திங்கள், 5 செப்டம்பர், 2016

இந்து மதத்தில் பெண்கள் நிலை பெண்களின் அந்தஸ்து பற்றி


1. நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: “எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ  அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக் காரனாவாவது ஒரு ஸ்திரீயாகவாவது, ஒரு நாலு கால் மிருகமாகவாவது பிறப்பான்”
2. மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன் முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும்  அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.
3. போதாயனர் கூறுவது எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமை கட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக் கூடாது.
4. மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: ‘தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்” (சுந்தரகாண்டம் 5)
5. மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும் படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன் மாரும், வயது முதிர்ந்த காலத் தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் - ஒரு பெண் ஆனவள் ஒரு போதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடைய வளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர் களாகவோ, அலட்சியக்காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ் வளவு அற்ப ஜீவர்களாகவே இருக் கிறார்கள்.
6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம் சமென்னவெனில் அவ ளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவ னையே அவள் மரியாதை செய்யட்டும்.. ஒரு புருஷன் துர்நடத்தையுடைய வனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம் போலவே கருது கிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள் V, 154)
7. மனு: ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளாகத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது ஒரு மங்கையானவள் தான் மணம் செய்து கொண்ட ஒரு புருஷன் என்ன குணங் களையுடைய வனாயிருக்கின்றாறோ அதே குணங்களையே அவளும் அடைவாள் எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப் போல் (அத்தியாயம் IX 22)
8. போதாயனர் உரைப்பது: ‘மாதர்கள் அறிவுகளேஇல்லாதவர்கள்; அவர்கள் சொத்துரிமை கொள்ளவும் யோக்கியதை யற்றவர்கள்.

விடுதலை ஞாயிறு மலர், 9.7.16

அனைவருக்கும் உரியதா அஸ்வமேத யாகம்?


- இரா.கண்ணிமை
இந்தக் காலத்தில் இருக்கிற நாமெல் லோரும் அஸ்வமேத யாகம் செய்ய முடியுமா? இதென்ன கேள்வி? ஸ்வாமிகள் சரியாகத்தான் பேசுகிறாரா? என்று தோன்றும். இந்தக் காலத்திலாவது? அஸ்வமேதமாவது? பழைய காலத்தி லேயே சத்ரிய வர்ணத்தில் பிறந்த மகா ராஜாக்கள் இரண்டொருத்தர் தான் அஸ்வமேதம் செய்ய முடிந்திருக்கிறது.
எதற்காக அஸ்வமேதம் செய்ய வேண்டும்? நம் பதவியையும் பவிஷையும் அது காட்டுகிறதே என்பதற்கா. இதற்காக வெல்லாம் என்றால் அஸ்வமேதம் செய்யவே வேண்டாம். பதவி, பவிஷூ தேவலோக சவுக்கியம் எல்லாமே அகங் காரத்தை வளர்த்துக் கொள்கிற காரியங் கள்தாம். நம்மிடம் கொஞ்ச நஞ்ச ஞானம் கூடச் சேரவொட்டாமல் இடைஞ்சல் செய்கிறவை தாம். பின் எதற்காக அஸ்வ மேதம் என்றால்.. ஹயமே ஸயர்ச்சிதா என்று அம்பாளுக்கு லலிதாத்தி சதியில் ஒரு நாமா சொல்லியிருக்கிறது.
த்ரிசதி என்பது முந்நூறு பெயர்கள் கொண்டா நாமாவளி. அர்ச்சனையில் பிர யோஜனமானது ருத்ரத்ரி சதி என்பது வேதத் திலிருந்தே எடுத்தது. லலிதாத்ரி சதிவேதத் தில் இல்லாவிட்டாலுங்கூட அதற்கு சமதையான கவுரவம் பெற்றிருக்கிறது.
ஹயக்ரீவர் உபதேசித்த இந்த த்ரிசதியில் ஹயமேத ஸமர்ச்சிதா என்று ஒரு நாமா இருக்கிறது. ஹயம் என்றால் அஸ்வம். குதிரை என்று அர்த்தம். கழுத்துக்கு மேலே குதிரை முகம் படைத்த மஹாவிஷ்ணுவின் அவதாரமாக இருப்பவரே ஹயக்ரீவர். ஹயமேதம் என்றாலும் அச்வமேதம் என்றாலும் ஒரே அர்த்தந்தான். மைர்ச்சிதர் என்றால் நன்றாக பூர்ணமாக ஆராதிக்கப் படுபவர் என்று அர்த்தம். ஹயமேதஸ மர்ச் சிதா? -  அஸ்வ மேத ஆராதிக்கப்படுபவள்.
அதாவது ஒருத்தன் அஸ்வமேதம் செய்தால் அதுவே அவன் அம்பாளுக்குச் செய்கிற விசேஷமான ஆராதனையாகி விடுகிறது. வெறும் யஞ்சயம் என்றால் அதற்கென புத்தப்ராப்தி, தனலாபம், பதவி, ஸ்வர்கவாசம் மாதிரியான பலன்கள் தான் உண்டு. இந்தப் பலன்களோடு, இவற்றை விட முக்கியமாக, அநேகக் கட்டுப் பாடுகளோடும், அய்காக்றியத்தோடும் ஒரு யாகத்தைச் செய்வதால் “சித்திசுத்தி” என்கிற மகாபெரிய பலனும் ஏற்படுத்து கிறது. ஒரு யாகம் அம்பாள் ஆராதனை யாகிற போதோ அதற்குச் சின்னச் சின்ன பலன்களாக இல்லாமல் சகல புருஷார்த் தங்களையும் கொடுக்கக்கூடிய சக்தி உண்டாகிறது.
ஆனதால் அம்பாளை அஸ்வமேதம் பண்ணிவிட்டால் அதனால் அம்பாளை சூராதித்ததாகி விடுமாதலால் இம்மை மறுமைக்கு வேண்டியதில் பாக்கியில்லாமல் சகல சிரேயஸ்களையும் பெற்று விடலாம். எதற்காக அஸ்வமேதம் செய்ய வேண்டும் என்று முதலில் ஒரு கேள்வி போட்டேனே. அதற்கு இது பதில்.
ஆனால் ஒரு சஹஸ்ரநாமம். த்ரிசதி மாதிரியானவற்றுக்கு நியமங்கள் இருக் கின்றன என்றால் அஸ்வமேதம் செய் வதற்கோ ஒதுக்கப்பட்ட கட்டுப்பாடுகள், ஆயிரம் தினுசான நியமங்கள் கெடுபிடிகள் சொல்லியிருக்கிறது. இந்தக் காலத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.
சரி அப்படியானால் நாம் அஸ்வமேதம் செய்வதற்கே இல்லை என்று விட்டுவிட வேண்டியது தானா? இல்லை. நம் அனைவருக்கும் சாத்தியமான ஓர் அஸ்வமேதத்தை சாஸ்திரங்களிலேயே சொல்லியிருக்கிறது. ஜீவகாருண்யத்தின் மேல் செய்ய வேண்டிய அநேக பரோபகாரங்களைச் சொல்லிக்கொண்டே போய் அவற்றுக்கெல்லாம் சிகரம் மாதிரி ஒன்றைச் சொல்லி அதுவே அஸ்வமேதத் தின் பலனை அளிக்கக்கூடியது என்கிறது.
இப்படி அஸ்வமேத யாகம் பற்றி தெளிந்தும், தெளியாமலும், சொல்லியிருப் பவர் லோகக்குரு சிறீமகாபெரியவர் - தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
இதை தி இந்து நாளிதழ் 7.7.2016 இல் வெளியிட்டிருக்கிறது. காஞ்சிமடத்து காவியுடையின் உளறல்களைப் பார்த்தீர் களா?
இதோ - அவர்களின் வேதத்திலேயே அஸ்வமேத யாகம் பற்றி சொல்லியிருப் பதைப் பார்ப்போம்.
அஸ்வலீலா பாஷாணம் என்பது மிக அருவருப்பான செயலை நடத்தல். இது அஸ்வமேத யாகத்தில் புரோகிதர்களுக்கும், பெண்களுக்கும் சம்பந்தப்பட்டது. இதை எழுத கைக்கூசும். சுருக்கிச் சொன்னால் அஸ்வம் = குதிரை, மேதம் = சேர்க்கை. குதிரையுடன் சேர்த்தல் என்று பொருள்.
அஸ்வமேதயாகத்தில், யாக பசுவாகிய குதிரையை, எசமான் மனைவியாகிய, மகிஷியோடு, இயற்கைக்கு மாறான வகையில், புணர்ச்சி செய்ய விடுதலாம். இதைப் போன்ற மற்ற பவுண்டரீகம் முதலிய அருவருப்பான பல யாகங்களை, தேவர்களும், ரிஷிகளும், மனிதர்களும் செய்து முடித்தாலன்றி வேறு வகையில் முக்தி பதவியடைய முடியவே முடியா தென்பது வேதாந்த இரகசியம்.
இந்து யாகபலிகளை மனிதரிடத்தில் தமக்குச் செய்யும்படி எதிர்பார்த்து - யாகங்கள் பலிகளுக்கு பலனாக முக்திய ளிப்பார் என்று நம்புகிறார்கள். இத்தகைய அருவருப்பான யாக பலிகளால் முக்தி சேர்வோர் யார்? யாக பலிகளை செய் வோர் இன்று எத்தனை பேர் இருக் கிறார்கள்? சொல்ல முடியுமா? இதெல்லாம் கள்ளத்தனமானவர்களின் வஞ்சிப்பான போதனை என்பதைக் கண் விழித்துப் பார்த்து அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
புலால் தின்போரை சூத்திரர், தீண்டாதார்என்று சொல்லும் பார்ப்பனர்கள் மறைமுகமாய் விருந்தினருக்கு பசு, எருது மாமிசத்தை நெய்யில் பொரித்துத் தேனிட்டு புசிக்கக் கொடுப்பதும், யாகம் பலிகளில் கொன்ற உயிர்களின் இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுவதும் நியாயந்தானா?
இவ்வித இரகசிய விதிகள் உண்டு என்பதை அறியாதோர், எத்த னையோ பேர் இருக்கிறார்கள்? மற்றோரை இழிகுலத்தோர் என்று இகழ்ச்சியாய்ப் பேசி  வேதம் சொல்லி, யாக பலியின் இறைச்சி யைப் புசிக்கும் போது தீட்டில்லை என்பது தானே நிறைவு. இப்போது தீட்டு எவ்வகை யில் மறைந்து போனது? என்பதை விளக்கு வார்களா? இதெல்லாம் அடங்கியதே யாகமாகுமென்று யாரும் இதை மறைக்க முடியாதே.
அஸ்வமேத யாகம் செய்வதால் மனிதருக்கு நல் மனைவி, புத்திரர் சரீர வன்மை முதலியன உண்டாகுமென்பது நம்பிக்கையாம்.
அனைவருக்கும் உரியது அஸ்வமேத யாகம் என்று மகா பெரியவரின் தெய்வத்  தின் குரலை படித்தவர்களே இப்போது என்ன சொல்கிறீர்கள்?
சாத்திரத்தைச் சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கிச் சூத்திரத்தை கண்டு சுகம் பெறுவதெக்காலம்.
- பத்திரகிரியார் புலம்பல் 
விடுதலை ஞாயிறு மலர், 23.7.16