பதிலடி பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிலடி பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மே, 2024

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ?


பதிலடிப் பக்கம் : அது என்ன பிரம்ம முகூர்த்தம்?

விடுதலை நாளேடு
Published April 29, 2024

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்

பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ?
“பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் உள்ளன. இதில் இரவின் கடைசி முகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.
இந்த நேரத்தில் சரஸ்வதியும் பிரம்மனும் தன் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள் என கூறப்படு கிறது. சூரியன் உதயமாகும் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் தொடங்கிவிடும், இது ஒவ்வொரு நாளும் மாறுபடும்.
உதாரணமாக இன்றைக்கு சூரியன் ஆறு மணிக்கு உதிக்கிறது என்றால் அதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு அதாவது நான்கு முப்பதுக்கு ஆரம்பித்து விடும். பொதுவாக கூற வேண்டும் என்றால் அதிகாலை 4 -6 பிரம்ம மூகூர்த்தம் ஆகும்.
பல மதத்தினரும் அதிகாலையில் இந்த நேரத்தில் ஜெபம் செய்வது, தியானம் மேற்கொள்வது, இஸ்லாமி யர்களின் முதல் தொழுகை என மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கு ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு பெயர் கூறிக் கொண்டாலும் இந்து மதத்தில் இருந்து தோன்றி யதுதான் பிரம்ம முகூர்த்தம்.
பல வெற்றியாளர்களின் ரகசியமான நேரம் இந்த நேரம் தான் . நமது மனநிலையில் நிம்மதி தரக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் நாம் எழுந்து விட்டோம் என்றால் அன்றைய நாள் நீண்ட நேரம் நமக்கு கிடைக்கும். நமக்காக கூட நேரங்களை ஒதுக்கிக் கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டியவை:
இந்த நேரத்தில் கடவுளின் மந்திரங்களை உச்சரிப் பதும், கடவுள் வழிபாட்டிற்கு உகந்த நேரம் .அதி காலையில் குளித்துவிட்டு பூஜை செய்வது விளக் கேற்றுவது போன்றவற்றை மேற்கொள்வது இரட்டிப் பான பலன்களை கொடுக்கும்.
தியானம் மேற்கொள்ள உகந்த நேரம் ஆகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெட்ட வெளியான பகுதியில் அமர்ந்து இயற்கையான காற்றை சுவாசித்து தியானம் செய்வதன் மூலம் பல உடல் ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. இந்த நேரத்தில் நமது உடல் புதுப்பிக்கப்படுகிறது.

மேலும் புத்தகம் படித்தல் மற்றும் இன்றைய நாளுக்கான தீர்மானங்களை திட்டம் செய்வதற்கும் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் பிரபஞ்ச ஆற்றல் அதிகமாக கிடைக்கக்கூடிய நேரம் ஆகும்.
இந்த நேரத்தில் நாம் செய்யும் செயல்களின் பலன்கள் இரட்டிப்பாகவும் விரைவிலும் நமக்கு வந்து சேரும்.உங்கள் ஆசைகள் எதுவாயினும் இந்த நேரத்தில் தொடர்ந்து கூறி செபிக்கும் போது விரைவில் நடக்கும் .

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யக்கூடாதவைகள்:
இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இர வில் நாம் எடுத்துக் கொண்ட உணவே பாதி செரித்துக் கொண்டிருக்கும். இந்த நிலையில் நாம் ஏதேனும் உணவை சாப்பிட்டால் அது அஜீரணத்தை ஏற்படுத் தும்.
கடுமையான வேலைகளை செய்யக்கூடாது இது ஆயுளைக் குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தேவையில்லாத பேச்சுக்களை பேசக்கூடாது.
எனவே பிரபஞ்ச சக்தியும் தெய்வ சக்தியும் நிறைந்த இந்த நேரத்தை பயன்படுத்தி உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.”

இப்படியாக சமூக வலைதளத்தில் பரப்புரை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ஏதாவது புத்திக்கு இடம் இருக்கிறதா?
கடவுள் ஒருவர்தான் – அவருக்கு உருவம் கிடை யாது. எங்கும் நிறைந்துள்ளார்; தூணிலும் இருப்பார் – துரும்பிலும் இருப்பார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இது போன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது மனித சமூகத்திற்கு மாபெரும் கேடல்லவா?
ஒன்றே கடவுள் என்று சொல்லப்பட்ட பிறகு பிரம்மன் எங்கிருந்து குதித்தான்? சிவன் எப்படி வந்தான் – மகாவிஷ்ணு எங்கிருந்து பிறந்தான்? உருவ மற்ற இந்தக் கடவுள்களுக்கு, மனைவிகள், பிள்ளைக் குட்டிகள் என்பதெல்லாம் பச்சையான முரண்பாடுகள் இல்லையா?

ஜெபம் செய்வது, தியானம் செய்வது என்பது தான் மனிதனுக்கு வேலையா? எவ்வளவோ பணிகளில் ஈடுபட வேண்டிய மனிதனை இதுபோனற் மூடக் குட்டையில் மூழ்கடித்து மனித சக்தியையும் காலத் தையும் பொருளையும் கரியாக்குவதா?
பிரம்ம முகூர்த்தம் என்பதை எழுதி வைத்தவர் யார்? எந்தக் காலத்தில் எழுதப்பட்டது? எந்த மொழி யில் எழுதப்பட்டது?
இந்து மதத்தை நம்புகிற ஒருவர் அமெரிக்கா சென்று பெரிய பதவிகளில் அலங்கரிக்கிறார்களே – அவர்களுக்கு இந்த பிரம்ம முகூர்த்த நேரம் எது? அமெரிக்க நேரமும் இந்திய நேரமும் ஒன்றா? பொருந்துமா?
இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி-லீ)இல் மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்த் திருத்த உணர்வையும் வளர்க்கவேண்டியது ஒவ் வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளதே! அப்படி இருக்கும் பொழுது இது போன்ற பிரம்ம முகூர்த்த புரூடாக்களை அனுமதிக் கலாமா? இது சட்ட விரோதமும், மானுட வளர்ச்சிக் கேடும் ஆகாதா? சிந்திப்பீர்!

வியாழன், 22 பிப்ரவரி, 2024

வேதத்தின் தரம் எத்தகையது ? - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

பதிலடிப் பக்கம் – ‘விஜயபாரதமே!’ பதில் சொல்!

விடுதலை நாளேடு

கவிஞர் கலி.பூங்குன்றன்

(2.2.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ்.
வார இதழான ‘விஜயபாரத’த்தின் பதில்களுக்குப் பதிலடி இங்கே!)
கேள்வி: நூல்களின் தேவை என்ன?
பதில்: சாஸ்திரத்தின் சாரத்தை அறிய வேண்டும். அதன்பிறகு நூல்களின் அவசியம் என்ன? சாரத்தை கிரகித்த பிறகு இறையனுபூதிக்காக ஆழ்ந்து மூழ்க வேண்டும். இறைவனே உண்மை – உலகம் உண்மை யல்ல என்ற வேதாந்தத்தின் சாரத்தை தேவி எனக்கு அறிய செய்தாள் – ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நமது பதிலடி: இறைவனே உண்மை – உலகம் உண்மையல்லவாம்! உண்மையற்ற உலகில் ஏன் வாழ்ந்து தொலைக்கிறார்களாம் – ராமன் கோயில் கட்டுகிறார்களாம். வேதத்தின் சாரத்தைப் பற்றி வேறு பேசுகிறது ‘விஜயபாரதம்’.
வேதத்தின் தரம் எத்தகையது என்பதற்கு இதோ ஒன்றிரண்டு இங்கே:
“தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீனம் தெய்வதம்
தன்மந்திரம் பிரம்மண உதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்”
– ரிக்வேதம் 62ஆவது பிரிவு, 10ஆம் சுலோகம்
இதன் பொருள்:
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்தி ரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராம்மணர் களுக்குக் கட்டுப்பட்டவை – பிராம்மணர்களே நமது கடவுள்.
– இந்த வேதத்தைத்தான் எல்லோரும் ஏற்க வேண்டுமாம். ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதத்தின் விபரீதப் புத்தியைப் பார்த்தீர்களா?
“இந்திரா! உன்னை இந்த அதிகாலைப் படைய லுக்குக் கூப்பிடுகிறோம். சோமரசம் பிழியப்பட்டிருக் கிறது. தாகமுள்ள மானைப் போல் குடி.
எங்கள் ஆசைகளை குதிரைகளாலும், பசுக்களா லும் நிறைவேற்று” (ரிக்வேதம், 163-165).
“இந்திரனே! பழைமையாகவே தொன்றுதொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும், முதலில் உள்ளவர்களைக் கிழித்தெறியவும், நடுவில் உள்ளவர்களை நசுக்கிக் கொல்லவும்.
எவ்வளவு நாட்கள்தான் நீ மனதிட்பம் இல்லாதவன் போல், இருப்பாய்? வேள்வியை வெறுக்கின்ற, தெய் வத்தை வணங்காத தாசர்களை, உனது எரியும் ஈட்டி களைச் செலுத்திக் கொல்லவும்.”
– ரிக்வேதம், 2710
விஷ்ணு இந்தப் பூமியை மூன்று அடிகளால் அளந் தான், ஆக்ரமித்தான் அந்தப் பூமியை எங்களுக்குக் கொடுத்தான். அவன் எங்கள் தலைவனாக இருக் கட்டும்.
– ரிக்வேதம், 5926
அவன் ஆரியர்கள் வசிப்பதற்கான, பூமியை – மூன்று உலகங்களையும் – அளந்தான் – ஆக்ரமித்தான், மாட்டுத் தலையால் தன் தலையை மறைத்துக் கொண்டு சண்டை செய்த, தாசனைக் கொன்றான்
– ரிக்வேதம், 5927
யார் இந்த ஆரியர்கள் – தாசர்கள்?
திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இத்தகைய விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன”– டாக்டர் ரோமேஷ சந்திர மஜும்தார் எம்.ஏ. (‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’, பக்.22)
ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடையத் தளங்களில் திரா விடர்கள் – தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இது ஆரியக்கவிகள் திராவிடர் மீது கெண்டிருந்த வெறுப்பைக் காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
– சி.எஸ்.சீனிவாசாச்சாரி எம்.ஏ.,
எம்எஸ்.இராமசாமி அய்யங்கார் எம்.ஏ.
(“இந்திய சரித்திரம்”, பக். 16,17)
(1) ஆரியர் – திராவிடர் என்பது வெள்ளைக்காரன் இட்டுக் கட்டியதல்ல – வேதங்களிலேயே இடம் பெற்றிருக்கிறது. வேதங்களில் கூறப்படும் தாசர்கள், தஸ்யூக்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்களே என்பதும், இந்திரன் ஆரியர்களின் போர்த் தலைவன் என்பதும், மொடாக்குடிகாரன் என்பதும் ரிக் வேதத்தி லேயே கூறப்பட்டுள்ளது என்று ஆதாரங்கள் கூறு கின்றனவே. வேதத்தின் சாரம் பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘விஜயபாரதம்’ பதில் கூறி இருக்கிறதே – இந்தப் பதிலடிக்கு முன் அவை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியுமா?

– – – – –


கேள்வி: இறைவன் மீது நாம் செலுத்தும் பக்திக்கு என்ன பலன் கிடைக்கும்?
பதில்: இறைவன் எல்லா உயிரினங்களிலும் இருக் கிறார் என்பது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு வரும் தத்தம் சமஸ்காரம், செயல்களுக்கு ஏற்ப வினைப் பயனை அனுபவிக்கிறார்கள். சூரியன் ஒன்றுதான். ஆனால் அதன் ஒளியின் பிரதிபலன்கள் இடம், பொருளின் தன்மைக்கு ஏற்ப வேறுபடுகின்றன.
நமது பதிலடி: இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு, ஒவ்வொருவரும் தத்தம் சமஸ்காரம் செயல்களுக்கு ஏற்ப வினைப் பயனை அனுபவிக்கிறார்களாம்!
எல்லோரையும் இறைவன் படைத்தான், எல்லா உயிர்களிலும் அவன் இருக்கிறான் என்ற சொல்லி விட்டு, வினைப் பயன் தனித்தனி என்பது எங்கிருந்து குதித்தது? அவனின்றி தான் எதுவும் அசையாதே – அப்படி இருக்கும் போது வினைப்பயன்களுக்குப் பொறுப்பும் அந்த இறைவன் தானே!

– – – – – –

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

வருணாசிரமம் பிறப்பின் அடிப்படையிலா - குணத்தின் அடிப்படையிலா?

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

வருணாசிரமம் பிறப்பின் அடிப்படையிலா - குணத்தின் அடிப்படையிலா?

6

'துக்ளக்'காக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதமாக இருந்தாலும் சரி, ஆளுநர் ரவியாக இருந்தாலும் சரி, ஒன்றை அவர்கள் திட்டமிட்டு முரட்டுத் திரை போட்டு மறைக்கிறார்கள்.

ஹிந்து மதம் கூறும் சனாதனம், வர்ணாஸ்ரமம் என்பது எல்லாம் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பது எல்லாம் பிறப்பின் அடிப்படை யிலானது அல்ல; குணத்தின் அடிப்படையிலானதே என்று அடம்பிடிக்கிறார்கள்.

'துக்ளக்'கில் ''சோ'' ராமசாமி இப்படி எழுதினார்:

7

"இந்த நிலையிலே ஒரு விஷயத்தை தெளிவாக்கி விடுவது நல்லது. இந்த நான்கு வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை அல்ல - குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர் கள் இப்படி வகைப்படுத்தப்பட்டனர். இதுபற்றி 'எங்கே பிராமணன்' தொடரில் விளக்கமாக எழுதியிருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் ஓரளவுக்கு இவ்விஷயத்தைப் பார்க்க நேரிடலாம். குணம், வாழும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த நான்கு வகைகள், காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்து, பிறப்பின் அடிப்படையில் ஏற்படுகிற பிரிவு களாக உருவெடுத்து விட்டன" என்று சாதிக்கிறார்.

'சோ'வின் கட்டுரையில் பிற்பகுதி முழுவதுமே இதனை மய்யமாக வைத்தே புனையப்பட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுத்து விட்டாலே அந்த எல்லாவற் றிற்குமே போதுமானதாகி விடும்.

வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையிலானது அல்ல என்பது 'சோ'வின் வாதம்.

இது அடிப்படையிலேயே தவறானது என்பது இந்து மதத்தின் அடிப்படை ஆதாரங்களைக் கொண்டே தகர்த்து விடலாம்.

''சோ'' குறிப்பிடும் வேதங்களுள் 'யஜூர் வேதம் ஒன்று; அதன் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்ன கூறுகிறது?

"ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹு ராஜன்ய: க்ருத:|

ஊரூததஸ்ய யத்வைஸ்ய பத்ப்யாம் சூத்ரோஅஜாயத"||

(கடவுளின் முகத்தினின்றும் பிராமணன் பிறந்தான், தோள்களினின்றும் க்ஷத்திரியன் பிறந்தான், தொடை களினின்று வைசியன் பிறந்தான், பாதங்களினின்று சூத்திரன் பிறந்தான்).

அதர்வண வேதம் என்ன கூறுகிறது?

"ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன் யோபவத்| 

மத்யம் ததஸ்ய யத் வைஸ்ய: பத்ப்யாம் சூத்ரோ அஜாயத"||

(அத்தியாயம் 19 சுலோகம் 6)

யஜூர் வேதத்தில் கூறப்பட்ட அதே பொருள்தான் இதற்கும். 

"மனுர்வையத் கிஞ்சிதவத் தத் பேஷஜம்" - இதன் பொருள் மனு எதைச் சொன்னாரோ அது மருந்து என்பதாகும்.

பதினெட்டு ஸ்மிருதிகள்; மனுஸ் மிருதிக்கு விரோத மாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக் கொள்ளத்தக்கதன்று என்று மனுதர்ம சாத்திரம் பீடிகை கூறுகிறது. - அவ்வளவுப் பெரிய அந்தஸ்து மனுதர்ம சாத்திரத்துக்கு!

அந்த மனுவானப்பட்டவரும் என்ன கூறுகிறார்?

அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறு மைக்கு உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார் (அத்தியாயம் ஒன்று சுலோகம் 87).

வேதங்களும், மனுதர்ம சாத்திரமும் இதன் மூலம் எதை உறுதிப்படுத்துகின்றன?

பிரம்மா என்ற கடவுள் படைப்பிலேயே பிறப்பின் அடிப்படையிலேயே தன் உடலின் பல்வேறு பாகங் களிலிருந்தும் பிராமணன், க்ஷத்திரியன். வைசியன். சூத்திரர்களைப் படைப்பித்து இருக்கிறான் என்பது திட்டவட்டமாகத் தெளிவாக்கப்பட்டுள்ளதா இல் லையா?

படைக்கப்படும் போதே இந்தப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படையில் பிரம்மா படைத்து விட்டார் என்று இந்து மத வேதங்களும், ஸ்மிருதியும் கூறிவிட்ட நிலையில், பிறப்பின் அடிப்படையில் இவை உண்டாக் கப்படவில்லை என்று 'சோ' போன்றவர்கள் கூறுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். 

வேதங்களையும் ஸ்மிருதிகளையும் மறுக்கும் மகா புரட்சியாளராக 'சோ' மாறி விட்டாரா?

அல்ல அல்ல! வேதங்கள், ஸ்மிருதிகள் கூறிய வற்றை ஏற்றுக் கொண்டு அவற்றின் அடிப்படையில் விவாதிக்க முயற்சித்தால் அவாளின் இந்துத்துவா கபாலம் கழன்றுவிடும் என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும் கடவுளே ஆனாலும், காந்தியாரே ஆனாலும் அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் காரியத்துக்கு எந்த அளவுக்குப் பயன்படும் என்பதைப் பொறுத்ததேதான்.

'''சோ'' வியாக்கியானம் செய்வது போலவே வேறு சிலரும் இந்தக் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். 

இதற்கு ஆப்பு அடிக்கும் வகையில் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ் வதியார் விளக்கமாகவே கூறி இருக்கிறார்.

இந்து மத சமாச்சாரங்களுக்கு வியாக்கியானம் கூற 'சோ' போன்றவர்களைவிட சங்கராச்சாரியார்தான் தகுதியானவர் என்பதை 'சோ'வே மறுக்க முடியாதே! 

காஞ்சி சங்கராச்சாரியாரின் 'தெய்வத்தின் குரல்' - முதல் பாகம் (பக்கம் 1001-1003) என்ன கூறுகிறது?"

"ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்லவில்லை; ஆனால், பிறப்பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். 'சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச' என்றே சொல்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால், எத்தனை வயசுக்குமேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராமணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கான வற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண்டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவதாகவும், அப்புறம் 'சோ'ம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பித் திருப் பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப் பாரா?

அப்படியானால் அவர் 'தியரி'யில் (கொள்கை யளவில்) குணப்படி தொழில் என்றாலும், 'ப்ராக்டிஸில்' (நடைமுறையில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல் வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல.

சரி அவருடைய வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கிறோம்? "நான் யுத்தம் பண்ண மாட்டேன்; பந்து மித்தரர்களின் ரத்தத்தைச் சிந்தி சாம்ராஜ்யாபிஷேகம் பண்ணிக்கொள்வதைவிட, ஆண்டிப் பரதேசியாக பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவது எத்தனையோ மேல்" என்று சொல்லிக்கொண்டு தேர்த் தட்டில் உட்கார்ந்து ஸ்த்யாக் ரஹம் பண்ணிவிட்ட அர்ஜூனனிடம் அவர் என்ன சொன்னார்?. “நீ க்ஷத்திரிய ஜாதியில் பிறந்தவன். யுத்தம் பண்ணுவதுதான் உன் ஸ்வதர்மம். எடு வில்லை - போடு சண்டையை" என்றுதான் அவனைவிடாப் பிடிவாதம் பிடித்து - அவனை யுத்தம் பண்ண வைத்தார்.

அப்படியானால் தர்ம புத்தரரின் விஷயம் என்ன? சண்டையே கூடாது. சமாதானமாகவே போய்விட வேண்டும் என்று தானே அவர் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வந்திருக்கிறார்?... அவரையும் பரமாத்மா க்ஷத்ரிய தர்மத்தைத்தான் அநுஷ்டிக்கப் பண்ணினார் என்றால், அவர் "ஸ்வதர்மம்" என்கிறபோது அவரவர் ஜாதி தர்மத்தைத்தான் சொன்னார் என்றுதான் அர்த்த மாகும். பிராமணராகப் பிறந்தும் சத்திரிய தர்மப்படி யுத்தத்தில் இறங்கிய த்ரோணாச்சாரியார் மாதிரியான வர்கள் பெரியவர்கள் என்பதால் பகவானாக அவர் களை நிந்திக்க மாட்டாராயினும், பீமஸேனன் போன்ற வர்கள் இவர்களை ஜாதி தர்மம் விட்டதற்காகக் குத்திக் காட்டிப் பேசியபோதெல்லாம் பகவான் ஆட்சேபித்த தில்லை. அதனால் பிறப்பால் ஏற்படுகிற ஜாதி தர்மமே அவர் சொன்ன ஸ்வதர்மம் என்று உறுதியாகிறது. அப்படியானால், ஏன் "குணகர்ம விபாகச" என்றார் என்றால், இந்த ஜாதி தர்மமே தான் உள்ளூர அவரவரின் குணமாகவும் இருக்குமாதலால் குணத்தால் சதுர்வர்ணம் பிரிவதாக பகவான் சொன்னதும், பிறப்பால் இப்படி ஜாதியாகப் பிரிவதும் ஒன்றேதான்; ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தியரி, ப்ராக்டீஸ் என்று வெவ்வேறு விஷயங்களைச் சொல்கிற தோஷம் பரமாத்மாவுக்கு ஏற்படவில்லை" என்று சங்கராச் சாரியார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் இந்த சனாதன வாதிகள்? குணத்தின் அடிப்படையில் வர்ணம் - அதற்குரிய தொழில்கள் என்பது சாத்திய மில்லை என்று பாஷ்யம் கூறி விட்டாரே - இதற்குமேல் 'சோ' வகையறாக்கள் முண்ட முடியுமா?

ஜாதி வேறு, வர்ணம் வேறு என்று பிரிக்க முயலுவதற்கும் இதில் பதில் இருக்கிறதே - இதற்கு என்ன பதில்? 

காஞ்சி சங்கராச்சாரியார் மட்டுமல்ல; பூரி சங்கராச்சாரியாரும் இதுபற்றி என்ன கூறி இருக்கிறார்? 16.6.1974 'ஆனந்த விகடனில்' மணியன் பேட்டி கண்டு வெளி வந்துள்ளது.

அது இதோ;

மணியன் கேள்வி: தமிழ்நாட்டில் அரிஜனங்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்களே. அதைப்பற்றி..?

பூரி சங்கராச்சாரியார்: அர்ச்சனை நடத்த அவர் களுக்குத் தகுதியில்லை. ஆகவே அவர்களை அர்ச்ச கர்களாக நியமிப்பது சரியில்லை. 

மணியன்: அர்ச்சனை முறைகளைக் கற்றுக் கொள் ளலாம் அல்லவா? அதற்குப் பிறகு அர்ச்சகர்களாகப் பணிபுரியும் தகுதி இவர்களுக்கு ஏற்படலாமா?

பூரி சங்கராச்சாரியார்: அவர்களுக்குத் தகுதியில்லை. அவ்வளவுதான். மேலே இதைப்பற்றிய விவாதத்திற்கே இடம் இல்லை.

மணியன் : 'சாதுர்வர்ணா ஸ்மயர்சிருஷ்டம்' என்ற கீதையின் சுலோகத்தைப் பற்றி சுவாமிகள் என்ன கருதுகிறீர்கள்?

பூரி சங்கராச்சாரியார்: பிராமணர் சத்திரியர், வைசியர், சூத்திரர் போன்ற நால்வகையினரையும் தாமே படைத்ததாகக் கடவுள் கூறுகிறார்.

மணியன்: ஆனாலும் குணம். தொழில் அடிப் படையில் குணகர்மா என அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தானே கீதாசிரியன் கூறுகின்றார்?

பூரி சங்கராச்சாரியார்: இக்காலத்துக் குண கர்மங்களின் அடிப்படையில் அல்ல, முற்பிறவியில் அவர்கள் செய்த குண கர்மங்களின் அடிப்படையில் தான் பிராமணர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் என்றும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குலத்தில் பிறக்கிறான். அந்தக் குலப்படி அவன் கடமை ஆற்ற வேண்டும்; அதிலிருந்து தப்ப முடியாது என்று கூறியிருக்கிறாரே!

பூரி சங்கராச்சாரியாரின் இந்தப் பேட்டி அபத்தம், முட்டாள்தனம் என்று ஆன்மிகவாதிகள் கூறத் தயாரா? 

சங்கராச்சாரியார் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும் 'ஜீயர் சுவாமிகள்' என்ன கூறுகிறார்? அகோபில மடம் அழகிய சிங்கரின் பேட்டி 'கல்கி'யில் (14.7.1982 வெளி வந்ததே!

இதோ அது:

கேள்வி: 'ஹரே கிருஷ்ணா' என்று ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகமெங்கும் பரவி வருகிறதே. இந்தியாவில்கூட இவ்வியக்கத்தினர் சுற்றுகிறார்களே!

ஜீயர் பதில்: நாமம் இட்டுக்கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, காவி உடுத்தி இங்கேயும் ஒருத்தன் வந்தான் வாயெல்லாம் மந்திரங்கள்.. பெருமாள் பெய ரையே சொல்லிண்டு இருக்கான். பூணூல் போட்டிருக் கான். உட்காரச் சொல்லி சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான் பூணூல் போட்டதுனால் மட்டுமே ஒருவன் பிராமணனாகி விட மாட்டான் - அவனவன் பிறப்பால் எதுவோ அதுதான் சாஸ்வதம், நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதுனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான்.

மொட்டைத் தலையில் ஆணி அடித்ததுபோல ஜீயரும் சொல்லி இருக்கிறாரே - ஆன்மிகவாதிகளின் பதில் என்ன?

இப்பொழுது இந்த ஆன்மிக சனாதனவாதிகளுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. வேதங்களும் ஸ்மிருதி களும், சங்கராச்சாரியார்களும், ஜீயர்களும் சொன்ன தெல்லாம் அசல் முட்டாள்தனம் - அயோக்கியத்தனம் நாங்கள் சொல்லுவதுதான் உண்மை - நூற்றுக்கு நூறு உண்மை என்று சாதிக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஆழம் தெரியாமல் இந்தப் பிரச்சினையில் காலை விட்டு விட்டோம் - ஆளை விடுங்கள் என்று ஜகா வாங்கப் போகிறார்களா?

''சோ'' தான் இறந்து விட்டார் - இன்றைக்கு அதே 'சோ'வின் பூணூல் வாரிசான திருவாளர் குருமூர்த்தி அய்யர்கள் பதில் சொல்லட்டுமே - பார்க்கலாம்.

சனாதனம் பேசும் ஆளுநர்கள், விஜயபாரதங்கள், ஆன்மிக இதழ்கள், 'சோ' போன்றவர்களைக் காப்பாற்றப் போகிறார்களா? அல்லது அவர்களின் மகாமகானான சங்கராச்சாரியாரைக் கைவிடப் போகிறார்களா? 

பதில் தேவை.