செவ்வாய், 17 மே, 2016

மனுநீதி இப்படிச் சொல்கிறது


ஆரிய ஆணுக்கும், ஆரிய இனமல்லாத பெண்ணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியும். ஆரிய பெண்ணுக்கும், ஆரியனல்லாத ஆணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியாது.
பார்ப்பானைக் கொல்வது, பார்ப்பானின் பொன்னைக் கவர்வது, குரு பத்தினியோடு உறவு கொள்வது ஆகியவை மகா பாதகங்களாகும். பார்ப்பானைக் கொன்றவன் 12 ஆண்டுகள் வனவாசம் புரிய வேண்டும். அல்லது எரியும் நெருப்பில் மூன்று முறை சாஷ்டாங்கமாக விழ வேண்டும்.
அல்லது போர்க்களத்தில் அம்புகளை எய்கின்ற இலக்காக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். சூத்திரனைக் கொன்ற பார்ப்பான் ஆறுமாதம் தவம் புரிய வேண்டும்; அல்லது பத்து பசுக்களையும், ஒரு எருதையும் பார்ப்பானுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.
ஒரு சண்டாளனை, அல்லது பிணத்தைத் தொட்டவன் குளிப்பதன் மூலம் தூய்மை அடையலாம். ஒரு பார்ப்பனப் பெண்ணோடு அவள் விருப்பத்திற்கு எதிராக சம்போக உறவு கொண்ட பார்ப்பனனின் தலையை  மொட்டை அடிப்பது அதற் குரிய தண்டனை ஆகும். இதே குற்றத்தை மற்ற ஜாதிக்காரர்கள் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டும்.
-விடுதலை,8.1.16

சாஸ்திரத்தில் பசு வதை!

சாஸ்திரத்தில் பசு வதை!
“மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின்கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத் தெடுத்துக் கொள்க.” இப்படி கூறுகிறது. யாகத்தின் போது பசுவை எப்படி அறுத்தெடுப்பது என்பது பற்றி கூறும் மந்திரம்.
(ஆய்தரேயப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
பசுவின் - மலம், மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும் என்று அய்தரேய பஞ்சி 2 காண்டம் 6 கூறுகிறது. பசுவைக் கொல்லும் போது “ஹோதா” என்னும் புரோகிதன் ‘நன்றாக அடித்துக் கொல், கொல்,
கொல், அடிப்பதை நிறுத்தாதே’ என்று சொல்ல வேண்டும் என்று அய்த பஞ்சிகா 2 காண்டம் 7 கூறுகிறது.சாஸ்திரம் இப்படிக் கூற, பசுவதையை தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிடும் சாஸ்திரிகளே! அப்படியானால் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு பதிலாக சாஸ்திர எரிப்பு விழாக் கொண்டாடுங்களேன்!
-விடுதலை,8.1.16

திங்கள், 16 மே, 2016

வேதங்களின் வண்டவாளம்


விபச்சாரம் என்பது பார்ப்பனர்களுக்குப் பிள்ளை விளையாட்டு! இல்லாவிட்டால் இதற்கென்றே ஒரு பகவானைப் படைத்து இருப்பார்களா?
வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்ஸனம் பாப நாஸம்
சம்பனம் சர்வதீர்த்தானாம்
மைதுனம் மோஷ சாதனம்
வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம், நாசம், முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்கு சமமான புண்ணியம், உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி.
இதுதான் இந்த சுலோகத்தின் பொருள். மோட்சத்தை அடைய இவ்வளவு சுலபமான மார்க்கத்தைக் காட்டி விட்டது சங்கராச் சாரியார் மதம். இந்து மதத்திற்கு ஈடு இணை இந்தப் பூவுலகில் எங்கும் இருக்கமுடியுமா!

வேதங்களின் வண்டவாளம்
ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்...
பதினோராவது புருஷனை நியோகத்தில் பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.
இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.
எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்து கின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர் களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம்  கொடுக்கின்றது.
-விடுதலை,7.6.13,17.12.10

வெள்ளி, 13 மே, 2016

கீதை பற்றி விவேகானந்தர்


கீதை என்ற நூல் மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதன் முதலில் மகாபாரதத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப் பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதை யில்  கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா?
நான்கா வதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள் தானா? என்பன கீதையைச் சங்கராச் சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத் தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளியிட்டிருந்தாலும் சரி - குரு சேத்திர யுத்தம்  நடைபெற்றது என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை.
யுத்தத் தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரை யாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத் திரயுத்தம் செய்தனர் என்பதோ கூறுவ தற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. -விவேகானந்தர்,
கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில் ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)
-விடுதலை,21.2.15