ஆரிய ஆணுக்கும், ஆரிய இனமல்லாத பெண்ணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியும். ஆரிய பெண்ணுக்கும், ஆரியனல்லாத ஆணுக்கும் பிறந்தவன் ஆரியனாக முடியாது.
பார்ப்பானைக் கொல்வது, பார்ப்பானின் பொன்னைக் கவர்வது, குரு பத்தினியோடு உறவு கொள்வது ஆகியவை மகா பாதகங்களாகும். பார்ப்பானைக் கொன்றவன் 12 ஆண்டுகள் வனவாசம் புரிய வேண்டும். அல்லது எரியும் நெருப்பில் மூன்று முறை சாஷ்டாங்கமாக விழ வேண்டும்.
அல்லது போர்க்களத்தில் அம்புகளை எய்கின்ற இலக்காக தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். சூத்திரனைக் கொன்ற பார்ப்பான் ஆறுமாதம் தவம் புரிய வேண்டும்; அல்லது பத்து பசுக்களையும், ஒரு எருதையும் பார்ப்பானுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.
ஒரு சண்டாளனை, அல்லது பிணத்தைத் தொட்டவன் குளிப்பதன் மூலம் தூய்மை அடையலாம். ஒரு பார்ப்பனப் பெண்ணோடு அவள் விருப்பத்திற்கு எதிராக சம்போக உறவு கொண்ட பார்ப்பனனின் தலையை மொட்டை அடிப்பது அதற் குரிய தண்டனை ஆகும். இதே குற்றத்தை மற்ற ஜாதிக்காரர்கள் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டும்.
-விடுதலை,8.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக