புதன், 18 ஏப்ரல், 2018

மனுதர்மச் சட்ட விதிகளின்படி ஆட்சி

நூல்: ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்
ஆசிரியர்: மருத்துவர் நா.ஜெயராமன்
வெளியீடு: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் 641 015.
   
 தொலைபேசி: 0422 - 2576772, 9443468758
பக்கங்கள்: 296,         விலை: ரூ.250/-

மனுதர்மச் சட்ட விதிகளின்படி ஆட்சி

(தர்மம் செழிக்க நடந்த நீதி பரிபாலனம்?)

மகுடத்திற்கெல்லாம் மகுடம் சூட்டியது போன்று எனச் சொல்வார்களே, அதில் ஒன்றுதான் ஆரிய குலவழியிலான சாதிக்கு ஒரு நீதி என்ற மனுதர்மச் சட்டம். ஆரிய தேசம் என்பது பல வகையில் சமமின்மையால் ஒடுக்கப்பட்டுக் கிடந்தது என்பதை பல கோணங்களில் விளக்கியிருக்கின்றேன். ஒரு தேசத்தின் மாண்பு என்பது அந்தத் தேசத்தின் நீதி பரிபாலனத்தின் செழுமையையும், நேர்மையையும் ஆதாரமாகக் கொண்டது. நீதியற்ற தேசத்தில் எந்த மனிதனுக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்றும் மறுக்கப்பட்டு விடும். நீதி என்பது மனிதனுக்கும் மனிதனுக்குமான மனிதக் கூறுகளை உள்ளாய்வு செய்வது. ஒரு தேசம் தன் மக்களை சமமாக பாவிக்கின்றது என்ற அடிப்படையிலான புரிதல்களை உறுதி செய்வதே சம நீதியிலிருந்துதான்.

ஆனால், தருமம் செழிக்க ஆட்சி நடந்ததாக நமது வாஞ்சி அய்யர் வகையறாக்கள் பெருமை பேசும் தேசத்தில் தருமநீதி எவ்வாறு இருந்தது?

இந்தியாவைப் பொருத்தவரை இங்கு வாழும் நிலைகளில் அனைத்தையும் தீர்மானிப்பது வருணம். வருணக் கட்டமைப்பு. அதாவது சாதி. சாதியம்தான், இந்து இந்தியாவின் அனைத்தையும் வடிவமைக்கின்றது, தீர்மானிக்கின்றது, செயல்படுத்துகின்றது, நிலைநிறுத்துகின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை, இறப்புக்குப் பின்னரும்கூட. எனவே காலை எழுந்து எந்தத் திசையை நோக்கி உட்கார்ந்து மலம் கழிப்பது என்பது முதல் இந்துமதம் தன் ஆதிக்கத்தை உறுதி செய்கின்றது என்றால் மனித வாழ்வின் உச்சபட்ச அதிகாரம் செயல்படக் கூடிய நீதி பரிபாலனத்தில் தலையீடு இல்லாமல் இருக்குமா?

நீதியரசருக்கெல்லாம்(?) நீதியரசராகிய ‘மனு’தான் இந்தச் சட்டத்தினை வகுத்தளித்தவர். அதன் அடிப்படையில்தான் நீதிபரிபாலனம் செவ்வனே நடந்து வந்தது.

மனுதர்ம சாஸ்திரத்தின் உற்பத்தி வரலாறு:

பிரம்மானவர் மனுஸ்மிருதி சாஸ்திரத்தை உண்டு பண்ணி விதிப்படி பிருகு ரிஷிக்கு ஓதுவித்தார். பிருகுரிஷியும், மரீச முதலான ரிஷிக்கு ஓதுவித்தார். (மனு.அத்:1_சு_58)

தண்டனை முறைகள்:

பிராமணன் இந்த மனு சாஸ்திரத்தை மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது. (அத்: 1-சு-103) சூதாடுகிறவன், கூத்தாடி, பாடகன், வேத ஸ்மிருதிகளை நிந்திப்பவன், பிரத அனுஷ்டானம் இல்லாதவன், தன் சாதித் தொழிலை விட்டு மற்றொரு சாதித் தொழிலைச் செய்பவன் இவர்களை அரசன் பட்டணத்தை விட்டு ஓட்ட வேண்டியது. (அத:9_சு_226)

பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததினாலும்இந்த உலகத்தில் உண்டாகியிருக்கின்ற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான். (மனு அத:1_சு_100)

பிராமணன் தொழிலைச் சூத்திரன் செய்தாலும், சூத்திரன், பிராமண சாதியாக மாட்டான். ஏன் என்றால் அவனுக்குப் பிராமண சாதித் தொழிலில் அதிகாரம் இல்லை அல்லவா? சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத்தொழில் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? (அத்:10_சு_73)

பிராமணன் தான் உண்டு மிகுந்த உணவு (எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம் (பதர்) இவைகளை சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத:10_சு_125)

சூத்திரர்கள் பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும். (அத:8_சு_270)

சூத்திரன் பிராமணன் பெயர், ஜாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பியைக் காய்ச்சி எரிய வைக்க வேண்டும். (அத: 8_சு_271)

சூத்திரன் பிராமணனைப் பார்த்து, நீர் இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (மனு அத: 8_சு_272)

சூத்திரன், பிராமணனுடைய தலைமயிர், தாடி, மீசை, கால், கழுத்து, ஆண்குறி இவைகளைப் பிடித்த கைகளை யோசிக்காமல் அறுக்க வேண்டும். (மனு அத: 8_சு_281)

சூத்திரன் பிராமணனை எந்தெந்தக் கையினாலும் தடியினாலும் தாக்குகிறானோ, அந்த உறுப்புகளை நறுக்க வேண்டும். அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டிவிட வேண்டும். (மனு அத: 8_சு_280)

சூத்திரன் பிராமண சாதிக்குரிய பூநூல் முதலியவற்றைத் தரித்தால், அரசன், சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். (மனு அத: 9_சு_224)

சூத்திரன் தன் தொழிலை விட்டுவிட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு, அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். (மனு அத: 10_சு_96)

விபச்சாரத் தண்டனை:

பிராமணரல்லாதார், பிராமணன் மனைவியைக் கூடினால் அவன் உயிர் போகும்வரை தண்டிக்க வேண்டும். (அத_8_சு_359)

சூத்திரன் காவல் இல்லாது திரிகின்ற பிராமணப் பெண்ணைக் கூடினாலும், அவனது பீஜம், ஆண்குறியை அறுக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பிராமணப் பெண்ணைக் கூடினால் உடல் முழுவதையும் துண்டு துண்டாக வெட்டி, அவனது பொருளையும் கொள்ளையிட வேண்டும். (அத:8_சு_374)

சத்தியம் கேட்க வேண்டிய முறை:

பிரமாணம் (சத்தியம்) செய்கின்ற சூத்திரனை நெருப்பில் பழுக்கக் காய்ச்சின மழுவாகிலும் எடுக்கச் செய்ய வேண்டும், அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். (மனு அத: 8_சு_114)

சூத்திரன் மழுவெடுத்ததில் கை வேகாமலும், தண்ணீரில்அமிழ்த்தப்பட்டவன் மிதக்காமலும், சாகாமலும் இருந்தால்தான் அவன் சொல்லும் பிரமாணம் சத்தியம் என்று உணர வேண்டும். (மனு அத: 2_சு_24)

சூத்திரன் அடிமைத் தொழிலைத் தவிர வேறு தொழிலைச் செய்யத் தகுதியற்ற தேசம் யாதோ அந்த இடம் பிராமணன் வசிக்க உரியதாம். (அத: 2_சு_24)

சூத்திரன் ராசாவாயிருக்கின்ற இராச்சியத்தில் தருமம் அறியாதவர்கள், பாஷாண்டிகள் இவர்கள் வசிக்கும்படியான பிராமணர் கிராமத்திலும், சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் வாசஞ் செய்யப்படாது. (மனு அத: 4_சு_61)

சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தை சொல்லி வைக்கலாகாது தனக்கு சிஷ்யனாகாத சூத்திரனுக்கு அன்னத்தைக் கொடுக்கக் கூடாது. தருமம், விரதம் இவைகளை ஒரு பிராமணன் முன்வைத்துக் கொள்ளாமல் நேராக அவனுக்கு உபதேசிக்கக் கூடாது. (அத:4_சு_80)

சாவிலும் பேதம்:

சூத்திரன் இறந்துபோனல் ஊருக்குத் தெற்குப் பக்கத்திலும், வைசியன் இறந்து போனால் ஊருக்கு மேற்குப் பக்கத்திலும், சத்திரியன் இறந்துபோனால் வடக்குப் பக்கத்திலும், பிராமணன் இறந்துபோனால் கிழக்குப் பக்கத்திலும் எடுத்துக் கொண்டு போக வேண்டும். (மனு அத: 5_சு_92)

இதனடிப்படையில்தான் இன்றும் தலித்துகள் இறந்துபோனால் ஊருக்குள் கொண்டு போகக் கூடாது என சாதி இந்துக்கள் சாலையை மறிக்கின்றார்கள். தனிச் சுடுகாடு தலித்துகளுக்கு இன்று வரையில் உள்ளது.

பிராமணன் சொல்படி மன்னன் நிர்வாகம் செய்ய வேண்டும்:

அரசன் தினந்தோறும் காலையிலெழுந்து மூன்று வேதம் ஓதியவர்களையும், நீதி சாஸ்திர வித்வான்களாகவும் இருக்கின்ற பிராமணனை உபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதி செலுத்த வேண்டியது. (மனு அத: 7_சு_31)

எந்த அரசன் ராச்சியத்தில் வேதமோதியவன் சாப்பாடு இல்லாமல் துன்பப்படுகின்றானோ, அந்த அரசன் தேசமெல்லாஞ் சீக்கிரத்திலேயே துன்பப்பட்டு அழிந்துவிடும். (மனு அத: 7_சு_134)

மனுதர்ம (வர்ணாசிரம்) முறைப்படி ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் இருக்கின்ற அரசனை, அந்தத் தண்டத்தைக் கொண்டே மந்திரி முதலாமானவர்கள் கொன்று விடலாம். (மனு அத: 7_சு_26)

சூத்திரன் ஒருபோதும் தீர்மானம் செய்யலாகாது:

பிராமணன், அரசனுடைய சக்தியை லட்சியம் செய்யாமல் தன் சக்தியைக் கொண்டே சூத்திரனை அடக்க வேண்டும். வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால், பிராமணர்கள் ஆயுதம் எடுத்து யுத்தம் செய்ய வேண்டும்.

சூத்திரன் நீதி சொல்லக் கூடாது:

எந்தத் தேசத்தில் அரசன் செய்ய வேண்டிய தரும விசாரணையைச் சூத்திரன் செய்கின்றானோ அந்தத் தேசம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே சேற்றில் இறக்கப்பட்ட பசுவைப் போல துன்பப்படுகின்றது. (மனு அத: 8_சு_21)

அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியைப் பிராமணர்களுக்குத் தானஞ் செய்து மீதியைத் தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ளலாம். (மனு அத: 8_சு_38)

பார்ப்பானுக்கு கொலைத்தண்டனை கிடையாது:

பிராமணனுக்குத் தலையை முண்டனஞ் செய்வது (மொட்டையடிப்பது) கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டனை உண்டு. (அத: 8_சு_379)

சர்ப்பம், பிராமணன் இளைத்திருந்தாலும் அவனை அவமானம் செய்யக்கூடாது. (மனு அத: 4_சு_135, 36)

பிராமணன் கொடிய குற்றம் செய்திருந்தாலும் அவனுக்கு கொலைத் தண்டனை கொடுக்காமலும், துன்பப் படுத்தாமலும், அவன் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும். (மனு அத: 8_சு_380)

பெண்ணடிமைச் சட்டங்கள்:

படுக்கை, ஆசனம், அலங்காரம், கர்மம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (அத: 9_சு_17)

பிள்ளைப்பேறு இல்லாமல் அந்தக் குலம் நசிகிறதாக இருந்தால், அப்போது மனைவி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக்கொண்டு தன் மைத்துனர் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு புணர்ந்து குலத்துக்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம். (மனு அத: 9_சு_59)

கணவன் துராசாரமுள்ளவனாக இருந்தாலும், அந்நிய ஸ்திரீலோலனா யிருந்தாலும், நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும், பதிவிரதையான ஸ்திரீயானவள், அவனைத் தெய்வத்தைப் போல் பூசிக்க வேண்டு. (மனு அத: 5_சு_154)

பெண்களையும், பிராமணரல்லாதவரையும் கொல்லுதல் பாதகமாகாது. (அத: 11_சு_67)

தனக்குப் பொக்கிஷ நாசம் முதலிய மேலான ஆபத்து வந்தாலும், அரசன் அதிக தீர்வையை (வரியை) ஏற்படுத்தி பிராமணர்களுக்குக் கோபம் வரச் செய்யக் கூடாது. அவர்கள் கோபத்தால் இவன் சேனையோடும், வாகனத்தோடும் அழிந்து போகும்படி சபிப்பார்கள். (மனு அத: 9_சு_313)

பிராமணர்கள் லௌகீகமாக இருந்தாலும், வைதீகமாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம். (மனு அத: 9_சு_317)

ஒளியுள்ள அக்கினியானது மயானத்தில் பிணத்தைத் தகித்தாலும் நிந்தனை இல்லாமல், எப்படி ஹோமத்தினால் நிவர்த்தி செய்யப் படுகிறதோ அப்படி பிராமணன் கெட்ட காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவன்; மேலானவன். (மனு அத: 9_சு_319)

(நன்றி: ‘மனுநீதி குலத்துக்கு ஒரு நீதி’ தந்தை பெரியார்; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார வெளியீடு_திருச்சி_17)

சோழ, பாண்டிய மன்னர்களின் நீதி பரிபாலனம்:

மனுதர்மத்தின் இந்த சட்ட வரைவு ஏதோ இதிகாச காலத்தில் நடந்தவை என கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஆங்கிலேய மிலேச்சர்கள் சட்டமியற்றிய காலம் வரை நடைமுறையில் இருந்தவை. மன்னாதி மன்னனான மாவீரன் சிவாஜிக்கும் கூடச் சட்டம் செய்யும் உரிமை இருந்திருக்கவில்லை. சிவாஜி மனுதர்மச் சட்டங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டார். ‘சிவாஜி கண்ட இந்து ராச்சியம்’ நூலில் பேரறிஞர் அண்ணா தெளிவுபடுத்தியிருக்கின்றார். இந்து ராச்சியத்தில் எல்லா மன்னர்களும் சிவாஜியே! இந்தப் பொது நியதிக்கு ஒரு சிலரைத் தவிர மற்ற மன்னர்களெல்லாம் சிவாஜிகளே! ஆனால், பார்ப்பனர்கள் தங்களின் மேலாண்மையை கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமான மன்னர்களிடத்தில் திணித்து வந்தனர். எதிர்த்த, தவிர்த்த மன்னர்களெல்லாம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டனர். தமிழகத்தை ஆண்டுவந்த பலம் பொருந்திய மன்னர்கள்கூட பார்ப்பனர்களின் முன் வாளாவிருந்தனர். ஆரியம் தன் பூர்வசக்தியைப் பெற்று மன்னர்கள் அனைவரையும் மனுதர்மச் சட்டத்திற்குள் ஆட்சி நடத்தும்படி வல்லாங்கு செய்துவிட்டது. சிவாஜியையே மண்டியிட வைத்த ஆரியத்திற்கு மற்ற மன்னர்களெல்லாம் சாதாரணமாகிப் போய்விட்டனர். மூவேந்தர் களெல்லாம் மனுவின் பூர்வாங்கக் கோட் பாட்டின்படியே பரிபாலனம் செய்துவந்தனர் என்பதை அவர்களின் செப்பேடுகளும், மெய்க்கீர்த்திகளும் பறை சாற்றுகின்றன.

உதாரணத்திற்கு,

மாறவர்மன் சுந்தரபாண்டியன் மனுநெறி தலைப்பமணி முடிசூடி ஆள்கிறான் என அவன் மெய்க்கீர்த்தி பறை சாற்றுகிறது.

“நால்வகை வேதமும் நவின்றுடன் வளர

ஆய்வினை வேள்வியும் செய்வினை இயற்ற

அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ

மேலும்

சமயமும் நீதியும் தருமமும் தழைக்க

கடவுள் வேதியர் அருந்தொழில் வேள்விச்

செங்கனல் வளர்ப்ப...’’

தன் ஆட்சியை நடத்தினான்.

குலசேகரப் பாண்டியனோ, “முத்தமிழும் மனு நூலும் நான்மறை முழுவதும் எத்தவச் சமயமும் விளங்க இறைமாட்சி நடத்தியிருக்கின்றான்.’’

சோழ மன்னர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. மூன்றாம் இராஜராஜசோழன் ஆட்சி நடத்திய விதம் குறித்து செப்பேடுகள் இவ்வாறு பெருமை கொள்கின்றன.

“ஒப்பரிய மறைநூலும் உரைதிறம்பா மனு நூலும்

செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப

நீதி தரு குலநான்கும் நிலைநான்கும் நிறை நிற்ப,

ஆதியுகம் குடிபுகுந்த அறுசமயம் தழைத்தோங்க’’

முதலாம் ராஜாதிராஜன் விளங்கு மனுநெறி அசுவமேதஞ் செய்து பரிபாலனஞ் செய்திருக்கின்றான். இராஜ மகேந்திர சோழனோ தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய மன்னனாகத் தன்னை மார்தட்டி அறிவித்துக் கொள்கிறான்.

முதலாம் குலோத்துங்கன் மனுவாறு பெருக மக்களை ஆள்வதாக மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றான்.

இரண்டாம் குலோத்துங்கன், ‘மனுவாறு விளங்க செங்கோல் செலுத்துவதாக’ செம்மாந்து உரைக்கின்றான்.

இரண்டாம் ராஜராஜன் மனுவாளை தனி நடாத்தி மக்களைப் புரந்ததாக பெருமை கொள்கின்றான்.

இரண்டாம் இராசஇராசன் அமைவில்லா மனுவொருக்க ஆதியம் பாடி நிலைநிற்க என அகிலத்தை ஆண்டதாக கல்வெட்டுகளில் எழுதி வைக்கின்றான்.

மூன்றாம் குலோத்துங்கன், ‘மனுவின் நெறி தழைத்தோங்க, செயல் வாய்ந்த மனுநூலும் பெருகக் கோலோச்சினான்’ என அவன் மெய்கீர்த்தி விளக்குகின்றது.

மூன்றாம் இராசஇராசன்,’பொருவில் மனுநெறி வாழ பொன்மகுடன் கவித்தருளி’ என மனுநீதிக்கு மகுடம் சூட்டி ஆட்சி செய்திருக்கின்றான்.

இப்படியாக சோழ மன்னர்கள் காலம் நெடுகிலும் மனுதர்மம் ஆட்சி செய்து செழிப்புற்றிருந்ததற்கான ஆயிரமாயிரம் கல்வெட்டுக்களும் மெய்க்கீர்த்திகளும் ஆவணமாய்க் கிடக்கின்றன.

வேதபுரியினர் இட்ட கட்டளைப்படி அவரவர்க்கு ஒரு குலத்தொழில் விதித்து, அதை மீறுவோருக்குக் கடும் தண்டனைகளும் விதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. பார்ப்பனர்களை அக்கிரஹாரம் என ஆலயங்களுக்கு அருகில் தனிக் குடியிருப்புகளை ஏற்படுத்தி அங்கு அவர்களைக் குடியமர்த்தி அழகு பார்த்த மன்னர்கள்தான் அன்று ஆட்சி புரிந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு மானியங்களாக இறையிலா நிலங்கள், பாரதவிருத்தி, பட்டவிருத்தி, வேதவிருத்தி, புராணவிருத்தி தேவதாயம் இப்படிப் பல பெயர்களில் நாட்டில் உள்ள நல்ல விளைநிலங்களைத் தானமாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

சாதி ஆச்சாரங்களை வரையறுத்து இன்ன வகுப்பார் இன்னின்ன சடங்குகள், உடைகள், உரிமைகள் ஆகியவைகளைத் தான் கைகொள்ள வேண்டும் என அரசாணை பிறப்பித்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின் 1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சட்டத்தின்முன் அனைவரும் சமம், சேரிக்காரன்கூட இந்தியாவின் தலைமைப் பதவிக்கு வரலாம். ஜனாதிபதியாக அந்த நாற்காலியில் அமரலாம் என்றிருக்கின்றது. அமர்ந்தும் விட்டார்கள். ஆனால், இதில் சமநீதி இருக்கின்றதாக மார்தட்டிக் கொள்ளும் இந்து இந்தியர்கள் இந்துக் கோவில்களுக்குள் பார்ப்பனனைத் தவிர இந்தியாவில் உள்ள எந்தச் சாதியினராலும் அர்ச்சகர் ஆகமுடியவில்லையே? எதனடிப் படையில்? சேரிக்காரனை விடுங்கள். அவர்கள் அந்தப் பாதைகளில் செல்லக்கூட அனுமதி இன்றும் மறுக்கப்பட்டு வருகின்றது. தலித்துகளுக்கு மேலே உள்ள இதர மூன்று வருணத்தாராலும்கூட உள்ளே நுழைந்து லிங்கத்துக்கு ஆராதனை செய்ய முடியவில்லையே! உச்சநீதிமன்றமும்கூட இதற்குத் தடை விதிக்கின்றதே! இது எந்த இந்தியச் சட்டப் பிரிவின் கீழ்?

மிக மிக மதிநுட்பமான ‘மங்கள்யான் ராக்கெட்டைத்’ தயாரித்துச் செவ்வாய் கிரகத்துக்கு ஏவுகின்ற அதிநவீன விஞ்ஞானத் தொழில்நுட்பம் கொண்ட, பல முதுமுனைவர் பட்டம் பெற்றவர்களை விடக் கூடுதல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாலே மட்டுமே சாதிக்கக் கூடிய அந்தப் பணியைச் (தட்டில் இருக்கின்ற பூவை அள்ளி லிங்கத்தின் மீது தூவி, சூடத்தைக் கொளுத்தி லிங்கத்திற்கு வெளிச்சம் காண்பித்துவிட்டு வெளியே நிற்பவர்களிடம் காசு வாங்கிக் கொள்வது) சிரமேற்கொண்டு செய்ய அவாளைத் தவிர வேறு எந்த இந்திய நாய்க்கும் அருகதையில்லை என்று இன்று வரை சமரசமில்லாமல் சாதிக்கப்பட்டு வருகின்றதே! எந்த ‘லா’வின் (லிணீஷ்) அடிப்படையில்?

இது உண்மையென்பது வாஞ்சி அய்யர் வகையறாக்களுக்குத் தெரியும். மனுதர்மச் சட்டத்தின் மிச்ச சொச்சத்தில் ஒன்றாக இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது!

இந்தியாவின் சிவில், கிரிமினல் என்ற இரண்டு வகைப்பாட்டிலும் வராத மூன்றாவது சட்ட வடிவம் எது? அதற்கு என்ன அதிகாரம்? அதற்கு என்ன பெயர்? எழுதப்பட்ட சட்ட வடிவமாக இருக்கின்றதா? ஆம் என்றால் அது எங்கே உள்ளது? இல்லை யென்றால் சட்ட வடிவத்தில் எல்லாம் இல்லாத சட்டம் எப்படி உச்சநீதி மன்றத்திலும்கூட தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது? அதுதான் ‘கண்ணுக்குப் புலப்படாத இந்திய மனுதர்மச் சட்டம்.’ மற்ற சிவில், கிரிமினல் சட்ட வடிவங்களைவிட இதுதான் மிகமிகச் சக்தி வாய்ந்தது. மற்ற இரண்டையும் விவாதிக்கலாம். இது விவாதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. தேவைப்படும் போது மற்ற இரண்டிலும் திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆனால், இதற்குள் எந்த மாற்றமும் எந்தக் காலத்திலும் செய்ய முடியாது. ஏன் தெரியுமா? இந்த மனுதர்மச் சட்டம், மாற்றமே இல்லாதது. மாறாதது, அழியாதது, அழியாத சனாதனம் என்று வாஞ்சி அய்யர் குறிப்பிடும் ‘மனுதர்ம லா’ (விணீஸீu’s லிணீஷ்) இதுதான். 

இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம்:

பிளாசிப் போருக்கும், பிக்ஸர் போருக்கும் பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியார் பெங்கால் ‘நவாப் நிஜிடம்’ வரிவசூல் செய்யும் அதிகாரத்தைப் பெற்றவர்கள், அதோடு துவக்கத்தில் தங்களுடைய சிப்பாய்கள், வர்த்தகர்கள், சிவிலியன்களுக்குள் ஏற்படும் தாக்கீதுகளுக்கு நீதி வழங்கிக் கொள்ளும் அதிகாரத்தைத் தான் பெற்றார்கள். அப்போதும் கூட தலைமையிடத்துக் குற்றங்களுக்கு (சிணீஜீவீtணீறீ சிக்ஷீவீனீமீ) தீர்ப்பு வழங்கும் பொறுப்பு நவாப்பிடமே இருந்தது. சென்னை, மும்பை, கல்கத்தாவில் அவர்கள் நீதிமன்றங்களை நிறுவிக் கொள்வதற்கு 1683இல் சார்லஸ்-_மிமிவும், 1686இல் ஜேம்ஸ்ஸ்-_மிமிவும், 1698இல் வில்லியம்_மிமிமியும், நீதி வழங்கும் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள அதிகாரங்கள் அளித்தனர்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1774_1785) காலத்தில் நீதித்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் சிவில் நீதி மன்றங்கள் உருவாயின. ‘ஜில்லா நீதிபதிகள்’ (ஞீவீறீறீணீ) என அய்ரோப்பியர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு உதவியாக இந்துச் சட்டங்கள் குறித்து ஆலோசனை கூற இந்து ‘தர்ம சாஸ்திரம்’ தெரிந்த பார்ப்பனர்களையும், முஸ்லிம் சட்ட நுட்பங்களைத் தெரிந்த மவுலிகளையும், முல்லாக்களையும் நியமித்துக் கொண்டனர்.

சிப்பாய் கலகத்திற்குப் பிறகு (1857) 1858இல் பிரிட்டிஷ் பேரரசுக்கு விக்டோரியா மகாராணி முடிசூட்டிக் கொண்ட பிறகு இந்தியாவின் முழு நிர்வாகமும் அய்ரோப்பியர் வசமானது. திருமணம், சொத்து, வாரிசுரிமை போன்றவற்றிக்கு விதிமுறைகள் இருந்தபோதும் வரையறுக்கப்பட்ட குற்றவியல் தண்டனைச் சட்ட விதிகள் நடைமுறையில் இல்லை. இஸ்லாமியர்களுக்கு அவர்களின் மத அடிப்படையிலான கடும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

இந்து மத நீதி என்பது சாதிக்கு ஒரு நீதி, ஊருக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி என மனிதப் பண்புகளுக்கு ஏற்றதாக இருக்கவில்லை. பஞ்சாயத்தார்கள், பிரபுக்கள், ஜமீன்தார்கள், முஸ்லிம்கள் வழங்கி வந்த தீர்ப்புகளில் நீதியோ, நியாயமோ, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகளோ, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் தங்கள் தரப்பு நியாயவாதத்தை எடுத்துரைப்பதற்கு வாய்ப்புகளோ வழங்கப்படாதிருந்தன.

பிரிட்டிஷாரின் நீதிமன்றங்கள் இவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டிருந்தால் மக்கள் அய்ரோப்பிய நீதிமன்றங்களை ஏற்கத் தயாராயிருந்தனர். குற்றவியல் தண்டனைச் சட்டங்கள், சாதி மத பேதமற்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாக மாறத் தொடங்கியது. தண்டனை விதிப்பில் நிலைபெற்றிருந்த சாதியம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கத் தொடங்கியது.

இந்நிலையில் இந்தியா முழுமைக்குமான புதிய தண்டனைச் சட்டம் ஒன்றை உருவாக்க முடிவு செய்து, அப்பெரும் பணியை இந்தியார்களால் என்றுமே மறக்க முடியாத ‘தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு’ (1800_1859) விடம் ஒப்படைக்கப்பட்டது. உதகமண்டலத்தில் வெகுசில வாரங்களே தங்கியிருந்து அவர் எழுதிக் கொடுத்த இந்தியத் தண்டனைச் சட்டம் (மி.றி.சி. மிஸீபீவீணீஸீ றிமீஸீணீறீ சிஷீபீமீ) 1860 முதல் இந்தியாவில் அமலுக்கு வந்தது. இச்சட்டம் உருவாக்கி 155 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் ‘இந்தியாவின் பாரம்பரிய கட்டப் பஞ்சாயத்துகள் இந்தியா முழுமைக்கும் நடந்து வருகின்றன. மனித நாகரிகத்திற்கு எதிராகத் தீர்ப்புகளும் நிறைவேற்றல்களும் நடந்து வருகின்றன. பிஹார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களின் கிராமங்களை இந்தப் பஞ்சாயத்துகள் முழுமையாக ஆக்கிரமித்தி ருப்பது இந்தியாவின் ‘நீதி நிர்வாக நடைமுறையின் அவமானச் சின்னங்கள்.’

இந்தியச் சுதந்திரப் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கிய கடுமையான சட்ட விதிகள், அவர்கள் இந்தியாவை விட்டுச் சென்று 68 ஆண்டுகள் கடந்த பின்பும் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி இன்னமும் அப்படியே கடைபிடிக்கப்பட்டு வருகின்றதே தவிரக் குறையவில்லை. நீக்கப்படவுமில்லை.

அன்று சுதந்திரம் வேண்டும் என்ற தங்களின் உரிமைகளைக் கேட்டுப் போராடியவர்களுக்குத் தூக்குத் தண்டனை. இன்று போராடும் மக்களை, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் (அவர்களாவது விசாரணை என்ற ஒன்றை நடத்திக் கொன்றனர்) நேரிடையாக இந்தியக் காவல்துறை அந்த இடத்திலேயே சுட்டுக் கொல்கின்றது! காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொல்கின்றது. காவல் நிலையம் செல்லும் பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப் படுகிறார்கள்.

வாச்சாத்தி என்ற ‘ஊரையே’ இந்திய போலீஸும் வனத் துறையினரும் இணைந்து கற்பழித்த வரலாறுகள் எல்லாம் சுதந்திர இந்தியாவில்தான்.

இன்று இந்திய நீதிமன்றங்களில் பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதிதான், அரசியலில் கொள்ளையடித்து கோடிகள் குவித்து வைத்திருப்பவன் நீதிபதிகளை விலைக்கு வாங்குவதெல்லாம் இங்கு சாதாரணமாக உள்ளது. கணக்குப் போடும் ‘கால்குலேட்டரை’ ஒரு நீதிபதியின் பெயரில் வைத்து மக்கள் கேலி செய்த உண்மை வரலாறுகள் எல்லாம் இங்கு உண்டு.

உலகத்தையே படைத்துக் காத்து இரட்சிக்கும் கடவுள் என்று நம்பப்படுகின்ற வரைக்கூட விமர்சிக்க இங்கு உரிமை இருக்கின்றது. ஆனால், லஞ்சம் வாங்கிக் கொண்டுதான் இந்தத் தீர்ப்பை எழுதியிருக்கிறார் என்பதை ஊர்ஜிதமாக அறிய முடிகின்ற போதும்கூட அதை விமர்சிக்கக் கூடாது! ‘அது நீதிமன்ற அவமதிப்பு’ என்று ஆங்கிலேயன் எழுதி வைத்திருப்பதை ஏன் இன்னமும் சுதந்திர இந்தியா மாற்றவில்லை? நீதிபதிகள் எல்லோரும் யோக்கியமானவர்கள் இல்லை என்பதை நீதிமன்றங்களே ஏற்றுக் கொள்ளும்போது, தவறான தண்டனை கொடுக்கும் நீதிபதிக்கு ஏன் தண்டனை கொடுக்கக் கூடாது? இந்த நடைமுறை என்பது “ஆங்கிலேயரைக் கேள்வியே கேட்கக் கூடாது’’ என்பதற்காக அவர்களுக்குச் சாதகமாக எழுதி வைத்துக் கொண்டதுதானே?

இதேபோன்றுதான் இன்னமும் இந்தியத் தீர்ப்புகளில் ‘மனுவின்’ இந்து சட்ட விதிமுறைகள் அப்படியே மாற்றமில்லாமல் கண்ணுக்குத் தெரியாமல், காகிதத்தில் இல்லாமல் நடைமுறையில் மட்டும் இருக்கின்றது, ‘தீண்டாமையைப் போல’. எத்தனைப் போராட்டங்கள், சட்டங்கள் இயற்றினாலும் ஒரு சாதியினரைத் தவிர வேறு எவராலும் இந்தியக் கோவில்களுக்குள் சூடம் ஏற்ற முடியவில்லை!

இந்தக் கொடுமையின் வடிவங்களை ஆங்கிலேய அரசு அன்று முழுமையாக உள்வாங்கியதால் இந்தியத் தண்டனைச் சட்டத்தை உருவாக்கினார்கள். இல்லா திருந்தால் ஆங்கிலேயக் கலெக்டரைக் கொன்ற வாஞ்சி அய்யருக்கு ‘மனு’ நீதிமன்றத்தில், மனுதர்மச் சட்டப்படியான தீர்ப்பு என்பது “முண்டனஞ்செய்தல்’’ மட்டும்தான்!

பிராமணனுக்குத் தலையை முண்டனஞ் செய்வது, (தலை முடியை மழித்தல் கொலைத் தண்டனையாகும்) (மனு.அத: 8_சு_38)

1911களில் நடந்தது மனு நீதிமன்றம் அல்ல. அது மிலேச்சர்களின் நீதிமன்றம். ஆங்கிலேயக் கலெக்டரைக் கொன்றால் நமக்கு நிச்சயம் தூக்குத் தண்டனைதான் என்பதை நன்கு அறிந்திருந்ததனால்தான் வாஞ்சி அய்யர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆஷ்கொலைக் குறித்துக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் திருநெல்வேலி ‘ஹெட்குவார்டர்ஸ்’ டிவிஷனில் மாஜ¤ஸ்திரேட் ஏ.எம்.சி.டாம்போதுரை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். பூர்வாங்க விசார ணைக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், சிறப்பு நீதிபதிகள் மூவர் முன்னிலை-யில் விசாரணைத் தொடங்கியது.

 

-உண்மை இதழ், 16-31.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக