்
  • திதி-தர்ப்பணம்
  • திராவிட நாடு
  • திராவிடர்
  • திராவிடர்களின் தீபம்
  • திருமண மந்திரம்
  • திருமணம்
  • திருவிளையாடல்
  • திவசம்
  • தினமணி
  • தினமலர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • துக்ளக்
  • துவேஷி
  • தேசிகப் பிரபந்தம்
  • தேவர்
  • தொழில்
  • ந.சி.கந்தையாபிள்ளை
  • நவராத்திரி
  • நாத்திகவாதம்
  • நாராயணன்
  • பக்தர்கள்
  • பக்தி
  • பகவத் கீதை
  • பகவத்கீதை
  • பசு
  • பசு இறைச்சி
  • பசுவதை
  • பஞ்சமர்
  • படிப்பு
  • படைப்பு
  • பதிலடி
  • பதிலடி பக்கம்
  • பதிலடிப் பக்கம்
  • பதிலடிப் பக்கம்:
  • பரம்பொருள்
  • பலி
  • பாக்கள்
  • பார்ப்பனர்
  • பார்ப்பான்
  • பிச்சை
  • பிரம்ம முகூர்த்தம்
  • பிரம்மா
  • பிராமண தர்மம்
  • பிராமணர்
  • பிராமணன்
  • பிறப்பு
  • புத்தம்
  • புராணம்
  • புனிதம்
  • பூணூல்
  • பெண்
  • பெண்கள்
  • பெரியபுராணம்
  • பெரியார்
  • பெரியார் படம்
  • பேதங்கள்
  • பேதம்
  • பைபிள்
  • பொய் பிரச்சாரம்
  • பொருள்
  • பொள்ளாச்சி
  • பௌத்தம்
  • மணிமேகலை பிரசுரம்
  • மதக்குறி
  • மதம்
  • மந்திரங்கள்
  • மந்திரம்
  • மயிலாடன்
  • மனு நீதி
  • மனுசாஸ்திரம்
  • மனுதர்மம்
  • மனுதரும சாஸ்திரம்
  • மனுஸ்மிருதி
  • மாட்டிறைச்சி
  • மாட்டுக்கறி
  • மாட்டுப் பால்
  • மாதவிடாய்
  • மாமிசம்
  • மிரட்டல்
  • மின்சாரம்
  • மீமாம்சம்
  • மொட்டை
  • மொழி
  • யாகம்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராமானுஜர் தாத்தாச்சாரியார்
  • ரிக் வேதம்
  • ரிக்வேதம்
  • ரிஷி
  • வர்ண தர்மம்
  • வர்ணம்
  • வர்ணாசிரம தர்மம்
  • வர்ணாசிரமம்
  • வருணம்
  • வருணாசிரமம்
  • வள்ளலார்
  • விபச்சாரி மகன்
  • விவேகானந்தர்
  • விஜயபாரதம்
  • வேத பண்பாடு
  • வேதங்கள்
  • வேதங்கள் - பேதங்கள்
  • வேதம்
  • வேதம் பசுவதை
  • வேறுபாடு
  • வைணவம்
  • வைரமுத்து
  • ஜகத்குரு
  • ஜாதி
  • ஸ்டாலின்
  • ஸ்மிருதிகள்
  • ஸநாதனதர்மம்

பிரபலமான இடுகைகள்

  • தாய்க்கு திவசம் செய்ய புரோகிதன் சொல்லும் மந்திரம்
    தாய்க்கு திவசம் செய்யப்போகிறான் ஒரு பாமரன். அப்போது புரோகிதன் சொல்லும் மந்திரம் என்னவென்றால், என்மே மாதா ப்ரவது லோபசரதி அன்னவ் வ்ர...
  • பார்ப்பு என்பதற்கு இருபிறப்பு என்ற பொருள் தப்பு
    மஞ்சை வசந்தன் கோழிக்குஞ்சு - கோழிப்பார்ப்பு என்று தலைப்பிட்டு வய்.மு.கும்பலிங் கன் அவர்கள் எழுதிய செய்திகள் முற்றிலும் தவறானவை. ...
  • பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்?
    ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக...
  • மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் - பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.
    முன்னுரை:- நல்லாட்சி நடத்திய மவுரியப் பேரரசர் அசோகரின் அருமை பெருமைகளை உலகுக்குப் பறை சாற்றும் வண்ணம் இந்தியத் தேசியக் கொடியில் அசோகச்...
  • மனு ஸ்மிருதியும் தர்ம சாஸ்திர நூல்களும்
    மநு ஸ்மிருதி என்பது தர்ம சாஸ்திர நூல்களில் ஒன்று.தர்ம சாஸ்திர நூல்கள் 20 க்கும் மேல் உள்ளன.இந்த நூல்களைப் பற்றி எனது முக நூலில் சிறு சிறு பத...
  • திருமண வைபங்களில் ஆபாச வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன.
    வைதீக திருமண வைபங்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் மிக மிக கொச்சையான ஆபாசமான மந்திரங்களும் அந்தச் சடங்குகளின் போது ஓதப் படுவது வைத...
  • பிராமண போஜனமும் சட்டிச் சோறும்        
    நூல்:     பிராமண போஜனமும் சட்டிச் சோறும்         (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும்         சாதி உருவாக்கமும்) ஆசிரியர்: ஆ.சிவசு...
  • வேதம் வேறு ஆகமம் வேறு
    ‘‘ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!’’ ஆகமங்களைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் என்று உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு - இரண்...
  • மனுதர்மத்தை கொளுத்த வேண்டும் ஏன்?
    காலில் பிறந்தவன் சூத்திரன் அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவை களினின்று  உண்டான பிரா...
  • ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ஜாதியை நிலைநிறுத்தும் பகவத் கீதை (2)
      வழக்குரைஞர் மூ.அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள “பகவத் கீதையின் சமஸ்கிருதப் பாடல்களும், தமிழ் விளக்கங்கள...

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (1)
    • ▼  ஜனவரி (1)
      • ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ஜாதியை நிலைநிறு...
  • ►  2025 (6)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (27)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (1)
  • ►  2023 (29)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (10)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2022 (7)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2021 (21)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (25)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (53)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (17)
    • ►  ஜனவரி (6)
  • ►  2018 (45)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (7)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (19)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (3)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2016 (23)
    • ►  நவம்பர் (7)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (4)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (22)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (2)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.