செவ்வாய், 25 ஜூன், 2019

"கிரஹப்பிரவேசம்" என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!

@அ.செ. செல்வம்

"கிரஹப்பிரவேசம்" என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!
இந்த வீட்டில் கீழ்சாதிக்காரர்கள் கொத்தனாராக சித்தாளாக வேலை பார்த்திருப்பார்கள் அதனால் தீட்டாகி இருக்கும், அந்தத் தீட்டைப் போக்க பிராமணரை வைத்து மந்திரம் சொல்லிப் பசு மாட்டு மூத்திரம் சாணியைக் கரைத்துத் தெளித்தால் தீட்டுப் போகும் என்றே செய்கிறார்கள்.
அதனை நம்பி உழைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதேபோல செய்து தான் சார்ந்திருக்கும் உழைக்கும் இனத்தையே இழிவுபடுத்தி பிராமண அடிமையாகிறார்கள்.
மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :
"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."
(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)
உங்கள் வீட்டிலாவது "கிரஹப்பிரவேசம்" எனும் பெயரில் நீங்கள் வசிக்க வீடுகட்டி கொடுத்த தொழிலாளர்களை அவமானப்படுத்தாமல் இருங்கள்...  கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பின், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் புரோகிதர் எனும் ஏமாற்றுக்காரனுக்கு இடமளிக்காதீர்கள்... சொந்தங்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளிப்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்...!
Oppilamani Alagar

திங்கள், 10 ஜூன், 2019

தாய்க்கு திவசம் செய்ய புரோகிதன் சொல்லும் மந்திரம்


தாய்க்கு திவசம் செய்யப்போகிறான் ஒரு பாமரன்.
அப்போது புரோகிதன் சொல்லும் மந்திரம் என்னவென்றால்,
என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதா தனமே ரேதஹா
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம.....
இந்தக் கேடுகெட்ட மந்திரத்துக்கு என்ன பொருள் தெரியுமா? சொல்லவே கூசுகிறது. இருந்தாலும் பாருங்கள்
எங்க அம்மா ராத்திரி வேளைகள்ல யார்கிட்ட படுத்துக்கொண்டு என்னைப் பெற்றாளோ தெரியாது. ஆனால் .... நான் ஒரு உத்தேச நம்பிக்கையில்தான் அவளை என் அப்பாவின் மனைவியாகக் கருதுகிறேன். அவளுக்கு என் சிரார்த்தத்தை செய்கிறேன் ......
இதுதான் அதன் பொருள். நம் தாயை நம் கண்முன்னே நடத்தை கெட்டவள் என சொல்வதுதான் ..... அதையும் நம்மை வைத்தே உச்சரிக்க வைப்பதுதான் இந்த மந்திரத்தின் நோக்கம்.
எல்லாருக்கும் வாழ்க்கை என்பது அவரவர் அம்மா போட்ட பிச்சை. அம்மாவின் புடவையில் கட்டிய தூளியின் கட்டில்தான் சின்னக்குழந்தையில் நாம் தூங்கியிருப்போம். நாம் வளர வளர அதைப் பார்த்து மலர்கிறவள் தாய் மட்டும்தான்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக் கேட்டதாய்
என வள்ளுவரே தாய்மையின் உயர்வை ... மகனை வைத்துச் சொல்கிறார். ஆனால் இந்தப் பார்ப்பான் செய்யும் வேலையைப் பார்த்தீர்களா? அவன் சொல்லும் மந்திரம் நம் தாயை எவ்வளவு கேவலப்படுத்துகிறது பாருங்கள். தேவையா நமக்கிந்த திதி, திவசம், தர்ப்பணம்....?.
-சுரேந்திர ராசன் அய்யம்பிள்ளை
முக நூல் பக்கம், 10.6.15

வெள்ளி, 7 ஜூன், 2019

பார்ப்பனருக்கு அழும் தானங்கள்!


மத்ஸ்ய புராணத்தில் பிராமணர்களுக்குத் தரவேண்டிய பதினாறு மகாதானங்கள் பற்றி கீழ் வரும் விளக்கம் தருகிறது.
துலா புருஷ தானம்: பிராமணனின் எடைக்கு அல்லது தானம் தருபவனின் எடைக்கு விலை உயர்ந்த உலோகம் கொடுப்பது.
ஹிரண்ய கர்ப்ப தானம்: தங்க ஆபரணம் தருவது.
பிராமந்த தானம்: முட்டை வடிவத்தில் தங்கம் தருவது.
கல்பதரு தானம்: பிராமணர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் முறையில் தங்க மரம் தருவது.
கோஸ ஹிஸ்ர தானம்: ஆயிரம் பசுக்கள் தானம் தருவது.
ஹிரண்ய காமதேனு தானம்: விரும்பியவை தரும் காமதேனு பசு கன்று தங்கத்தில் தருவது,
ஹிரண்ய அஸ்வ தானம்: தங்க குதிரைகள் தருவது.
ஹிரண்ய ஸ்வரத் தானம்: தங்க குதிரைகள் பூட்டிய ரதம் தருவது.
மஹஸ்தி தானம்: தங்க யானை தானம் தருவது,
பஞ்சலாங்கல தானம்: அய்ந்து கலப்பைகள் மரத்தாலும், காளை மாடுகள் தங்கத்தாலும் தருவது.
தார தானம்: பூமி, மலை வடிவத்தில் தங்கம் தருவது.
கல்பலதா தானம்: பூக்களோடு கூடிய பத்து படர்ந்த கொடிகள் தங்கத்தில் செய்து தருவது.
சப்த சாகர தானம்: ஏழு கடல்கள் போன்ற வடிவத்தில் தங்க பாத்திரங்கள் தருவது
ரத்னதேனு தானம்: ஆபரணங்களைக் கொண்டு செய்யப்பட்ட பசு தருவது.
மகா பூதகாத தானம்: தங்கத்தால் செய்யப்பட்ட 100 விரல்கள் அகலமுள்ள பெரும் தங்கப் பாத்திரத்தில் பால், வெண்ணை நிரப்பித் தருவது.
இவ்வாறு மத்ஸ்ய புராணம் கூறுகிறது.
(எம்.வி. சுந்தரம் எழுதிய 'சாத்திரப் பேய்களும் சாதிக் கதைகளும் (ஒரு மார்க்ஸியப் பார்வை - நூலின் பக்கம் 60-61)).
-விடுதலை ஞாயிறு மலர், 4.5.19

வேதங்களின் வண்டவாளம்


“ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் - செய்விப்பாயாக.... ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது - நியோகத்தில் சேர்த்துக் கொண்ட புருஷ னைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப் பாய்... பதினோராவது புருஷனை நியோகத் தில் பெற்றுக் கொள்வாய்" (ரிக் வேதம் 10, 85; 45) ஒவ்வொரு பெண்ணும் (கலியாண மில்லாமலேயே) பதினொரு புருஷன் வரை யிலடைந்து நியோகத்தில், (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது. இது போல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.
எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணி களை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரிகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப் படுத்துவாளாக" (யஜுர் 17-3) ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர் களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.
-விடுதலை நாளேடு, 4.5.19