#ஒற்றைப்பத்தி - கல்யாண மந்திரம்
கல்யாண நிகழ்ச்சியில் பார்ப்பனப் புரோகிதர்கள் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லுகிறார்கள்.
“ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித
உத்தர த்ருதீயோ அக்நிஷ்டபதி
துரியஸ்தே மனுஷ்ய ஜா”
‘‘ஸோமன் முதலில் இந்த மணமகளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.''
(ஆதாரம்: விவாஹ மந்த் ரார்த்த போதினி தொகுத்தவர்: வித்யா விசாரத் ந்யாயரத்ந, நியாயபூஷ்ண கீழாத்தூர் ஸ்ரீனிவாஸாச்சாரியார் - வெளியீடு லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி)லிட்).
ஆதாரத்தோடு இதை நாம் எடுத்துச் சொன்னால், அடேயப்பா, இந்தப் பார்ப் பனர்களுக்கு மூக்கு வெடித்து மண்டை யில் சொருகுகிறது. தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஒரு திருமணத்தில் இதை எடுத்துச் சொன்னார் என்பதற்காக இன்றுவரை எகிறிக் குதித்துத் தாண்டவ மாடுகின்றனர்.
‘‘வினோதரச மஞ்சரி'' எனும் வீரா சாமி செட்டியார் எனும் பெரும்புலவரால் எழுதப்பட்ட நூலில் ‘‘மகாபண்டிதனை சிறுபிள்ளை வென்றது'' என்ற ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.
கோலாகலம் என்னும் பெயருடைய வடமொழிப் பண்டிதனைப் பாண்டிய மன்னன் பிருதியாக மரித்து வந்தான், கோலாகலம் சகல சாத்திரங்களையும் கற்ற நிபுணன். தனக்கு நிகராகக் கற்றவர் யாருமில்லை என்னும் செருக்குக் கொண் டவன். ‘கற்றது கைம்மண்ணளவு கல் லா தது உலகளவு' என்னும், முது மொழியை அறியாதவன். ‘‘பெருக்கத்து வேண்டும் பணிவு'' என்பது அவனிடத்தில் சிறிதும் இல்லை ‘வல்லவர்க்கு வல்லவர் வையத் தில் உண்டு' - என்பது பழ மொழியன்றோ? பண்டிதர்களை வாதுக்கழைப்பான் அவர் களை வாதில் வென்று அவமானப்படுத் துவான். ‘மேருமலைக்கும் வந்தன்று தாழ்வு' என்றாற்போல் அவன் செருக்கு அழிவதற்கும் ஒரு காலம் வந்தது.
யமுனாசாரியார் அல்லது ஆள வந்தார் என்னும் பெயருடைய, வைணவ மதத்தைச் சார்ந்த இளம்பிள்ளை கோலா கலனோடு வாதிட்டு அவன் செருக்கை அழித்தொழித்தார் என இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகிறது.
மூன்று வினாக்கள் கோலாகலனைக் கேட்டதாகவும் அவற்றிற்கு அவன் மறுப் புக் கூற முடியாது விழித்தான் எனவும் கூறப்படுகிறது.
மூன்று வினாக்களுக்கும் உங்களால் மறுப்புக் கூற முடியுமா எனக் கோலாகலன் வினவியதாகவும், அதுவும் தம்மால் முடி யும் என ஆளவந்தார் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
மூன்றாவது வினாவிற்கு ஆளவந் தார் கூறும் மறுப்பு கொடுமையிலும் கொடுமை யானது. பாண்டியனின் மனைவி பதிவிரதை என முதலில் கூறி விட்டுப் பின்னர் அவள் பதிவிரதை அல்லள் என மறுப்புக் கூறு கிறார். அம் மறுப்பாவது,
‘‘கரு உற்பத்தியால் சந்திரனுக்கும், விளையாட்டால் கந்தருவனுக்கும், தீபன விர்த்தியால் அக்கினிக்கும் முன்பு கவா தந்திரியப்பட்டுப் பின்பு மணம் செய்து கொள்பவனுக்கு உரியவளாகின்ற கார ணத்தால், நான்கு பதிகளை உடையவள் ஆவாள்.
எந்தப் பெண்ணும் திருமணம் நடக் கும் போது நாலாந்தரமாக ஒருவனுக்கு வாழ்க்கைத் துணை (மனைவி) ஆகிறாள் - என மேற்சொன்ன மந்திரம் கூறுகிறது, இதைவிட என்ன அக்கிரமம் வேண்டும்.
இக்காலத்தில் தமிழர்கள் இல்லத்தில் புரோகிதனைக் கொண்டு திருமணம் செய் யும்போது மேற்சொன்ன மந்திரத்தையே வடமொழியில் கூறுகிறான். தமிழில் இம் மந்திரத்தைச் சொல்வானானால் அவனை நாம் வாளா விடுவோமா? புரோகிதனை வைத்துத் திருமணம் செய்வது எவ்வளவு கேவலமானது என்பதைத் தமிழர்கள் உணர்வார்களாக.
இந்தப் பொருந்தா மந்திரத்தைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச் சினார்கினியரும் உடன்பட்டு எழுதுகிறார். அவ்வுரையாவது:
கரணத்தின் அமைந்து முடிந்த காலை'
(கற்பியல் 5)
என்னும் அடிக்கு, ‘‘ஆதிக் காரணமும் அய்யர் யாத்த காரணமும் என்னும் இரு வகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய், மூன்று இரவின் முயக்கம் இன்றி, ஆன் றோர்க்கு (மதி கந்தருவர் அங்கி) அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து'' - எனப் பொருந்தா உரை எழுதி மேலும் விளக்கம் கூறுகிறார்.
அஃதாவது,
‘‘அது. முதல்நாள் தண்கதிர்ச் செல் வற்கும், இடைநாள் கந்தருவருக்கும், பின் னாள் அங்கியங் கடவுளுக்கும் அளித்து நான்காம் நாள், அங்கியங் கடவுள் எனக்கு நின்னையளிப்ப, யான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் எனத் தலைவிக்கு விளக்கம் கூறுதல்" என வேத நெறியை எடுத்துக் கூறுகிறார்.
இக்கருத்துகள் தமிழர்களுக்குத் தேவையா? அய்ந்து நூல்களுக்கு அரிய உரை எழுதிய நச்சினார்க்கினியருக்கு இப்படிப்பட்ட ஆபாசக் கருத்துகளைத் தமிழ் இலக்கணத்தில் நுழைக்க எப்படி எண்ணம் வந்தது?''
இதைச் சொல்லுவது திராவிடர் கழ கத்தார் அல்லர். நாம் மேற்குறிப்பிட்ட பெரும் புலவர் திருமண மந்திரம்பற்றி சொன்னார். தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சொன்னார் என்பதற்காக வானரம்போல் தாவிக் குதிப்பவர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்களாம்?
திருப்பி அடிக்க வேண்டுமே தவிர - ஒதுங்கக் கூடாது. சமாதானம் செய்தால் எதிரி ஜெயித்து விடுவான் என்பது தந்தை பெரியார்தம் வாக்கு!
- #மயிலாடன்
-விடுதலை, 9.8.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக