சென்னை, நவ.16- சூத்திரன் என்றால், ஆத்திரங் கொண்டு அடி என்று சொன்ன இயக்கம் இந்த இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018) மூன்றாம் நாளன்று மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பள்ளிக்கூடங்கள் முழுவதையும் பார்ப்பனர்களுக்கே வைத்தார்கள். மற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் வைக்க வில்லை.
தானம்முழுவதையும்பார்ப்பனர்களுக்கே கொடுத் தார்கள். நான்கு வேதம் படித்துவிட்டு, அடுத்த ஜென் மத்திலும் ராஜாவாக நீ பிறப்பாய் என்றான்.
நான்கு வேதங்களைப் படித்த பிராமணர்களுக்குத் தானம் கொடுக்கவேண்டும்!
ஒரு தடவை பதவியை அனுபவித்துவிட்டால், அடுத்த முறையும் அந்தப் பதவிக்குத்தானே ஆசைப்படு வார்கள். ஒருமுறை பஞ்சாயத்துப் போர்டு பதவியை வகித்தவனே, அடுத்த முறையும் அந்தப் பதவிக்கு வர ஆசைப்படுகிறான். ராஜா பதவி என்றால் சும்மாவா?
அடுத்த முறையும் ராஜாவாகவே இருக்கவேண்டும் என்றால், அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறான்.
அதற்கு பார்ப்பனர்கள் என்ன சொன்னார்கள், நான்கு வேதங்களை நன்றாகப் படித்த பிராமணர்களுக்கு தானம் கொடுக்கவேண்டும்.
நான்கு வேதம் படித்த பிராமணர்களுக்கு கொடுத்த நிலத்திற்குப் பெயர் சதுர்வேதி மங்கலம்.
நம்முடைய சேரன், சோழன், பாண்டியன் எல்லாம் இதைத்தான் செய்தார்கள்.
ஆங்காங்கே மங்கலம் என்று ஊர் பெயர் இருந் தால், அவையெல்லாம் பார்ப்பனர்களுக்கு அரசர் களால் தானாமாகக் கொடுக்கப்பட்டது.
இதை பேராசிரியர் தொ.பரமசிவம், தமிழறிஞர், அவர் ஆராய்ச்சியாளர்; மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.
கிராமம் என்ற வார்த்தை இருக்கிறதே அந்தச் சொல் சமஸ்கிருதச் சொல். கிராமம் என்று சொல்லும்பொழுது, தொ.பரமசிவம் ஆராய்ச்சியாளர், பேராசிரியர் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்த் துறைத் தலைவர், இன்றைக்கு உடல்நலக் குறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தொ.பரமசிவம் அவர்கள் அழகாக எழுதியிருக்கிறார்.
மூன்று வேதம் படித்தவர்களுக்கு திரிவேதி மங்கலம்
நான்கு வேதம் படித்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலம்
இரண்டு வேதம் படித்தவர்களுக்கு துவேதி மங்கலம்
வேதத்தை சரியாகப் படிக்காத பார்ப்பனர்களுக்குக் கொடுத்த இடங்கள்தான் கிராமங்கள். (Dropouts)
8 ஆம் அத்தியாயம் - பக்கம் 234
சுலோகம் 416 மனையாள் பிள்ளை வேலைக்காரன் இவர்களுக்கு பொருளில் சுவாதீநமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும், அவைகள் அவர்களின் எஜமா நனையே சாரும். அதாவது யஜமாநலுத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக் கூடாதென்று கருத்து.
மனுதர்ம அடிப்படையில் இந்து சட்டத்தைக் கொண்டு வந்ததினால், நேற்று வரையில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளில் ஒரு கருத்து இழையோடிக் கொண்டிருந்தது.
சட்டத்தில் முன்பு தர்மம் செய்வது என்றால் என்ன? நல்ல தர்மம் செய்யவேண்டும்; அதனால் புண்ணியம் வரவேண்டும். பிள்ளை இல்லாமல் அவர்களது சொத்து களை எழுதி வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களுக்குப் பிராமண போஜனம் செய்ய வேண்டும்!
Feeding Brahmins அதாவது பார்ப்பனர்களுக்குப் பிராமண போஜனம் செய்யவேண்டும்.
அதாவது பசித்தவனுக்கு, ஏழைக்கு சோறு போடு என்று எழுதவில்லை. பசித்தவனாக இருந்தாலும், ஏழைக்கு சோறு போட்டால் புண்ணியம் வராது. யாருக்குப் போடவேண்டும் என்றால், பார்ப்பனர்களுக்குத்தான் போடவேண்டும். நேற்றுவரையில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளில் இருந்தது. இப்பொழுதுதான் அது கொஞ்சம் கொஞ்சமாக அக்கருத்துகள் மாறிக்கொண்டு வருகிறது.
ஏன் அவ்வளவு தூரம் போகவேண்டும்; பெரியாரு டைய அப்பா வெங்கட்ட நாயக்கர் அவர்கள். அவரு டைய அறக்கட்டளையிலேயே எழுதி வைத்திருக்கிறார், பிராமணர்களுக்குப் போஜனம் போடவேண்டும் என்று.
பெரியார் அவர்கள் வெற்றி பெற்றார்
அப்படி செய்ய முடியாது என்று சொல்லி பெரியார் அவர்கள், நாகம்மை குழந்தைகள் இல்லம் நடத்து கிறேன் என்றார். இதை எதிர்த்து உள்ளூர்க்காரர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் பெரியார் அவர்கள் வெற்றி பெற்றார்.
உயர்நீதிமன்றத்தில் தர்மம் செய்வதில் காலங்காலமாக இந்த கருத்துகள் மாறும். ஒரே மாதிரியான சிந்தனைகள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று தீர்ப்பு வந்தது.
8 ஆம் அத்தியாயம் - பக்கம் 234
சுலோகம் 417 - பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழு வித தொழிலாளியான சூத்திரனிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம். யஜமாநனெடுத் துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்ல.
11 ஆம் அத்தியாயம் - பக்கம் 314
சுலோகம் 84 - பிராமணன் பிறப்பினாலேயே தேவர்களுக்கும் பூசிக்கத் தக்கவனாகவிருக்கிறான். மனிதர்களுக்குள் மிகவும் உயர்ந்திருக்கிறான் என்பதில் கேட்கவேண் டியதில்லை. பின்னும் உலகத்தாருக்கு நம்பத்தகுந்த பிராமணமாகவிருக்கிறான். இவ்விஷயத்தில் அவனுப தேசிக்கிற வேத மந்திரமே காரணம்.
11 ஆம் அத்தியாயம் - பக்கம் 314
சுலோகம் 85 - ஆதலால், பிராமணர் எதிரில் தான் செய்த பாபத்தைச் சொல்லிக் கொண்டால், அதற்கு மூன்றுக்குக் குறையாத வேதமோதின பிராமணாள் எந்தப் பிராயச்சித்தத்தை விதிப்பார்களோ அதைச் செய்தால் அந்தப் பாபம் போய்விடும். ஏனென்றால், அவர்கள் வாக்கே பரிசுத் தமானதல்லவா!
பிராயசித்தம் என்பதே ஆரிய தத்துவம்!
பிராயசித்தம் என்பதே ஆரிய தத்துவம். திருக்குறளில், திராவிடருடைய பண்பாட்டில் அது கிடையாது.
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று (குறள்)
இப்படி ஒரு செயலைச் செய்துவிட்டோமே என்று பின்னாளில் நினைத்து வருந்தும்படியான செயல்களைச் செய்யாமல் தவிர்க்க வேண்டும். தவறிச் செய்துவிட்டால், மீண்டும் அதைச் செய்யாமல் காப்பது நலம்.
தவறு செய்தால், தண்டனையை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இது திராவிடருடைய தத்துவம், பண்பாடு.
வேதத்திலேயே பாவங்களைக் கரைத்துவிடுவார்கள்!
ஆனால், நீ எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம், எந்தப் பாவத்தை வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்துவிட்டு, மூன்று பிராமணர்களை அழைத்து, அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்து, அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ, அதன்படி செய்துவிட்டால், அந்தப் பாவங்கள் தானாகவே கரைந்து போய்விடும். அந்த மூன்று பேரும் அவ்வளவு பெரிய அறிவாளிகள். வேதத்திலேயே அந்தப் பாவங்களைக் கரைத்துவிடுவார்கள் என்றால்,
பெரியார் ஒரு கேள்வி கேட்டார்,
பிறகு ஏன் பாவத்தை செய்யாமல் இருக்கவேண்டும். இந்த வாரம் ஒரு பாவத்தை செய்துவிட்டு, அந்தப் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளலாமே என்று - இதனால் ஒழுக்கம் வளருமா?
ஆகவே, அந்தப் பாவத்திற்குத் தீர்வு, பிராயச்சித்தம் என்றால், அந்த ஒழுக்கம் எப்படி இருக்கும்?
5 ஆம் அத்தியாயம் - பக்கம் 130
சுலோகம் 104 - பிராமணன் முதலானோர் இறந்தால், அந்த ஜாதியார் இருக்கும்போது சூத்திரனைக் கொண்டு அப்பிணத்தை எடுக்கச் சொல்லக்கூடாது. அப்படி எடுத்து தகநஞ்செய்தால் இறந்தவனுக்கு புண்ணிய லோகம் வரமாட்டாது.
பிராமணர்கள் யாராவது இறந்தால், சூத்திரர்கள் அந்த உடலைத் தூக்கக்கூடாது. அதற்காகத்தான் சவுண்டி பார்ப்பான் என்று கூலிக்கு வைத்திருப்பார்கள். இறந்தவர்களின் உடலை வீட்டிற்குள் வைத்துக்கொள்ள மாட்டார்கள். உடனே தூக்கிக்கொண்டு வந்து வெளியில் வைத்துவிடுவார்கள்.
வீரமணிக்குப் பாடை கட்டிவிட்டோம் என்றனர்!
இந்த இடத்தில் ஒன்றை நினைவுபடுத்திச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக, இருந்த காலத்தில் பிராமணர் சங்கத்தை ஆரம்பித்து, ஊர்வலம் எல்லாம் நடத்தினார்கள். (1983-84 இல்)
பெண்களை எல்லாம் அழைத்து வந்து பிராமணர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள். அதுவரை வீட்டில் இருந்த பார்ப்பனப் பெண்கள் எல்லாம் அங்கே ஆவேசமாக வந்தனர்.
பெரியாரோடு ஒழிந்துவிடும் என்று நினைத்த இராவணக் கூட்டம், மறுபடியும் வீரமணி தலைமையில் வந்துவிட்டதே என்று சொல்லி, ஒரு பாடை கட்டி னார்கள். அந்தப் பாடையில் ஒருவரை படுக்க வைத்து, வீரமணிக்குப் பாடை கட்டிவிட்டோம் என்று சொல்லி, பழனி நகர தெருக்களில் அந்தப் பாடையை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அதுவரையில் அந்தத் தெருக்களில் முருகப் பெருமான்தான் ஊர்வல மாகப் போயிருக்கிறார். அடுத்தபடியாக வீரமணி அவர்கள்தான் பாடையில் ஊர்வலமாகப் போயிருக்கிறார் என்றார்கள் மக்கள்!
பிராமணர்கள் சங்கம் ஊர்வலம் நடத்திய பிறகு, அடுத்த வாரத்தில் திராவிடர் கழகம் சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
ஜாதி ஒழிந்தது என்பதற்கு இதைவிடப் பெரிய வெற்றி வேறு என்ன இருக்கிறது!
அந்தக் கூட்டத்தில், செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள்,
என்னங்க, நீங்கள் உயிரோடு இருக்கும்பொழுதே உங்களை பாடை கட்டித் தூக்கினார்களே, அதனால் உங்களுக்குக் கோபம் வரவில்லையா? என்றார்கள்.
நான் சொன்னேன், எனக்குக் கோபம் வரவில்லை. நான் பெரியார் தொண்டன், பெரியார் மாணவன். அவர்கள் செய்தது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக் கிறது. காரணம் என்னவென்றால், பார்ப்பான், அவர்கள் வீட்டில் யாராவது இறந்தால்கூட, தூக்கமாட்டார்கள்; அதற்கு சவுண்டி பார்ப்பான் என்ற ஒருத்தனை வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அவர்கள், சூத்திரன் பிணத்தைத் தூக்கிக்கொண்டு, பார்ப்பனப் பெண்களோடு ஊர்வலம் போனார்கள் என்று சொன்னால், ஜாதி ஒழிந்தது என்பதற்கு இதைவிடப் பெரிய வெற்றி வேறு என்ன இருக்கிறது. ஒரு ஊரோடு அதை அவர்கள் நிறுத்திவிடக்கூடாது, பல ஊர்களிலும் அதுபோன்று செய்யவேண்டும்; இதுதான் என்னுடைய வேண்டுகோள் என்றேன்.
மேலும் மனு (அ)நீதியைப் பாருங்கள்:
8 ஆம் அத்தியாயம் - பக்கம் 216
சுலோகம் 270 - சூத்திரன் துவிஜர்களை கொடுமையாகத் திட்டினால் அவன் தாழ்ந்தவிடமான காலிற் பிறந்தவனாகையால் அவனுடைய கையறுக்க.
8 ஆம் அத்தியாயம் - பக்கம் 216
சுலோகம் 271 - துவிஜர்களை பெயர் ஜாதி இவைகளைச் சொல்லி இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில் பத்தங்குல முள்ள எஃகு கம்பியை காய்ச்சி எரிய வைக்க...
8 ஆம் அத்தியாயம் - பக்கம் 216
சுலோகம் 272 - அகங்காரத்தால், நீ இதைச் செய்யவேண்டுமென்று பிராமணனுக்குத் தருமத்தை உபதேசிக்கிற சூத்திரனு டைய வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றவேண்டியது.
அசல் மனுதர்மத்தில் உள்ள பல சுலோகங்களில் இதுபோன்று இருக்கின்றன. ஒரு சிலவற்றைத்தான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
சூத்திரன் என்றால், ஆத்திரங் கொண்டு அடி என்றார் பெரியார்!
100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் முதலி யார் வீடுகளில்கூட சூத்திரச்சி வேலைக்கு வந்து விட்டாளா? என்றும், பார்ப்பனர்கள் ஏய், சூத்திரப் பயலே! என்றும் அழைப்பார்கள். ஆனால், இன் றைக்கு அப்படி யாரும் வெளிப்படையாக நம்மை சூத்திரன் என்று சொல்ல முடியாது - சொல்லத் துணிவு வராது!
காரணம் என்னவென்றால், இதையெல்லாம் கண்டித்து பெரியார் அவர்கள் பிரச்சாரம் செய்வ தோடு நிறுத்தவில்லை. நம்முடைய மாநாடுகளில் ஒரு சுலோகத்தைக் கொடுத்தார்கள்.
அது என்னவென்றால்,
சூத்திரன் என்றால், ஆத்திரங் கொண்டு அடி என்று.
நம்மை அவர்கள், பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், தேவடியாள் மகன் என்று கேவலப்படுத்தி, சூத்திரன் என்று நம்மைச் சொன்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தெரிந்த வர்கள். அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தெரியாத வர்கள் வேண்டுமானாலும், அது என்னமோ பாரத ரத்னா பட்டம் போன்று இருக்கலாம். புரிந்த பிறகு அதனை எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்
மனுதர்மத்தைப்பற்றி இப்பொழுது ஏன் பேசுகிறீர்கள்?
சிலர் என்னிடம் கேட்கிறார்கள், மனுதர்மத்தைப்பற்றி இப்பொழுது ஏன் பேசுகிறீர்கள்? என்று.
இப்பொழுது மனுதர்மம்தான் சட்டமாக இருக்கிறது. அதைவிட ஒரு பெரிய ஆபத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
இன்றைக்கும் நாம் சட்டப்படி சூத்திரர்கள். எப்படி?
ஓங்கி ஒரு அறை விட்டார், எச்சில் கையால்!
கோபிசெட்டிப்பாளையத்திற்கு ஒரு திருமணத்திற் காகச் சென்றிருந்த சாமி கைவல்யம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, பரிமாறிக் கொண்டிருந்த பார்ப்பானைப் பார்த்து,
சாம்பார் இருக்கிறதா? என்று கேட்டார்.
டேய், இங்கே ஒரு சூத்திரன் சாம்பார் கேட்கிறார், போடு என்றான் அவன்.
அவ்வளவுதான், அவனை அழைத்தார் கைவல்யம், ஓங்கி ஒரு அறை விட்டார், எச்சில் கையால். ஏண்டா, என்னை சூத்திரன் என்று சொன்னாய் என்று!
தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று அந்தப் பார்ப் பான் மன்னிப்புக் கேட்டான்.
வன்முறையைத் தூண்டுகிற இயக்கமல்ல இந்த இயக்கம்!
சூத்திரன் என்றால், ஆத்திரங்கொண்டு அடி என்று சொன்னதோடு இந்த இயக்கம் நின்றுவிடவில்லை, அடித்தும் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுதான் சுட்டியது. அடித்து திருத்தவேண்டிய நேரத்தில், அதை செய்திருக்கிறது. ஆனால், அதற்காக வன்முறையைத் தூண்டுகிற இயக்கமல்ல இந்த இயக்கம்.
நீ வன்முறையை நியாயப்படுத்தி, தண்டம் செய்ய லாம் என்கிற அளவிற்கு இருந்ததினால், இதை சொல்ல வேண்டிய கட்டம் வந்தது.
இன்றைக்கு சூத்திரப் பட்டம் எங்கே இருக்கிறது? இன்றைக்கு ஏதுங்க மனுதர்மம் எல்லாம் என்று சிலர் கேட்கிற நண்பர்களுக்காக சொல்கிறேன்:
பெரியார் அவர்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினார்
இதோ என்னுடைய கைகளில் இருப்பது இந்திய அரசியல் சட்டம். இதில் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதே தவிர, ஜாதி ஒழிக்கப்படவில்லை. இதனால் தான் பெரியார் அவர்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினார், நவம்பர் 26 ஆம் தேதி. 1957 ஆம் ஆண்டு.
ஜாதி என்கிற வார்த்தை இந்திய அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் அமைந்திருக்கிறது. எனவே, ஜாதி சட்டபூர்வமாக இந்திய அரசியல் சட்டத்தில் இன்னும் ஒழிக்கப்படவில்லை. தீண்டாமை மட்டும்தான் சட் டத்தில் ஒழிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும்கூட நடைமுறையில் எந்த அளவிற்கு ஒழிக்கப்பட்டு இருக்கிறது என்பது பிறகு. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதியை அங்கீகரித்து இருக்கிறார்கள்.
எப்படி அங்கீகரித்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தவேண்டுமானால்,
நாம் எப்படி சூத்திரர்கள் என்று சிலர் கேட்டார்கள். அதற்காகத்தான் இந்த அரசியல் சட்டத் திருத்தம்பற்றி, காலஞ்சென்ற நம்முடைய கரூர் வழக்குரைஞர் பி.ஆர்.குப்புசாமி அவர்களும், நானும் சேர்ந்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறோம்.
இந்திய அரசியல் சட்டம் 372 ஆம் பிரிவு
இந்திய அரசியல் சட்டத்தினுடைய கடைசி பகுதியை எடுத்துக்கொண்டால், 372 ஆவது பிரிவில்,
Continuance in force of existing laws and their adaptation
(1) Not withstanding the repeal by this Constitution of the enactments referred to in Article 395 but subject to the other provisions of this Constitution, all the laws in force in the territory of India immediately before the commencement of this Constitution, all the laws in force in the territory of India immediately before the commencement of this Constitution shall continue in force therein until altered or repealed or amended by a competent Legislature or other competent authority
(2) For the purpose of bringing the provisions of any law in force in the territory of India into accord with the provisions of this Constitution, the President may by order make such adaptations and modifications of such law, whether by way of repeal or amendment, as may be necessary or expedient, and provide that the law shall, as from such date as may be specified in the order, have effect subject to the adaptations and modifications so made, and any such adaptation or modification shall not be questioned in any court of law
(3) Nothing in clause ( 2 ) shall be deemed
(a) to empower the President to make any adaptation or modification of any law after the expiration of three years from the commencement of this Constitution; or
(b) to prevent any competent Legislature or other competent authority from repealing or amending any law adapted or modified by the President under the said clause
இதன் தமிழாக்கம் வருமாறு:
இந்திய அரசியல் சட்டம் 372 ஆம் பிரிவு
நிலவிவரும் சட்டங்கள் நடைமுறையில் தொடர்ந்தி ருத்தல் மற்றும் அவற்றின் தழுவமைவு:
372 (1) இந்த அரசமைப்பினால் 395 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட செய்சட்டங்கள் நீத்தறவு செய்யப் பட்டிருப்பினும், ஆனால் இந்த அரசமைப்பின் பிற வகைமுறைகளுக்கு உட்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்கத்தை ஒட்டிமுன்பு இந்திய ஆட்சிப்பரப்பில் இருந்த அனைத்துச் செல்லாற்றல் சட்டமும், தகுதிறம் வாய்ந்த ஒரு சட்டமன்றத்தினால் அல்லது தகுதிறம் வாய்ந்த பிற அதிகார அமைப்பினால் மாற்றுகையோ திரும்பப்பெறவோ திருத்தமோ செய்யப்படும் வரையில், அங்கு தொடர்ந்து நடைமுறையில் இருத்தல் வேண்டும்.
(2) இந்திய ஆட்சிப்பரப்பில் உள்ள நடைமுறைச் சட்டம் எதனின் வகைமுறைகளையும் இந்த அரசமைப் பின் வகைமுறைகளுடன் இணக்கம் செய்விக்கும் நோக்கத்திற்காகக் குடியரசுத் தலைவர் ஆணை வாயிலாக, நீத்தறவு வழியாக வேனும் அல்லது திருத்தம் வழியாகவேனும் தேவையானவையாகவோ உகந்தவையாகவோ இருக்கலாகிறவாறான தழுவமை வுகளையும், மாற்றமைவுகளையும் அத்தகைய சட் டத்தில் செய்யலாம்; மற்றும் அந்தச் சட்டம் அந்த ஆணையில் குறித்துரைக்கப் படலாகிறவாறான தேதியி லிருந்து, அவ்வாறு செய்யப்பட்ட தழுவமைவுகளுக்கும் மாற்றமைவுகளுக்கும் உட்பட்டு, செயல்விளைவு உடையதாகும் என வகைசெய்யலாம்; மேலும், அத்தகைய தழுவமைவு அல்லது மாற்றமைவு எதுவும், நீதிமன்றம் எதிலும் மறுத்துவாதிடப்படுதல் ஆகாது.
(3) (2) ஆம் கூறில் உள்ள எதுவும்-
(அ) இந்த அரசமைப்பின் தொடக்கத்திலிருந்து (மூன்று ஆண்டு) முடிவுறுவதன் பின்பு சட்டம் எதனின் தழுவமைவு அல்லது மாற்றமைவு எதனையும் செய்வதற்குக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் கொடுப்பதாக, அல்லது
(ஆ) மேற்சொன்ன கூறின்கீழ் குடியரசுத் தலைவரால் தழுவமைவு செய்யப்பட்ட அல்லது மாற்றமைவு செய்யப்பட்ட சட்டம் எதனையும், தகுதிறம் வாய்ந்த சட்டமன்றம் அல்லது தகுதிறம் வாய்ந்த ஏதேனும் பிற அதிகார அமைப்பு எதுவும் திரும்பபெறவோ, திருத்தமோ செய்வதிலிருந்து தடுப்பதாகக் கருதப்படுதல் ஆகாது.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 16.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக