செவ்வாய், 5 டிசம்பர், 2017

ஆபாச திருமண மந்திரங்கள்


#திருமணம்

'சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.
அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

ஸப்தர்ருஷ்ய: ப்ரதமாம் க்ருதிகாநா மருந்ததீம் / யத் த்ருவதாகும் ஹ நிந்யுஷ் ஷட்க்ருத்திகா முக்ய யோகம் வஹந்தீய மஸ்மாக மேத த்வஷ்டமீ //

“ஸப்தரிஷிகள், கிருத்திகை எனப் பெயர் கொண்ட தங்கள் மனைவிகளுக்குள்ளே முதலான வளான அருந்ததியை எப்படி நிலைத்திருக்கச் செய்தார்களோ, அப்படி மற்ற ஆறு கிருத்திகைகள் அருந்ததியின் முக்கியமான சேர்க்கையைச் செய்கின்றனர். இந்த அருந்ததியைத் தரிசனம் செய்ததால் என்னுடைய இந்த மனைவி எட்டாமவளாக வளர்ச்சி பெறட்டும்.”

“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம்/
மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி/
விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே/
பஷேபம்….”

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம் இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார் (புரோகிதர்). இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்… அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும்பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரிகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்…. என் மீது உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

உதீர்ஷ்வாதோ விஸ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா / அந்யா மிச்ச ப்ரபர்வயகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்ருஜ//

விசுவாசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.”

“உதிர்ஷ்வாத: பதிவதீ ஹ்யேஷா விஸ்வாஸுந் நமஸா கீர்ப்பிரீட்டே / அந்யாமிச்ச பித்ருபதம் வ்யக்தாகும் ஸ தே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி //

“இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறானல்லவா? விசுவாசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும் இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டதென்பதை நீ அறிவாயாக.”

குறிப்பு : திருமணத்துக்கு மட்டுமல்ல, “முதல் இரவுக்கும்” மந்திரங்கள் இருக்கின்றன. முதலிரவில் படுக்கையில் தம்பதிகளுக்கு இடையே படுத்திருக்கும் கந்தர்வனை எழுப்பிப் போகச் சொல்லி தம்பதிகள் உறவு கொள்ள அனுமதி கோருகிறது, மேற் குறிப்பிட்ட மந்திரம். திருமணத்துக்கு பார்ப்பனர் களை வைத்து ‘மந்திரம்’ ஓத விரும்புவோர்கூட முதலிரவுக்கு சாஸ்திரப்படி மந்திரங்கள் ஓதுவதை கைவிட்டு விட்டார்கள். அத்தகைய சடங்குகள் விபரீதமாகிவிடும் என்பதை பகுத்தறிவோடு புரிந்து கொள்ளும் பழமைவாதிகள், திருமணங்களில் புரோகித மந்திரங்களை ஏன் கைவிடக் கூடாது?

காசு கொடுத்து ஐயரை வரவழைத்து இந்த சமஸ்கிருத மந்திரங்கள் ஓதுவதால் என்ன மாறுதல் நடந்துவிடப்போகிறது?

-நன்றி ராமானுஜ_தாத்தாச்சாரியார்.

தாம்பரம் மாவட்டக் குழு, கட்செவி பதிவு
( சீனிவாசன்)

2 கருத்துகள்:

  1. இந்த மொழிபெயர்ப்புகளெல்லாம் பொய் என எப்போதோ பல பதிவுகள் உள்ளன.

    அதை முதலில் பாருங்கள் !

    இப்படி பெரியார்வாதிகளின் கதை,வசனங்களை யாரும் நம்பமாட்டார்கள் !

    பதிலளிநீக்கு
  2. திருமண மந்திரங்களில் ஆபாச வார்த்தைகள் உண்மையா ?

    சமூக விரோதிகளால் திரித்து பொருள்கூறப்பட்ட திருமண மந்திரம் உண்மையான விளக்கம் ....

    http://worldsanathanadarmam.blogspot.in/2017/08/blog-post_17.html

    பதிலளிநீக்கு