வியாழன், 28 பிப்ரவரி, 2019

வேதங்களா? விபரீதங்களா?


கவிஞர் இரா.கண்ணிமை


இந்து சமய வளர்ச்சிக்கு ஆதாரமும் பயன் களுமாயுள்ளவை - வேதங்கள் நான்காம். அவை இருக்கு, யசுர் (எதுர்), சாமம், அதர் வணம் என்பவை. இந்த நான்கு வேதங்களும் பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து வந்த தாய் கதை. இவை சமஸ்கிருத மொழியில் எழு தப்பட்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் கடல்கோள் உண்டான பொழுது பிரம்மாவின் மகன் சுயம்புமனு, இந்த வேதங்களை காப்பாற்றி, வேதாந்தத்தை உண் டாக்கினானாம். மனுவின் காலத்தில் உள்ள பல வித்வான்கள் அக்காலத்தின் பாரம்பரிய செயல்களை சூத்திரங்களாகக் கட்டி வேதங் களை உண்டாக்கினார்களாம்.

இவற்றை எழுதியவர்களில் முக்கியமான வர்கள் - மனு அலர்க்கன், மார்க்கண்டன், விசு வாமித்திரன், பரத்துவாசன், தன் நூறு மகன் களை சபித்து சண்டாளர் ஆக்கிய வசிஷ்டர், வாமதேவன், அகஸ்தியன், தன் தாயின் தலையை அறுத்த பிருகுமுனி, சமதக்கினி, கவுதமன், பிரகஸ்பதி, நாரதன் முதலானவர்கள். இவர்கள் விரிவாக எழுதிவைத்தவைகளைத் தன் உடன் பிறந்தான் மனைவியை சேர்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற வியாச ரிஷி வேதத்தை எல்லாம் சேர்த்து, இருக்கு வேதத்தை, பாலி என்னும் பைலன் ரிஷிக்கும், யசுர் வேதத்தை வைசாம்பாயன் ரிஷிக்கும், சாம வேதத்தை சயமுனி ரிஷிக்கும், அதர்வண வேதத்தை சோமன் என்னும் ரிஷிக்கும் போதிக்க, இவர்கள் மற்றவர்களுக்குப் போதித் தார்களாம்.

வியாசரிடம், யசுர் வேதத்தைப் பெற்ற வைசம் பாயஷ ரிஷி, தன் சீடன் யாஜ்ஞ வல்லியருக்கு கற்பித்தானாம். ஒருநாள் இவ் விருவருக்கும் கடுமையான சண்டை நடந்த போது தன் குரு வைசம்பாயனரிடம் கற்ற வேதத்தை முழுமையாக வாந்தி எடுத்து விட்டானாம். இதைப்பார்த்துக் கொண்டிருந்த தித்திரி என்னும் பறவை அதை எடுத்து விழுங் கியபின் பாட ஆரம்பித்ததாம். இதன் காரண மாய் இதற்கு தைத்தரீயம் என்னும், கிருஷ்ண யசுர் வேதம் - என்ற பெயர் உண்டாயிற்றாம். பிறகு யாஜ்ஞவல்கி ரிஷி சூரியனை வணங்கி சுக்கில யசுர் வேதம் என்னும் ஓர் புது வேதத்தை கற்றுக் கொண்டாராம். இதற்கு வாஜஸ்னேயீ என்று பெயராம்.

வேதத்தில் பிராமணோ என்னும் உபதேச பிரமாணங்களும், சங்கீத்தா எனப்பட்ட மந்தி ரங்களும் உண்டாம். இந்த மந்திரங்களில் சூரியன், சந்திரன், பூமி, நீர், காற்று, நெருப்பு, வானம், புல் பூண்டு, மரங்கள் முதலியவற்றை நோக்கி செய்யும் மந்திரம் - இவைகளைப் பல ரிஷிகள் உண்டாக்கியதாய் தெரிகிறது.

கற்பிக்கும் பிரமாணங்களோ, பிராமணர் கள் (பார்ப்பனர்கள்) செய்யும் பூஜைகளின் விவரங்களை குறித்தும், மந்திர உபதேசங் களை குறித்தும்,  சடங்காச்சார விதி நியமனங் களைக் குறித்தும் கற்பிக்கிறது.

இந்த வேதங்களில் பெரும்பாலும் நடை முறைகளை பல அசிங்கமான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. பரப்பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறது என்றும், அது உலகத்தின் மாயை என்றும், எந்தப் பொருளும் அதன் தோற்றம் என்றும், இவ்வுலகத்தை உண்டாக்கி அதை ஏற்க மும்மூர்த்திகளை படைத்தா ரென்றும், அந்தக் கடவுளை வணங்குவதே உயர்ந்த ஞானமென்றும், மனிதர் அவரை அறிந்துக்கொள்ள கூடாமையால், மும்மூர்த்தி களையும், முப்பத்து முக்கோடி தேவர்களை யும், அக்கினி முதலிய பஞ்ச பூதங்களை யும் சிலைகளையும் வணங்க வேண்டும் என்று கற்பித்து இருக்கிறது. இதில் கடவுளுக்கு பிரம்மம் என்னும் பெயர் உண்டு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் வேதத்தில் வரவுக்கும் மனதுக்கும், புசிப்புக்கும் ஊழியனுக்கும், துர்ச்சன னுக்கும் வழங்கும்  பொதுப் பெயராயும் இருக்கிறது.

உயிரும் உடலும் ஓரிடத்தில் நித்திய மென்றும் மற்றொரு விடத்தில் - கட வுளில் ஒரு பங்கு என்றும் உயிர்கள் தாம் செய்த பாவ புண்ணியத்தின்படி உடலை விட்டபின், மற்றொரு உடலில் பாய்கிறது என்றும் சொல்லுகிறது. பிறப்பைப் பற்றி மேலே பூலோகம், வலோகம், சுவலோ கம், சன்லோகம், தபோலோகம், மகோ லோகம், சத்திய லோகம் என்ற ஏழும்; கீழே அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதளம், பாதாளம் என 7 ஆக 14 லோகங்கள் உண்டாம். இதன் விளக்கங்களை சாங்கிய சாத்திரத்தில் தெளிவாக காணலாம். இதுவல்லாமல், அக்கினியில் சூரியன் பிறந்தானென்றும், சூரியனில் சந்திரனும், சந்திரனில் மழை யும், மழையால் மின்னலும் உண்டாவ தாய் சொல்லுகிறது. இவையன்றி பகை வரைக் கொல்லவும், தேவர்களுக்கு சில மந்திரங்கள் உண்டாம்.

மனுவின் தர்ம சாத்திரத்தில், ருக்கு வேதம் முழுவதும் கற்றறிந்த ஆசாரியன் மூன்று உலகத்திலுள்ள குடிகளையெல் லாம் கொலை செய்த பின் சண்டாள ரோடு இருந்து புசித்தாலும் அவனுக்கு பாவமில்லை என்றும் சொல்லப்பட்டி ருக்கிறது. வேதம் இந்த கருத்துள்ள நடையிலிருந்தால் - இதை வைத்து மாற் றானை கொலை செய்யும் வழியும் உண் டாம். இந்த நான்கு வேதங்களுக்கும் நான்கு துணை வேதங்களும் உண்டாம். நான்கு வேதங்களின் உபதேச பிரமா ணங்களிலிருந்து வேத நுட்பங்கள் என் னும் 32  உபநிடதங்களும் உண்டாக்கப் பட்டிருக்கிறதாம். இவற்றைப் பின்வரும் பிரிவுகளில் காணலாம்.

மகா ஞானியாகிய கபிலமா முனிவர் தமது அகவலில் இந்த நான்கு வேதங் களும் வந்த வரலாற்றை எழுதி இருக் கிறார். பிர்மாவின் பேரனாகிய மனு விற்கு பின் - பிரம்மாவுக்கு வைப்பாட்டி - கூத்தியாகிய ஊர்வசி வயிற்றில் விபச்சாரத்தில் பிறந்த வசிஷ்டர் முதலில் இவ்வுலகிற்கு வேதத்தைக் கொண்டு வந்தானாம். அவர்தம் போதனையில் அனைவரும் - அனைத்து மாமிசங்க ளையும், மச்சங்களையும் (மீன்கள்) சாப்பிடவும் போதித்தாராம். இதுகுறித்து சில ராஜாக்களும், பிரபுக்களும் விவா திக்கவே அனைத்து மக்களும் வாழ்வ தற்கு முன்மாதிரியாக வசிஷ்டர் அருந் ததி என்ற சக்கிலிச்சிப்பெண்ணை திரு மணம் செய்து வேதத்தை  நிலைநாட்ட முனைந்ததாய் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சக்கிலிச்சி சாதி பரை பெற்று இரு வரும் தன்  தந்தை வசிஷ்டரை போல் அதே வேதத்தை போதித்து சாதி வேறு பாடின்றியிருக்க ஒரு பறைச்சியை மணந்து அவளிடத்தில் பராசர் பிறந் தாராம். பராசரும், தம் பெற்றோரைப் போல் அதே வேதத்தை போதிக்கையில் ராஜாக்களும், பிரபுக்களும் அவருடன் நீங்கள் சொன்னபடியெல்லாம் கேட்கிறோம். ஆனால் மச்சம் (மீன்) மிகவும் நாற்ற மானதால் அதை மட்டும் புசியோம் என்று சொன்னதால் பராசர் மச்சகந்தி என்னும் பெண்ணை புணர்ந்து - மச்சராஜாக் களையும், மச்ச குருக்களையும் உண்டாக்க அவளிடத்தில் வேதவியாசரைப் பெற்றா ளாம். எவ்வாறெனில் பிரம்மாவின் சாபத் தால் ஒரு பெண் மீனாக மாறி யமுனை யாற்றில் இருந்தாளாம். வசுநாகன் என்பான் தூக்கத்தில்தன் விந்து கசிந்து விட, விழித் ததும், வீரியத்தை வீணாக்கினால் குற்ற மென்று இலைத் தொன்னையில் வைத்து தன் வல்லூறு பறவை வழி அரண்மனையி லிருக்கும் கிரியை என்னும் தன் மனை வியிடம் கொடுக்க சொன்னதால் வல்லூறு அதைக் கொத்திக் கொண்டு போகும்போது ஒரு ராஜாளி கண்டு இரு பறவைகளும் எதிர்த்து சண்டை போட்டதில் - இலை கிழிந்து அதிலிருந்து விந்து யமுனை ஆற்றில் விழுந்து மிதந்ததாம். மீனாய் சாபம் பெற்ற பெண் இரு பிரிவாக்கி புசித்து கர்ப்பமானாளாம். இந்த மீனான பெண் - வலையர் வலையில் சிக்கி, தாச ராஜனிடம் கொடுக்க அவன் அதன் வயிற்றைக் கீறவே ஆண் பெண்ணான இரு பிள்ளைகள் வெளிப்பட்டதால் வசுராஜன். ஆண் பிள்ளையை மச்சராஜன் என்று பெயரிட்டு தாசராஜன் வளர்த்தானாம். பெண் பருவம் அடைந்ததும் தான் விரும்பியபடியே தந்தையான தாசராஜன் படகு ஒன்றை செய்துகொடுக்க அவள் யமுனையாற்றில் - ஓட்டிக் கொண்டிருந்தாளாம்.

பராச மகா முனியோ இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் உச்சமா கும் போது ஒருபெண்ணை கூடி ஒரு பிள் ளையைப் பெற்றால் உலகத்திற்கு நன்மை உண்டாகும் என்றுசிந்தித்து, அதேநேரம் கூடி வரும் வரை தவத்திலிருந்தாராம். காலம் கூடி வருவதை கண்டு தவத்தை விட்டெழுந்து நரகத்திற்கு வேகமாய் போகும்போது - யமுனை வெள்ளப் பெருக் குடன் குறுக்கிடவே - பராசர் ஆற்றின் படகு விடும் மச்சகெந்தியைப் பார்த்து - என்னை அக்கரையில் விட்டுவிடு என்றாராம். படகில் ஏறி நடு ஆற்றில் வருகையில் நட்சத்திரங்கள் உச்சம் பெற்று விட்டதால், காலம் தப்பாமல் படகோட்டும் பெண்ணிடத் திலாவது சேர வேண்டும் என்று நினைத்து மச்சகந்தியைப் பார்த்து நீ அருள் கூர்ந்து திரண்டு பரந்து, நிமிர்ந்து வளர்ந்து வருகிற முலையை என் மார்பில் அழுத்தி அணை வாயாகில் என் கோரிக்கை நிறைவேறும், நீயும் உலகில் அழிவில்லா புகழ் அடைவாய் என்று சொன்னான். மச்சகெந்தி வெட்க முற்று - பெரியவரான இவர் தம்மை புணர அழைக்கிறார் என்று நினைத்து அய்யா! நீங்களோ மகாதவயோகி, நானோ பருவ மடையா இளம்பெண். நீங்கள் என்னைச் சேர விரும்புவது தகுதியா? அரும்பை கசக்கி முகர்ந்தால் பரிமளிக்குமா? பருவமில்லா என்னை கூடலாமா? என் மேலெங்கும் மச்ச கந்தம் வீசுவதையும் எப்படி சகிப்பீர்? என்று கூறினாள். பராசர் - இன்று முதல் உன் பெயர் பரிமளகந்தியாய் இருக்கட்டும் - உன் மச்சகந்தம் நீங்கும் என சொல்லி ஆற்றின் நடுவில் திட்டு போல் தோன்ற செய்து இரு வரும் அதில் இறங்கி கூடி கலந்தார்களாம். பிறகு பராசர் எழுந்து சொல்லாமல் ஓடி விட்டாராம்.

மச்சகந்தி உடன் கருவுற்று மூன்றேமுக் கால் நாழிகைக்குள் வேதவியாசர் பிறந் தாராம். அவர் பிறக்கும் போதே மான்தோல் புலித்தோலுடன் சடாவிரதராகி காவி காம் பராய் வேதத்தை கையில் பிடித்துக் கொண்டு உதயமானாராம். உடனே வேதவியாசர் தாயை வணங்கி என் தந்தை எங்கே என்று கேட்க, அதோ போகிறார் என, தன் தந்தையை பின் தொடர்ந்துபோய் தவம் செய்து, தன் தந்தை மறைந்த பின் உலகில் வேதங்கள் கருத்து -  வேற்றுமையாய் மாறுபட்டு கிடந்ததை சிக்கறுத்து,  இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்து கொடுத்ததுமல்லாமல், அய்ந்தாம் வேதமாக பதினெண் புராணத்தோடு, பாரத மும் வெளிப்பட்டது. பாரதம் ஆதி பருவம் வேதவியாசர் விளக்கத்தில் இதை தெளி வாய் பார்க்கலாம்.

மச்சகெந்தி, பரிமளகந்தியாகி பராசரைப் பெற்ற பின் சூரியவம்ச மன்னரான சந்தன ராஜனுக்கு வாழ்க்கைப்பட்டு, மூன்று பிள் ளைகளைப் பெற்று அவர்கள் மூவருக்கும் பெண் கொண்டு வாழும் சமயம் அம்மூவ ரும் இறந்து, தன் கணவரும் இறந்து, தானும் தன் மருமகள் மூவரோடும் விதவைகளா னார்களாம். தன் முந்தைய கணவனுக்கு விபச்சாரத்தில் பெற்ற முதல் மகன் வியா சரை அழைத்து தன்பிந்தின கணவனுக்கு பிறந்த மக்களுக்கு கட்டினார்களாம். வித வையான மருமகளோடு சேர்ந்து சந்தானம் உண்டாக்க கேட்க அவர்கள் மூவர்களை யும் வேதவியாசர் கூடி, மச்சராஜாக்கள் ஆகிற குருகுலத்து அரசர்கள் பிறந்தார்களாம்.

சிவவாக்கியர்

அய்ம்பத்தொன் றிலக்கர மடங்கவோ ரெழுத்துளே

விண் பரந்த மந்திரமும் வேதநான்கு மொன்றாமோ

திருமூலர்

கடவுளோனொருவனுண்டே - வேதம் மொன்றே என்ற பாடலில் பார்க்கலாம். வேதவியாசரிடமிருந்து பிராமணர் (பார்ப் பனர்) அந்த ஒரே வேதத்தைப் பெற்றுக் கொண்டபோது சில செயல்களை வேத வியாசர் கட்டளையிட்டார்.

அவை

1) அனைவரும் தங்கள் மெய்யுடலை சுத்தமாக வைத்துக்கொள்வதும்,

2) ஒரே ஒருவரை நினைத்துக் கொள் வதும்,

3) சாதி வேற்றுமையின்றி நீச்சல் முத லான சக்கிலியர் வீட்டிலும் சாப்பிடலா மென்பதும் ஆகும்.

- விடுதலை ஞாயிறு மலர், 9.2.19

மனுநீதி சோழன் என்பானும் உண்டோ!


கலி.பூங்குன்றன்


‘மனுநீதி சோழன், மனுநீதி சோழன்’ என்று கிளிப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல சொல்லிக் கொண்டு திரிகிறார்களே - உண்மையிலேயே அப்படி ஒரு சோழ அரசன் இருந்தானா? அதற்கான வரலாறுதான் உண்டா? அவன் இருந்தது உண்மையென்றால், அவன்  வாழ்ந்த காலம் என்ன? ஆண்ட ஆண்டு என்ன? அவனு டைய இயற்பெயர் என்ன ?

இந்த வினாவை நீண்ட காலமாகக் கேட்டுத்தான் வருகிறோம் - இதுவரை நாணயமான பதில்தான் இல்லை.

அப்படி இருக்கும்போது - தமிழக அரசு சார்பில் ரூ.1.10 கோடியில் திருவாரூரில் மனுநீதிச் சோழனுக்கு மண்டபம் கட்டியது தான் வேடிக்கை.

இந்தச் செய்தியை வெளியிட்ட தினமணி’, சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்குரிய திலகமாக விளங்கி, மனு நெறிப்படி வாழ்ந்து காட்டிய மன்னன் மனுநீதிச் சோழன் என்று குறிப்பிட்டதே - இதன் உள்நோக்கம்தான் என்ன?

மனுநீதிச் சோழனைப் பற்றிய கதை அளப்பு என்ன தெரியுமா? மனு நீதி சோழனுக்கு ஒரு மகனாம். அவனது தேர்க் காலில் பசுங்கன்று ஒன்று சிக்கி செத்து விட்டதாம். உடனே தாய்ப்பசு அரசனின் அரண்மனைக்கு நேரே வந்து, தன் கொம்பினால் ஆராய்ச்சி மணியை அடித் ததாம். அரசன் விசாரித்தபோது உண்மை என்ன என்று அறிந்து, தன் மகனைத் தேர்க்காலில் வைத்துக் கொன்றானாம்.

இதைப் படிக்கும்பொழுதே இதன் புராணக் கற்பனை யின் முகம் வெளுத்துப் போகிறதே!

பசு ஆராய்ச்சி மணியை வந்து அடித்தது என்பது நம்பத் தகுந்ததுதானா? அரசனிடம் நீதி கேட்டது - முறையிட்டது என்பது எல்லாம் ஏற்கக்கூடியதுதானா?

பின் ஏன் இப்படி ஒரு கதை? மனு தர்மத்தை உயர்த்திப் பிடிக்க பார்ப்பனப் பண்டாரங்கள் எழுதித் திணித்த சரடு இது என்பதுதான் அதற்கான உள்ளீடு.

சும்மா ஆடுமா ‘தினமணி’ அய்யர் வாளின் குடுமி? இதுதான் சந்தர்ப்பம் என்று சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவியது.

உண்மையிலேயே மனுநீதிப்படி ஆட்சி செய்தால் நிலைமை என்னாகும்?

“நீதிமன்றத்திற்கு அரசன் வர இயலாதபோது அரசனது இருக்கையில் பிராமணன் அமர்ந்து நீதி வழங்கலாம். அந்தப் பிராமணன் வேத விதிமுறை களைக் கல்லாதவனாயினும் சரியே. மிகமிக இழிந்த பிராமணனாயினும் சரியே! அவன் எப்படிப் பட்டவனாயினும் அதுபற்றிக் கவலையில்லை! அவன் பிராமணனாயிருக்கவேண்டும். அவ்வளவுதான்! ஆனால், நான்காம் வருணத்தவன் (சூத்திரன்) அரசனது இருக்கையில் அமர்ந்து நீதி சொல்லக் கூடாது; அவன் அறிஞனே என்றாலும், சூத்திரன் ஆகையால் அரசன் சார்பாக நீதியுரைக்கக்கூடாது.’’

“The judicial officer of a king must be a Brahmin, even if he be a mere Brahmana by birth (and bereft of the virtues of his order) or a mere professional adjudicator of issues, and not a sudra under any circumstances what so ever’’ என்கிறது மனுதருமம்.

“மன்னன் இயற்றவேண்டிய விசா ரணைகள் எந்த நாட்டில் சூத்திரனால் நடைபெறுகின்றதோ அந்த நாடு சேற்றில் அகப்பட்ட பசுவைப்போல் கண் முன்னே துன்ப முறுவதா கின்றது” என்று மனுதருமம் தொழிலாளர்கள் (நான்காம் வருணத்தவர்) சான்றோர்களாயினும் நீதி விசாரணையில் ஈடுபடக் கூடாது என்று வற்புறுத்துகின்றது.”

“The realm of a king where in a sudra Official administers Justice, is destroyed under his very eyes, like a cow merged in the mud.’’ (MN DUTT)

பிப்ரவரி -7:


நாடெங்கும் மனுதர்மம்


எரியட்டும்! எரியட்டும்!!


மனுவாதி : ஒருகுலத்துக்கொருநீதி என்றார் மனோன் மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. பார்ப்பனர் கொலை செய்தால் சிகைச் சேதம் - அதாவது முடியைச் சிரைக்க வேண்டும். அதே நேரத்தில் சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம் - அதாவது தலையை வெட்ட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 379) என்கிறது மனுநீதி.

சூத்திரன் ஆட்சி செய்யக்கூடாது - அப்படி ஆட்சி செய்தால், அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசுவைப்போல மூழ்கி விடும் என்ற மனுதர்மத்தை ஏற்றுக்கொண் டால், மாண்புமிகு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் முதல மைச்சர் ஆசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய முடியுமா?

ஏன் மோடிதான் பிரதமர் நாற்காலியில் அமர முடியுமா?

எந்தக் காலத்திலோ, எந்த ஒரு கிறுக்கனோ எழுதிக் குவித்ததை எல்லாம் அப்படியே நம்பிவிடலாமா? இது ஜெய லலிதா காலத்தில் முடிவு செய்ததாகவே இருக்கட்டும்; யார் தவறு செய்தாலும் தவறு தவறுதானே!

பெண்களைப்பற்றி மனுதர்மம் கூறியி ருப்பதைப் படித்தால், மானமுள்ள எவனும் அந்தத் தருணத்திலேயே கொளுத்தத்தான் செய்வான். படுக்கை, ஆசனம், அலங் காரம், கோபம், பெண், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனு வானவர் கற்பித்தார் (மனு நீதி அத்தியாயம் 9 சுலோகம் 17).

இதற்கு விளக்கமும் வேண்டுமா? ஒவ்வொரு பெண்ணும் கூட்டுமாரை எடுத்துக் கொண்டு புறப்பட வேண்டாமா?,

அன்னை மணியம்மையார் அவர் களின் பிறந்த நாளான மார்ச் 10 ஆம் தேதியன்று (2017 )தமிழ்நாடெங்கும் 10 மய்யங்களில் மனுநீதியைக் கொளுத்தும் போராட்டத்தை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை நடத்தியது.

அதற்கு முன் 17.5.1981 அன்று திராவிடர் கழகம் மனுதர்மத்தை எரித்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் 1922 திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத் தையும் மனு தர்மத்தையும் கொளுத்த வேண்டும் என்றார் தந்தைபெரியார்.

1927 டிசம்பர் 4 அன்று வடாற்காடு குடியாத்தம் சுயமரியாதை மாநாட்டில் மனுதர்மம் கொளுத்தப்பட்டது.

இப்பொழுது மீண்டும் வரும் 7.2.2019 அன்று தமிழ்நாடெங்கும் மனுதர்மம் எரிக்கப்படட்டும்!  எரிக்கப்படட்டும்!!

 - விடுதலை ஞாயிறு மலர், 2.2.19


வியாழன், 21 பிப்ரவரி, 2019

அக்கப்போரின் அச்சு வடிவமான 'துக்ளக்' ஏடு, பித்தலாட்ட பிரச்சாரத்தின் மொத்த வடிவம்!

மனுதர்மக் கருத்துகளை மாற்றிக் கூறி சோ மோசடி!


மஞ்சை வசந்தன்


இன்று ஆசிரியராய் இருக்கும் குருமூர்த்தி அய்யர் மட்டுமல்ல, அவரின் குருவான சோ இராமசாமியும் அப்பட்டமான பொய்களை அசல் உண்மைபோல ஆலாபனம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள்.

அப்படி மோசடியாய், பொய்யாய், தப்பாய் எழுது கிறோமே என்று கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாமல் எழுதக் கூடியவர்கள்.

27.02.2019 தேதியிட்ட துக்ளக் இதழில் தருமத்தின் சாரம் என்னும் தொடரில், மனுஸ்மிருதி கூறும் சட்டங் கள் என்னும் தலைப்பில் சோ இராமசாமி எழுதியவை வெளியிடப்பட்டுள்ளன.

அக்கட்டுரையில் சோ எழுதியுள்ளவை: பிராமணன் என்றால் வெறும் பிறப்பால் மட்டும் ஆகாது.

ஸூத்ரோ ப்ரோஹ்மணதாமேதி ப்ராஹ்மணச் சேதி ஸூத்ரதாம்

க்ஷத்ரியாத் ஜாதமேவம் து வித்யாத் வைச்யாத் ததைவ ச

- மனுஸ்மிருதி 10-ஆவது அத்தியாயம், 65-ஆவது ஸ்லோகம்

தன்னுடைய நடவடிக்கையினால் ஒரு சூத்திரன் பிராமணன் ஆகலாம். பிராமணன் சூத்திரன் ஆகலாம். இப்போது நான் கூறிய மாதிரி எல்லாம் வாழ்ந்து, அதை விட மட்டமாக எல்லாம் வாழ்ந்து - க்ஷத்திரியனும், வைசி யனும் இடம் மாறலாம்; க்ஷத்திரியன் வைசியனாகலாம். வைசியன் க்ஷத்திரியனாகலாம். இதெல்லாம் நடத்தை யைப் பொறுத்தது. அவனது குணத்தைப் பொறுத்தது என்று மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். தவிர, பிராம ணனுக்கு உரிய சலுகைகள் குறித்தும் மனுஸ்மிருதியில் சொல்லியிருக்கிறது. என்கிறார் சோ இராமசாமி.

இது அப்பட்டமான மோசடி! தப்பான பித்தலாட்டப் பிரச்சாரம்!

சோ குறிப்பிடும் மனுஸ்மிருதி 10ஆவது அத்தியாயம் 65ஆவது ஸ்லோகத்தில் உண்மையில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை அப்படியே கீழே தருகிறோம்.

மேற்சொன்னபடி பெண்சந்ததி வழியினால் சூத்திரகுலத்தில் ஏழாந்தலைமுறையில் பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். அந்த சூத்திர ஸ்திரீயிடத்திலேயே பிராமணனுக்குப் பிறந்த புருஷசந்ததி சூத்திரத் தன்மையை அடையும். க்ஷத்திரியனுக்கு சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண்சந்ததி க்ஷத்திரியனையே விவாகஞ் செய்துக் கொண்டுவந்தால் அய்ந்தாவது தலைமுறையில் க்ஷத்திரியத் தன்மையையும், வைசிய னுக்கு சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்த பெண் சந்ததி மூன்று தலைமுறை வரையில் வைசியனை விவாகஞ் செய்து கொண்டுவந்தால் வைசியத் தன்மையையும் அடையும். என்று அந்தச் சுலோகம் சொல்கிறது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளதற்கும், சோ இராமசாமி கூறியுள்ளதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? மனுதர்மத்தில் கூறியுள்ளதை மாற்றி, இவர் கற்பனையில் மோசடியாக எழுதியுள்ளார்.

அது மட்டுமல்ல மனுஸ்மிருதி 10ஆவது அத்தியாயம் 73ஆவது ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா?

பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லை அல்லவா. சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் ஹீனத் தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா. இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார். என்கிறது மனுதர்மம்.

அதாவது பிராமணன், சூத்திரன் என்ற பிரிவு பிரம் மாவில் செய்யப்பட்டது. அது குணத்தாலோ, செயலாலோ வருவதல்ல என்கிறது.

சோ இராமசாமி சொல்வதற்கு நேர் மாறான கருத்தை மனுநீதி சொல்லியுள்ளது.

மனுஸ்மிருதியில் சொல்லாததை மட்டுமல்ல, மனுஸ்மிருதி சொல்லியுள்ளதற்கு நேர் எதிரான கருத்தை மாற்றி மோசடியாக எழுதி, மனுதர்மத்திற்கு மகத்துவம் உண்டாக்கப் பார்க்கிறார் இந்த பித்தலாட்டப் பேர்வழி.

அது மட்டுமல்ல. 10ஆவது அத்தியாயம் 64ஆவது ஸ்லோகத்தில்,

பிராமணன் விவாகஞ் செய்துகொண்ட சூத்திர ஸ்திரீ யிடத்தில் பிறந்த பெண் பிராமணனையே விவாகஞ் செய்துகொண்டு அவளுக்கும் பெண்ணாகவே பிறந்து அவளுக்கும் பெண்கள் பிறந்து அவர்களும் இவ்வித மாகவே ஏழு தலைமுறைவரையில் பிராமணனையே விவாகஞ் செய்து கொண்டுவந்தால் ஏழாவது தலை முறையில் பிறந்தவர்கள் பிராமண ஜாதியர்களாகிறார்கள். என்கிறது  மனுதர்மம்.

பிராமணனுக்கும், சூத்திரப் பெண்ணுக்கும் பிறப்ப வன்கூட பிராமணன் ஆக முடியாது. ஏழு தலைமுறை பிராமணப் பெண்ணின் வயிற்றில் பிறந்த பிறகுதான் பிராமணனாக முடியும் என்று மனுஸ்மிருதி கூறுகிறது. ஆக பிறப்பின் அடிப்படையில் வருவது பிராமண - சூத்திர வேறுபாடு என்பதை மனுஸ்மிருதி ஆணித் தரமாய் கூறியுள்ள நிலையில் அதை மாற்றி மோசடியான கருத்தை சோ இராமசாமி எழுதியதும், அதை குருமூர்த்தி அய்யர் மறுபதிப்பு செய்வதும் மகத்தான மோசடிச் செயல் அல்லவா?

மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மத்தை திராவிடர் கழகம் எரித்து மக்கள் மனுதர்மத்தை வெறுக்கும்படி செய்யும் நிலையில், மனுதர்மத்திற்கு உயர்வு தந்து அதன் மீது மக்களுக்கு மதிப்புண்டாக்க குருமூர்த்தி அய்யர் முயற்சி செய்கிறார்!

அது மட்டுமல்ல,

10ஆவது அத்தியாயம் 4ஆவது ஸ்லோகம்

நாலு வருணத்தாருக்குள் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் இம்மூவரும் இரண்டுவிதமாகப் பிறப்பதனால் துவிஜாதிகளென்று சொல்லப்படுகிறார்கள். சூத்திரனுக்கு உபநயந முதலிய வில்லாததால் ஒரு ஜாதியாகவேயிருக்கிறான்.  என்கிறது. அதன்படி சூத்திரன் என்றும் சூத்திரன் தான் என்கிறது மனுதர்மம். உண்மை அப்படியிருக்க, சூத்திரனும் நடத்தையால் பிராமணன் ஆகலாம் என்று சோ சொல்வது பித்தலாட்டக் கருத்தல்லவா?

மேலும், அத்தியாயம் 10, ஸ்லோகம் 1-இல்

தன் கருமத்தில் நிலைபெற்ற பிரம்ம க்ஷத்திரிய வைசியர் மூவரும் வேதமோத வேண்டும். அதில் க்ஷத்திரிய வைசியர்களுக்கு பிராமண ணோதிவைக்க வேண்டும். அவ்விருவரும் ஓதிவைக்கக் கூடாது. இது சாஸ்திர நிச்சயம்.

என்கிறது. மனுதர்மம். இதன்படி பிராமணன் தொழிலை மற்றவர்கள் செய்யக் கூடாது. அவர்கள் ஓதி வைக்கக் கூடாது என்றால் அவர்கள் எப்படி பிராமணன் ஆக முடியும்? ஆக, சோ கூறுவது மனுதர்மத்தில் இல்லாத இவரது சொந்த சரக்குகள். மோசடிக் கருத்துகள். இவர்தான் நேர்மைக்கு அடையாளம் என்கிறது பூணூல் கூட்டம்! புரிந்து கொள்ளுங்கள்!

மனு கூறும் தண்டனை பற்றிக் குறிப்பிடும் சோ இராமசாமி பிராமணனுக்குக் கூடுதல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மனுஸ்மிருதி சொல்வதாய் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மனுதர்மம் உண்மையில் என்ன சொல்கிறது?  கொலைக்குற்றத்திற்கு உரிய தண்டனையை மனுதர்மம் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

மனுஸ்மிருதி எட்டாவது அத்தியாயம் 379ஆவது ஸ்லோகம்

பிராமணனுக்குத் தலை மயிரை மொட்டையடிப்பது கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்கு மரண தண்டனை தரவேண்டும் என்கிறது. அதாவது,

பிராமணனன் கொலை செய்தால் அவன் தலைமயிரை மொட்டையடிக்க வேண்டும். மற்ற வருணத்தார் கொலை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறது.

இதை மறைத்து மனுஸ்மிருதியை பாராட்டுகிறார் சோ.

அது மட்டுமல்ல, மனுஸ்மிருதியைப் போல ஒரு சிறந்த நூலே இல்லை. இப்படியொரு நூலை இந்தியாவில் ஒருவர் எழுதியிருப்பதை எண்ணி நாம் பெருமைப் படவேண்டும் என்கிறார்.

ஆனால், உண்மையில் மனுதர்மம் பெருமைக்குரிய நூலா? அது மனித தர்மத்திற்கு எதிராகவும், ஆரிய பார்ப் பனர் உயர்விற்கும், நலத்திற்கும், மற்றவர்கள் தாழ்விற் கும், இழிவிற்கும் கருத்து சொல்லும் நூல்.

சான்றாகச் சில:

பிராமணன் பிறவிச் சிறப்பாளன்; தேவரும் மதிக்கத் தக்கவன்; மனிதரில் உயர்ந்தவன்; தேவமந்திரமே அவன் உயர்வுக்குக் காரணம். எனவே அவன் முடிவுப்படி நடக்க. (மனு: 11:84)

பிராமணன் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம். (மனு: 9:317)

பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள சத்திரியனையும் தகப்பன் - பிள்ளையாக அறிய வேண் டியது. பிராமணன் தகப்பன் மரியாதையும், சத்திரியன் புத்திர மரியாதையும் வகிக்க வேண்டியது. (மனு: 2:135)

கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனாயிருந்தாலும் நற்குணம் இல்லாத வனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது! (மனு: 5:154)

கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடியனாக விருந்தாலும், நோயாளியாகவிருந்தாலும் அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யாவிட்டால் அவ ளுக்கு அலங்காரம், துணிமணிகள், படுக்கை இவற்றைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது. (மனு: 9:78)

மாதர்களின் சுபாவமே மனிதர்கட்குச் சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். (மனு: 2: 213)

மாதர்கள் கற்பு நிலையின்மையும் நிலையா மனமும் நண்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்! (மனு: 9:15)

மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மட்டும் முக்கியமாக எண்ணிப் புணருகிறார்கள்! (மனு: 9:14)

ஒருவனின் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். (மனு: 9:52)

பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி (மனு: 125, அத்-10)

ஆரியர் அல்லாத மற்றவர்கள் கறைப்பட்ட கருப்பையில் பிறந்தவர்கள் (மனு-58, அத்-10)

பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவ னையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழ வேண்டும். (மனு - 148, அத்-5)

கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும்.(தொழவேண்டும்) (மனு 5: 154)

பிராமணன் சூத்திரனிடத்தில் ஏதாவது பொருள் இருந்தால் அதைப் பிராமணன் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் சூத்திரன் பிராமணனுக்கு அடிமையானதால் சூத்திரனுக்கென்று பொருள்கூட உரிமையில்லை. (மனு: 8ஆம் அத்தியாயம், சுலோகம் 417)

கூலி கொடுத்தோ அல்லது கூலி கொடுக்காமலோ சூத்திரனை பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென் றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் படைக்கப்பட்டிருக்கிறான். (மனு: 8ஆம் அத்தியாயம், சுலோகம் 413)

இப்படிப்பட்ட மனுதர்மம்தான் அரசியல் சட்டம் ஆகவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தப்பித்  தவறி மீண்டும் மோடி வித்தைகள் பலித்து மத்தியில் ஆட்சிக்கு வந்தால், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்குப் பதில், மனுதர்மம்தான் இந்நாட்டில் அரசியல் சட்டமாகும். அப்படி மனுதர்மம் வந்தால், மேற்கண்ட அவல நிலை தான் வரும்

இம்முயற்சி, இந்த ஆபத்து உடனே தகர்க்கப்பட வேண்டும்! எனவேதான் மனுதர்மம் எரிக்கப்பட வேண்டும்!

- விடுதலை நாளேடு, 21.2.19

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ஆபாச கல்யாண மந்திரத்துக்குத் தவறான வியாக்கியானம் கூறும் ’துக்ளக்கே' - அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் கருத்துக்கு என்ன பதில்?



மிக மென்மையான உடம்பை பாதங்களால் அளப்பது போல நகர்த்தி நடந்து வருகிறாள் பெண். அவள் அழகு எப்படி ஜொலிக்கிற தென்றால்... ஜலத்தில் துளியளவில் நெய் பட்டால் எப்படி மினுமினுவென்று தண்ணீர் தகதகக்குமோ அதேபோல, தங்க ஆபரணங்களை தாங்கி வரும் பெண்ணும் ஜொலிக்கிறாள் என வர்ணிக்கிறது ஸ்லோகம்.

இந்த அழகு மட்டும்தானா? பெண்களுக்கு புற அழகுதான் பிரதானமா?

சுப்ராஹா கன்யாஹா யுவதயஹா

சுபேஷசஹா கர்மகிருதஹா

சுகிர்தாஹா வீர்யாபதிஹி''

பெண்ணானவள் ஒளி பொருந்தியவள். அவள் பார்த்தாலே பிரகாசம். அடுத்தவர்களை கவர்ந்திழுக்கக் கூடியவள். இவளோடு சேர்ந்து வாழவேண்டும் என ஆண்களுக்கு ஆசையை ஏற்படுத்தக் கூடியவள். எக்கச் சக்கமான அலங்காரங்கள் செய்து கொள்பவள். எப்போதும் துருதுருவென ஏதாவது காரியம் செய்துகொண்டே இருப்பவள்.

எதிர்காலத்தைப்பற்றி கவலை கொண்டு அதற்கேற்ற வாறு வாழ்க்கையை நிகழ்காலத்தில் திட்டமிட்டுக் கொண்டு செல்பவள். இவற்றையெல்லாம்விட உடல், உள்ளம் இரண்டுமே பலம் மிக்கது பெண்களுக்குத்தான்.

என வேதகால பெண்களைப் பற்றி வரையறுக்கிறது அந்த ஸ்லோகம்.

சரி சரி... தேகம் ஆரம்பித்து மனம் வரைக்கும் பெண்களை புகழ்ந்து தள்ளும் வேதம்... வேதகாலத்தில் முக்கிய கர்மாவான யாகம் நடக்கும்போது பெண்களை எப்படி நடத்தியது?... ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சில வருடங்கள் முன்பு திருச்சூரில் ஓர் யாகம். சோம யாகம். கிட்டத்தட்ட நான்காயிரம் படித்த பெண்கள் அந்த யாகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லாரும் இக்கால நவநாகரிக பெண்கள். நானும் அந்த சோம யாகத்தில் கலந்து கொண்டேன்.

யாகம் நடத்துபவர்கள் யாக சாலையில் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதைக் கண்டு, ஒரு கணம் யோசித்தார்கள். அம்மா நீங்க எல்லாரும் உங்க சேலைத் தலைப்பால் காது, முகத்தை மூடிக்கோங்கோ' என பெருங் குரலில் ஆணையிட்டனர்.

உடனே பெண்கள் அனைவரும் தங்களது சேலைத் தலைப்பை எடுத்து காதுகளோடு முகத்தை மூடிக் கொண்டார்கள். ஏன் இந்த மூடு காரியம்?

யாகங்களில் சொல்லப்படும் மந்த்ரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத் தின் பலன் கிடைக்காது. அதற்காகத்தான். சில வருடங் களுக்கு முன் திருச்சூரில் நடந்த நிகழ்வு இது. வேதத்திலிருந்தே உங்களுக்கு உதாரணத்தை என்னால் காட்ட முடியும்.

ஆனால்... இந்த காலத்திலேயே இவ்வளவு கட்டுப்பாடு களுடன் நடந்த யாகம்... வேத காலத்தில் எப்படி நடந்திருக்கும் என உங்களின் யூகத்துக்கு விடத்தான் தற்கால நிகழ்வைச் சொன்னேன்.

வேதகால பெண்களின் தேக லட்சணம், யாக லட்சணம் எல்லாம் பார்த்தோம்... அன்று கல்யாணம் எப்படி?... முதல் மணமகள் யார்?...

பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம், எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா? அடுத்து... நாம் பார்க்கப் போவது பெண்களின் வாழ்க்கையில் முக்கிய தருணமான திருமணம்.

வேதத்தில் சில இடங்களில் விவாஹம் என்றும் பாணிக்ரஹணம் என்றும் குறிப்பிடப்படும் திருமணம் மிகவும் தடபுடலாக நடத்தப்பட்டிருக்கிறது.

முதலில்... விவாஹம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்வோம். ஏனென்றால், இன்று வரையும் திருமணப் பத்திரிகைகளுக்கு விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை' என பெயரிட்டு அச்சடிக்கிறார்கள். விவாஹம் என்றால் ஜிஸிமிஙிகிலி  வார்த்தை. அதாவது மலைப்பிரதேச பழங்குடியினர் வார்த்தை.

இதற்கு தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். இந்த அர்த்தத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமணங்களில் பெண்ணின் உறவினர்கள் பெண்ணை தூக்கிக்கொண்டு போவது என்ற ஒரு சடங்கை திணித்திருக்கிறார்கள்.

சரி... நாம் வேத திருமணத்துக்குப் போவோம். திருமண நடவடிக்கைகள் எப்படி ஆரம்பிக்கின்றன. தரகரை அனுப்புகிறது வேதம். முதலில் நீ போய் பெண்ணை பார்த்துவிட்டு வா என்று.

ப்ரதக் மந்தா திய ஸானஸ்ய

வரேபி வராது

காசுப்ர தீததா ஆஸ்மா சுமிந்த்ரா

உபயம் ஜீஹோஷதீ..''

என போகும் இந்த வேத மந்த்ரம்... தரகர் எப்படி பெண் பார்க்க செல்லவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நீ மிக பகட்டான ஆடம்பர ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு பணக்காரன் போன்ற தோரணையுடன் பெண் பார்க்கச் செல்லவேண்டும். இல்லையென்றால், மாப்பிள்ளை வீட்டாரை பிச்சைக்காரன் என நினைத்துப் பெண் கொடுக்காமல் இருந்து விடுவார்கள் என மாப்பிள்ளை வீட்டாரின் பிரதிநிதியாக தரகரை வரையறை செய்து வைத்திருக்கிறது வேதம்.

அவர் பார்த்து பேசிவிட்டு வந்தபின்... அடுத்தது பெண் ணும், பையனும் பார்த்துக் கொள்கிறார்கள். பரஸ்பர பார்வை பரிவர்த்தனம், பிறகு கை பிடிக்கிறார்கள்... அதா வது... அதாவது பாணிக்ரஹணம். எங்கே பார்த்துக் கொள் கிறார்கள்? Mutual meeting மணமேடையில்?

அப்போது பெண்ணிடம் சொல்கிறார்கள்...

தொஷ்டா அஸ்பை துவாம்பதிம்

தொஷ்டா சகஸ்ரமாஹம் ஷிஹீ

தீர்க்கமாயு க்துனாவதாம்...''

ஏ... பெண்ணே இவன்தான் உனக்கென தெய்வத்தால் அனுப்பி வைக்கப்பட்டவன். இனி இவன்தான் உனக்கு எல்லாம். இவன்தான் உன் கணவன். இவன் சொல்படிதான் இனி உன் சொர்க்கம். இவனை தெய்வத்தின் உத்தரவின் பேரில் நீ திருமணம் செய்துகொள்வாயாக.

நீ இவனோடு எதுவரைக்கும் வாழவேண்டும் என்றால்...

"க்ருப்ணா

மிதே சுப்ரஜா

அஸ்த்வயா

மயாபத்ய ஜலதஷ்டிம் யதாஸஹா"

நீ கிழவியான பிறகுகூட உனக்கு இவன்தான் துணை என்கின்றது வேதம். பொதுவாக திருமணம் இப்படி நடந்திருக்கின்றது. வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது? ரிக் வேதத்தில் 10ஆவது மண்டலத்தில் முதல் திருமணம் பற்றிய தகவல் கள் கொட்டிக்கிடக்கின்றன. ஏன் திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகின்றான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன?... அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.

"விவாஹே கௌஹீ... க்ருஹே கௌஹீ..."

திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள். திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம் வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம்தான். மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்துக்கு முதல்நாள் நிகழ்ச்சியில் மதுவர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும் மறுநாள் திருமணச் சடங்கு களிலும் ரிஷிகளும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

பக்கத்தில் ஒரு கிரகத்தில் (வீட்டில்) திருமணம் நடக்கிறது. யாகங்களும் மந்த்ர ஒலிகளும் பூமியிலிருந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு புறப்படுகின்றன. திரவியங்களின் வாசனை நாசிக்குள் நாட்டியமாடுகின்றது. இப்படிப்பட்ட சுகந்தமான சூழ்நிலையில் அந்தக் கிரகத்தின் பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

"என்னடா அங்கே மடமடன்னு சத்தம் கேட்கிறதே?"

"உனக்குத் தெரியாதா? பக்கத்து கிரஹத்திலே கல் யாணம். ரிஷிகள் நிறையபேர் போயிருக்கிறார்கள். பாவம்... இன்று கன்றுகுட்டிகள் தப்பிக்க முடியுமோ? அவைகளை வெட்டும் சத்தம்தான் மடமடாயதே (அதாவது மடமடன்னு கேட்கிறது)" என்கிறான் மற்றவன்.

இது ஒரு வேதக்கதை அதாவது கல்யாண காரியங் களிலே கன்றுகுட்டிகளையும் கறி சமைத்திருக்கிறார்கள். ஆனால் இன்று நடக்கும் திருமணங்களிலும் அறிந்தோ அறியாமலோ(?) வாத்யார்கள் (கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்) மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரங் களை ஓதுகிறார்கள். ஆனால்... மதுவர்க்கத்தில் கோமாமிசத் துக்குப் பதில் வாழைப்பழத்தைக் கொடுக்கிறார்கள்.

அப்படியானால் அந்த மந்த்ரம் எதற்கு? மாட்டை வெட்டச் சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி செய்யாத பட்சத்தில் அந்த மந்த்ரத்தை கல்யாணச் சடங்கிலிருந்து வெட்டிவிடலாமே!

இதேபோல கௌஹீ கௌஹீ என சொல்லிக்கொண்டே இன்னொரு கல்யாண சடங்கையும் நடத்துகின்றார்கள். கல்யாண தினத்தன்று... கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்திரத்தை சொல்கிறார்கள். அந்த நேரத் தில் பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏன் இந்த முரண்பாடு? காலத்தின் மாற்றத்தால் சடங் குகளை மாற்றிக்கொண்ட பிராமணர்கள் மந்திரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கின்றார்கள். இது பிராமணர்களின் கல்யாணங்களில் மட்டுமல்ல மற்ற ஜாதியினரின் கல்யாணங்களிலும் இந்த பொருந்தா மந் திரங்கள்தான் போற்றப்படுகின்றன. மாட்டு மாமிசத்தினை தின்பதற்கும், தேங்காய் உருட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?

இதற்கான மேலும் சில மந்திர உதாரணங்களைப் பிறகு பார்க்கலாம். இப்படியாக கல்யாணம் நடக்கிறது. பெண்ணானவள் புருஷன் வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.

"பரித்வா கிர்வனோ க்ரஹ

இமாபவந்து விஷ்வதஹா

வ்ருத்தாயும் அனில்ருத்தயா

ஜீஷ்டா பவந்து ஜீஷ்டாயா..."

- அடியே உனக்கு நாங்கள் கொடுக்கும் சீதனத்திலே மிக உயர்ந்த மெல்லிய, அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய ஜரிகை வஸ்திரங்கள் இருக்கலாம். அவற்றை நீ அணிந்தால் உனக்கு அலங்காரமாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் ஒரு நாள் மக்கிவிடும், மடிந்துவிடும், கிழிந்துவிடும்.

ஆனால் என்றென்றும் கிழியாத வஸ்திரம் உனக் கொன்று உள்ளது. புகுந்த வீட்டில் புருஷனும்... மற்றவர்களும் உன்னைப் புகழ்ந்து பேசவேண்டும். அவர்கள் உன்னை மெச்சிக்கொள்ளும் புகழ்மொழிகள்தான் உனக்கு உண்மையான ஆடை. அதனால் புகுந்த வீட்டில் அவர்கள் சொன்னபடி நீ நடந்து அந்த ஆடையை அணிந்துகொள்.

சரி திருமணத்தில் வாத்யார்கள் ஓதும் முரண்பாடான மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கின்றேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்

"தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

ப்ரஷரே பஷேபம்..."

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால் அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கின்றது இந்த மந்த்ரம்? நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

- இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதை விட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால் என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய் விடும்.

அப்படிப்பட்ட மந்த்ரம் அது. என் இஷ்டமித்ரர் ஒருவரது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகா புத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள். அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது

வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல...

"ஸ்வாமீ... நிறுத்துங்கோ" என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.

"இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?... பொண்ணும் மாப்பிள்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே"

வாத்யார் அதன் பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் என்ன அர்த்தம் என்றே தெரியாமல் பல மந்த்ரங்களை உச்சரித்து வருகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது

தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது..."

இதன் அர்த்தம் இன்னும் ஆபாசம்

விஷ்ணுர் யோனி கர்ப்பயது... எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கும் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கின்றார்கள். இவர்கள்தான் ஆணும் பெண்ணும் தேகஸம்பந்தம் கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கின்றதா என்பதை கண்காணிக்கின்றார்கள். அதாவது நாம் தேக சம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கின்றார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள், விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவருக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள் புரிய வேண்டும்... என்கின்றது இந்த மந்த்ரம். நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால் பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என் கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக்கொள்ளலாம். அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் அறிவான் என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கின்றது என்றும் வைத்துக் கொள்ளலாம். இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன. விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்றும், பாணி க்ரஹணம் என்றால் கைப்பிடித்தல் என்றும் பார்த்திருக்கின்றோம்.

இவையெல்லாம் எதற்காக...? கர்ப்பாதானம் செய்து குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

இதற்காகவே கணவனுக்கும் மனைவிக்கும் மண மேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கின்றது.

அவள் கேட்கிறாள்

"மணாளா நீங்கள் எனக்கு புருஷனாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த கன்னி செய்த புண்ணியத்தால் உன்னை கைப்பிடித்தேன். நீ சம்பாதிக்கும் செல்வத்தையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வரவேண்டும். அதுபோல உனது இந்திரிய சந்தோஷத்தையும் நீ என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். வேறு வேறு பெண்களை நாடி நீ போகக்கூடாது. என்ன சரியா?... என்கின்றாள். அவன் அதற்கு பதில் சொல்கிறான்

"நீ பெண் என்பதால் தெளிவாகவே இருக்கிறாய். நான் ஈட்டும் பொருள் அனைத்தையும் உன்னிடம் தான் ஒப்படைப்பேன். அதே நேரம் இந்த்ரிய சந்தோசத்தை உன்னுடன்தான் அனுபவிக்க வேண்டும் என்று நீ என்னை கட்டளையிடக்கூடாது. நீ வேண்டுமானால் அதற்கான அழகோடு எப்போதும் இரு. உன் அழகை நீ காப்பாற்றி வைத்திருந்தால் நான் உன்னை விட்டு விலகிச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேராது" என்கிறான் அவன்.

இதைத் தான்

"உதுத்தரம் மாரோஹந்தி முர்த்தானம் பத்யு ராரோஹ"

கல்யாணம் செய்து போன பெண்... கணவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும். அதாவது... அவனது சிந்தனைகளில் எல்லாம் இவளே நிரம்பி இருக்க வேண்டும். அவனது மூளையில் இவளே முழுவதும் இருக்க வேண்டும். அப்போது அவன் பிற பெண்ணை நாடிச் செல்ல மாட்டான் அல்லவா? என்கின்றது வேதம்.

கணவன் மூளைக்குள் தன்னை நிரப்ப வேண்டும் என்றால் இவள் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்?

"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்

தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ

அனுமிருத்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்

சம்மார்ஜன அனுரே பாப்யாம்

க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆத்மானும் பூஷ்ஹேஸ்யதா"

கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உனக்கு தெய்வம். அவனை விட்டுவிட்டு வெளியே நீ எங்கேயும் போகக்கூடாது. வென்னீர் போடு, கால் பிடி... கைபிடி, தூங்கினால் விசிறி விடு இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் நீ குடியேற முடியும்...

சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள் சந்தோச மாக வாழ்க்கை போகிறது. ஒரு நாள்.. வயதானதாலோ தேக பிரச்சனைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் ஸம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தன் மேல் பிரேமம் வைத்தவன் இப்படி பிரேதமாக கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் அவளுக்கு என்ன தேவை...?

ஆறுதல் மொழிகள் தானே. "கவலைப்படாதேம்மா அவன் விதி அவனை கொண்டு போய் விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம் அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்க வேண்டும். அழு அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோசமாக இரு"

இப்படித்தானே சொல்ல வேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...'

இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?...

உன் ஆம்படையான் இறந்து விட்டான். பாவம் இனி உன்னை யார் காப்பாற்றுவது?... இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம் தானே?... சுமைதானே?... உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்?... அதனால்..?

ஆமாம்மா... புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோடே நீயும் போய்விடேன். அவன் சிதையிலே யே உன்னையும் வைத்து எரித்துவிடுகின்றோம் சரியா? அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்.

வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச்செயல்தான் சுருக்கமாக சதி' என அழைக்கப் பட்டது. இதை எதிர்த்துதான் ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் பிற்காலங்களில் போராடினார்கள். ஏன்... சில வருடங்கள் முன்புகூட ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஸ்திரியை கணவனை இழந்தவுடன் தீவைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். வேதத்தீயின் வெளிச்சம் காலங்காலமாக கனலடித்துக் கொண்டிருப் பதற்கு  இது ஓர் உதாரணம்'.

பெண்களைப் பற்றிய பல வகையான அலசல்களை வேதத்தை மையமாக வைத்து நாம் இதுவரை பார்த்தோம். இதுபோன்று சதி'ச் செயலகளால் எரிக்கப்பட்ட பெயர் தெரியாத அப்பாவி ஸ்திரிகளிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்.

இப்படி நாம் நினைத்தாலும் பொதுவாகவே பெண்களின் ஆத்மாவை சாந்தியடைய விடாதுபோலி ருக்கிறது இன்னொரு மந்த்ரம். இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரித்த தன் தாய்க்கு வருசாவருசம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன்வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள். ஆனால்...?

"என்மே மாதா ப்ரலுலோபசரதி

அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா

பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம"

நான் யாருக்குப் பிறந்தேன் என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத் தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை வாத்யார் சொல்லச் சொல்ல மகன்'கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே. இந்த அர்த்தத்தை விளங்கிக்கொண் டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? உதடுபடக்கூட இப்படி யொரு அர்த்தத்தை அறிவிக்கக்கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இதுவரை வேதகாலத்தில் பெண்களின் உயர்ச்சி, தாழ்ச்சி, பொதுவான நிலைமைகள் என்று சகலத்தையும் பார்த்தோம். வேதத்தில் சாகித்யம் பெற்ற பெண்கள் இருந்திருக்கின்றார்கள். சாபம் பெற்ற பெண்களும் இருந்திருக்கின்றார்கள். சரி... அதற்கடுத்து வேதம் வகுத்த வரையறைகளை கட்டளைகளாக நெறிமுறைகளாக மாற்றியமைத்துத் தந்த மநுஸ்மிருதியில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி வாழவேண்டும் என்று சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்?

முதலில் மநுஸ்மிருதி என்றால் என்ன? மநு என்பவர் வகுத்த ஸ்மிருதிகள் அதாவது தர்ம நெறிகள் மநு ஸ்மிருதி எனப்படும். மநு என்பவர் யார்? ஒரு மநு அல்ல, இரண்டு மநு அல்ல, கிட்டத்தட்ட பதினைந்து மநுக்கள் இருக்கிறார்கள். மநு என்னும் பொதுவான பெயருக்கு கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின்போது பூமியை காக்க அவரால் நியமிக்கப்பட்டவர்தான் மநு என்கிறார்கள். அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் கடவுளால் மநு அனுப்பப்பட்டார். மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுசன் என்ற பதமு வந்தது என்றொரு மொழிக்குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

சரி... நாம் பார்க்கப்போகும் மநு யார்? அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்? உங்களுக்காக ஒரு காட்சியை கட்டவிழ்த்து விடுகிறேன் மனக்கண்ணால் அதைப் பாருங்கள். வீட்டு வாசலில் சின்னப் பெண்குழந்தை, எட்டு வயதிருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறாள். மரப்பாச்சி (இன்றைய நகர நாகரிகம் வளர்ந்துவிட்ட சூழலில் உங்களுக்குப் புரிகிறதா? மரப்பாச்சி என்றால் மரத்தால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகள்தான்)களை வைத்துக்கொண்டு மழலை மாறாத அந்தக் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில்... திடீரென அந்தப் பெண் குழந்தையை ஸவாம்மா... நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. சீக்கிரம் தயாராக வேண்டும். பார்... எல்லோரும் வந்துவிட்டார்கள். இப்போதே குளித்து முடித்து சீவி சிங்காரித்துக் கொண்டால் தானே தாமதம் ஆகாமல் சீக்கிரம் ஆரம்பிக்கலாம், வா... வா... என்று அழைக்கிறார்கள்" அவளது அம்மாவும் அப்பாவும். இரும்மா... விளையாடிட்டு இருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேனே...'

ஆனால் மநுஸ்மிருதியின் விளையாட்டு இங்கேதான் ஆரம்பிக்கிறது.

எட்டு வயது பெண்குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக்கொண்டிருக்கின்றது. இடையில் மநு ஸ்மிருதி விளையாட ஆரம்பித்து விட்டது என்றேனே மநு எப்படி விளையாடும்?... மரப்பாச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண் குழந்தையை வைத்துதான் மநு விளையாடியது!...

என்ன சொல்கின்றார் இவர்?... என்ற கேள்வி எழு கின்றதா?... ஆமாம் விளையாடிய குழந்தையை சீவி சிங்காரித்து அம்மா கூப்பிடுகின்றாளே எதற்கு? தலைவாரி பூச்சூடி உன்னை... பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை என்ற அர்த்தத்திலா?... கிடையவே கிடை யாது. அந்த எட்டு வயது சுட்டியை மணமேடைக்கு அழைத்துச் செல்கின்றார்கள் எதற்கு?... மணப் பெண்ணின் பக்கத்தில் இப்போது சின்னச் சின்னக் குழந்தைகளெல்லாம் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கின்றார்களே அதற்காகவா?...

முற்றிலும் கிடையாது... மணப்பெண்ணே அந்த எட்டு வயது சுட்டிதான். என்னது... எட்டு வயது பெண்தான் மணமகளா?... குழந்தைக்கு கல்யாணமா?... இதுதான் மநுவின் விளையாட்டு. மநுவின் கட்டளைகள் முன் சின்னப் பெண் குழந்தைகள் வெறும் மரப்பாச்சிகள்.  பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர் இங்குதான் ஆரம்பிக்கின்றது.

வேதம் பெண்களை எவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருந்தாலும் அவள் ருதுவான பின்னர் தான் திருமணம், மதுவர்க்கம் என்றெல்லாம் சடங்குகளை பின்னியது. ஆனால் மநு அப்படியல்ல... எட்டு வயதுக் குள்ளேயே பெண்களை கெட்டியாக பிடித்துக்கொண்டது. மநுபடி பெண்களுக்கு பொதுவான பெயர் க்ருஹிணி. அதாவது வீட்டுக்காரி. வீடுதான் அவள் உலகம். வீட்டுக்குள்தான் அவள் இருக்க வேண்டும். நான் முன்பு சொன்னேனே வாசலில் விளையாடிக்கொண்டிருந்தாள் என்று திருமணம் வரைக்கும் வீட்டு வாசலில் விளையாடலாம்.

"மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா

பிதா பிபதி கோனிதம்..."

இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகின்றது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகின்றேன். அது என்ன வென்றால்,

அடே கையாலாகாத அப்பா... உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகிவிட்டாள். ருதுவான பின் மூன்று வருடத்திற்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்... அவ ளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும்... ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்...?

அதனால் உனக்கு இதோ தண்டனை ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாத விலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா?... எழுதி முடித்தபின் என் பேனாவுக்கே குமட்டிக்கொண்டு வருகின்றது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகின்றது.

அடப்பாவிகளா?... வறுமைய்யாலோ, ஜாதக தோஷத் தாலோ... பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கின்றார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ண வேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து. அதையும் தாண்டி மகளின் மாதவிலக்கை பருகச் சொல்கின்ற மநு எத்தனை கடுமை?... கொடுமை...?

எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கின்றார் மநு. அப்படியா?... என்ன பரிகாரம்?...

உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்ம ஹத்தி தோஷத்தை சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா? அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின்போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோ தானம்தான் உனக்கு பரிகாரம். அதாவது மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ அத்தனை பசுக்களை தானம் பண்ண வேண்டுமாம். இப்போது புரிகின்றதா எங்கு போய் எங்கு வருகின்றார் மநு என்று?

அந்த கோ தானம் பண்ணுகின்ற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா...?  கொடுமையான தண்டனை அதிலிருந்து தப்பிக்க வரும்படி' தருகின்ற பரிகாரம். சரி கோ தானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.

அடுத்த ஒருவருடம் வரை... அவளும் அவனும் தினமும் வீட்டில் ஔபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஔபாசனம்?... அக்னி காரியம் தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ண வேண்டிய ஹோமம். இந்த ஒரு வருடம் வரை அவள் கணவன் வீட்டில் இருந்தாலும் கணவனுக்கு பணிவிடைகள் செய்தாலும் ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக சம்பந்தம் கொள்ளக்கூடாது.  ஒரு வருடம் கழித்து ஔபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.

இதற்கிடையில் ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை(புல்)யை கிள்ளி போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன் இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடர்கின்றார்கள் என்பது ஹாஸ்யம்.

இப்பழக்கம் ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது இதன்படி வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை. என்ன ஆனது...? அந்த ஒரு வருஷம் 6 மாசங்களானது அப்போதும் கஷ்டம்... என்னடா இவ்வளவு நாட்கள் ஆகின்றதே என்று கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது. அத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள். 15 நாட்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாட் களானது. பின் கல்யாணம் ஆகி 3 நாட்கள் கழித்து... இப்போது காலையில் கல்யாணம். ராத்திரி சாந்தி கல்யாணம்.

நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம். என்பதற்காக சொல்ல வந்தேன். சரி... மநு சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க முடியுமா...?

மநு தர்மப்படி... எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா?... என் காலத்தில் என் கண்களெதிரே எத்த னையோ பெண்களுக்கு மநு மணங்கள்' நடந்திருக்கின்றன. அவர்களை எனக்குத் தெரியும் உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே? அப்படியென்றால் எல்லாருக்கும் தெரிந்த... மிகப் பிரபல்யமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு காட்ட வேண்டும்... அதுவும் மநுமணம் செய்து கொண்டதால் அதாவது பால்ய திருமணம் செய்து கொண்ட ஜோடியாக இருக்க வேண்டும் அல்லவா?

சரி இதோ உதாரணம். ராமர் - சீதா தெரியுமா?... அவர்கள்தான். சற்று முன்பு சொன்னேனே பெண்குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு... கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள் என்று. அதே போல் தான் ஜனகமகாராஜாவின் புத்ரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிந்த பருவத்திலேயே கல்யாணத்தை முடித்து விட்டார்கள்.

கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது ராமனுக்கு 12 வயது. என்ன சொல்கின்றார் இவர். கம்பராமாயணத்திலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கின்றார். ராமரை சீதை பார்த்தபோது... சீதையின் தேகம் வெட்கத் தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்க முடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச்சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.   சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்கமுடியாமல் அறுந்து உதிர்ந்து கீழே உருண்டோடுகின்றன. ராமன்... இப்படியாக சீதையை பாதித்தான் அவளது கனவுகளை சோதித்தான் என்றல்லவா கம்பர் எழுதியிருக்கின்றார்.

அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண சமயத்தில் வயதுக்கு வந்த' வயதாகத்தானே இருக்க முடியும்... என்று நமக்கு நியாயமான சந்தேகம் எழலாம். கம்பர் தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்ட வேண்டாம் என நினைத்திருக்கலாம். ஆனால் வால்மீகி ராமாயணத்தில்

தேஷாந் தாரக்நியாம் பதி

சிந்தையா மாஸ தர்மாத்மா

சோபாத்யாய சபாந்த்த வஹா... என்கின்றார் வால்மீகி.

அதாவது ராமன் சின்ன பிள்ளையாக இருக்குபோதே அவனுக்கு 12 வயது ஆகும் போதே யோசிக்க ஆரம்பித்தார். தசரத சக்கரவர்த்தி.

விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜாவின் அரண் மனைக்கு வரும்போது... தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு... நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம-சீதா கல்யாணம் நடக்கிறது.

கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான். ராமனுக்கு 12தான். இதுதான் வால்மீகி காட்டும் வயது.

-  விடுதலை நாளேடு, 15.2.19