ஞாயிறு, 5 மே, 2019

பெரியார் - வீரமணி - மு.க.ஸ்டாலின் இவர்களை சுற்றி சுற்றிவரும் ஆரியம்!

தந்தை பெரியார் பார்ப்பனர்களை அனாவசியமாக திட்டுகிறார் - வீரமணி அவர் வழியைப் பின்பற்றி சதா பிராமணர் களைக் குறை கூறிக் கொண்டே இருக்கிறார்.
கிருஷ்ணனைப் பற்றிப் பேசி ஹிந்துக் களின் மனதைப் புண்படுத்துகிறார். கருணா நிதி இந்துக்களைத் திருடன் என்று சொல்லி விட்டார், மு.க.ஸ்டாலின் புரோகிதக் கல்யா ணத்தை அதில் கூறும் மந்திரங்களைக் கொச்சைப் படுத்திப் பேசி வருகிறார்.
ஊருக்கு இளைச்சவன் ஹிந்துக்கள் தானா? இவர்களை  முஸ்லீம்கள் பற்றி பேசச் சொல்லுங்கள் பார்ப்போம், கிறித்தவர்கள் பக்கம் கை நீட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று மூக்கைச் சொரிந்துவிடும் வேலையில் ஒரு கூட்டம் சதா ஈடுபட்டுக் கொண்டிருக்கி றது!
பக்திப் பற்றி பேசுகையில் பார்ப்பனரல் லாத மக்களுக்கே பார்ப்பனரின் நோக்கம் என்ன? உள்ளார்ந்தம் என்ன? உண்மையி லேயே அவர்களின் வேதங்களும், ஸ்மிருதி களும், உப நிஷத்துக்களும், இதிகாசங்களும், புராணங்களும் என்னதான் கூறுகின்றன என்பது பற்றி கடுகு மூக்கு அளவுக்குக்கூடத் தெரிந்து கொள்ளாமலும், பக்திக்கும் பகுத்தறி வுக்கும் ஏதோ சண்டை போலும். ஆத்திகத் துக்கும் நாத்திகத்துக்கும் நடக்கும் போர் போலும் என்று நினைத்துக் கொண்டு, நான் கடவுள் பக்தன், ஆகவே நானும் அவாளும் பக்தர்தான் என்று பம்மிக் கிடக்கும் பார்ப் பனர் அல்லாத மக்கள்தான் அந்த ஆதிக்கக் கூட்டத்தின் மிகப்பெரும் பலம்.
அடியாட்கள் தேவைப்பட்டால் ஹிந் துக்களே ஒன்று சேருங்கள்!! என்று இராம. கோபாலன்கள் குரல் கொடுப்பார்கள்.
மற்றபடி சங்கர மடத்தில் ஒரு பியூன் வேலைக்கு கூட அவர்கள் நெருங்கவே முடியாது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை ஒரு அரசு நிறைவேற்றினால், அவர்களும் இந்துக்கள் தானே என்ற உணர்வு அறவே வராது. உச்ச நீதிமன்றத்துக்கே செல்லவில் லையா?
13 பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்களே! சங்கராச்சாரியார் அதன் பின்னணியில் இருந்தாரே! பல்கி வாலா என்ற பிரபல வழக்குரைஞருக்கு ராஜாஜி சிபாரிசு செய்யவில்லையா?
வைகானாச ஆகமம் என்ற ஒன்றை எடுத்துக்காட்டிச் சூத்திரர்கள் கோயிலில் அர்ச்சகர் ஆக முடியாது என்று வாதாடவில்லையா?
அஷ்டோத்ர சதாய்ஹி சூத்ரைஹி சமஸ்புர்சே ஸ்னாபயேத் தடோ
மகாசாந்திம் ததா ஹுத்வா பிராமணாளி போஜயேத்
ஸ்புர்வைஹி அனுலோனயஹி சூத் ரோத பிராயஸ், சமாச்சரேத்.
விக்கிரகம் சூத்திரர்களால் (நாலாவதான உழைக்கும் சமுகம்) தொடப்பட்டு விட்ட தானால் சாமி தீட்டுப்பட்டு, பின்னர் நூற்றி யெட்டுக் கலசங்களை வைத்து, முறைப்படி வணங்கிய பின், பிம்பங்களுக்குச் சம்ப் ரோட்சணம் செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்யப்பட வேண் டும். அனுலோமர்களால் தொடப்பட்டு விட்டதானால், பின்னர் பிராயச்சித்தம், சூத்திர ஸ்பர்சத்துக்கு விதிக்கப்பட்டிருப்பது போல் செய்யப்பட வேண்டும் என்று அவர்களின் ஆகமம் சொல்லுவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லவில்லையா?
சூத்திரன் பக்தன் இல்லையா? ஆகமங் களைத் தெரிந்திருந்தாலும் அவன் அர்ச்ச கப் பயிற்சிப் பெற்று இருந்தாலும் அவன் தொட்டால் சாமி தீட்டாகிவிடுமாம்! அதற் காக 108 கலசங்களை புதிதாக செய்து வைக்க வேண்டுமாம்! பிராமணப் போஜ னம் செய்யப்பட வேண்டுமாம் - அது என்ன பிராமண போஜனம்?
சூத்திர இழிவும், பிராமண உயர்வும் கட வுளின் கோயிலின், பக்தியின், வழிபாட்டின் பெயரால் நிலை நிறுத்தப்படவில்லையா?
ஏதோ இவர்களின் ஹிந்து மதத்தில் எந்தவித வேற்றுமையும், துவேஷமும் இல்லாதது போலவும், பெரியாரும் வீரமணி யும், கலைஞரும், ஸ்டாலினும் இட்டுக் கட்டிச் சொல்லுவது போலவும் ஒரு பம்மாத்தை, ஒரு பிம்பத்தை அவர்களுக்கு இருக்கிற பார்ப்பன ஊடகப் பலத்தால் ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவதும், அதனை நமது மக்களின் பாமரத்தனமான பக்திப் போதை யேறிய கண்கள் பூத்துப்போய் பார்ப்பனீ யத்துக்குச் சரணம் பாடும் நிலைதானே ஏற்பட்டுள்ளது!
எச்சரிக்கை!
பாதிக்கப்பட்டவர்கள் நாம் - பாதிப்புக்கு காரணமானவர்கள் பார்ப்பனர்கள். ஆனால் பாதிப்புக்குக் காரணமானவர்களின் அலறல் சத்தம் அதிகமாக கேட்கிறது - பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் அடக்கி வாசிக்க வேண்டுமாம்! இதுதான் இன்றைய நிலை!
திருப்பி அடிக்காவிட்டால் நியாயம் அநியாயமாகவும், அநியாயம் நியாயமாகவும் கருதப்படும் நிலை ஏற்பட்டு விடும் - எச்சரிக்கை!
இந்த நிலை நீடிக்கப்பட வேண்டும், கட்டிக் காக்கப் பட வேண்டும், அப்போதுதான் பார்ப் பான் பிராமணனாக, பிர்மாவின் நெற்றியில் பிறந்தவனாக சூத்திரன் பிர்மாவின் காலில் பிறந்ததால் வேசி மக்களாக (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 4, 5) இருக்க முடியும்.
இதைச் சுட்டிக் காட்டினால், எடுத்துக்காட் டினால் அய்யோ ஹிந்து மதத்தை எதிர்க் கிறார்களே, தூஷிக்கிறார்களே! என்று சத்தம் போட்டால் அடங்கி விடுவோமா? அஞ்சி விடுவோமா?
சூத்திரன் ஒருவன் தவமிருந்தான் - அதனால் பிராமணக் குழந்தை ஒன்று இறந்துவிட்டது என்று கூறி பார்ப்பான் ஒருவன் வந்து புலம்பிட, உடனே தவமிருந்த சூத்திர சம்புகனை ராமன் வாளால் வெட்டிக் கொல்ல, செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர்ப் பிழைத்து விட்டது என்று கூறும் இராமாய ணத்தை இன்றைக்கும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்!
அந்த இராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டுவோம் என்று ஒரு கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகிறது என்றால், இவர்கள் இந்த 2019லும் எந்த எண்ணத்தோடு இருக்கிறார்கள் என்பதை திராவிடர் கழகமோ, அதன் தலைவர் மானமிகு வீரமணி அவர் களோ எடுத்துப் பேசினால் வீரமணி ஹிந்து மதத் துவேஷி என்ற முத்திரையா?
அந்த ராமராஜ்ஜியத்தை உருவாக்குவார் களாம்! பக்திப் போதையில் இடுப்பு வேட்டி அவிழ்வது கூடத் தெரியாமல் மயங்கிக் கிடக்கும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் திராவிடர் கழகத்தின் பணியை திசைமாற்றிப் பேசி திரிபுவாதம் செய்து மடை மாற்றம் செய்து விட முடியாது.
தந்தை பெரியார் எழுதிய இராமயணப் பாத்திரங்கள் என்ற தமிழில் வெளிவந்த “ramayana  A true reading” என்ற ஆங்கில நூலுக்கு - சச்சு ராமாயண் எனும் இந்தியில் வெளிவந்த நூலுக்கு எந்த ஜீயர், எந்த கொம்பர் இதுவரை ஒரே ஒரு வரியை மறுத்து எழுதினார்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று பகவான் (?) கிருஷ்ணன் கீதையில் (அத்தியாயம் 9, சுலோகம் 32) கூறுகிறான்.
மாம் ஹி பார்தசு வ்யபாஸ்சுரித்ய யே2பி ஸ்யு: பாபயோநய: | ஸ்த்ரியோ வைஸ்சுயாஸ்ததாசு ஸூசுத்ஞுராஸ்தே2பி யாந்தி பராம் கஞுதிம் || 9- 32||
இப்படிக் குறிப்பிட்டுள்ளதற்கு இஞ்சிக் குடிகளும், வேளுக் குடிகளும், மடி சஞ்சி களும் என்ன பதிலை வைத்துள்ளார்கள்?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களால் எழுதப் பட்ட கீதையின் மறுபக்கம் எனும் நூல் 1998இல் வெளியிடப்பட்டு இதுவரை பல பதிப்புகளாக பல லட்சம் நூல்கள் மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந்துள்ளனவே. ஆங்கிலத்தில் BHAGAVAD GITA MITH OR MIRAGLE என்ற பெயரில் வெளி வந்துள்ளனவே - குருமூர்த்திக ளுக்குத் தெரியுமா?
ஹிந்துத்துவாவையும் சாஸ்திரங்களை யும் கரைத்துக் குடித்ததாகத் தம்பட்டம் அடிக்கும் ஒரே ஒரு சாஸ்திரி, திராவிடர் கழகத் தலைவரின் ஆய்வு நூலின் ஒற்றை வரிக்காவது மறுப்பு சொன்னதுண்டா? முடியுமா?
இதற்கு மட்டுமல்ல. விடுதலை இவர் களை நோக்கி விடுத்த கணைகளுக்கு எப்பொழுது பதில் அளித்தார்கள்? புறமுது கிட்டு அவர்கள் ஓடியதுதானே மிச்சம்.
கண்ணாடிப் பரம்பரையாச்சே! மத்தி யிலும் மாநிலத்திலும் அவாளின் அதிகாரம் இருக்கும் காரணத்தால் பூணூலை உருவி விட்டுக் காட்டலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.
திருச்சி - கருஞ்சட்டைப் பேரணியைப் பார்த்த ஞாபகம் இருக்கட்டும்!
இளைஞர்கள் எழுச்சி கொண்டு விட்டார்கள், மறுபடியும் ஆரிய திராவிட இனப் போரை நடத்துவதற்கு ஆரியம் முன்வந்தால் அதை வரவேற்பது எங்கள் கடமைதானே!
துக்ளக்கும், விஜயபாரதமும், தினமல ரும் சுற்றிச் சுற்றி பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி வருகின்றன. அது அவர் களின் பாஷை - நாம் அறிவாயுதத்தால் சந்திப்போம். கன்னியாகுமரி கடைக்கோடி இளைஞ னையும் திரட்டுவோம் ... துள்ளாதே ஆரியமே!
என்ன கொடுமையென்றால் இழிவுபடுத் துவது அவர்கள் - அதை எதிர்ப்பது பாதிக் கப்பட்ட நாங்கள் - ஆனால் கூச்சல் என்ன தெரியுமா? அவர்கள் பாதிக்கப்பட்டது போல! இந்த எத்து வேலையெல்லாம் பெரியார் காலத்துக்கு முன் எடுபட்டு இருக்கலாம் - அண்ணாவும், கலைஞரும், வீரமணியும் எழுதியதற்கு முன்பு எடுப்பட்டு இருக்கலாம். இது பெரியார் சகாப்தம் - எச்சரிக்கை!
-விடுதலை ஞாயிறு மலர், 20.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக