புதன், 28 பிப்ரவரி, 2018

ஆரியத்தின் அடிக்கற்கள்!(வேதம், புராணம்)

ரிக் வேதம் - வேதகாலத்தில் எழுதப்பட்டதுஎன்றுசொல் லப்படும், இந்த நூல் பார்ப் பனர்களின் வாழ்வியல் சூத்திரம் என்று கூறப்பட்டுள்ளது. இதில் யாகங்கள் முதல் பார்ப்பனர்கள் அன்றாடம் கடைபிடிக்க வேண்டியவைகள் என அனைத்தும் உள்ளன. இது இன்றுவரை பார்ப்பனர்களால் அடிபிறழாமல் கடைபிடிக் கப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர்.

கருட புராணம் - பாவ புண் ணியங்கள் குறித்தும், பார்ப் பனர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய தண்டனை கள் குறித்தும் எழுதியுள்ளதாக கூறுகின்றனர்.

உபநிடதங்கள்

பல்வேறு உபநிடதங்கள் பார்ப்பனர்களின் வாழ்விய லில்பிறருடன்எப்படிஇருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள் ளது. இந்த உபநிடதங்கள் அவரவர் கோத்திரங்களுக்காக தனித்தனியாக உருவாக்கப் பட்டுள்ளன.

அதில் ஈசா வாஸ்ய உப நிடதம், கேன உபநிடதம், கடோபநிடதம், பிரச்ன உப நிடதம், முண்டக உபநிடதம், மாண்டூக்யஉபநிடதம்,அய்த ரேய உபநிடதம், தைத்திரீய உபநிடதம், பிரகதாரண்யக உபநிடதம், சாந்தோக்யம் போன்றவைகள் பிரபலமான வைகளாகும்.

இவற்றுடன் 24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள், 20 யோக உபநிடதங்கள், 17 சன்னியாச உபநிடதங்கள், 14 வைணவ உபநிடதங்கள்,14 சைவ உபநிடதங்கள், 9 சாக்த உபநிடதங்கள்.

இவற்றைத் தவிர சுவேதாச் வதரம், கவுஷீதகீயம், நர சிம்மபூர்வதாபனீயம், மகோ பநிஷத், கலிஸந்தரணம், கைவல்யம், மைத்ராயணீயம் போன்றவைகள் உள்ளன.

இந்த உபநிடதங்களின் சட்டதிட்டங்கள் அனைத்தை யும் பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பார்ப்ப னர்களைத் தவிர வேறு எவருக்கும் உபநிடதங்கள் பயன்படாது.

பிரம்ம சூத்திரம்

உபநிடதங்களை சுருக்கி அனைத்துப் பார்ப் பனர்களுக்கும் பொதுவான விதிகளை கொண்ட நூலாக உருவானது பிரம்ம சூத்திரம்.

இதர புராணங்கள், சிவ புராணம், விஷ்ணுபுராணம், கந்த புராணம் போன்ற பெயர்களில் வரும் புராணக் கதைகள், இதிகாசம் எனப்படும் ராமாயணம்,மகாபாரதம், கீதைபோன்றவைகள்பொது மக்களைதங்கள்கட்டுப்பாட் டிற்குள்வைக்ககடவுளர்கள் பெயரால் பல்வேறு காலகட் டத்தில் எழுதப்பட்டவையாகும்.

ஆகக் கூட்டிக் கழித்தால் இந்தச் சமாச்சாரங்கள் எல் லாம் ஆரிய - பார்ப்பனக் கூடாரத்தின் அடிக்கற்களும், பாதுகாப்புச் சுற்றுச் சுவர் களுமே!

இவை மட்டும் போதுமா? இவர்களைத் தவிர மற்ற வர்களைக்கீழ்மக்கள்என்று கூறி அவர்களை அடிமைப் படுத்துவதே இவற்றின் உயி ரான அடிநாதமாகும்.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 24.2.18

சனி, 24 பிப்ரவரி, 2018

வடமொழி ஆரியரின் வஞ்சகப் பார்வை

பண்டைய ஈரானியர்களும் (பாரசீகர்) பண்டைய இந்திய ஆரியர்களும் ஒரு காலத்தில் ஒன்றாக வாழ்ந்து 'இந்தோ ஈரானியச் சமுதாயமாக உருவானார்கள் என்பதை மொழியியல் ஒப்புமையும் பிற அறிவியல் தடயங்களும் காட்டுகின்றன. பண்டைய ஈரானியர்களின் வேதமாகிய ‘அவெஸ்தாவும்’, பண்டைய இந்திய ஆரியர்களின் வேதமாகிய ‘இருக்கும்’, (ரிக் வேதம்) ஒன்றுக்கொன்று நெருங்கியவை களாக இருப்பதும், அவ்விரு சாராரின் மத நம்பிக்கைகளிலும் பழக்க வழக்கங்களிலும் மிகுந்த ஒப்புமை  காணப்படுவதும் இக் கருத்துக்கு வலு சேர்க்கின்றன. இவ்விரண்டு இனத்தவரின் மூதாதையர் சேர்ந்து வாழ்ந்த நிலப்பரப்பு ‘நடு ஆசியா' என்று அறிஞர் சிலரும், ‘தெற்கு உருசியா’வில் உள்ள புல்வெளி நிலம் என்று வேறு பிற அறிஞரும் கூறுவர்.

இவ்விடங்களில் இருந்து புறப்பட்ட இவ்விரு சாரரில் ஈரானியர்கள் மட்டும் ஈரானில் தங்கினர். அவருடன் புறப்பட்டு வந்த இந்திய ஆரியர் ஈரான் வழியாக வந்து அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவுக்குள் குடியேறினர். வேறு சில ஆரியக் குழுவினர்' ஆப்கானித்தான் வழியாக வந்து இந்தியாவுக்குள் குடியேறினர். இக்காலம் கி.மு. 2000 ஆண்டாக இருக்கலாம் என்று அறிஞர் அனைவரும் கருதுகின்றனர். இவ்வாறு தங்கள் கால்கடைகளுக்கு வேண்டிய மேய்ச்சல் நிலங்களைத் தேடி இந்தியாவுக்குள் நுழைந்த பண்டைய ஆரியர்கள் அப்போது சிந்து வெளியில் வளமாக வாழ்ந்து கொண் டிருந்த பழங்குடி மக்களுடனும் திராவிட மக்களுடனும் இடைவிடாது போரிட்டு அவர்களை வென்றனர். அம்மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டும் காட்டிக் கொடுப்பவர்களுக்குத் தரவேண்டி யதைத் தந்து, சேர்த்துக்கொண்டும் அம் மக்களுக்குள்ளே கலகமூட்டிப் பிளவு படுத்தியும், தம் வெற்றியை எளிதாக்கிக் கொண்டனர். பிறகு அவர்களுடன் கலந்துற வாடியும் அடிமைப்படுத்தியும், அவர்களின் அளவற்ற செல்வங்களைக் கொள்ளை யடித்தும், அவர்களின் கோட்டைக் கொத் தளங்களை இடித்துத் தரைமட்டமாக்கியும் அவர்களின் நகரங்களைத் தீயிட்டு எரித்தும், அவர்களின் அணைக் கட்டுகளை இடித்தும், பாழ்படுத்திய ஆரிய வெறியர்கள் தங்கள் மேலாதிக்கத்தை ஆரியவர்த்தம் என்னும் வட இந்தியா முழுவதிலும் விரிவுபடுத்தினர்.

‘ஆரிய’ என்னும் சொல், அரி என்னும் சொல்லுடன் தொடர்புடையது. வேத காலத்தில் அந்தச் சொல்லுக்கு வெளி நாட்டான், ‘வேற்றான்’ என்று பொருள் கூறப் பட்டது. வேற்றாருடன் இணைந்தவன், அவர்களுக்கு இணக்கமானவன் என்றும் பொருள் கூறப்பட்டது. பிற்காலத்தில்தான் ‘நற்குடியில் பிறந்தவன்’ என்று அச்சொல் லுக்குப் பொருள் காணப்பட்டது என்றும் ‘கி.மா.போன்காரத்லேவின்’ என்னும் உருசிய நாட்டு அறிஞர் தம்நூலில் கூறியுள்ளார். இந்தியாவில் நுழைந்த ஆரியர் அப்பொழுது அவர்கள் பேசிவந்த அரைகுறைத் தாய் மொழியுடன், இந்தியப் பழங்குடி மக்கள் பேசிவந்த ‘பிராகிருதம்’ என்னும் மொழியைக் கலந்து தங்களின் ‘வேதகால’ மொழியை உருவாக்கினர். அம்மொழியில் தான் அவர்கள், தங்கள் போர்க்கால நிகழ்ச்சிகளையும் மத சம்பந்தமான செய்திகளையும் பல்லாயிரக் கணக்கான பாடல்களாகப் பாடிவைத்தனர். அப்பாடல்களை மிகுதியாகப் பாடியவர்கள்.

1.பரத்வாசர் 2. காசியபர் 3. கோதமர் 4. அத்திரி 5. விசுவாமித்திரர் 6. சமதக்கினி 7. வசிட்டர்

என்னும் ஏழு முனிவர்களே. இவர்களைச் ‘சப்தரிஷிகள்’ என்று வழங்குவர். பிறகு அப்பாடல்களை நால்வேதங்களாகத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இத்தொகுப்பு முயற்சியை மேற்கொண்டவர் பிற்காலத்தில் ‘பாரதம்’ பாடிய ‘வியாச முனிவர்’ என்று கூறுவர். இப்பாடல்கள் ‘சம்கிதை’ என்றும் வழங்கப்படும். அப்பாடல்களுள்

1028 பாடல்கள் அடங்கிய ‘இருக்கு வேதம்’ 10 மண்டலங்களாகத் தொகுக்கப் பட்டது.

1975 பாடல்கள் அடங்கிய ‘எசுர் வேதம்’ 40 அத்தியாயங்களாக வகுக்கப்பட்டது.

1875 பாடல்கள் இசையமைப்பைக் கொண்ட ‘சாம வேதம்’ எனப்பட்டது.

5987 பாடல்கள் அடங்கிய ‘அதர்வண வேதம்’ 20 காண்டங்களைக் கொண்டது.

இத்தொகுப்பு வேலை ஏறக்குறைய கி.மு. 1200 ஆண்டு அளவில் முடிந்திருக்கலாம் என்றே ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

இவர்களின் வேதப் பாடல்களில் பழங்குடி மக்களையும் திராவிட மக்களையும் தானவர்கள், தஸ்யூக்கள், தாசர்கள், அசுரர்கள், அரக்கர்கள் முதலிய பெயர்களால் இழித்தும் பழித்தும் எழுதப்பட்டுள்ளன.

நாளடைவில் பழங்குடி மக்களின் பிராகிருத மொழியைக் கொண்டு தங்களின் வேத மொழியை  உருவாக்கிய ஆரியர்கள் அப்பொழுது வடஇந்தியாவில் வழங்கிவந்த பழந்தமிழின் திரிபான திராவிட மொழிச்சொற் களையும் இலக்கண அமைப்பையும் பயன் படுத்தித் தங்களின் இலக்கிய மொழியாகிய ‘சமற்கிருதத்தை உருவாக்கினர். ‘பிராகிருதம்’ என்றால் பழையது அல்லது முன்பு இருந்தது என்று பொருள்படும். ‘சமற்கிருதம்’ என்றால் புதிதாகச் செய்யப்பட்டது அல்லது கலந்து செய்யப்பட்டது என்று பொருள்படும். சமற்கிருதத்தைச் செம்மைப்படுத்தியபின் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘பாணினி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தமக்கு முன் வழங்கிய சமற்கிருத இலக்கணங்கள் சிலவற்றைப் பயன்படுத்தி ‘அட்டாத்யாயி’ என்னும் பெயர் கொண்ட பேரிலக்கணத்தை இயற்றினார். எனினும் இது எழுத்து சொல் இலக்கணங்களை மட்டுமே கொண்டது. இதனைப் ‘பாணினியம்’ என்றும் வழங்குவர். இதற்குப்பின் ‘காத்தியாயனர்’ என்பார் இந் நூலுக்கு விளக்கவுரை எழுதி வளப்படுத் தினார் என்பர்.

இந்த இலக்கணம் சுமார் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றிச் சமற்கிருதத்தைச் செம்மைப்படுத்திய பிறகுதான், புகழ்பெற்ற இராமாயணக் காவியத்தை வான்மீகி முனிவரும் பாரதக்காவியத்தை வியாச முனிவரும் எழுதினர் என்பர். இதற்குப் பிறகு தான் சமற்கிருத மொழியில் புராணங்களும் காவியங்களும் இலக்கணங் களும் பெருகத் தொடங்கின. எனினும் இம்மொழி எக் காலத்தும் இலக்கிய மொழியாக இருந்து வந்துள்ளதன்றி மக்கள் பேசும் மொழியாக இருந்ததில்லை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவ்வாறு வந்த ஆரியர்கள் தங்கள் வாழ்வையும் மொழியையும் வளப் படுத்திக் கொண்டபின் வட நாட்டிலிருந்து தென் தமிழ் நாட்டுக்குத் தங்கள் பண்பாட்டு மேலாதிக்கத்தைப் பரப்பிட விரும்பி அகத்தியர் நாரதர் முதலிய முனிவர்களின் தலைமையில் ஆரியப் பூசாரிகளையும் பாணர்களையும் முனிவர்களையும் ஆசிரியர் களையும் சாரி சாரியாக அனுப்பி வைத்தனர். அப்படி வந்தவர்கள் ‘மன்னர் எவ்வழியோ, அவ்வழியே குடிமக்களும்’ என்னும் வழக்கை அறிந்து முதலில் மன்னர்களையே அணு கினர்.

அவர்கள் தங்களின் வெள்ளைத் தோலையும் வெடிப்பொலி மொழியையும் காட்டித் தாங்களே நிலத்தேவர் என்றும் தாங்கள் பேசும் மொழியே தெய்வமொழி என்றும் பசப்பினர். ஆரியரின் வேள்வி முறையை அரசர்களும் மக்களும் பின்பற்ற வேண்டும் என்றும், அப்பொழுது தான் அவர்கள் இறந்தபின் சொர்க்கம் என்னும் அழியாத சுகவாழ்வு கிடைக்கும் என்றும் இறைவனே தங்களை மேலான பிறவியில் படைத்தான் என்றும், இறைவன் வாழும் கோயில்களில் வடமொழி அர்ச்சனையும் வடமொழிப் பூசாரியின் வழிபாட்டையும் நடத்தினால் தான் வையத்தில் பருவ மழை தவறாது பெய்து வளம் பெருகும் என்றும், இறைவனே பல்வேறு வருணத்தார்களையும், சாதியார்களையும் படைத்தான் என்றும், முற்பிறவியில் அவரவர்கள் செய்த வினை களுக்கேற்றவாறே இப்பிறவியில் அவர்கள் பல்வேறு சாதியார்களாகப் பிறப்பெடுத்தனர் என்றும், வேதங்களும் சாத்திரங்களும் இறைவன் அருளியவை என்றும், அவற்றைப் பரப்பவே தாங்கள் வந்ததாகவும் அதனால் மற்றவர்கள் எல்லாம் பார்ப்பனருக்குப் பணிந்து ஏவல் செய்து வாழ வேண்டும் என்றும் கூறிப் பொய்க்கதை களையும் புளுகு மூட்டைகளையும் அவிழ்த்து விட்டு அவற்றை நம்பும்படி நயம்படக் கூறியும் நரக - மோட்சத்தைக் காட்டிப் பயமுறக்கூறியும் தங்களின் நச்சுக் கருத்துக்களை விதைத்தனர்.

அவற்றை நம்பிய மூவேந்தரும், ஆரியப் பார்ப்பனர் கூறியபடி பலவகை வேள்விகள் செய்யத் தலைப்பட்டனர். பார்ப்பனர்களுக்கு விளைவு மிக்க மருத நில ஊர்களைக் கொடுத்து அவர்கள் வளமாகத் தங்கி வாழ்வதற்குரிய அகரங்களை (அக்ரகாரம்) அமைத்துக் கொடுத்தனர். தமிழ்ப் பூசாரிகள் விலக்கப்பட்டுக் கோயில்களில் வடமொழிப் பூசாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அரசர்களுக்குக் குருக்களாகவும் அமர்ந்து ஆட்டிப் படைத்தனர். அதுவரை அப் பதவிகளில் இருந்த தமிழ் வள்ளுவக் குருமார்கள் விலக்கப்பட்டனர். வேத பாடசாலைகள் பெருகின. அங்குப் பயிலும் பார்ப்பன மாணவர்களுக்கு விடுதி வசதிகள் செய்யப்பட்டன. நாடுதோறும் பார்ப்பனர்கள் உண்பதற்கே ஊட்டுப்புரைகள் என்னும் சத்திரங்கள் அமைக்கப்பட்டன.

தமிழ் மக்களுள் செல்வர்களும் அரசர் களைப் பின்பற்றி ஆரியப் பூசாரிகளுக்கு அடிபணிந்து அவர் களுக்குத் தானங்களும் தட்சினைகளும் தருவதில் பெருமைப் பட்டுக்கொண்டனர். திருமணச் சடங்கு, கோயில் வழிபாடு, பள்ளிக்கல்வி முதலிய இடங்களிலும் சமற்கிருதம் ஆட்சி செலுத்தத் தொடங்கியது. பொது மக்கள் மத்தியில் இராமாயண பாரதக் கதைகள் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கின. சமற்கிருதம் வேதமொழியென்றும் தமிழும் அது போன்ற பிற மொழிகளும் சமற்கிருதத்தில் இருந்தே தோன்றினவென்றும் தமிழ்ச்சொற்கள் எல்லாம் ஆரியச் சொற்களே என்றும், தமிழ் எழுத்துக்களும் ஆரிய எழுத்துக்களே என்றும் பொய்வழக்கு புனைந்தனர்.

காலந்தோறும் புதுப்புது தாசர்களால் அப்பொய்கள் மெருகுபடுத்தப்பட்டன. இறுதியில் நீசமொழி, பிசாசு மொழி என்றும் இயற்கைத் தமிழ் மொழியை வெறிபிடித்த ஆரியத் துறவிகளே எரிச்சலுடன் வெறுத்துப் பேசினர். சுமார் கி.மு. 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தொடங்கிய இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு கி.பி. நாலாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்தது என்று துணியலாம். அதன்பிறகு தமிழ்நாட்டு மன்னர்களே வடக்கிலிருந்து அவர்களை வரவழைத்தனர்.

இச்சமயத்தில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் பாடிய பாடல் ஒன்றும் நினை வுக்குள் நிழலாடுகிறது. 
தமிழினைப் போல் உயர்ந்த மொழி

தரணியெங்கும் கண்டதில்லை 
தமிழனைப்போல் மொழிக்கொலையில்

தலைசிறந்தார் எவருளரே?

என்பதே அப்பாடல்

இதற்குத் தானே தான் சரியான சான்று என்று காட்டுவது போல ‘சாமிநாத தேசிகர்’ என்பவர் கிளம்பினார். ‘இலக்கணக் கொத்து' என்று அவர் எழுதிய புதிய இலக்கண நூலில் இப்படிக் கூறினார்.

“தமிழுக்கே உரிய எழுத்துக்கள் 5 மட்டுமே, (ற, ன, ழ, எ, ஒ) மற்ற எழுத்தெல்லாம் வடமொழிக்கே உரியவை. (வடமொழியில் இந்த 5 எழுத்துக்களும் அறவே இல்லை) இப்படி ஒரு மொழி (தமிழ்) உள்ளது என்று கூறுவதற்கே வெட்கமாயுள்ளது என்று வெட்கப்படாமலே அவர் எழுதியுள்ளார். இதுபோல் அவர் வழியில் பிள்ளைத் தனம் கொண்ட பெரியவர்கள் சிலரும் கொள்ளி வைப்பது போல் கூசாமல் தமிழ்மொழியைக் குறைத்துக் கூறி வந்துள்ளனர். காலம் மாறும் பொழுது கருத்துக்களும் மாறவேசெய்யும் அறிவியல் வெளிச்சம் பரவும் போது, மொழியியல் ஆராய்ச்சி மோதும் போது இந்த வீண் பழிகள் விலகி மறைந்து உண்மைநிலை என்னும் ஒளி பெருகுவது உறுதியன்றோ?

- கவிஞர் மீனவன்
(புலவர் இர.கு.நாராயணசாமி)

நூல்: பண்டைய தமிழரும் 
பரதவர் வாழ்வும் (பக்கம் 7-13)

- விடுதலை ஞா.ம., 13.1.18

திங்கள், 5 பிப்ரவரி, 2018

பிறப்பின் ரகசியம் - ஒரு அசிங்கம்...!


இரா.கண்ணிமை

இந்து சமயப் புராணங்களில் மனிதப்பிறப்பு - மற்றுமுள்ள உயிர்களின் உற்பத்தி வரலாற்றை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தி சொல்லியிருக்கிறது. “பராபரமாகிய பரமேசுவரன் தராதலம் படைக்கத் தாம் நினைத்தருளிப் பராபரத்தில் பரந்தோன்றி, பரத்தில் சிவன் தோன்றி, சிவனில் சக்தி தோன்றி, சக்தியில் நாதந்தோன்றி, நாதத்தில் விந்து தோன்றி, விந்துவில் சதா சிவன் தோன்றி, சதாசிவத்தில் மாயேசுவரன் தோன்றி, மாயேசுவரனில் ருத்திரன் தோன்றி, ருத்திரனில் விஷ்ணு தோன்றி, விஷ்ணுவில் பிரம்மா தோன்றி, பிரம்மாவில் ஆகாயம் தோன்றி, ஆகா யத்தில் வாயு தோன்றி, வாயுவில் அக்கினி தோன்றி அப்பு தோன்றி, அப்புவில் பிருதுவி தோன்றி, பிருதுவியில் அன்னந்தோன்றி, அன்னத்தில் நாய், மிருகம், பட்சி தாவரங்கள் அனைத்தும் தோன்றிற்று”.

கடவுள் உலகத்தை உண்டாக்க நினைத்து, கடவுளால் உலகம் உண்டாக்கப்பட்டு அதில் சிவன் உண்டாக்கப்பட்டு - சிவனிலிருந்து சக்தி என்பவள் உண்டாக்கப்பட்டாள் என்பதாம்.

‘சக்தியில் நாதந்தோன்றி, நாதத்தில் விந்து தோன்றி, விந்துவில் சதாசிவன் தோன்றி, சதாசிவனில் மாயேசுவரன் தோன்றி, மாயேசுவரனில் ருத்திரன் தோன்றி, ருத்திரனில் விஷ்ணு தோன்றி, விஷ்ணுவில் பிரம்மா தோன்றி’ - என்பதற்கு பொருள் என்னவென்றால் (சிவன் - சக்தி) கணவனும் மனைவியும் கூடியதே நாதமாம். அந்த நாதமென்கின்ற வித்தாகிய விந்து விழுந்து கர்பமுண்டாகி அந்த விந்து விழுந்த கர்பத்திலிருந்து சதாசிவன் பிறந்தான். சதாசிவனுக்கு மாயேசுவரன் பிறந்தான். சதாசிவனுக்கு மாயேசுவரனும் - அவனுக்கு விஷ்ணுவும், விஷ்ணுவுக்கு பிரம்மாவும் பிறந்தான் என்பதாம்.

இதை எடுத்துக் கொண்டால் - புராணத்தின்படி அய்ந்து தலைமுறைகளை மாத்திரம் காட்டியிருக்கிறது. பராபரத்தில் (தெய்வத்தால்) பரந்தோன்றி (வானமும் பூமியும் உண்டாகி) பரத்தில் சிவன் தோன்றி, சிவனில் சக்தி தோன்றி என்பதில் - சிவனை ஆதியில் உண்டான மனிதனாய் எண்ணாது - தேவனாகவும், சக்தியை ஆதி மனுசியாய் எண்ணாது - தேவியாகவும் சொல்லப் பட்டுள்ளது. இவ்வித மாறுபாடான கதையைப் பார்த்தால் - இது முற்றிலும் கற்பனையான சிதைவெனக் கூறலாம். அதுவல்லாது - மற்ற பிறப்புகளும் கூட பொய்யெனப் பிதற்றப் பட்டதாய் தெரிகிறது.

மற்றொரு கதையில் காசிபப் பிரம்மாவின் பதின்மூன்று மனைவிகளில் முதல் மனைவியான அதிதி, முப்பத்து முக்கோடி தேவர்களையும், விஷ்ணுவையும் பெற்ற தாகவும், மூன்றாவது மனைவி மதி மனிதர்களைப் பெற்றதாகவும், அப்படியே பதின்மூன்று மனைவிகளும் - அனைத்து உயிர்களையும் தங்கள் யோனி வழியாய்ப் பெற்றதாகவும் காணப்படுகிறது. (இராமாயண வசனம் - ஆரண்ய காண்டம் - சடாயுவைக் காணுதல் 114ஆம் பக்கம்)

பிரம்மாவின் முகத்தினின்று பிராம ணனும், தோளிலிருந்து சத்திரியனும், தொடை யிலிருந்து வைசியனும், பாதங்களிலிருந்து சூத்திரனும் பிறந்ததாய் யசுர்வேதம் அத்தியாயம் 31-11 இலும் அதர்வனவேதம் அத்தியாயம் 19-66இலும் எழுதப்பட்டுள்ளது. இவையன்றி ரிக்வேதத்தில் மனிதப் பிறப்பை பலவகையாய் சொல்லப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று:

சுலோகம்

“வேதா நானுபயம் ஜனாப்ரவோ பன்னியா...

........................................................ அமிர்த் பந்தவ.

(ரிக் மண்டலம் 10, சூதகம் 72இல் காண்க)

பொருள்:

பிரம்மஸ்பதியாகிய தச்சன், தேவதை களைச் செய்தான். தேவதைகளுடைய முன்யுகத்தில் இம்மையினின்றும், உண்மை தோன்றின. அவ்வுண்மையினின்றும், திசை களும், பிறகு உத்தானபதமும் தோன்றின. அதனின்று பூமி உண்டாயிற்று. தக்சன் என்பவன் தோன்றினான். அவனிடத்தி லிருந்து அதிதி, தோன்றினாள் - அதிதியி னின்றும் இறவாத்தேவர்கள் வந்தனர் என்பதாம்.

இவை அனைத்தையும் பார்க்கும்போது - இயற்கையின் கூற்றுக்கு மாறாய் - நம்பத்தகாத பெருங்குழப்பத்தையும் உண் டாக்கும் - இந்துமதப் பொய்ப் புராணத்தின் புளுகு தெற்றன விளங்குகிறது.

ஒரு நாள் சிவன், தன் பெருவிரலின் நகத்தால் சக்தியின் தொடையில் கீற, சக்தி வலி பொறுக்க முடியாமல் ‘ஓ’ என  கத்தினாளாம். அதற்கு சிவன் ‘அ’ என்று கூற - பிறகு சக்தி ‘உ’ என்றாளாம். இவ்வாறு இம்மூன்றெழுத்துப் பிறந்ததாம். (ஓ-அ-உ) இந்த ஓ! என்ற எழுத்திற்கு, ஓம்பு நாதமென்றும், அண்டமென்றும், உடல்மேல் தோலென்றும் விநாயகனென்றும், மூல மென்றும், ஊமை எழுத்து - சக்தி எழுத் தென்றும், விந்தெழுத்தென்றும் பொருளாம். ‘அ’ என்னும் எழுத்து சிவனைக் குறிக்கும். ‘உ’ எழுத்து சக்தியைக் குறிக்கும். பிறகு ஒரு பொருளில் ‘(அ)’ இலக்கம் எட்டும் ‘(உ)’ இலக்கம் இரண்டும் ஆகும். ஆக எட்டும் இரண்டும் பத்தாகும். இதுவே திருமந்திரமாம்.

வெண்பா

ஓவெழுத்தே வித்தாய் உகாரமதில் வேரோடி

ஆ,வெழுத்திலே முளைத்து - அஞ்சுகப்பாய்

பூத்ததே வானம் புவனம் பதினாலுகங்

காய்த்ததே பஞ்சாட்சரம்.

ஓ - எழுத்தான சக்தியே வித்தாகி ‘உ’ எழுத்தான சிவனில் கலந்துகூடி ‘ஆ’ எழுத்தான சக்தியில் பஞ்சகர்த்தாக்கள் என்னும் அய்வரும் உண்டாகி இந்த அய்வராலும் மனு மக்கள் பெருகினார்கள் என்பதாம்.

தெளிவான நடையின்றி - விளங்கிக் கொள்ள முடியாத வகையில் - மானுடப் பிறப்பைப் பற்றியும் உயிர்கள் - உலகம் உண்டானது பற்றியும் இந்துப் புராண - மனுதர்ம சாத்திரங்கள் எழுதி வைத்துள் ளதை நம்பி - நம்மக்கள் - மோசம் போனார் கள். ஆதாம், ஏவாள் கதையெல்லாம் - இதற்கு எம்மட்டு?

உயிர்த் தோற்றம் - உலகம் தோன்றிய வரலாற்றையெல்லாம் படித்த பிறகுமா - அறிவு ஜீவிகள் அசிங்கமான - பிறப்பின் பித்தலாட்டப் பொய்யுரைகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

- விடுதலை ஞாயிறு மலர்,20.1.18

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பிராமணத் தன்மைக்குக் காரணம்?-2

மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..
மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.
யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?
யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரன். புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."
அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,
ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)
மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:
"ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."
மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...
‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’
அதாவது –  ‘சூத்திரன்  பிராமணனாகி  விடலாம்;  பிராமணனும்  சூத்திரனாகலாம்;  அதே  போல்,  க்ஷத்ரிய  மற்றும்  வைசிய  வர்ணங்களைச்  சார்ந்தவர்களின்  மகன்களும்,  மகள்களும் வேறு  வர்ணத்தை  அடையலாம்’.    அவர்கள்  வேதம்  ஓதும்  பிராமணர்கள் கூட ஆகலாம்  என்று சொல்கிறது.

-சிறிராம தாசன் முகநூல் பதிவு.

சனி, 3 பிப்ரவரி, 2018

பிறப்பின் அடிப்படையில் பிராமணரா?

இதற்க்கு வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :
1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.
2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.
3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.
4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.
5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார்.
இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள்  பிரிக்க பட்டது .
வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக  முடியும் என்று ஶ்ரீமத் பாகவதம் சொல்கிறது.
-சிறிராம தாசன் முகநூல் பதிவு.

(இப்படியும் சில முறன்பாடுகள்)