வியாழன், 3 நவம்பர், 2016

வேத கலாச்சாரம் என்பது என்ன?



சமஸ்கிருதத்தின்மூலம் வேதத் தத்துவங்களைப் பரப்பப் போகிறார்களாம் - வேதத் தத்துவங்கள்தான் இந்தி யாவின் தத்துவங்களாம் - இப்படியெல்லாம் கூட பாரதீய ஜனதா கட்சியினராலும், சங் பரிவார்க் கூட்டத்தாலும், பார்ப் பனர்களாலும் சொல்ல முடிகிறது என்றால், அந்த அள வுக்குப் பார்ப்பனர் அல்லாதார் சொரணையற்று இருக் கிறார்கள் என்று பொருள்.

வேதத் தத்துவம் என்றால் என்ன? வருணாசிரம தத்துவம் தானே?
யஜூர் வேதம், அதன் அத்தியாயம் 31 சுலோகம் 11 என்பது என்ன?
ப்ராஹ் மனோஸ்ய முகமாஸித்
பாஹூ ராஃன்ய: க்ருத
ஊருதஸ்ய யத்வைஸ்ய பத்ம்யாம்

சூத்ரோ அஜாயத

இதன் பொருள்: கடவுள் முகத்திலிருந்து பிராமணன் பிறந்தான், தோள்களிலிருந்து க்ஷத்திரியன் பிறந்தான்; துடை களிலிருந்து வைசியன் பிறந்தான்; பாதங்களிலிருந்து சூத் திரன் பிறந்தான் என்று கூறுகிறதே - இந்தப் பிறப்பின் அடிப் படையிலான பார்ப்பனக் கலாச்சாரத்தைத்தான் பரப்பப் போகிறார்களா?

தொலைக்காட்சிகளில் பி.ஜே.பி.,க்காக குரலை  எட்டுக் கட்டையில் உயர்த்தி ஓங்கி ஒலிக்கிற பார்ப்பனர் அல்லாத பிரமுகர்கள் இந்த வேதத் தத்துவத்தின் பிறப்பின் அடிப்படை யிலான நான்கு வருணங்களுள் கடைசி இடமான கடவுளின் காலில் நிற்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சூத்திரர்கள்தானே?

சூத்திரர்கள் என்றால் யார்? அதையும் அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும். (1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் (2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன் (3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன் (4) விபசாரி மகன் (5) விலைக்கு வாங்கப்பட்ட வன் (6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன் (7) தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 8; சுலோகம் 415).

மனுதர்மம் என்றால் சாதாரணமானதல்ல. ‘‘மனு என்ன சொன்னாரோ அது மருந்தாம்; பதினெட்டு ஸ்மிருதிக்குள் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதி களும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக் கொள்ளத் தக்கதன்று. மனுஸ்மிருதிக்கு விரோதமான ஸ்மிருதி புகழடை யாது என்று கூறப்பட்டுள்ளது மனுர்தம சாஸ்திரத்தின் பீடிகையில்.
வேதம் கூறுகிற இந்த சூத்திரத் தன்மையை ஏற்கப் போகிறார்களா? ஆம் நாங்கள் வேசி மக்கள்தான். அதில் என்ன சந்தேகம் என்று சத்தியம் கூறப் போகிறார்களா என்று கேட்க விரும்புகிறோம்.

இல்லை, இல்லை - இந்த மனுதர்மத்தை ஏற்கப் போவ தில்லை என்று கூறுவார்களேயானால், அவர்கள் எத்தகை யவர்கள் என்பதையும் அதே மனுதர்மமே கூறுகிறது.
வேதம் (சுருதி) - தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண் டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்தி கனாகின்றான் (மனுதர்மம் அத்தியாயம் 2 சுலோகம் 11)
கடவுளை மறுப்பவன்கூட இந்து மதத்தில் இருக்கலாம்; ஆனால், வேதத்தை மறுக்க முடியாது - அப்படி வேதத்தை மறுப்பவனைத்தான் இந்து மதம் நாஸ்திகன் என்கிறது.
இதனை ஏதோ திராவிடர் கழகத்துக்காரர்கள் இட்டுக் கட்டிக் கூறுகிறார்கள் என்று எண்ணவேண்டாம். மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே கூறியுள் ளார்.
‘‘நாஸ்திகம் என்றால், ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு.  ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே ஆஸ்திகர்களாக இருக்க முடியும். அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.

வைதீக வாழ்க்கையை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக் கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல’’ என்கிறார் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் என்று போற்றப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் - இரண்டாம் தொகுதி - பக்கம் 407-408).

வேதம் சொல்லுகிற சூத்திரத்தன்மையை வேசி மக்கள் என்ற தன்மையை ஏற்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நாத்திகர்களாகவே இருந்து தீர வேண்டியவர்கள் அல்லவா?
இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத பி.ஜே.பி.காரர்கள் எந்த முடிவுக்கு வரப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம். வேதக் கலாச்சாரத்தைப் பரப்பப் போகிறோம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளாரே - அதனை ஏற்றுக்கொண்டால் பார்ப்பனர் அல்லாதார் யாராக இருந்தாலும் வேதத்தில் நான்கு வருணத் தன்மை என்பதில் கடைசி நிலையான சூத்திரத் தன்மையை ஏற்றுக் கொண்டு விட்டவர்கள் ஆகமாட்டார்களா? விலைக்கு வாங்கப்பட்டவர்கள், விபசாரி மக்கள் உள்ளிட்ட ஏழு வகையான இழிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டியவர்கள் ஆவார்களே!

இந்த வேதக் கலாச்சாரத்தைப் பரப்புவதுதான் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நரேந்திர மோடி தலைமை யிலான பி.ஜே.பி. அரசின் நோக்கமா?

பி.ஜே.பி., சங் பரிவார் அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் உட்பட இது குறித்து சுயமரியாதை உணர்வுடன் சிந்தித்து மான உணர்வுடன் பொங்கி எழுந்து வேதக் கலாச்சாரப் பரப்பும் திட்டத்தை முறியடிக்க வேண்டாமா?

ஏதோ ஒரு வகையில் இந்தப் பிரச்சினையில் இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பனர் அல்லாதார், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை, கோட்பாடுகளை ஏற்றுத்தான் தீரவேண்டும்; மான உணர்ச்சியைப்பற்றிக் கவலைப்படாத வர்களைப்பற்றிப் பிரச்சினை இல்லை.
-விடுதலை,தலையங்கம்,15.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக