வியாழன், 9 மே, 2024

சனாதன முறையில் குழந்தை திருமணம்

“பிரமாணத்திரட்டு” எனும்  நூல் சனாதனத்தினை விளக்கும் முக்கியமான ஆவணம். இந்த நூல் 1929 ஆம் ஆண்டு மதராஸ் பிரஸிடென்சி வர்ணாஸ்ரம தர்ம மகாநாட்டின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்புப் பதில் அளிக்கும் வண்ணமாக பல சனாதன மூல நூல்களை பிரமாண நூலாகக் கொண்டு எழுதப்பட்ட நூல்.முக்கியமாக சனாதனிகள் திருமணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றி விளக்கும் நூல் இது. வைதிக திருமணம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சனாதனப் பிரமாண  நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் பண்டிட்  U.P.கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள். நூலின் முன் அட்டையில்,

THE M. P. V. D. CONFERENCE MADRAS (1929).- (The Madras Persidency Varnashrama Dharma Conference, Madras)

பிரமாணத் திரட்டு (SCRIPTURAL TEXTS ON
MARRIAGE ETHICS)

COMPILED BY:
U. P. Krishnamacharya of Benares, From the Pandits' Essays, read at the Conference.

PRESIDENT: Dewan Bahadur T. R. Ramachandra Iyer,Advocate, Madras.
FORMERLY MEMBER OF COUNCIL OF STATE.

எனும் விபரங்கள் உள்ளது. மகாநாட்டில் எழுப்பப்பட்ட ஆறு கேள்விகளுக்கு கீழுள்ள சுருக்கமான பதிலைத் தருகிறது இந்நூல்;

1929-ம் வருஷத்திய சென்னைமாகாண வர்ணாச்ரமதர்ம மஹாஸபை
பண்டித பரிஷத்தின் பிரமாணத்திரட்டு.

1-வது கேள்விக்குப் பதில்.

விவாஹம் ஸ்திரீகளுக்கு இன்றியமையாததோர் ஸம்ஸ்காரம் அது ருதுவாகிறதற்கு(வயதிற்கு வருமுன்பே) முன்தான் நடக்கவேண்டும்.

இந்தக் பதிலை நியாயப்படுத்தும் வண்ணம் 15  பிரமாண நூல்களில் உள்ள ஸ்லோகங்களையும் அதன் விளக்கமும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் உள்ள இரண்டு நூல்களின் விளக்கத்தை கீழே தருகிறேன்,

a) संवर्तः - ஸம்வர்த்தா
उपायनोदितः कालः स्त्रीणामुद्वाहकर्मणि ।
तस्माद्र्भाष्टमः श्रेष्टः जन्मतो वाऽष्टवत्सरः ॥ 

ஸ்திரீகளுக்கு விவாஹகாலமானது புருஷர்களுடைய உபநயன காலத்தை குறிப்பிடுகிறது. ஆதலால் கர்ப்பம் முதல் எட்டாவது வயதிலாவது, ஜன்மம் முதல் எட்டாவது வயதி லாவது விவாஹம் செய்வது ச்ரேஷ்டம். ( 2 .11.) 

b) यमः - யம
विवाहश्चोपनयनं स्त्रीणामाह पितामहः ।          
 तस्माद्गर्भाष्टमः श्रेष्टः जन्मतोवाऽष्टवत्सरः II

புருஷனின் உபநயன காலத்தில் ஸ்திரீகளுக்கு விவாஹம் செய்யவேண்டும் என்று பிதாமஹன் சொல்லியிருப்பதால் கர்ப்பம் முதல் எட்டாவது வயதிலாவது பிறந்தது முதல் எட்டாவது வயதிலாவது விவாஹம் செய்யவேணும் ( 6.8.5.11.15) 

2-வது கேள்விக்குப் பதில்

ருதுவிற்குப் பிறகு விவாஹம் நிஷித்தம்; செய்தால் பிதா, கன்னிகை, வரன், ஆகியவர்கள் பிரஷ்டர்களாவார்கள்.

a) आश्वलायनः -ஆஸ்வலாயனர்

अष्टवर्षा भवेद्गौरी पुत्रपौत्रप्रवर्धनी ।

எட்டு வயதுள்ளவள் கௌரீ. அவளை விவாஹ்ம் செய்தால் புத்திர பௌத்திரர்களை விருத்திசெய்வாள்.(16.11.4.15.)

b) आपस्तम्बः, संवर्तः-ஆபஸ்தம்பர்

अष्टवर्षा भवेद्गौरी नववर्षा तु रौहिणी । 
दशवर्षा भवेत्कन्या अतऊर्ध्व रजस्वला ॥

यमः - யம
दृशमे कन्यका प्रोक्ता द्वादशे वृषळी तथा ।

எட்டு வயதுள்ளவள் கௌரீ எனவும், ஒன்பது வயதுள்ளவள் ரோகிணீ எனவும், பத்துவயதுள்ளவள் கன்னிகை எனவும், அதற்கு மேற்பட்டவள் ரஜஸ்வலை எனவும், பன்னிரண்டு வயதுள்ளவள் வ்ருஷளீ எனவும் ஏற்படுகிறது. (6,8,5,4,9,7,1,2,11,14,15,15)

c) संवर्तः, यमः, पराशरः-ஸம்வர்த்தா, யம,பராசரர்

प्राप्ते च द्वादशे वर्षे यदा कन्या न दीयते । 
तदा तस्यास्तु कन्यायाः पिता पिबति शोणितम् II

எந்த பிதா பன்னிரண்டுவயதிலும் கன்னிகையை விவாஹம் செய்து கொடுக்கவில்லையோ அவன் ஒவ்வொரு மாதத்திலும் அவளுடைய ரஜஸ் ஆகிற ரத்தத்தைப் பானம் செய்கிறான். ( 6, 5, 4, 1, 2, 11, 14 ,15.)

d) संवर्तः- ஸம்வர்த்தா
माताचैव पिताचैव ज्येष्ठत्रता तथैवच । 
त्रयस्ते नरकं यान्ति दृष्ट्वा कन्यां रजस्वलाम् II
தாய், தந்தை, தமயன் மூன்றுபேரும் விவாஹம் செய்யாத கன்னிகையை ரஜஸ்வலையாகப் பார்த்துவிட்டால் நரகத்தை அடைகிறார்கள். ( 6, 8, 5, 4, 2, 11 ,14.)

e) बृहस्पतिः -பிருஹஸ்பதி

वृषळीसंग्रहीता यो ब्राह्मणोमद‌मोहितः । 
सततं सूचकं तस्य ब्रह्महत्या दिने दिने ॥

எந்தப்ராம்மணன் மத மோகத்தால் வ்ருஷளியைப் (12 வயதுள்ளவள்)புணர்கிறானோ அவனை எப்போதும் தீட்டு விடுவதில்லை. ப்ரும்மஹத்தி தோஷத்தையும் ஒவ்வொரு நாளும் பெறுகிறான். (15,.11)

f) पैठीनसिः - Paithinasi

'अथ ऋतुमती भवति दाता प्रतिगृहीताच नरकं व्रजेत् ।

ரஜஸ்வலையைக் கொடுத்தால் கொடுத்தவன் வாங்கினவன் இருவரும் நரகத்தை அடைகிறார்கள். (15.12.11)

g) पितामहः - Pitamaha

प्रपितामहश्चेतिविष्टायां जायते । 
तस्मान्नाग्निका देयेति II

ரஜஸ்வலையை விவாஹம் செய்தால் ப்ரபிதாமஹன் முதலியவர்கள் மலத்தில் புழுவாக உண்டாகிறார்களென்றிருப்பதால் நக்னிகையை (உடை உடுத்தாத சிறு பெண்)விவாஹம் செய்து கொடுக்கவேண்டும். (15, 12)

h) बृहस्पतिः, अङ्किराः - பிருஹஸ்பதி,ஆங்கிரஸ்

यस्तां विवाहयेत्कन्यां ब्राह्मणो मदमोहितः । 
अंसभाष्यो ह्यपातयः स विप्रो वृषळीपतिः ॥ 
सततं सूतकं तस्य ब्रह्मङ्ख्या दिने दिने ।

எந்த பிரரம்மணன் வ்ருஷளியை (12 வயதானவள்)மோஹம் கொண்டு விவாஹம் செய்து கொள்ளுகிறானோ அவனுடன் ஸம்பாஷித்து வருவதும் அவனை பந்தியில் சேர்த்து அவனுடன் சாப்பிட்டு வருவதும் கூடாது. ஏனெனில் அவன் வ்ருஷளி பதியாகிறான்.அவனை தீட்டு ஒருபோதும் விடுவதில்லை. அவன் ஒவ்வொரு நாளிலும் ப்ருமமஹத்தி தோஷத்தைப் பெறுகிறான். (6.8,5.4,9.11) 

i) नारदः- நாரதர்
यावन्तश्चार्तवस्तस्याः समतीयुः पतिं विना । 
तावत्यो भ्रूणहत्याःस्युः तस्य यो न ददाति ताम् ॥

கல்யாணமன்றியிருப்பவள் ருதுவாய் எதுவரையில் புருஷனை அடைகிறாளோ அதுவரையில் ஏற்படும் குற்றங்கள் அவள் தகப்பனைப் பற்றியிருப்பதால் அவள் தகப்பன் ப்ரூண ஹத்தி தோஷத்தைப் பெறுகிறான். (6, 5, 14, 11, 15)

i) मरीचिः, माधवीये यमः - மாரிஷி, Madhavi,யம

गोरीं ददन्नाकपृष्टं वैकुण्ठं रोहिणीं ददन् ।
कन्यां ददन् ब्रह्मलोकं रौरवन्तुरजस्वलाम् II

எட்டுவயதுள்ள கௌரியை விவாஹம் செய்து கொடுத்தவன் நாகப்ருஷ்டம் என்கிற நல்லுலகத்தையும், ஒன்பதுவயதுள்ள ரோஹிணியைக் கொடுத்தவன் வைகுண்டத்தையும், பத்து வயதுள்ள கன்னிகையைக் கொடுத்தவன் ப்ரும்ம லோகத்தையும் பெறுவான்; அதற்கு மேல்பட்டவளான ரஜஸ்வலையைக்கொடுத்தவன் நாகத்தை அடைகிறான். (15. 16. 11. 14. 2. 1.7.4 5.8.)

j) वसिष्ठः வசிஷ்டர் 
प्रयच्छन्नग्निकां कन्यां ऋतुकालभयात्पिता । 
ऋतुमत्यां हि तिष्ठन्त्यां दोषः पितरमृच्छति II

ருதுகாலம் நெருங்கிவிடுமென்கிற பயத்தால் பிதாவானவன் நக்னிகையாயிருக்கும் (ஆடை அணியாத சிறுமி) போதே கன்னியைத்தானம் செய்துவிடவேண்டும். ஏனெனில், அவள் ருதுவாகிவிட்டால் பிதாவைத் தோஷம் பிடிக்கிறது. (15, 16. 11. 8.5. 4.1.2)

k) वसिष्ठः- வசிஷ்டர்
यावन्न लज्जिताङ्गानि कन्या पुरुषसन्निधौ । योन्यादीन्यवगूहेत तावद्भवति नग्निका ॥

கன்னிகையானவள் புருஷர்கள் முன்பு வெட்கத்தால் தனது சரீரங்களை மறைத்துக்கொள்ள எதுவரையில் பிரயத்தனப்படவில்லையோ அதுவரையில் நக்னிகை எனப்படுவள்.
(8. 5. 4 1. 2. 11, 15, 16. 12)

l) मनुः - மனு
कालेऽदाता पिता वाच्यः ...... I
எட்டு வயதில் விவாஹம் செய்து கொடுக்காத பிதா வானவன் நிந்திக்கத்தக்கவன். (3, 5, 4, 11.)

m) गौतमः - கௌதமர்
प्रदानं प्रागृतोः । 
अप्रयच्छन् दोषी ॥
ருதுவுக்குமுன் விவாஹம் செய்யவேண்டும். அப்படிக் கொடுக்காவிடில் ப்ருஹ்மஹத்தி தோஷமுள்ளவன்.(3,4,11.)

n)वसिष्ठः - வசிஷ்டர்
यावच्च कन्यामृतवः स्पृशन्ति – ।
भ्रूणानितावन्ति हतानि ताभ्यां मातापितृभ्यामिति धर्मवादः ॥
விவாஹமாகாத பெண்ணுக்கு எவ்வளவு ருது உண்டா யிருக்கின்றனவோ அவ்வளவு ப்ருஹ்மஹத்தி தோஷங்களை தாய் தந்தைகள் அடைகிறார்கள் என்று தர்மச்சொல். ( 11, 16, 13,9.)

o) शौनकः - சௌனகர்
रजस्वलाच या कन्या यदि स्याद्विवाहिता । 
वृर्षळी वार्षलेयस्स्यात् जातस्तस्यां सचैवहि ॥
கல்யாணமாகாத பெண் ரஜஸ்வலையாகிவிட்டால் அவளுக்கு வ்ருஷளீ எனவும், அவளிடம் உண்டான பிள்ளைக்கு வ்ருளீபுத்திரனென்றும் பெயர்.

p) बृहस्पतिः, बृहद्यमः -பிருஹஸ்பதி Brhadyama

वृषळीगमनंचैव मासमेकं निरन्तरम् । 
इह जन्मनि शूद्रत्वं मृतः श्वाचैव जायते II

ஒரு மாதம் முழுவதும் வ்ருஷளீயை அடைந்தவன் இந்த லோகத்தில் சூத்திரனாகவும், மறித்த பின் நாயாகவும் பிறப்பான். ( 4, 16, 11 ,15.)

q) विष्णुः - விஷ்ணு
पितृगेहे तु या कन्या रजो दृष्ट्वा मृता यदि । 
शूद्रवत्तां च संस्कुर्यात् पिण्डदानं कृताकृतम् II

பிதாவின் வீட்டில் விவாஹமாகாத பெண் ருதுவாகி மறித்தால் மந்திரமில்லாமல் சூத்திர சவம்போல் எறிக்க வேண்டும். ( 9 ,11.)

r) भारते - பாரதம்
पितृगेहे तु या कन्या रजः पश्यत्यसंस्कृता । 
माखि मासि स्रवत्तस्याः पिता पिबति शोणितम् ॥

பிதாவின் வீட்டில் விவாஹமாகாமல் ருதுவாகிவிட்டால் ஒவ்வொரு மாதமும் அவள் தகப்பன் ரத்தத்தை பானம் செய்கிறான்.

s) " याति कन्याप्रदातातु स्वर्गलोके महीयते । 
रजस्वलाप्रदाता तु नरकं याति भारत II

பாதனே! கன்னிகையை விவாஹம் செய்து கொடுத்த பிதா ஸ்வர்க்கத்தை அடைகிறான் ரஜஸ்வலையை (வயதுக்கு வந்த பெண்) விவாஹம் செய்து கொடுத்தவன் நரகத்தை அடைகிறான்.

t) व्यासः स्कान्दे, काशीखण्डे - வியாஸரின் ஸ்கந்த புராணம்-காசீ காண்டம்

कन्यां भुङ्क्ते रजः काले अग्निः शशी लोमदर्शने । 
स्तनोद्भेदे तु गन्धर्वः तत्प्रागेव प्रदीयते II
दृश्यरोमा त्वपत्यन्नी कुलप्न्नोद्गतयौवना । 
पितृन्नाऽऽविष्कृतर जास्ततस्ताः परिवर्जयेत् II

कन्यादानफलप्रेप्सुः तस्माद्दद्यादनग्निकाम् । 
अन्यथा न फलं दातुः प्रतिग्राही पतेद्धः II

कन्यामभुक्तां सोमाद्यैः ददद्दानफलं लभेत् । 
देवभुक्तां ददद्दाता न स्वर्गमधिगच्छति II

கன்னிகையின் ரஜஸ் (மாதவிடாய் அல்லது வயதுக்கு வரும்) காலத்தில் அக்னியும், ரோமமுண்டாகும் ஸமயத்தில் ஸோமனும், ஸ்தனமுண்டாகும் ஸமயத்தில் கந்தர்வனும் அனுபவிக்கிறானென சொல்லியிருப்பதால் அதற்கு முந்தியே விவாஹம் செய்யவேண்டும். ரோமமுண்டாகும் காலத்தில் விவாஹம் செய்தால் பிள்ளையைக் கொல்லுபவளும், ஸ்தனமுண்டாகும் ஸமயத்தில் விவாஹம்செய்தால் குலத்தைக் கெடுப்பவளும் ரஜஸ் உண்டாகும் ஸமயத்தில் விவாஹம் செய்தால் பித்ருக்களைக் கொல்லுவதுமாவார்களாகையால், அவர்களை விவாஹம் செய்யக்கூடாது.

கன்னிகாதான பலத்தை அடைகிறவர்கள் அநக்னிகையான(உடை அணியாத சிறுமி) கன்னியைத் தானம் செய்யவேண்டும். இப்படிக் கொடாவிட்டால் பலனில்லை. ப்ரதிக்ரஹம் பண்ணுகிறவனும் கர்மங்களினின்றும் நழுவினவன். ஆகையால் முன்கூறிய தேவதைகளால் அனுபவிக்கப்படாத கன்னிகையைத்தானம் செய்தால் தானபலனை அடைகிறான். அப்படிக் கொடாவிடில் நல்லுலகத்தை அடையமாட்டான்.

3-வது கேள்விக்குப் பதில்.

கர்ப்பாதானம் (ருதுசாந்தி) ஓர் ஸ்ம்ஸ்காரம். அது ருதுவாகி பதினாறு நாள்களுக்குள் செய்யத்தக்கது. இல்லையேல் பாபம் ஸம்பவிக்கும்.

a) बोधायनः, पराशरः - போதாயனர்,பராசரர்

ऋतुस्नातां तु यो भार्या स्वस्थस्तन्नोपगच्छति । 
घोरायां भ्रूणहत्यायां युज्यते नात्र संशयः II

ருதுஸ்நானம் செய்த பெண்டீரை எவன் ரோகமற்றவனாயிருந்தும் அடையவில்லையோ அவன் மஹத்தான ப்ரூண ஹத்தியை அடைவானென்பதில் ஸந்தேகமில்லை.

b) बोधायनः - போதாயனர்

चतुर्थीप्रभृत्याषोडशीमुत्तरामुत्तरां युग्मां उपैति प्रजानिश्रेयस मृतुगमनमित्याचार्यः ।

ருதுஸ்நானம் செய்த நாலாம் நாள் முதல் பதினாறு நாளும் இரட்டைப்பட்ட  நாளில் அடைந்தால் நல்ல பிள்ளைகளை அடைந்து ச்ரேயஸ்ஸாக இருக்கலாமென்று ருது கமனத்தை போதாயனாசார்யர் சொன்னார் ( 3, 7 ,11.)

4-வது கேள்விக்குப் பதில்.

புத்திபூர்வக பாபத்திற்குப் பிராயச்சித்தம் விதிக்கப்படவில்லை. தவறுதலாகச் செய்யப்பட்டு, பச்சாத்தாபமுண்டானால் அத்தகையவர்கட்கே பிராயச்சித்தம் விதிக்கப்பட்டதாகும்.

a) जाबालिः- ஜாபாலி
अकामकृतपापानां ब्रुवन्ति ब्राह्मणा व्रतम् ।

அறியாமல் செய்த பாபத்திற்குத்தான் பிராம்மணர்கள் பிராயச்சித்தம் விதிப்பார்கள்.(2)

5-வது கேள்விக்குப் பதில்.

புருஷன் தன் வயதைவிட குறைந்த வயதுள்ள பெண்ணையே விவாஹம் செய்யவேண்டும். புருஷன் வயதைவிட அதிக வயதுள்ள பெண்ணை ஒருக்காலும் விவாஹிக்கக்கூடாது.

a) आश्वलायनः - ஆஸ்வலாயனர்

अष्टवर्षा भवेद्गौरी पुत्रपौत्रविवर्धनी । 
पञ्चविंशतिवर्षीयस्तां कन्यामुद्वहे‌न्द्विजः II
8-வயதுள்ள கௌரீ என்பவள் புத்திர பௌத்திரர்களை விருத்திசெய்யக்கூடியவள் அவளை 25-வயதுள்ள புருஷன் விவாஹம் செய்துகொள்ளவேண்டும்.

b) बृहस्पतिः - பிருஹஸ்பதி

त्रिंशद्वर्षो दशाब्दान्तु भार्या विन्देत मानवः । 
एकविंशतिवर्षो वा सप्तवर्षामवाप्नुयात् II

முப்பது வயதுள்ள புருஷன் 10 வயதுள்ள ஸ்திரீயை யும், 21 வயதுள்ள புருஷன் 7 வயதுள்ள ஸ்திரீயையும் விவாஹம் செய்துகொள்ளலாம். ( 3, 7, 1, 2, 11 ,16.)

c) विष्णुः- விஷ்ணு
वयोधिकां नोपगच्छेत् दीर्घा कन्यां स्वदेहतः । 
स्ववर्षात् द्वित्रिपश्वादिन्यूनां कन्यां समुद्वहेत् II

தன் வயதைக்காட்டிலும் 2,3,5 வயதுக்குக் குறைந்தவளை விவாஹம் செய்துகொள்ளவேணும். தன் வயதைக் காட்டிலும் அதிக வயதுள்ளவளையும் தன்னைக்காட்டிலும் உயரமுள்ளவளையும் விவாஹம் செய்யக்கூடாது. ( 3 ,11.)

d) विष्णुः- விஷ்ணு
वर्षेरेकगुणां भार्यामुद्वहेत् त्रिगुणो वरः । 
त्र्यष्टवर्षोऽष्टवर्षा वा वयोमात्रा वरा नच ॥

பெண்ணைக்காட்டிலும் வரன் வயது ஒரு பங்கு அதிகமாவது மூன்று பங்கு அதிகமாவது இருக்கவேண்டும். 24 வயதுள்ள வரன் 8 வயதுள்ளவளை விவாஹம் செய்துகொள்வது குற்றமன்று. 2, 3 மாதக் குறைவுள்ளவள் எக்காலத் திலும் விவாஹத்திற்குறியவளன்று. ஒரு வயதாவது வித்தியாஸம் வேண்டும். ( 3, 2, 11, 14 ,15.)

e)मनुः - மனு
त्रिंशद्वर्षो वहेत्कन्यां हृद्यां द्वादशवार्षिकीम् । 
त्र्यष्टवर्षोऽष्टवर्षा वा धर्मे सीदत्ति सत्वरः ॥

தர்மம் செய்ய த்வரையுள்ளவன் முப்பது வயதுள்ள வரன் பன்னிரண்டு வயதுள்ள பெண்ணை விவாஹம் செய்து கொள்ளலாம். 24-வயதுள்ளவன் 8-வயதுள்ள பெண்ணை விவாஹம் செய்யலாம். (4, 5, 14, 15, 16, 11)

f) आपस्तम्बः- ஆபஸ்தம்பர்
वर्षकारों च वर्जयेत् ।
புருஷன் பிறந்த வருஷத்தில் பிறந்தவளை விவாஹம் செய்யக்கூடாது. (11)

6-வது கேள்விக்குப் பதில்.

ஸ்திரீகள் பதிக்குப் பணிவிடை செய்வதாலேயே இஹபர ஸௌக்கியங்கள் யாவற்றையும் எளிதில் பெறமுடியும். தான் தோன்றியதாகத்திரியும் ஸ்திரீ இச்சுகங்களை இழப்பதுடன் பரலோகத்திலும் நரகாதி பல துன்பங்களை அடைவாள்.

இந்தப் பதில்களோடு வேறு முக்கியமான மூல நூல்களின் ஸ்லோகங்களையும் அதன் விளக்கங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளவற்றைக் கீழே தருகிறேன்,

a) विष्णुसंहिता मनुः - விஷ்ணு சம்ஹிதை, மனு

नास्ति स्त्रीणां पृथग्यज्ञो नव्रतं नाप्युपोषितम् ।
पतिं शुश्रूषते यत्तु तेन स्वर्गे महीयते II
ஸ்திரீகட்கு யக்ஞம், விருதம், உபவாஸம் முதலிய இவை கள் தனியே ஏற்படவில்லை. பதிக்குப் பணிவிடை செய்வதாலேயே ஸ்வர்க்கம் பெறுவாள்.(12,1.1)

b) महाभारते -மகாபாரதம்

यमोऽथ लोकपालस्तु बभाषे पुष्कलं वचः । 
माशुचस्सन्निवर्तस्व न लोकास्स्रन्ति तेऽनघे II
स्वधर्मविमुखा नित्यं कथं लोकान् गमिष्यसि । 
दैवतं हि पतिर्नार्याः स्थापितस्त्रर्वदेवतैः. II
मोहेन त्वं वरारोहे न जानीषे स्वदैवतम् । 
पतिमत्यास्त्रिया लोके धर्मः प्रत्यर्पितस्त्विति ॥
अनृतावृतुकाले च मन्त्रसंस्कारकृत्पतिः । 
सुखस्य नित्यं दातेह परलोके च योषितः ॥ 
अश्शीलः कामवृत्तो वा गुणैर्वा परिवर्जितः । 
न स्त्रियाः परिवर्ज्यस्स्यात् सततं दैववत्पतिः II
पाणिग्रहस्य साध्वी स्त्री जीवतो वा मृतस्य वा । 
पतिलोकमभीप्सन्ती नाचरेत् किञ्चिदप्रियम् ॥ 
बालया वा युवत्या वा वृद्धया वापि योषिता । 
न स्वातन्त्रेण कर्तव्यं कार्य किंचित् गृहेष्वपि ॥

லோகபாலனான யமன் அர்த்தபுஷ்டியுள்ள வார்த்தை சொல்லுகிறான். தோஷமற்ற பெண்ணே ! சற்றும் வருத்த மடையாதே! நீ குற்றமற்றவளாயினும் உனக்கு நல்லுலகம் கிட்டாததாகையால் திரும்பி என்னுடன் வரவேண்டும். பாபங்களில் புகா தவளாயினும் ஸ்வதர்மத்தில் சிரத்தையற்ற நீ நல்லுலகம் எவ்விதம் பெறுவாய். பெண்டீருக்குக் கணவன் தெய்வமென்று தேவர் முதலானவர்களால் நிலைநாட்டப்பட்டிருப்பதை நீ மோகத்தினால் சற்றும் அறியவில்லை. இவ்வுலகத்தில் பதியோடு கூடின பெண்டீருக்குக் கணவன் அருகிலிருக்கும் மஹாதேவதையாகிறான். கணவன் பரலோகத்திலும் இகலோகத்திலும் ஸ்திரீகளுக்கு நல்ல சுகத்தையும், ருதுகாலத்திலும் அஃதில்லாதகாலத்திலும் மந்திர பூர்வகமான ஸம்ஸ்காரத்தையும் செய்து வருகின்றான், ஆதலால் அவன் சீலம், நற்குணம் இவைகளைப் பெறாமல் விடாக்காமம் கொண்டவனாயிருப்பினும் அவனைப் பெண்டீர் தள்ளிவிடமுடியாது.

ஏனெனில் அவன் இகபர லோகங்களில் சுகத்தைத் தரும் தெய்வத்திற்குச் சமானமாகிறான். நற்கதியைப் பெற பிரியமுள்ளவள் தன் கணவன் பிழைத்திருக்கின்றவனாயினும், இறந்தவனாயினும் அவனுக்கு எக்காலத்திலும் தீங்கு நினைப்பது கூடாது. அன்றியும் இளைமையிலும் யௌவனத்திலும், முதிர்மையிலும், புருடனது அனுமதியை விட்டு வீட்டில் எதையும் தனக்கிசைந்தபடி செய்து வருவது கூடாது. (11)

c) बोधायनः - போதாயனர்
भर्तृहिते यतमांना स्वर्ग लोकं जनयेरन्निति ।
பர்த்தாவுக்கு ஹிதமான பணிவிடை செய்பவள் ஸ்வர்க்க லோகத்தைப் பெறுகிறாள். (11)

########
இந்த நூலில் உள்ள செய்திகள் சனாதனிகளுக்கு அதிர்ச்சியளிக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால் அவர்களை உயர்வாக க் கருதி அடிமை வாழ்வு வாழும் சிலருக்கு பிற்போக்குத்தனமான வைதிக சனாதனிகளின் போக்கு அதிர்ச்சி அளிக்கலாம்.
உனக்கு சமஸ்கிருதம் தெரியுமா நூலை எழுதியவர்கள் தவறாக மொழியாக்கம் செய்துள்ளனர் என்கிறவர்கள் தாராளமாக தங்கள் பொய்களை அவிழ்த்து விடலாம்.

மேலுள்ள செய்திகளோடு தொடர்புடைய மற்ற நூல்களைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

குறிப்பு: 
பிரமாணத்திரட்டு நூலின் எல்லா பக்கங்களையும் இணைத்துள்ளேன்.

- தினகரன் செல்லையா முகநூல் பதிவு, 05.05.24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக