செவ்வாய், 17 மே, 2016

சாஸ்திரத்தில் பசு வதை!

சாஸ்திரத்தில் பசு வதை!
“மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின்கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத் தெடுத்துக் கொள்க.” இப்படி கூறுகிறது. யாகத்தின் போது பசுவை எப்படி அறுத்தெடுப்பது என்பது பற்றி கூறும் மந்திரம்.
(ஆய்தரேயப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
பசுவின் - மலம், மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும் என்று அய்தரேய பஞ்சி 2 காண்டம் 6 கூறுகிறது. பசுவைக் கொல்லும் போது “ஹோதா” என்னும் புரோகிதன் ‘நன்றாக அடித்துக் கொல், கொல்,
கொல், அடிப்பதை நிறுத்தாதே’ என்று சொல்ல வேண்டும் என்று அய்த பஞ்சிகா 2 காண்டம் 7 கூறுகிறது.சாஸ்திரம் இப்படிக் கூற, பசுவதையை தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிடும் சாஸ்திரிகளே! அப்படியானால் பசுவதைத் தடைச் சட்டத்திற்கு பதிலாக சாஸ்திர எரிப்பு விழாக் கொண்டாடுங்களேன்!
-விடுதலை,8.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக