ஞாயிறு, 5 மே, 2019

பெரியார் - வீரமணி - மு.க.ஸ்டாலின் இவர்களை சுற்றி சுற்றிவரும் ஆரியம்!

தந்தை பெரியார் பார்ப்பனர்களை அனாவசியமாக திட்டுகிறார் - வீரமணி அவர் வழியைப் பின்பற்றி சதா பிராமணர் களைக் குறை கூறிக் கொண்டே இருக்கிறார்.
கிருஷ்ணனைப் பற்றிப் பேசி ஹிந்துக் களின் மனதைப் புண்படுத்துகிறார். கருணா நிதி இந்துக்களைத் திருடன் என்று சொல்லி விட்டார், மு.க.ஸ்டாலின் புரோகிதக் கல்யா ணத்தை அதில் கூறும் மந்திரங்களைக் கொச்சைப் படுத்திப் பேசி வருகிறார்.
ஊருக்கு இளைச்சவன் ஹிந்துக்கள் தானா? இவர்களை  முஸ்லீம்கள் பற்றி பேசச் சொல்லுங்கள் பார்ப்போம், கிறித்தவர்கள் பக்கம் கை நீட்டச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று மூக்கைச் சொரிந்துவிடும் வேலையில் ஒரு கூட்டம் சதா ஈடுபட்டுக் கொண்டிருக்கி றது!
பக்திப் பற்றி பேசுகையில் பார்ப்பனரல் லாத மக்களுக்கே பார்ப்பனரின் நோக்கம் என்ன? உள்ளார்ந்தம் என்ன? உண்மையி லேயே அவர்களின் வேதங்களும், ஸ்மிருதி களும், உப நிஷத்துக்களும், இதிகாசங்களும், புராணங்களும் என்னதான் கூறுகின்றன என்பது பற்றி கடுகு மூக்கு அளவுக்குக்கூடத் தெரிந்து கொள்ளாமலும், பக்திக்கும் பகுத்தறி வுக்கும் ஏதோ சண்டை போலும். ஆத்திகத் துக்கும் நாத்திகத்துக்கும் நடக்கும் போர் போலும் என்று நினைத்துக் கொண்டு, நான் கடவுள் பக்தன், ஆகவே நானும் அவாளும் பக்தர்தான் என்று பம்மிக் கிடக்கும் பார்ப் பனர் அல்லாத மக்கள்தான் அந்த ஆதிக்கக் கூட்டத்தின் மிகப்பெரும் பலம்.
அடியாட்கள் தேவைப்பட்டால் ஹிந் துக்களே ஒன்று சேருங்கள்!! என்று இராம. கோபாலன்கள் குரல் கொடுப்பார்கள்.
மற்றபடி சங்கர மடத்தில் ஒரு பியூன் வேலைக்கு கூட அவர்கள் நெருங்கவே முடியாது. அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை ஒரு அரசு நிறைவேற்றினால், அவர்களும் இந்துக்கள் தானே என்ற உணர்வு அறவே வராது. உச்ச நீதிமன்றத்துக்கே செல்லவில் லையா?
13 பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்களே! சங்கராச்சாரியார் அதன் பின்னணியில் இருந்தாரே! பல்கி வாலா என்ற பிரபல வழக்குரைஞருக்கு ராஜாஜி சிபாரிசு செய்யவில்லையா?
வைகானாச ஆகமம் என்ற ஒன்றை எடுத்துக்காட்டிச் சூத்திரர்கள் கோயிலில் அர்ச்சகர் ஆக முடியாது என்று வாதாடவில்லையா?
அஷ்டோத்ர சதாய்ஹி சூத்ரைஹி சமஸ்புர்சே ஸ்னாபயேத் தடோ
மகாசாந்திம் ததா ஹுத்வா பிராமணாளி போஜயேத்
ஸ்புர்வைஹி அனுலோனயஹி சூத் ரோத பிராயஸ், சமாச்சரேத்.
விக்கிரகம் சூத்திரர்களால் (நாலாவதான உழைக்கும் சமுகம்) தொடப்பட்டு விட்ட தானால் சாமி தீட்டுப்பட்டு, பின்னர் நூற்றி யெட்டுக் கலசங்களை வைத்து, முறைப்படி வணங்கிய பின், பிம்பங்களுக்குச் சம்ப் ரோட்சணம் செய்யப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்யப்பட வேண் டும். அனுலோமர்களால் தொடப்பட்டு விட்டதானால், பின்னர் பிராயச்சித்தம், சூத்திர ஸ்பர்சத்துக்கு விதிக்கப்பட்டிருப்பது போல் செய்யப்பட வேண்டும் என்று அவர்களின் ஆகமம் சொல்லுவதாக உச்சநீதிமன்றத்தில் சொல்லவில்லையா?
சூத்திரன் பக்தன் இல்லையா? ஆகமங் களைத் தெரிந்திருந்தாலும் அவன் அர்ச்ச கப் பயிற்சிப் பெற்று இருந்தாலும் அவன் தொட்டால் சாமி தீட்டாகிவிடுமாம்! அதற் காக 108 கலசங்களை புதிதாக செய்து வைக்க வேண்டுமாம்! பிராமணப் போஜ னம் செய்யப்பட வேண்டுமாம் - அது என்ன பிராமண போஜனம்?
சூத்திர இழிவும், பிராமண உயர்வும் கட வுளின் கோயிலின், பக்தியின், வழிபாட்டின் பெயரால் நிலை நிறுத்தப்படவில்லையா?
ஏதோ இவர்களின் ஹிந்து மதத்தில் எந்தவித வேற்றுமையும், துவேஷமும் இல்லாதது போலவும், பெரியாரும் வீரமணி யும், கலைஞரும், ஸ்டாலினும் இட்டுக் கட்டிச் சொல்லுவது போலவும் ஒரு பம்மாத்தை, ஒரு பிம்பத்தை அவர்களுக்கு இருக்கிற பார்ப்பன ஊடகப் பலத்தால் ஊதிப் பெரிதாக்கிக் காட்டுவதும், அதனை நமது மக்களின் பாமரத்தனமான பக்திப் போதை யேறிய கண்கள் பூத்துப்போய் பார்ப்பனீ யத்துக்குச் சரணம் பாடும் நிலைதானே ஏற்பட்டுள்ளது!
எச்சரிக்கை!
பாதிக்கப்பட்டவர்கள் நாம் - பாதிப்புக்கு காரணமானவர்கள் பார்ப்பனர்கள். ஆனால் பாதிப்புக்குக் காரணமானவர்களின் அலறல் சத்தம் அதிகமாக கேட்கிறது - பாதிக்கப்பட்டவர்களாகிய நாம் அடக்கி வாசிக்க வேண்டுமாம்! இதுதான் இன்றைய நிலை!
திருப்பி அடிக்காவிட்டால் நியாயம் அநியாயமாகவும், அநியாயம் நியாயமாகவும் கருதப்படும் நிலை ஏற்பட்டு விடும் - எச்சரிக்கை!
இந்த நிலை நீடிக்கப்பட வேண்டும், கட்டிக் காக்கப் பட வேண்டும், அப்போதுதான் பார்ப் பான் பிராமணனாக, பிர்மாவின் நெற்றியில் பிறந்தவனாக சூத்திரன் பிர்மாவின் காலில் பிறந்ததால் வேசி மக்களாக (மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 4, 5) இருக்க முடியும்.
இதைச் சுட்டிக் காட்டினால், எடுத்துக்காட் டினால் அய்யோ ஹிந்து மதத்தை எதிர்க் கிறார்களே, தூஷிக்கிறார்களே! என்று சத்தம் போட்டால் அடங்கி விடுவோமா? அஞ்சி விடுவோமா?
சூத்திரன் ஒருவன் தவமிருந்தான் - அதனால் பிராமணக் குழந்தை ஒன்று இறந்துவிட்டது என்று கூறி பார்ப்பான் ஒருவன் வந்து புலம்பிட, உடனே தவமிருந்த சூத்திர சம்புகனை ராமன் வாளால் வெட்டிக் கொல்ல, செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர்ப் பிழைத்து விட்டது என்று கூறும் இராமாய ணத்தை இன்றைக்கும் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்!
அந்த இராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டுவோம் என்று ஒரு கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுகிறது என்றால், இவர்கள் இந்த 2019லும் எந்த எண்ணத்தோடு இருக்கிறார்கள் என்பதை திராவிடர் கழகமோ, அதன் தலைவர் மானமிகு வீரமணி அவர் களோ எடுத்துப் பேசினால் வீரமணி ஹிந்து மதத் துவேஷி என்ற முத்திரையா?
அந்த ராமராஜ்ஜியத்தை உருவாக்குவார் களாம்! பக்திப் போதையில் இடுப்பு வேட்டி அவிழ்வது கூடத் தெரியாமல் மயங்கிக் கிடக்கும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் திராவிடர் கழகத்தின் பணியை திசைமாற்றிப் பேசி திரிபுவாதம் செய்து மடை மாற்றம் செய்து விட முடியாது.
தந்தை பெரியார் எழுதிய இராமயணப் பாத்திரங்கள் என்ற தமிழில் வெளிவந்த “ramayana  A true reading” என்ற ஆங்கில நூலுக்கு - சச்சு ராமாயண் எனும் இந்தியில் வெளிவந்த நூலுக்கு எந்த ஜீயர், எந்த கொம்பர் இதுவரை ஒரே ஒரு வரியை மறுத்து எழுதினார்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று பகவான் (?) கிருஷ்ணன் கீதையில் (அத்தியாயம் 9, சுலோகம் 32) கூறுகிறான்.
மாம் ஹி பார்தசு வ்யபாஸ்சுரித்ய யே2பி ஸ்யு: பாபயோநய: | ஸ்த்ரியோ வைஸ்சுயாஸ்ததாசு ஸூசுத்ஞுராஸ்தே2பி யாந்தி பராம் கஞுதிம் || 9- 32||
இப்படிக் குறிப்பிட்டுள்ளதற்கு இஞ்சிக் குடிகளும், வேளுக் குடிகளும், மடி சஞ்சி களும் என்ன பதிலை வைத்துள்ளார்கள்?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களால் எழுதப் பட்ட கீதையின் மறுபக்கம் எனும் நூல் 1998இல் வெளியிடப்பட்டு இதுவரை பல பதிப்புகளாக பல லட்சம் நூல்கள் மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந்துள்ளனவே. ஆங்கிலத்தில் BHAGAVAD GITA MITH OR MIRAGLE என்ற பெயரில் வெளி வந்துள்ளனவே - குருமூர்த்திக ளுக்குத் தெரியுமா?
ஹிந்துத்துவாவையும் சாஸ்திரங்களை யும் கரைத்துக் குடித்ததாகத் தம்பட்டம் அடிக்கும் ஒரே ஒரு சாஸ்திரி, திராவிடர் கழகத் தலைவரின் ஆய்வு நூலின் ஒற்றை வரிக்காவது மறுப்பு சொன்னதுண்டா? முடியுமா?
இதற்கு மட்டுமல்ல. விடுதலை இவர் களை நோக்கி விடுத்த கணைகளுக்கு எப்பொழுது பதில் அளித்தார்கள்? புறமுது கிட்டு அவர்கள் ஓடியதுதானே மிச்சம்.
கண்ணாடிப் பரம்பரையாச்சே! மத்தி யிலும் மாநிலத்திலும் அவாளின் அதிகாரம் இருக்கும் காரணத்தால் பூணூலை உருவி விட்டுக் காட்டலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.
திருச்சி - கருஞ்சட்டைப் பேரணியைப் பார்த்த ஞாபகம் இருக்கட்டும்!
இளைஞர்கள் எழுச்சி கொண்டு விட்டார்கள், மறுபடியும் ஆரிய திராவிட இனப் போரை நடத்துவதற்கு ஆரியம் முன்வந்தால் அதை வரவேற்பது எங்கள் கடமைதானே!
துக்ளக்கும், விஜயபாரதமும், தினமல ரும் சுற்றிச் சுற்றி பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் கொச்சைப்படுத்தி வருகின்றன. அது அவர் களின் பாஷை - நாம் அறிவாயுதத்தால் சந்திப்போம். கன்னியாகுமரி கடைக்கோடி இளைஞ னையும் திரட்டுவோம் ... துள்ளாதே ஆரியமே!
என்ன கொடுமையென்றால் இழிவுபடுத் துவது அவர்கள் - அதை எதிர்ப்பது பாதிக் கப்பட்ட நாங்கள் - ஆனால் கூச்சல் என்ன தெரியுமா? அவர்கள் பாதிக்கப்பட்டது போல! இந்த எத்து வேலையெல்லாம் பெரியார் காலத்துக்கு முன் எடுபட்டு இருக்கலாம் - அண்ணாவும், கலைஞரும், வீரமணியும் எழுதியதற்கு முன்பு எடுப்பட்டு இருக்கலாம். இது பெரியார் சகாப்தம் - எச்சரிக்கை!
-விடுதலை ஞாயிறு மலர், 20.4.19

'தட்கலும்' சனாதனமும் ஒன்றா?

அகிலாண்டேஸ்வரி: சனாதன தர்மம் பிறப்பால் - மனிதனைப் பிரித்து வைத்திருப்ப தாகத் திராவிட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. உண்மையில் சனாதன தர்மம், பிறப்பால் மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறதா?
வேளுக்குடி கிருஷ்ணன்: நம்முடைய கைகளில் அய்ந்து விரல்களும் ஒரே அளவில் இருந்தால், நம்மால் எந்த ஒரு வேலையையும் சரிவரச் செய்ய முடியாது. அதே போல் மனிதப் பிறப்பில் வேறுபாடு இல்லாமல் இருந்தால், உலகம் இயங்க முடியாது. இருநூறு ஆண்டு களுக்கு முன்பு தேவைக்காக, மனிதப் பிறப்பில் இருந்த வேறுபாடுகளை, உயர்வு - தாழ்வு என்று மாற்றி, இவர்களெல்லாம் கோவிலுக்கு வரக்கூடாது என்று ஒரு சிலர் தவறாக நடந்து கொண்டார்கள். மனிதப் பிறப்பில் வேறுபாடு இருக்கிறதே தவிர, உயர்வு - தாழ்வு கிடையாது.
சனாதன தர்மத்தின்படி, யாரும் கோவிலுக்குள் போகலாம், கடவுளைத் தரிசிக் கலாம். எங்கு யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது நியதிக்கு உட்பட்டது. சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும், சிலரைத் தாழ்த்தியும் நடத்து கிறார்கள் என்று சொல்கிறோம். அரசாங்கம் நடத்தும் ரயில்வே துறையில் தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று இருப்பது எதற்காக? பணம் இருப்பவனுக்கு மட்டும் தான் அவசர வேலை வருமா என்ன? அரசாங்கமே பணம் படைத்தவன், பணம் இல்லாதவன் என்று ஏன் பிரிவினை ஏற்படுத்து கிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை . தங்களுடைய அரசியல் லாபத்திற்காக சனாதன தர்மத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் குறை கூறுகிறார்கள்.
(துக்ளக், 13.3.2019, பக். 31)
இவர்களின் விவாதத்தினைப் பார்த்தீர்களா? சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும், சிலரைத் தாழ்த்தியும் வைக்கவில்லையாம்! சிலர் தவறாக நடந்து கொண்டார்களாம். யார் அப்படி நடந்து கொண்டவர்கள்? ஏன் மூடு மந்திரம்? சாமர்த்தியமாக பதில் சொல்ல வந்த இடத்தில் கூட சமாளிக்க முடியாமல் உண்மையை ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதை கவனியுங்கள். அய்ந்து விரல்கள் ஒன்றாக இல்லையாம் - கேட்டுக் கேட்டு புளித்துப் போன வெண்டைக் காய் விளக்கெண்ணெய் விளக்கம் இது!
சரி, அவர்கள் கூற்றுப்படியே பார்ப்போம்! கட்டை விரல் பிராமணன், சுண்டு விரல் சூத்திரன், நடுவிரல் வைசியன், ஆட்காட்டி விரல் சத்திரியன் என்ற பேதம் உண்டா? சுத்த உளறல் - பேத்தல் - இவர்கள்தான் அவாளின் உச்சக்கட்ட அறிவுக் கொழுந்துகளாம் அறிவுக் கொழுந்துகளாம் - வாயால் சிரிக்க முடிய வில்லை. அரசியலுக்கு சென்றவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்று கருதி விளையாடிப் பார்க்கிறார்கள். இதனை நம் திராவிட இயக்கத்தினர் புரிந்து கொண்டு பதிலடி கொடுத்தால் அந்த நொடியிலேயே தீர்ந்தது கதை.
பார்ப்பனர்களே உங்கள் முதுகில் பூணூல் எதற்கு? அதன் தாத்பர்யம் என்ன? பூணூல் போட்டவுடன் பார்ப்பனச் சிறுவன் துவிஜாதி (இரு பிறப்பாளன்) ஆவது எந்த அடிப்படையில்?
அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் - மறுமைக்கும் உரிய உபயோக மான கருமங்களைத் தனித்தனியே படைத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1, சுலோகம் 87).
இதுதான் ஹிந்து சனாதனத்தில் உயர்வு - தாழ்வுக்கு இடமில்லை என்பதற்கு ஆதாரமா?
சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும், சிலரைத் தாழ்த்தியும் நடத்துகிறார்கள் என்று சொல்லுகிறோம். அரசாங்கம் நடத்தும் ரயில்வே துறையில் தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று இருப்பது எதற்காக? பணம் இருப்பவனுக்கு மட்டும்தான் அவசர வேலை வருமா என்ன? அரசாங்கமே பணம் படைத்தவன், பணம் இல்லா தவன் என்று ஏன் பிரிவினை ஏற்படுத்துகிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை. தங்களு டையே அரசியல் லாபத்திற்காக சனாதன தர்மத் தைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் குறை கூறுகிறார்கள் என்று துக்ளக்கில் மூக்கைச் சிந்தி ஒப்பாரி வைக்கிறார் திருவாளர் வேளுக்குடி கிருஷ்ணன்.
தட்கல் - ப்ரீமியம் தட்கல் போல ஹிந்து மதத்தில் பார்ப்பனர்கள் அப்படி உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறாரா? பொருளாதாரம் வளர்ந்தால் யார் வேண்டுமானாலும் அதில் பயணம் செய்யலாம். ஆனால் சனாதன தர்மத்தில் அவ்வாறு கிடையாதே! பிறப்பு தானே ஒருவனை நிர்ணயிக்கிறது? அதுவும் மறுமைக்கும், இம்மைக்குமான கருமங்களைத் தனித் தனியே வகுத்தாராம் பிர்மா - இது எப்படி தட்கலுக்கு ஒப்பீடாகும்?
கடைசியாக ஒரு கேள்வி; வேறொரு அரசு வந்து தட்கல், ப்ரீமியம், தட்கலை ஓர் ஆணை மூலம் எடுத்துவிட்டால் கதை தீர்ந்தது. அதுபோல ஹிந்து மதத்தில் சனாதனத்தை ஒழித்துக் கட்டத் தயாரா?


சாத்திரத்தில் உள்ளது உள்ளபடி வைத்து விவாதமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர் என்பதை இது எடுத்துக்காட்டவில்லையா?
 -விடுதலை ஞாயிறு மலர், 20.4.19

வர்ணஜாதிப் பாகுபாடுகளும், இழிவுகளும்

இந்தியாவில் வாழ்ந்த ஆதிகுடிமக்களின் சமூகத்தில் ஜாதிப் பிரிவினைகள் இருக்க வில்லை. இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்து குடியேறிய பிறகே இந்த பிரிவுகள் ஏற் பட்டதாகத் தோன்றுகிறது. பொதுவான ஒரு பெயரைத் தாங்கியிருக்கும்,  பொதுவான ஒரு தோற்றத்தைப் பெற்றிருக்கும், பாரம்பரியமாக செய்யும் ஒரு தொழிலைப் பெற்றிருக்கும், பொது வடிவிலான வழிபாடு, சடங்குகள், கொண்டாட்டங்கள், சம்பிரதாயங்களைக் கொண்டிருக்கும், ஒன்று போலவே இருக்கும் குழு அல்லது குழுக்களின் தொகுப்பில் இருக்கும்,  இது போன்ற மற்ற குழுக்களில் இருந்து தனிப்பட்ட, ஒரு தெளிவான, அடை யாளம் காணக் கூடிய சமூகக் குழுவினர் என்று தங்களைத் தாங்களே கருதிக் கொள்ளும் அவர்களை மற்றவர்களும் அவ்வாறே கருதி வருவது என்பதையே  ஜாதி என்பதற்கான விளக்கமாகக் கூறலாம். இந்திய ஜாதி அமைப்பில் பொருளாதார, சமூக, மத அம்சங்கள் அடங்கியுள்ளன.
பொருளாதார ரீதியில் மக்கள் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை அது நிர்ணயிப்பதுடன், எதனை செய்யக் கூடாது என்று அதுவே தடுக்கவும் செய்கிறது. மத ரீதியில் ஒவ்வொரு ஜாதியும் செய்யவேண்டிய சடங்குகளையும், பின்பற்ற வேண்டிய சம்பிரதாயங்களையும் அது வரையறை செய்கிறது. ஒருவனது ஜாதியின் சடங்குகளைக் கடைப்பிடிப்பது மற்றும் சடங்குகளை செய்வதைப் பொருத்து  சமூக ஏற்பாட்டில் அவனது நிலை தீர்மானிக் கப்படுகிறது.  இந்திய ஜாதி அமைப்பின் முக்கிய பண்பாக விளங்கும் ஒருவனது செயல்களும் மற்றும் ஜாதி அந்தஸ்தில் அவனது நிலையும், ஒருவன் தொடர்ந்து தனது ஜாதிக்குள்ளாக மட்டுமே திருமணம் செய்து வந்ததால், தொடர்ந்து நீடித்து வந்தன.
1881 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 257 பெரும் ஜாதிகளும், 19,044 உப ஜாதிகளும் இருந்துள்ளன. இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவன் ஜாதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் முடியாது; மாற்றிக் கொள்ளவும் முடியாது. அவனது பிறப்பினால் மட்டுமே வருவது அது. பழங்காலந்தொட்டு, முடிவற்ற பல்வேறுபட்ட ஜாதி மரபணு மாற்றத்தினா லும், கலப்பினாலும், ஜாதிகளின் எண்ணிக்கை பெருகி வந்துள்ளன.  நிர்ணயிக்கப்பட்ட ஜாதி பழக்கவழக்கங்களைப் பின்பற்றத் தவறுவது,  சமூக நடைமுறைகள், மதக்கலாச்சாரம், சடங்குகள் சம்பிரதாயங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக  மாற்றங்களை ஏற்றுக் கொள்வது, இணைவது அல்லது பிரிவது என்ற முறையில் புதிய ஜாதிகள் உருவாவ தற்கான காரணங்களாகிறது.
அரசியல் ரீதியிலான கூட்டணிகள் கொண்ட இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட சமூகத்தை பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் என்று நான்கு குழுக்களாகப் பிரிக் கப்படுவதற்கு வழி வகுத்தன. சமஸ்கிருதத்தில் வர்ணம் என்றால், பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதையும்,  ஜாதி என்றால் இந்த நான்கு வர்ணங்களுக்குள் உருவான பல்வேறுபட்ட ஜாதிகள் என் பதையும் குறிப்பவையாகும்
வேதகாலத்துக்குப் பிந்தைய கால இந்திய சமூகத்திற்கு  சதுர் வர்ண என்ற நான்கு ஜாதிப் பிரிவினை பொருந்தாது. வர்ணநடைமுறைக்கு வெளியே அமைந்தி ருந்த அவர்ண ஜாதிகளை சேர்த்ததால் அவர்ணா (பஞ்சமர்) என்ற அய்ந்தாவது வர்ணம் உருவானது. சில ஜாதி மக்கள் வர்ணஜாதி தர ஏற்ற இறக்க வரிசை முறையில் தங்களைத் தாங்களே முன் நிலைக்குக் கொண்டு வர முயன்றதாலும்,  ஜாதிகளின் எண்ணிக்கை பெருக்கத்தாலும், இந்த நான்கு வர்ண பிரிவினையில் குழப்பம்  ஏற்பட்டது. சென்னை மாகாணத் தில்  சத்திரிய, வைசிய வர்ண மக்கள் குறைந்துவிட்டதால்,  பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று வர்ணங்கள் மட்டுமே இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற் பட்டது. இவ்வாறு சமுதாய ஏற்றத் தாழ்வுப் பட்டியலில் பஞ்சமர்கள் கீழ்நிலையில் வைக்கப்பட்டனர்.
ஒரு பார்ப்பனரால் மட்டுமே கோயில் அர்ச்சகராக ஆகமுடியும். ஆனால் அவனால் அரசு அதிகாரியாகவோ, ராணுவ வீரனாகவோ ஆக முடியாது. குறிப்பாக அவன் எப்போதுமே விவசாயியாக ஆகமுடியாது.
- (சென்னை மாகாணத்தின் சிறுபான்மையின மக்கள்
- முனைவர் எஸ். சரஸ்வதி, இந்தோலாஜிகல் புத்தக நிலையம், மைலாப் பூர் சென்னை-4)
தீண்டாமை
தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமானது என்பதையும்,  அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறது என்பதையும், தீண்டாமை ஒழிந்தால்தான் நாட்டில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ முடியும் என்பதை இப்போது அனைத்துக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்து மதத்தை சாராதவர்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்களும், இந்துமதப் பற்றுடைய மக்களால் அந்நியர்கள்,    மிலேச்சர்கள்  என்று இழித்துக் கூறப்பட்ட வேற்று மதத்தினரும், உயர்ஜாதி இந்துக் களுடன் தீண்டாமை என்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தார்கள். ஆனால்,  நீண்ட காலமாக இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வரும்  தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களோ உயர்ஜாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாதவர்களாகவும்,  அவர்கள் வசிக்கும் தெரு, தண்ணீர் எடுக்கும்  கிணறு அல்லது குளம்,  பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றை சமத்துவமாக அனுபவிக்க முடியாதவர்களாகவும், சண்டாளர்கள் என்றும் பாபிகள், என்றும் பஞ்சமர்கள் என்றும், பாதகர்கள் என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின் றனர்.இந்தத் தகாத நடத்தைக்குக் காரணம் என்ன என்பதை கொஞ்சம் பொறுமை யோடு ஆலோசித்தால் விளங்காமற் போகாது.
அந்நியராக இருந்தாலும், மற்ற உயர் ஜாதி இந்துக்களைப் போலவே அவர் களிடம் கல்வி, செல்வம், திறமை, செல் வாக்கு, கட்டுப்பாடு, ஒற்றுமை ஆகியவை அமைந்திருந்ததே அவர்கள் மற்ற உயர்ஜாதி இந்துக்களுடன் சமத்துவமாகப் பழகுவதற்குக் காரணமாகும். சகோதர இந்துக்கள் என்று சொல்லப் பட்டாலும்,  தாழ்த்தப்பட்ட மக்களிடம் இவை எல்லாம் இல்லாமல் இருப்பதே, அவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று உயர்ஜாதி இந்துக் களால் கொடுமைப்படுத்தப்பட்டதற்குக் காரணம்.
ஆகையால், உண்மையில் தீண்டப் படாத சகோதரர்கள் சமூக சமத்துவம் பெறவேண்டுமானால்,  கல்வி, செல்வம், திறமை, செல்வாக்கு, கட்டுப்பாடு, ஒற்றுமை ஆகியவற்றில் மற்றவர்களைப் போல சமநிலையை அடையவேண்டும் என் பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இக்காரியத்தை இன்றோ, நாளையோ அல்லது நாளை மறுநாளோ அல்லது ஒன்றிரண்டு மாதங்களிலோ அவசரப்பட்டு செய்து விடமுடியாது; நாளடைவில்தான் இதைச் செய்ய முடியும். ஆனால் தற்போது அவர்களுக்கு சமத்துவம் அளிக்கச் செய்யப்படும் சாதகமான செயல்கள் கோயில் பிரவேசம், தெரு, குளம், கிணறு, பள்ளிக் கூடம்  போன்ற பொது இடங் களைத் தடையின்றி அனுபவிக்க இட மளிப்பது போன்றவைதான்.
மற்ற விஷயங்களைக் காட்டிலும் கோயில் பிரவேசம் என்ற ஒரு விஷயமே இப்பொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட் டங்கள் நடந்து வருகின்றன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை பயனின்றி கழிந்தன. பொது இடங்களுக்குப் போகும் உரிமை தீண்டாதவர்களுக்கு இருக்க வேண்டும் என்ற கருத்தில் கோயில் பிரவேச முயற்சி நடைபெறுமேயானால்,  அதை மனப்பூர்வமாக ஆதரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அவ்வாறன்றி  கோயில்களில் உள்ள கடவுள்கள் எனப் படும் குழவிக் கல்களுக்கும், பொம்மை களுக்கும் ஏராளமான செல்வங்கயும் பாழாக்கிவிட்டு, மற்ற மூட மக்களைப் போலவே தங்களது கடின உழைப்பையும், அரும்பாடுபட்டு ஈட்டிய செல்வத்தையும், பொன்னான காலத்தையும் பயனற்ற வழியில் செலவிடுவதும், அதன் மூலம் மோட்சம் பெறுவதற்கும் கோயில் பிரவே சம் அவசியம் என்ற கருத்துடன் முயற்சி செய்யப் படுமானால்,  இம்முயற்சி கண்டிப்பாக தீண்டாதவர்களுக்குக் கேடு விளைவிக்கும் முயற்சியே என்றுதான் கூறவேண்டும்.
இப்பொழுது நமது நாட்டில் இருந்து வரும் எண்ணற்ற கோயில்கள் காரண மாகவும், அவைகளின் சார்பாக நடை பெறும் திருவிழாக்கள் காரணமாகவும், இவைகளின் மேல் பாமர மக்களுக்கு உள்ள நம்பிக்கை, பக்தி காரணமாகவுமே பொது ஜனங்களின் செல்வம் பாழாகின்ற தென்பதை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அறியாமை நிறைந்தவர்களாகவும், மூட நம்பிக்கை மிகுந்தவர்களாகவும் இருந்து வருவதற்கும் கோயில்களே காரணமாகும். (குடிஅரசு 08.05.1932).
பார்ப்பனர் தன்னை மேல்ஜாதி என்று அழைத்துக் கொள்வதிலும், தான் பிராமணன் என்றும் அழைத்துக் கொள்வதிலும், நாமும் அவனை பிராமணன் என்று சொல் லுவதிலும் அவனுக்குப் பெருமை உண்டு. ஆனால், அவன் நம்மை சூத்திரன் என்று அழைப்பதிலும், சாஸ்திரமும் சட்டமும் நம்மை சூத்திரர்கள் என்று குறித்து வைத்துள்ளதிலும் நமக்கு மிகுந்த  இழிவும் வாழ்வுக் கேடும் முன்னேற்றத் தடையும் இருக்கிறது.
- த.க. பாலகிருட்டிணன்
-விடுதலை ஞாயிறு மலர், 20.4.19

புதையல் எடுத்தாலும் பார்ப்பானுக்கே பங்கு!

‘பெல்’ ஆறுமுகம்
பார்ப்பானுக்கு மிகவும் கடுமையான தண்டனையை மனுதர்மம் வழங்குவதாகப் புலம்புகிறாரே திருவாளர் சோ அய்யர்! அந்தத் தண்டனையை அவனுக்கு வழங்குவதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதனையும் சொல்வாரா?
அதிகாரம் 11 சுலோகம் 32 என்ன சொல்கிறது தெரியுமா?
“பிராமணனுடைய சொந்த அதிகாரம் அவனையே சார்ந்தது. அது மன்னனின் அதிகாரத்தைவிடப் பெரியது. ஏனென்றால் மன்னனின் அதிகாரம் மக்களைச் சார்ந்தது. பிராமணன் தனது சொந்த பலத்தினாலேயே தனது எதிரிகளைப் பணியச் செய்ய முடியும்” என்று சொல்கிற மனு அதிகாரம் 11-சுலோகம் 31இல் சட்டங்களை நன்கு அறிந்த பிராமணன் தனக்குக் கொடிய தீங்கு எதுவும் செய்யப்பட்டால் அதைப் பற்றி அவன் மன்னனிடம் புகார் செய்ய வேண்டியதில்லை. அவன் தனது சொந்த அதிகாரத்தாலேயே தனக்குத் தீங்கிழைப் பவர்களைத் தண்டிக்கலாம்” என்று கூறுகிறது.
அத்துடன் அதிகாரம் 9 சுலோகம் 320இல் “ ஒரு சத்திரியன் அல்லது மன்னன் எப்போதும் பார்ப்பனர்களுக்கு எதிராகத் தனது இரும்புக் கரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் பிராமணனே அவனைத் தண்டிக்கலாம்.” என்கிறது. இதன்படி மன்னனைக் கொல்வதற்கும் பார்ப்பானுக்கு மனு உரிமையளிக்கிறது என அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.
இததான் பிராமணனுக்கு அதிகமான தண்டனை கொடுக்கும் கொடுமைகளா? இந்தக் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்களுக்காகச் சேவை செய்பவர்களா பார்ப்பனர்கள்? ஆகா! எவ்வளவுஅநியாயம் பாருங்கள்!
மனுதர்மம் பார்ப்பனர்களுக்குக் கடுமை யான தண்டனைகளை வழங்குகிறது  அந்தத் தண்டனைகளை எல்லாம் பொறுத் துக் கொண்டு சேவை செய்கிறார்கள் பார்ப்பனர்கள் என்று கூறும் சோ, அந்த பிராமணர்களுக்கு மனுதர்மம் அளித்திருக் கும் சலுகைகளை விவரிப்பாரா?
இந்த உலகமே பார்ப்பானுக்கு சொந்தம். உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கே சொந்தம். மற்றவர் எல்லோரும் பார்ப்பனர் தயவிலேயேதான் வாழ்கிறார்கள் என்றெல்லாம் மனு கூறுகிறதே அதைப்பற்றி சோ எழுதினாரா? குருமூர்த்தி அய்யராவது இனி எழுதுவாரா?
பொதுமக்கள் புதையல் எடுத்தால் அதனை மன்னனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்றும் மன்னன் புதையல் எடுத்தால் அதில் பாதியை பார்ப்பானுக்கு கொடுத்து விட்டு மீதியை அரசன் தன் கஜானாவில் சேர்க்க வேண்டும் என்கிறதே, அதைப்பற்றி எழுதுவாரா? காய்கறி முதலானவற்றை விற்கிற சாதாரண ஏழைக்குடிகளிடமும் மிட்டாய்க்காரர், சிற்ப வேலைக்காரர், கொல்லத்துக்காரர்களிடமும்கூட வரி வசூலிக்கலாம் என்று கூறும் மனு ஒருபோதும் பார்ப்பனர்களிடத்தில் வரி வசூலிக்கக் கூடாது என்று கூறி விட்டு “எந்த அரசன் ராச்சியத்தில் வேதம் ஓதினவன் சாப்பாட்டுக்கில்லாமல் கஷ்டப்படுகிறானோ, அந்த அரசன் தேசம் முழுவதும்துன்பப்பட்டு அழிந்துபோகும்” என்று சொல்கிறதே, இதுதான் பார்ப்பனர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளா? இதற்கெல்லாம் சோவும் குருமூர்த்தி கும்பலும் பதில் அளிக்குமா?
இப்படியெல்லாம் கூறிவிட்டு நமுட்டுச் சிரிப்புடன் சோவின் படத்தைப் போட்டு பிராமணனுக்கு அதிகமான தண்டனைகள் கொடுக்க வேண்டும்! சரி, இது மட்டும்தான் அதில் இருக்கிறதா? என்று கேள்வியைக் கேடடு அவரே  பதில் சொல்கிறார். இன் றைய அரசாங்கங்கள் எப்படி இருக்கின் றனஎன்று யோசித்துப் பாருங்கள்? ஆட்சியை நடத்துவதற்கு ஆலோசகர் களை நியமிப்பதில் என்னென்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட ஆலோசகர் களை நியமிக்க வேண்டும் என்பதெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது என்று கூறுகிறார். ஆனால் யார் அந்த ஆலோ சகர்கள் என்பது இந்த இதழில் கூறப்பட வில்லை.
மனு அதனைத் தெளிவாகக் கூறுகிறது. அதிகாரம் 7, ஸ்லோகம் 37 இவ்வாறு கூறு கிறது: “அரசன் தினந்தோறும் காலையில் எழுந்து மூன்று வேதங்களை ஓதினவர் களாயும், நீதி சாஸ்திர வித்வான்களாயும் இருக்கிற பிராமணர்களை உபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதி செலுத்த வேண்டியுள்ளது” என்று கூறுகிறது.
“அந்த பிராமண மந்திரியிடத்தில் தினந் தோறும் நம்பிக்கையுள்ளவனாய் சகலத் தையும் சொல்லி அவருடன் யோசித்து ஒரு காரியத்தை ஆரம்பிக்க வேண்டியது” என்றும் மனுதர்மம் போதிக்கிறது.
இன்றை அரசாங்கங்கள் அப்படித் தானே இருக்கின்றன? மத்திய அரசின் உயர் அதிகாரத்தில், தலைமைச் செயலகத்தில், பிரதமர் அலுவலகத்தில், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அமைச்சர்களது அலுவல கத்தில், அனைத்து மாநில கவர்னர்களாக, தலைமைச் செயலாளர் களாக, பல்கலைக் கழகத் துணைவேந்தர் களாக முழுக்கப் பார்ப்பனர்கள்தாளே நிரம்பி இருக்கிறார்கள்? அப்படி இருந்தும் இன்றைய அரசாங்கங்கள் எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள் என்று கூறுகிறார் சோ என்றால் எனன் பொருள்? மண்டல் கமிசன் வந்ததனால் ஆங்காங்கே ஒன்றிரண்டு தாழ்த்தப்பட்ட வர்களும், ஒரு சில பிற்படுத்தப்பட்டவர் களும் இடம் பெற்றிருக்கிறார்களே, அவர்களையெல்லாம் முழுவதும் விரட்டி விட்டு அனைத் தையும் பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பததானே அவருடைய அவா?
அதுதானே மனுதர்மம்? இந்துராஜ்யம் வராமலேயே அந்த மனு கோலோச்சிக் கொண்டு தானே இருக்கிறது? இந்து ராஜ்யம் வந்துவிட்டால் எப்படி இருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில் லையே!
ஆனாலும் தினமலர் போன்ற பார்ப்பனக் கூட்டம், மனுதர்மம் எங்கே இருக்கிறது? என்று நக்கல் செய்து மனு தர்மத்தை எரிப்பதன் மூலம் தேவையற்ற வேலையைச் செய்கிறோம் என்று திசை திருப்புகிறது. இவர்களிடம் பார்ப்பன ரல்லாத பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று துக்ளக் பாணியில் எச்சரிக்க வேண் டியது நமது கடமை என்று கருதுகிறோம். தொடர்ந்து அவர்களை அம்பலப்படுத்து வோம்!
- விடுதலை ஞாயிறு மலர், 30.3.19

சனி, 4 மே, 2019

காயத்திரி மந்திரம் அல்லது திரிகாய மந்திரம்


#காயத்திரி #மந்திரம்
முகநூல் பதிவு 04-03-2019.
மறுபதிவு 05-03-2019

#இந்துக்களின் #காயத்தரி #மந்திரம்.

“ஓம் ஐயுங் கிலியுஞ் சவ்வும்.”

என்பதே காயத்திரி மந்திரம் அல்லது
திரிகாய மந்திரம் என்பதாம்.

காயம் + திரி = காயத்திரி
திரி + காயம் = திரிகாயம்.

மனச் சுத்தம், வாக்குச் சுத்தம்,
காய சுத்தம் என்பதே
திரிகாய சுத்தங்களாகும்.

அதைப் போதித்தவர் சித்தார்த்தர்
என்ற புத்தரேயாவார்.

அவரின் ஆயிரம் நாமங்களுள்
ஒன்றே சிவன் என்பதாகும்,

அதைப் பரப்பியதே மாறியாத்தாள்
என்ற சுந்தரவாகு மன்னனின்
ஏகபுத்திரியான இளவரசி அம்பிகாவதி
ஆவார்.

அதை மாற்றி, மந்திர மாறாட்டம்
செய்ததே இந்தியாவில்
பஞ்சம் பிழைக்க வந்த புருசீகப்
பரதேசி சனாத்தனிகள் இந்துக்களின் மீது
தாக்கிய இரண்டாவது  மரண அடியாகும்.

#சனாத்தனிகளின்  #காயத்திரி  #மந்திரம்

ஓம் பூர்: புவ: ஸுவஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

என்பதே,
புருசீகப் பரதேசி சனாத்தனிகள்
சொல்லும் காயத்ரி மந்திரம் என்பது.

அந்த நான்கு வரிகளும்
புருசீகப் பரதேசிகள் இந்துக்களின்
மீது தாக்கிய இரணாடாவது மரண அடி
என்பதை இரண்டு மந்திரங்களின்
பொருளை அறிந்தால் விளங்கும்.

#இந்துக்களின் #காயத்தரி #மந்திரம்.

“ஓம் ஐயுங் கிலியுஞ் சவ்வும்.”

பொழிப்பு
ஓம் – அறி + வ் + ஓம் = அறிவோம் என்பதின் சுருக்கம்.
ஐயுங் – ஐம்புலன்களால் உண்டாகும் எண்ணங்களையும்,
கிலியும் – அவற்றால் உண்டாகும் சொற்களையும்
சவ்வும் - அவற்றால் உண்டாகும் செயல்களையும்

கருத்துரை
கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய
ஐந்து புலன்களால் உலகை உணர்ந்து,
அவற்றால் உண்டாகும் எண்ணங்களையும்,
அத்தகைய எண்ணங்களால் உண்டாகும்
சொற்களையும், அந்த சொற்களால் உண்டாகும்
வினைகளையும், எதிர் வினைகளையும் அறிந்து,
உலகில் இன்புற்று வாழ அறிவோமாக என்பதே.

மனிதன் பண்போடு வாழ்ந்தால்
ஒரு சமூகமாக வாழ்வான்
என்பது பெற்றி.

இந்துக்கள் தங்கள் செயல்பாடுகளை
அறிந்து, தம்மைத் தாமே கட்டுப் படுத்தி,
சிவன் போதித்த அற நெறியில் நின்று,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்ற பண்போடு, சாதிப் பாகுபாடுகள்
இல்லாது ஒரு சமூகமாக வாழ்ந்தார்கள்

#சனாத்தனிகளின்  #காயத்திரி  #மந்திரம்

“ஓம் பூர்: புவ: ஸுவஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்.”

அதன் பொருளை நான் விளக்காமல்
அவர்கள் சொல்வதையே மேற்கோளுடன்
காட்டுவதே மேலாகும்.

இணையதலங்களில் நீங்களே
தெரிந்து கொள்ளுங்கள்.

வாசகர்களுக்காக அதன்பொருளை
இங்கே பதிவிடுகிறன் மேற்கோள்
குறிகளுடன்..

“  அந்த பரம ஜோதி தியானமான
சத்தியத்தை நாம் தியானிக்கிறோம்.
பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம்
மூன்றுக்கும் சக்தி அது.
அந்த பரம் சக்தி நமது புத்தியை
வெளிச்சப் படுத்தட்டும் என்பது
இதன் பொருள். “

சிவன் போதித்த,
இந்து தர்மம் மனிதன் தன்னைத்
அடக்கி, பண்போடு வாழ வழி சொல்கிறது,

ஆனால்,
சனாத்தன தர்மம் மனிதனிடமிருந்து
அந்த வழியைப் பற்றிய
அறிவைப் பறித்து விடுகிறது.
அதற்குப் பதிலாக ஒரு பரம சக்தியை
உருவாக்கி விடுகிறது. ஏன்.?

அதை தினசரி ஜபித்து வந்தால்,
1. பூர்வ ஜென்ம பாவம் அகலும்,
2. சக்திகள் பெருகும்.
3. வைராக்கியம் உண்டாகும்.
4. அதை ஜபிப்பவனை அது காப்பாற்றும்.
5. எல்லா வித ஆபத்துகளும் நீங்கும்.
6. அது எல்லா மந்திரங்களுக்கும் தாயாகும்
7. காலையில் ஜபிப்பது காயத்திரிக்கு
8. மதியம் ஜபிப்பது சாவித்திரிக்கு
9. மாலையில் ஜபிப்பது சரஸ்வதிக்கு
என்று மூட நம்பிக்கைகளையும்
ஆசைகளையும், ஊட்டுகிறது. ஏன்.?

இன்னும்,
1. நன்மைகள் பல தரும் சனி பகவான்
காயத்திரி மந்திரம்.
2. வினைகள் தீர்க்கும் வீரபத்திர மந்திரம்.
3. மரண பயம் நீக்கும் எமதர்ம மந்திரம்.
4. அறிவைத் தந்து உடல் உபாதையை நீக்கும்
புதன் காயத்திரி மந்திரம்.
5. வருமானம் பன் மடங்கு அதிகரிக்க
உதவும் சொர்ண பைரவ மந்திரம்.
6. வீட்டில் செல்வம் நிலைக்க உதவும்
லட்சுமி காயத்திரி மந்திரம்.
7. வாழ்வில் திருப்பு முனைகளை உண்டாக்கும்
சாய் பாபா காயத்திரி மந்திரம்.
8. வேண்டிய வரம் தரும் பன்னி
(வராஹி) காயத்திரி மந்திரம்.

என்று இன்னும் அநேக காயத்திரி மந்திரங்களை
உண்டாக்கினர். ஏன்.?

அதற்கு ஒரு பூசாரி அல்லது ஏஜண்டு
உண்டாக்கி, பல வகை காயத்திரி
மந்திரங்களை உண்டாக்கி,
சடங்குகளை உண்டாக்கி,
தானம் தட்சனம் என்ற பெயர்களில்,
இந்துக்களிடமிருந்து பொருள் பறிக்கவும்,

இந்துக்களை முட்டாளாக்கி
சூத்திர அடிமைகளாக வைக்கவுமே
புருசீக சனாத்தன பரதேசிகள்
வகுத்த அபத்தமே அந்த
சனாத்தன காயத்திரி மந்திரங்களாகும்.

அதையும் இந்துகள் அறியாத
இறந்து போன மிலேச்ச பாஷையான
சமஸ்கிருத்த்திலே ஜபித்தால்தான்
அந்த பரம சக்திக்கு விளங்குமாம்.!

தமிழை அறிய முடியாத
அந்த அபத்த சக்தி எப்படி
பரம சக்தி ஆகமுடியும்.? 

அது விந்தை அல்ல,
சனாத்தனப் பித்தலாட்டமே!!.

மனிதன் தன் உணவை உண்டு,
கழித்த துர்ற்றமுள்ள பீயை
தன் உணவாக உண்டு வாழும்
பன்னியை
சர்வ வல்லமை படைத்த
கடவுளாக்கி,
அதை துதிக்கும்
மந்திரத்தை அனைத்து வரம் தரும்
பன்னி (வராஹி) காயத்திரி மந்திரம்
என்று ஏமாற்றுகின்றனர். ஏன்.?
இந்துக்களை இதைவிட எப்படி
கேவலம் செய்ய முடியும்.?

எது தர்மம்? எது அதர்மம்?
என்பதை வாசகர்களாகிய நீங்களே
முடிவு செய்யுங்கள்.

போர் தோடுத்து, உடலை வருத்தி,
கொலை செய்வது வீரன் செயல்.

உடனிருந்து வஞ்சகத்தால்
கொலை செய்வது கோழையின் செயல்.

ஒருவனை உடலால் வருத்தாது
மனதை மயக்கி ஏமாற்றுவது
பாவிகளின் செயல்.

அத்தகைய பாவிகளின் கட்டுப்பாட்டிலேயே
இன்றைய இந்துக் கோயில்களும்
இந்தியாவும் உள்ளன.

தேசபக்தி என்ற பெயரில்
இந்திய மக்களை ஏமாற்றி,
பாகிஸ்தான் மீது போர் தொடுத்து,
2019 தேர்தலில் தமது ஆட்சியை
தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி
முயற்சி செய்தது.

அந்த பாவிகளிடமிருந்து இந்தியாவைக்
காப்பாற்ற 21 இந்திய அரசியல்
எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து,
போரை முரியடித்தன..

உலகோர் முன் மோடிவித்தை
அம்பலமானது.

அதைப் போலவே இந்து மதத்தையும்
இந்துக் கோயில்களையும் 21 எதிர்கட்சிகளும்
ஒன்றிணைந்து சனாத்தனர்களிடமிருந்து
காப்பாற்ற வேண்டும்.

ஏனென்றால் அந்த பாவிகள் வாழும்
கோட்டையாகவே இன்றைய
இந்து மதம் உள்ளது.

அந்த கோட்டைக்குள் மறைந்து
அஞ்ஞான இந்துக்களின்
பொருளை உறிஞ்சி வாழ்ந்து கொண்டு
ஓட்டைப் பிரித்து நாட்டை
நாசமாக்குகிறார்கள்.

சரியான காலம் பார்த்து,
எதிர்கட்சிகள் எடுக்கும் அந்த முயற்சி
எவ்வகையிலும் இந்து மதத்தைப்
பரப்புவதாக ஆகாது. அது
இந்தியாவைக் காப்பாற்றுவதேயாகும்.

அஞ்ஞான இந்துக்களுக்கு
அறிவுறுத்துவதே முதல் படியாகும்.

கரையான் கட்டிய புற்றுக்குள்
கருநாகம் குடி புகுந்தது போலவே,

இந்துக்களை ஏமாற்றி
இந்துக் கோயில்களைக்
கைப் பற்றி, பொருள் உறிஞ்சி,
இந்துக்களை அடிமையாக்குவதே
சனாத்தனர்களின் தந்திரம்,

சனாத்தனப் பரதேசிகள்
இந்துக்கள் மீது
இரண்டாவது மரண அடியாகவே
காயத்திரி மந்திர மாறாட்டம்
செய்தனர்.

இந்து மதத்தை அழித்தது
அம்பேத்கரோ, பெரியாரோ
கார்ல் மார்கஸோ அல்ல
என்பதை உணர வேண்டும்.

இந்து மதத்தின் எதிரிகள்
அம்பேத்கர்வாதிகளோ,
பெரியார்வாதிகளோ,
செங்கொடி வீர்ர்களோ அல்ல
என்பதை இந்துக்கள் உணர வேண்டும்.

இந்துக்கள் தமது எதிரிகள்
சனாத்தனப் பரதேசிகளே
என்பதை அறிந்தால் பலனே!

ஓம் நமசிவய.

#பண்டாரகர் #சீனி #ரெங்கசாமி.