1. நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: “எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக் காரனாவாவது ஒரு ஸ்திரீயாகவாவது, ஒரு நாலு கால் மிருகமாகவாவது பிறப்பான்”
2. மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன் முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.
3. போதாயனர் கூறுவது எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமை கட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக் கூடாது.
4. மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: ‘தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்” (சுந்தரகாண்டம் 5)
5. மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும் படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன் மாரும், வயது முதிர்ந்த காலத் தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் - ஒரு பெண் ஆனவள் ஒரு போதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடைய வளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர் களாகவோ, அலட்சியக்காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ் வளவு அற்ப ஜீவர்களாகவே இருக் கிறார்கள்.
6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம் சமென்னவெனில் அவ ளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவ னையே அவள் மரியாதை செய்யட்டும்.. ஒரு புருஷன் துர்நடத்தையுடைய வனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம் போலவே கருது கிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள் V, 154)
7. மனு: ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளாகத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது ஒரு மங்கையானவள் தான் மணம் செய்து கொண்ட ஒரு புருஷன் என்ன குணங் களையுடைய வனாயிருக்கின்றாறோ அதே குணங்களையே அவளும் அடைவாள் எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப் போல் (அத்தியாயம் IX 22)
8. போதாயனர் உரைப்பது: ‘மாதர்கள் அறிவுகளேஇல்லாதவர்கள்; அவர்கள் சொத்துரிமை கொள்ளவும் யோக்கியதை யற்றவர்கள்.
விடுதலை ஞாயிறு மலர், 9.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக