சனி, 9 பிப்ரவரி, 2019

திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக் கழிக்கும் உரிமை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவீர்களா?

மனுதர்ம ஆய்வுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆற்றிய வரலாற்று உரை
சென்னை, நவ.17  திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக்  கழிக்கும் உரிமை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவீர்களா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018)  மூன்றாம் நாளன்று ‘‘மனுநீதி  ஒரு குலத்துக்கொரு நீதி’’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

Explanation I: The expression law in force in this article shall include a law passed or made by a legislature or other competent authority in the territory of India before the commencement of this Constitution and not previously repealed, notwithstanding that it or parts of it may not be then in operation either at all or in particular areas.

விளக்கம் 1: இந்த உறுப்பில் நடைமுறைச் சட்டம் என்னும் சொல்லமைப்பு, இந்த அரசமைப்பின் தொடக் கத்திற்கு முன்பு இந்திய ஆட்சிப்பரப்பிலிருந்த ஒரு சட்டமன்றத்தினாலோ தகுதிறம் வாய்ந்த பிற அதிகார அமைப்பினாலோ நிறைவேற்றப்பட்டு அல்லது செய் யப்பட்டு மற்றும் முந்தியே திரும்பப் பெற்றிடாத, ஒரு சட்டத்தை, அந்தச் சட்டம் அல்லது அதன் பகுதிகள், அப்போது அறவேயோ குறிப்பிட்ட பரப்பிடங்களிலேயோ செயற்பாட்டில் இல்லாதிருக்கலாமெனினும், உள்ளடக்கும்.

Explanation II: Any law passed or made by a legislature or other competent authority in the territory of India which immediately before the commencement of this Constitution had extra territorial effect as well as effect in the territory of India shall, subject to any such adaptations and modifications as aforesaid, continue to have such extra territorial effect.

விளக்கம் 2: இந்திய ஆட்சிப் பரப்பில் உள்ள ஒரு சட்டமன்றத்தினால் அல்லது தகுதிதிறம் வாய்ந்த பிற அதிகார அமைப்பினால் நிறைவேற்றப்பட்டு அல்லது செய்யப்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்கத்தை ஒட்டிமுன்பு ஆட்சிப் பரப்பிற்குப் புறத்தான செயல் விளைவையும் அத்துடன் இந்திய ஆட்சிப்பரப்பில் செயல்விளைவையும் உடைய சட்டம் எதுவும், மேற் கூறப்பட்டவாறான அத்தகைய தழுவமைவுகள் மற்றும் மாற்றமைவுகள் எவற்றுக்கும் உட்பட்டு, அத்தகைய ஆட்சிப் பரப்பிற்குப் புறத்தான செயல்விளைவைத் தொடர்ந்து உடையதாகும்.

Explanation III: Nothing in this article shall be construed as continuing any temporary law in force beyond the date fixed for its expiration or the date on which it would have expired if this Constitution had not come into force.

விளக்கம் 3: இந்த உறுப்பில் உள்ள எதுவும் தாற்காலிக நடைமுறைச் சட்டம் எதனையும், அது முடிவுறுவதற்காக நிலையுறுத்தப்பட்ட தேதிக்கோ, இந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கவில்லை என்றால் அது முடிவுற்றிருந்திருக்கக்கூடிய தேதிக்கோ அப்பாலும் தொடர்ந்திருக்கச் செய்வதாகப் பொருள் கொள்ளப்படுதல் ஆகாது.

Explanation IV: An Ordinance promulgated by the Governor of a Province under Section 88 of the Government of India Act, 1935, and in force immediately before the commencement of this Constitution shall, unless withdrawn by the Governor of the corresponding State earlier, cease to operate at the expiration of six weeks from the first meeting after such commencement of the Legislative Assembly of that State functioning under clause (1) of Article 382, and nothing in this article shall be construed as continuing any such Ordinance in force beyond the said period.

