குருமூர்த்தியாரே ஓடாதே நில்! ஆபாசம் + அருவருப்பே = ஆரியம்
*மின்சாரம்
ஒழுக்கத்தைப் பற்றியும், பாலியல் வன்புணர்வு குறித்தும் இந்துத்துவாவாதிகளா பேசுவது?
உங்கள் வேதங்களும், சாஸ்திரங்களும், இதிகாசங்களும், புராணங்களும், ஆபாசக் கழிசடைச் சாக்கடைகள் அல்லாமல் வேறு என்னவாம்? உங்கள் கடவுள்களின் யோக்கியதை தான் என்ன?
கற்பழிக்காத கடவுள் உண்டா என்று கலைஞர் பெருமான் ஒரு முறை விடுத்த வினாவுக்கு இதுவரை விடையுண்டா?
"அபுத்ரா குர்வனுஜ்ஞாதாதேவரம்
புத்ரகாம்யயா:
ஸபிண்டம்வா ஸகோத்ரம்
வாக்ருதாப்யக்தம் ருதரவிராத்" (யாக்ஞவல்கியர்)
பொருள்: தனது நாயகன் இறந்துவிட்டால் அல்லது புத்திரனை உண்டு பண்ணத் தகுதியில்லாவிட்டால், புத்திரப் பேற்றை விரும்புகிற ஸ்திரீயானவள் பெரியோர்களின் அனுமதியைப் பெற்று ருதுகாலத்தில் உடம்பில் நெய்யைப் பூசித் தன் கணவனது சகோதரன் அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம். இவ்விதம் "அசர்ப் பஸம்பவாத" கருத்தரிக்கிறவரைக்கும் செய்து கொள்ளலாம். இதனால், கற்புக்கு அழிவில்லையென்றும், ஸ்மிருதி கூறுகின்றது.
இதுதான் குருமூர்த்திகள் கூறும் கற்பின் இலட்சணமா?
இன்னும் உண்டு, இன்னும் உண்டு இவாளின் ஆபாசப் பெருங்கடல்.
புத்திரகாமேஷ்டியாகம் என்ற ஒன்றை நடத்துவார்களே ஆரியர்கள் - தசரதன்கூட அதை நடத்திதான் இராமன் உள்ளிட்ட புத்திரர்களைப் பெற்றானாம்!
முற்காலங்களில் யஜமானனுக்கும், (யாகஞ் செய்வோ னுக்கு) பலபேர் பத்தினிகள் இருந்தனர். அசுவமேத யாகம் செய்யும்போது, பத்தினிகள் எல்லோரும் கைகளில் பானேஜனம் வைத்துக் கொண்டு குதிரையின் பக்கத்தில் வருகிறார்கள். பிறகு கீழ்க் குறித்திருக்கிற மந்திரத்தைச் சொல்லி, ஒன்பதுதரம் குதிரையைச் சுற்றி வரல் வேண்டும்.
அதன் விவரம்:- மந்திரத்தின் முதற்பகுதி சொன்னவுடன், ஒருதரம் வலமாகவும், பிறகு ஒன்றும் சொல்லாமல் இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். நான்காவது முறை மந்திரத்தில் இரண்டாவது பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரமும், மவுனமாக இரண்டு தடவைகளும் இடமாகச் சுற்றிவரல் வேண்டும். அடுத்த படியாக மந்திரத் தின் மூன்றாம் பகுதியைச் சொல்லிக் கொண்டு ஒருதரம் மவுனமாகவும், பின் இரண்டு தரமும் வலம் வரல் வேண்டும். இதற்கு மந்திரம்:-
1. "கணானாம் த்வா: கணபதிம் ஹவாமஹே" (வஸோமம்)
2. "பரியாணாம் த்வா: ப்ரியபதிம் ஹவாமஹே" (வஸோமம்)
3. "நிதீனாம் த்வா நிதிபதிம் ஹவாமஹே" (வஸோமம)
பொருள்: ஓ குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றுந் தலைவனும், பொருட்களின் தலைவனுமாகிய உன்னை அழைக்கிறோம்.. நீ எனது பர்த்தாவாக (கணவனாக) இருக்கவேண்டும்.
(மனைவிகளுள் தலைவியை மஹிஷியென்பர்; அவளுக்குத்தான் குதிரை நாயகனாக வரவேண்டுமாம்) பிறகு, பானேஜனத்தால் யஜமானனும், பத்தினிகளும் பிராண சோதனம் (அங்கங்களைத் தொடுதல்) செய்யக் கடவர். பிறகு மஹிஷியானவள் குதிரையை நெருங்கி, அதனுடன் சேர்ந்து படுத்துக்கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
"ஆஹமஜானி கர்ப்பத மாத்வ மஜாஸி கர்ப்பதம்"
பொருள்: ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து யோனியில் க்ஷேபிக்கிறேன் (க்ஷேபித் தல் - இடுதல்) அதைப்போல் நீயும் செய்யவேண்டும். இம்மந்திரம் சொல்லி முடிந்ததும், ஒருதுணியைப் போட்டு குதிரையையும், மஹிஷியையும் மூடிவிட்டு அத்வர்யு சொல்லவேண்டிய மந்திரம்.
2. "ஸ்வர்க்கே லோகே ப்ரோணு வாதாம்"
பொருள்: ஓ குதிரையே! மஹிஷியே! நீவிரிருவரும் இந்த யாக பூமியில் இவ்வுடையினால் உடல் முழுவதும் மறைத்துக் கொள்ளுங்கள்.
இதன் பின்னர் மஹிஷி சொல்ல வேண்டிய மந்திரம்:
"வருஷா வாஹி ரேதோதைரெ தோ ததாது"
பொருள்: சுக்கிலத்தைத் தன்னுள் வைத்துக் கொண்டி ருக்கிற குதிரை, அதை என்னிடத்தில் வைக்கட்டும். இதன் பிறகு யஜமானன் குதிரையும், பத்தினியும் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று குதிரையைத் தொட்டுக்கொண்டு கீழ்க்குறித்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
"உத்ஸக்த்யா அவகுதம் தேஹி ஸமஞ்ஜிம் சாரயா
வ்ருஷன் ய: ஸ்த்திரீணாம் ஜீவபோஜன"
பொருள்: புணர்ச்சி வேளையில் என் மனைவியாகிய இவளிடத்தில் (மஹிஷி) நான் செய்யும் காரியங்களை எனக்குப் பதிலாக நீ செய்யவேண்டும்.
எழுதுவதற்கே கூசக்கூடிய இந்தக் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்துக்குச் சொந்தக்காரர்கள்தாம் ஆரியப் பார்ப் பனர்கள்.
இத்தகையவர்கள் வெறுக்கத்தக்கவர்களா இல்லையா?
இவர்கள் இன்றைக்குத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் இராமன் இருக்கிறானே - அவனே இத்தகைய யாகத்தில் பிறந்தவன்தான்.
ஆதாரம் தேவைப்படுவோர் மறைந்த திண்டுக்கல் பிரபல மார்க்சிஸ்டு தலைவர் தோழர் ஏ. பாலசுப்பிரமணியம் அவர்களின் தந்தையார் அமிர்தலிங்க அய்யர் அவர்களால் எழுதப்பட்ட ராமாயண விமர்சகா என்ற நூலைப் படித்துக் கொள்ளலாம்.
பார்ப்பனர்களால் படைக்கப்பட்ட வேதாகமங்களின் தராதரங்கள் எத்தகையவை தெரியுமா?
"ஸ்தயச்: சின்னசிர: க்ருபாணம பயம்
ஹஸ்தைர் வரம் பிப்ரதீம்
கோராஸ்யம் சிரஸர்ஸ்ரஜா
ஹுருசிராமுன் முக்த கேசாவ லீம்:
ஸ்யாமாங்கீம் க்ருதமேகலாம்
சவகரைர் தேவீம் பஜேகாளிகாம்"
(மந்த்ர மஹோததி)
பொருள்: அப்போது அறுத்தெடுத்த தலை, வால், அபயம், வரம், இவைகளையுடைய கைகளும், கழுத்தில் மாலையாக விளங்குகின்ற தலைகளின் வரிசையும், அவிழ்த்துவிட்ட கூந்தலும், கடைவாயினின்றும் ஒழுகு கின்ற இரத்தப் பெருக்கும், சலங்களைத் தோடாக உடைய காதுகளும், சலத்தினது கைகளின் வரிசையே ஒட்டி யாணமாக அணிந்திரா நின்ற இடையையும் உடைய காளிகா தேவியை நான் வழிபடுகிறேன். பின்னும் தேவியின் உருவத்தை வருணிப்பது:
"அஸ்மின்பீடே யாஜேத் தேவீம்
சிவரூப சவஸ்திதாம்:
மஹாகால ரதாஸக்தாம்
சிவாபிர்திக்ஷுவேஷ்டிதாம்"
பொருள்: சவ ரூபமாயிருக்கிற சிவனுடைய உடலை மிதித்துக் கொண்டிருப்பவளும், மஹா காலனுடைய சம்போகத்தில் விருப்பமுடையவளும், பெண் நரிகளால் சூழப் பெற்றவளுமான தேவியை பீடத்தின் கண் ஆவா கித்துப் பூசிக்க வேண்டும். இங்ஙனம் பூஜித்தபின் மந்திரம் செபிக்கும் முறை:
"ஸுத்ருசோ மதனாவஸம்
பஸ்யன் ய: ப்ரஜபேன் மனும்
அயுதம் ஸோசி ராதேவ
வாக்பதே: ஸமதாமியாத்"
பொருள்: ஒரு அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திரசெபம் பண்ணுகிறவன் தேவ குருவுக்குச் சமனாவான்.
குருமூர்த்தி கூட்டமே இவை போதுமா - இன்னும் வேண்டுமா?
வேஸ்யா தரிசனம் புண்யம்
ஸ்பர்ஸனம் பாப நாஸம்
சம்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம்
வேசிகளைப் பார்த்தாலே புண்ணியம் - தொட்டாலே பாவம் நாசமாகும் - முத்தம் கொடுத்தால் சகலப்புண்ணிய தீர்த்தங்களிலும் நீரோடியதற்குச் சமமான புண்ணியம் - உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும்வழி.
மோட்சத்துக்கான மோக வழியைப் பார்த்தீர்களா?
இந்த வெட்கங் கெட்ட இந்துத்துவாவாதிகள்தான் ஒழுக்கம் பொதுச் சொத்து, பக்தித் தனிச் சொத்து என்று சொன்னபடி வாழ்ந்து காட்டிய தலைவர் தந்தை பெரியாரால் தான் ஒழுக்கம் கெட்டு நாசமாகிப் போய் விட்டது என்று நாக்கில் நரம்பின்றிப் பேசுகின்றனர்.
ஒழுக்கம் என்று எதுவும் தேவையில்லை, மிருகத்தோடு கூடப் புணரலாம் (அசுவமேதயாகம்) என்று எழுதி வைத்துள்ள அசிங்கங்கள் அறிவுலக ஆசானாம் அய்யா பெரியாரை அனாவசியமாக வம்புக்கிழுக்கலாமா?
காளிதாசனின் படைப்புகள் உள்ளிட்ட பழைய சமஸ் கிருத இலக்கியங்களில் "மதனோத்சவம்" பற்றி பல இடங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.
In Ancient Sanskrit Literature, including all work of ‘Kalidasa’ there are frequent references, to MADANOTSAVA, a day on which every men or women could ask another even a stranger for sexual bliss a sort of “Free Love Day”
- Chidanda Dass Gupta Lust for life:
- "Illustrated Weekly of India", May3-9, 1987 P39
"இந்த மதன உற்சவ நாளில் எந்த ஆண் மகனும் அல்லது பெண் மகளும் அயலார் உட்பட எவரையும் புணர்ச்சி இன்பத்திற்காக அழைப்பு விடுக்கலாம். இது ஒரு வகையான "சுதந்திரமான" காதல் நாளாகும். (சிரானந்த தாஸ் குப்தா, "இல்லஸ்ட்ரேட் வீக்லி" 3-9 மே 1987 பக்கம் 39).
இந்தப் பார்ப்பன இந்துத்துவ பாரம்பரிய மரபணுதான் நடந்து வரும் பாலியல் சீண்டல்களுக்குக் காரணமே தவிர - இவ்வாபாசங்களை அழித்தொழிக்கும் தந்தை பெரியாரோ, அவர் கண்ட பகுத்தறிவு ஒழுகலாறான இயக்கமோ, கண்ணீர்த் துளிகளோ அல்ல என்பதைக் குருமூர்த்திகள் உணரட்டும்!
அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்கிறார்களே ஆரிய குலத்தார் - அதன் தன்மை என்ன? அந்தக் காலத்திலேயே கூட்டுறவு சொசைட்டியா என்று தந்தை பெரியார் கேட்டதுதான் நினைவிற்கு வருகிறது.
அய்ந்து கணவன் போதாது என்று ஆறாவதாக கர்ணன் மீது ஆசைப்பட்டதற்குத் துரோபதை கூறிய காரணமும், விளக்கமும் என்ன தெரியுமா? தருமன் - சதா வேதாந்தம் படிப்பவன், பீமனோ உடல் பெரியவன், எப்பொழுதும் சாப் பிட்டுக் கொண்டே கிடப்பவன், அர்ச்சுனனோ அவனுக்கு ஏகப்பட்ட மனைவிகள், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியை எண்ண முடியாது. நான்காவது, அய்ந்தாவது நகுலனும், சகாதேவனும் எனது பிள்ளைகள் மாதிரி - எனவே கர்ணன்மீது ஆசை கொண்டேன் என்கிறார்.
இந்த ஆபாச ஆரியக் கலாச்சார ஒழுக்கக் குன்றுகள்தான் தந்தை பெரியாராலும், அவர்தம் சீர்திருத்த இயக்கத்தாலும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டது என்று கொஞ்சம்கூடக் கூசாமல் எழுதுகின்றனர். இன்னும் இருக்கிறது - குருமூர்த்தியாரே ஓடாதே நில்!
-விடுதலை நாளேடு, 26.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக