வெள்ளி, 25 டிசம்பர், 2020

உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள்.


. வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.

இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.

நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்‘நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம் நாராயணா பரஹா...’என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். ‘அதனால் நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள்’ என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.

“மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது” என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.

-ராமானுஜ தாத்தாச்சாரியார்
இந்து_மதம்_எங்கே_போகிறது? பகுதி – 12ல் ஒரு பகுதி

வியாழன், 24 டிசம்பர், 2020

வேதப்படி பெண்கள் படிக்கக்கூடாது



“ஸ்திரீகளுக்கு ஒரு காலத்திலும் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து அதிலும் பையன்களுடன் சேர்ந்து,வாசிப்பதென்பது கூடாது.விவாஹமாகும் வரையில் மாதா-பிதாக்களே வீட்டில் வைத்து பெண்களுக்கு வித்தியாப்பியாஸத்தைச்(கல்வி) செய்து வைக்க வேண்டுமென்பதே முக்கிய பக்ஷம். 
பணம் சம்பாதிக்கும் படியான வெளி-விருத்திகளில் ஸ்தரீகளை விடுவது அதர்மமேயாகும்.ராஜாங்க காரியங்களிலும் தேசீயப் பொதுக் காரியங்களிலும் ஸ்திரீகளின் சம்பந்தமிருக்கலாகாது.”

“வெளியில் சுதந்திரம் வேண்டுமென்று இந்த தர்ம-நாட்டில் நாளதுவரையில் ஒரு தர்ம பத்னீயும் உத்தேசித்திருப்பதில்லை.”

-ஶ்ரீ ராமாநந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகள் இயற்றிய ‘தர்ம விமர்சனம்’

குறிப்பு: ஶ்ரீ ராமாந-ந்த ஸரஸ்வதீ ஸ்வாமிகளின் பூர்வாசிரமப் பெயர் அட்வகேட்.
 ராமச்சந்திர ஐயர் ஆகும்.
ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யதீர்த்த ஸ்வாமிகளால் துரியாசிரமம் பெற்று ஶ்ரீ ஞானானந்த பாரதீ என்று பட்டம் வாங்கியவர்.முன்னாள் சென்னை மாகாண வர்ணாசிரம மகாநாட்டு கமிட்டி தலைவர் இவர்.

-தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 2.12.20

அடிமை_சூத்திரனும்_வைதிக_சடங்குகளும் (கோத்திர புரட்டு)


சூத்திரனுக்கும் அவர்ணர்களுக்கும் ஹிந்து வைதிக சனாதன சடங்குகளுக்கும் சம்பந்தமே இல்லை!

இந்து வேத வைதீக சனாதன தர்மத்தில் மூன்று வர்ணத்தார்களுக்கு மட்டுமே தனி அந்தஸ்து உண்டு.
சூத்திரர்களும் அவர்ணர்களும் (பஞ்சமர்,சண்டாளர்கள்,பதிதர்கள்,
ஆதி குடிகள்) இந்து வைதீக சனாதன தர்மத்தை சொந்தங் கொண்டாடுவதும் அதில் தங்களுக்கு உரிய இடமும் பங்கும் உண்டெனத் தேடுவது அறியாமை ஆகும். ஏன் சூத்திரர் மற்றும் அவர்ணர்களுக்கு வைதிக சனாதனத்தில்  இடமில்லை என்பதை விளக்குவதற்கே இந்தப் பதிவு. 

சிரார்த்தம், திதி செய்யும் போது புரோகிதர் தற்காலிக பூணூல் இட்டு, தர்ப்பை புல்லினால் பவித்திரம் கூர்ச்சம் முதலியவற்றை அணிவித்து மந்திரங்களை உச்சரிப்பார்.உபநயனம் செய்த இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பது சாஸ்திரப் பிரமாணம்.மற்றவர்களுக்குக் கூடாது, இது திருமணங்களுக்கும் மற்ற கர்ம அனுஷ்டானங்களுக்கும் எல்லா வைதிக சடங்குகளுக்கும் பொருந்தும். காரணம் இந்தச் சடங்குகளின் போது புரோகிதரோ, வாத்தியாரோ வேத மந்திரங்களைக் கூறியே சடங்குகளை நடத்தியாக வேண்டும்.
இருபிறப்பாளர்கள் அல்லாத, அதாவது துவிஜர்கள் அல்லாத சூத்திரர், அவர்ணர்களுக்கு அருகில் வேத மந்திரங்களை ஓதுதல் கூடாது.ஆனால் புரோகிதர்கள் இன்றைய காலகட்டத்தில் இருபிறப்பாளர்கள் அல்லாதவர்களுக்கும் வைதிக சடங்குகளை பணத்திற்காகவும் தானத்திற்காகவும் செய்து வைக்கிறார்கள்.
சூத்திரர் மற்றும் வர்ணத்தில் சேராதவர்களும் இந்த வைதிக சடங்குகளை புரோகிதரை வைத்துச் செய்வதை கவுரவமாகவும் பெருமையாகவும் எண்ணுகிறார்கள். அப்படிச் செய்து வைக்கும் சடங்குகளில் அந்தப் புரோகிதரானவர் சூத்திரனுக்கு தற்காலிகமாக பூணூல் மற்றும் தர்ப்பை புல்லால் ஆன பவித்ரம் அல்லது கூர்ச்சம் அணிவிப்பார். சடங்கு முடிந்ததும் இவை இரண்டையும் கழற்றி அவரே கொண்டு செல்வார். 

ஏன் புரோகிதர்கள் நமக்கு  தற்காலிகமாக
பூணூல்  அணிவிக்கிறார், விரலில் கூர்ச்சம் அணிவிக்கிறார் என நாம் கேள்வி எழுப்புவதில்லை.
போகட்டும, அடுத்து இடையிடையே சிரார்த்தம், திதி செய்பவரது கோத்திரத்தை மந்திரங்களுடன் சேர்த்து உச்சரிப்பார். கோத்திரம் என்பது குடும்பப் பெயர் போன்றதாகும், வேத கால ரிஷிகளின் வழி வந்தவர்கள் என அவர்களது பெயர்களை கோத்திரங்களாகவும், ப்ரவரம் எனவும் தனித்தனி அடையாளங்களை இட்டு அழைப்பர். இந்த கோத்ரம் மற்றும் ப்ரவரம் முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது இருபிறப்பாளர்களுக்கு மட்டுமே கோத்திரமும் ப்ரவரமும் உண்டு.

பிராமணர்களின் கோத்ரம் : அகஸ்திய, வாஸிஷ்ட, சாண்டில்ய,அத்ரி,கண்வ,கௌசிக,கௌர,ஜைமினி,தந்வந்திரி,பராசர,பாரத்வாஜ,புலஸ்தி,மார்க்கண்டேய,மாரீச,மௌன,ரேணு,வத்ஸ,ஸோமராஜக,ஹிரண்ய, கபில, ஜாபாலி,பாணிநி,வால்மீகி என ஐநூறுக்கும் மேற்பட்ட கோத்ரங்கள் உண்டு.

ஷத்ரியர்களின் கோத்ரம்: மதங்க, மௌத்கல்ய, மாண்டவ்ய, ஸாலிக,காசியப,விசுவாமித்ர, சரபங்க, ஹரித,உபதன்யு, பகீரத,ஜமதக்னி,சயவன,கண்வ என ஷத்ரியர்களாக தங்களைப் பாவிக்கும் சௌராட்டிரர்களுக்கு மட்டும் 64 கோத்ரங்களுக்கு மேல் உண்டு.
திவரிய(ரஜபுத்ர), கோயல், ராவல் டோப்பு இப்படி நீண்டு கொண்டு போகும்.
தமிழ்நாட்டில் ஜம்பு மகரிஷி கோத்ரம் என ஒரு பிரிவினர் தங்களை ஷத்ரியர்களாக அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்த ஜம்பு மகரிஷி பற்றி வேறெங்கும் குறிப்புகள் தகவல்கள் இல்லை. நால்வர்ணப்படி ஷத்ரியர்கள் இரு பிறப்பாளர்களாக இருத்தல் வேண்டும், தவிர உரிய வயதில் உபநயன சடங்கும் செய்து வேதங்களில் தேறியவர்களாகவும் இருத்தல் வேண்டும். இந்த உண்மை அறியாமல் பெயருக்கு தங்களை ஷத்ரியர்கள் எனப் பெயரிட்டுக் கொள்பவர்கள் இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்துவிட்டனர்.

வைசியர்களின் கோத்ரம்: குத்ஸாஸ, கோபஹாஸ,தல்பியாஸ,நரதாஸ,பாலவாஸ,மானவாஸ,முனி ராஜஸ,வடுகாஸ,வருணாஸ,வியாஸ,சௌம்யாஸ என நூற்றுக்கும் மேற்பட்ட கோத்ரப் 
பெயர்கள் இணையத்தில் உண்டு.தவிர இவர்களும் இறு பிறப்பாளர்கள் என்பதால் மேலுள்ள பிராமண கோத்ரப் பெயர்களில் பலவும்  இவர்களுக்குப் பொருந்தும்.

சூத்ரர்களுக்கு கோத்ரப் பெயர்கள் எதுவும் கிடையாது. இன்றைய தேதியில் புரோகிதம் செய்பவர்கள் சிராத்த மந்திரம் ஓதும்போது கோத்ரம் சொல்ல வேண்டும் என்பதற்காக பொதுவான “சிவ கோத்ரம்”அல்லது “விஷ்ணு கோத்ரம்” எனச் சொல்லி சிரார்த்த மற்றும் திதி சடங்கை முடிக்கிறார்கள். அல்லது சூத்திரர்களது குல தெய்வப் பெயரைக் கோத்ரமாக பாவித்து மந்திரம் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.இவை எதுவுமே இல்லையென்றாலும் கௌசிக கோத்ரம் என பொதுவான ஒன்றை குறிப்பிட்டு சடங்குகளை முடிக்கின்றனர்.
இதிலிருந்து தெளிய வேண்டியது சில முக்கிய விடயங்கள் உண்டு, 

சூத்ரர்களுக்கே   கோத்ரம் இல்லையெனில் அவர்ணர்களான பஞ்சமர் சண்டாளர்களுக்கு கோத்ரம் ஏது?!
சுற்றிச் சுற்றி எல்லா இந்து சனாதன நூல்களும் இறு பிறப்பாளர்களான முதல் மூன்று வர்ணத்தாரின் புகழ் மற்றும் நலன்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றன! 
இதை ஒரு சில சாஸ்திர புராண நூல்களைப் படித்தாலே உண்மை என உணரலாம்.
மொத்தத்தில் சூத்ர பஞ்சம சண்டாளர்களுக்கு எந்த ஒரு வைதீக (திருமணம், சிரார்த்தம், திதி உட்பட) சடங்கையும் செய்வதற்கு பிரமாணம் ஏதும் இல்லை. பொருளுக்காக இன்றும் இந்த வாணிபம் நன்றாகவே நடப்பது நிதர்சணம்!

தமிழ் நிலப்பகுதியில் ஷத்ரியர்களோ வைசியர்களோ இல்லை. தமிழ் மண்ணில் சிலர் தங்களை ஷத்ரியர்களாகவும் வைசியர்களாகவும் எண்ணி ஏமாந்து போகின்றனர். அவர்கள் ஷத்ரியர்கள் எனில் காயத்ரி மந்திர தீட்ஷை பெற்று உபநயன சடங்கு உரிய வயதில் செய்து பூணூல் அணிந்திருக்க வேண்டும். அவரவர் கோத்ரம் தெரிந்திருக்க வேண்டும். வேதம் பற்றிய தெளிவும் அறிவும் வேண்டும். இவற்றில் ஒன்றுமே இல்லாமல் பெயரை மட்டும் வரட்டு கௌரவத்திற்காக போட்டுக் கொள்கின்றனர்.
இந்த அடிப்படையில் தமிழ் மண்ணில் பிராமணர்களும் சூத்ரர்களும் பஞ்சம சண்டாளர்களும் அதி குடிமக்களும் உள்ளனர் என்பது தெளிவு.

இந்து வேத சனாதன நூல்கள் அனைத்திலும் இழிவாக சித்தரிக்கப் பட்டுள்ள சூத்ர, பஞ்சம சண்டாளர்களுக்கு அந்த தர்மத்தில்  அல்லது சமயத்தில் துளியும் இடமில்லை. பின் ஏன் அதைப் பிடிவாதமாகப் பற்றியிருக்க வேண்டும்?! சாதி இந்துக்களின் இருப்பிடம் தவிர இந்துக் கோயில்கள் ஏதும் பஞ்சமர்களின் சண்டாளர்களின் இருப்பிடங்களில் இல்லை என்பதே இதற்கு போதுமான சான்று!
உணர்வுள்ளவர்கள் இதை புரிந்து கொள்வார்கள்!ஈரமுள்ளவர்கள் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்வார்கள்! சமத்துவர்கள் மனித நேயமற்ற இழி செயலை எதிர்த்து புரட்சி செய்வார்கள்! 
மனித நேய பண்பாளர்கள் புதிய சிந்தனையில் மக்களை வழி நடத்துவார்கள்! 

உதாரணத்திற்காக சிரார்த்த சடங்கின் ஒரு வகையினை உங்களுக்காக இதோ:-

ஆவாஹனம் -எழூந்தருளச் செய்தல்.
பித்ருக்களே !மிகவும் நல்லவர்களான நீங்கள்,எங்களுக்கு சந்ததியையும், செல்வத்தையும்  நீண்ட ஆயுளையும் ஆசிர்வதித்து,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் .
இந்த கூர்ச்சத்தில் (தர்ப்பையைத் திரித்துச் செய்வது) இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் .

ஆசனம் - இருக்கை.
தரப்பையே !நீ  என்னால் சேகரிக்கப் பட்டாய்.
உன்னைப் பித்ருக்க்ளுக்காகப் பரப்புகிறேன்.
நீ அவர்களுக்குப் பஞ்சு போல் மித மிருதுவான ஆசனமாக இரு.
அருள் சுரக்கும்  பித்ரு,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு
எழுந்தருளட்டும்.
(இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆசனம்,
அவர்களை எல்லா வித உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன்)

தர்ப்பணம்.
சோம யாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே,நடுத்தரத்தினரும் கடைப்ப்பட்டவரும் கூட உயர்ந்த கதியை அடையட்டும்.
நம்மிடம் கோபமற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற் கர்மாவை உணர்ந்து ,நமது பிராணனை ரக்க்ஷித்து,நாம் அழைக்கும்போது வந்து, நம்மைக் காத்தருளவேண்டும்.
இன்ன கோத்திரனரும் இன்ன பெயருள்ளவரும், வாசு ரூபியான எங்கள் தந்தையை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .
அங்கீரசர்,அதர்வணர்,பிருஹுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள்.

சோம யாகம் செய்தவர்கள்.
பூஜித்தர்க்குரிய அவர்களுடய எந்த சிறந்த வழியில் சென்றதோ,அதையே நாமும் பின் பற்றி ,மங்களகரமான நல்ல மனது உடையவர்கள் ஆவோம் .

இன்ன கோத்திரத்தினரும் …தர்ப்பணம் செய்கின்றேன்.
அக்னிச்வாத்தர்கள் என்பவர்களும் ,சோம யாகம் செய்தவர்களுமான நமது பித்ருக்கள் தேவ மார்க்கமாக இந்து எழுந்தருளட்டும் .
இங்கு நாம் செய்யும் ஆராதனையில் சந்தோஷமடயட்டும் .
நம்மைக் காப்பாற்றட்டும் .
இன்ன ……… .
பிதா மகர்
ஜலங்களே ,எல்லாவற்றிலும் உள்ள சாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருகிறீர்கள் .
ஆகையால் அம்ரிதமாகவும், நெய்யாகவும், பாலாகவும்,மதுவாகவும் பானகமாகவும் பரிணமித்து (எது வேண்டுமோ,அதுவாய் நின்று நீங்கள்) எங்கள் பித்ருக்களை திருப்தி செய்வீர்களாக.

இன்ன கோத்திர '.... எனது பிதா மகரை நமஸ்கரித்து ..தர்ப்பணம் செய்கிறேன்
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்ருக்களுக்கு ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன்.
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்த மகர்களுக்கும்,ப்ரபிதா மகர்களுக்கும் ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன்.

இன்ன ……
எந்த பித்ருக்கள் இவ்வுலகில் இருக்கின்றார்களோ, எவர்கள் இங்கு இல்லையோ, இவர்களை நாங்கள் அறிவோமோ,இவர்களை அறிய
மாட்டோமோ,அவர்களை எல்லாம் அக்னி பகவானே, நீர் அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதல்லல் அறிவீர்.அவர்களுக்குரிய
இதை அவைகளிடம் சேர்த்து அருள்வீர்.
அதனால் அவர்கள் சந்தோஷமடயட்டும்.

இன்ன ……ப்ரபிதா மகர்.
காற்று இனிமையாக வீசட்டும்.
நதிகள் இனிமையைப் பெருக்கிக் கொண்டு ஓடட்டும்.
செடி கொடிகள் இனிமை அளிப்பவையாக இருக்கட்டும்.
இன்ன …….ப்ரபிதா மகரை நமஸ்கரிக்கின்றேன்.
இரவும் காலையும் இனிமையாக இருக்கட்டும்.
பூமியின் புழுதியும் இன்பந் தருவதாய் இருக்கட்டும்.
நமது தந்தை போனற ஆகாயம் இன்பமளிக்கட்டும்.

இன்ன……
வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாக இருக்கட்டும்.
சூரியன் இன்பந் தரட்டும்..
பசுக்கள் மத்ரமான பாலைத் தரட்டும்.

இன்ன …தாயார்.
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபிணியும் ஆகிய எனது தாயை நமஸ்கரித்து
அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.( மூன்று முறை )

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ருத்ர ரூபிணியும் ஆகிய எனது மாதா மகியை
நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். (மூன்று முறை)

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய ரூபிணியும் ஆகிய எனது ப்ரபிதா மகியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.(மூன்று முறை)
தாய் வழித் தாத்தா,கொள்ளுத் தாத்தா பாட்டி கொள்ளுப்பாட்டி வகை.

இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபியும் ஆகிய எங்கள் மாதா மகருக்கு தர்ப்பணம்
செய்கின்றேன்..( மூன்று தடவை )

ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகருக்கு தர்ப்பணம்.( மூன்று தடவை )
ஆதித்ய ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகருக்குத் தர்ப்பணம் ..( மூன்று தடவை )
வசு ரூபியாகிய எண்கள் மாதா மகிக்கு தர்ப்பணம் ( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகிக்குத் தர்ப்பணம்.( மூன்று தடவை ).
அன்னரசமாகவும் அம்ருதமாகவும் ,நெய்யாகவும்,பாலாகவும், தேனாகவும் பானகம் ஆகவும் பரிணமித்து, எது வேண்டுமோ அதுவாய் நின்று நீங்கள் எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக!
பித்ருக்களே,
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள். .
பூணூல் வலம்.
தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகா யோகிகளுக்கும் நமஸ்காரம்.
ஸ்வதா என்னும் பெயர் கொண்டு விளங்கும் பர தேவதைக்கு எப்போதும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
( மூன்று முறை )
அபிவாதனம்,நமஸ்காரம் .
பூணல் இடம்.
பித்ருக்களே !
மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்திது அளித்துக்கொண்டு கம்பிரமாக சிறந்த ஆகாய மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள்.
இந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க பித்ருக்களையும் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன்.
பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு உபவீதியாக,ஆசமனம் செய்து, பவித்ரத்தை போட்டுக் கொண்டு பூணூலை இடமாக்கவும்.
எவர்களுக்கு தாயோ தந்தையோ ச்நேகிதரோ தாயாதிகளோ பந்துக்களோ இல்லையோ அவர்களெல்லாம் நான் என் தரப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.
கூர்ச்சததைப் பிரித்து நுனி வழியாக தர்ப்பணம் செய்யவும் .
பவித்ரம் பிரிக்கவும்.
பூணூல் வலம்.
ஆசமனம்.
பின்பு பிரம்ம யக்யம் செய்க.

பவித்ரம்,ஆசமனம்,யக்யம்: தர்மசாஸ்திரத்தை செயல் படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். 'பவித்ரம்' என்றால் தூய்மை! இயல்பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம் (பவித்ரம் வை தர்பா:).ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்பபாணி யாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்மசாஸ்திரம் (விப்யதெ நஸபாபேன பத்ம பத்ர மிவாம்பஸா).
ஆசமனம்: கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை வலது உள்ளங்கையினால் பருகுதல்.

வைதிகச் சடங்குகளை வைதிகர்கள் அல்லாதவர்கள் ஒதுக்கினாலே வைதிக சனாதனத்திலிருந்து விடுதலை நிச்சயம். 

ஆதார நூல்கள் மற்றும் இணைய முகவரி: கோத்திரங்களும் பிரவரங்களும்
- ஸனாதன தர்ம ப்ரசாரப் பதிப்பு 1979
சநாதந தர்மம், மொழி பெயர்ப்பு : ப.நாராயண ஐயர், ஆநந்தா பதிப்பு 1906
தர்மஸூத்ரம், வேத தர்மசாஸ்திர பரிபாலன ஸபை, கும்பகோணம் வெளியீடு, 1951
தர்மசாஸ்த்ர ஸங்க்ரஹம், ஶ்ரீ S.V.ராதாக்ருஷ்ண சாஸ்த்ரிகள், மூன்றாம் பதிப்பு 2002
Arya Vysya Gothras : www.vysyamala.com
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 5.12.20

சூத்திரனுக்கு மொட்டை

#மொட்டை



உபவீதம்(பூணூல்),உத்தரீயம்(மேலாடை) ஸ்திரீ சூத்திரர்கள் நீக்குக.வேத மந்திரம், சிகை(தலை முடி),யஞ்ஞோபவீதம்(பூணூல்), சூத்திரன் தரித்தால் ராஜாவிற்கும் ராஜ்யத்திற்கும் நாசமுண்டாகும். 

-அகோரசிவாசாரியார் இயற்றிய சைவஷோடசப் பிரகாசிகை எனும் நூலில்!

சூத்திரனின் தலையில் முடி இருத்தல் கூடாது. ஸ்திரீகள் மேலாடை அணிதல் கூடாது.இப்படிப்பட்ட சாதி மத ரீதியான ஒடுக்கு முறைகள்தான் மன்னர் காலங்களில் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை சைவஷோடசப் பிரகாசிகை போன்ற நூல்கள் அறிவிக்கின்றன.

வைதிக சனாதன நூல்கள் பெண்களையும் சூத்திரனையும் இழிவுபடுத்துகின்றன என்பதற்கு மேலுள்ள நூலும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

குறிப்பு: மேலுள்ள சைவஷோடசப் பிரகாசிகை, ‘காரண ஆகமம்’ எனும் சைவ ஆகம நூலை மேற்கோள்காட்டிக் கூறுகிறது.

-தினகரன் செல்லையா முகநூல் பக்கம்,19.12.20

வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம்.

#பிராம்மணீயம்

“வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.

பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”

“ரொம்பவும் பகுத்தறிவு பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு, நம்பிக்கையின் மீதும் அநுபவத்தினாலும் ஏற்பட வேண்டிய சமய விஷயங்களைப் பொய், புரளி என்று நினைக்க வைத்தது. முஸ்லீம் ஆட்சியில்கூட தன் ஸ்வதர்மத்தை விடாதவன், இப்போது அதைவிட்டு சௌக்கியங்களைத்தேடி வந்து விட்டான். இங்கிலீஷ்காரனைவிட ‘டிப்டாப்பாக’ டிரஸ் செய்துகொண்டு, சிகரெட் குடிக்கவும், டான்ஸ் ஆடவும் சாமர்த்தியம் பெற்றுவிட்டான். தங்கள் வித்தைகளில் இப்படிக் கைதேர்ந்து விட்டவனுக்கு அவர்களும் நிறைய உத்தியோகம் கொடுத்தனர்.”

“முன்னே நான் சொன்னபடி, பூர்வீகர்கள் பெடல் செய்து தந்திருந்த புத்தி பலம் பிராமணனுக்கு அதிகமாக இருந்து படிப்பு, உத்தியோகம் இவற்றிலே இவன் முதன்மைக்கு வந்ததால்—சமூகத்தில் ரொம்பக் குறைச்சல் சதவீதமே இவனுடைய ஜனத்தொகையாக இருந்தும்கூட சர்க்கார் பதவி, காலேஜ், வைத்தியம், சட்டம் (law) எல்லாவற்றிலும் இவனே ரொம்ப ஸ்தானங்களைக் கைப்பற்றியிருந்ததால், மற்றவர்களுக்கு இவனிடம் துவேஷம் வரத்தானே செய்யும்?”

“துவேஷம் இரட்டிப்பாகிற மாதிரி பிராமணனே இன்னொன்றும் செய்தான். ஒரு பக்கத்தில் ஜாதி தர்மத்தை விட்டுவிட்டு, இவனும் வெள்ளைக்காரனோடு சேர்ந்து ‘பழைய ஏற்பாடு காட்டுமிராண்டித்தனமானது; ஒருத்தரை இன்னொருத்தர் சுரண்டுவது (எக்ஸ்பிளாயிட் பண்ணுவது) கூடாது’ என்றெல்லாம் சமத்துவம் பேசினாலும், இன்னொரு பக்கம் இவன் மற்றவர்களோடு ஒட்டிப்போகாமல், தான் ஏதோ உசத்தி என்று பெருமை கொண்டாடிக் கொண்டான். முன்பும் இவன் மற்றவர்களோடு ஸ்தூலமாக (Physical) ஒட்டிப் பழகத்தான் இல்லை.”

“ஆகாரம் வேறாக இருப்பதால் பிராமணனுக்கும் க்ஷத்திரியனுக்கும் துவேஷம் என்று அர்த்தமாகுமா? அதற்காக துவேஷமில்லையே என்று இவன் ஸ்தூலமாக அவனோடு ஒட்டி வாழ்ந்தால், அவனுடனேயே உட்கார்ந்துகொண்டு இவனும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதிகளை நாமும்தான் ருசித்துப் பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டுபோய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும். அந்தந்த சமுதாயத்துக்கு அந்தந்த குல தர்மம், பழக்க வழக்கம், ஆகார முறைகள்தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, அந்த தனித்தனி ஏற்பாடுகளையெல்லாம் பல பட்டறையாகக் குழப்ப ஆரம்பித்தால், அத்தனை காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக்காரியமே சீர்குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள். கிராம வாசத்தில் இது முடிந்தது. புதிதாக உண்டான பட்டணவாசத்தில் இது சாத்தியமாக இருக்கவில்லை. எல்லாரும் ஒரே மாதிரி ஷிஃப்டில் வேலைக்குப் போய், ஒரே மாதிரி காண்டீனில் உட்கார்ந்து, ஒரே ஆகாரத்தைச் சாப்பிட வேண்டும் என்றாகிவிட்டது. இப்படிப் பல தினுசுகளில் கலந்து கலந்துதான் இருக்க வேண்டும் என்றாகி விட்டது. உபவாஸாதி நியமங்களைக் கண்டிப்பாக அநுஷ்டிக்க வேண்டிய பிராமணன் எல்லாவற்றிலும் மற்றவர்கள் போலவே ஆகிவிட்டான்.”

“இப்போது ‘அவர்களோடு நானும் ஒன்று, எல்லோரும் சமம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்களுடைய வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக எல்லா ஸ்தானங்களுக்கும் போட்டியாக வந்துவிட்டான். இது போதாது என்று நியமங்களில் அவர்களைவிடத் துளிக்கூட கட்டுப்பாடு இல்லாமல் வாழ்ந்தாலும், உள்ளூற அவர்களை விடத் தான் உயர்ந்தவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மற்றவர்களின் துவேஷம் ஜாஸ்தியாகத்தானே செய்யும்?”

“ ‘தானும் கெட்டு, சந்திர புஷ்கரணியையும் கெடுத்தானாம்’ என்கிற கதையாகப் பிராமணன் தானும் தர்மத்தை விட்டு, மற்றவர்களுக்கும் அவரவர் தர்மங்களைவிடுகிற மாதிரி செய்துவிட்டான். தன் தர்மத்தை விட்டபின் இவனுக்கு உயர்வு எதுவுமே இல்லை. தன் தர்மத்தைச் செய்தபோதும்கூட, இவனாக உயர்வு பாராட்ட நியாயமில்லை. ‘ஒவ்வொருவரும் ஒன்றைச் செய்கிறார்கள்; நான் இதைச் செய்கிறேன்’ என்றுதான் அடக்கமாக இருக்கவேண்டும். ஆனாலும் தன்னலமில்லாமல், கடும் விரத நியதிகளோடு இவன் தூய்மையாக வாழ்ந்ததைப் பார்த்து மற்றவர்களே இவனுக்கு ஒரு ஏற்றம் கொடுத்து கௌரவித்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எல்லாரும் தன்னைத் தூற்றும்படி, கரித்துக் கொட்டும்படி இவனே ஆக்கிக் கொண்டு விட்டான்.”

“ஹிந்து சமூகம் பாழானதற்குப் பிராமணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்.”

“இங்கிலீஷ்காரன் ஆட்சி வந்த பிறகும் அவன் காட்டிய சுகபோக்ய ஜீவனத்தில் மயங்காமல், சாஸ்திரம் விதிக்கிற அளவுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதோடு மட்டும் பிராமணன் வாழ முற்பட்டிருந்தால், அவனுக்கு நிச்சயம் மற்ற சமூகத்தார் அதற்கான வசதிகளைச் செய்து தந்திருப்பார்கள். அவர்கள் இவனைக் கைவிடாதபோதே, இவனாகத்தான் அக்ரஹாரத்தை, வேதபாடசாலைகளை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான்.”

“ ‘சாப்பாட்டுக்கே இல்லையே என்ற நிர்பந்தத்தின் மேல்தான் இவன் தர்மத்தை விட்டான்’ என்ற சமாதானத்தை ஒப்புக் கொள்வதற்கில்லை. அவசியத்துக்கு அதிகமான வஸ்துக்களில் இவனுக்குத் துராசை வந்துவிட்டது என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.”

“கிராமத்தில் சாப்பிட வசதியே இல்லை என்றால், மெட்ராஸ் மாதிரி டவுன்களுக்கு வந்து, ஏதோ வயிற்றுக் கஞ்சிக்குக் கிடைத்தவுடன் இவன் திருப்திப்பட்டிருக்க வேண்டியதுதானே? அப்படி திருப்தி அடைந்திருந்தால் மேலே சொன்னது சரி. நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன? மெட்ராஸில் ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால்கூட, டில்லியில் இரண்டாயிரம் தருகிறான் என்றால் இவன் அங்கே ஓடுகிறான்! இங்கே ஏதோ கொஞ்சம் அனுஷ்டிக்க முடிந்த தர்மங்களையும் அங்கே போய் விட்டுவிடுகிறானே! அதற்கப்புறம் நியூயார்க்கில் 4000 டாலர் சம்பளம் கிடைக்கிறது என்றால், கண்டத்தைவிட்டு கண்டம் போய் கண்டபடி வாழ ஆரம்பித்துவிடுகிறானே—கொஞ்சம் மிஞ்சியிருந்த ஆசாரங்களைக்கூட உதறி தள்ளிவிடுகிறானே! ‘மிலிடிரியில் அதிகப் பணம் வருகிறதா?அதிலும் சேருகிறேன். அங்கே மதுபானம், மாம்ஸ போஜனம் எல்லாம் பழகவேண்டியிருந்தாலும் பரவாயில்லை’ என்று பணத்துக்காக எதையும் செய்வதைத்தானே பார்க்கிறோம். ஆகையால் பிராமணன் ஸ்வதர்மத்தை விட்டதற்குச் சொல்கிற சமாதானம் கொஞ்சங்கூட எடுபடவில்லை.”

“முஸ்லீம் ஆட்சியில் பிராமணர்கள் மாறாததற்கும் வெள்ளைக்காரன் ஆட்சியில் மாறி விட்டதற்கும் என்ன காரணம் சொல்கிறார்கள்? வெள்ளைக்காரனோடுதான் புது ஸயன்ஸ், யந்திர சாதனங்கள் வந்தன. மோட்டார்கார், எலெக்ரிஸிடி மாதிரி வெகு சுருக்கக் காரியத்தைச் செய்து கொள்வதற்கான சாதனங்கள் வந்தன. அதுவரை நினைத்தும் பார்த்திராத இத்தனை சௌகரியங்கள், சுக சாதனங்கள் வெள்ளைக்காரனோடு வந்ததால்தான் அவற்றின் கவர்ச்சியால் இவன் இழுக்கப்பட்டு அவர்களுக்குரிய வழிகளிலேயே மோகித்து விட்டான் என்கிறார்கள். இது ஒரு காரணமாக இருக்கலாமே ஒழிய சமாதானமாகவோ நியாயமாகவோ ஆகாது.”

-மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் எழுதிய “தெய்வத்தின் குரல்” (முதல் பகுதி),பொறுப்பாளி யார்? பரிகாரம் என்ன? எனும் அத்யாயத்தில் ஒரு சில பகுதிகள்.

இதே போன்ற சில கருத்துக்களை என்னைப் போன்றவர்கள் பிராமணீயம் பற்றி எழுதினால் பிராம்மணர்களின் மீது ஏன் இத்தனை துவேஷம் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.ஹிந்து சமூகம் பாழனதற்கு பிராம்மணர்களே காரணம் என்று எழுதிய பெரியவாள் சாதி வாரியாக தெருக்கள் உள்ளதை நியாயப் படுத்தத் தவறவில்லை.

-ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 24.12.20

புதன், 23 டிசம்பர், 2020

திருமண வைபங்களில் ஆபாச வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன.


வைதீக திருமண வைபங்களில் வேத மந்திரங்கள் ஓதப்படுகின்றன. இதில் மிக மிக கொச்சையான ஆபாசமான மந்திரங்களும் அந்தச் சடங்குகளின் போது ஓதப் படுவது வைதீகத்தை பின்பற்றும் நபர்களுக்கே தெரிவதில்லை.

கன்னிகை ஸ்நானம்,நுகத்தடி வைத்தல்,கூரை உடுத்துதல்,காப்பு,தாரை வார்த்தல்,மாங்கல்ய தாரணம்,பாணிக்ரஹணம்,ஸப்தபதி,ப்ரதாந ஹோமம்,அம்மி மிதித்தல்,லாஜ ஹோமம்,கும்பம்,அருந்ததி பார்த்தல்,கிருஹப் பிரவேசம்(மறுவீடு) இப்படி பல சடங்குகளைக் கொண்டதுதான் வைதீக முறையில் புரோகிதர் அல்லது ஆத்து வாத்தியாரைக் கொண்டு நடைபெறும் திருமணங்கள்.

இப்படியான திருமண சடங்குகளின் போது ரிக் வேதம் பத்தாம் மண்டலம் 85 ஆவது அநுவாகத்தில் உள்ள மந்திரங்கள் ஒதப்படுகின்றன.இந்த மந்திரங்களுக்கான விளக்கங்களை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் இந்து மதம் எங்கே போகிறது எனும் நூலில் “ஆபாச திருமண மந்திரங்கள்” எனும் தலைப்பில் கட்டுரைகளாக விரிவாக எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் உள்ள சில பகுதிகளை கீழே தருகிறேன்;

`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.(பெண்கள் சரியாக மதிக்காத போது இப்படிப்பட்ட தேவதைகள் வீட்டை விட்டு வெளியேறிவிடுவர் எனும் மநு தர்ம சாஸ்திர நூலின் ஸ்லோகம் ஒன்றைப் பிடித்துக் கொண்டு மநுவாதிகள் தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் விவாதிக்கின்றனர், வைதீக நூல்களைப் படிப்போருக்கு விளங்கும் தேவர் தேவதைகளின் லட்சணம் என்னவென்று)

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் உடலுறவுகொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம்.

நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்’ எல்லாம்  ‘அந்தரங்கன் அறிவான்’ என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.

விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம். வையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்.,(பக்கங்கள்:முறையே: 22-59)

இந்த வைதீக சடங்குகளை வைதீகர்கள் அல்லாத அடிமைகளும்,பெருமைக்காக தங்களது இல்லத் திருமணங்களிலும் அதே சடங்குகளைப் பின்பற்றி வருவது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

வைதீக சனாதனம் என்பதே பொய்யும் பித்தலாட்டமும் ஏமாற்றும் வன்மமும் ஆபாசமும் நிறைந்தது என்பதை இனிமேலாவது உணருங்கள் நண்பர்களே. வைதீக சனாதனம் என்பதில் துளியும் சமத்துவமோ மனித நேயமோ இல்லை என்பது உணருங்கள்.வைதீ அன்பர்களுக்கே இதை உணராமல் இருக்கிறார்கள் என்பதே வேதனையிலும் வேதனை.அறிவியல் வளர்ந்துள்ள இந்த காலத்தில்,வைதீக சனாதன தர்மம் என்பது அர்த்தமற்ற மனித நேயமற்ற, மனத குலத்திற்கு எதிராக சடங்கு குப்பைகளால் கட்டப்பட்டவை என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். இந்த விழிப்புணர்வு ஒன்றே நமக்கு சமூக பண்பாட்டு கலாச்சார அரசியல் விடுதலைக்கு வித்திடும்.

ஆதாரங்களால்,தரவுகளால் நம்மை ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கவாதிகள் திருந்தியதாய் வரலாறே இல்லை.வைதீகத்திலிருந்து நம்மை நாமே திருத்திக் கொள்வது தான் ஒரே வழி. வைதீக சடங்கு சம்பிரதாயங்களிலிருந்து முதலில் நாம் வெளிவருவோம், நம் குடும்பத்தினரையும் மீட்டெடுப்போம், 
இந்தக் ஆபாசமான சடங்குகள்தான் எங்களது பண்பாடு என மற்றவர்களிடம் சொல்வதை முதலில் நிறுத்துவோம்.அடுத்த நடவடிக்கையாக வைதீகர்களைக் கொண்டு நடத்தப்படும் சடங்குகளை நமது குடும்ப அளவில் தடை செய்வோம். 

குறிப்பு: விவாஹ மந்த்ரார்த்த போதினி நூல் பற்றி அறிந்த நாளிலிருந்து அதை online மூலம் order பண்ண முயற்சித்தேன். Out of stock என்பதால் order பண்ண முடியவில்லை. 
இந்த நூலினை வாசிக்காது அக்னிஹோத்ரம் அவர்கள் எழுதிய திருமண சடங்கு பற்றி பதிவு எழுத வேண்டாம் என்றிருந்தேன்.
அந்தக் குறையினை நண்பர் இலங்கநாதன் குகநாதன் அவர்கள் இன்று தீர்த்து வைத்து விட்டார்.அவரது பக்கத்தில் இந்த நூலினை பதிவிறக்கம் செய்வதற்கான google drive link யை பதிவு செய்திருந்தார்.அந்த link னை தந்துள்ளேன், பதிவிறக்கம் செய்ய விரும்புகிறவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிண்ணூட்டத்தில் சர்சைக்குரிய மந்திர பக்கம் ஒன்றை இணைத்துள்ளேன்.

https://drive.google.com/file/d/1zA3m7-r3YzI0VvJA3QYInqpbcr5QPkde/view
- ஆறாம் அறிவு, தினகரன் செல்லையா முகநூல் பதிவு,1.11.20

வைதிக_சடங்குகள்_ஏமாற்று_வேலை

#வைதிக_சடங்குகள்_ஏமாற்று_வேலை

திருமணத்தின் போது புரோகிதர்களால் ஓதப்படும் மந்திரங்களில் பல ரிக் வேத த்திலிருப்பவை. குறிப்பாக ரிக் வேதம் 10 ஆவது மண்டலம் 85 ஆவது அநுவாகத்தில் உள்ள மந்திரங்களே அவை. 
ச்ரார்த்த மந்திரங்களில்,
“யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம்” என்றும்
“ருக் வேதம் ஆஷ்வலாயன சூத்திரம்” எனவும் 96 வகைகளுக்கு மேல் உள்ளன. 

வேத மந்திரங்களை ஓதுவதும் பாராயணம் செய்வதும், அத்யயனம் செய்வதும் பிரம்ம வித்தை அல்லது பிரம்ம வித்யா எனப்படுகிறது. இந்த பிரம்ம வித்தையை கற்றுக் கொள்ளும் அதிகாரம் முதல் மூன்று வர்ணத்தவருக்கு மட்டுமே உரியது என ஸ்மிருதிகள் வழியாக கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.வேத மந்திரங்களின் மேல் உள்ள அதிகாரத்தை நிலைநாட்டும் முகமாகவே முதல் மூன்று வர்ணத்தவர்கள் பூணூலை அணியும் காயத்ரி தீட்சை சடங்கு நிகழ்கிறது. நான்காம் வர்ணத்தவரான 
சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும், அவர்ணர்களுக்கும் வேதங்களின் மேல் ஒரு அதிகாரமும் இல்லை.அதனால்தான், வேத மந்திரங்களை காதாலும் அவர்கள் கேட்கக் கூடாது என பிரம்ம சூத்திரம் மற்றும் ஸ்மிருதிகளில் எழுதப்பட்டுள்ளது. 

வேத மந்திரங்களுக்கு அதிகாரம் இல்லையே தவிர அவர்கள் புராணத்தில்,உபநிடத,தர்ம சாஸ்திரங்களில் உள்ள மந்திரங்களை வாசிப்பதோ பாராயணம் செய்வதோ தடை ஏதும் இல்லை என்கிறார்கள்.காரணம் இந்த நூல்களில் சூத்திரனும் பெண்களும் முதல் மூன்று வர்ணத்தவருக்கு அடிமைச் சேவகர்களாக எப்படி இருக்க வேண்டும் என்பதும், தவறினால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பது விளாவாரியாக எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் புராண மந்திரங்களை படியுங்கள் என்கிறார்கள். 

சாஹூ மகராஜ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் கூறுவது பொருத்தம் எனக் கருதுகிறேன். 
ஆற்றில் சாஹூ மகராஜ் குளிக்கையில் புரோகிதர் ஒருவர் மந்திரங்களை ஓதுவது வழக்கம். ஒரு நாள் அவர் ஆற்றில் நீராடுகையில் அவரைக் காண வந்தார் அமைச்சர் ஒருவர். அவர் சாஹூ மகராஜிடம் கூறுகிறார், புரோகிதர் ஓதுவது எதுவுமே வேத மந்திரங்கள் இல்லை, அவை அனைத்தும் புராணங்களில் உள்ள மந்திரங்கள் என்று.இதை புரோகிதரிடம் கேட்க, அவர் சொல்கிறார் வேத மந்திரங்களை இன்னொரு வேதியருக்கோ இரு பிறப்பாளருக்கோ மட்டுமே ஓத முடியும். மற்றவர்களுக்கு சாதாரண புராண மந்திரங்களை மட்டுமே ஓத முடியும் என்கிறார். இதை அறிந்த சாஹூ மகராஜ் முதன் முதலில் பிராம்மணர்கள் அல்லாதோருக்கு கல்வி வேலை வாய்ப்பில் முதலிடம் அளித்தார்.அவர்களுக்கு இட ஒதுக்கீட்டையும் அவர்தான் முதன் முதலில் அறிவித்தார்.

வேத மந்திரங்களை ஏன் சூத்திரனுக்கு உபதேசிக்கக் கூடாது என்பதை விளக்கும் விதமாக ஒரு கதையினை மகாபாரதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இது,
அநுசாஸன பர்வம் 31 ஆவது அத்தியாயத்தில் “தாழ்ந்தவருக்கு உபதேசிக்கலாகாதென்பதற்கு உதாரணமாக ஒரு ரிஷி சூத்திரன் இவர்களின் கதை”யில் சொல்லப்படுகிறது.

இந்தக் கதையில் பிராம்மண ரிஷிகளுக்கு பணிவிடை செய்ய வந்த சூத்திரன் சுசுரூஷை யில்(அடிமை வேலை) மனமில்லாது ரிஷிகளைப் போல தவம் செய்ய விரும்புகிறான். அவனுக்கு பிராம்மண ரிஷி ஒருவர் உதவி செய்து பித்ரு ச்ரார்த்தம் போன்ற கர்ம காரியங்களையும் செய்து பிரம்ம வித்யாவை கற்பிக்கிறார். அடுத்த பிறவியில் சூத்திரன் ஒரு மன்னனாகவும், ரிஷி ஒரு புரோகிதராகவும் பிறக்கிறார். ஹோம காரியங்களை அந்தப் புரோகிதர் நடத்தும் போதெல்லாம் அந்த மன்னன் சிரிக்கிறான், அதனால் எரிச்சலான புரோகிதர் சிரிப்பிற்கான காரணத்தைக் கேட்கிறார். அந்த மன்னன், முன் ஜென்மத்தில் சூத்திரனாயிருந்து தவமிருந்ததையும் ச்ரார்த்த காரியங்களில் தர்ப்பங்களிலும் ஹவ்யகவ்யங்களில் ரிஷியாய் இருந்து  உதவி செய்ததைக் கூறுகிறான்.தனக்கு உபதேசித்ததால் ரிஷியாய் இருந்தவர் புரோகிதராய் தாழ்ந்த பிறவி எடுக்க காரணமாயிற்று என்றான்.அதை எண்ணி சிரித்தேன் என்கிறான்.

பிராம்மணன், இருபிறப்பாளர்களைத் தவிர தாழ்ந்த வர்ணத்தவர்களுக்கு உபதேசம் செய்வதினால் அந்த பிராம்மணன் தாழ்ந்த வர்ணத்தவர்களின் பாவத்தை அடைவான் என்பதை விளக்குகிறது இந்தக் கதை. 

மன்னர்கள் ராஜாக்கள் ஜமீந்தார்கள் காலங்களில் கடவுள் பெயரில் பயமுறுத்தி மந்திரங்களைச் சொல்லி,யாகம் வேள்விகள் நடத்தி பெருமளவில் தானங்களைப் பெற்று உடல் உழைப்பே இல்லாமற் வசதியாய் வாழ்ந்தவர்கள் வேதியர்கள். சமீபத்திய நூற்றாண்டுகளில் நடந்த ஐனநாயகம் மற்றும்  அரசு மாற்றங்களால் மன்னர்களைப் போல இவர்களை பொன், நிலம், பொருள் கொடுத்து ஆதரிப்பார் இல்லை. இதனால்,
அரசனுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் செய்த சடங்குகளை,சூத்திரனுக்கும் வேத மந்திரங்களை ஓதி சடங்குகளை நடத்தும் நிலைக்கு வேதிய புரோகிதர்கள் ஆளாகினர். 
அதாவது சூத்திரர்களை அளிக்கும் காணிக்கை,தானத்தை,பரிசை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
இதற்கு பரிகாரம் செய்யும் விதமாகவே சூத்திரர்களுக்கும்,அவர்ணர்களுக்கும் பூணூல், பவித்திரம் போன்றவற்றை விவாஹம், திதி ச்ரார்த்த சடங்குகள் முடியும் வரை தற்காலிகமாக அணிவிக்கிறார்கள்.அதாவது எதிரில் உள்ளவரை பிராம்மணராக பாவித்து மந்திரங்களை ஓதத் தொடங்குகிறார் புரோகிதர்,அதனால் ஏற்படும் பாவம் அவரை சேராது என்றும் நம்புகிறார்.

இதை அறியாத சூத்திர மற்றும் அவர்ணர்கள் பூணூல் அணிவதை மரியாதையாகவும் கௌரவமாகவும் நினைந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் அவலத்தை காண முடிகிறது.வேதியர்களைக் கொண்டு நடத்தப்படும் சடங்குகளால் புரோகிதர்களைத் தவிர வேறு யாருக்கும் ஒரு பயனும் இல்லை என்பதே உண்மை. 

புரோகிதத் தொழில் ஏமாற்று வேலை என்பதை ஒவ்வொரு வேதியரும் நன்கு அறிவார். நல்ல வேளை வேதியர்களில் படித்தவர்கள் மாற்று உத்யோகம், தொழில்களுக்குப் போனதால் புரோகிதத் தொழிலை நம்பி உள்ளவர்கள் குறைந்து வருகிறார்கள்.படித்து வேலைக்குச் சென்ற வேதியர்களில் சம்ஸ்கார கர்மாநுஷ்டானங்களை செய்கிறவர்களும் குறைந்துள்ளார்கள்.இதைச் செய்து வைக்கும் கணபாடிகள்,வாத்தியார்களும் குறைவே. இது ஒரு நல்ல அறிகுறி! ஆனால் வைதிக சடங்குகளில் மோகம் கொண்டுள்ள சூத்திர அடிமைகளின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது வருந்தத் தக்கது.

கோயில்களில் பூசை செய்யும் பூசாரிகள் தொடாமல் கொடுக்கும் விபூதி கும்குமம் இவற்றைப் பெற்றுக் கொண்டு தங்களது அடிமை சாசனத்தை தினமும் புதிப்பித்து வருகிறார்கள் சூத்திரர்,பெண்கள் மற்றும் அவர்ணர்கள்.

விவாஹங்களில் ஓதப்படும் அபத்தமான ஆபாசமான மந்திரங்கள் பற்றி அறிய விரும்புகிறவர்கள் எனது முந்தைய பதிவினை வாசிக்கவும். அதன் link இதோ:

https://www.facebook.com/100004717540308/posts/1745785462255355/?d=n
- தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 23.12.20

திங்கள், 21 டிசம்பர், 2020

கோமாதா' புத்திரர்களுக்கு...


பசு மாமிசத்தை உண்பதால் நமது முன்னோர்களின்

ஆன்மா ஓர் ஆண்டிற்குத்திருப்தி அடைகிறது. பசு

வேதங்களில் புனிதமானது.அதனால்தான் யஜூர் வேதத்

தில் மற்ற இறைச்சிகளை சாப்பிடுவதைவிட பசுவின்

இறைச்சி சாப்பிடுவது தேவர்களின் அருள் கிடைக்க எளி

தான வழி'' என்று கூறப்பட்டுள்ளது. (அர்த்தசாஸ்திரத்தை (அர்த்தசாஸ்திரத்தை மராட்டியில் மொழி பெயர்த்த மராட்டியில் மொழி பெயர்த்த தர்மசாத்திர விகார்'' என்ற தர்மசாத்திர விகார்'' என்ற

நூல், பக்கம் 180). நூல், பக்கம் 180).


கடினமான எலும்பு மற்றும் தட்டையான, வெட்ட முடியாத

குளம்புகளைக் கொண்ட ஒட்டகத்தைத் தவிர பசு, பசுங்கன்று

போன்ற மிருதுவான இறைச்சி சாப்பிடுவது தகுந்ததாகும்.

எந்தப் பசு தேவர்களுக்காகப் பலியிடப்படுகிறதோ,

அந்தப் பசுவை சோமன்விரும்புவான். ஓ! இந்திரனே,

உனக்குப் பலியிடப்பட்ட பசுவினால் நீ மகிழ்ந்திருப்பாய்.

ஆகவே, எங்களுக்கு அளவில்லாத செல்வங்களைத்

தருக!

(ரிக் வேதம், 10-16-92). (ரிக் வேதம், 10-16-92).


கன்னிகாதானம் தரும் பார்ப்பனர் திடமான பசுவைப்

பலியிட வேண்டும். விருந்தில் அனைவரும் மகிழ்ந்து ஆசீர்

வதிப்பார்கள்.(ரிக் வேதம் 10-85-13) (ரிக் வேதம் 10-85-13)


ரிக் வேதத்தில் பசுவை வெட்ட வேண்டும். யார் யாருக்

குப் பசுவின் எந்த பாகத்தின் கறியைத் தரவேண்டும் என்று

குறிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே வசிஷ்டர், துர்வாசர் உள்ளிட்ட

பல முனிவர்களுக்கு இளம்பசுங்கன்றுகளின் மென்மையான கறியின் பாகம் நன்கு சுடப்பட்டு உண்ணக் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு

வேதத்திலும், ஸ்மிருதியிலும் பசு மாமிசம் சாப்பிடுவது பாவம்

என்று எழுதப்படவில்லை.

நான் பசு மாமிசம் சாப்பிடுவேன். அது மிகவும் சுவை

யானது. அதுவே ரிஷிகளுக்குப்படைக்கப்பட வேண்டியது.''

(யக்ஞவல்கியர் சத்யத் (யக்ஞவல்கியர் சத்யத்

பிரமாணம் 3-12-21) பிரமாணம் 3-12-21)


இந்தப் பிரமாணம் என்பது வேதக் கிரியைகள், சுக்ல, யஜூர் வேதத்தோடு தொடர்புடைய வரலாறுகள், தொன்மங்கள் ஆகியவற்றை விளக்கும் ஓர் உரைநடை நூலாகும்.


இந்த நூலில்தான் சோம மற்றும் சுரா பானம் அருந்துபவர்கள்

சுரர்' என்றும், அதை அருந்தாமல் முகம் சுழிப்பவர்கள்

அ''சுரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்து மதத்தின் வேதங்களும், சாஸ்திரங்களும் இவ்வாறு கூறியிருக்க, கோமாதா என்று கூறி பசுவதைத் தடைச்

சட்டம் கொண்டு வருகிறது மத்திய பி.ஜே.பி. அரசும், பி.ஜே.பி. ஆளும் மாநில

அரசுகளும் என்றால், இவர்களை எந்தப் பட்டியலில் கொண்டு போய் வைப்பது?

(இப்பொழுதுகூட பசு உள்ளிட்ட மாட்டுக்கறி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருப்பவர்கள் இந்த சங்பரிவார்களே!)

ஹிந்துத்துவா பேசுவோர் தான் சிந்திக்கவேண்டும்.

நேர்மை என்பது சுட்டுப்போட்டாலும் இவர்களுக்கு

வராது என்பது மட்டும் நூறுவிழுக்காடு உண்மை!

- மயிலாடன்

செவ்வாய், 24 நவம்பர், 2020

சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனப்பான்மை

 


மகா மகா பெரியவர்கள் என்று பீற்றுகிறார்களே - அந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மனப்பான்மை - ஜாதியைப் பொறுத்து என்னவாம்?

"இவன் (பிராமணன்) ஸ்தூலமாக அவனோடு (பிராமணரல்லாதான்) ரொம்பவும் ஒட்டி வாழ்ந்தால் அவனுடனேயே உட்கார்ந்து கொண்டு இன்னும் இவனும் சாப்பிட்டால் அவனுடைய ஆகாராதிகளை நாம்தான் ருசி பார்ப்போமே என்ற சபலம் உண்டாகத் தான் செய்யும். அந்தச் சபலம் இவனை இழுத்துக் கொண்டு போய்க் கடைசியில் இவன் தர்மத்துக்கே ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகி விடும். அந்தந்தச் சமுதாயத்துக்கு அந்தந்தகுல தர்மம், பழக்க வழக்கம் ஆகார முறைகள் தான் உகந்தவை. ஆனால் சமத்துவம் என்ற எண்ணத்தில் ஸ்தூலமாக (Physical) எல்லோரும் பழகி, இந்தத் தனித்தனி ஏற்பாடுகளை யெல்லாம் பலப்பட்டறையாக குழப்ப ஆரம்பித்தால், அத்தனைக் காரியமும் கெட்டு, மொத்தத்தில் பொதுக் காரியமே சீர் குலைகிறது. இதனால்தான் அக்ரஹாரம், வேளாளர் தெரு, சேரி என்று கிராமங்களில் பிரித்து வைத்தார்கள்" ('தெய்வத்தின் குரல்' பாகம் 1 - பக்கம் (192).

பிராம்மணர்கள் பூமி தேவர்களாம்!

 

ஆறாம் அறிவு, முகநூல் பதிவு
மஹேஸ்வரர் உமா தேவியிடம்,
“ப்ராம்மணர்கள் உலகங்களைக் காப்பதற்காக படைக்கப் பட்டவர்.அதனால், அவர்கள் பூமி தேவர்களென்று சொல்லப்பட்டனர்.தம் நன்மையைக் கருதுகிற யாரும் ப்ராம்மணர்களை அவமதிக்கலாகாது.தேவியே! தானத்தையும் தவத்தையும் எப்போதும் நடத்துகிறவர்களாகிய பிராம்மணர்கள் இராமற்போவாராயின் இரண்டு லோகங்களும் நிலையில்லாமற் போகுமென்பதுதான் சுருக்கம்.உலகங்களுள் பிராம்மண ஜன்மம் மட்டும் பெறுதற்கரியதென்று நினைக்கப் படுகிறது.பிராம்மணன், கல்வியில்லாதவனாயிருந்தாலும் பொருளில்லாதவனாயிருந்தாலும் எப்போதும் பூஜிப்பதற்குரியவன்”
-மகாபாரதம்,அநுசாஸன பர்வம்,தானதர்ம பர்வம், 208 ஆவது அத்யாயம்
குறிப்பு: மகாபாரத நூலில் உள்ளது உள்ளபடி!

வேதங்களும், இதிகாசங்களும், புராணங்களும், உபநிடதங்களும் வைதீகர்களான பிராமணர்,சத்ரியர், வைசியர்களுக்கானவை மட்டுமே!

 வேதங்களும்,இதிகாசங்களும், புராணங்களும், உபநிடதங்களும், ஸ்மிருதிகளும்,சாஸ்திரங்களும்,தர்ம நூல்களும் பாமர எளிய சூத்திர பஞ்சம மக்களுக்கானதல்ல.பெண்களுக்கும் உரியவை அல்ல.இவை அனைத்தும் வைதீகர்களான பிராமணர்,சத்ரியர், வைசியர்களுக்கானவை மட்டுமே.இவை அனைத்தும் அவர்களுக்காக அவர்களின் நலன் சார்ந்து அவர்களின் புகழைப் பரப்பும் வண்ணமும் எழுதப்பட்டவை.வைதீகர்கள் அல்லாதவர்கள் இவற்றில் பெற்றுக் கொள்ளவோ இணைத்துக் கொள்ளவோ ஒன்றுமேயில்லை.இவை அனைத்தும் வைதீகர்கள் அல்லாத மக்களை அடிமைகளாகவும் எதிரிகளாகவும் இழி பிறவிகளாகவும் சித்தரிக்கின்றன.

வைதீகர் அல்லாத சூத்திரர்,பஞ்சமர்கள், மற்றும் பெண்கள் வேத புராணங்களை கையில் எடுத்து அதை உயர்வாக கருதி தம்மை வைதீகர்களுக்கு அடிமையாகவே பாவித்து,ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் சுகம் கண்ட வைதீகர்கள் உண்மை அறிந்தும் போகும் வரை போகட்டுமே, வலிய கிடைக்கும் அதிகாரம் பதவி மரியாதை பொருள் வசதி இவற்றை ஏன் விட வேண்டும் என எண்ணுகின்றனர்.தாங்களாக முன்வந்து உண்மையை உலகுக்கு எடுத்துரைப்பாரில்லை.படிப்பு வாசனை இல்லாத சூத்திரர்களும் சண்டாளர்களும் தங்களுக்கென்று புராண இதிகாசங்களை வைதீகர்களைப் போல எதுவும் எழுதி வைக்கவும் இல்லை,சங்க இலக்கியங்களைத் தவிர.ஒரு சில பக்தி இலக்கியங்கள் ஓரிரண்டு இருந்தாலும் அவை வைதீகர்களின் புகழ்பாடும் அடிமைகளால் எழுதப்பெற்றவையே!
குறிப்பாக தமிழகத்தில் வைதீகர்கள் என பிராமணர்களை மட்டுமே கூற முடியும்.வைதீகர்களான பிராமண சத்ரிய வைசியர்கள் இருபிறப்பாளர்கள் ஆவர். இதற்கு அடையாளமாக உபநயன சடங்கு செய்து பூணூல் அணிந்து கொள்வர்.இவர்களில் பிராமணர்கள் மட்டுமே வேதங்களை ஓதுவதற்கும் மற்றவர்களுக்கு உபதேசிக்கவும் கற்றுக் கொடுக்கவும் முடியும். சத்ரியரும் வைசியரும் வேதங்களை கேட்க முடியும் ஆனால் மற்றவர்களுக்கு கற்றுத்தர இயலாது. முக்கியமாக வேதங்களைத் தெரிந்து,அறிந்து வைத்திருப்பர். சாஸ்திரப்படி,இவர்களுக்கு வேதங்களைப் படிக்கும் அதிகாரம் உண்டு.இதுதான் வட இந்தியாவில் உள்ள நடைமுறை.
இந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் வேதங்களை அறிந்தவர்கள் இருபிறப்பாளர்களான பிராமணர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.தமிழகத்தில் ஆண்ட பரம்பரை என்றும் வாணிப வைசியர்கள் எனக் கூறும் யாரும் இருபிறப்பாளர்கள் இல்லை.
வைதீக அடிமைத்தனத்தினால் ஒரு சிலர் பூணூல் அணிவதை சமீப காலமாக வழக்கில் கொண்டுள்ளார்கள்.தமிழகத்தில் தங்களை சத்ரியர்கள் வைசியர்கள் என அடையாளப்படுத்துவோருக்கு நான்கு வேதங்களைப் பற்றியோ உபநயனம் பற்றியோ வைதீக முறைகள் சாஸ்திரம் ஏதும் தெரியாது.
கர்மாநுஸ்டானங்களோ, சம்ஸ்காரங்களோ என்னவென்றே தெரியாது.கோத்ரம், ப்ரவரம்,சாகை ஏதும் கிடையாது.
அதனால் வேத முறைப்படி பிராமணர்களைத் தவிர வைதீகர்கள் யாரும் தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை.
வைதீகர்களின் கூற்றுப்படி, தமிழ் நிலப்பரப்பு என்பது சூத்திரர்களாலும் பஞ்சம சண்டாளர்களாலும் மட்டுமே நிறைந்துள்ளது எனலாம்.இந்தக் கருத்தினை பல முறை பதிவு செய்துள்ளேன்.
சூத்திரர்கள் ஏன் வேத மந்திரங்களை காதாலும் கேட்கக் கூடாது என்பதனை வேதங்களின் சூத்ர வடிவில் உள்ள,வியாஸர் எழுதிய “ப்ரஹ்ம சூத்திரம்” எனும் நூல் விளக்குகிறது. இந்த நூல் வேத வைதீக சனாதனத்தின் மூல நூலாகவும் இந்திய தத்துவங்களின் அறிச் சுவடாகவும் விளங்குகிறது. ஶ்ரீ இராமானுஜர் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு எழுதிய உரை நூல், “ஶ்ரீ பாஷ்யம்”என்று வழங்கப்படுகிறது. இந்த நூலில் சூத்திரர்கள் ஏன் வேதம் பயிலக் கூடாது, கேட்கக் கூடாது என்பது பற்றி விவரிக்கும் பகுதியான முதல் அத்யாயம்–மூன்றாம் பாதம் -ஒன்பதாம் அதிகரணம்–அபஸூத்ராதி கரணம் பகுதியில் உள்ள சில சுலோகங்களை கீழே தருகிறேன்.
இனி சுலோகத்தைப் பார்ப்போம்:
1-3-34 :க்ஷத்ரியத்வகதே:ச
ஜானஸ்ருதி ஒரு க்ஷத்ரியன் என்று அறியப்படுவதால் சூத்திரர்களுக்கு உபாஸனை அதிகாரம் இல்லை(ராமாநுஜர்)
1-3-35: உத்தரத்ர சைத்ரரதேந லிங்காத்
சைத்ர ரதன் என்பவனுக்கு க்ஷத்ரியன் என்பதற்கான அடையாளங்கள் உள்ளதால், சூத்திரம் 1-3-33ல் கூறப்பட்டவன் (ஜானஸ்ருதி) க்ஷத்ரியனே
1-3-36: ஸம்ஸ்காரபராமர்ஸாத் ததபாவாபிலாபாத் ச
ப்ரஹ்ம வித்யை உபாஸனை கூறும் வரிகளில், பஞ்ச ஸம்ஸ்காரம் (உபநயனம்) குறித்து கூறப்பட்டதாலும், உபநயனம் போன்றவை சூத்திரர்களுக்கு பொருந்தாத காரணத்தினாலும் - சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
1-3-37: த தபாவநிர்த்தாரணே ச ப்ரவ்ருத்தே:
சூத்திரன் அல்லன் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே ப்ரஹ்ம வித்யை உபதேஸிக்கப்படுவதால், சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
1-3-38: ஸ்ரவணாத்யயநார்த்த ப்ரதிஷேதாத்
சூத்திர ர்கள் வேதத்தைக் கேட்பதும், அதன் பொருளை ஆராய்வதும், அதன் பலனைப் பெறுவதும் கூடாது என்று வேதங்கள் கூறுவதால் சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
1-3-39: ஸ்ம்ருதே: ச
ஸ்ம்ருதிகளின்( புராணம், தர்ம சாஸ்திர நூல்கள்)மூலமும் சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை என்று உணரலாம்
ஸ்ம்ருதி வரிகளில் - வேதம் ஓதுவதை சூத்திரன் கேட்டால் அவன் காதை அறுக்க வேண்டும் என்றும், அவன் வேதம் ஓதினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும்,வேதத்தை
மனப்பாடம் செய்தால் அவனது உடலை அறுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆகவே, சூத்திரர்களுக்கு ப்ரஹ்ம உபாஸனை அதிகாரம் இல்லை.
சூத்திரர்களின் நாக்கை அறுக்கும் அளவிற்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ருதி என்றெழைக்கப்படும் நான்கு வேதங்களில் உயர்ந்த விசயங்கள் சொல்லப் பட்டுள்ளனவா? என்றால் அதுதான் இல்லை.இவை அனைத்தும் யாகம்,வேள்வி, யக்ஞம்,ஆடு,மாடு,குதிரை,அக்னி,வருணன்,
வாயு,சோமன்,சூரியன்,இந்திரன், சுரா பானம்,சோம பானம், தஸ்யூ, தாஸர்கள் என இவற்றுக்குள்ளேயே சுற்றி வருவதை வாசிக்கிறவர்கள் உணர்வார்கள். இந்த இத்துப் போன சங்கதிகளுக்காகவா காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னார்கள் என்கிற கேள்வி இந்த நூல்களைப் படிக்கும் அனைவருக்கும் எழும்.
“ப்ரஹ்ம சூத்திரத்திற்கு” விளக்க உரை எழுதியவர்கள் பலர். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஶ்ரீஆதிசங்கரர், ஶ்ரீ இராமாநுஜர்,ஶ்ரீ நீலகண்ட சிவாச்சாரியார்,
மத்வர்,சிவானந்தர் என அடுக்கிக் கொண்டே போகலாம்.அடுத்து வரும் பதிவுகளில் மேலுள்ள சூத்திரங்களுக்கு மற்ற ஆச்சாரியார்கள் எழுதிய விளக்க உரைகளைக் காண்போம்.
இனிமேலும் வேதம்,உபநிடதம்,பகவத்கீதை,ஆகமம்,பிராமணம்,புராணம்,இதிகாசம்,ஸ்ம்ருதி,ஸம்ஹிதை,வேதாந்தம்,ஆரண்யஹம்,உப வேதம்,தர்ம சாஸ்திரம்,தர்ஷனா,கர்ம காண்டம்,ஞான காண்டம்,உபாஸன காண்டம் என ஏமாற்றாமல் இருந்தால் நாடு உருப்படும்!
- தினகரன் செல்லாசு, ஆறாம் அறிவு, முகநூல் பதிவு, 19.11.20

ஞாயிறு, 22 நவம்பர், 2020

பார்ப்பனருக்கு அழும் தானங்கள்!


மத்ஸ்ய புராணத்தில் பிராமணர்களுக்குத் தர வேண்டிய பதினாறு மகாதானங்கள்பற்றி கீழ்வரும் விளக்கம் தருகிறது.
துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவனின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.
ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.
பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது
கல்பதருதானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.
கோஸஹஸ்ர தானம்: ஆயிரம் பசுக்கள் தானம் தருவது.
ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது.
ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.
ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.
ஹேமஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது.
பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.
தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.
விஸ்வ சக்ர தானம்: தங்க சக்கரம் தானம் தருவது.
கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.
சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது.
ரத்னதேனு தானம்: ஆபரணங்களைக் கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.
மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணெய் நிரப்பித்தருவது.
இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
எம்.வி. சுந்தரம் எழுதிய “சாத்திரப் பேய்களும்
ஜாதிக் கதைகளும்'' -
ஒரு மார்க்ஸியப் பார்வை, நூலின் பக்கம் 60-61)
பார்ப்பனர்கள்பற்றி ‘‘பேராசை பெருந்தகையே போற்றி'' என்று அண்ணா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 22.11.20

செவ்வாய், 17 நவம்பர், 2020

பார்ப்பானே கடவுளாம்!

பார்ப்பான் தான் கடவுள்; பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்
‘’பூமியில் பிராமணனாக பிறந்துள்ளேன்(கிருஷ்ணன்).
(ஆஸ்வமேதிக பர்வம், பக்கம்-285)

தெய்வா தீனம் ஜெகத்சர்வம்
மந்த்ரா தீனம் துதெய்வதம்
தன் மந்திரம் பிரம்மாணா தீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்
(ரிக் வேதம் சுலோகம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)
பொருள்: உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது கடவுள்கள் மந்திரங் களுக்கு கட்டுப்பட்டவர்கள். மந்திரங் கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள் என்ப தாகும்.
இதை சொல்லித்தான் இராமன் சம்பூகனை {தலையை)வெட்டிக் கொன்றான்(இராமாயணப்படி).
- செ.ர.பார்த்தசாரதி
17.11.13, முகநூல் பதிவு

வெள்ளி, 30 அக்டோபர், 2020

மனு ஸ்மிருதியும் தர்ம சாஸ்திர நூல்களும்

மநு ஸ்மிருதி என்பது தர்ம சாஸ்திர நூல்களில் ஒன்று.தர்ம சாஸ்திர நூல்கள் 20 க்கும் மேல் உள்ளன.இந்த நூல்களைப் பற்றி எனது முக நூலில் சிறு சிறு பதிவுகளாக அவ்வப்போது  எழுதியிருக்கிறேன்.தர்ம சாஸ்திர நூல்களில் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக மநு ஸ்மிருதி எனும் மநு தர்ம சாஸ்திர நூல் விளங்குகிறது.

நான் அறிந்த வகையில் தமிழில் ‘மநு தரும சாஸ்த்திரம்’(1865 ஆம் ஆண்டு பதிப்பு)எனும் நூலே அச்சு வடிவில் கிடைத்த முதல் நூலாக எண்ணுகிறேன்.1865 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட மநு தரும சாஸ்த்திரம் நூலினை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர்,திருவைந்திரபுரம்-கோமாண்டூர் இளையவில்லி இராமாநுஜசாரியர் எனும் வடமொழியில் புலமை வாய்ந்த பண்டிதர் ஆவார். இதே நூலின் 1907 ஆம் ஆண்டு பதிப்பும் இணையத்தில் கிடைக்கிறது.இதே நூலின் பதிப்பு 1919 லும் வெளியிடப் பட்டது. 
இதன் பிறகே திராவிடக் கழகத்தார் 1919 ஆம் ஆண்டு இதே நூலை மறு பதிப்பாக வெளியிட்டார்கள். இந்த நூல் திராவிடக் கழகத்தாரால் தெருக்களில் எரிக்கப்பட்டது. இந்த நூலை திராவிடர் கழகத்தவரே திரித்து எழுதிக் கொண்டார்கள் எனும் பொய்ப் பிரச்சாரமும் தொடர்ந்து வருகிறது.அது உண்மையல்ல என்பதை உணர்த்துவதற்காகவே 1865 ஆம் ஆண்டு பதிப்பித்த நூலை(pdf copy)கேட்கிறவர்களுக்கு அனுப்பி வருகிறேன்.

இது தவிர காஞ்சி மடத்தின் கும்பகோணம் பதிப்பாக தமிழில் ஆபஸ்தம்பர், போதாயணர்,கௌதமர் பெயர்களில் வெளிவந்த தர்ம சாஸ்திர நூல்கள் உள்ளன. இதோடு காஞ்சி மடத்தின் கும்பகோணம் பதிப்பாக ஸ்ம்ருதி முக்தாபலம் எனும் நூலும் (எல்லா தர்ம சாஸ்திர நூல்களின் சாரம்) ஆறு பாகங்களாக வெளிவந்துள்ளது.
இவை தவிர தனித்தனி தர்ம சாஸ்திர நூல்கள் தமிழில் இல்லை.இவற்றை தமிழில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு கடந்த ஆண்டு முதல் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.இந்தப் பணியில் விரும்பம் உள்ளவர்கள் என்னை உள்பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்.

மநு தர்ம சாஸ்திர நூலைப் போன்று மற்ற தர்ம சாஸ்திர நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு பரவலாக்கப் பட்டால், இந்து வைதீகத்தில் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். 

பின் வருவன தர்ம சாஸ்திர நூல்களில் குறிபிடத்தக்கவை;

மநு தர்ம சாஸ்திரம் (தமிழில் உண்டு)
ஆபஸ்தம்ப ஸ்மிருதி(தமிழில் உண்டு)
கௌதம தர்ம ஸூத்ரம்(தமிழில் உண்டு)
விஷ்ணு ஸ்மிருதி
நாரத தர்ம சாஸ்திரம்
வியாச ஸ்மிருதி
ஆங்கிரச ஸ்மிருதி
போதாயண தர்ம சாஸ்திரம்(தமிழில் உண்டு)
யாக்யவல்கிய ஸ்மிருதி
அத்ரி ஸ்மிருமி
பராஸர ஸ்மிருதி
அஸ்திர ஸ்மிருதி
ஹரித ஸ்மிருதி
யம ஸ்மிருதி
காத்யாயனர் ஸ்மிருதி
கர்கர் ஸ்மிருதி
கார்க்யர் ஸ்மிருதி
தேவர ஸ்மிருதி
ப்ரஹஸ்பதி ஸ்மிருதி
சாத்தியான ஸ்மிருதி
தஷ ஸ்மிருதி
சங்க ஸ்மிருதி
உசான ஸம்ஹிதா

இதில் பராஸர ஸ்மிருதி என்பதே கலி யுகத்திற்கான நீதி நூல் என வைதீக நூல்கள் வலியுறுத்துகின்றன.ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு வரை மேலுள்ள தர்ம சாஸ்திர நூல்களை ஆதாரமாகக் கொண்டே சிவில் கிரிமினல் வழக்குகள் விசாரிக்கப் பட்டு நீதி வழங்கப்பட்டு வந்தன.இதில் யாக்யவல்கிய ஸ்மிருதி யை அடிப்படையாகக் கொண்ட மிட்டாக்‌ஷரா (Mitakshara) எனும் நீதி நூல் நடைமுறையில் பல சுதேசி மன்னர்களால் பின்பற்றப் பட்டு வந்தது. 
மேலுள்ள எந்த ஒரு தர்ம சாஸ்திர நூலும் ஒன்றுக்கு ஒன்று தரத்தில் தண்டனைகளில்,மனித நேயமற்ற செயல்களில், பெண்களை இழிவு படுத்துவதில் சமத்துவமின்மையில் குறைந்த தல்ல.இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டே ‘மநு தர்ம சாஸ்திரம்’.

காலம் கடந்தாவது மக்கள் மத்தியில் மநு தர்ம சாஸ்திரம் நூல் பேசு பொருளாக மாறியுள்ளது. இது மிகவும் சந்தோசமான விசயம். இந்த ஒரு நூல் மட்டுமல்ல,வேத வைதீக சனாதன நூல்கள் அனைத்துமே வர்ணாசிரமம்,பெண்களைத் தரம் தாழ்த்தி இழி பிறவிகளாக பாவிப்பது, சமத்துவமில்லாத விசயங்களை போதிப்பது, அறிவியல் விசயங்கள் அல்லாது பிற்போக்கான மூட நம்பிக்கைகளை வளர்ப்பவை என்பதை போகப் போக உணர்ந்து கொள்ள இது நல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என்பதிலும் மகிழ்வே.

இந்த ஒரு நூலை எரிப்பதோடு மக்கள் போராட்டம் நின்று விடக் கூடாது, மநு தர்ம சாஸ்திரம் போலவே ஆயிரக் கணக்கான நூல்கள் வேத வைதீக சனாதன தர்மத்தில் உள்ளன.மனித குலத்திற்கே எதிரான அனைத்து வேத வைதீக சனாதன நூல்களும் எரிக்கப்பட வேண்டும்.வைதீக சனாதனமற்ற சமத்துவத்தையும்,மனித நேயத்தையும்  அடுத்த தலைமுறையினராவது உணர்வதற்கு வாய்ப்பினை அளிப்போம்! 

வாட்ஸ் அப்பில் பகிர்ந்த தோழர் புகழேந்தி அவர்களுக்கு நன்றி! 
கட்டுரையாளர் தோழர் Dhinakaran Chelliah அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!!

வியாழன், 24 செப்டம்பர், 2020

புத்த மார்க்கத்தை மிரட்டும் அக்னி புராணம்

ஒற்றைப்பத்தி-அண்டப் புளுகு!
September 13, 2020 • Viduthalai • மற்றவை

THE AGNI PURANA says that Vishnu incarnated himself as Gautama Buddha, the son of Suddhodana, and preached Buddhism to Asuras who thus rejected the Vedas and were sent to hell... Jayadeva.... states in the GITA GOVINDA that Vishnu incarnated himself as Buddha to show compassion to animals and to put an end to the performance of bloody sacrifices... - Swira Jaiswal while reviewing the book 'Encountering Sivaism - The Deity, the Miliew, the Entourage' in THE HINDU - Sunday Magazine: 6.9.1998.
இதன் தமிழாக்கம் வருமாறு:
சுத்தோதனரின் மகன் கவுதம புத்தராக மகாவிஷ்ணு அவதரித்து, அசுரர்களுக்குப் பவுத்தத்தை உபதேசித்தார்; அதனால் அவர்கள் வேதங்களைப் புறக்கணித்து, நரகத்துக்கு அனுப்பப் பெற்றனர் என அக்னி புராணம் சொல்கிறது. விலங்குகளுக்கு இரங்க வேண்டுமெனக் காட்டவும், உயிர்ப் பலிகளை நிறுத்தவும் விஷ்ணு புத்தாவதாரம் எடுத்ததாக, ஜெயதேவர் தமது கீத கோவிந்தா' எனும் (சமஸ்கிருத) நூலில் கூறுகிறார்.... 06.09.1998 ஆம் நாளிட்ட இந்து' ஞாயிறு மலரில், சிவனியத்துடன் சந்திப்பு - தெய்வம், சூழல், ஊழியர்கள்' எனப் பொருள்படும் Encountering Swaism - The Deity, the Milien, the Entourage  எனும் நூலுக்கு - சுவீர ஜெய்ஸ்வால் எழுதிய திறனுரையிலிருந்து.''

புத்தரையே எத்தகைய மிரட்டல் வாதத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் பார்த்தீர்களா? அவர்களின் இத்தகு பித்தாலாட்டத்துக்குப் பெயர்தான் ஆன்மிகம்.


எதிர்த்து அழிக்க முடியாததை அழிப்பதற்கு ஆரியம் - பார்ப்பனியம் - இப்படி ஊடுருவல், மோசடி செய்தல், கற்பனைப்படுத்துதல் என்னும் பித்தலாட்டங்களில் ஈடுபடும் என்பதற்கு அவாளின் அக்னிப் புராணமே சாட்சி!


புத்தரின் பஞ்சசீலம் முக்கியமாக பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கூறுவதை எண்ணிப் பாருங்கள் - பார்ப்பனர்களின் பாஷாணம்'' எத்தகையது என்பது விளங்கும்! 


- மயிலாடன்

புதன், 12 ஆகஸ்ட், 2020

கல்யாண மந்திரம் - மயிலாடன் விளக்கம்

#ஒற்றைப்பத்தி - கல்யாண மந்திரம்

கல்யாண நிகழ்ச்சியில் பார்ப்பனப் புரோகிதர்கள் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லுகிறார்கள்.

“ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித

உத்தர த்ருதீயோ அக்நிஷ்டபதி

துரியஸ்தே மனுஷ்ய ஜா”

‘‘ஸோமன் முதலில் இந்த மணமகளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.''

(ஆதாரம்: விவாஹ மந்த் ரார்த்த போதினி தொகுத்தவர்: வித்யா விசாரத் ந்யாயரத்ந, நியாயபூஷ்ண கீழாத்தூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் - வெளியீடு லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி)லிட்).

ஆதாரத்தோடு இதை நாம் எடுத்துச் சொன்னால், அடேயப்பா, இந்தப் பார்ப் பனர்களுக்கு மூக்கு வெடித்து மண்டை யில் சொருகுகிறது. தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஒரு திருமணத்தில் இதை எடுத்துச் சொன்னார் என்பதற்காக இன்றுவரை எகிறிக் குதித்துத் தாண்டவ மாடுகின்றனர்.

‘‘வினோதரச மஞ்சரி'' எனும் வீரா சாமி செட்டியார் எனும் பெரும்புலவரால் எழுதப்பட்ட நூலில் ‘‘மகாபண்டிதனை சிறுபிள்ளை வென்றது'' என்ற ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

கோலாகலம் என்னும் பெயருடைய வடமொழிப் பண்டிதனைப் பாண்டிய மன்னன் பிருதியாக மரித்து வந்தான், கோலாகலம் சகல சாத்திரங்களையும் கற்ற நிபுணன். தனக்கு நிகராகக் கற்றவர் யாருமில்லை என்னும் செருக்குக் கொண் டவன்.  ‘கற்றது கைம்மண்ணளவு கல் லா தது உலகளவு' என்னும், முது மொழியை அறியாதவன். ‘‘பெருக்கத்து வேண்டும் பணிவு'' என்பது அவனிடத்தில் சிறிதும் இல்லை ‘வல்லவர்க்கு வல்லவர் வையத் தில் உண்டு' - என்பது பழ மொழியன்றோ? பண்டிதர்களை வாதுக்கழைப்பான் அவர் களை வாதில் வென்று அவமானப்படுத் துவான். ‘மேருமலைக்கும் வந்தன்று தாழ்வு' என்றாற்போல் அவன் செருக்கு அழிவதற்கும் ஒரு காலம் வந்தது.

யமுனாசாரியார் அல்லது ஆள வந்தார் என்னும் பெயருடைய, வைணவ மதத்தைச் சார்ந்த இளம்பிள்ளை கோலா கலனோடு வாதிட்டு அவன் செருக்கை அழித்தொழித்தார் என இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.

மூன்று வினாக்கள் கோலாகலனைக் கேட்டதாகவும் அவற்றிற்கு அவன் மறுப் புக் கூற முடியாது விழித்தான் எனவும் கூறப்படுகிறது.

மூன்று வினாக்களுக்கும் உங்களால் மறுப்புக் கூற முடியுமா எனக் கோலாகலன் வினவியதாகவும், அதுவும் தம்மால் முடி யும் என ஆளவந்தார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மூன்றாவது வினாவிற்கு ஆளவந் தார் கூறும் மறுப்பு கொடுமையிலும் கொடுமை யானது. பாண்டியனின் மனைவி பதிவிரதை என முதலில் கூறி விட்டுப் பின்னர் அவள் பதிவிரதை அல்லள் என மறுப்புக் கூறு கிறார். அம் மறுப்பாவது,

‘‘கரு உற்பத்தியால் சந்திரனுக்கும், விளையாட்டால் கந்தருவனுக்கும், தீபன விர்த்தியால் அக்கினிக்கும் முன்பு கவா தந்திரியப்பட்டுப் பின்பு மணம் செய்து கொள்பவனுக்கு உரியவளாகின்ற கார ணத்தால், நான்கு பதிகளை உடையவள் ஆவாள்.

எந்தப் பெண்ணும் திருமணம் நடக் கும் போது நாலாந்தரமாக ஒருவனுக்கு வாழ்க்கைத் துணை (மனைவி) ஆகிறாள் - என மேற்சொன்ன மந்திரம் கூறுகிறது, இதைவிட என்ன அக்கிரமம் வேண்டும்.

இக்காலத்தில் தமிழர்கள் இல்லத்தில் புரோகிதனைக் கொண்டு திருமணம் செய் யும்போது மேற்சொன்ன மந்திரத்தையே வடமொழியில் கூறுகிறான். தமிழில் இம் மந்திரத்தைச் சொல்வானானால் அவனை நாம் வாளா விடுவோமா? புரோகிதனை வைத்துத் திருமணம் செய்வது எவ்வளவு கேவலமானது என்பதைத் தமிழர்கள் உணர்வார்களாக.

இந்தப் பொருந்தா மந்திரத்தைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச் சினார்கினியரும் உடன்பட்டு எழுதுகிறார். அவ்வுரையாவது:

கரணத்தின் அமைந்து முடிந்த காலை'

(கற்பியல் 5)

என்னும் அடிக்கு, ‘‘ஆதிக் காரணமும் அய்யர் யாத்த காரணமும் என்னும் இரு வகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய், மூன்று இரவின் முயக்கம் இன்றி, ஆன் றோர்க்கு (மதி கந்தருவர் அங்கி) அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து'' - எனப் பொருந்தா உரை எழுதி மேலும் விளக்கம் கூறுகிறார்.

அஃதாவது,

‘‘அது. முதல்நாள் தண்கதிர்ச் செல் வற்கும், இடைநாள் கந்தருவருக்கும், பின் னாள் அங்கியங் கடவுளுக்கும் அளித்து நான்காம் நாள், அங்கியங் கடவுள் எனக்கு நின்னையளிப்ப, யான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் எனத் தலைவிக்கு விளக்கம் கூறுதல்" என வேத நெறியை எடுத்துக் கூறுகிறார்.

இக்கருத்துகள் தமிழர்களுக்குத் தேவையா? அய்ந்து நூல்களுக்கு அரிய உரை எழுதிய நச்சினார்க்கினியருக்கு இப்படிப்பட்ட ஆபாசக் கருத்துகளைத் தமிழ் இலக்கணத்தில் நுழைக்க எப்படி எண்ணம் வந்தது?''

இதைச் சொல்லுவது திராவிடர் கழ கத்தார் அல்லர்.  நாம் மேற்குறிப்பிட்ட பெரும் புலவர்  திருமண மந்திரம்பற்றி சொன்னார். தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னார் என்பதற்காக வானரம்போல் தாவிக் குதிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்களாம்?

திருப்பி அடிக்க வேண்டுமே தவிர - ஒதுங்கக் கூடாது. சமாதானம் செய்தால் எதிரி ஜெயித்து விடுவான் என்பது தந்தை பெரியார்தம் வாக்கு!

- #மயிலாடன்
-விடுதலை, 9.8.20

சனி, 23 மே, 2020

பெண்களை இழிவாக பேசிய சங்கராச்சாரி

ஆதி சங்கரரின் புகழ் மிக்கதாக மிகைப்படுத்தப்பட்ட “பஜ கோவிந்தம்” பாடலின் மூன்றாவது சுலோகம் இது!

“நாரிஸ்தனபர நாபிதேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம்
 எதன்மான்சவசாதிவிகாரம் மனசி விசிந்தய வாரம் வாரம்”

வெறியூட்டும் இள வனிதையர் தோற்றம்,
வெறுந் தோல்மூடிய சதைகளின் மாற்றம்,
வெறுப்பூட்டும் இந்த உண்மையை உணர்வாய்.
மறவாதிருக்கப் பலமுறைநினைப்பாய்.

“Seeing the seductive female form, do not fall prey to frenzied delusion.That (female form) is (but) a modification of flesh and fat.Think well thus in your mind again and again.”

இதன் பொருள் பெண்கள் மோசமானவர்கள் அவர்களை நம்பக்கூடாது என்பதுதான்.இப்படி
பெண்களைப் பற்றி மோசமாக எழுதியவரைத்தான் இந்து வைதீகப் பெண்மணிகள் அவதார புருஷராக பூசித்து வருகிறார்கள்.

பௌத்தம் கூறிய சூன்யவாதத்தை மயாவாதம் எனக் காப்பியடித்து எழுதப்பட்டதுதான் சங்கரரின் அத்வைதம்.
- dinakaran chellish, முகநூல் பதிவுகள், 23.5.20

திங்கள், 18 மே, 2020

உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு

ஆசிரியர் விடையளிக்கிறார்: ‘உஞ்ச விருத்தி’க்கும் பிச்சை எடுப்பதற்கும் என்ன வேறுபாடு
May 16, 2020 • Viduthalai • மற்றவை

கேள்வி 1: ‘உஞ்ச விருத்திக்கும்‘ பிச்சை எடுப்ப தற்கும் என்ன வேறுபாடு?

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

பதில் : உஞ்சி விருத்திக்கும் பிச்சை எடுப்பதற்கும் உள்ள வேறுபாடு பற்றிய விரிவான விளக்க விடை இதோ: அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய ‘ஹிந்து மதம் எங்கே போகிறது?‘ என்ற நூலில் (57ஆம் பக்கத்தில்)

“.... சங்கரர், சந்நியாசிகள் எப்படி வாழ வேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு, தன்னைப் பின்பற்றும் அதாவது சந்நி யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்தி ருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருட்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்பதோடு - மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாசி பண்பாடு.

சந்யாசி அக்னியைக் கூட தேவைக்காக நெருங்ச்கக் கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்க வேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்ற சங்கரர் ‘சந்யாச ஸ்மிருதி’ வகுத்த விதியைக் கடுமையாகப் பின்பற்றினார்.

கடிகாரச் சுற்றுப்படி: 
உ.வெ.சாமிநாதையர், ஆதிசங்கரர், அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், மதுரைத் தமிழ்ப் பேரகராதி

‘சந்யாச ஸ்மிருதி’யா அது என்ன சொல்கிறது?

ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி, எப்படி வாழ வேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்ததுதான் ‘சந்யாச ஸ்மிருதி’

“பததீ அஸோவ் ஸ்வயம்

பிக்‌ஷ ஹீ யஸ்ய ஏதது

த்வயம் பவேது”

சந்நியாசியானவன் பணத்தைக் கையால் தொட்டால்கூட அது மிகப் பெரிய பாவம்.

- சந்யாச ஸ்மிருதி.

‘உஞ்ச விருத்தி’ என்பதற்கு மதுரைத் தமிழ்ப் பேரகராதி (உ.வே.சுவாமிநாதய்யர் தொகுத்து 1937இல் வெளியானது. இ.மு.கோபாலகிருஷ்ண கோன் வெளியீடு) சொல்லும் பொருள் என்ன?

‘உரலருகிலும் வயலிலும் ஒவ்வொரு தானியமாய் பொறுக்குதல்’ என்று பொருள் கூறுகிறார்.

எவர் வீடு வீடாகச் சென்று உணவு கேட்கிறாரோ,

அவர் சந்நியாச ஸ்மிருதிப்படி - பிச்சை யெடுக்கிறார் என்பதே சரியானது.

எவர் உரல் அருகிலும் வயலிலும் தானியம், அதுவும் ஒவ்வொரு தானியமாக பொறுக்குபவரோ, அவரே - உஞ்சி விருத்தியார்.

பொதுவாக சந்நியாசிகள் மட்டுமல்ல, பிராமணர்கள் என்பவர் உண்மையில் பிராமண - வர்ணாசிரமப்படி ஒழுக வேண்டுமானால் அவர்கள் மநுதர்மப்படி பிச்சை யெடுத்தே வாழவேண்டும். இதை மனுதர்மம் மட்டுமல்ல, காஞ்சி சந்திரசேகரந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படும் ‘மூத்த பெரியவாள்’ ‘மகா பெரியவாள்’ தெய்வத்தின் குரலில் தனது உரையிலும் கூறியுள்ளார்!

ஏன் கும்பகோணத்தில் ஒரு தெருவுக்கே ‘பிச்சை பிராமணர் தெரு’ என்றே பெயர் இன்னும் இருக்கிறதே!

எனவே சந்நியாசிகளுக்கும் பிச்சைதான் உரியதர்மம் - உஞ்ச விருத்தி அல்ல; பிற்கால நடைமுறையில் பார்ப்பனர்கள் பெறுவதற்கு ‘பிச்சை’ என்ற பெயரை மாற்றி உஞ்ச விருத்தியாக்கி விட்டார்களே என்பது நமக்குத் தெரியாத ஒன்றா?