விளக்கம் 4: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் 88 ஆம் பிரிவின்கீழ் ஒரு மாகாணத்தின் ஆளுநரால் சாற்றுகை செய்யப்பட்டு, இந்த அரசமைப்பின் தொடக்கத்தை ஒட்டிமுன்பு நடைமுறையிலிருந்த ஓர் அவசரச்சட்டம், நேரிணையான மாநிலத்தின் ஆளுநரால் முன்னதாகவே மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலன்றி, அத்தகைய தொடக்கத்திற்குப் பின்பு 382 ஆம் உறுப்பின் (1) ஆம் கூறின்கீழ் அலுவற்பணியாற்றும் அந்த மாநிலச் சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்திலிருந்து ஆறுவாரம் முடிவுறுகையில், செயற்படுவது அற்றுப் போதல் வேண்டும்; மற்றும் இந்த உறுப்பில் உள்ள எதுவும் செல்லாற்றலிலிருந்த அத்தகைய அவசரச்சட்டம் எதனையும், மேற்சொன்ன கால அளவுக்கு அப்பாலும் தொடர்ந்திருக்கச் செய்வதாகப் பொருள் கொள்ளப்படுதல் ஆகாது.

‘இந்து லாவிற்கு அப்படியே இந்திய அரசியல் சட்டத் தில் அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள். இந்து லாவில் சூத்திரன் - மனுதர்மம்தான் இந்து லாவினுடைய மறுபதிப்பு. அதற்கு ஆதாரமே,

திருமணம் செய்யவேண்டுமா? அல்லது தத்து எடுக்கவேண்டுமா? சொத்துக்களில் பிரிவினை செய்ய வேண்டுமா? நீ இந்துவா? உனக்கு இந்து லாதான்!

நீ இசுலாமியனா? இசுலாமிய சட்டம்

நீ கிறித்துவனா? உனக்குக் கிறித்துவ சட்டம்

இப்படி Personal laws என்று சொல்லக்கூடிய அந்தந்த மதத்தின் அடிப்படையில் கொண்டு வந்த சட்டங்கள் நீண்ட காலமாக இருக்கிறது. அந்த சட்டங்களுக்கு முழுக்க உயிருண்டு. அந்த சட்டப்படிதான் நடக்கவேண்டும் என்றால்,  அந்த சட்டம் என்ன சொல்கிறதோ, அதை வைத்துத்தான் தீர்ப்பு கொடுக்கிறார்கள்.

சந்நியாசி ஆவதற்குக்கூட சூத்திரனுக்கு உரிமையில்லை!


நேற்றுகூட நான் சொன்னேன், உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்கள்,சூத்திரன்சந்நியாசிஆகக்கூடாது;திரு மணம்செய்வதற்குஉரிமையில்லை;சொத்துவைத்துக் கொள்வதற்கு உரிமையில்லை. படிப்பதற்கு உரிமையில்லை. எதுவுமே வேண்டாம் நான் காட்டிற்குச் செல்கிறேன், சந்நியாசியாக செல்கிறேன் என்று சொன்னால்,

‘‘நீ சந்நியாசி ஆவதற்குக்கூட உனக்கு உரிமையில்லை; பிராமணர்கள் மட்டும்தான் சந்நியாசி ஆவதற்கு உரிமை உண்டு’’ என்று நீதிமன்ற தீர்ப்புகள் நான்கு கட்டங்களாக இருக்கின்றன

காலங்கள் மாறியதால், இதை சரிப்படுத்தவேண்டும் என்று நீதிபதிகள் கவலைப்பட்டு இருக்கிறார்கள். பிறகு தான்,

Usage பழக்க வழக்கம் என்ற நடைமுறையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, நண்பர்களே! அரசியல் சட்டத்தின் ரீதியாக, தீர்ப்பின் வழியாக இந்தக் கருத்துகளை எடுத்து உங்களுக்குத் தெளிவாக சொன்னோம்.

ஜாதியை காப்பாற்றுவது


மனுதர்மம்தான்!


ஆகவே, அரசியல் சட்டத்திற்கே அடிப்படையில் ஜாதியை காப்பாற்றுவது மனுதர்மம்தான்; அங்கே மனுதர்மம் உள்ளே புகுந்து இருக்கிறது.

இந்தி மொழியை ஆட்சி மொழி என்று திணித்தி ருக்கிறார்களே, அதில் சமஸ்கிருதம் ‘தேவபாஷை’ என்று எழுதிவிட்டார்கள். மற்ற பாஷைகள் எல்லாம் சாதாரணம். (தமிழ்கூட ‘நீச்ச பாஷை’தான் - அவாள் மொழியில்) ஆனால், சமஸ்கிருதத்தை மட்டும் ‘தேவ பாஷை’ என்று சொல்கிறார்களே  என்று உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

இங்கே வழக்குரைஞர்கள், சட்டம் படித்தவர்கள், பேரா சிரியர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

Hindi shall be the official language of the Union of  India

இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிற வாசகம் இந்திய அரசியல் சட்டத்தில் இருக்கிறது.

ஆனால், அப்படி போடும்பொழுதுகூட, அதில் உள்ளே ஒன்றை நுழைத்தார்கள்.

Hindi in Devnagari script shall be the official language of the Union of  India

தேவ்நகரி எழுத்துள்ள இந்தி என்றார்கள்.

தேவன் என்றால் என்ன கடவுள் - நகரி என்றால் எழுத்து.

‘‘தேவபாஷை - தேவபாஷை’’ ஆகிய சமஸ்கிருத தேவ எழுத்துக்கள் இருக்கிற இந்திதான் இங்கே அதிகாரபூர்வமாக இருக்கவேண்டும் என்று சொல்லி, சமஸ்கிருதத்தை ‘‘தேவபாஷை’’ என்று அரசியல் சட்டத்தையே அங்கீகரிக்க வைத்து எழுத வைத்திருக்கிறார்களே!

மனுதர்மத்தினுடைய அடிப்படை என்னவென்று இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.

சமஸ்கிருதம் தேவபாஷை - மற்ற பாஷையெல்லாம் மிலேச்ச பாஷைகள், நீஷ பாஷைகள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே! அரசியல் சட்டத்தில் தெளிவாகவே, ஜாதி, மனுதர்மம் உள்ளே புகுந்து ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது இன்றைக்கும்கூட!

ஒரே ஒரு வார்த்தையை மாற்றினால்போதும் அரசியல் சட்டத்தில்!

எனவேதான், ஜாதி ஒழிக்கப்பட்டது என்று இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரப்பூர்வமாக எழுதவேண்டும். அய்யா அவர்கள் இறப்பதற்குமுன் இதே இடத்தில் மாநாடு போட்டு, தீர்மானம் நிறைவேற்றினார் - (1973 டிசம்பர் 8, 9 ஆம் தேதி)

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள  ஹிஸீtஷீuநீலீணீதீவீறீவீtஹ் என்ற சொல்லை மாற்றி அந்த இடத்தில்  சிணீstமீ என்கிற வார்த்தையைப் போடுங்கள். ஒரே ஒரு வார்த்தையை மாற்றினால்கூட போதும் அரசியல் சட்டத்தில் - ஜாதி சட்ட விரோதம் என்று ஆகிவிடும்.

ஜாதியை ஒழிக்கும்வரை இட ஒதுக்கீடு வேண்டும். பாலம் கட்டும்வரை மாற்றுப் பாதை வேண்டும் என்பது தான் மிக முக்கியம் என்பதையும்கூட அத்துடன் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.

இன்றைக்கு ஏன் மனுதர்மத்தைப்பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்களே, அவர்களுக்காக மிக மற்றொரு முக்கியமான செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசியல் சட்டம் நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. உலகில் 35 நாடுகள் அன்றைக்கு சுதந்திரம் பெற்றன. ஆனால், எந்த நாடுகளிலும், இப்படிப்பட்ட ஜனநாயக ரீதியாக அரசியல் சட்டம் வரவில்லை. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தில் எத்தனையோ குறைபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், சமத்துவத்தை எடுத்து முதலில் சொல்லியிருக்கிறது. அதிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள். சமத்துவத்தைச் சொல்லிவிட்டு, உள்ளுக்குள் இந்து லா போன்றவைகள் உள்ளன.

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a  [SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC] and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political;

LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity; and to promote among them all

FRATERNITY assuring the dignity of the individual and the  [unity and integrity of the Nation];

IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

அரசியல் நீதி, பொருளாதார நீதி, சமூகநீதி

அடுத்ததாக, நம்மை சூத்திரன் என்று கூப்பிடுகிறானே என்பதற்கு முரண்பாடு.

ஆனால், இப்படியெல்லாம் இருந்தாலும், இந்த அரசியல் சட்டத்தில் குறைந்த பட்சம்  செக்குலர், சோசி யலிஸ்ட் இவை அத்தனையும் இருக்கிறது, இந்தக் குறைபாடுகள் இருந்தாலும் கூட.

ஆனால்,  இதையே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த இடத்தில் என்ன வரவேண்டும் என்று சொன்னால், மனுதர் மத்தை அரசியல் சட்டமாகக் கொண்டு வந்து வை என்று சங் பரிவார், பா.ஜ.க. கூறுகிறதே!

என்னை வாடகைக் குதிரையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்!

இந்திய அரசியல் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கி னார் என்று சொன்னாலும், அவரைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அவர் சொன்னார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்

கே.எம். முன்ஷி அய்யர்

டி.டி.கிருஷ்ணமாச்சாரி

சர்.என்.கோபால்சாமி அய்யங்கார்

நான்கு பார்ப்பனர்கள், அம்பேத்கர் ஒருவர், சையது முகமது சாதுல்லா, (மாதவராவ், டி.பி.கைதான்) ஆகியோர் இருந்தாலும், முன்பு இருந்து - இறுதிவரையில் 6 பேர் தான் இருந்தனர்  என்னை வாடகைக் குதிரையாகப் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்று அம்பேத்கர் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொன்னாலும்கூட, இந்த சட்டம் ஜனநாயகத்திற்கு, உலகத்தினுடைய மிகப்பெரிய ஜனநாயகம் இந்திய நாட்டு ஜனநாயகம் என்று இருக்கிறது. வயது வந்தவர்கள் அத்துணை பேருக்கும் வாக்குரிமை. அதேபோன்று, பெண்கள் சமத்துவம் - அவர்களுக்கு சமத்துவத்தைக் கொடுத்ததினால்தான், இன்றைக்கு சபரி மலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்கிற நீதிமன்றத் தீர்ப்பு.

ஏன் இதை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்திய அரசியல் சட்டத்தை ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக மனுதர்மம் இந்திய அரசியல் சட்டமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

நண்பர்களே! இன்றைக்கு அவர்கள் எழுதவில்லை - தொடர்ந்து சொல்லிக் கொண்டும், எழுதிக் கொண்டும் வருகிறார்கள்.

அரசியல் சட்டத்தை உருவாக்கி 1949 ஆம் ஆண்டில் சொல்கிறாரே அம்பேத்கர், அப்பொழுது அவர் சட்ட அமைச்சராக இருக்கிறார்.

வரிக்கு வரி விவாதித்து இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள்!

அப்பொழுதே ஒரு கட்டுரை எழுதுகிறார்கள் - ‘ஆர்கனைசர்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகை பா.ஜ.க. வினுடையது. அந்தப் பத்திரிகையில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.

‘‘But in our constitution, there is no mention of the unique constitutional development in ancient Bharath. Manu’s Laws were written long before lycurgus of sparta or solon of persia. To this day his Laws as enunciated in the Manusmriti excite the Admiration of the world and elicit spontaneous obedience and conformity. But to our constitutional Pundits that means nothing.’’

இதன் தமிழாக்கம் வருமாறு:

ஆனால் நம் அரசியலமைப்புச் சட்டத்தில் பண்டைய பாரதத்தின் ஒப்பற்ற அரசியலமைப்பின் வளர்ச்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஸ்பார்ட்டாவிலும் பார சீகத்திலும் சட்டங்கள் எழுதப்படுவதற்கு முன்னரே மனுவின் சட்டங்கள் எழுதப்பட்டன. இன்றுவரை மனுஸ்மிருதியில் கூறப்பட்ட சட்டங்கள் உலகத்தாரால் பாராட்டப்படுகின்றன. உடனடியாகக் கீழ்ப்படியும் விதத்திலும் பின்பற்றும் விதத்திலும் அமைந்துள்ளன. ஆனால் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

அரசியல் சட்டத்தை உருவாக்கும்பொழுது அது சாதாரணமாக உருவாக்கப்படவில்லை. 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாள்கள் கடுமையாக ஆலோசனை செய்து, அரசியல் நிர்ணய சபையில் அத்தனை உறுப்பினர்களும் விவாதித்து, வரிக்கு வரி விவாதித்து இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால்தான், சமூகநீதிக்கெல்லாம் கொஞ்சம் பாதுகாப்பு இருக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் கடும் உழைப்புகள் அடக்கம் ஆகும்.

முதல் அரசியல் சட்டத் திருத்தம்


தந்தை பெரியாரால் வந்தது


அதில் விட்டுப்போனதை சட்டத் திருத்தத்தின்மூலமாக  கொண்டு வந்தார்கள். நூறு அரசியல் சட்டத் திருத்தம் வந்திருக்கின்றன இன்றுவரை.

முதல் அரசியல் சட்டத் திருத்தம் (1951) தந்தை பெரி யாரால் வந்தது. இரண்டு அரசியல் சட்டத் திருத்தம் அய்யாவிற்குப் பிறகு, நம்மைப் போன்ற பெரியார் தொண்டர்களால் வந்தது 76 ஆவது திருத்தம்; 1994 ஆம் ஆண்டில்!

நாளைக்கு இன்றைய ஆட்சி தொடர்ந்து வந்தால், இந்திய அரசியல் சட்டம் தூக்கி எறியப்படும். மனுதர்மம் தான் இந்திய அரசியல் சட்டமாகக் கொண்டு வருவார்கள் என்பதற்கு இதுதான் ஆதாரம்.

‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் அவர்கள் எழுதியி ருக்கிறார்கள்.

ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல்!


இன்னொரு ஆதாரத்தையும் சொல்லுகிறேன்.

விசுவ இந்து பரிஷத்தைப்பற்றி  Vishwa Hindu Parishad and Indian politicsஎன்ற தலைப்பில் ஆய்வினை  Manjari Katju  என்பவர் செய்திருக்கிறார். கட்ஜூ என்று சொன்னாலே, உயர்ஜாதிக்காரர்கள்தான்.

அந்த ஆய்வில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை சொல்லியிருக்கிறார்.

விசுவ இந்து பரிஷத்திற்கு யாரை தலைவராகப் போடலாம்; நாம் வெளிப்படையாகத் தெரியக்கூடாது; அப்படிப்பட்ட ஒருவரை தலைவராக ஆக்கவேண்டும்  என்று ஆலோசித்து, காஷ்மீர் இளவரசரான டாக்டர் கரண்சிங் அவர்களை நியமித்தார்கள். அவர் பொதுவான மனிதர். சமஸ்கிருத மொழியைப் படித்தவர். தலைவராக வேண்டும் என்று அவரை கேட்டவுடன், அவரும் விசுவ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

அவர் தலைவர் பொறுப்பை ஏற்று ஓராண்டு ஆன பிறகு, மனுதர்மம்தான் இந்திய அரசியல் சட்டமாக வேண்டும் என்று அந்த அமைப்பினர் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

கரண்சிங் சொல்கிறார்!


கரண்சிங் அவர்கள், அந்த அமைப்பினரின் பேச்சை பார்த்து, நாம் இந்த அமைப்பின் தலைவராக பொறுப் பேற்றதே வேறு காரணத்திற்காக - பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார்.

அப்பேர்ப்பட்ட கரண்சிங் அவர்கள் சொல்கிறார்,

What is required is a restatement and reaffirmation of these truths (of Vedanta) so that narrow - minded, superstitions and undesirable social customs that have developed in Hinduism over many centuries of servitude can be cleansed (Singh 1983: 16).He later came to advocate ‘‘Hindu renaissance’’, which he distinguished from ‘‘Hindu revival’’, He appealed for a renaissance of social reform and spiritual regeneration (Singh 1983: 14-17), a renaissance which had nothing to do with Hindu - Muslim confrontation or even Hindu revivalism (Singh 1983:18). Hindu revivalism, according to him, meant doing away with the Indian Constitution and reintroducing the Manu Smriti going 2,500 years back, which is uncalled for (Singh 1983: 15). In Karan Singh’s words,

இதன் தமிழாக்கம் வருமாறு:

இந்து மதத்தை மீட்டெடுப்பதை விடுத்து அவர் இந்து மறுமலர்ச்சி பற்றிப் பேசத் தலைப்பட்டார்.  சமூகசீர்திருத்தம், ஆன்மீகப் புத்துருவாக்கம் என்னும் மறுமலர்ச்சியை அவர் வேண்டினார். (சிங் 1983: 14-17) அதற்கும் இந்து முஸ்லீம் சச்சரவுக்கும் இந்துமத மீட்டெடுப்புக்கும் தொடர்பே இல்லை (சிங் 1983: 18) இந்துமத மீட்டெடுப்பு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, மனுஸ்மிருதியை மீண்டும் அறிமுகப்படுத்தி 2500 ஆண்டு பின்னோக்கிப் போவதாகும். அது தேவையற்றது. (சிங் 1983:18)

வேதாந்த உண்மைகளை மீண்டும் தெரிவித்து அவற்றிலுள்ள உண்மைகளை உறுதிப்படுத்தி, பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தின் காரணமாக இந்துமதத்தில் தோன்றியுள்ள குறுகிய மனப்பான்மை யையும் மூடநம்பிக்கைகளையும் விரும்பத்தகாத சமூகப் பழக்கங்களையும் ஒழித்துத் தூய்மைப் படுத்துவதே இன்றைய தேவை.

ஆகவே நண்பர்களே! நாம் கொஞ்சம் அசந்தால், இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டமாகக் கொண்டு வந்துவிடுவார்கள்.

நம்பூதிரிப் பார்ப்பனர்கள்தான்


இன்னொரு சிறிய உதாரணத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்:

நீண்ட காலத்திற்கு முன்பு கேரளாவில் சம்பந்தா மேரேஜ் (சம்பந்தா திருமண முறை) என்று சொல்கிறபொழுது, திருமணம் ஆகப் போகும் நாயர் மணப்பெண்ணுடன் முதல் நாள் இரவில் நம்பூதிரிப் பார்ப்பனர்கள்தான் முதலிரவைக் கழிப்பார்கள். அது ராஜாவாக இருந்தாலும் அப்படித்தான்.

அம்பேத்கர் அவர்கள் எழுதிய What Congress and Gandhi have Done to the Untouchables என்ற நூலில் இதைப்பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அம்பேத்கர் அவர்கள் அந்த நூலில் குறிப்பிட்டிருப்பதாவது:

There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P.C.Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning on the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass ready to wash his feet and take it to their parents waiting to sip it before taking their food. Under the British Government and by reason of its equalitarian jurisprudence these rights, immunities and privileges of the Brahmins have ceased to exist.

இதன் தமிழாக்கம் வருமாறு:

அடிமை வகுப்பைச் சேர்ந்தவர்கள் பார்ப்பனர்களின் காலைக் கழுவிய தண்ணீரைக் குடிக்காமல் உணவருந்த இயலாது என்ற காலம் இருந்தது. ஒருமுறை சர்.பி.சி.ராய் தமது குழந்தைப் பருவத்தில் அடிமை வகுப்பைச் சேர்ந்த சிறுவர்கள் காலை நேரத்தில் சாலையோரத்தில் கையில் தண்ணீர்க் கோப்பைகளை வைத்துக் கொண்டு யாராவது பார்ப்பனர்கள் வந்தால் அவர்கள் காலைக் கழுவி அந்தத் தண்ணீரை எடுத்துப் போய்ப் பெற்றோருக்கு அளித்து உணவருந்துவதற்குமுன் அதனை அருந்தச் செய்யலாமே என்று மணிக் கணக்காகக் காத்திருந்ததைச் சொல்கிறார் - பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சமத்துவ நீதிபரிபாலனத்தின் காரணமாகவே பார்ப்பனர்களின் இத்தகைய உரிமைகளும், பெருமைகளும் ஒழிந்து போயின.

இதெல்லாம் மனுதர்மத்தினுடைய தாக்கம்தானே. இன்றைக்கும் உத்தரப்பிரதேசத்தில் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் காலை கழுவி குடித்தார்கள் என்கிற செய்தி வந்திருக்கிறதே - குடித்ததோடு இல்லாமல், அதைப் பெருமையாக சொல் கிறார்கள் - நான் மட்டுமல்ல, நீங்களும் குடியுங்கள் என்கிறார்கள்.

மனுவின் சமுதாயம் வரக்கூடாது;


மனித சமுதாயம் மலரவேண்டும்


மனுதர்மத்தை அரசியல் சட்டமாகக் கொண்டுவராம லேயே அதை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவேதான், மீண்டும் ஒரு மனுவின் சமுதாயம் வரக் கூடாது. மனித சமுதாயம் மலரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுகளே தவிர, வெற்று வேலை அல்ல,

மழையையும் பொருட்படுத்தாமல் வந்தமைக்கு நன்றி கூறி என்னுரையை முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

-  விடுதலை நாளேடு, 17.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக