சனி, 12 நவம்பர், 2016

பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்?


ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.

மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் ஸ்திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சாஸ்திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.

அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.

‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,

¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.

¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.

¨ அவன், ஏர் உழுதால் பாவம்!

¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!

¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!

¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.

¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!

¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.

¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.

--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!

¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.

இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!

இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சரஸ்வதி முதலிய ஏராளமான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.

மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல்லுங்கள்.

_----------------------- 01-05-1957 ‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை

வியாழன், 10 நவம்பர், 2016

‘இந்து லா’ வின் மூலமான மனுதர்ம சாஸ்திரம்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உல கத்தைக் காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று  உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங் களைத் தனித்தனியாய் பகுத்தார். - (முதல் அத்தியா யம் :சுலோகம் 87 )

பிராம ணனுக்கு ஓதுவித்தல் ஓதல் எக்கியஞ் செய்தல் எக்கியஞ் செய்வித்தல் தானங் கொடுத்தல் தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற் படுத்தினார்.
- ( முதல் அத்தியாயம்: சுலோகம் 88 )

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றி பணிசெய் வதை முக்கியமான தருமமாக ஏற்படுத் தினார். இதனால் அவனுக்கு தான முதலியவையுண்டென்று தோன்று கிறது.
- ( முதல் அத்தியாயம்: சுலோகம் 91 )

பிராமணனுக்கு மங்களத்தையும் க்ஷத்திரியனுக்கு பலத்தையும் வைசியனுக்கு பொருளையும் சூத்திரனுக்குத் தாழ்வை யும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது.
- (இரண்டாம் அத்தியாயம்: சுலோகம் 31)
பிராமணனுக்குக் சர்ம்மவென்பதையும் க்ஷத்திரியனுக்கு வர்மம் என்பதையும் வைசியனுக்கு பூதியென்பதையும் சூத்திர னுக்குத் தாசனென்பதையும் தொடர்ப் பேராக இடவேண்டியது.
- (இரண்டாம் அத்தியாயம்: சுலோகம் 32)


பிராமணனுக்குப் பஞ்சி நூலாலும் க்ஷத்திரியனுக்கு க்ஷணப்பை நூலாலும் வைசியனுக்கு வெள்ளாட்டின் மயிராலும் மூன்றுவடமாகத் தோளில் பூணூல் தரிக்க வேண்டியது.
- (இரண்டாம் அத்தியாயம்: சுலோகம் 44)


எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அந்நமுதலியவற்றை சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் கால சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்.
- (மூன்றாம் அத்தியாயம்: சுலோகம் 249)

பாலியமாகவிருந்தாலும் யௌவநமாக விருந்தாலும் வார்த்திப மாகவிருந்தாலும் ஸ்திரீகள் தன்றன் வீடுகளிலும் தன்மநம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.
- (அய்ந்தாம் அத்தியாயம்: சுலோகம் 247)
பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையி லும் யௌவநத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்தபின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதே யல்லது ஸ்திரீகள் தன்சுவாதீநமாக வொருபோது மிருக்கக் கூடாது.
- (அய்ந்தாம் அத்தியாயம்: சுலோகம் 248)
கணவன் துராசாரமுள்ளவனாக விருந்தாலும் அந்நிய ஸ்திரீலோலனா யிருந்தாலும் நற்குணமில்லாதவனாய் இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீ யானவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.
- (அய்ந்தாம் அத்தியாயம்: சுலோகம் 154)
பிராமணன் சம்பளங் கொடுத் தேனுங் கொடாமலேனும் சூத்திரனி டத்தில் வேலை வாங்கலாம். ஏனெ னில் அவன் பிராமணன் வேலைக் காகவே பிரமனால் சிருஷ்டிக்கப்பட் டிருக்கிறானல்லவா. -
( எட்டாம் அத்தியாயம்: சுலோகம் 413)

பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன எழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமாநனெடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன்பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக் காரரல்ல.
- (எட்டாம் அத்தியாயம்: சுலோகம் 417)

ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள் ளவனா யிரந்தால் மற்றுமொருவனை யடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகி றேன் அப்பயிர் நம்மிருவருக்கும் பொது வாயிருக்கட்டு மென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறாற்போல், ஒருவன் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம் அந்தவேற்பாடு இல்லா விட்டால் உடையவனைச் சாறுமென்பது பிரத்தியக்ஷமாகவே யிருக்கிறது. ஏனெனில் பீஜத்தைவிட நிலமுயர்ந்ததல்லவா.
- (ஒன்பதாம் அத்தியாயம்: சுலோகம் 52)
விதவையிடத்தில் பெரியோர்களின நுமதி பெற்றுக்கொண்டு புணரப் போகிறவன் தன்தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான விடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை யுண்டுபண்ண வேண்டியது இரண்டாம் பிள்ளையை ஒருபோதும் உண்டுபண்ணக் கூடாது.
- (ஒன்பதாம் அத்தியாயம்: சுலோகம் 60)

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, ஜீவநத் திற்காகவாவது அல்லது இரண்டிற்குமா வது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனையடுத்த சூத்திர னென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே யவனுக்குப் பாக்கியம்.
( பத்தாம் அத்தியாயம்: சுலோகம் 122)

சூத்திரன் பொருள் சம்பாதிக்கத்தக்க வனாயிருந்தாலும் குடும்பத்திற் குபயோக மானதைவிட மிகவுமதிக பொருளைச் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித் தால் தன்னாலுபசரிக்கத்தக்க பிரா மணாளையே ஹிம்சை செய்ய வேண்டி வரும்.
- (பத்தாம் அத்தியாயம்: சுலோகம் 129)

-விடுதலை ஞா.ம.13.2.16

ஞாயிறு, 6 நவம்பர், 2016

இந்துமத சாஸ்திர இதிகாச புராணங்களிலே! நமது நிலை, மதம், தர்மம் என்ன?


இதிகாச (வால்மீகி) இராமாய ணப்படி இராமன் ஆளும் பொழுது சூத்திர ‘சம்பூகன்’ என்ற பக்தன் கட வுளை வேண்டிக் காட்டில் தவம் செய்தான் அவன் வேறு எந்தக் குற்றமும் செய்யவில்லை. அப்பொழுது ஊரில் ஒரு பார்ப்பனச் சிறுவன் இறந்தான் சூத்திர சம்பூகன் கடவுளை வேண்டித் தவம் செய்ததாலேயே தம் பார்ப்பனச் சிறுவன் இறந்தான் என்று பார்ப் பனர்கள் இராமனிடம் சென்று கூறி இந்த அதர்மத்தைப் போக்க வேண்டி னார்கள். உடனே இராமனும் நாரதர் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தி விசாரிக்கச் செய்தான்.
அந்த நாரதன் குழு (மனுதர்ம சாஸ்திர அத்.8 சுலோக 413 & அத்.9, சு. 355-ல் உள்ளபடி) சூத்திரனுக்குக் கடவுள் பிராமணன்தான்; பிராமணனைக் கடவுளாக வணங்காத சூத்திரனை அரசு கொல்ல வேண்டும்; பிராமணனுக்குத் தாசானுதாசத் தொண்டே சூத்திரனுக் குத் தவம் (மதம்); சூத்திரனுக்குத் தவம் செய்ய உரிமை கிடையாது என்று முடிவைக் கூறிற்று (வால்மீகி இராமா யணம், சத். காண்டம் அத் 76 & 87) இந்த முடிவுப்படியே குற்றமற்ற ‘கடவுள் பக்தன்’ சம்பூகனது தலையை இராமன் தன் கையாலேயே வெட்டிக் கொன்றான் (உத்.கா. சருக் 88) மேலும் இதற்கு முன்பே சகோதரத் துரோகி சுக்ரீ வனுக்கு ஆதரவாகக் குற்றமற்ற வாலியை மரத்தில் மறைந்திருந்து இராமன் கொலை செய்துள்ளான். (கிஷ்கிந்தா காண். சருக் 24)

இப்போர்ப்பட்ட அநியாயக் கொலை காரக் குற்றவாளி இராமனை நாம் வணங்க வேண்டுமாம்; கண்டிக்கக் கூடாதாம்; ஆனால் விபீஷணன் சொன்னபடி நேர்மையான குற்றமற்ற சிவபக்தன் இராவணன் (வால்மீகி யுத்தகாண்டம் சருக் 111) தன் சகோதரி சூர்ப்பநகையை இராம லட்சுமணர் அவமானப்படுத்தியதற்காகவும் தன் இனத் தோழர்களைக் கொன்றதற்காக வும் பழிக்குப் பழி வாங்கவே இராமனது மனைவி சீதையைத் தொட்டுத் தூக்கிச் சென்றான். (ஆரண்ய காண்டம், சருக் 49,54) சீதையின் விருப்பமில்லாது அவளை இராவணன் தொட்டிருந்தால் அவனுக்கு இருந்த சாபங்களின்படி அவனது தலை வெடித்துத் தூள்கள் ஆகி உடல் தீப்பற்றி எரிந்திருக்கும். மற்றப்படி இராவணன் ஒரு தவறும் செய்யவில்லை. இப்படிப்பட்ட குற்ற மற்ற பக்தன் இராவணன் உருவத்தையே இன்றும் வருடந்தோறும் டில்லி “ராம்லீலா’ மய்தானத்தில் கொளுத்து கிறார்கள். இது எப்படி நீதி? தர்மம்? மற்றப்படி ஏதாவது தவறு இராவணன் மீது கூறினால் அது அக்காலத்திய அர சர்கள் எல்லோரும் செய்த மாதிரி தான் இராவணன் மட்டும் செய்யவில்லை.

மேலும் மதத்தைக் குற்றம் கூறக் கூடாது என்பவர்களுக்குச் ‘சூத்திரர்’ என்றால் சாஸ்திரப்படி என்ன என்று தெரியுமா?

1. மனுதர்ம சாஸ்திரப்படி இப்பொ ழுதுள்ளவர்கள் பிராமணரும் (பார்ப் பனர்), சூத்திரருமே (பார்ப்பனரல்லா தார்) ஏனென்றால் பிராமணர்களை வழிபடாததனாலும், உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்து கொள்ளாத தனாலும் சத்திரியர் முதலிய மற்றச் சாதிகளார் கூட நாளடைவில் சூத்திரத் தன்மை அடைந்து சூத்திரர் ஆகி விட்டார்கள் (மனு அத் 10. சுலோ 43) திராவிடத்தை (தமிழகத்தை) ஆண்ட வர்களும் சூத்திரர்களே (மனு அத் 10, சு.44).
2. சூத்திரர் என்றால் (அதாவது) பஞ்சமர் என்ற பள்ளு, பறை, சக்கிலி போன்ற தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ந்தவர் என நினைத்துக் கொண்டு இருப்பவர்.
(அ) யுத்தத்தில் தோற்று ஓடியவர்.
(ஆ) யுத்தத்தில் கைதியானவர்.
(இ) பிராமணனுக்குப் பக்தியுடன் தொண்டூழியம் செய்பவர்.
(ஈ) (பிராமணனுடைய வைப்பாட்டி, தேவடியாள்) விபசாரி மக்கள்.
(உ) விலைக்கு வாங்கப்பட்ட அடிமை.
(ஊ) ஒருவனால் கொடுக்கப்பட்ட அடிமை.
(எ) தலைமுறை தலைமுறையாகத் தொண்டூழியம் செய்பவர் என்று 7 தன்மைகளில் உள்ளவர் (மனு அத்8 சு. 415).
3. சூத்திரர் உணவைத் தொட்டாலும் பார்த்தாலும் அசுத்தமாகி விடும் (அ.3 சு.251).
4. சூத்திரனைச் சிரார்த்தம் திதி, திவசம் செய்யும் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தவேண்டும் (அ. 3 சு. 242).
5. சூத்திரனுக்குச் சாஸ்திரம் தருமம், விரதம் முதலியவைகளைச் சொல்லலா காது சொல்லிக் கொடுத்தால் விபசார பாபமாகும். (மனு அ.499 & வால்மீகி சுந்.காண். சருக் 28).
6. சூத்திரனிடம் உண்மையை அறியப் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட் டால் கைவேகாமலும், நீரில் அமிழ்த்தப் பட்டால் சாகாமலும், அவனது மனைவி மக்கள் தலையில் அடித்தால் துன்பப் படாமலும் இருந்தால் சூத்திரன் சொல்வது உண்மை (மனு அத். 3/115).
7. சூத்திரன் பக்கத்திலிருக்கும் போது வேதம் ஓதக் கூடாது (அ. 4/80)
8. சூத்திரன் பிராமணனைத் திட்டி னால் நாக்கை அறுக்க வேண்டும் (அ. 8/270).
9. பிராமணச் சாதியைச் சொல்லித் திட்டினால் கம்பியைக் காய்ச்சி எரிய எரியச் சூத்திரன் வாயில் வைக்க வேண்டும் (அ 8/271).
10. பிராமணனை எதையாவது ‘செய்’ என்று உபதேசிக்கிற சூத்திரனது காதி லும், வாயிலும், எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் (அ. 8/272).
11. சூத்திரன் பிராமணனை அடித் தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்ட வேண்டும் (அ.8/279,280).
12. சூத்திரன் பிராமணனுடன் சரிசமமாக உட்கார்ந்தால் இடுப்பில் சூடு போட்டுக் குண்டியை அறுத்து, ஊரை விட்டுத் துரத்த வேண்டும் (அ. /281).
13. சூத்திரன் சம்பாதித்த சொத்து, தலைவனாகிய பிராமணனுக்கே சொந் தம்; சம்பாதித்த சூத்திரனைச் சேரக் கூடாது; ஏனென்றால் சூத்திரன் சொத்து பிராமணனுக்குத் துன்பம் (அ.
10/129 8/416).
14. பூணூல்  முதலிய (துவிஜர் இரு பிறவியாளர்) பிராமணச் ஜாதிக் குறியை அணிகின்ற சூத்திரனை அரசு வெட்டி விட வேண்டும் (அ 9/224).
15. சூத்திரன் பிராமணத் தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணன் ஆக மாட்டான்.  பிராமணன் சூத்திர வேலை செய்தாலும் அவன் உயர்ந்த பிராமணச் சாதியே (அ. 10/75).
16. சூத்திரனுக்கு மேல் சாதியாருக்குத் தாசானுதாசத் தொண்டூழியம் செய் வதே மதம் (வால்மீகி இரா உத் கா. சருக் 87).
17. பெண்களையும், பிராமணரல்லா தாரையும் கொன்றால் குறைந்த குற்றம் தான் (மன அ. 11/66).

இனி, பிராமணன் என்றால் என்ன என்று பார்ப்போம்.

1. பிராமணன் உலகிலுள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான் (மனு.அத் 1, சுலோ. 100).
2. பிராமணனைக் காப்பாற்ற மற்றவர்களைக் கொலை செய்யலாம் (அ. 8/143).
3. பிராமணனுடைய வர்ணாச்சிரம ஜாதி முறை ஏற்றத் தாழ்வைக் காப்பாற்ற யுத்தம் செய்ய வேண்டும் (அ. 8.348).

4. பிராமணன் மற்றச் ஜாதியார் பெண்களைப் புணர்ந்தால் ‘தர்மம்’ (அ. 8/13) ஆனால் சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து, அவனது பொருட்களைக் கொள்ளையிட வேண்டும் (அ 8/374).
5. பிராமணனிடத்தில் சூத்திரப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குப் பிராமண அப்பன் சொத்தில் பாத்தியமில்லை. ஆனால் சூத்திரனிடத்தில் பிராமணப் பெண் ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள் ளைக்குச் சூத்திரஅப்பன் சொத்தில் பாத்தியமுண்டு (அ.9/155) இப்படியே மனுவை அடிப்படையாகக் கொண்டு எழுதிய இந்து உரிமைச் சட்டத்திலும் இருந்தது.
6. பிராமணன் என்ன கொலைக் குற்றம் செய்தாலும் அரசு அவனைக் கொல்லக் கூடாது (அ. 8.381).
7. பிராமணன் கூலி கொடுக்காமலே சூத்திரனைவேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரன் படைக்கப்பட்டான் (மனு அ 8/413; பகவத் கீதை அத். 18. சுலோ 41,44,48).
8. பிராமணனுக்குத் தொண்டு செய்தால் மறுபிறவியில் சுகமாக இருக்கலாம் (மனு அ. 8/414).
9. பிராமணன் சந்தேகமின்றிச் சூத்திரன் பொருட்களைக் கைப்பற்ற லாம். ஏனென்றால் சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் சொந்தக்காரனில்லை. (அ. 8/417).
10. பிராமணனுக்குச் சூத்திரன் மனோ வாக்குக் காயங்களால் தொண்டு செய்வதே தர்மம் (அ. 9/335).
11. பிராமணன் எத்தகைய கொடிய குற்றம் செய்தாலும் அவனை மொட்டை அடித்தாலே  போதும் அதே கொலைத் தண்டனைக்கு ஒப்பாகும். அல்லது அவனது பொருட்களைக் கொடுத்து வெளியூருக்கு அனுப்ப வேண்டும் (அ.8/379, 380) பிராமணன் தண்டனையிலி ருந்து விதி விலக்குக்கு உரியவன் (வால்மீகி இரா உத்.கா. சாக் 71).
12. பிராமணன் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் தம் ஜாதித் தொழிலை விட்டு வேறு தொழிலைச் செய்தால் அவர்களை ஊரைவிட்டே துரத்த வேண்டும் (அ. 9/225 & 10/99).
13. பிராமணன் சூத்திரனது பொருட்களைத் தன் பிரியப்படி கொள் ளையிடலாம். ஆனால், பிராமணன் பொருளை எடுத்த சூத்திரனைச் சித்திர வதை செய்து கொல்ல வேண்டும். (அ. 9/248).
14. பிராமணன் ஞானியாயினும் மூடனாயினும் அவனே மேலான தெய்வம் (அ. 9/317).
15. பிராமணன் உண்டு மீந்த உணவு, கிழிந்த ஆடை, சத்தற்ற தானியங்களை சூத்திரனது பிழைப்பிற்குக் கொடுக்க வேண்டும் (அ.10/125).
16. பிராமணன் யாகம் செய்ய மற்றவர்களின் பொருட்களை வலிமை செய்து, களவு செய்து எடுத்துக் கொள்ளலாம் (அ. 11/12,13).
17. திருடி யாகம் செய்யும் பிரா மணனை அரசு தண்டிக்கக் கூடாது (அ. 11/21).
18. பிராமணன் மற்றவர்களைக் கொலை செய்தால் அதற்குத் தண் டனையாக, விரதம் இருந்தால் போதும்; அல்லது வேதப் பிராமணனுக்குப் பசுதானம் கொடுத்தால் போதும் (அ. 11/30).
19. ஜாதிக் கலப்பு (வர்ணசங்கிரமம்) நரகத்துக்குக் கொண்டு போகும் (கீதை அத். 1/44) இந்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டனவே புராணங்கள், தொல்காப்பியப் பொருள திகாரப் புறத்திணைச் சூத்திரம் 74, கற்பியல் சூத் 36, புறநானூற்று நெடுஞ்செழியன் பாடல், சிலப்பதிகார மதுரை ஊர் காண்காதை, சீவக சிந்தாமணிப் பதுமையார் இலம்பகப் பாடல் 1294. வச்சணந்திமாலை வெண்பாப் பாட்டியல் வருண எழுத் துக்கள், பாக்களின் நிறங்கள் கலம்பகம் பாடுதல் எல்லாம் இப்படி வசதியுள்ள இடங்களில் சில செயல்படுத்தப்படு கின்றன.
மற்ற இடங்களில் சொல்லவும் செயல்படுத்தவும் முடியவில்லை. அதனாலேயே பொதுவாகத் ‘தர்மம்’ கெட்டு விட்டது. ‘அதர்மம்’ நடக்கிறது என எத்தர்கள் மாய்மாலக் கூச்சல் போடுகின்றனர். இப்படிஒரு மதத்திற் குள்ளேயே ஒருவருக்கு மற்றவரைக் கீழ்மைப்படுத்திக் கேவலப்படுத்தி வைத்திருக்கும் நிலை வேறு மதத்தில் இல்லை. மேற்கண்டவைகள் யாவும் நமது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கைக்கு மாறானவை யல்லவா?

இவற்றையெல்லாம் கூறினால், நல்ல நிலையில் இல்லாமல் ஒருவன் தொல்லைப்படும் பொழுது வந்து சிலர் ‘கடவுளை’ நம்பு என்று ஏதாவது கெட்டிக்காரக் கட்டுக்கதையைக் கூறி மழுப்புவார்கள் அவர்களால் ‘கடவுள் பக்தனுக்கும் தொல்லைகள் ஏற்படுகின் றனவே! என்றால் ‘விதி’ என்பார்கள் விதிப்படி நடந்தால் ‘கடவுள்’ என்ன செய்வார் என்றால் மாற்றி மாற்றி எதையாவதுகூறிக் கொண்டே போவார்கள். இப்படிப்பட்ட சாஸ்திர, இதிகாச புராணங்களை மானமுள்ள வர்கள் ஏற்றுக் கொள்ளலாமா? நம் மனம் புண்படாதா? சிந்தியுங்கள்!
-விடுதலை,18.6.16

“பிராமணாள்’’ என்ற சொல்லின் பொருள் என்ன?

“அவாளே’’ சொல்லும் “அயோக்கிய’’த் தனமான விளக்கங்கள் பாரீர்!
தங்களைப் ‘பிராமணர்கள்’ என்றும், நம்மையெல்லாம் ‘சூத்திரர்கள்’ என்றும் சாஸ்திரங்கள் எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சமா? அப்படி அவர்கள் கூறும் சொற்களுக்கு உண்மையிலேயே பொருள்தான் என்ன? அவர்களின் (அ) தர்ம சாஸ்திரங்களில் கூறப்படும் விளக்கங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம்.
1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (மனுதர்ம சாஸ்திரம். அத்1. - சு.100)
2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2 சு. 33)
3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத். 3 சு. 251)
4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண் ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லா மலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத் 3 சு.115)
5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால்  துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து அவனுடைய பொருளைக் கொள்ளையிட வேண்டும். (அத்.8 சு.374) ஆனால் பிராமணன் மற்ற வர்ணத்தார் பெண்களைப் புணர்ந் தால்அது தர்மம். (அத்.8 சு.13)
6. சூத்திரன் பிரமணர்களைத் திட் டினால் சூத்திரன் நாக்கை அறுக்க வேண்டும். (அத்.8 சு.270); பிராமணனை சாதியைச் சொல்லித் திட்டினால்  கம்பியைக் காய்ச்சி எரிய எரிய சூத்திரன் வாயில் வைக்க வேண்டும். (அத் 3-சு. 271).
7. பிராமணனைப் பார்த்து ‘நீ இதைச் செய்ய வேண்டும்’ என்று உபதேசம் செய்கிற சூத்திரன் காதிலும், வாயிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண் டும். (அத். 8 சு.271)
8. சூத்திரன் பிராமணனை அடித்தால் கையையும், உதைத்தால் காலையும் வெட்டி விட வேண்டும். (அத் 8- சு.279. 280).
9. பிராமணனுக்குச் சரிசமமாக உட்கார்ந்தால் சூத்திரனுடைய இடுப் பில் சூடு போட வேண்டும். அல்லது குண்டியை அறுத்து ஊரைவிட்டுத் துரத்த வேண்டும். (அத் 8 சு281).
10. பிராமணர்களுடைய வர்ணாசிரம சாதி முறை ஏற்றத் தாழ்வைக் காப்பாற்ற யுத்தம் செய்ய வேண்டும். (அத் 8 சு. 348).
11. பிராமணனைக் காப்பாற்றச் சண்டை போட்டுப் பிராமணரல்லாதவரைக் கொலை செய்தால் பாவம். (அத் 8 சு143)
12. பிராமணன் எத்தகைய கொடிய குற்றங்கள் செய்தாலும் அவனை மொட்டை அடித்தாலே போதும் அதுவே கொலைத் தண்டனைக்கு ஒப்பாகும். அல்லது அவன் பொருளைக் கொடுத்து வெளியூருக்கு அனுப்ப வேண்டும். (அத் 8சு 379, 80).
13. அரசாங்கம் பிராமணன் என்ன கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லக் கூடாது. (அத் 8 சு. 381)
14. பிராமணன் சூத்திரர்களுக்குக் கூலி கொடுக்காமலே வேலை வாங்கலாம். சூத்திரன் பிராமணனுக்குத் தொண்டு செய்யப் பிரம்மாவால் படைக்கப்பட்டான் (அத் 8 சு. 413)
15. சூத்திரன் என்றால் (1) யுத்தத்தில் தோற்று ஒடியவன். (2) யுத்தத்தில் கைதியாகப் பிடிபட்டவன். பிராமணனுக்குப் பக்தியோடு ஊழியம் செய்கிறவன் (4) விபச்சாரி - தேவடியாள் மகன். (5) விலைக்கு வாங்கப்பட்டவன் (6) ஒருவனால் கொடுக் கப்பட்டவன்
(7) தலைமுறை தலைமுறை யாகத் தொண்டு செய்பவன் -_ என்று ஏழு தன்மை உடையவன். (அத் 8 - சு415).
16. பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம் காரணம் சூத்திரன் எவ்விதப் பொருளுக் கும் சொந்தக்காரனில்லை. (அத் 8_-க 417).
17. பிராமணனிடம் சூத்திரப் பெண் ணுக்குப்பிள்ளை பிறந்தால் அப்பிள் ளைக்கு அப்பன் சொத்தில் பாத்திய மில்லை (அத்.
9-_சு155). ஆனால் சூத்திர னிடம் பிராமணப் பெண்ணுக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு அப்பன் சொத்தில் பங்குண்டு. இப்படியே இன்றுள்ள இந்துச் சட்டத்திலும் இருக்கிறது. அத். 9_-சு 224)
18. பிராமணன் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் சாதித் தொழிலை விட்டு வேறு தொழில் செய்தால் அவர் களை
ஊரை விட்டுத் துரத்த வேண்டும் (அத். 9_-சு225) (அத்10-க99).
19. பிராமணன் ஞானியாயினும், மூட னாயினும் அவனே மேலான தெய்வம் (அத்9-_சு.317).
20 பிராமணர்களை வழிபடாத தாலும், உபநயனம் முதலிய சடங்கு களைச் செய்து கொள்ளாததனாலும் சத்திரியர் முதலான மற்றச் சாதிகள் சூத்திரத் தன்மையடைந்தார்கள்; அவர்களும் சூத்திரர்களே. (அத்.10-_சு.43) திராவிடத்தை (தமிழகத்தை)ஆண்டவர் களும், சூத்திரர்களே (அத்10சு, 44).
21. பிராமணன் உண்டு மீந்த உணவு கிழிந்த ஆடை சாரம் அற்ற தானியம் -_ இவைகளைப் பிராமணன் குத்திர னுக்குப் பிழைப்பிற்குக் கொடுக்க வேண்டும். (அத்10_-சு 125).
22. பிராமணன் மற்றவர்கள் பொருளை யாகத்திற்காக வலிமையி லாவது களவு செய்தாவது எடுத்துக் கொள்ளலாம். (அத்.11, சு.12_13)
23. பெண்களையும் சூத்திரர்களை யும் கொன்றால் குறைந்த பாவந்தான். (அத்11_-சு67)
24. பிராமணன் மற்றவர்களைக் கொன்றுவிட்டால் அதற்குத் தண் டனையாக அவன் விரதமிருந்தால் போதும் அல்லது வேதப் பிராமண னுக்கு எருது, பசு கொடுத்தால் போதும் (அத்.11-சு 120).
25. பிராமணனுக்குத் தொண்டு செய்வதே சூத்திரனுக்குத் தவமாகும். அத்-11சு:235)
மானமுள்ள தமிழ்க்குடியில் பிறந் தோரே!
இத்தகைய இழித்தகைமையை நம்மீது சுமத்துகிறது பிராமணாள் என்ற பெயர்ப் பலகை.
இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு அத்தகைய உணவு விடுதி களில் உண்ணச் செல்வதா?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
-விடுதலை,11.6.16

‘பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்?


ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சா° திரங்கள். அது மட்டுமல்ல; பிரம் மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சா°திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.
பிரம்மா முகத்தில் பிராமணர் களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சா° திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.
மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் °திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சா°திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.
அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.
‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,
¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.
¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.
¨ அவன், ஏர் உழுதால் பாவம்!
¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!
¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!
¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.
¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!
¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.
¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம். அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!
¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.
இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!
இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சர°வதி முதலிய ஏராள மான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.
மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல் லுங்கள்.
- (01-05-1957 ‘விடுதலை’யில் விடுத்த அறிக்கை)
-விடுதலை ஞா.ம.,17.9.16

சனி, 5 நவம்பர், 2016

வேதகால பார்ப்பன கலாச்சாரம்


1) முதல் குழந்தையை ஆற்றில் விட்டு கொல்வது.
2) கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுதல்.
3) குழந்தைத் திருமணத்தை ஆதரிப்பது.
4) கோயிலில் பெண்களை தேவதாசி ஆக்குவது.
5) குழந்தை இல்லாதார் அக்கா, தங்கை, தாய் யாரோடும் கூடிப் பெறலாம் என்பது.
6) குழந்தை பெற முடியாதவர் மனைவியை முனிவர்களிடம் அனுப்பி அதற்கு கூலி கொடுப்பது.
7) ஒரு பெண்ணுக்கு பல கணவர் என்பது
8) யாக காலத்தில் பெண்களை குதிரையுடன் கூட வைத்தது.
9) பசு மாட்டின் மூத்திரம் குடித்தல்.
10) ஜகநாதபுரம் இங்கு ஜாதி, மதம் இல்லை, அக்கா, தங்கை யாருடனும் கலவி கொள்ளலாம் என்று கடவுள் கிருஷ்ணன் தன் தங்கைக்கு சொன்னது.
11) விதவைக்கு மொட்டையடித்தல், மடிசார் கட்டுதல், வெள்ளைப்புடவை உடுத்தல் (இவைகளில் எல்லாம் மாற்றங்கள் ஏற்பட யார் காரணம்?
12) கடவுள் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது, மந்திரம் அய்யருக்குக் கட்டுப்பட்டது என்று மக்களை ஏமாற்றுவது.
- மா.சென்றாயன், தருமபுரி
.-விடுதலை ஞா.ம.,10.9.16