அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.
“ஸ்தா தமஸ்வம், கஜமத்தம்
ரிஷபம் காம மோஹிதம்
சூத்தரமக்ஷர சம்யுக்தம் தூரதப்
பரிவர்ஜ்ஜையேல்"
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும்-மதம் கொண்ட யானையையும் காமவிகாரம் கொண்ட காளை மாட்டையும், எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.
"ஜப, ஸ்தப, தீர்த்த யாத்திர,
பிரவர்ஜ்ஜய, மந்தர சாதனம்,
தேவதாராதனம் சசய்வஸ்தீரி
சூத்திர பதிதானிஷன்”
அதாவது ஜபம், தபசு, தீர்த்த யாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்தக் காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக்கூடாது என்பது கருத்தாகும்.
“நபடேல் சமஸ்கிருதம்
வாணீம்”
(சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும்,
“நைவ சாஸ்திரம் படேநைவ
சுருனுபாத் வைதிகா கஷரம்
நஸ்நாயாது தயால் பூர்வம்
தபோ மந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்"
(சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ வேதத்தைக் கேட்கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூர்ய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும்.
"இதிஹாச புராணானி
நபடேச்ரோது மர்ஹசி”
இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.
“சாதுர் வர்ணியம்
மயா சிருஷ்டம்
பரிசரியாத்மகன்
கர்மம் சூத்ரஸ்ஸியாபி பாவனாம்" (கீதா ஸ்லோகம்)
நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்கு பிராம்மண சிசுரூஷைதான் தர்மம் என்பது கருத்து.
-விடுதலை,ஞாயிறு மலர்,1.7.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக