“அவாளே’’ சொல்லும் “அயோக்கிய’’த் தனமான விளக்கங்கள் பாரீர்!
தங்களைப் ‘பிராமணர்கள்’ என்றும், நம்மையெல்லாம் ‘சூத்திரர்கள்’ என்றும் சாஸ்திரங்கள் எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சமா? அப்படி அவர்கள் கூறும் சொற்களுக்கு உண்மையிலேயே பொருள்தான் என்ன? அவர்களின் (அ) தர்ம சாஸ்திரங்களில் கூறப்படும் விளக்கங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம்.
1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (மனுதர்ம சாஸ்திரம். அத்1. - சு.100)
2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2 சு. 33)
3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத். 3 சு. 251)
4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண் ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லா மலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத் 3 சு.115)
5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து அவனுடைய பொருளைக் கொள்ளையிட வேண்டும். (அத்.8 சு.374) ஆனால் பிராமணன் மற்ற வர்ணத்தார் பெண்களைப் புணர்ந் தால்அது தர்மம். (அத்.8 சு.13)
6. சூத்திரன் பிரமணர்களைத் திட் டினால் சூத்திரன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8 சு.270); பிராமணனை சாதியைச் சொல்லித் திட்டினால் கம்பியைக் காய்ச்சி எரிய எரிய சூத்திரன் வாயில் வைக்க வேண்டும். (அத் 3-சு. 271).
7. பிராமணனைப் பார்த்து ‘நீ இதைச் செய்ய வேண்டும்’ என்று உபதேசம் செய்கிற சூத்திரன் காதிலும், வாயிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண் டும். (அத். 8 சு.271)
8. சூத்திரன் பிராமணனை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டி விட வேண்டும். (அத் 8- சு.279. 280).
9. பிராமணனுக்குச் சரிசமமாக உட்கார்ந்தால் சூத்திரனுடைய இடுப் பில் சூடு போட வேண்டும். அல்லது குண்டியை அறுத்து ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத் 8 சு281).
10. பிராமணர்களுடைய வர்ணாசிரம சாதி முறை ஏற்றத் தாழ்வைக் காப்பாற்ற யுத்தம் செய்ய வேண்டும். (அத் 8 சு. 348).
11. பிராமணனைக் காப்பாற்றச் சண்டை போட்டுப் பிராமணரல்லாதவரைக் கொலை செய்தால் பாவம். (அத் 8 சு143)
12. பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்கள் செய்தாலும் அவனை மொட்டை அடித்தாலே போதும் அதுவே கொலைத் தண்டனைக்கு ஒப்பாகும். அல்லது அவன் பொருளைக் கொடுத்து வெளியூருக்கு அனுப்ப வேண்டும். (அத் 8சு 379, 80).
13. அரசாங்கம் பிராமணன் என்ன கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லக் கூடாது. (அத் 8 சு. 381)
14. பிராமணன் சூத்திரர்களுக்குக் கூலி கொடுக்காமலே வேலை வாங்கலாம். சூத்திரன் பிராமணனுக்குத் தொண்டு செய்யப் பிரம்மாவால் படைக்கப்பட்டான் (அத் 8 சு. 413)
15. சூத்திரன் என்றால் (1) யுத்தத்தில் தோற்று ஒடியவன். (2) யுத்தத்தில் கைதியாகப் பிடிபட்டவன். பிராமணனுக்குப் பக்தியோடு ஊழியம் செய்கிறவன் (4) விபச்சாரி - தேவடியாள் மகன். (5) விலைக்கு வாங்கப்பட்டவன் (6) ஒருவனால் கொடுக் கப்பட்டவன்
(7) தலைமுறை தலைமுறை யாகத் தொண்டு செய்பவன் -_ என்று ஏழு தன்மை உடையவன். (அத் 8 - சு415).
16. பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம் காரணம் சூத்திரன் எவ்விதப் பொருளுக் கும் சொந்தக்காரனில்லை. (அத் 8_-க 417).
17. பிராமணனிடம் சூத்திரப் பெண் ணுக்குப்பிள்ளை பிறந்தால் அப்பிள் ளைக்கு அப்பன் சொத்தில் பாத்திய மில்லை (அத்.
9-_சு155). ஆனால் சூத்திர னிடம் பிராமணப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பன் சொத்தில் பங்குண்டு. இப்படியே இன்றுள்ள இந்துச் சட்டத்திலும் இருக்கிறது. அத். 9_-சு 224)
18. பிராமணன் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் சாதித் தொழிலை விட்டு வேறு தொழில் செய்தால் அவர் களை
ஊரை விட்டுத் துரத்த வேண்டும் (அத். 9_-சு225) (அத்10-க99).
19. பிராமணன் ஞானியாயினும், மூட னாயினும் அவனே மேலான தெய்வம் (அத்9-_சு.317).
20 பிராமணர்களை வழிபடாத தாலும், உபநயனம் முதலிய சடங்கு களைச் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் முதலான மற்றச் சாதிகள் சூத்திரத் தன்மையடைந்தார்கள்; அவர்களும் சூத்திரர்களே. (அத்.10-_சு.43) திராவிடத்தை (தமிழகத்தை)ஆண்டவர் களும், சூத்திரர்களே (அத்10சு, 44).
21. பிராமணன் உண்டு மீந்த உணவு கிழிந்த ஆடை சாரம் அற்ற தானியம் -_ இவைகளைப் பிராமணன் குத்திர னுக்குப் பிழைப்பிற்குக் கொடுக்க வேண்டும். (அத்10_-சு 125).
22. பிராமணன் மற்றவர்கள் பொருளை யாகத்திற்காக வலிமையி லாவது களவு செய்தாவது எடுத்துக் கொள்ளலாம். (அத்.11, சு.12_13)
23. பெண்களையும் சூத்திரர்களை யும் கொன்றால் குறைந்த பாவந்தான். (அத்11_-சு67)
24. பிராமணன் மற்றவர்களைக் கொன்றுவிட்டால் அதற்குத் தண் டனையாக அவன் விரதமிருந்தால் போதும் அல்லது வேதப் பிராமண னுக்கு எருது, பசு கொடுத்தால் போதும் (அத்.11-சு 120).
24. பிராமணன் மற்றவர்களைக் கொன்றுவிட்டால் அதற்குத் தண் டனையாக அவன் விரதமிருந்தால் போதும் அல்லது வேதப் பிராமண னுக்கு எருது, பசு கொடுத்தால் போதும் (அத்.11-சு 120).
25. பிராமணனுக்குத் தொண்டு செய்வதே சூத்திரனுக்குத் தவமாகும். அத்-11சு:235)
மானமுள்ள தமிழ்க்குடியில் பிறந் தோரே!
மானமுள்ள தமிழ்க்குடியில் பிறந் தோரே!
இத்தகைய இழித்தகைமையை நம்மீது சுமத்துகிறது பிராமணாள் என்ற பெயர்ப் பலகை.
இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு அத்தகைய உணவு விடுதி களில் உண்ணச் செல்வதா?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
-விடுதலை,11.6.16
இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு அத்தகைய உணவு விடுதி களில் உண்ணச் செல்வதா?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
-விடுதலை,11.6.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக