செவ்வாய், 6 ஜூலை, 2021
பார்ப்பானையே (கடவுளாக) வணங்க வேண்டும் என்று கூறும் மந்திரங்கள்
செவ்வாய், 25 மே, 2021
வேதங்கள் - பேதங்கள்- (5)
சு.அறிவுக்கரசு
ஹிந்து மத வேதங்களில் மட்டுமே ஆத்மா, மறுபிறவி ஆகியவை உண்டு. உலக மக்கள் தொகையில் ஹிந்து மதத்தினர் 90 கோடிப்பேர். உலகத்தின் மொத்த மக்கள் தொகை 750 கோடி. ஆத்மா, மறுபிறவி நம்பிக்கை உள்ளோர் மிகச் சிறுபான்மையர். 200 கோடிக்கு மேல் கிறித்துவர்கள், பவுத்தர்கள், இஸ்லாமியர் போன்ற பல்வேறு மதத்தவர்களுக்கு இந்த நம்பிக்கை கிடையாது. இல்லாத ஒன்றைப் பொய்யாகச் சொல்லி, அதன் மேல் கட்டப்பட்ட சீட்டுக்கட்டடம் போன்றதே ஹிந்து மதம். நம் கண்களால் காணும் ஸ்தூலமான உலகத்தை மாயை என்பது ஹிந்துமதம். வேறு எந்த மக்களுக்கும் இப்படிப்பட்ட மாயாவாதக் கொள்கை கிடையாது. இல்லாத ஒன்றை (ஆத்மாவை) அறிந்தவன் தான் இறைவனை அடைகிறானாம். ஆகாயத்தில் அஸ்திவாரமே இல்லாமல் கட்டப்பட்ட “கோட்டை” என்றே கூறவேண்டும் ஹிந்து மதத்தை!
18 நிமிஷங்கள் ஒரு காஷ்டை
18 காஷ்டைகள் ஒரு கலை
30 கலைகள் ஒரு க்ஷணம்
12 க்ஷணம் ஒரு முஹூர்த்தம்
30 முஹூர்த்தம் இரவு பகல் கொண்ட ஒரு நாள்
15 நாள் ஒரு பக்ஷம்
2 பக்ஷம் ஒரு மாதம்
2 மாதம ஒரு ருது
6 ருது ஒரு வருஷம்
ஹிந்து மத காலக்கணக்கு இதுவாம்! யார் கடைப்பிடிக்கிறார்கள்?
அது போலவே சிந்துநதியின் உபநதிகளான அய்ந்துக்கும் உபநிஷத்களில் வேறு பெயர்கள்.
சுதுத்ரி - ஸட்லெஜ்
பருஷ்ணி - ராயி
அஸிக்னி - சீறம்
விதஸ்தா - ஜீலம்
ஸீஷோமா - ஸோஹன்
ஆரியர்கள் கங்கை நதியை அறியாதவர்கள். சிந்து நதிக்கரையில் மாடு மேய்த்தவர்கள். சிந்து நதி பாரசீக மொழியில் ஹிந்து என்றே எழுதப்படும். காரணம், அம்மொழியில் ஸ எனும் எழுத்து இல்லை. மாற்றாக, ஹ என்று உச்சரித்தனர். நதியின் கரையில் இருந்தவர்களை அந்தப் பெயரால் அழைத்ததால் மக்களின் பெயராகவும் மண்ணின் (நாடு) பெயராகவும் அமைந்தது. வெள்ளைக்காரர்கள் மதத்திற்கும் அதே பெயரை வைத்துவிட்டனர். எனவே எல்லாமே இரவல். சமஸ்கிருதத்தில் பெயரே இல்லை. பாரசீகப் பெயர்தான். மிகப் பழமையானது என்னும் மதத்திற்கு அவர்களின் மொழியில் பெயரில் வை. விசித்திரம் தான். மக்களும் மதமும் மொழியும்.
வைசம்பாயனர் ஒரு ரிஷி, யாக்ஞவல்கியர் அவரிடம் சீடன். சீடன் செயலால் கோவப்பட்ட குரு, தான் கற்றுக் கொடுத்ததைக் கக்கிவிடும்படி சீடனிடம் கூறினார். முடியுமா? சாப்பிட்ட சோற்றை கக்கிவிடலாம். கல்வியை முடியாதே. என்றாலும் யாக்ஞவல்கியன் கக்கிவிட்டான். அவன் கக்கியதை மற்ற சீடர்கள் சிட்டுக்குருவி போல தின்று விட்டனர். ஆகவே இதன் பெயர் தைத்ரிய சாகை. க்ருஷ்ண யஜூர் வேதம் என்றும் சொல்கிறார்கள். முதல் அத்யாயம் கல்வி (சிக்ஷா)யின் பெருமை பேசும். குருகுலப் படிப்பின்போது, உப வேதங்களும் வேதாங்கங்களும் கற்பிக்கப்படுகின்றன. உபவேதங்கள் நான்கு. 1) ஆயுர் வேதம், 2) தனுர் வேதம், 3) கந்தர்வ வேதம், 4) அர்த்த சாஸ்திரம் என்பவை. மருத்துவம், வில்வித்தை, நுண்கலைகள் (இசை), ஆட்சிக்கலை போன்றவை. வேதாங்கங்கள் ஆறு. 1) சிக்ஷை (உபசரிப்பு), 2) வியாகரணம் (இலக்கணம்), 3) சந்தஸ் (செய்யுள் அமைப்பு), 4) நிருக்தம் (அகராதி அறிதல்), 5) ஜோதிஷம், 6) கல்பம் (சடங்குகள்) என்பவை.
தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் ஒன்றை அர்ப்பணம் செய்யும்போது, ஸ்வாஹா எனச் சொல்ல வேண்டுமாம். இதன் மூலம் நாம் அடைவதைத் திருப்பித் தரவேண்டும் என்பது போதனையாம்.
“லோகா ஸமஸ்தா சகிநோ பவந்து” என்பது வேதமந்த்ரமாம். உலகில் உள்ள அத்தனை பேரும் சுகமாக இருக்கட்டும் என்பது பொருளாம்.
உலகில் நான்கு பெரிய மொழிகளாம். அவை காயத்ரியில் கனிந்த மொழிகளாம். பூ, புவ, சுவ, மக எனும் நான்காம். பூ என்றால் இவ்வுலகமாம். புவ என்றால் அவ்வுலகம். சுவ என்றாலும் அவ்வுலகம் மகத் என்றால், சூரியன், சந்திரன், பிரமன், உணவாகும். பூ, புவ, சுவ மூன்றும் ஜோதியாகி, ஒளியாகி, வேதமாகிய பிரம்மமாம். மொழிகள் என்றால் என்ன? மனிதன் தன் கருத்தைப் பிறர்க்குச் சொல்லப் பயன்படுத்தும் கருவி. பேச்சு ஒலியின் மூலமோ, எழுதிய எழுத்தன் வரிவடிவம் மூலமோ தன் கருத்தை வெளிப்படுத்தப் பயன்படும் சாதனம். அதற்கு இந்த வேதம் தரும் சொற்களும் விளக்கமும் குழப்பத்தைத் தருகின்றன அல்லவா?
கடோபநிஷத் என்பது இரண்டு அத்யாயங்களாக உள்ளது. மூன்று கொடிகளாக ஒவ்வொரு அத்யாயமும் உள்ளது. மொத்தம் ஆறு வல்லிகள் (கொடிகள்) நசிகேதன் என்பவன் யமனிடம் கேட்டவைகளும் மரணத்தை வெல்லும் வழிகளும் அடங்கியவையாம்.
வாஜசிரவஸ் எனும் மன்னன் உலகத்தையே ஆளவேண்டும் என்கிற ஆசையால், விஸ்வஜித் என்ற யாகத்தைச் செய்தான். வாழ்க்கையைக் கொடுத்து வாழ்க்கையைப் பெறுவது யாகத்தின் நோக்கம். அன்று மாடுகள் தான் செல்வம். வாஜசிரவஸ்தானம் கொடுத்த மாடுகள் எல்லாம், அடி மாடுகள். பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்கள். தானத்தின் நோக்கமே அடிபட்டுப் போனது. இதைக் கவனித்த வாஜசிரவஸின் மகன் நசிகேதன், தந்தையிடம் “என்னை யாருக்குத் தானம் தரப் போகிறீர்கள்?” எனக்கேட்டான். பதில் இல்லை. மறுபடியும் கேட்டான். இம்முறையும் பதில் இல்லை. மூன்றாம் முறையாகவும் மகன் கேட்டான்.
“உன்னை யமனுக்குத் தானமாகத் தரப்போகிறேன்” என்று தந்தை பதில் சொன்னார். நசிகேதனும் யமனிடம் போனான். யமன் தனது மாளிகையில் இல்லை. மூன்று நாள்கள் காத்திருந்தான். மூன்று நாள்களுக்கும் அவனுக்கு யாரும் உணவு தரவில்லை. பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனைப் பார்த்து யமன், மூன்று நாள் பட்டினிக்காக மூன்று வரம் கேள் என்று சொன்னான். நசிகேதன் வரம் கேட்டானாம். திரும்பிச் சென்றால் தன் தந்தை அவனிடம் கோவமடையாமல் பாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டானாம். யமனும் முதல் வரத்தைக் கொடுத்தானாம்.
சொர்க்கத்திற்குப் போனால் சுகமாக இருக்கலாமாம், சொர்க்கம் போவது எப்படி என்று இரண்டாவது வரத்தைக் கேட்டான். சொர்க்கத்திற்கு போகும் வழி, இதயக் குகையில் இருக்கிறது என்றானாம் யமன். “நிஹிதம் குஹாயம்“ என்பது அவன் சொன்னதாம். அத்தகைய யாகத்தை எப்படிச் செய்வது எனும் விளக்கத்தை யமன் நசிகேதனுக்குச் சொன்னானாம். இஷ்டகா கற்கள் 360 வைத்து யாக குண்டம் அமைக்கப்பட வேண்டுமாம். யாகத்தில் விஷ்ணுவே “ப்ரதீகமாக”ப் போற்றப்பட வேண்டுமாம். யமன் சொன்னதைக் கவனமுடன் கேட்டு உள்வாங்கிக் கொண்ட நசிகேதனைப் பாராட்டிய யமன், இரத்தின மாலையைப் பரிசாக அளிக்கிறான். அத்துடன் அந்த யாகத்திற்கு அவன் பெயரைச் சூட்டி, நசிதேகயாகம் என்கிறான். ஒரு முறை சொன்னாலே கவனமுடன் கிரஹித்துக் கொண்ட “ஏகசந்த கிராஹி”யான நசிகேதன் பெற்ற சிறப்புகள் இவை. நசிகேத யாகத்தை மூன்று தடவைச் செய்தவன், பிறப்பு, இறப்பு எல்லாம் கடந்து அளவு கடந்த சாந்தியை அடைகிறான்.
தொடரும்....
திங்கள், 17 மே, 2021
வேதங்கள் - பேதங்கள் (4)
சு.அறிவுக்கரசு
சுக்ல யஜூர் வேதம்
இது வாஜசனேய ஸம்ஹிதை என்றும் கூறப்படும். முதல் இரண்டு அத்யாயங்களில் கடவுள் பெருமை, துதிப்பாடல், அரச நிர்வாகம் போன்றவை உள்ளனவாம். அக்னிஹோத்ர ரகஸ்யம், பெற்றோர், பிள்ளைகளின் கடமைகள் முதலியன 3, 4, 5 அத்யாயங்களில் உள்ளனவாம். அத்யாயம் 6இல் மீண்டும் ராஜ்யபரிபாலனம், சபா, சமிதி உறவு, கடமை போன்றவை. ஏழாம் அத்யாயத்தில் ஆத்மா, மனம், யுத்தலட்சணம் போன்றவை கூறப்படுகின்றன.
8 மதல் 39 வரையுள்ள அத்யாயங்களில் கிருஹ் தர்மம், ராஜதர்மம், மனித தர்மம், ஸ்த்ரீபுருஷ பரஸ்பர உறவு, பார்ப்பனர், சத்திரியர் கடமைகள், மறுஜென்மம், நித்ய கடமை போன்றவை சொல்லப்படுகின்றன. அத்யாயம் 40இல் ஈசோபநிஷத் உள்ளது. இதில் வழக்கமான வேத உளறல்கள் உள்ளன. பூமியில் இரண்டு கடல்களாம். ஒன்று கல்விக்கடல் மற்றது தண்ணீர்க்கடல். திரவியம் தேடுவதற்காக அதனைக் கடக்கலாமாம். நம் விரோதிகளைப் பூண்டுடன் அழிக்க வேண்டுமாம்.
இந்த வேதத்திற்கான உபநிஷத் ‘பிருஹ தாரணீய மஹா உபநிஷத்’ என்பது. கொஞ்சம் பெரிய உபநிஷத். யஜூர் வேதச் சாரம் என்கிறார்கள். “அஸதோ மா ஸத் கமய, தமஸோ மா ஜ்யோதிர் சமய, ம்ருத்யோ மா அமிர்தம் கமய” என்பது முதல் பாடல். இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல். மரணத்திலிருந்து சாகாமைக்கு இட்டுச்செல் என்பது இதன் பொருள்.
இரண்டு மனைவிகளுடன் இல்லறத்தில் வாழ்ந்து, அடுத்த கட்டமான வானப்ரஸ்த நிலைக்கு போக விரும்பியே யாக்ஞவல்கியர் எனும் முனிவன் பெருமை பேசும் கதைகள் உள்ளன. தன் மனைவி கேட்டதற்குப் பதில் கூறிய ரிஷி “குலத்தில் பற்றும் ஜாதியில் வெறியும் பரமாத்மிகப் பக்திப் பயிற்சியே ஆகும்“ என்கிறான். கணவனும் மனைவியும் காதலிப்பதே பரமாத்மாவைக் காதலிப்பதற்கானப் பயிற்சிதான் என்கிறான். நெருப்பினால் வெளிவரும் புகை, அக்னியாகாது. அதுபோல ஸ்ருதி, ஸ்ருதிகளைப் படித்ததால் பரமாத்மாவை அறிவதல்ல. உஷ்ணம் ஏறிப் பிறகு பற்றி எரியும் அக்னியைக் காண்பதுபோல வைராக்கியம் முதிர்ந்து ஞானம் உதிக்கும்போது பரமாத்மாவைக் காணலாம் என்கிறான்.
கடவுளை (பரமாத்மாவை)ப் பார்க்கும் வழியைக் கூறுகிறான். பலரும் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கூறும் யாக்ஞவல்கியன் கார்க்கி எனும் பெண் ஒருத்தியின் கேள்வியைச் சந்திக்கிறான். “எது வானத்திற்கு மேலும் பூமிக்குக் கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளது எனவும் கூறப்படுகிறதோ, எது அதில் குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளதோ, அது எது?” என்று அவள் கேட்டாளாம்.
“அது உருவம் உடையதல்ல. நுட்பமாகவும் இல்லை. குட்டையுமல்ல, நெட்டையுமல்ல. நெருப்பு போலச்சிவப்பல்ல. நீரைப்போல ஈரமாக இல்லை. அதற்கு நிழல் இல்லை. அளவும் இல்லை. அதற்கு உள்ளும் இல்லை. புறமும் இல்லை. அது எதையும் உண்பதும் இல்லை. எது வொன்றாலும் உண்ணப்படுவதுமில்லை”.
எந்தப் பிரம்மம் தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாயும் வேறு எதையும் வேண்டாததாகவும் உள்ளதோ அது பராகதி. அதுவே பரப்பிரம்மம்“ என்று பதில் கூறினானாம் யாக்ஞவல்கியன். அவனை யாரும் வெல்ல முடியாது எனத் தீர்ப்பு கூறிவிட்டானாம் கார்க்கி.
கேள்வியைப் போலவே பதிலும் குழப்பமே. விளங்காததே. அதுதான் வேதம். வேதாந்தம்.
பல பத்தகங்களைப் படிப்பதால் ஒருவன் பகவானிடம் பிரியம் உள்ளவனாக ஆக முடியாது. ஆழம் இல்லாத குளத்தில் நீர் குடிக்க வேண்டுமானால் அதை கலக்காமல், மெதுவாகக் குடிக்க வேண்டும். கலக்கி விட்டால் அடியில் இருக்கும் சேறு நீரில் கலந்துவிடும். ‘சாஸ்திரங்களைப் பற்றிய விவதாங்களினால் மூளைதான் மேலும் கலங்கும். தெளிவு ஏற்படாது’ என்கிறது உபநிஷத். அப்படியே நம்பு, ஏற்றுக் கொள் எனக் கற்பிக்கிறது.
செய்யலாமா?
தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகிய மூவரும் கடவுளிடம் உபதேசம் கோரினார்களாம். அது “த” எனும் ஓர் எழுத்தை மட்டுமே கூறியதாம். இந்திரிய அடக்கம் அற்ற தேவர்கள், “தாம்யத” என்று உபதேசித்ததாகக் கருதிக் கொண்டனர். அடக்கமாக இருங்கள் என்று சொன்னதாக நினைத்துக் கொண்டனர். “தத்த” என்று சொல்லி, தானம் செய்யுமாறு சொன்னதாக மனிதர் எண்ணிக் கொண்டனராம்.
அசுரர்களோ “தயத்வம்“ என்று கூறியதாக நினைத்துக் கொண்டு தயை உடையவர்களாக எனக்கருதிக் கொண்டனராம். ஆகவே “த” என்ற ஒரு சொல்லின் மூலம் அடக்கம், தானம், தயை ஆகிய மூன்றையும் உபதேசித்ததாம் என்கிறது. ஸூக்ல யஜூர் வேதத்தை யாக்ஞவல்கியன் இன்றும் வாழுமாறு செய்தார் என்கிறது உபநிஷத்.
“ஈஸாவஸ்யம் இதம் ஸர்வம்“ எனத் தொடங்கும் இந்த உபநிஷத் 18 மந்த்ரங்களை மட்டுமே கொண்ட சிறிய உபநிஷத். ஈஸாவாஸ்ய உபநிஷத் எனப்படுவது. தத்யங் அதர்வணன் என்பவன் தன் மகனுக்குச் சொன்னதாம். இதன் மய்யக்கருத்து “ஈசவித்யை” என்பதாம் “கடவுள் முழுமையானது.
இந்த உலகமும் முழுமையானது. முழுமையான கடவுள் தோற்றுவித்ததே உலகம். ஒரு முழுமையிலிருந்து முழுமையை (உலகம்) எடுத்த பிறகும் எஞ்சி நிற்பதும் முழுமையே”. என்பதுதான் இதன் பொருள். ஒரு விளக்கிலிருந்து கணக்கில் அடங்காத விளக்குகள் ஏற்றப்பட்ட பின்பும் முதல் விளக்கு இருக்கிறதல்லவா? அது போல...
இந்த உலகம் மாறிக்கொண்டேயிருக்கும். மாறுகின்ற உலகத்தை இறைவன்தான் நிரப்ப வேண்டும். இருக்கும் செல்வம் உன்னுடையது அல்ல. அதற்காக ஆசைப்படாதே. எப்போதும் தியாக சிந்தையுடன் இரு. எல்லாவற்றிலும் கடவுளைக்காண். மனைவியிடமும் பிள்ளைகளிடமும் கடவுளைக் காண வேண்டும். வாழ்விலும் சாவிலும், இன்பத்திலும், துன்பத்திலும் இறைவன் சமமாக இருக்கிறான்.
உலகம் பற்றிய நம் கற்பனை பொய். மாயை. உறவுகளும் மாயை. எதுவும் நம்முடையது அல்ல. எல்லாவற்றிலும் பற்றுடனும் பற்றில்லாமலும் வாழ்ந்தால் அக வளர்ச்சிக்கான அடித்தளம் அமைகிறதாம். உடம்பு, மனம், பிராணன், புத்தி, ஆத்மா என்ற அய்ந்தும் கலந்ததே “நாம்”. ஆத்மாவை அறிவதுதான் முதல்படி. மனம் அகம் நோக்கி, ஆத்மாவுடன் ஒன்றாக்கிக் கொண்டு அதனை அறிபவர்களுக்கு மட்டுமே மறுபிறவி இல்லை உன்கிறது உபநிஷத்..
தொடரும்....
செவ்வாய், 11 மே, 2021
வேதங்கள் - பேதங்கள் (3)
சு.அறிவுக்கரசு
சூரியைக்கும் ஸோமனுக்கும் விவாஹம் நடந்ததும் முடிகிறது. சூரியை, சூரியனின் (ஸவிதாவின்) மகள். ஸோமன் நட்சத்திரங்களின் நடுவே இருக்கிறான். ஸோமன் என்பது பிராந்தியோ, விஸ்கியோ? திருமண நாளில் யாரும் ஸோமனைக் குடிப்பது இல்லையாம். அஸ்வினிகள் மாப்பிள்ளைத் தோழர்களாம். தெய்வத் திருமணத்திற்கு எல்லாத்தேவர்களும் வாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். “தஸாஸ்யம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி” என்று வாழ்த்துகிறார்கள். இந்திரனே, மணமகளுக்கும் பத்துப் பிள்ளைகளை அளித்திடு. அவளின் கணவனை அவள் பதினொன்றாம் மகனாக ஆக்கிக் கொள்வான் என வாழ்த்துகிறார்கள். பத்தும் புதல்வர்களாம். புதல்வியே வேண்டாமாம். என்ன புத்தி! ஆண் ஆதிக்க ஆரியச் சமுதாயப் புத்தி!
10552 பாடல்களிலும் ஒரே விதமான செய்திகள்தான். சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு... பாடியவனுக்குச் சலிப்பு தட்டவில்லை. படிக்கும் நமக்குத்தான்...
ரிக் வேதத்திற்கான உபநிஷத், அய்தரேய உபநிஷத் என்பதாம். உலகப் படைப்பு பற்றி இந்த உபநிஷத் பேசுகிறதாம். உலகம் படைக்கப்பட்டதா? உருவானதா? மதவாதிகளும், மதநூல்களும் மட்டுமே படைப்பு என்கின்றன. அறிவியலோ, பரிணாமம் என்கிறது. எண்பித்திருக்கிறது. இந்த உபநிஷத் ஒரேயடியாக நான்கு லோகங்கள் படைக்கப்பட்டதாகப் புளுகுகிறது. 1) அம்பலோகம் - சொர்க்கத்திற்கு மேலே உள்ளதாம். 2) மரீசிலோகம் - ஒளி நிறைந்த இடைவெளியாம். மரீசிகா என்றால் கானல் நீர். 3) மர அல்லது மர்த்ய லோகம் - பூமியைக் குறிப்பது 4) ஆபலோகம் - பூமிக்குக் கீழே உள்ளதாம்.
கடவுள் பிரம்மதேவனைப் பற்றி நினைத்ததாம். பிரம்மதேவனின் வாய் முட்டை பிளப்பது போலப் பிளந்ததாம். வாயிலிருந்து பேச்சு வந்ததாம். அதிலிருந்து நெருப்பு வந்ததாம். மூக்கு தோன்றியதாம் மூக்குத் துவாரங்களிலிருந்து மூச்சு வந்ததாம். மூச்சிலிருந்து காற்று தோன்றியதாம். கண்கள் தோன்றின. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினானாம். காதுகள் தோன்றின. திசைகள் தோன்றின. தோல் உண்டாகியது. தோல் பிளந்து, மயிர்கள் தோன்றின. மயிரிலிருந்து செடி, கொடிகளும் மரங்களும் இதயத்தில் துவாரங்களும் உண்டாயின. இதயத்திலிருந்து மனம் என்ற தனியான பகுதி உருவாகியதாம். (மனம் என்பதற்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை. மூளையின் செயல்பாடுகளே மனம் என்கிறது அறிவியல்) மனத்திலிருந்து சந்திரன் தோன்றியதாம். தொப்புள் தோன்றியதாம். அதிலிருந்து அபானன், அபானனிலிருந்து மரணம் தோன்றியதாம். குறி தோன்றியதாம். பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்துவிலிருந்து தண்ணீரும் உண்டாயிற்றாம். உபநிஷத்தின் உடற்கூறு வினோதமாக உள்ளதே! மருத்துவ அறிவியலுக்கும் விரோதமாக உள்ளதே!
மனித உடம்பு 11 வாசல்களை உடையதாம். கண்கள் 2, காதுகள் 2, நாசித்துளைகள் 2, வாய், தொப்புள், குறி, குதம, பிரம்மரந்திரம் என்பவையாம். இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறதாம். அதன் வழியே ஆவியை விடுபவன், மரணமற்ற நிலையை அடைகிறானாம். வேறு வழிகளில் இறப்பவன் மறுபிறவியை அடைகிறானாம். ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியே உயிரை வெளியேற்ற முடியுமாம்.
கருவில் இருக்கும் குழந்தைக்கு இறையுணர்வு அதிகமாம். கருப்பையிலிருந்து வெளியே வந்து க்வ, க்வ, க்வ என்று அழுகிறது. சமஸ்கிருதத்தில் க்வ என்றால் எங்கே என்று பொருளாம். பூமிக்கு வந்ததும் குழந்தை கடவுளை எங்கே என்று தேடுகிறதாம். முட்டாள் தனமான உளறல், அல்லவா?
இதுதான் ரிக் வேதம்.
யஜூர் வேதம்
ஒன்றாக இருந்தாதாம். பின் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாம். க்ருஷ்ண யஜூர், சுக்ல யஜூர் என இரண்டாக உள்ளது. யஜூர் வேதம் 101 கிளைகளை உடையதாம். இப்போது 56 மட்டுமே உள்ளன. மீதி அழிந்து விட்டனவாம். அழிவது எப்படி வேதம் ஆகும்? 56 சாகை (கிளை)கள் அக்னிவேசம் தொடங்கி வைதேயம் முடிய 15 சாகைகள் சுக்ல (வெள்ளை) யஜூரிலும் உள்ளன. க்ருஷ்ண யஜூருக்கு 32 உபநிஷத்களாம். சக்ல யஜூருக்கு 17 மட்டுமே. கிருஷ்ண யஜூர் தென்னாட்டில் பிரபலம் - வட நாட்டில் சுக்ல யஜூர் வேதத்திற்கே மவுசு.
க்ருஷ்ண யஜூர் மந்த்ரங்களுக்கு தைத்திரீய சம்ஹிதை எனவும் பெயராம். ஸம்ஹிதை என்றால் மந்திரங்களின் கூட்டங்களாம். யஜூர் வேதத்தில் அக்னி, இந்திரன், சூரியன், விஷ்ணு, சோமன், மருத்துக்கள், புவி, ஜலம், உஷை, வருணன், சந்திரன், சூத்திரன், ஸரஸ்வதி முதலியவை முதன்மை தேவர்களாம்.
யாகம் போலவே மானுட வாழ்க்கையாம். முதல் வருஷம் காலை யாகமாம். அடுத்த 44 யாகங்கள் பகல் யாகங்களாம். மீதி 48 வருஷங்கள் மாலை யாகங்களாம். 93 வருஷங்கள் மட்டுமே மனித ஆயுள் எனப் பொருளா? விளக்கம் இல்லை வேதத்தில் சோமயாகம் என்றால் சோம அமுதத்தை நாடுவதாம். சோமபானம் தயாரித்துக் குடித்தலா? செல்வத்தை நாடிச் செய்யப்படுவது வாஜபேயம் என்பதாம். இதைச் செய்பவன் வாஜபேயி எனப்படுவான்.
ஆட்சி அதிகாரம் பெற்றிடச் செய்வது ராஜசூயம். படைப்பின் அற்புதங்களை அறிய விரும்பிச் செய்யப்படுவது புருஷமேதம். அனைத்தையும் அறிய விரும்புவது சர்வமேதம். தோற்றவன் மீண்டும் வெற்றி பெற்றிடச் செய்வது சவுத்திரமணி.
பலவாறாக ஆவதற்குச் செய்பவை பிரவர்க்கியம் எனப்படுமாம். அஸ்வமேதம் என்பது அகண்ட ஞானத்தைச் சுட்டும். வேத வாழ்க்கையின் ரகஸ்யத்தைச் சொல்லும். காயத்ரி மந்த்ரம் என்பது ஒளிக்கடவுளாம். இதனால் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லையாம். இதனை அய்ந்து பகுதிகளாக, இடையில் நான்கு முறை நிறுத்தி ஜெபிக்க வேண்டுமாம்.
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் ஸவிதுர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந பிரசோதயாத்
என்று ஜெபிக்க வேண்டுமாம். சூரிய உதயத்திற்கு முன்பும், உச்சி சூரியன் உள்ள நடுப்பகலிலும், சூரியன் மறையும் மாலையிலும் ஜெபிப்பது நல்லது. தினமும் 108 முறையாவது ஜெபிக்க வேண்டுமாம்.
புருஷன் என்றால் கடவுள். புருஷசூக்தம் என்றால், கடவுளின் மகிமையைப் பாடுதலாம். கோயில், வீட்டில், தினசரி வழிபாட்டில், தினசரி பாராயணத்தில், வைதீகச் சடங்குகளில், தினசரி கர்மங்களில் எல்லாம் புருஷ சூக்தம் சொல்லப்படுகிறது. பொருள் இதுதான். கடவுளுக்கு ஆயிரக்கணக்கான தலைகள். ஆயிரக்கணக்கான கண்கள். ஆயிரக்கணக்கான பாதங்கள். அது பூமியெங்கும் வியாபித்துப் பத்து அங்குல அளவில் நிற்கிறதாம். அதன் முக்கால் பங்கு மேலே விளங்குகிறதாம். கால் பங்கு மட்டுமே இப்பிரபஞ்சமாம். யாகத்தில் பலியிடப்பட்ட பிரம்மாவின் முகம் பார்ப்பனனாக ஆயிற்றாம். கைகள் சத்திரியனாகவும் தொடைகள் வைசியர்களாகவும் ஆயினவாம். பாதங்களிலிருந்து மற்றவர்கள் தோன்றினராம். ரிக்வேத புருஷ சூக்தம் போலவே மஜூர் வேத சூக்தமும் உள்ளது.
வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் மகாலட்சுமியின் துதிகளின் தொகுப்பையே சிறீஸக்தம் என்கிறார்கள். வடநாட்டில் இதற்கு மரியாதை கிடையாது. தெற்கே மட்டும் தானாம். ஏன் இந்தப் பாகுபாடு? விளக்கம் இல்லை.
தொடரும்....
வெள்ளி, 23 ஏப்ரல், 2021
சாமி கைவல்யம்
Unmaionline -> 2019 -> ஆகஸ்ட் 16-31 2019
பிறந்த நாள்: 22.8.1877
1877இல் கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் இயற்பெயர் பொன்னுசாமி. இவர்களின் முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருமுறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. கைவல்யம் என்ற வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் கைவல்யம் என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.
அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும் நாடு பூராவும் சுற்றித் திரிவார்.
தந்தை பெரியார் அவர்களின் நண்பர் ஆனது இயல்புதானே! தொடக்கத்தில் தர்க்கத்தில் ஆரம்பித்து பின்னர் இணை பிரியாக் கொள்கைக் கயிற்றால் இணைந்து நண்பர்கள் ஆனார்கள். ‘குடிஅரசி’ல் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.
கைவல்யம் வருகிறார் என்றால், சாமியார்கள் ஆட்டம் கண்டு போய்விடுவார்களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்துவிடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.
பசு_புனிதமா?! மற்றும் வேத விளக்கம்
வியாழன், 22 ஏப்ரல், 2021
ந.சி.கந்தையாபிள்ளை வேதம் பற்றி
ந.சி. கந்தையா பிள்ளை வரலாறு அறிந்த பெருமக்களால் வானளாவப் புகழப்பட்டவர்; தமிழ், ஆங்கிலப் புலமை மிக்கவர்!
பத்துப்பாட்டு வசனம், பரிபாடல் வசனம், கலித்தொகை வசனம், கலிங்கத்துப் பரணி வசனம் தொடங்கி பல்வேறு ஆய்வு நூல்களை யாத்தவர். பிறந்தது யாழ்பாணத்தைச் சேர்ந்த கந்தரோடை (1893-1967).
தமிழ்க்கடல் மறைமலை அடிகளால் கவரப்பட்டவர். மலேசியாவில் பணியாற்றி தமிழ்நாடும் வந்து தங்கி பல நூல்களை எழுதியவர்.
‘ஆரிய வேதங்கள்' எனும் 64 பக்கங்களைக் கொண்ட நூல் முத்தமிழ் நிலையத்தால் 1947 இல் பதிப்பிக்கப்பட்டது.
அந்நூலிலிருந்து இதோ:
(பக்கம் 45-47)
‘‘வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித்தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்ததென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு. செம்மறியாடு, பசுக்கள், எருமை கள் யாகங்களிற் கொல்லப்பட்டன. அக்கினி, பசுக்களைப் புசிப்பவன் என்று வேதம் கூறுகின்றது. பாரத்துவாசர் தனக்கு உணவு வேண்டுமென்று இந்திரனைத் துதித்தார். அவன் உணவில் பசு முதன்மையுடையது. முக்கியமான விருந்து வந்தால், பெரியமாடு அல்லது பெரிய ஆட்டைக் கொல்லும்படி சதபதத் பிரமாணங் கூறுகின்றது. அரசன் அல்லது பெருமகன் ஒருவன் விருந்தாக வந்தால், பெரிய எருதை அல்லது மலட்டுப் பசுவைக் கொல்லவேண்டுமெனவும் அந்நூல் கூறியுள்ளது.
இந்திரனுக்கு எருதுகள் பலி யிடப்பட்டன. சமைக்கப்பட்ட மாட்டு இறைச்சியில் இந்திர னுக்கு மகிழ்ச்சி உண்டு. எரு மைகளும் அவனுக்குப் பலியி டப்பட்டன. அவைகளின் இறைச்சியைச் சமைத்து இந்திரனுக்குப் படைத்தபின், வழிபடுவோர் அதனை உண்டனர். சில சமயங்களில் முந்நூறு எருமைகளுக்குமேல் பலியிடப்பட்டன. ஒருவர் இறந்தால் உடலைக் கொளுத்துவதன் முன் பசுவைக் கொன்று அதன் இறைச்சியால் அது மூடப்பட்டது. குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர். இறைச்சியை விற்பனை செய்யும் கடைகளும் இருந்தன. பாரதம், நாளொன்றுக்கு 2000 பசுக்களைக் கொன்று பலருக்கு விருந்து அளித்து வந்த இரந்தி தேவரைப் பற்றிக் கூறுகின்றது! புத்தர் தோன்றித் கொல்லாமையைக் கடியும் வரையில் ஊன் உணவு கொள்ளும் வழக்கு, வடநாட்டவர் எல்லோரிடையும் இருந்து வந்தது. வேதகால ஆரியர், மாட்டு மாமிசம் உண்ணுதல் இழிவு என்று கருதவில்லை. இருக்கு வேத காலத்தின் கடைப்பகுதியில் பசு, எருதுகளைப் பலியிடுவதைப் பற்றி வெறுப்பு உண்டாயிருந்தது.
ஆரியர் இவ்வாறு செய்யும் யாகங்களுக்கு அசுரர் எதிராக இருந்து வந்தனர். அவர்கள் அவ்வகை யாகங்களை வலிமையால் தடை செய்ய முயன்று வந்தார்கள். யூபத்தில் மிருகங்கள் கட்டப்பட்டதும், அசுரர் அதனை நோக்கி வந்தார்கள். ஆரியர் யாகச்சாலையைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக மதில்போல நெருப்பை வளர்த்து, அசுரரை அணுக முடியாமற் செய்தனர். இராவணனாதியோரும். ஆரிய முனிவர்கள் செய்யும் யாகங்களை அழித்து வந்தார்கள் என இராமாயணத்திற் படிக்கிறோம்.''
கோமாதா புத்திரர்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்களாம்?
- மயிலாடன்
சனி, 17 ஏப்ரல், 2021
வேதங்கள் - பேதங்கள் -1
சு.அறிவுக்கரசு
வேதங்களின் மூலம் உலகை அறிந்தவர்கள் எனப்படும் சிலர் தெரிவித்தவை உப அங்கங்கள் எனப்படுகின்றன. இவற்றையே இந்தியத் தத்துவங்கள் எனச்சிலர் கூறு கின்றனர். அவை, சாங்க்யம், யோகம், மீமாம்சம், வேதாந் தம், நியாயம், வைசேஷிகம் என ஆறு தலைப்புகளில் உள்ளன. கபிலர் என்பாரின் கருத்தே சாங்க்யம் எனப்படு கிறது. கடவுளைப் பற்றியே சாங்க்யம் பேசவில்லை. அதே போல, கடவுளைப் பற்றிப் பேசாத பவுத்தம் சார்ந்தவர் எனவும் கூறலாம். சாக்கிய முனி என்பவர் புத்தர்.
யோகம் என்பது உடற்பயிற்சி முறையே - இதனை பதஞ்சலி என்பவர் கூறியதாகவும் வியாசன் உள்பட பலர் விரிவுரை எழுதியுள்ளதாகவும் கூறுகின்றனர். நான்கு பாகங்களாக 194 சூத்திரங்களாக உள்ளதாம்.
மீமாம்சம் என்பது இரண்டு வகை - பூர்வ மீமாம்சம், உத்திர மீமாம்சம். பூர்வ மீமாம்சம் என்பது ஜைமினியினு டையது. இது 12 காண்டங்கள், 60 அத்தியாயங்கள் கொண்டது.
வேதாந்தம் என்பது வேதங்களின் முடிவு எனப்பொருள் படும். இதை எழுதியது வியாசன். நான்கு அத்தியாயங்கள், ஒவ்வொன்றிலும் நான்கு பாதங்கள், ஒவ்வொன்றிலும் அனேக சூத்திரங்கள் என்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்து 58 ஆயிரத்து 191 சூத்திரங்களாம். (ஒன்றும் விளங்காம«லே இருப்பதன் பெயர் வேதாந்தம் என்றார் கவிஞர் கண்ண தாசன்), இதற்கு (ஆதி) சங்கரனும் ராமானுஜனும் உரை எழுதியுள்ளனராம். எல்லாம் அறிந்த பிறகு பிரம்மத்தை அறிய வேண்டும் என்கிறது வேதாந்தம். (அதாதோ பிரம்ம ஜிக்ஞாயச) “சாதாரண சப்த விசேஷரத்” (சாதாரண சப்தத்தின்படி வைசுவாநரன் என்பது பரமாத்மா (கடவுள்)வின் பெயராம். மனிதர்கள் ஜீவாத்மா, கடவுள் பரமாத்மா. அதனை வைசுவாநரன் என்கிறது வேதாந்தம்.
கவுதமன் என்பார் கூறியது நியாயம். இந்நூல் 537 சூத்திரங்கள் கொண்டது. பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், உதாரணம், சித்தாந்தம், அவயவம், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வபாஸம், தந்திரம், ஜோதி, நிக்ரஹஸ்தானம் என்கிற 16 வழிகளைக் கைக்கொண்டு உண்மை, பொய்யை அறிய வேண்டுமாம். வழக்கு மன்றங்களை நியாயஸ்தலம் என்றுதான் சொல் கிறார்கள்.
வைசேஷிகம் என்றால், உலகப் பொருள்களை எல்லாம் பிரித்து, ஆய்ந்து, குணங்களை அறிவிப்பதாம். கணாத முனிவரால் 373 சூத்திரங்களில் எழுதப்பட்டது.
ரிக் வேதத்திலிருந்து ஆயுர்வேதம், யஜூர்வேதத்திலி ருந்து தனுர் (வில்) வேதம், சாமவேதத்திலிருந்து கானம் (இசை) அதர்வணத்திலிருந்து அர்த்தவேதம் போன்றவை யும் உண்டாம்.
வேதத்தை நன்றாக அறிந்து கொள்ள பிரதி சாக்கியத்தை அறிவது அவசியமாம். அதைவேதவியாகரணம் என்கிறார் கள். இலக்கணம்தான் வியாகரணம் என்பர். ரிக்வேத சாக்கியம் பார்ஷத சூத்திரம் என்று பெயர். எழுதியவன் சவுனக ரிஷியாம். சுக்லயாஜூர் வேதத்தின் பிரதிசாக்கியம் எழுதியது காத்தியாயனன். சாம வேதத்திற்கான பிரதிசாக் கியம் புஷ்ப சூத்தரிம். இதை எழுதியவர் புஷ்ப ரிஷி, அதர்வணத்திற்கு பிரதி சாக்கியம் இல்லையாம்.
“அக்னி மிளே புரோகிதம் யக்ஞஸ்ய தேவமிருத் விஜம்“ என்பது ரிக்வேதத்தின் முதல் வரியாம். இதன் பொருள், புரோகிதனான நான் யக்ஞதேவ அக்னியை நமஸ்கரிக் கிறேன் என்பதாம். ஆரியர் சடங்கில் நெருப்புக்குத்தான் முதலிடம். எதையும் பொசுக்கும் அல்லவா?
முதல் வரியை பதம்பதமாகப் பிரித்துச் சொல்ல வேண் டுமாம். அக்னிம் ஈனே, புர.ஹிதம் யக்ஞஸ்ய, தேவம், ரிக்விஜம் எனக் கூறவேண்டுமாம். சவுனக ரிஷி என்பான் கூற்றுப்படி இளமையுடன் பலம் உள்ளவர்களால்தான் வேதம் படிக்க முடியுமாம். தமிழ் போல் அல்லாது சமஸ் கிருதத்தை அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டும். பிரம்மசாரியாய் மித வாழ்க்கை உள்ளவனுக்கு வலு இருப்ப தால் அவனால்தான் வேதமந்த்ரங்களை ஓதவும் சொல்ல வும் முடியுமாம்.
வேதம் படித்துப் பண்டிதைகளாகப் பெண்கள் 24 பேர் வேதகாலத்தில் இருந்தார்களாம். பிறகு ஏன் பிற்காலப் பெண்கள் படிக்கத் தடை செய்யப்பட்டனர் என்ற கேள்வி எழுகிறது. பதில் சொல்ல ஆள் இல்லை.
ஆரியர்களின் வாழ்க்கையில் செய்தே தீரவேண்டிய சடங்குகள் (ஸம்ஸ்காரங்கள்) மொத்தம் 16 ஆகும். கர்ப்ப தானம், பும்சவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், சூடா கர்ணம், நிஷ்கிரமணம், அன்னப்பிராசனம், கர்ணபேதம், உபநயனம், வேதாரம்பம், சமாவர்த்தனம், விவாஹம், வானப்பிரஸ்தம், சன்னியாஸம், அந்தியேஷ்டி ஆகியவை யாம். இவை பார்ப்பனர்க்கு மட்டுமே உரியவை.
மேலை நாட்டுக்காரர் ஒருவர் (வில்லியம் ஆர்ச்சர்) கூறியவாறு வேதங்கள் இந்தியர்களின் கலாச்சாரக் காட்டு மிராண்டித் தனத்தின் அடையாளம் “என்று சரியாய்த்தான் சொல்லியிருக்கிறார் என்பதை இவர்களின் யக்ஞங்கள் (யாகங்கள்) ஸம்ஸ்காரங்கள் மூலம் நிரூபணமாகின்றது. பார்ப்பனர்களே ஒத்துக்கொண்டவாறு,” ரிக் வேதத்தின் முக்கியத்வம் பல காலங்களுக்கு முன்பே ஓரம் கட்டப்பட்டு விட்டதாம். சம்ஹிதை என்ற பெயரில் துக்கடா மந்திரங் களின் தொகுப்பு மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார்கள்.
இதிஹாசங்களும் புராணங்களும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரிந்து கொள்வதற்காக எழுதப்பட்டன என்கிறார் கள். ஆனால் அவை, ஒரு குறிப்பிட்ட அளவு ரிக் வேதத்தின் வைதீக மதம், தத்துவங்கள், கலாச்சாரம் ஆகியவைகளை அழித்துவிட்டன என்கிற கருத்தும் உள்ளது. (வடுவூர் நாராயணன் எழுதிய “வேதங்களும் உபநிஷதங்களும்“ நூல் - பக்கம் 55) ரிக் வேத மொழியான (பழைய) ஸம்ஸ் கிருதம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சொற்களைக் கொண்டதாம். ஆரியரல்லாத மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லையாம். கர்மாக்களிலும் கடவுளிட மும் பற்றில்லாதவர்கள் இதிஹாஸக்காரர்களின் ரிக் வேதத் துடன் உள்ள தொடர்பை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையாம். அதே சமயம், இதிஹாஸக்காரர்களின் விளக்கங்களை ஏற்க ரிக்வேதம் தயாரில்லையாம். வேதங் களின் அடிப்படை நோக்கம் அறியாமை இருளை அகற்று வதாம். ரிக்வேதக் கடவுள்கள் எல்லாமே சுத்த சுயம் பிரகாச மானவையாம். ரிக் வேதத்திற்கான விளக்கங்கள் வேதத் தின் அறிவுசார்ந்த விளக்கங்களை அழித்துவிடுகின்றன வாம் (எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் என்பது இது தானோ?)
ரிக் வேதத்தின் ஏழாம்பகுதி புருஷசூக்தம். அதன்படி பிரபஞ்சம் முழுமைக்கும் ஒரே கடவுள். பரம புருஷன் என்றும் பெயராம். அதற்கு ஆயிரம் தலைகள். (ஸகஸ்ர சீருஷ புருஷ) இதற்குத்தான் யாகங்களில் உயிர்ப்பலி தரப்படுகிறது. மக்களின் மொழியில் வேதம் இல்லாததால், பரவவில்லை. அதே வேளையில் கவுதம புத்தர் மக்களின் மொழியான பாலி மொழியில் பேசியதால் மக்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றதாம். புத்தர் கடவுள் என்பதை மறுக்கவுமில்லை, ஆதரிக்கவுமில்லை. என்றாலும் மக்கள் அவரைப் பின்பற்றினர். வேதத்தைப் படிக்கவில்லை. புறக் கணித்தனர். அதைவிட முக்கியமான காரணி என்ன வென்றால், ரிக் வேதப்பாடல்களில் கருத்து ஒற்றுமை இல்லை, பல ரிஷிகள், பல்வேறு காலங்களில் எழுதியவை கதம்பமாகக் கட்டப்பட்டுக் காட்சி அளிப்பதால் முரண் பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது என்று பார்ப்பனர் சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
ரிக் வேதத்தில் 8 அஷ்டகங்கள், 10 மண்டலங்கள், 64 அத்யாயங்கள், 85 அனுவாகங்கள், 1017 சூக்தங்கள், 2024 வர்க்கங்கள் 10647 ரிக்குகள், (பாடல்கள்) உள்ளன. கடவுளை அறிமுகப்படுத்துபவை ‘ருக்‘. பல ருக்குகளைக் கொண்டது சூக்தம். ஒரு சூக்தத்தில் ஒரு தேவனோ அல்லது பல தேவர் களோ இருக்குமாம். இந்த சூக்தங்களுக்கு ஒரு ரிஷியாம். அவருக்குத்தான் சூக்தத்தின் பொருள் தெரியுமாம்.
ஆனால் அவன் சொல்லமாட்டானாம். ஒரு ஈசன் உண்டு என்று எல்லா ரிஷிகளும் சொல்கிறார்கள். (பதிரேக ஆசித்) ஒருவனே தேவன். அவன்தான் பரபிரம்மம் என்கிறது ரிக்வேதம் “ஒருவனே தேவன்” என்று திருமூலன் கூடச் சொல்லியிருக்கிறான், யார் அந்தத் தேவன்? எது அந் தத் தேவன்? மும்மூர்த்திகள் என்கிறார்களே, அவையா? சிவனா? விஷ்ணுவா? பிரம்மனா? எவன்? ஒன்று மட்டும் தெரிகிறது. சிவன் எனும் கடவுள் ரிக்வேதகாலத்தில் இல் லவே இல்லை, அது புதுச்சரக்கு என்பது. ரிக் வேதம் முழு வதும் அக்னியும் இந்திரனும் மட்டுமே பேசப்படுகின்றன. அக்னி என்றால் நெருப்பு. இந்திரன் என்றால் தேவர்களின் தலைவன். தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்படுபவன். அதனால் அடிக்கடி மாறுபவன், ஆனால் எவன் இந்திரனாக வந்தாலும், அவனுக்கு மனைவியாக இந்திராணி இருப் பாள். எவ்வளவு ஒழுக்கம் பாருங்கள். புகழ் பெற்ற ரிக்வேத கால ஒழுக்கம் பாருங்கள்.
(தொடரும்)
செவ்வாய், 23 மார்ச், 2021
ஒழுக்கக் கேடான திருமண மந்திரங்கள்
வெள்ளி, 12 மார்ச், 2021
மனுதர்ம சாஸ்திரமும் யாகமும்
மனுதர்ம சாஸ்திரமும் யாகமும்
மனுதர்ம சாஸ்திரம் என்கிற நூல் பார்ப்பனர் உயர்வுக்காகவும் மற்றவர் அதாவது திராவிடர் தாழ்வுக்காகவும் ஒரு சில பார்ப்பனர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டதாகும். பொதுவாக எந்தவொரு நூலும் மக்களுக்கு நல்லொழுக்கம் போதிப்பதற்காக எழுதப்பட்டதைக் காணலாம். உதாரணமாக திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற இலக்கியங்களாகும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துகள் எல்லா நாட்டினர், எல்லா மதத்தினருக்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகும்.
ஆனால், மனுதர்ம சாஸ்திரம் பார்ப்பனர் உயர்வுக்காக மட்டும் எழுதப்பட்டது என்பதை அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள ஒவ்வொரு சுலோகத்தின் மூலமும் அறியலாம். பொதுவாக எல்லா நாட்டினரும் எல்லா மதத்தினரும் நல்லொழுக்கம், பொய் சொல்லாமை, களவு/திருட்டு செய்யாமை/ போன்ற சமூக தீய செயல் செய்யாமையை வற்புறுத்துவர். (ஆனால் நடைமுறை வேறு).
திருட்டு என்பது பிறர் பொருளை உடையவருக்குத் தெரியாமல் எடுப்பதாகும். ஆனால், கொள்ளை என்பது பிறர் பொருளை உடையவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ பலாத்காரமாக கவருவதாகும். மனுதர்ம சாஸ்திரத்தில் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக பிற வர்ணத்தாரிடம் திருட்டு, கொள்ளை போன்றவை செய்யலாம் என்று பார்ப்பனர்களுக்கு மட்டும் உரிமை (Licence) வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் சில:
மனுதர்ம சாஸ்திரம்: 11 ஆவது அத்தியாயம் சுலோகம் 12 அதிக பசு முதலியவற்றால் செல்வமுடையவனாயும் யாகம் செய்யாதவனாயும் சோமபானம் பண்ணாதவனாயும் இருக்கிற வைசியன் வீட்டிலிருந்து கேட்டுக் கொடாவிடில் வலிமை செய்தாவது, களவு செய்தாவது அந்த யாகத்திற்கு வேண்டிய திரவியத்தை யாகம் செய்வோன் கொண்டு வரலாம். (இதில் யாகம் செய்யாதவன் என்றால் சுயமரியாதைக்காரன். சோமபானம் பண்ணாதவன் என்றால் மது அருந்தாதவன். அதாவது எவ்விதத் தீயொழுக்கம் இல்லாத வைசியன் வீட்டில் பார்ப்பனன் கொள்ளை அடிக்கலாம் என்பதாகும்.)
சுலோகம் 13: அவ்வித வைசியனில்லாவிடில் யாகத்திற்கு இரண்டு மூன்று அல்லது அதிக அங்கங்குறைந்தாலும் செல்வமுள்ள சூத்திரன் வீட்டிலிருந்து யதேஷ்டமாக யோசனையின்றி கேளாமலும் வலிமையினால் கொண்டு வரலாம். ஏனென்றால், அவனுக்கு ஒரு யாகத்திலும் சம்பந்தமில்லை அல்லவா. (அதாவது யாகத்திற்கும் சூத்திரனுக்கும் /திராவிடனுக்கும் சம்பந்தமில்லை என்று ஒப்புக் கொண்டபோதும் பார்ப்பனன் யாகம் செய்வதற்காக உடல் ஊனமுற்றவனாக சூத்திரன் இருந்தாலும் அவனைக் கேட்காமல் அவன் வீட்டில் கொள்ளை அடிக்கலாம்.)
சுலோகம் 15: மேற்சொல்லிய யாகத்திற்காக வேண்டிய பொருளைக் கேட்டும் கொடாவிடில் வலிமை செய்தாவது களவு செய்தாவது அவன் வீட்டிலிருந்து கொண்டு வரலாம். இப்படிச் செய்தால் தருமம் வளரும்.
சுலோகம் 16: தான தருமம் செய்யாதவனிடத்தினின்றும் ஒரு தினத்திற்கு போதுமான பொருளைக் களவு செய்தாவது கொண்டு வரலாம்.
சுலோகம் 17: யாகம் செய்யாதவன் தானியம், களம், கழனி, வீடு இவற்றுள் எவ்விடத்தில் அகப்படுகிறதோ, அவ்விடத்தினின்றும் எடுத்துக் கொள்ளலாம். உடையவன் ஏன் திருடினாய் என்று கேட்டால் தான் செய்யும் யாகாதி தருமகாரியத்தை அவனுக்குச் சொல்ல வேண்டும்.
சுலோகம் 18: சத்திரியனுக்கு இவ்வித ஆபத்து நேரிட்டாலும் அவன் ஒருபோதும் பிராமணன் பொருளை அபகரிக்கக்கூடாது. (ஆக சத்திரியன் யாகம் செய்ய பிராமணன் தவிர்த்து மற்ற வர்ணத்தாரிடம் கொள்ளையடிக்கலாம்).
சுலோகம் 19: தான் யாகம் செய்யாமலிருந்தாலும் அவன் யாக முதலிய தருமஞ் செய்யாத அசத்தனிடத்திலிருந்த பொருளை வாங்கியாவது அபகரித்தாவது யாகம் செய்கிற சத்புருஷாளுக்கு பொருள்காரனையும் யாகம் செய்கிறவனையும் கரையேற்றி வைக்கிறான். (அதாவது பார்ப்பன புரோகிதன் பயன் அடைகிறான்.)
யாகம் என்பது பார்ப்பனரின் சுயநலத்திற்காகவும் உயர்வுக்காகவும் மட்டும் நடத்தப்படுகிறது என்பது தெரிந்தோ தெரியாமலோ அடுத்த இரண்டு சுலோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சுலோகம் 21: தரும சிந்தையுள்ள அரசன் இவ்விதமாக திருடி வந்து யாக காரியஞ் செய்கிற பிராமணனைத் தண்டிக்கக்கூடாது. அரசன் மூடத்தன்மையால் பிராமணன் பசியினால் துன்பத்தை அடைகிறான்.
சுலோகம் 22: ஆதலால் அரசன் அந்தப் பிராமணன் குடும்பத்தையும் தரும நடையையும் அவன் ஓதின வேதத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்து தன் அரண்மனையிலிருந்து அவனுக்குப் போதுமான ஜீவனவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
இதிலிருந்து அறியப்படுவது 1) யாகம் என்பது புரட்டு. அது மக்களின் நன்மைக்காகச் செய்யப்படுவதல்ல.
2) யாகம் என்பது பார்ப்பனரின் சுயநலத்திற்காகச் செய்யப்படுவதாகும்.
3) யாகத்தின் பேரால் பார்ப்பனர் பிறவர்ணத்தார் பொருள்களையும் சொத்துகளையும் திருடவோ கொள்ளையடிக்கவோ செய்யலாம்.
4) அரசன் (தற்பொழுது ஆட்சியாளர்) பார்ப்பனர் யாகத்தின் பேரால் செய்யும் திருட்டு, கொள்ளை போன்றவற்றைக் கண்டு கொள்ளக்கூடாது பார்ப்பானைத் தண்டிக்கக்கூடாது.
5) அரசன் (ஆட்சியாளர்) மூடத்தனத்தினால் பார்ப்பனர் பசியினால் துன்பத்தையடைகிறான். எனவே, பார்ப்பனன் பசியைப் போக்க அவன் யாகம் செய்கிறான்.
சமீப காலங்களில் அவ்வப்பொழுது பார்ப்பனர் மழை வேண்டியும், உலக ஷேமத்திற்காகவும் அதாவது உலக நன்மைக்காகவும் யாகம் செய்வதாகவும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதன் உண்மை நம்மவர்களுக்கு இப்பொழுது புரியும் என்று நம்புகிறேன்.
- ஆர்.டி. மூர்த்தி, புத்தூர்
சனி, 6 மார்ச், 2021
சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?
சொர்க்கத்திற்கு வந்தது எப்படி?
சொர்க்கலோகத்தில்... சோலை, விருந்து!
இவை எதையுமே கவனிக்காமல் புல் தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தினரின் தோள்பட்டையில் ஒரு மஞ்சள் நிறத் துண்டுத் துணி தொங்கிற்று. அதில் நீல வர்ணத்தில் குடியேறியவர் என்று குறிக்கப்பட்டிருந்தது. முகங்களைப் பார்க்கும்போது பூலோகவாசிகளே என்பது நன்றாகத் தெரிந்தது. ஆமாம்.... பூலோகவாசிகள்தான்! கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார், நந்தனார், சிறுத்தொண்டர்... இன்னும் எல்லோரும் இருந்தனர். அவர்கள் பேச்சு பெரிய விவாதமாக அமையவில்லை. ஆளுக்கு ஒரு வார்த்தை பேசினார்கள். அது அவர்கள் சொர்க்க லோகத்துக்கு வந்த விதத்தைப் பற்றி!
என்னுடைய இரண்டு கண்களையும் குத்திக் கொண்ட பிறகுதான் கடவுள் கருணை கிடைத்தது - கண்ணப்ப நாயனார்
என் குழந்தையைத் துண்டு போட்டுக் கறி சமைத்து, அதன் தலையை நானும் என் மனைவியுமே இடித்து துவையல் அரைத்து அன்னமிட்டேன். அதற்குப் பிறகுதான் சிவபெருமான் சித்தமிரங்கி என்னை ஆட்கொண்டார்
- சிறுத்தொண்டர்
அக்கினியிலே முழுகி தீட்டையெல்லாம் பொசுக்கிக் கொன்றுவிட்டு பொன்மேனியோடு வா என்று தீக்ஷிதர் கனவிலே தீனதயாபரன் சொல்லிவிட்டார். அந்தத் தியாகத்தை நான் செய்த பிறகுதான் தில்லையப்பனின் திருப்பாத தரிசனம் கிடைத்தது.
- நந்தனார்
உடலில் உள்ள சதைகளையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, ரத்தத்தை வடித்துவிட்டு, எலும்பு உருவமாக _ பேய் மாதிரி தலைகீழாக நடந்து வரச் சொன்னார் பீடுடைய பெருமான்! அந்தக் கஷ்டத்திற்கு ஆளான பிறகுதான் கைலாசபதி கடாக்ஷம் பாலித்தார்
- காரைக்கால் அம்மையார்
ஆலயங்களில் புல் செதுக்கினேன்; அந்தணராம் திருஞான சம்பந்தரின் பல்லக்குத் தூக்கினேன். அதையெல்லாம் செய்த பிறகுதான் அமரர் உலகம் வர அனுமதி கிடைத்தது, எனக்கு ! - அப்பர்
மனிதனுக்கு மானம் பெரிது; அந்த மானத்தை அடகுவைத்து, என் மனைவியை பரமசிவனோடு பள்ளியறைக்கு அனுப்பி வைத்தேன், அந்தத் தியாகத்தின் பரிசாகத்தான் இந்தப் பரமண்டல வாசத்தைப் பரமன் எனக்கு அளித்தார்
- இயற்பகை நாயனார்
என் முழங்கையைச் சந்தனக் கட்டைக்குப் பதிலாக தேய்த்து பகவத் பூசை பண்ணினேன். அதன் பலன்தான் எனக்குச் சொர்க்கலோகம்
- மூர்த்திநாயனார்
அப்பப்பா! இந்த லோகத்திற்கு வர எத்தனை பேரைக் கொலை செய்திருக்கிறேன் தெரியுமா? சிவனைத் தூஷித்தவர்களையெல்லாம் மழுவால் வதைத்துக் கொன்று போட்டேன். அந்தப் பிணங்களையெல்லாம் பிறை சூடும் பித்தரிடம் காட்டிய பிறகுதான் இந்தப் பேறு கிட்டியது! - எறிபத்த நாயனார்
சிவனுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைப் பஞ்ச காலத்தில் சாப்பிட்டார்கள் என்பதற்காக.... பக்தியின் காரணமாக என் தாய், தந்தை, என் ஆசை மனைவி மற்றும்... நெல்லைத் தின்ற தாயின் பாலைக் குடித்திருக்கும் என்பதற்காக... என் அன்புக் குழந்தை ஆகியோரைக் கொடுவாளால் வீசிக் கொலைபுரிந்தேன். அதன் பிறகுதான் என் குற்றத்தை மன்னித்து கொன்றையணி செஞ்சடையார் காட்சியளித்தார்
- கோட்புலி நாயனார்
இப்படிப் பக்தர்கள் தங்கள் தியாகங்களைக் கூறிப் பெருமிதங்கொண்டனர். பெருமூச்சு விட்டனர்.
அப்போது ஒரு திடீர்க் குரல் கேட்டு பேச வாயெடுத்த கண்ணப்பர் நிறுத்திவிட்டார். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். ஒரு வாலிபம் மறைந்த மங்கையின் தோளில் கைபோட்டபடி, ஒரு பூணூல்கார அய்யர் நின்றார். எல்லா பக்த சிரோன்மணிகளும் அவர் வாயைப் பார்த்தபடி இருந்தனர். அந்த அய்யர் பேசினார்; நீங்கள் எல்லாம் மோட்ச லோகம் வர பெரிய பெரிய தியாகம் செய்ததாகப் பெருமையடித்துக் கொள்கிறீர்களே, அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது.
சொர்க்கலோகம் வர, சொல்ல முடியாத தொல்லைகள் அனுபவித்ததாகச் சொல்கிறீர்களே. இதோ பாருங்கள், நான் எந்தவிதமான சிரமமும் இன்றி சிவலோகம் வந்திருக்கிறேன். (பக்தர்கள் ஆச்சரியத்தால் திகைத்து விட்டார்கள்)
ஆச்சரியப்படாதீர்கள் அன்பர்களே! இதோ என் மேல் சாய்ந்து கொண்டிருப்பது என் தாய்.
(கோட்புலி நாயனார் குறுக்கிட்டு) உமது தாயாரா?
ஆமாம் என் தாய்! என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், அழகுத் தொட்டிலில் இட்டு ஆராரோ பாடிய தாய். இந்தத் தாயாரை நான் என் தாரமாகக் கொண்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல; பூலோகத்திலேயே இந்த அன்னை என் ஆசை நாயகியாக இருந்தாள். இவள் என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டினாள். நான் இவளுக்குக் கட்டிலில் இன்பமூட்டினேன். மாதாவை மனைவி யாக்குவது மகாபாபமல்லவா என்பீர்கள். இதைவிட மகாபாபமாக எங்களை மஞ்சத்தில் கண்டுவிட்ட என் தகப்பனாரை உடனே கொன்று போட்டேன். உனக்கா சொர்க்கவாசல் திறந்தது என்று கேட்கிறீர்களா? ஆமாம்; எனக்குத்தான் சொர்க்கம் சுலபத்தில் வழிவிட்டது. அரகரமகாதேவா என்றேன். அம்மையை அணைத்தபடி அப்பன் ரிடபவாகன ரூபராய் அருள் மழை பொழிந்தான். ஆனந்தமாக சொர்க்க பூமிக்கு வந்துவிட்டேன்.
நாயன்மார்கள் ஸ்தம்பித்து விட்டார்கள். காரைக்கால் அம்மை, இது உண்மையா? என்றார்.
சந்தேகம் வேறா? அய்யமிருந்தால் திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலத்தைப் பாருங்கள் என்றார் அய்யர்.
பாபியாகிய உமக்கு மாத்திரம் இவ்வளவு சுலபத்தில் சொர்க்கலோக வாழ்வு கிடைக்கக் காரணம் என்ன? என்று கேட்டார் சிறுத்தொண்டர்.
இதுதான் காரணம் என்று தன் பூணூலை உருவிக் காட்டினார் அய்யர்.
(கலைஞரின் குட்டிக்கதைகள் என்னும் நூலிலிருந்து)
புதன், 3 மார்ச், 2021
மனுதர்மத்தில் மாமிசம்
மனுதர்மத்தில் மாமிசம்
மனுதர்ம சாத்திரம் மூன்றாவது அத்தியாயம் சுலோகம் 266 - இல் இறந்தவர்களுக்கு எந்தவிதமான திதி/தெவசம் செய்தால் இறந்தவர் எவ்வளவு காலம் திருப்தி அடைவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது பின்வருமாறு:
சுலோகம்
266 பிதுர்களுக்கு எவ்விதமாய் சிரார்த்தஞ் செய்தால் நெடுநாள் வரையிலும், எவ்விதமாகச் செய்தால் முடிவில்லாத காலம் வரையிலும், திருப்தியுண்டாகுமோ அது முழுமையுஞ் சொல்லுகிறேன்.
267. திலம் - செந்நெல்லரிசி, உளுந்து, ஜலம், கிழங்கு, பழம் இவைகளினால் சிரார்த்தம் செய்தால் மனிதர்களின் பிதுர்கள் ஒரு மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.
268. பாடீநசம் முதலிய மச்ச மாமிசத்தால் செய்தால் இரண்டு மாதம் வரையிலும், அரிணமென்கிற மான் மாமிசத்தால் செய்தால் மூன்று மாதம் வரையிலும் செம்மறியாட்டு மாமிசத்தால் செய்தால் நான்கு மாதம் வரையிலும் பட்சிகளின் மாமிசத்தால் செய்தால் அய்ந்து மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.
269. வெள்ளாட்டின் மாமிசத்தால் செய்தால் ஆறுமாதம் வரையிலும், புள்ளிமான் மாமிசத்தால் செய்தால் ஏழுமாதம் வரையிலும், கறுப்பு மான் மாமிசத்தால் செய்தால் எட்டு மாதம் வரையிலும் திருப்தி அடைகிறார்கள்.
270. முள்ளம்பன்றி காட்டெருமைக்கடா இவைகளின் மாமிசத்தால் செய்தால் பத்து மாதம் வரையிலும், முயல், ஆமை இவைகளின் மாமிசத்தால் செய்தால் பதினொரு மாதம் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.
271. வார்த்தீசனமென்னும் கிழவெள்ளாட்டுக்கிடாவின் மாமிசத்தால் செய்தால் பன்னிரெண்டு வருடம் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.
272. அந்தந்தக் காலத்திலுண்டான கறியமுது முள்ளுள்ள வாளை மச்சமும் கட்க மிருகமும் சிவந்த ஆடு இவைகளின் மாமிசங்களாலும் காட்டில் முளைத்திருக்கும் செந்நெல்லின் அரிசியினாலும் செய்தால் அளவற்ற நாள் வரையிலும் திருப்தியடைகிறார்கள்.
மேற்படி சுலோகங்கள் மூலமாகத் தெரியவருவது என்னவென்றால், மனுதர்ம சாத்திரமும், இதர வேதங்களும் காட்டுமிராண்டி காலத்தில் சில காட்டு மிராண்டிகளால் அன்றைய ஆரியர்களின் பழக்கவழக்கங்களைக் கொண்டு அன்றைய சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்டது என்று தெளிவாகிறது. பார்ப்பனர்கள் தென்னாட்டிற்கு_ தமிழ்நாட்டிற்கு வந்தபொழுது இங்குள்ள தமிழர்களின் சைவ உணவு வகைகளைத் தெரிந்து கொண்டு பிதுர்களுக்கு_இறந்து போன முன்னோர்களுக்கு சிரார்த்தம்/திதி/தெவசம் போன்றவை செய்யலாயினர். மனுவினால் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் மனுதர்ம சாத்திரத்தில் கண்டுள்ள மேற்படி சுலோகங்கள்படி பார்ப்பனர்கள் நடப்பதில்லை. மனுதர்ம சாத்திரம் பின் எப்பொழுதாவது திருத்தப்பட்டதாகவும், சொல்லப்படவில்லை.
இதிலிருந்து தெரிவது:-
1) பார்ப்பனர்கள் கூறுவது போல மனுதர்ம சாத்திரத்தை முக்காலும் உணர்ந்த ஞானியோ, கடவுளோ உண்டாக்கவில்லை என்பது தெளிவாகிறது.
2) அது எக்காலத்திற்கும் உகந்ததல்ல.
3) அது பார்ப்பனர்களாலேயே கடைப்பிடிக்க முடியாதது.
4. அய்யா பெரியார் சொன்னது போல், அது மனிதன் அறிவு வளர்ச்சி இல்லாமல் காட்டுமிராண்டியாய் இருந்த காலத்தில் ஒரு சில பார்ப்பனக் காட்டுமிராண்டிகளால் பார்ப்பனர் நன்மைக்கும் மேன்மைக்கும் ஏற்படுத்தப்பட்டதாகும்.
- ஆர்.டி.மூர்த்தி
திருச்சி-17
சபரிமலை அய்யப்பன் யார்?
சபரிமலை அய்யப்பன் யார்?
சபரிமலையில் இருப்பது அய்யானார்தான் என்ற அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியாரின் ஆதாரப்பூர்வக் கருத்தை, சென்ற இதழில் படித்திருப்பீர்கள். அய்யப்பனை சாஸ்தா என்று பக்தர்கள் அழைத்துவருகின்றனர். அந்த சாஸ்தா யார் என்பது பற்றியும், அது எப்படி அய்யனார் என்று மருவியது என்பது குறித்தும் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறும் செய்திகள் இந்த இதழில்...
சாத்தனார் \ அய்யனார்
சாத்தன், அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தா என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது அமரகோசம் நாமலிங்கானுசாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, சாஸ்தா என்னும் சொல்லின் திரிபாகிய சாத்தன் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிய வருகின்றது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் சாத்தனார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் சிலப்பதிகாரக் கதைத் தலைவனுடைய தந்தை மாசாத்துவன் என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷூவாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், பெருந்தலைச் சாத்தனார், மோசி சாத்தனார், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஒக்கூர்மா சாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் முதலான சங்க காலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த சாத்தன் என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.
கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோயில்களுக்குச் சாஸ்தாவு குடி என்றும், சாஸ்தாவேஸ்வரம் என்றும், சாஸ்தாவு கள என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவையாவும் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் சாத்தன் காவுகள் என்று பெயர். (காவு=கா=தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்). பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ஆராமம் (பூந்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு அய்யப்பன் என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கி வருகின்றது.
காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. சாஸ்தா, அல்லது சாத்தன்என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் அய்யன், அல்லது அய்யனார் என்பது. அய்யன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.
பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.
பிற்காலத்தில், சாத்தனார், அய்யனார், அரிஹரபுத்திரர் என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.
சாத்தன், அல்லது சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு எனவரும் அடியில், பாசண்டச் சாத்தன் என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு: பாசண்டம் தொண்ணுற்றறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்ற வனாதலின், மகாசாத்திர னென்பது அவனுக்குப் பெயராயிற்று. இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, சூடாமணி நிகண்டும்,
அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் என்று கூறுகின்றது. அருங்கலை நாயகன் என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர் என்று எழுதியிருப்பது (படம் அ) காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் சாஸ்தா, அல்லது மகா சாஸ்தா என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். லலிதாவிஸ்தார என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் சாஸ்தா என்னும் பெயர் உள்ளதுதான். (படம் ஆ காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் காமாட்சிலீலாப் பிரபாவம் என்னும் காமாக்ஷி விலாசத்தில், காமக்கோட்டப் பிரபாவத்தில், தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம் காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது.* சாஸ்தா என்பவரும் புத்தர் என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.
சாஸ்தா என்னும் புத்தருடைய கோயில்களை அய்யனார் கோயில்கள் என்றும், சாதவாகனன் கோயில்கள் என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், தலைவெட்டி முனீஸ்வரன் கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் தருமராஜா கோயில்கள் என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. தருமன், அல்லது தருமராசன் என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் தருமன் என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் தர்மராஜன் என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் போதி என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் தருமராஜா, அல்லது தருமதாகூர் என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.
இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்தத் தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. தருமராஜா என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, தாராதேவி என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமரா-ஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப் பட்டதுபோலும்.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் வரதராசர் கோயில், திருவரங்கர் கோயில், வேங்கடேசர் கோயில் முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் கபாலீஸ்வரர் கோயில், தியாகராசர் கோயில், சொக்கலிங்கர் கோயில் முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் தருமராசா கோயில், சாத்தனார் கோயில், முனீஸ்வரர் கோயில் என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.
(மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் நூலிலிருந்து).
வியாழன், 25 பிப்ரவரி, 2021
ஏன் அந்தக் கனியை ஏவாள் புசிக்கக் கூடாது?
ஏன் அந்தக் கனியை
ஏவாள் புசிக்கக் கூடாது?
கனிபறிக்கக் கைகள் இல்லையா?
பசியுணர வயிறு இல்லையா? தாகம் உணர நா இல்லையா?
நேசம் காட்ட இதயம் இல்லையா?
ஏன் ஏவாள் கனியைப் புசிக்கக்கூடாது?
ஏவாள், விலக்கப்பட்டகனி, கடவுள் கட்டளை, ஏவாளும் ஆதாமும் அதனை மீறல், கடவுளின் கோபம், சாபம், தண்டனை, பாவம் என்றெல்லாம் ஏற்படுத்தித் திணித்த புளுகுகள் யூதம், கிறித்துவம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களிலும் கூறப்பட்டுள்ள கற்பிதங்கள். தஸ்லீமாவின் கேள்விகள் மூவரையுமே அதிர்ச்சிக்கு ஆளாக்க வேண்டும்! முசுலிம்களுக்கு மட்டும் ஏன் கோபம்? தஸ்லீமா நஸ்ரீனின் தந்தை முசுலிம். எனவே இவரும் முசுலிம்.
ஏவாள் கனியைத் தின்றதால் வந்தது.
மகிழ்ச்சி வாழ்வு வந்ததும்கூட
ஏவாள் கனியைத் தின்றதால்தான்.
மேலே இருந்த சொர்க்கம் பூமியிலேயே வந்ததும்கூட
ஏவாள் கனியைத் தின்றதால்தான் மகிழ்ச்சி, வாழ்வு, சொர்க்கம் இவையெல்லாம் கிட்டியதால் வளர்ந்ததுதானே, வம்சம்? பின் ஏன் ஏவாளைக் குற்றம் கூறிப் பிதற்றுகிறார்கள்? இத்தகைய கருத்துகளை மதஉலகம் எங்ஙனம் செரிக்கும்?
தஸ்லீமா பிறந்த மதத்தில், பெண்கள் மதச்சட்டங்களின்படி இரண்டாம் தரத்தில் வைக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்டதை நேரிலும் அனுபவரீதியிலும் அனுபவித்த காரணத்தினால் அவற்றை எதிர்த்துத் தம் கருத்துகளைப் பகிரங்கமாக எழுதினார். இதற்கு மதவாதிகளின் எதிர்ப்பு வலுக்கவே மதத்தின்மீது நம்பிக்கை தளர்ந்து, அத்தகைய மதம் தேவையில்லை எனும் எண்ணம் வளர்ந்து, மதத்திற்கு எதிரியானார். அதுவே வளர்ந்து வலுப்பெற்று கடவுளுக்கும் எதிரியானார். நாத்திகரானார். அய்க்கிய நாடுகள் மன்றத்தின் மாநாடு ஒன்றில் 1999 இல் உரையாற்றும்போது முசுலிம் குடும்பத்தில் பிறந்தாலும் நான் நாத்திகக் கொள்கை கொண்டவள் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
வசவுகளும் வாழ்த்துகளும்
அண்மையில் இந்த ஆண்டில் (2010) உலக நாத்திகர் பேரவை (GLOBAL ATHEIST CONVENTION) யில் பேசிப் பெருமை பெற்றார்.
இவர் மருத்துவம் பயின்று மருத்துவர் பணியில் இருந்தபோது இவருடைய எழுத்தின் வீச்சையும் பெண்ணுரிமைக் கருத்துகளையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமும் அறிவும் அற்ற அரசு இவரைப் பணியில் இருந்து நீக்கியது. 20_21 ஆம் நூற்றாண்டுகளில்கூட இப்படி ஓர் அரசு! கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், சொந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட நிலையில், ஓடினார், ஓடினார், உலகின் பல நாடுகளுக்கும் ஓடினார். கிழக்குக்கும் மேற்குக்குமாக ஓடினார். எல்லா நாடுகளிலும் மத பக்தர்கள்தான், கடவுள் நம்பிக்கையாளர்-தான். 1995, 96இல் ஜெர்மனி. 1997 இல் சுவீடன். 1998 இல் அமெரிக்கா. 1999, 2000இல் ஃபிரான்சு 2001, 2002 இல் சுவீடன். பின்னர் இந்தியா. இங்கே ஒரு மாநிலத்திலிருந்து ஒரு மாநிலத்திற்குத் துரத்தி அடிப்பு. தனிமைவதை. வீட்டுக் காவல். உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் வன்முறைத் தாக்குதல். மேற்குவங்க மாநிலத்தில் எல்லா ஊர்களிலும் எதிர்ப்பு. இறுதியில் 2008 இல் இந்தியாவைவிட்டுத் துரத்தப்பட்டார். இங்கே, நாடும் பெண், நதிகளும் பெண், தெய்வமும் பெண் (உலகில் எந்த மதத்திலும் கடவுள் பெண்ணாக இல்லை). ஆனாலும் பெண் ஒருத்தி நாட்டைவிட்டுத் துரத்தப்-பட்டார். காரணம் அவர் நாத்திகர்.
ஆனாலும் அவருடைய ஆற்றல், எழுத்து, எண்ணம், கருத்து எல்லோராலும், எதிர்க்கப்-படவில்லை. யாரும் பெறாத பாராட்டுகளை உலகம் அவருக்கு வழங்கியுள்ளது. 1992முதல் விருதுகளும் பெருமைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, அவருடைய 30 ஆம் வயதிலிருந்தே உலகம் அவரைக் கொண்டாடி வருகிறது. ஆனந்தா இலக்கியப் பரிசு 1992 இல் இந்தியா அளித்ததுதான் அவர் பெற்ற முதல் அங்கீகாரம். அதே ஆண்டில் அவருடைய சொந்த நாடான பங்களாதேஷ் நாட்டிய சேவா விருது அளித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கான அய்ரோப்பியப் பாராளுமன்ற விருதும், மனித உரிமைக்கான ஃபிரான்சு நாட்டு விருதும், இலக்கியத்திற்கான ஃபிரான்சு விருதும், சுவீடனின் றிணிழி இலக்கியப் பரிசும், மனித உரிமைகள் கண்காணிப்புக்கான அமெரிக்க உதவியும் விருதும், நோர்வே நாட்டின் மனிதநேய விருதும், அமெரிக்காவின் பெண்ணுரிமை விருதும் 1994ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டன.
கல்வி நிறுவனங்களின் கவுரவம்
பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகம் அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் 1995 இல் வழங்கியது. சுவீடன் நாட்டின் மானிஸ்மானியன் பரிசு, உப்சலா பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டதும் இதே ஆண்டில்தான். ஜெர்மனியின் கல்வியாளர் பரிமாற்ற சேவையின் உதவித்தொகை இந்த ஆண்டில் அவருக்கு அளிக்கப்பட்டது. பாரிஸ் நகரிலுள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் 2005இல் வழங்கியது. நியூயார்க் பல்கலைக் கழகம் உறுப்பினர் பெருமையை (FELLOWSHIP) 2009 இல் வழங்கியுள்ளது. ஹார்வார்டு பல்கலைக்கழகம் இதே பெருமையை 2003ஆம் ஆண்டிலேயே அவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.
இலக்கிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், பெண்ணுரிமை அமைப்புகளின் விருதுகளும் பாராட்டுகளும் பெருமைகளும், பிரிட்டன், அமெரிக்கா, ஃபிரான்சு, போன்ற நாடுகளில் இருந்து குவிந்துள்ளன. இந்தியாவின் மேற்கு வங்க மாநில இலக்கியப் பரிசுகளும் 2000, 2006ஆம் ஆண்டுகளில் அளிக்கப்பட்டன. (IBKA) மதமற்ற நாத்திகர்களின் அனைத்துலக அமைப்பு ஜெர்மனியில் இயங்கிவரும் உயரிய அமைப்பாகும். அதன் சார்பாக வழங்கப்படும் இர்வின் ஃபிஷர் விருது இவருக்கு 2002 இல் வழங்கப்பட்டது இவருடைய நாத்திகக் கொள்கைக்கான சர்வதேச அங்கீகாரமாகும். பாரிஸ் நகரத்தின் குடிமகள் ஆக இவர் கவுரவிக்கப்பட்டுள்ளார், பெண்ணுரிமைப் போராளி விருது அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இவர் பெற்ற பெருமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர் நாத்திகர் என்பதால்தான் இப்பெருமைகள். உலகமே புகழும்
நாத்திகரான இவரைப் பெண் தெய்வமாக வருணிக்கும் (GODDESS IN YOU, TASLIMA) எனும் பாடலை சுவீடன் நாட்டின் பாடகி மகோரியா பாடும் பாடல் புகழ்பெற்றது. வேடிக்கைதான்! கவலைப்படாதே, தஸ்லீமா எனும் பாடல் பிரான்சு நாட்டின் ஜீப்டா இசைக்குழு பாடும் மற்றொரு பாடலாகும். கலைஞர்களுக்கென பாரிஸில் உள்ள குடியிருப்பில் இவர் ஆறுமாதம் தங்கியிருக்க எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது அந்நாட்டு அரசு.
புகழ், பெருமை, வசவு, வழக்கு, வன்முறைத் தாக்குதல் அத்தனையையும் ஒரே மனநிலையில் ஏற்றுக் கொள்ளும் மனத்திண்மை படைத்தவர் தஸ்லீமா. தன்வாழ்க்கையைப் பெண்களின் மத, கருத்து, உடல் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்துள்ள தஸ்லீமா நஸ் ரீன் செயல்வடிவிலும் நிரூபிக்கிறார். தர்ம முக்த மனாப் - பா மஞ்ச்சா (மதம் அற்ற மனிதநேய அமைப்பு) என்பதை கொல்கத்தா நகரில் அமைத்துள்ளார். மதமற்ற கல்வி பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுதல், பொதுவான (சிவில்) குடிமைச்-சட்டம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கம் இது. ஒரு லட்சம் டாகா (DAKA பங்களாதேச நாணயம்) அளவுக்கு உதவித் தொகையை 20 மாணவியருக்கு வழங்கிடும் திட்டமான எடுல்வாரா உதவிப்பணத் திட்டம் அவருடைய அன்னையின் பெயரால் நடத்தி-வருகிறார். இதன் மூலம் 7 முதல் 10ஆம் வகுப்புவரை படிக்கும் ஏழை மாணவியர் பயன் அடைகின்றனர். சொல்வதைச் செய்கிறார், தான் செய்வதையே பிறரையும் செய்யச் சொல்கிறார்.
- சு. அறிவுக்கரசு
குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள் - 30 ஆடுகள்
இது மந்தையிலிருந்த ஆடுகளின் எண்ணிக்கை அல்ல. திருச்சி மாவட்டம் கருப்பத்தூர் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களின் பாழும் வயிற்றில் யாகத்தின் பெயரால் கொன்று கொட்டப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கையாகும். அவர்கள் வாழுமிடம் அக்கிரகாரமா? கசாப்புக்கடையா? என்று கேட்கத் தோன்றுகிறதா? தற்காலத்தும் பார்ப்பனரின் காலைக் கழுவித் தம் பெண்டு பிள்ளைகளோடு குடிக்கும் அழுக்கு மூட்டைகள் உள்ளனரே!
கும்பகோணம் ஆட்டுக்கொலை யாகமும், திருவான்மியூர் ஆட்டுக்கொலை யாகமும் நடைபெற்று இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் திருச்சி ஜில்லா லாலாப்பேட்டை கருப்பத்தூர் அக்கிரகாரத்தில் மற்றொரு கொடிய யாகம் கிளம்பியிருக்கின்றது. கும்பகோணம் பார்ப்பனர்களை விட கருப்பத்தூர் பார்ப்பனர்கள் மிகப் பெரிய குண்டோதரன்களாயும் இருக்கின்றார்கள், ஏனெனில் கும்பகோணம் பார்ப்பனர்கள் எட்டு ஆடுகளை உயிரோடு வதைத்துச் சுட்டுப் பொசுக்கித் தம் பாழும் வயிற்றிற்குள் கொட்டினார்கள். ஆனால் கருப்பத்தூர் அக்கிரகாரப் பேய்களோ நாளொன்றுக்கு ஒவ்வொராடாக 30 ஆடுகளை விதையைப் பிடித்து நசுக்கி இரத்தத்தை உறிஞ்சி, மாமிசத்தைச் சுட்டுத்தின்று யாகத்தின் பெயராலும், வேதத்தின் பெயராலும் ஒரே அடியாய் விழுங்கப் போகின்றன. என்ன கொடுமை! என்ன அக்கிரமம்! பார்ப்பனர்கள் இத்தகைய கொலை பாதகர்களாய் இருக்கின்றமை-யாற்றான், புத்தர் பெருமான் இப்பார்ப்-பனர்களைப்பற்றி,
கொலையறமா மெனும்
கொடுந்தொழில் மாக்கள்
என்று கூறி அவர்களை மனிதப் பிறவியில் சேர்க்காது மிருகப் பிறவியில் சேர்த்தார். இத்தகைய மிருகப் பிறவியைச் சார்ந்து கொலைத்தொழில் புரியும் பார்ப்பன மாக்களை இன்னும் நம்மவர்களில் பலர் உயர்ந்த ஜாதியார் என்று கருதி அவர்கள் காலடியில் விழுந்து, அக்கால் கழுவிய அழுக்குத் தண்ணீரைத் தாம் குடிப்பதோடு தம் பெண்டு பிள்ளைகளையும் குடிக்கச் செய்கின்றனரே! அந்தோ! என்னே இவர்கள் தம் அறியாமை!
குடிஅரசு 18.7.28 பக்கம் 15
தகவல் 'முநீசி'
திங்கள், 22 பிப்ரவரி, 2021
மனுதர்மத்தை ஒழிக்கவேண்டியது மனித நேயர்களின் கடமை
மஞ்சை வசந்தன்
ஆரியப் பார்ப்பன அகராதியில் எல்லாமே தலைகீழ்தான். மண்ணின் மக்களை அடிமைகள் என்பர். வந்தேறிகளான தங்களைத் தலைமகன்கள் என்று கூறி ஆதிக்கம் செலுத்துவர். பிச்சை எடுத்துப் பிழைத்த தங்களை உயர்வர்ணம் என்பர்; உழைத்து வாழ்வதோடு, பார்ப்பனர்களுக்கே பிச்சையிடும் மக்களை இழிவர்ணம் என்பர்.
உலகில் ஒப்பில்லா உயர் நூலாம் திருக்குறளை இழித்துப் பேசி, ஒன்றுக்கும் உதவாத வேதங்களை கடவுளுக்கும் மேலானது என்பர்.
உலகின் மொழிகளுக்கெல்லாம் முதல் மொழியான தமிழை இலக்கண இலக்கிய வளமுடைய தொன்மொழித் தமிழை நீசபாஷை என்பர்; தமிழிடம் பிச்சை பெற்று உருவாக்கப்பட்ட சமஸ்கிருதத்தை தேவபாஷை என்பர்.
அப்படித்தான் மனித குலத்திற்கே எதிரான கருத்துகளைக் கூறும் அதர்ம நூலை மனுதர்மம் என்று கூறி வருகின்றனர்.
மனுதர்மம் என்கிற பெயரே பொய்யனுக்கு. அரிச்சந்திரன் என்று பெயர் வைத்தது போலத்தான்.
ஆரியப் பார்ப்பனர்கள் மேன்மைக்கும் பிழைப்புக்கும் பெருமைக்கும் மற்றவர்கள் இழிவிற்கும் தாழ்விற்கும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது மனுதர்மம்.
மனுநூல் உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வாழும் இடம் வாழும் முறை எல்லாவற்றிலும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு உயர் தகுதியும் மேன்மை நிலையும் முழு உரிமையும் அளித்து, மற்றவர்களை அவர்களின் அடிமையாக, இழிமக்களாக, தீண்டாதவர்களாக, உரிமையற்றவர்களாகக் கருதி நீதி முறைகளை வகுத்துள்ளது.
குறிப்பாக பெண்களை மிகக் கேவலமாக, இழிவாக, விலங்கினும் கீழாய்க் கருதி அவர்களுக்கான நீதிகளை வகுத்துள்ளது.
இதைத்தான் தொல்.திருமாவளவன் அவர்கள் எடுத்துக்கூறி பெண்களுக்கு ஆதரவாக, அவர்களின் இழிவைப் போக்குவதற்கு முன்னெடுப்பாகச் செயல்பட்டார்.
வழக்கம் போல் பித்தலாட்ட அணுகுமுறை உடைய ஆரியப் பார்ப்பனர்கள் திருமா கூறியதைத் திரித்து, அவர் பெண்களுக்கு எதிராகப் பேசிவிட்டதாகப் பிரச்சாரமும் போராட்டமும் செய்து வருகின்றனர். இது உலகமகா மோசடிச் செயலாகும்.
மனுநீதி ஒருகுலத்துக் கொருநீதி என்பதை தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திருமாவளவன் புதிதாக இப்போது பேசிவிட்டதாக ஆர்ப்பரிப்பது அரசியல் ஆதாயம் கருதியேயாகும். செய்து வருகிறது.
கழகத்தின் மனுதர்ம எதிர்ப்பு, எரிப்பு வரலாறு
ஏன், பல முறை நமது இயக்கத்தின் சார்பில் மனுதர்மம் எரிக்கவும் பட்டுள்ளது. 17.10.1927 அன்று காட்பாடியில் நடைபெற்ற ஆதி திராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜா எரித்தார். 4.12.1927 அன்று குடியாத்தத்தில் நடைபெற்ற வடஆர்க்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டிலும் எரிக்கப்பட்டது.
17.5.1981 அன்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தால் மகளிர் அணியினர் தலைமையில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மீண்டும் 7.2.2019 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
1927 டிசம்பர் 25இல் மகாராட்டிர மாநிலம் மகத் நகரில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம சாஸ்திரம் எரியூட்டப்பட்டது.
இன்னும் சொல்லப் போனால் 1922ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மனுதர்மத்தையும், இராமாயணத்தையும் எரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கினார்.
எனவே, மனுதர்ம எதிர்ப்பு, எரிப்பு என்பது - திராவிடர் கழகத்தின் தொடர் நடவடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது.
மனுதர்ம எதிர்ப்பு, எரிப்பு இரண்டும் செய்வது புதிதல்ல. திராவிடர் கழகத்தால் சற்று ஏறக்குறைய 100 ஆண்டு காலமாகவே இவை செய்யப்பட்டு வருகின்றன.
அய்ரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணைய கருத்தரங்கில் (26, 27.9.2020) பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அக்கருத் தரங்கில் நான் உள்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவனும் பங்குகொண்டு பேசினோம்.
அக்கருத்தரங்கில் தோழர் திருமாவளவன் மனுதர்மம் குறித்துப் பேசிய பேச்சின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
வழக்குத் தொடுக்கப்பட்ட பிரிவு
பெரியார் யூடியூப் சேனலில் நாடாளுமன்ற உறுப்பி னரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில், திருமாவளவன் மனுதர்மத் தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வின் வழக்குரைஞரணி செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகப் பொய்யான தகவல்களை கூறி, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக 295-ஏ: வேண்டுமென்றே மத உணர்வு களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் மதங்கள், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல்.
298: வார்த்தைகளால் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் பேசுதல்.
505 -1: குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், வதந்தி அல்லது அறிக்கை வெளியிடுதல்.
505 - 2: அறிக்கை வெளியிட்டு இரு பிரிவினருக்கு இடையே மோதல், வெறுப்பை ஏற்படுத்துதல்.
153: விருப்பமில்லாமல் ஆத்திரமூட்டி, கலவரத்தை ஏற்படுத்துதல்.
153 ஏ: இரு பிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமாவளவன் மீதும், வீடியோவை வெளியிட்ட பெரியார் யூடியூப் சேனல் மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த (24.10.2020) நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தோழர் திருமாவளவன் அவர்கள் தனது சொந்தக் கருத்தாக எதையும் சொல்லவில்லை. மனுதர்மத்தில் பெண்கள் எப்படி எல்லாம் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாகத்தான் பேசி இருக்கிறார்.
உண்மை இவ்வாறு இருக்க, தோழர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தினார் என்று திரிப்பது மோசடியல்லவா!
மனுதர்மத்தை டாக்டர் அம்பேத்கர் எரித்தாரே!
இதே காரணங்களுக்காக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மனுதர்மத்தைத் தம் தோழர்களுடன் மகாராட்டிர மாநிலம் மகத் நகரில் எரித்துள்ளார் (25.12.1927).
தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக் கமும், அதே 1927 ஆம் ஆண்டில் குடியாத்தத்தில் நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட் டிலும் மனுதர்மம் எரியூட்டப்பட்டது (4.12.1927).
1922 ஆம் ஆண்டிலேயே திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலேயே மனுதர்மத்தையும், இராமாய ணத்தையும் எரிக்கவேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கியதுண்டு.
திராவிடர் கழகத்தின் சார்பில் 17.5.1981 அன்றும், 7.2.2019 அன்றும் மனுதர்மம் தமிழ்நாடெங்கும் எரிக்கப்பட்டதே!
வரலாறு தெரியாத அ.தி.மு.க. அரசு
இந்த வரலாறு எல்லாம் அண்ணா பெயரில் - கட்சியை வைத்திருக்கும் - ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அண்ணா தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர்களுக்குத் தெரிந்திருந்தால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பதா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப் பட்டுள்ள கருத்துரிமை, பேச்சுரிமையின் கழுத்து அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நெரிக்கப்படுகிறதா?
இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகவே திருமாவளவன் அவர்கள் மனுதர்மத்திற்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளார்.
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்களா?
பெண்களைப்பற்றி மனுதர்மத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன? (3 ஆம் பக்கம் காண்க) மனு தர்மத்தில் மட்டுமல்ல இந்து புராணங்களிலும், இதிகாசங்களிலும் பெண்கள் மிகவும் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கீதையில், ‘‘பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்’’ (Born out of Womb of Sin) (கீதை அத்தியாயம் 18; சுலோகம் 44) என்று கூறப்பட்டுள்ளதே - இவற்றை எல்லாம் ஏற்கப் போகிறார்களா?
சுலோகம் 14: மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.
17) படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபசாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச்சித்தத்தைத் கேளுங்கள்.
30) கணவன் சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.
59) பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம்.
60) விதவையிடத்தில் பெரியோர்களின் அனுமதிப் பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள்ளையை ஒரு போதும் உண்டு பண்ணக் கூடாது.
69) ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின் அந்தவன் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.
70) அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும், திரிகரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து, ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருது காலம் வரையிற் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.
78) கணவன் சூதாடுகிறவனாயிருந்தாலும், குடிய னாகவிருந்தாலும், நோயாளியாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.
கடவுள் பெயரால் இப்படி கூறப்படும் இழிவுகளை எடுத்துக் கூறக் கூடாதா?
மனுதர்மம் நடைமுறையில் இல்லையா?
கேள்வி: பெண்கள் உடன்கட்டை ஏறுவது போன்ற மூடப் பழக்கங்களை மதங்கள் ஆதரிக்கின்றதே?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி: வரதட்சணைக் கொலை என்று நிறைய பேர் இறந்து போறாங்க. அதை எல்லாம் விட்டு விட்டு, ஏன் உடன்கட்டை ஏறுவதை மட்டும் கேட்கிறீங்க? இந்தக் கால கட்டத்தில் யாரோ ஒரு தலைவனுக்காக கட்சித் தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள். அந்தக் காலத்தில் கணவனைத் தெய்வமாக மதித்து வாழும் பெண்மணி அதைச் செய்தது ஆச்சரிய மில்லையே! உடன்கட்டை ஏறச் சொல்லி எந்த சாஸ்திரத்திலேயும் இல்லை. பெண்களின் உணர்வைக் காட்டும் வழி அது. (‘ஆனந்த விகடன்’ 1.3.1998).
“ஆஞ்சநேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் ‘பதி வரத்யத்தால் (கற்புச் சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமரில பட்டர் உமிக் காந்தல் அக்னியில் கருகியபோது எதிரே நின்ற (சங்கர) ஆசார்யாரின் ஸாந்தியத்தால் அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அநேக பதிவிரதைகளுக்கு அவர்களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டியிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமலே இருக்குமாம். அதை எடுத்துப் பூஜை பண்ணுவதுண்டு” - மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி - பக்கம் 967, 968).
பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை வேதத்தைக் கூற விடாமல் மேடையிலிருந்து கீழே இறங்கச் செய்தார் பூரி சங்கராச்சாரியார்.
(இதனைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழக மகளிரணியினர் தமிழ்நாடு எங்கும் பூரி சங்கராச்சாரியாரின் கொடும்பாவியை எரித்தனர் - (17.2.1994).
“பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது!”
- ஜெயேந்திர சரஸ்வதி
Sankaracharya against quota for women politics. virtually rejected for the demand for seperate reservation for women.
(‘The Pioneer’ 17.3.1997)
“விதவைப் பெண்கள் தரிசு நிலம்!”
விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்கள்.
- (‘தினமணி’ தீபாவளி மலர்).
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி “தினமணி” தீபாவளி மலரில் கூறிய கருத்தினைக் கண்டித்த காஞ்சிமடம் முன் திராவிடர் கழக மகளிரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். (9.3.1998).
வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று சொன்னவரும் இதே சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதிதான்.
“ஆணின் தேவையை நிறைவேற்றாத மனைவியை விரட்டிவிட வேண்டும்“
- மோகன் பகவத்
பெண் கல்வியையும், பெண்ணின் சுதந்திரத்தையும் மறைமுகமாக தாக்கிப் பேசிய மோகன் பகவத் மேலும் ஒரு சர்ச்சைக்குரிய உரை கூறினார். அதாவது மனைவி, கணவனுக்கு சேவகம் செய்வதே கடமையாகக் கொள்ள வேண்டும்.
பெண்கள் இந்தக் கடமையிலிருந்து விலகிவிட்டால் அந்த பெண்ணை விலக்கி விடுவது நல்லது. திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் (சோசியல் காண்ட்ராக்ட்) மாத்திரமே என்று தன்னுடைய பேச்சில் கூறினார். மனைவி என்பவள் கணவனின் தேவைகளை நிறைவேற்றுவதை மட்டுமே தலையாய கடமையாகக் கொள்ள வேண்டும். வீட்டைக் கவனிக்க வேண்டும். கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். கணவனுக்கு இன்பம் தர வேண்டும். இது பெண்ணின் கடமை; இந்தக் கடமையிலிருந்து ஒரு பெண் விலகிவிட்டால் அவள் தேவையில்லை. அவர்களுக்கான ஒப்பந்தம் முடிந்து விட்டது. விலக்கிவிட வேண்டும். கணவனின் தேவைகளை நிறைவேற்றாத மனைவியை உடன் வைத்திருப்பதால் கணவனுக்கு என்ன பலன்? ஆகையால் திருமணம் என்னும் ஒப்பந்தத்தை முடித்து விடவேண்டும் என்று கூறினார்.
மோகன் பகவத் 8.11.2014 அன்று அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார். மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
இப்படிப் பெண்களை இழிவுபடுத்தியவர்கள் குற்றவாளிகள் இல்லையாம்! இழிவுபடுத்தியதை எடுத்துச் சொன்ன திருமாவளவன்தான் குற்றவாளியாம்! இதிலும்கூட வருணப் பார்வைதானா? மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதிதானே!
தமிழர் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்
காலம் காலமாகப் பெண்களை இழிவு செய்யும் மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வேண்டும்.
பாரதிய ஜனதா என்பது மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தி.மு.க. தலைமையில் உள்ள வலுவான கூட்டணியில் கலகம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவதூறு பரப்பும் பா.ஜ.க திட்டத்தின் மீது முகத்தில் அறைந்தாற் போலக் கூறி, மக்கள் அந்த வாதத்தை புஸ்வாணமாக்கிவுள்ளனர். நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி, புராண, இதிகாசங்களைத் தோலுரிக்கும் வாய்ப்புக் கிட்டுமா என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு எனக் கூறி ஆசிரியர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
திருமாவளவன் பேசியதைத் திரித்து, பரப்பி, வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது, எடப்பாடி அ.தி.மு.க அரசின் சைபர்கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான - வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
இரா. முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெண்களை அடிமைப்படுத்தும் ஏராளமான கருத்துகளை முன்வைத்து, மனுதர்மத்தை எழுதியவர்களும், அதனை ஆதரிப்போரும்தான் சட்ட - ஒழுங்கு சீர்குலைத்து, சமூக அமைதியைக் கெடுத்துவரும் குற்றவாளிகள் என்பதை காவல்துறை உணரவேண்டும். இதற்கு நேர்மாறாக இந்துத்துவக் கருத்தியலின் கயமைத்தனத்தை விளக்கிக் கூறிய தொல். திருமாவளவன் மீது வழக்குப் போட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
வைகோ
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ,” மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அதை வேறு விதமாகத் திரித்து, அவர்மீது, சங்பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர். உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் கண்டனம்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி, மக்களவை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் எனக் கூறி, மனுதாரர் தரப்பில் கோரப்பட்ட அவகாசமும் ஏற்க மறுத்தனர். வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனுதாக்கல் செய்ய அறிவுறுத்தினர். இதனையடுத்து மனுஸ்மிருதி பற்றி அவதூறாகப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இவ்வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
- உண்மை இதழ் 16 -30 .11.20