@அ.செ. செல்வம்
"கிரஹப்பிரவேசம்" என்பது தீட்டு அகற்ற செய்யும் சடங்கு!
இந்த வீட்டில் கீழ்சாதிக்காரர்கள் கொத்தனாராக சித்தாளாக வேலை பார்த்திருப்பார்கள் அதனால் தீட்டாகி இருக்கும், அந்தத் தீட்டைப் போக்க பிராமணரை வைத்து மந்திரம் சொல்லிப் பசு மாட்டு மூத்திரம் சாணியைக் கரைத்துத் தெளித்தால் தீட்டுப் போகும் என்றே செய்கிறார்கள்.
அதனை நம்பி உழைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அதேபோல செய்து தான் சார்ந்திருக்கும் உழைக்கும் இனத்தையே இழிவுபடுத்தி பிராமண அடிமையாகிறார்கள்.
மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 124 :
"வீடு முதலானவற்றிற்கு சண்டாளாதிகளால் அசுத்தம் நேரிட்டபோது விளக்குதல் மெழுகுதல் கோமூத்திரம் தெளித்தல் கொஞ்சம் மேல் மண்ணை எடுத்துப்போடுதல் பசுமாட்டை ஒரு நாள் வசிக்கும்படிச் செய்தல் இவ்வைந்தினால் அப்பூமி பரிசுத்தப் படுத்தப்படுகிறது."
(சண்டாளாதிகள் - கீழ்சாதிக்காரர்கள்)
உங்கள் வீட்டிலாவது "கிரஹப்பிரவேசம்" எனும் பெயரில் நீங்கள் வசிக்க வீடுகட்டி கொடுத்த தொழிலாளர்களை அவமானப்படுத்தாமல் இருங்கள்... கடவுள் நம்பிக்கை உடையவராக இருப்பின், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் புரோகிதர் எனும் ஏமாற்றுக்காரனுக்கு இடமளிக்காதீர்கள்... சொந்தங்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்தளிப்பதோடு முடித்துக் கொள்ளுங்கள்...!
Oppilamani Alagar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக