ஞாயிறு, 5 மே, 2019

புதையல் எடுத்தாலும் பார்ப்பானுக்கே பங்கு!

‘பெல்’ ஆறுமுகம்
பார்ப்பானுக்கு மிகவும் கடுமையான தண்டனையை மனுதர்மம் வழங்குவதாகப் புலம்புகிறாரே திருவாளர் சோ அய்யர்! அந்தத் தண்டனையை அவனுக்கு வழங்குவதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதனையும் சொல்வாரா?
அதிகாரம் 11 சுலோகம் 32 என்ன சொல்கிறது தெரியுமா?
“பிராமணனுடைய சொந்த அதிகாரம் அவனையே சார்ந்தது. அது மன்னனின் அதிகாரத்தைவிடப் பெரியது. ஏனென்றால் மன்னனின் அதிகாரம் மக்களைச் சார்ந்தது. பிராமணன் தனது சொந்த பலத்தினாலேயே தனது எதிரிகளைப் பணியச் செய்ய முடியும்” என்று சொல்கிற மனு அதிகாரம் 11-சுலோகம் 31இல் சட்டங்களை நன்கு அறிந்த பிராமணன் தனக்குக் கொடிய தீங்கு எதுவும் செய்யப்பட்டால் அதைப் பற்றி அவன் மன்னனிடம் புகார் செய்ய வேண்டியதில்லை. அவன் தனது சொந்த அதிகாரத்தாலேயே தனக்குத் தீங்கிழைப் பவர்களைத் தண்டிக்கலாம்” என்று கூறுகிறது.
அத்துடன் அதிகாரம் 9 சுலோகம் 320இல் “ ஒரு சத்திரியன் அல்லது மன்னன் எப்போதும் பார்ப்பனர்களுக்கு எதிராகத் தனது இரும்புக் கரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் பிராமணனே அவனைத் தண்டிக்கலாம்.” என்கிறது. இதன்படி மன்னனைக் கொல்வதற்கும் பார்ப்பானுக்கு மனு உரிமையளிக்கிறது என அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.
இததான் பிராமணனுக்கு அதிகமான தண்டனை கொடுக்கும் கொடுமைகளா? இந்தக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்களுக்காகச் சேவை செய்பவர்களா பார்ப்பனர்கள்? ஆகா! எவ்வளவுஅநியாயம் பாருங்கள்!
மனுதர்மம் பார்ப்பனர்களுக்குக் கடுமை யான தண்டனைகளை வழங்குகிறது  அந்தத் தண்டனைகளை எல்லாம் பொறுத் துக் கொண்டு சேவை செய்கிறார்கள் பார்ப்பனர்கள் என்று கூறும் சோ, அந்த பிராமணர்களுக்கு மனுதர்மம் அளித்திருக் கும் சலுகைகளை விவரிப்பாரா?
இந்த உலகமே பார்ப்பானுக்கு சொந்தம். உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கே சொந்தம். மற்றவர் எல்லோரும் பார்ப்பனர் தயவிலேயேதான் வாழ்கிறார்கள் என்றெல்லாம் மனு கூறுகிறதே அதைப்பற்றி சோ எழுதினாரா? குருமூர்த்தி அய்யராவது இனி எழுதுவாரா?
பொதுமக்கள் புதையல் எடுத்தால் அதனை மன்னனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்றும் மன்னன் புதையல் எடுத்தால் அதில் பாதியை பார்ப்பானுக்கு கொடுத்து விட்டு மீதியை அரசன் தன் கஜானாவில் சேர்க்க வேண்டும் என்கிறதே, அதைப்பற்றி எழுதுவாரா? காய்கறி முதலானவற்றை விற்கிற சாதாரண ஏழைக்குடிகளிடமும் மிட்டாய்க்காரர், சிற்ப வேலைக்காரர், கொல்லத்துக்காரர்களிடமும்கூட வரி வசூலிக்கலாம் என்று கூறும் மனு ஒருபோதும் பார்ப்பனர்களிடத்தில் வரி வசூலிக்கக் கூடாது என்று கூறி விட்டு “எந்த அரசன் ராச்சியத்தில் வேதம் ஓதினவன் சாப்பாட்டுக்கில்லாமல் கஷ்டப்படுகிறானோ, அந்த அரசன் தேசம் முழுவதும்துன்பப்பட்டு அழிந்துபோகும்” என்று சொல்கிறதே, இதுதான் பார்ப்பனர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளா? இதற்கெல்லாம் சோவும் குருமூர்த்தி கும்பலும் பதில் அளிக்குமா?
இப்படியெல்லாம் கூறிவிட்டு நமுட்டுச் சிரிப்புடன் சோவின் படத்தைப் போட்டு பிராமணனுக்கு அதிகமான தண்டனைகள் கொடுக்க வேண்டும்! சரி, இது மட்டும்தான் அதில் இருக்கிறதா? என்று கேள்வியைக் கேடடு அவரே  பதில் சொல்கிறார். இன் றைய அரசாங்கங்கள் எப்படி இருக்கின் றனஎன்று யோசித்துப் பாருங்கள்? ஆட்சியை நடத்துவதற்கு ஆலோசகர் களை நியமிப்பதில் என்னென்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட ஆலோசகர் களை நியமிக்க வேண்டும் என்பதெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது என்று கூறுகிறார். ஆனால் யார் அந்த ஆலோ சகர்கள் என்பது இந்த இதழில் கூறப்பட வில்லை.
மனு அதனைத் தெளிவாகக் கூறுகிறது. அதிகாரம் 7, ஸ்லோகம் 37 இவ்வாறு கூறு கிறது: “அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதங்களை ஓதினவர் களாயும், நீதி சாஸ்திர வித்வான்களாயும் இருக்கிற பிராமணர்களை உபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதி செலுத்த வேண்டியுள்ளது” என்று கூறுகிறது.
“அந்த பிராமண மந்திரியிடத்தில் தினந் தோறும் நம்பிக்கையுள்ளவனாய் சகலத் தையும் சொல்லி அவருடன் யோசித்து ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டியது” என்றும் மனுதர்மம் போதிக்கிறது.
இன்றை அரசாங்கங்கள் அப்படித் தானே இருக்கின்றன? மத்திய அரசின் உயர் அதிகாரத்தில், தலைமைச் செயலகத்தில், பிரதமர் அலுவலகத்தில், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அமைச்சர்களது அலுவல கத்தில், அனைத்து மாநில கவர்னர்களாக, தலைமைச் செயலாளர் களாக, பல்கலைக் கழகத் துணைவேந்தர் களாக முழுக்கப் பார்ப்பனர்கள்தாளே நிரம்பி இருக்கிறார்கள்? அப்படி இருந்தும் இன்றைய அரசாங்கங்கள் எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள் என்று கூறுகிறார் சோ என்றால் எனன் பொருள்? மண்டல் கமிசன் வந்ததனால் ஆங்காங்கே ஒன்றிரண்டு தாழ்த்தப்பட்ட வர்களும், ஒரு சில பிற்படுத்தப்பட்டவர் களும் இடம் பெற்றிருக்கிறார்களே, அவர்களையெல்லாம் முழுவதும் விரட்டி விட்டு அனைத் தையும் பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பததானே அவருடைய அவா?
அதுதானே மனுதர்மம்? இந்துராஜ்யம் வராமலேயே அந்த மனு கோலோச்சிக் கொண்டு தானே இருக்கிறது? இந்து ராஜ்யம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில் லையே!
ஆனாலும் தினமலர் போன்ற பார்ப்பனக் கூட்டம், மனுதர்மம் எங்கே இருக்கிறது? என்று நக்கல் செய்து மனு தர்மத்தை எரிப்பதன் மூலம் தேவையற்ற வேலையைச் செய்கிறோம் என்று திசை திருப்புகிறது. இவர்களிடம் பார்ப்பன ரல்லாத பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று துக்ளக் பாணியில் எச்சரிக்க வேண் டியது நமது கடமை என்று கருதுகிறோம். தொடர்ந்து அவர்களை அம்பலப்படுத்து வோம்!
- விடுதலை ஞாயிறு மலர், 30.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக