ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

பசுவதை பாடுவோரே.. உங்கள் வேதங்களின் பசுவதை பாரீர்!

- இரா.கண்ணிமை

பார்ப்பனர்களின் முன்னோர்கள் ஆடு, மாடு மாத்திரமல்லாமல் - பன்றி, கழுதை, குதிரை, எருமை, மனிதன் வரை சாப்பிட்டதாக இவர்களே உண்டாக்கி வைத்திருக்கும் வேத, சாஸ்திர, மத ஆதாரங்களை மறந்துவிட்டு வக்கணை பேசுகிறார்கள் - என்று தந்தை பெரியார் புகன்றார்.
ஆம் ஆரியர்கள் சொல்லி வைத்த இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் - என்னும் நான்கு வேதங்களில் யாகம் என்ற பெயரால் உயிர் பலி செய்யப் பட்டிருக்கிறது.
இதோ... ஆதாரம்
இருக்கு வேதம்
இருக்கு வேதத்தில் யாகச் செயல்களை உறுதிப் படுத்தும் சுலோகம்:
யஞ்ஞேனவை தேவா; ஊர்த்தவம் ஸ்வர்க்கம், லோக மாயம் ஸ்தே பிபயுரஸ்மின், நேத் ருஷ்டவா மனுஷியாக ரிஷ்யஸ் சரனுப் (ஜத்ரேயப்ராஹ்)
மணம் த்விதீய பஞ்சிகா பிரதம காண்டம்
விளக்கம்: தேவர்கள் யாகஞ்செய்து சொர்க்கத்தையடைந்தார்கள். ஆகவே மனிதர்களும், ரிஷிகளும் யாகம் செய்யக்கடமைப் பட்டவர்கள்.
யாகத்திற்குரிய - உயிர்களை தூண்களில் பிணைத்துக்கட்டி மந்திரத்தைச் சொன்ன பிறகு, தலைமைப் புரோகிதனான (பார்ப்பனர்) அத்வாயுவின் கட்டளைப் பெற்றவுடன், யாகப்பசுவை, சமித்ரசாலா என்னும் பசுவை கொலைபுரியும் இடத்திற்குக் கொண்டு போய், பசுவைக் கொல்லும் சமிநா என்னும் புரோகிதன், முஷ்டி எனும் குறுந்தடியால் பசுவின் கழுத்தில் அடித்துக்கொலை செய்வான்.
பிறகு சுரா, இடர் ஸீனு, ஸவதீதி எனும் மரப்பலகையில் - பசுவைக்கிடத்தி தோலை உரித்து சதையை அரிந்து எடுத்து நெருப்பிலிட்டு - மீதி மாமிசத்தைப் புரோகிதர்கள் அனைவரும் பங்குபோட்டு எடுத்துக் கொள்வர். யாகப்பசுவை மந்திரம் சொல்லிக் கொன்றபின் அதை அறுத்தெடுக்கும் முறை மந்திரம்
இதோ:-
அந்தரே வோஷ்மாணம் வாரியத் வாதிதி
பசுஷ் வேதத் புராணான், ததாதி ஸ்யேனமஸ் யவக்ஷ;
க்குருணுதாத் ப்ரத்ஸா பாஹீசலா தோஷணீ கஸ்ய
லேவாம், ஸாச்சிந்ரே ஸ்ரோணீக வஷோரூஸ்
ரேகர்ணாஷ்டி வந்தா ஷட்விம்சதி ரஷ்யவங்காயஸ்தா
அனுஷ்டயோச்ய வயதாத்; காத்ரம் காத்தமஸ்
யானூனம். (ஐந்தேய பஞ்சிக 3 - காண்டம் 6)
இதன் பொருள்:
மார்பிலிருந்து பருந்தின் வடிவில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் காலிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் காலிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளும்,  தோளிலிருந்து ஆமை வடிவமாக இரண்டு துண்டுகளும் அறுத்தெடுக்க வேண்டும். இவ்வாறே அந்தந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகள் அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்.
புலால் உண்போரை, புலையர், தீண்டாதார் என்னும் பொய்க் குருக்களான - கள்ளக்குருக்கள் (ஆரியப் புரோகிதர்கள்) பசுக்களைக் கொன்று யாகம் செய்து, மந்திரம் சொல்லி அனைவரும் பங்கிட்டு இறைச்சியை புசிக்கும்போது தீட்டு எப்படி மறைந்ததென்பதை கேட்பார் இல்லையே!
மச்ச புராணத்தில் சொல்லியபடி யாகத்தில் பசுவை மட்டும் அல்ல; ஆடு, மாடு, குதிரை, பாம்பு மனிதன் ஆகிய அனைத்தையும் யாகம் செய்வதே முறையாய்க் காண்கிறது.
யசுர் வேதம்
யசுர் வேதத்தைப் படித்தவன் தான் அதர்வர்யு என்னும் யாக புரோகித பதவிக்கு ஏற்றவனாம். இப் பதவியை ஏற்றவனே புரோகிதர்க்கெல்லாம் தலைவன்.
யசுர் வேதம், கிருஷ்ண யசுர் வேதம், சுக்கில யசுர் வேதம் எனப் பெயர் கொண்டது. கிருஷ்ண யசுர் வேதத்தில் விவரித்துள்ள யாகக் கொலைகளுக்கு கணக்கேயில்லை. சில யாகங்களில், நாய், தித்திரி என்னும் பறவை, வெள்ளை கொக்கு, கருந்தவளை முதலிய பிராணிகளையும் கொன்று யாகபலி செலுத்த வேண்டும். பிராஹ்ம தேவனுக்கு பிராஹ்மனரையும் யாகம் செய்ய வேண்டும் (தைத்திரீயம் 3ஆம் காண்டம், 4ஆம் அத்தியாயம்)
கிருஷ்ண யசுர் வேத தைத்தரீய ஆரண்யம் என்னும் நூல்,  பத்து அதிகாரங்களையுடையது. இதன் ஆறாம் அத்தியாயம் பித்ருமேதம் என்பதை விளக்கிக் காட்டுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர் இறந்தால் இவர்களை எரிக்கும் முறை இதில் உள்ளது.
கிருஷ்ண யசுர் வேதத்தில் முப்பது யாகங்கள் அடங்கியிருக்கின்றன. அவற்றில் சில:
ஸௌத்ராமணி- மதுவருந்தும் யாகம், சுராக்ரஹாமந்திரம் - லாகிரியருந்தும் யாகம்,
ஐந்த்ரபர  - இந்திரனுக்கு காட்டு புலி யாகம்
கோஸவம் - பசு, காளை யாகம், வத்ஸோபகரணம்- இளங்கன்று யாகம்
நஷ்த்ரேஷ்டி - தேவதை யாகம்,
புருஷயஜ்ரு - நரயாகம்,
வைஷ்ண பசு - விஷ்ணுவுக்கு ஆட்டுப்பலி,
அஸ்வமேதம் - குதிரை பலி யாகம்,
ரிஷிபாலம் பனவிதானம் - எருது யாகம் அஸ்வ, மனுஸ்ய அஜகோ - குதிரை, மனிதன், ஆடு, மாடு யாகம்.
சுக்கில யசுர் வேதம்
யசுர் வேதத்தில் - சுக்கில யசுர் வேதம் நாற்பது அதிகாரங்களைக் கொண்டது. யாகக் கொலை விளக்கத்திற்கு இது கிருஷ்ண யசுர் வேதத்திற்கு இணையானது.
இதில் அஸ்வலீலா பாஷாணம் என்பது மிக அருவருப்பான செயல் ஆகும். அஸ்வ மேத யாகத் திற்கு இருபத்தொரு தூண்கள் நட்டு, நடுவிலுள்ள தூணில் பதினேழு பசுக்களைக் கட்ட வேண்டும். மற்ற தூண்களில், தூண் ஒன்றுக்கு பதினைந்து பசுக்கள் வீதம், முன்னூறு பசுக்களைக் கட்ட வேண்டும். இத்துடன் காட்டுப் பசுக்கள் இருநூற்றறுபதும் சேர்த்து யாகம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில், அன்னம், எலி, மான், யானை, தவளை, அட்டை முதலியவை களும் பலியிடப்படுகின்றன.
ஸாமவேதம்
ஸாமம் என்பதற்கு சங்காரம் என்று பொருளாம். இந்த வேதத்தில் யாகக் கொலைகள் அதிகமாக விளக்குகிறது. முப்பத்தேழு  யாக சடங்குகள் உள்ளன. இதில் வைசியனையும், யாக பலி செய்ய - கூறப்பட்டுள்ளது.
அதர்வண வேதம்
அதர்வணம் என்பதற்கு அழித்தல் என்பது பொருள் இந்த வேதத்தில் தேவர்களுக்குரிய சில மந்திரங்களும் - பகைவர்களைக் கொல்ல உள்ள மந்திரங்களுமாக - பல கற்பனையாகவும் சொல்லப் பட்டுள்ளது.
இதில் ப்ராஹ்பாணம் கோபதம் எனப்படும் யாகம் செய்த பசுவைப் பங்கிடும்முறை சொல்லப்பட்டிருக் கிறது. (கோபசுப் பிராஹ் மணம், பிரபாடகம், 3ஆம் காண்டம் 10).
பிராமணரை மற்றவர்கள் நம்பும் வகையில் வேதம் கடவுளால் ஆக்கப்பட்டது என்று பார்ப்பனர் கள் சொன்னாலும் - அது உண்மையே அல்ல.
வேதங்களை ரிஷகளே உண்டாக்கினார்கள் அவர்கள் கூறியது எதுவோ அதுவே தேவதை என்பதாம்.  சுலோகம்: யஸ்ய வாக்கியம் ஸதிஷி: யாதேனோச் யதேஸா தேவதாய தக்ஷா பரிமாணம் தச்சந்த..
பல ரிஷிகள் பல காலங்களில் பாடியதே வேதம். வேதங்களை ரிஷிகளே உண்டாக்கியிருக்க, அவை களைக் கடவுள் உண்டாக்கினார் என்பது புனைந் துரை. நிகண்டில், பிராமணர்களையும், ப்ரஹ்மா என்று குறித்துக் காட்டக் கூடிய சொல்லும் இருப்பதால்தான் பிராமணர்களாகிய ப்ரஹ்மாக்கள், தங்களை சிருஷ்டி கர்த்தாவாகிய பிர்மாவுக்குச் சமமாக்கி அவர் வாயி னின்று கோத்ரம் வந்ததாய் மாறாகச் சொல்லப்பட் டிருக்கிறது.
கீழ்க்காணும் சுலோகத்தில் பவபூதி என்னும் கவி தன்னையே ப்ரஹ்மாவென்று சொல்லிக் கொள்கிறார். இதைக் கூர்ந்து பார்க்கவும். இதனால் பிராமணர்கள், பரஹ்மாக்களாய் அழைக்கப்பட்டு - ரிஷிகளால் வேதம் வெளிப்பட்டது உண்மை என்றும் கடவுளால் இந்த  வேதம் உண்டாக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது. இதை ஆழ்ந்து ஆராய்ந்து அறிய முடியாத பார்ப்பனரல்லாத மற்றவர்கள் ப்ரஹ்மா வென்ற தவறான பொருளை குறியாய்க் கொண்டு கடவுளால் உண்டாக்கப்பட்டதே வேதம் என்று பொய் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
சுலோகம்:
யாம் ப்ரஹ்மா  ணமியம் தேவி வாக்வஸ்யே,
வான்ய வர்த்தத உத்தரம் ராம சரிதம்  தத்பரணீதம் ப்ரக்ஷ்தோ இது உண்மையானாலும், வேதம் முகத்தி லிருந்து வந்ததென்பதை - விளக்கச் சிதைவு வார்த்தையேயன்றி உண்மையல்ல.
இவற்றுள் ஆஸ்வலாயனரால் செய்யப்பட்ட சிரௌத சூத்திரங்களில் - பதினேழு வகை யாகம் செய்யும் விதிமுறைக் கூறுகிறது.
இவற்றில் அக்கினி ஹோத்திரம் ஒன்று.
இதை செய்யாமல் - ஒருவன் விடுபட்டால் (திருமணம் முடிந்த மறுநாளிலிருந்து) அவர் தானாகவே சூத்திர னாகி விடுவானாம். இதனால் பிரம்மாவின் பாதத்தி லிருந்து பிறந்த சூத்திரனின் தாழ்ந்த நிலையை, பிராமணரும் அடையலாம் என்பதை விளக்குகிறது. இது உண்மையென்றால் வேதமென்பதும் துதிதோத் திர ஒழுக்கம் இது என்பதும் அறியாமல், பல துறை களில் பிழைப்புத் தொழில் அலுவலில் சிக்குண்டு,  ஈடுபட்டிருக்கும் பார்ப்பனரில் நூற்றுக்கு எத்தனை பேர் இதைக் கைக் கொண்டு நடப்போர் உண்டு என்பதை எடை போட்டால் - மிகைக் குறைவாக இருப்பர்.
அக்கினி  தோத்திரத்தை மேற்சொன்னவாறு தொடர்ந்து செய்து, சூத்திரர் ஆகா பிராமணர் எத்தனை பேர் உண்டு? இவ்வித யாகங்களை செய்து ஒருவன் முக்திசேர உள்ள இடுக்கமான வழியை கவனிக்கவும். இப்படி செய்துஒருவன் முக்தி சேர முடியுமென்றால் - இது சூரியனை ஏணிப்படியிட்டு ஏறிப் பிடித்து சிமிளியில் அடைத்த கதையை யொக்குமென்பது பொருத்தமல்லவா?
அஸ்வமேத யாகம்
அஸ்வமேத யாகத்தின் அருவருப்பை இங்கு எழுதவே கூடாது. இதை எழுத கைக் கூசும் மிக அசிங்கமான செயல். சுருக்கிச் சொன்னால் அஸ்வம் - குதிரை, மேதம் - சேர்க்கை குதிரையுடன் சேர்தல் என்று பொருள்.
அஸ்வமேத யாகத்தில், யாகப் பசுவாகிய குதி ரையை, எஜமான் மனைவியாகிய மஹிஷியோடு, இயற்கைக்கு மாறான வகையில் புணர்ச்சி செய்ய விடுதலாம். இதைப் போன்ற மற்ற பௌண்ட ரீகம் முதலிய அருவருப்பான பல யாகங்கள் வேதத்தில் இருக்கின்றன.
இவ்வித யாக பலிகளை நம்புகிறீர்களா? இதைச் செய்வோர் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள். யாக பலியால் முக்தி சேர்வோர் எத்தனை பேர் உண்டு? சொல்ல முடியுமா? இதெல்லாம் கள்ளக் குருக்களான பார்ப்பனரின் வஞ்சிப்பான போதனை என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமாகும்.
புலால் தின்போரை சூத்திரர் தீண்டாதார் என்று சொல்லும் பார்ப்பனர்கள் மறைமுகமாய் விருந்தின ருக்கு பசு, எருது, மாமிசத்தை நெய்யில் பொரித்துத் தேனிட்டு புசிக்கக் கொடுப்பதும் யாகப் பலிகளில் கொன்ற உயிர்களின் இறைச்சியை பங்கு போட்டுக் கொண்டு சாப்பிடுவதும் - வேத  இரகசிய விதி முறைகள் உண்டு. இதை அறியாதோர் எத்தனையோ பேர் இருக்கிறார்களே!
மற்றோரை இழிகுலத்தோர் என்று இகழ்ச்சியாய் பேசி  - கள்ளக்குருக்கள் (பார்ப்பனர்கள்) வேதம் சொல்லி, யாக பலியின் இறைச்சியைப் புசிக்கும்போது தீட்டில்லை என்பதுதானே? இப்போது தீட்டு எவ்வகையில் மறைந்து போனது என்பதை விளக்கிச் சொல்வார் இல்லையே! இதெல்லாம் அடங்கியதே யாகமாகும் என்று யாரும் இதை மறக்க முடியாதே!
நான்கு வேதங்களிலும், அதன் துணைவேதம் நான் கிலும் (ஆயுள் வேதம், அழுத்தவேதம், தனுர்வேதம், காந்தருவ வேதம்) உள்ள முப்பத்திரண்டிலும் அடங்கியதே வேத உபதேச ரகசியங்களும், யாகப் பலிகளுமாம். இந்த வேதத்தை பிராமணர் தவிர, மற்ற சத்ரியர், வைசியர், சூத்திரர்கள் ஆகியோர் தொடவும், படிக்கவும் கூடாது. இதனை அன்றே ஞானிகளும், சித்தர்களும், முனிவர்களும், இவ்வேதங்கள் அனைத் தையும் உண்மையற்றதென்று கூறியிருக்கிறார்கள்.
இன்பமாய் நால்வேதம் வந்தவாறு
மெழுதினார் வேதவியாசர் சாத்தான் போல
அன்பாகப் பலவிதத்தில் கட்டிப் போட்டா
ரதனாலே மானிடர்கள் கெட்டுப் போறார்
முன்போல சித்தரெல்லாங் கொஞ்சங் கொஞ்சம்
மூடினதைத் திறந்து விட்டார் முடுகி நானும்
அன்பாகத் திறந்து விட்டேன் வெளிச்சமாக
அரனார் உத்தாரப் படியறிவித்தேனே!
அகஸ்தியர் ஞானப்பாடல் - 13
குலம்குலம் என்ப தெல்லாம்
குடுமியும் பூணு நூலுஞ்
சிலந்தியு நூலும் போலச்
சிறப்புடன் பிறப்ப துண்டோ
நலந்ததரு நாலு வேதம்
நான்முகன் படைத்த துண்டோ
பலன்தரா பொருளு முண்டோ
பாச்சலூர் கிராமத் தாரே!
- பாச்சலூர் பத்து 6ஆம் பாடல்
சாத்திரத்தைச் சுட்டுசதுர்மறையைப் பொய்யாக்கி சூத்திரம் கண்டு சுகம் பெறுவதெக் காலம் - என்று ஏங்கித் தவிக்கும் காலம் இப்பொழுது வந்து விட்டதே! என்ற பாடல் களைப் பார்த்த - படித்த பிறகுமா - வேதத்தை நம்புகிறீர்கள்?
-விடுதலை,11.4.15

வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை.

தாலி அகற்றும் நிகழ்வைக் கொச்சைப்படுத்தும் தலை இல்லா ஆசாமிகளே!
இதற்கு உங்கள் பதில் என்ன?

1) வேதகாலத்திலோ, அதற்குப்பின் இதிகாச காலங்களிலோ, கடவுளுக்கு நடந்த கல்யாணங் களிலோகூட தாலி கட்டுவது என்ற சடங்கு இருந்ததில்லை.
சடங்குகளின் கதை! - இந்துமதம் எங்கே போகிறது? 2ஆம் பாகம், பக்கம் 41ல் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதுகிறார்
திருமணம் என்றாலே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது?... அல்ல... அல்ல... வரவைக்கப்பட்டிருப்பது
மாங்கல்யம் தந்துநாநேந மமஜீவந ஹேதுநா
கண்ட்டே பத்நாமி ஸூபகே ஸஞ்ஜீவ ஸநத... ஸதம்...
டி.வி., சினிமா, ரேடியோ, கீடியோ என எல்லாவற்றிலும் கல்யாணம் என்றாலே... இந்த சுலோகம்தான்  ஒலிக்கிறது. இதை வைத்து தாலி கட்றான் என அடையாளப்படுத்துகிறார்கள்.
இந்த சுலோகத்துக்கு வயது என்ன- என்று பார்த்தால் வேதகாலத்திலோ... வேத மந்த்ரத்திலோ இந்த தாலி என்ற சடங்கே இல்லை. மாங்கல்ய தாரணம் அதாவது தாலி கட்டுவதற்கென்று வேதத்தில் மந்த்ரமே இல்லை. அது குறிப்பிடப்படவே இல்லை.
2)  இவர் மட்டுமல்ல
Encyclopedia of Puranic Beliefs and Practices by Sadashiv A.  Dange
R.G. Bhandarkar Formerly Professor and Head of the Dept of sanskrit bombay university
‘Marriage’ என்ற தலைப்பிலும்
‘Ritual Details’ என்ற தலைப்பில்.
ஏழு அடி - சப்தபதி பற்றிதான் சொல்லப்பட் டுள்ளதே தவிர (சிவபார்வதி, கல்யாணம் துவங்கி) எங்கேயும் தாலி கிடையாது (பக்கம் 997-998)
Ritual Details: details about the rituals of marriage obtain, with local touches. As per the Vedic tradition. all gods are believed to be present at the altar at the marriage. The bride is said to take seven steps\(saptapadi) stepping in seven circles specially drawn….
… Further details of the practices at marriage are available from the description of the marriage of siva and parvati. ..
..Then followed the ritual of wearing the sacred thread; and both, the bride and the bride-groom had to undergo it..
..The father of the bride gave various gifts to the bride groom..
..The brahma describes the marriage of parvati as svayamvara (marriage by her own choice’, which is described in chapter36…
இவற்றில் தாலி பற்றி எங்கும் கிடையாதே.
3) தமிழர்களின் திருமணச் சடங்கிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, தாலி கட்டும் பழக்கமே கிடையாது.
பிற்காலத்தில் புகுத்தப்பட்டது. (- டாக்டர் மா. ராசமாணிக்கனார்  தமிழர் திருமணத்தில் தாலி என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.)
எனவே, இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறது என்று கூறுவது, ஒன்று அறியாமையால் அல்லது திட்டமிட்ட விஷமத்தால்தான் -
எனவே, தாலியை பெண்ணடிமைச் சின்னமாக கருதி விரும்பி அகற்றிக் கொள்ள தாமே முன் வருபவர்களின் உரிமையை எவரே தடுக்க முடியும்?
ஏன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டு விளம்பர நாடகம் ஆடுகிறீர்கள்?
-விடுதலை,11.4.15

சனி, 5 செப்டம்பர், 2015

பார்ப்பு என்பதற்கு இருபிறப்பு என்ற பொருள் தப்பு


மஞ்சை வசந்தன்

கோழிக்குஞ்சு - கோழிப்பார்ப்பு என்று தலைப்பிட்டு வய்.மு.கும்பலிங் கன் அவர்கள் எழுதிய செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆதார மற்றவை. அவரைத் தொலைபேசி வழி தொடர்புகொண்டு, கோழிக் குட்டியும் கிடையாது, கோழிக்குஞ்சும் கிடையாது. அதன்பெயர் கோழிப்பார்ப்பு என்று எழுதியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டேன்.
ஆதாரம் இல்லை. அப்படி நினைத்து எழுதினேன் என்றார். ஆயிரக்கணக் கான அறிஞர்கள் படிக்கும் தின மணியில் இப்படியொரு பொறுப்பற்ற பிதற்றல் வருத்தமளிக்கிறது.
முட்டையிட்டு வருவது குஞ்சு. ஈன்று பெறுவது குட்டி. விலங்கின் குட் டிக்கும், பறவையின் குஞ்சுக்கும் பார்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. பார்ப்பு என்பதற்கு இளமை என்பதே பொருள்.
இளம் பிள்ளையை பார்ப்பா என் போம். பார்ப்பா என்பதே பாப்பா என்றா னது. கோர்ப்பு கோப்பு ஆனது போல.
“தன் பார்ப்புத் தின்னும் அன்பின் முதலை”
- (அய்ங்-41)
“பார்ப்புடை மந்திய மலையிறந்தோரே”
- (குறு-278)
பார்ப்பனர் என்ற சொல் ஆரியர் களுக்குத் தமிழகத்தில் மட்டுமே வழங் கப்படுவதாகும். மற்றப் பகுதிகளில் இவ்வழக்கு இல்லை.
தமிழகத்தில் தமிழர்க்குரிய தொழில் பெயரான பார்ப்பனர் என்ற சொல் ஆரியர்களால் பறித்துக் கொள்ளப் பட்டது.
அக்காலத்தில் அரசர் மற்றும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த இளம் வாரிசுகளுக்கு, ஆலோசனை கூற, தோழமை கொள்ள, உதவ, துணை நிற்க இளம் தோழர்கள் (தமிழர்கள்) அமர்த் தப்பட்டனர். அவர்களே பார்ப்பனர் கள். அத்தொழில் பார்ப்புத் தொழில் ஆகும்.
பார்ப்புத் தொழிலுக்குரிய பணிகளை தொல்காப்பியம் தெளிவாகக் குறிக்கிறது.
“காமநிலை யுரைத்தல் தேர்தல்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,
செலவுறு கிளவியும், செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்புக் குரிய”  - (கற்பு-36)
ஆரியர்கள் தமிழகத்துள் நுழைந்து பரவியதும், அவர்களின் நிறமும், தோற் றமும், அரசு மற்றும் செல்வந்த குடும் பத்து இளைஞர்களைக் கவர, பார்ப்புத் தொழிலுக்கு அவர்களை (ஆரியர்களை) அமர்த்த, அத்தொழில் முழுவதும் ஆரியர் வசமாகி, அதன்பின் அத்தொழி லின் பெயர் அந்த இனத்திற்கே ஆனது.
கூர்க்கர் என்ற இனப்பெயர், வாயில் காப்போரின் தொழிற்பெயராய் ஆனது போல, பார்ப்பு என்ற தொழில் பெயர் ஆரியர் இனத்தின் பெயராய் ஆனது.
உண்மை இப்படியிருக்க பார்ப்பனர் இரு பிறப்பாளர். கோழிக்குஞ்சு இரு பிறப்புடையது. எனவே இரண்டிற்கு பார்ப்பு என்ற பெயர் வந்தது என்பது பிழை. பார்ப்பிற்கு இரு பிறப்பு என்ற பொருள் கிடையாது. பார்ப்பு என்றால் இளமை என்பது மட்டுமே பொருள்.
குறிப்பு: தப்பைச் சுட்டிக் காட்டி ‘தினமணி’க்கு உரிய நேரத்தில் இம் மறுப்பு அனுப்பப்பட்டும்; தினமணியில் இது வெளியிடப்படவில்லை. இதுதான் இ(தி)னமணியின் யோக்கியதை!
-விடுதலை ஞா.ம.22.8.15

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

புருஜ் புருஷஜ்ஞ-மனிதர்களைக் கொன்று யாகம்


இதைப் படிக்கும் பொழுதே இது என்ன புதுச் சொல்? புரியவில் லையே என்ற குழப்பம் வரத்தான் செய்யும். இது ஒரு சமஸ்கிருத சொல். இதன் பொருள்: மனித னைக் கொன்று நடத்தப் படும் யாகம் என்பதாகும்.
மனுசனைக் கொன்று யாகமா? இது என்னடா கொடுமை என்று திகைக்க வேண்டாம். ஆரியப் பார்ப்பனக் கலாச்சாரத்தில் காட்டு விலங்காண்டித்தனம் என்பது சர்வ சாதாரணம்.
மனிதனையே கொன்று யாகம் நடத்திய கூட்டம் தான் - பசுவதை பற்றிக் கண்ணீர்  வடிக் கிறது.
மனிதர்களைக் கொன்று யாகம் நடத் தியதற்கு ஏதாவது ஆதா ரம் உண்டா? என்ற கேள்வி எழலாம்.   ஆதார மின்றி என்றைக்காவது விடுதலை எழுதிய துண்டா?
யஜுர் வேதம் என் பதே முழுக்க முழுக்க யாகம் பற்றிய தாண்ட வம்தான். யஜூர் வேதம் என்னென்ன யாகங்கள் - எந்தெந்த உயிர்களைக் கொன்று நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டிய லேயே தந்துள்ளது. இதில் 30 வகை யாகங்கள் தரப்பட்டுள்ளன. அதில் 11ஆவது இடத்தில் இடம் பெற்றிருப்பதுதான் மனிதர்களைக் கொன்று நடத்தும் புருஷ ஜ்ஞ யாகமாகும்.
அரிச்சந்திரன் என்கிற  அரசன் புத்திரப் பேறில் லாது வருந்திக் கொண் டிருக்கும்போது வருண தேவனின் கட்டளைக் கிணங்கி அஜீகர்த்த முனிவரின் புத்திரனான சுன:சேபன் என்பவனை விலைக்கு வாங்கி அவ னைக் கொன்று நர மேத யாகம் பண்ணத் தொடங்கியது ரிக் வேதத் தில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.
பசுவைக் கொல் லுவதா என்று பதை பதைக்கும் பார்ப்பனக் கூட்டம் யஜுர் வேதத் தில் கூறப்படும் கோண வம் என்னும் யாகத்தில் பசு மாடு, காளை மாடு இவைகளைக் கொல்லும் யாகம் என்று கூறப்பட் டுள்ளதே!
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஒரே கலாச்சாரம் பேசும் இந்துத்துவவாதிகளுக்கு ஒரு கேள்வி உண்டு.  வங்காளத்துப் பார்ப்பனர் களுக்கு முக்கிய உணவு மீன்தானே இன்றைக் கும்? பார்ப்பனர்களுக் குள் கூட ஒரே கலாச் சாரம் - இல்லையே!
சிவன் கோயில் படையல்களை வைஷ் ணவன் சாப்பிடுவ துண்டா, சொல்லுங்கள் பார்க்கலாம். கால ஓட்டத் தில் எத்தனையோ கலாச் சாரங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டு போயின என்பதுதானே உண்மை. எத்தனைப் பார்ப்பனர்கள் உச்சிக் குடுமியோடு அலை கிறார்கள் - சொல்லட்டும் - பார்க்கலாம்.
- மயிலாடன்
-விடுதலை,16.3.15

ஞாயிறு, 10 மே, 2015

வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!

Parthasarathy Rationalist's photo.
















வேத முறைப்படியான திருமணத்தில் தாலி இல்லை!
தமிழ் நாட்டில் நடைபெறும் வேத முறைப்படியான திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தும் யஜுர்வேதிகளின் ஆபஸ்தம்ப கிருஹ்யஸூத்திரத்தில் உள்ள விவாஹ மந்திரங்களே ஆகும்.
இதில் விவாஹம் என்பது 1.வாக்தானம், 2.கந்யாதாநம், 3.வரப்ரேஷனம், 4.பாணிக்ரஹணம், 5.ஸப்தபதி என்று அய்ந்து முக்கியமான பகுதிகளை கொண்டது என உள்ளது.
இதில் ‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதியோ மந்திரமோ கிடையவே கிடையாது. தற்போது சொல்லப்படும் ‘’மாங்கல்யம் தந்துநாநேந’’ என்ற சுலோகம் இடையி
ல் புகுத்தப்பட்டதேயாகும்.
இதை ‘’விவாஹ மந்திரார்த்த போதினி’’ என்கிற நூலில் ‘கீழாத்தூர் ஶ்ரீநிவாஸாச்சாரியார்’ அவர்களும், ‘’திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களும்’’ என்கிற நூலில் ‘வேங்கடவன்’ அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடலங்குடி வெளியீடான ‘’விவாக மந்திரங்கள் எதற்காக?’’ என்கிற நூலில்‘’மாங்கல்ய தாரணம்’’ என்கிற பகுதி குறிப்பிடப்படவேயில்லை. அதே போல் பெரிய சங்கராச்சாரி ‘’விவாஹம்’’ என்கிற நூலில் தாலியை பற்றி குறிப்பிடவே இல்லை.
ஆகையால் மேற்கண்ட ஆதாரங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள ‘’வேதங்களில் தாலி கட்டுதல் இல்லை’’ என்கிற பகுதியை உறுதிப்படுத்துகிறது.
வேதங்களில் இல்லாத தாலியினை பிடித்துக்கொண்டு இந்து மத போலிகள் தொங்கிக் கொண்டிருப்பது வரட்டுப் பிடிவாதமேயாகும்!
-மூலிகை மன்னன் செ.ர.பார்த்தசாரதி
-முகநூலில்,18.4.15


-விடுதலை ஞாயிறு மலர்,26.4.15

சனி, 7 மார்ச், 2015

திருஞான சம்பந்தர் அற்புதங்களும் , பெரிய புராணமும் வரலாறும், உண்மையும்



முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

சமயக்குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர் - அப்பர் எனும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். இந்த நால்வர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படு கிறது. அதிலும் திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் அற்புதங்களை அவரே நிகழ்த்தியதாகவும், அதுவும் இறையருளாலே நிகழ்த்தப்பட்டதாகவும் நம்பப்படு கிறது.
இந்நிலையில் இளமையில் இருந்தே இது குறித்து அவ்வப்போது அய்யங்கள் எழுவது உண்டு. அதிலும் நான் பிறந்து வளர்ந்த திருமங்கலத்தில் என்னுடைய வீட்டை ஒட்டிய தெருவில் உள்ள அருள் மிகு பத்ரகாளி மாரியம்மன் கோயிலில் ஆறாம் திருவிழாவில் சமணர் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெறுவதும் உண்டு. இது இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆறாம் திருவிழாவில் சைவ, சமண விவாத மாக நடைபெறுகிறது.. காக்காவேஷம், சாமியார் வேஷம் என்று கூறும்படி, சமணர்களாகவும், சைவர்களாகவும் வேடமிட்டுச் சாமி ஊர்வலத்தில் வருவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கோவில் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார் களுக்குப் பாத்தியப்பட்டது. பரம்பரை டிரஸ்டிகள்  என அனைவருமே நாடார்களால் நிருவகிக்கப்படுவது.
நாட்டாண்மை முறை பரம்பரை  டிரஸ்டி தலைமை யில் இயங்குவது திருமங்கலத்தில் மட்டும்தான். பரம்பரை டிரஸ்டி வி.வி.பி. சிதம்பர நாடார், வி.வி.பி.சி. சவுந்திரராஜன், வி.வி.பி.சி. ரமேஷ்  பாபு என்று நாடாரே ஆவர். நாட்டாண்மைகரம் அப்படியே முதல் நாட் டாண்மை நல்லதம்பி நாடார் வகையறா சி. ரத்தினம், இரண்டாவது நாட்டாண்மை ராக்கி நாடார் வகையறா - மாஸ்கோ நாடார். மூன்றாவது நாட்டாண்மை பொன்னுலிங்க நாடார் வரையறா வி.வி.முருகேசன்; மேலும் பரம்பரையாகப் பன்னிரண்டு காரியக்காரர்கள். இப்படி நாடார்கள் உருவாக்கிய, நாடார்களுக்கே சொந்தமான மாரியம்மன் கோவிலில் நாடார்கள் ஒரு பிரிவினர் காக்காவேஷம் என்று சமணர் வேஷம் போடுவதும், ஒரு பிரிவினர் சாமியார்கள் என்று திருஞான சம்பந்தராயும், அவருடைய சைவ அடியார்களாகக் காவி அணிந்து, பட்டை கொட்டை அணிந்து சைவர் வேஷம் போடுவதும் நடைபெறுகிறது.
அது மட்டுமல்லாது சமணர் வேஷம் போடுபவர்கள் நீண்ட அங்கி, தலையில் கருப்புக்குல்லாய், கையில் கத்தையாக மயிற்பீலி ஏந்தி அருகனே துணை அருகனே துணை அவாளுக்கு நாம் என்ன ஒக்கப்போட்டு ஆக்கியவாளா என்பதும் கூறுவர். சைவர்களோ கையில் உத்திராட்சத்தை உருட்டிக்கொண்டு நமசிவாயா, நமசிவாயா என்று குரல் எழுப்புவர். சமணர்கள் பகலில் முக்கியமானவர்கள் வீடுகளுக்குச் சென்று காபி, சிற்றுண்டி ஏற்று ஆசிர்வாதம் செய்வர்.
இரவில் இரண்டு மணி அளவில் திருமங்கலம் குண்டாற்றின் கரையில் அமைந்துள்ள கழுவேற்றப் பொட்டல் என்னுமிடத்தில் சமணர்கள் எதிர் எதிராக அமர்ந்து  சமணர்கள் பாட்டு என்று பாடல்களைப் பாடுவதும், சைவர்கள் திருஞானசம்பந்தர் பாடல்களைப் பாடுவதும் செய்து, சமணம் உயர்ந்ததா? சைவம் உயர்ந்ததா என்று வாதிடுவார்கள்.
இந்தத் திருமங்கலத்தைச் சேர்ந்த பத்திரகாளி மாரியம்மன் கோயில் பழைய குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில் உள்ள தகவல்கள் இவை. அக்காலத்திய தமிழில் உள்ளது. இதில் திருஞானசம்பந்தர் கூட்டத்தார் நிகழ்த்திய அனல்வாதம், புனல்வாதம் என்பது மோசடி என்று கூறப்பட்டிருப்பதைப் படித்தபோது திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் பற்றிக் கூறியதை ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது.
பழைய குறிப்பில் கிட்டும் செய்திகள்
மதுரையில் பாண்டிய அரசர் மூலமாக சமணாசிரியர் கள் மூவாயிரம் வருஷகாலமாய் சர்வ ஜீவராசிகளுக்கும் கருணை, ஈகை, சாந்தம் முதலிய வார்த்தையை அன்பால் பேசி, அரவணைத்து மயில் இறகால்துடைத்து,  ஞானப்பால் கொடுத்து,  நல்லொழுக்கமூட்டி,  நற்குணம் ஏற்று எமனை வோட்டி,  கையிலங்கிரிக்கு வழிகாட்டி மக்களுக்கு நல்ல நிலைமையை உண்டாக்கினார்.
கோள் பிறந்த நாட்டில் கோமாளியும் பிறந்தது போல் சம்பந்தர் பிறந்து மதுரைமாநகருக்கு இத்திருக்கூட்டம் வந்து, ஆடம்பரமாய் இருந்து சமணர்களுக்கு எதிராக பொறாமை பேதகமாய் நடந்து, திருவிளையாடல் செய்து தேவாரம், திருவாசகம் பல ஏடுகள் இயற்றியிருப்பதால் இத்திருமங்கலம் ஸ்ரீ பத்ரகாளி மாரியம்மன் மகா உற்சவத்தில் ஆறாம் நாள் கழுவேற்றயாகத்தில் சம்பந்த மூர்த்திகளும், சமணாசிரியர்களும் தர்க்க வாதம் பேசி வேத சாஸ்திரம் போட்டி நடைபெறுகிற படியால் ஜனங்கள் யாபேரும் சாந்தமாய் இருந்து, சரித்திரம் தெரிந்து, நியாயமானதை அறிந்து இல்லறத்துறவு என்பதனை நிதானித்து நியாயங்களை புகழ்வீர்கள் என மகாகுருவை வணங்கி மகிழ்கிறோம்.
பாண்டிய நாட்டில் சமண மதம் நன்றாகவே வாழ்ந்து வந்த சமயத்தில் சோழ நாட்டில் இருந்து வந்த சம்பந்த மூர்த்தி திருக்கூட்டம் ஆற்றுக்கு அக்கரையில் காவிக் கூடாரம் அடித்து சமணர்க்கு எதிராக நின்றனர். சமண மதத்தை  அடியோடு அழிக்க எண்ணங் கொண்டவராய் அக்கினிக்குண்டம், ஓமக்குண்டம், நெய்குண்டம் ஆகிய ஆராதனைகளாலும் மந்திரங்களாலும் வஞ்சனை, பில்லி, வைப்புச்சாவல்களாலும், மாயா ஜோதி வேஷங்களாலும் அத்திராத்தி என்ற மந்திரத்தை இகழ்ச்சியாகப் பேசி, சமணர்களை கவுணர்கள் எனச் சொல்லி ஆபத்து உண்டாக்கி உடம்பிலே அக்கினி உண்டாக்கி, அருகன் வேதம் நீக்கி அவர்களுடைய வேதங்களைத் தழுவச் சொன்னதால் நாங்கள் உங்கள் மதத்தில் சேரமாட்டோம் என்றும், பகவான் அருகனே எங்கும் சமதர்மக் கொள்கையே என்றோம். ஆனால் மங்கையர்க்கரசியாரும், மந்திரி குலச்சிறையாரும் மன்னர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்; மந்திரத்தாலும் மயிற் பீலிகையாலும் குணமாக்க வேண்டினர். அதற்கு நாங்கள் சொன்னதாவது: அங்வானி  மூர்த்தியோ நரியைப் பரியாக்கி நாமுகனே எமனாக்கி நாயகனே பேயன் ஆக்கிய வஞ்சக மூர்த்திகளைக் கண்ணால் கண்டால் 8 நாள் தோசம், காதாரக் கேட்டால் 16 நாள் விரதம். அவாள் மந்திரஞ் செய்து, அக்கினியை ஏவி மடத்தில் தீ வைத்ததாகச் சொல்வதோ தன் மனம் தன்னைச் சுடும் தவறிய குணம் வீட்டைச் சுடுவது போல் பேசுகிறார்கள். எங்கள் மதம்சாரா சீனா, ஜப்பான், பர்மா, முதலான தீவுகளில் பாண்டிய மன்னர் அரியணை ஏறி  அறக்கொடி ஏற்றி அரவணைத்து சேர, சோழ மகா அரசர்களையும் ஜெயித்து, கூன்பாண் டியன் அரசு புரியும் பாண்டிய நாட்டைப் பிரிக்க சூழ்ச்சி செய்கின்றனர். இக்காலத்தில் சம்பந்தமூர்த்தியிடம் சமணர்கள் தர்க்கவாதம் சொல்வதோ நீதிக்கு விரோதம். பாண்டிய தேசத்தைக் கைப்பற்ற எண்ணிக் கொண்டு கெட்ட எண்ணத்துடன் சமண மதக் கொள்கையை எதிர்க்கும் சம்பந்தமூர்த்தி திருக்கூட்டத்திற்குத்  புரியும் பட்சத்தில் தாம் ஒன்றும் செய்வதற்கில்லை; ஒன்றும் செய்ய இயலாது என்றும் சம்பந்தரைக் கழுவில் ஏற்ற அரசர் உத்தரவு இடுவார்கள் ஆனால் பாண்டிய ராஜாவை எழுப்பித் தருவோம் எனக் கூறினோம்.
திருக்கூட்டமாகிய பாலர்களோ பதை பதைத்து முழி முழித்து தூங்கிக் கொண்டிருந்தபடியால் மகாராஜாவின் வேண்டுகோளால் இரு பேர்களுமே இருந்து சுரமது  போக்கிச்  சுகமாக்கி, அரசாட்சி செங்கோல் நடத்தி வந்தார். மங்கையர்க்கரசியாரும், மந்திரிமார்களும் சூழ்ச்சி செய்து சம்பந்தமூர்த்தியை அலங்கிருதம் உண்டு பண்ணி தண்டிகைபல்லாக்கு மேலே ஏற்றி படாடோபமாய், ஆடம்பரமாய் ஊர் கோலஞ் சுற்றி வந்தபோது சமணர்களா குல குருவாகவும், மன்னர்க்கு மகா முனிவராகவும், மற்ற மானிடர்களுக்குச் சமணாசிரியர் ஆகவும் இருக்கும் பொழுது நீங்கள் வெற்றிக்கொடி நாட்டி வரும் பயங் கொள்ளித்தனமல்லவா என்று சொன்னோம். ராஜா சமணர்களை ஆதரிக்க அரசியாரும் மந்திரி குலச்சிறை யாரும் சம்பந்தமூர்த்தி திருக்கூட்டத்தினை ஆதரிக்க ஆரம்பித்தனர். இரு தலைவர்களின் வாதங்களும் அதிகரித்தன.
இருவருடைய ஏடுகளையும் நெருப்பில் போட்டு, யாருடைய ஏடு எரியாமல் உள்ளதோ அந்த ஏட்டிற்கு உரியவர்களே வென்றதாகக் கூறுவார்கள். ஆனால் சமணர்களாகிய நாங்கள் இயற்கையினை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை.
இறுதியில் போட்டியிட மறந்து எங்களுடைய ஏடு எரியும் நெருப்பினில் இட்டோம். எங்களுடைய ஏடு இயற்கை நீதிகளுக்கு ஒப்ப தீயில் எரிந்தது. எங்க ளுடைய ஏடு எரிந்த அந்தச் சாம்பலை எடுத்து சம்பந்த மூர்த்தி திருக்கூட்டம் பூசியதோடு அவருடைய ஏட்டில் பூசி அவர்களுடைய ஏட்டை நெருப்பில் இட்டார்கள். ஏடு எரியவில்லை. எங்களுடைய ஏட்டின் சாம்பலை அவர் களுடைய ஏட்டில் பூசியதால்தான் ஏடு எரியவில்லை என்று கூறினோம் அவர்கள் நம்பவில்லை.
மூன்றாவது போட்டியாக இருவருடைய ஏட்டையும் ஆற்றில்போட்டு எந்த ஏடு ஆற்றின் நீரை எதிர்த்துச் செல்கின்றதோ அந்த ஏட்டிற்குரியவரே வென்றனர் எனக் கூறினர். நாங்கள் இப்போட்டிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இயற்கை நீதியை எதிர்த்து எங்கள் ஏடு ஆற்றின் நீரை எதிர்த்துச் செல்லாது எனக் கூறினோம். அவர்கள் ஏற்கவில்லை.
ஏடுகள் இரு பேரும் ஆற்றிலே போடவும் ஏதுவாய்  காந்தக் கல் பூசியே போடவும் கோபமாகவே சமணர்கள் வாடவும் ஏற்றிய சக்திகள் முத்தமிழ் பாடவும் இருவ ருடைய ஏடும் வைகையாற்றில் போடப்பட்டது. எங்க ளுடைய ஏடு இயற்கை நீதிகளுக்கு உட்பட்டு ஆற்று நீரோடு சேர்ந்து கிழக்கு நோக்கிச் சென்றது. அவர் களுடைய ஏடு ஆற்று நீரை எதிர்த்து மேற்கு நோக்கிச் சென்றதாகக் கூறி மந்திரி குதிரை மீது ஏறி திருவேடகம் சென்று ஏடு எடுத்து வந்தார்.
(தொடரும்)
  வரலாறும், உண்மையும் இடறுகிறது 2

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

இவ்வாறு அனல்வாதம், புனல்வாதம் முடிந்து சமணர்கள் தோற்றதாகக் கூறிக் கழுவேற்றுதல் நடைபெறும். கழுவேற்று தல் என்பது சவுக்குக் கட்டைகளை கட்டப்பட்டிருக்கும். சமணர்கள் அதில் ஏறி உட்கார்ந்து கையில் துணியால் தைத்த சிறு நாக்கு போன்ற ஒன்றை வாயில் திணிப்பார்கள். இந்த வேடிக்கை ஆண்டுதோறும் நடைபெற்றாலும், இளம் வயதில் ஆரிய சூழ்ச்சியையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம்  எனக்குக் கிடையாது. வேடிக்கை பார்ப்பதோடு சரி.

திருமயிலைக் கபாலீச்சரம் திருக் கோயிலில் கபாலீச்சுரர் சன்னிதி நுழை யும் வாயிலருகில் காசி மடம் குமர குருபர சுவாமிகள் கல்லில் திருஞான சம்பந்தர் பாடிய அங்கம் பூம்பாவாய் பாடல் செதுக்கி வைத்துள்ளதைக் காண்பது உண்டு. அதுபோல் மேற்கு வாயில் அரு கில் திருஞானசம்பந்தர் சாம்பலிலிருந்து எழுப்பிய பூம்பாவைக்கு ஒரு சிறிய சன்னிதி சில ஆண்டுகளுக்குள் எழுப்பி யது கொடி மரத்தின் எதிரே காணப் படுகிறது.

இவற்றைக் காணும்போதும், தேவாரப் பாடல்களை ஆராயும்போதும் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்துத் தேவாரப் பாடல்களில் குறிப் புகள் ஏதும், அங்கம் பூம்பாவையை எழுப் பியது உட்படச் சான்றுகள் இல்லாமை யைக் கண்ணுற நேர்ந்தது.

அப்படியானால் திருஞானம்சம்பந்தர் இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த் தினார் எனும் கற்பனைக் கதை பரவியது எப்படி? மறைந்த பேராசிரியர் என் அன்பு நண்பர் கு. நம்பி ஆரூரன்  தம்முடைய எம்.லிட் பட்ட ஆய்விற்காகப் பெரிய புராணம் கூறும் சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகள் எனும் ஆய்வினை மேற் கொண்டு ஆய்வேட்டினை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் அளித்துள்ளார். அடுத்து பேராசிரியர் இராசமாணிக் கனார் பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலினை எழுதியுள்ளார்.

மேலும் பல்லவர் வரலாறு எனும் அவர்தம் நூலில் சுந்தரர் வழக்கு குறித்துப் பெரிய புராணம் கூறுவனவற்றை எடுத்துக் கூறியிருந்தார். எனவே பெரிய புராணம்தான் இவ்வா றான அற்புதங்கள் செய்தார் எனும் கற் பனைச் செய்தி பரவியதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது.

புராணங்கள் - அவை கந்தபுராணமா யினும் சரி, சேக்கிழாரின் பெரியபுராண மானலும் சரி, அவை கற்பனையே என்ப தோடு மிகைப்படுத்தப்பட்ட - இன்னும் சொல்லப் போனால் புளுகுச் செய்தி களுக்குத் தமிழ்ப் புனுகு சாத்தப்பட் டவையே.

சேக்கிழாரின் தமிழைப் போற்றுகி றோம். சேக்கிழார் தமிழர் என்பதால், ஆரியப் புலவர் அல்லர் என்பதால் மதிக் கிறோம். போற்றவும்கூட செய்கிறோம் ஆனால் இதுபோன்ற கற்பனைக் கதையை உலவவிட்டதை ஏற்கவியலாது என்பது பகுத்தறிவாளர் கருத்து. அது கம்பரின் இராமாயணத்திற்குக் கூறப்பட்ட எதிர்ப்புப் போலவே பெரியபுராணத்திற்கும் கூறப்படும் எதிர்ப்பு, மறுப்பு எல்லாம் ஆகும்.

வைணவத்திற்குக் கற்பனை வழங் கியவன் கம்பன். அதே காலகட்டத்தில் சைவத்திற்குக் கற்பனை வழங்கியவர் சேக்கிழார்.

இந்நிலையில்  1929இல் இன்றைக்கு எண்பது ஆண்டுகளுக்குமுன் இராசரத் தினம் என்பவர் எழுதிய பெரிய புராணம் கூறிய,  தேவாரத்தில் இல்லாத கற்பனை கள், கப்சாக்கள் குறித்த செய்திகள் காணப்பட்டன.

அதுவே மேலும் நம் ஆர்வத்தைத் தூண்டி திருஞானசம்பந் தர் நிகழ்த்திய அற்புதங்கள் என்பவை யெல்லாம் கற்பனையே, சேக்கிழார் பக்தியை வளர்க்க, தம் பக்திப் பெருமையை வெளிக்காட்ட  தெய்வப் புலவர் என்று அழைக்கத்தக்க அளவில் பல கற்பனை, புளுகுகள், நம்ப முடியாத வற்றை எழுதி வைத்துவிட்டார்.

நல்ல வேளையாகத் தேவாரப் பாடல் கள் இராஜராஜசோழன் முயற்சியால் கிடைத்துள்ளன. அவற்றில் திருஞான சம்பந்தர் அற்புதங்கள் செய்தார் என்று காட்டுவதாக இல்லை. இன்னும் ஆலயங் கள் சென்று வருகின்ற என்போன்ற ஆய்வாளர்கள் அவற்றை எடுத்துக் காட்டிட வேண்டும்.

எனவே பக்தி மடம் கொண்டவர்கள் எங்களைப் போன்றவர்களைக் கட்டுச் சோற்றுக்குள் எலி என்று எண்ணிக் கொண்டாலும் சரி, கலைஞர் பராசக்தி யில் கூறியதுபோல் பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது. உண்மையான பக்தி பலன் கருதாப் பக்தியாக மறைமலையடிகள், திரு.வி.க. காட்டிய வழியில் அமைதல் வேண்டும்.

பெரிய புராணமும் - தேவாரமும்

தமிழ் வேதம் என்று சொல்லப்பட்ட தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள் மூவர் - திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரமூர்த்தி. இவர்கள் மூவரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் அடங்குவர். இவர்களைக் குறித்துக் கூறவந்த பெரிய புராணம் இவர்கள் மூவருமே  அற்புதங்கள் நிகழ்த்தினர் என்று கூறுகிறது.

இக்கூற்றுகளுக்குச் சான்றாக காலத் தால் முந்திய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த எந்தத் தேவாரப் பாடல்களிலும் கிடைக்கவில்லை. சேக்கிழார், தேவாரப் பாடல்கள் தோன்றிய சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப்பின் குன்றத்தூரில் பிறந்து சிதம்பரத்தில் பெரிய புராணம் அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பெரிய புராணம் இயற்றுகையில் நாட்டில் வழங்கும் கதைகளைக் கொண் டும், தேவாரப் பாடல்களில் வழங்கும் சில சொற்களின் போக்கைக் கொண்டும், சேக்கிழார் திரிபுணர்வினால் - மூவர்கள் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறுகின்றனர்.

இதே போன்று எந்நாட்டிலும் பெரியோராயிருந்தோர்களை, பிற்காலத் தவர் சிறப்பாகக் கொள்ளுமாறு, அவரைப் புகழ்ந்தோரும், சார்ந்தோரும் மிகைப்படக் கூறி, அவதார புருஷர் களாக ஆக்குவது வழக்கமாகக் காணப் படுகிறது.

அவ்வாறே உலகத்திற்கு நீதி போதிக்க வந்த யேசு கிறித்துவை பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறு வதும் ஏற்றதே.

ஏன், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலையுரைத்த கற்பனை யெல்லாம் மண் மூடிப் போக என்று பாடிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகள் அற்புதங்கள் செய்ததாகச் சில ரும், அதை மறுக்கப் பலரும் தோன்றி யதும், வழக்காடியதும் நிகழ்ந்துள்ளன.

தந்தை பெரியார் இராமலிங்கர் பொன் மொழிகள் என்று விடுதலையில் ஒரு பக்கத்திற்கும் மேலாகத் தொகுத்து கட்டுரை ஒன்று வரைந்துள்ளார்.  இராமலிங்கர் பொன்மொழிகளை பெரியார் தொகுத்துக் கூறியதன் நோக்கம் - பொய் தோன்றிய காலத்துச் செல்வாக்குப் பெறவில்லையென்ற போதிலும், மேலும் மேலும் வற்புறுத்திக் கூறுவதினாலும், நாளடைவில் அதனை மறுப்பவரின்றி மெய்யாக ஆகிவிடக் கூடாது என்பதால்தான்.

பின்வருவோர் பொய்யை ஏட்டில், எழுத்தில் கண்டால் கடவுள் வாக்கு அது; என்றும் மாறாத சத்தியம், உண்மை என்று எண்ணி மயங்கிட நேரிடுகிறது. மூவர் செய்த அற்புதங்கள் எல்லாம் அவ்வாறேதான் மாறியுள்ளன. இதுபோல் வைணத்தில் அதிகமில்லையெனினும் பன்னிரு ஆழ்வார்களில் ஓரிருவர் இதுபோல் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அல்லது அவர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
(தொடரும்)