சாமியார் ஆசாராமும், தேவநாதனும், ஜெயேந்திரரும்
பத்ரி நாராயணன்களும் பெரியார் சீடர்களா?
மோடி செல்லுமிடம்
"எனக்கு மன உளைச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் நான் தேடிச் செல்லும் இடம் சாமியார் ஆசாராமின் மோட்சக் குடில்தான்!
- பிரதமர் நரேந்திரமோடி
மின்சாரம்
"பெரியார் கருத்துகள் எப்போது போற்றப்படத் துவங் கியதோ அப்போதே கலாச்சார சீரழிவு துவங்கிவிட்டது!" என்று அபாண்டமாக எழுதுகிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்.
எழுத்தாளர் அனுராதா ரமணனைக் கைப்பிடித்து இழுத்தாரே லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதி - அவரும் பெரியாரைப் போற்றிப் புகழ்ந்தவர்தானா? பெரியாரின் சீடர்தானா?
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கர்ப்பக் கிரகத்தில் பக்தைகளை மயக்கி உல்லாச வேட்டையில் ஈடுபட்டுக் கர்ப்பத்தை உண்டு பண்ணினானே - அந்தக் காட்சிகளை இரகசியமாக படம் பிடித்து, அந்தப் படங்களைக் காட்டிக் காட்டி மறுபடியும் மறுபடியும் அந்தப் பெண்களைப் போகப் பொருளாக்கிக் களியாட்டம் «£பட்டானே தேவநாதன் என்னும் குருக்கள் பார்ப்பான் அவனையும் பெரியாரின் சீடன் என்று இந்தச் சிண்டுகள் கூறப் போகின் றனவா? இரண்டாண்டுகள் கோயில் கர்ப்பக் கிரகத்தில் இந்தக் கேவலம் நடந்திருக்கிறதே - (இதுவரை அவனுக்குத் தண்டனை கிடைக்கவில்லை என்பது வேறுவிடயம்!)
ஆண்டாளைப்பற்றி கவிப் பேரரசு வைரமுத்து ஏதோ எழுதி விட்டார் என்று வானுக்கும், பூமிக்குமாய் தாவிக் குதியாட்டம் போட்டதே இந்தக் குருமூர்த்தி கூட்டம் - சோடா பாட்டிலை வீசுவோம் என்று முண்டா தட்டினாரே ஜீயர் - அதே ஆண்டாள் கோயில் கருவறையில் சிறீவில்லிப்புத்தூரில் பத்ரி நாராயணன் என்ற அர்ச்சகப் பார்ப்பான் பாலியல் குதியாட்டம் போட்டானே - அவனையும் பெரியார் கட்சியில் சேர்க்க உத்தேசமா? (ஜீயர் பெருமானின் சீடர்தான் அவர் என்று மரியாதையாக இப்பொழுதாவது ஒத்துக் கொள்ள வேண்டும்)
கர்ப்பக்கிரகம் என்று இந்தக் கா(வி)லிக் கூட்டம் பொருத்தமாகத்தான் பெயர் வைத்திருக்கிறது போலும்!
ஜம்மு காஷ்மீரிலும் கோயிலுக்குள்தான் அந்தக் கொடூரம் நடந்திருக்கிறது! எட்டு வயதுச் சிறுமி ஆசிஃபா கோயிலுக்குள் கடத்தி வைக்கப்பட்டு, எட்டு நாட்கள் எட்டுப் பேர் வெறிபிடித்து காமவேட்டையாடிக் குதறியி ருக்கிறார்களே.
அதில் ஒருவன் கோயில் அர்ச்சகன் - அவன் மகன், ஓர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகன், இந்து எக்தா மஞ்ச் என்ற அமைப்பின் பிரமுகன், ஒரு காவல்துறை அதிகாரி என்று எட்டு மிருகங்கள் ஒரு சிறுமியைச் சீரழித்து இருக் கின்றனவே.
எப்படியெல்லாம் காட்டு விலங்குகளாய் நடந்தி ருக்கிறார்கள்.
வெட்கம்! வெட்கம்!! மகா மகா வெட்கம்!!!
மருத்துவ அறிக்கையும் காவல்துறை அறிக்கையும் நம் நரம்பு ரத்த நாளங்களை எல்லாம் உறைய வைக்கும் அளவுக்கு பதற வைக்கின்றனவே!
பாலித்தீன் பையை விரித்து, ரத்தம் கோயில் தரையில் சிந்தாதவாறு முதலில் விரிப்பை ஏற்படுத்தி வன்புணர்வு ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள்.
அவள் கத்திவிடக் கூடாதாம்; அதற்காக என்ன செய்திருக்கிறார்கள்? தொடர்ந்து போதை மருந்தைக் கொடுத்துள்ளனர்.
ஒரு வேளை மயக்கம் தெளிந்தாலும் எழுந்து செல்லக் கூடாது எனக் கால்களை வளைத்து உடைத்து இருக் கிறார்கள். அதே நிலையில் வைத்தே கடைசி வரை சிதைக்கப்பட்டு இருக்கிறது அந்த சின்னஞ்சிறு பிஞ்சு.
மரணத்தை கூட வலியில்லாமல் கொடுக்கக் கூடாது என முதலில் கழுத்தை நெரித்துள்ளார்கள்.
அப்போதும் மூச்சு இருந்ததால் பின் பக்கமாய் முட்டுக் கொடுத்து நெஞ்சு எலும்பை உடைத்து இருக்கிறார்கள்.
அப்போதும் அவள் உயிர் நூலிழையில் ஆடிக்கொண்டு இருக்க....
இறுதியாக கற்களை எடுத்து மண்டையில் அடித்து, தலை எலும்பை உடைத்து அந்தச் சின்னஞ்சிறு மலரின் மூச்சை மூர்க்கத்தனமாக முடித்துள்ளார்கள்.
ச்சீ. இவர்களும் மனிதர்கள்தானா?
இவர்களுக்கு ஒரு மதமும், பக்தியும் தேவைதானா?
ஜம்மு காஷ்மீரில் நடந்த இந்தக் கொடூரத்திற்குக் காரணம் பெரியார்தான் திராவிட இயக்கம்தான் என்று சாதிக்கப் போகிறதா இந்த சவுண்டிக் கூட்டம்? இதில் மேலும் ஒரு வெட்கக் கேடு - பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்காக நடத்தப்பட்ட ஆதரவுப் பேரணியில் இரு பிஜேபி அமைச்சர்கள் பங்கு கொண்டார்கள் - பா.ஜ.க.வே உன் பெயர்தான் பாசிசமா? பெரிதாக அய் யப்பன் கோயிலைப்பற்றி ஓங்கிக் குரல் கொடுக்கிறார்களே அந்தக் கோயில் மேல் சாந்தி (அர்ச்சகன்) கண்டரரு மோகனரு விபச்சாரி வீட்டில் பிடிபடவில்லையா? கோயிலை ஒட்டியுள்ள அவன் தங்குமிடத்தில் மதுப் பாட்டில்கள் பிடிபடவில்லையா?
உத்தரப்பிரதேசத்தில், உன்னாவ் மாவட்டத்தில் பங்கர்மாவ் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங்கி செங்கர் (பிஜேபி) என்பவன் அரங்கேற்றிய காலித்தனத்தை என்ன சொல்ல! 15 வயது பெண்ணை பிஜேபி சட்டமன்ற உறுப்பினரும், அவனது உடன் பிறப்பு அனில்சிங் உப் வீட்டில் உள்ள பலரும் அந்தப் பெண்ணைச் சின்னா பின்னப்படுத்தவில்லையா? எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணே முதல் அமைச் சர் சாமியார் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றதாலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர்தானே பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பப்பு உன்னாவ்மீது திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு போலீஸ் லாக்கப்பில் அடித்துக் கொல்லப்பட்டாரே! நாட்டில் நடப்பது நரபலி பாசிச, நாசிச கொடுங்கோல் ஆட்சியா? இனியும் ஒரு கணம் நீடிக்கலாமா இந்த ஆட்சிகள்?
குஜராத் சாமியார் ஆசாராமை எந்தப் பட்டியலில் வைக்கப் போவதாக உத்தேசம்? குஜராத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் சிறுமிகளை சீரழித்தார் இந்த ஆசாராம் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு இப்பொழுது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளாரே!
பாகிஸ்தானின் ஒரு குக்கிராமத்தில் படு ஏழ்மைக் குடியில் பிறந்து பிறகு வட இந்தியப் பகுதிக்கு வந்து தெருவில் பொறுக்கியாகச் சுற்றித் திரிந்தவர், குப்பை அள்ளும் வேலை வரை செய்து வயிறு வளர்த்த இந்தப் பேர்வழிக்கு இப்பொழுது ரூ.10 ஆயிரம் கோடி சொத்து - 3000 ஏக்கர் நிலங்கள் என்றால் இதனை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் இந்த இந்துத்துவா வாதிகள்? ஆயுள் தண்டனை ஆசாராமுக்கா - ஆரிய சனாதனத் துக்கா?
இவரையும் ஈரோட்டாரோடு முடிச்சுப் போடப் போகிறதா இந்தக் குருமூர்த்தி கும்பல்?
ஒரு தெருப் பொறுக்கி சாமியாரானால் இவ்வளவுப் பெரிய கோடீஸ்வரராகி விடலாம் - ஒரு சாம்ராஜ் ஜியத்தையே உருவாக்கிக் கொள்ளலாம் - இவர்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தில்; பிஜேபி ஆட்சியில் இவருக்கு எந்தளவு செல்வாக்கு பெருமதிப்புத் தெரியுமா? (தனிப் பெட்டிசெய்தி காண்க).
பிரதமர் மோடியே அடிக்கடி சென்று ஆசீர்வாதம் வாங்கும் இடம் அது.
ஒழுக்கத்தை பற்றியே கவலைப்படாத இந்து மதம் தான் எல்லா வகைக் கலாச்சார சீர்கேடுகளுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் மூல காரணம் என்பதை மறுக்க முடியுமா?
படைப்புக் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என்று கூறப்படும் இந்த மூல மும்மூர்த்திகளே கற்பழித்தவர்கள், சண்டை போட்டவர்கள், வன்முறையாளர்கள் என்கிறபோது - இந்தக் கடவுள்களை வழிபடும் மக்கள் மத்தியில் எத்தகைய கலாச்சார மேம் பாட்டை, ஒழுக்கத்தின் உயர் மாண்பை எதிர்பார்க்க முடியும்? (குறிப்பு: இந்த இடத்திலாவது குருமூர்த்திகள் பதில் சொல்ல வேண்டும்).
மார்க்ஸ் பார்வையில் இந்தியா
மார்க்ஸ் தனது இந்தியாவில் ஆங்கில ஆட்சி என்ற முதல் கட்டுரையில், ஒரு வகையில் இந்தியாவை இத்தாலியுடனும், இன்னொரு வகையில் இந்தியாவை அயர்லாந்துடனும் ஒப்பிடுகிறார். அவர்
ஒவ்வொரு கால கட்டத்திற்கும் இடையில் அயர்லாந்து வெவ்வேறு தேசிய கும்பல்களால் நசுக்கப்பட்டிருந்தது. இந்துஸ்தானம்கூட மொகலாயர்களாலும், ஆங்கிலேயர்களாலும் நசுக்கப்பட்டு வந்திருக்கிறது. இவர்களின் ஆதிக்கத்திற்கு முன்புகூட இந்துஸ்தானம் சிறுசிறு தன்னிச்சையான அரசுகளாய் பிரிந்திருந்தபோதுகூட அவைகளுக்கிடையே போரும் பூசலும் இருந்து வந்தது. சமூக நோக்கில் பார்த்தால் இந்துஸ்தானும் அயர்லாந்தை ஒத்திருக்கிறது. இத்தாலி சிற்றின்ப வேட்கை நிறைந்ததாக இருக்கிறது. இத்தாலியும், அயர்லாந்தும் கலந்த ஒரு விநோதமான கலப்பாகவே இந்துஸ்தானம் தோன்றுகிறது. சிற்றின்ப வேட்கையும், துன்பமும் நிறைந்துள்ள ஒரு உலகமாக அது இருக்கிறது. இங்குள்ள மதமும் சிற்றின்ப சிறப்பை சிலாகிக்கும் போதே திடீரென்று தன்னையே சித்திரவதை செய்து கொள்ளும் சன்னியாசத்த¬யும் ஆதரிப்பதாக இருக்கிறது. (காலானி யாதிக்கம் பக்கம் 5)
(மார்க்ஸ் பார்வையில் இந்தியா ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாட் தமிழில் இந்திரன் - பாரதி புத்தகாலயம் 3ஆம் பதிப்பு 2009).
சிற்றின்ப வேட்கை என்பதுதான் இந்து மதத்தின் ஆணி வேராக இருக்கிறது என்பதை எவ்வளவு நுணுக்கமாக காரல்மார்க்ஸ் படம் பிடித்திருக்கிறார் - இந்தச் சீரழிவுக் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதானே இன்றைய பாலியல் பாய்ச்சல்கள் - மறுக்க முடியுமா?
இதை மறைக்க அய்யர்வாள் 'அண்டக்காகசம் அபுகாகசம்' சித்து வேலையில் இறங்கியுள்ளார்.
காமசூத்திரம் என்ற ஒன்று - அதன் கதை என்ன தெரியுமா?
இந்திய மரபு காமத்தைக் கொண்டாடிய மரபு. சிவனும், பார்வதியும் காமத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது சிவனின் வாயிற் காப்பாளனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக அய்தீகம். இந்த நூலை 8ஆம் நூற்றாண்டில் ஸ்வேதகேது 500 அத்தியாயங்களாகச் சுருக்கி எழுதினார். இதை மேலும் சுருக்கி எழுதினார் பாப்ரவியாகாரிகர். இந்த நூல்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் இந்த நூல்களைப் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வாத்ஸல்யாயனாரின் காம சூத்திரத்தில் குறிப்புகள் வருகின்றன.
- சாரு நிவேதிதா (நியூஸ் சைடின் 19.12.2013) (ஆனந்தவிகடன் 30.11.2016 பக்கம் 50)
முழு முதற் கடவுளான சிவனும் - அவனது பாரியாளும் எப்படியெல்லாம் உரையாடியிருப்பார்கள் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடலாம்.
இப்படிப்பட்ட மதத்தைக் கட்டிக் கொண்டு, இதற்குப் பொறுப்பு ஏற்காமல் வேறு யாரையோ வேறு எதற்காகவோ திசை திருப்புவது - திரிநூலாருக்கே உரிய கை வந்த கலை!
இதில் வேடிக்கை என்னவென்றால் பெரியார் கற்பைப் பற்றிப் பேசியதுதான் இந்தக் கலாச்சார சீரழிவுக்குக் காரணம் என்று கற்பிக்கிறார் குருமூர்த்தி அய்யர்.
உண்மையிலேயே கற்பைப்பற்றி தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்?
"கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது; கூடவே கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காகவும் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலை யில்லை. ஆனால் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும், பொறுப்பும் இல்லவே இல்லை" என்கிறார் தந்தை பெரியார். (நூல்: வாழ்க்கைத் துணை நலம் 13ஆம் பதிப்பு - பக்கம் 35).
இதில் என்ன குற்றத்தைக் கண்டார் குருமூர்த்தி? கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் தானா? அவன் ஆண் பிள்ளை எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்று எண்ணும், வற்புறுத்தும் ஆணாதிக்க நாட்டாண்மைக் கும்பலுக்குத்தான் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து வேம்பாய்க் கசக்கும்.
குஷ்டரோகியான கணவனை கூடையில் வைத்து நளாயினி தூக்கி சென்றாளே - அந்த "ஆண் கற்பு" குஷ்ட ரோகிகளுக்காக இந்த ஆண்கள் ஆர்ப்பரிக்கிறார்களா?
கடைசிக் கடைசியாக குருமூர்த்தியின் குருநாதரான 'சோ' ராமசாமியின் ஆசீர்வாதத்தோடு முடித்தால் - அதுவும் துக்ளக்கையே சாட்சியாகக் கொண்டு மங்களம் பாடினால் குருமூர்த்தி அய்யருக்குக் குடுமி மகிழ்ச்சிக் கூத்தாடும் அல்லவா - அதே நேரத்தில் இந்தப் பக்தியின் யோக்கியதைக்குக் கொடுத்த சர்டிபிகேட்டாகவும் இருக்கும் அல்லவா!
வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?
புரோகிதர் பதில்: எல்லாம் காலக் கோளாறு தான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு, நாங்கள் ளாம் இந்த மாதிரி வந்துட் டோம். இப்ப பிராமணனும் இல்லே., பிராமண தர்மமும் இல்லே.
வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப் போது?
புரோகிதர் விடை: பக்தியாவது ஒண் ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத் துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர் றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல் லாம் போக, நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா!
- 'துக்ளக்' 1-6-1981 இதழ் பக்கம் 32
இதை பெரியாரோடு, திராவிட இயக்கத்தோடு என்ன பாடுபட்டாலும் முடிச்சுப் போட முடியாதே!
போதுமா குருமூர்த்திகளே! கீழ்த்தரப் பிரச்சாரத்தை நிறுத்தாவிட்டால் உங்கள் சங்கராச்சாரியார்களின் கதை வண்டி வண்டியாக வரும் - ஊர் சிரித்து விடும் - எச்சரிக்கை!
பா.ஜ.க. அரசில் பாடத் திட்டத்தில் ஆசாராம்!
வசுந்த்ரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு, கடந்த 2013-ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் குறித்து அரசு பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளது, அதில் இந்து சாதுக்கள் என்ற தலைப்பில் "மக்களை வழிநடந்த வந்த புனிதர்! இவர் தனது ஆன்மீக பலத்தால் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர். இவரை குருவாக நினைத்த மக்கள் வாழ்க்கையில் பெரும் புகழை அடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
காமுகன்தான் பிஜேபி ஆட்சியின் கதாநாயகன்! தெரிந்து கொள்க!
எங்கே இந்த சல்லாபம்?
குஜராத் மாநிலம் தபோயில் உள்ளது வட்தால் சுவாமி நாராயணன் கோயில் அக்கோயிலுக்குள்ளே இருந்த குடிலிலேயே அர்ச் சகப் பார்ப்பனர்கள் சந்த் தேவ்வல்லப், பக்தைகளிடம் ஆடிய சல்லாபம் (சந்தேஷ் பத்திரிக்கை படத்துடன் வெளியிட்டதுடன் சந்தே ஷின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.)
"எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததை நானும் செய்தேன்!"
- ஆசாராம் சாமியார்
ஆசாராம் நீதிமன்றத்தில் வாதாடிய போது எடுத் துக்கூறிய விவாதம் குறித்த தகவல்களை சாட்சிகள் தரப்பு வழக்குரைஞர் வெளியிட்டு வருகிறார்.
அதில் ஒன்று
நீதிபதியிடம் ஆசாராம் கூறியதாவது,
எங்களது கடவுள் கிருஷ்ணன் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார், அதை இந்துக்கள் தெய்வச்செயலாக பார்க்கிறோம், அதே போல்தான் நாங்களும். பிரம்மசொரூபமான சாதுக்களாகிய நாங்கள் பெண்களுடன் சேருவது தெய்வீகச் செயலுக்கு ஒப்பானதாகும், மக்கள் என்னை தெய்வமாக பார்க்கின்றனர். நான் மக்களுக்கான பல நல்லசெயல்களைச் செய்துள்ளேன், எனது இந்த செயலுக்கு என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் கூடும் லட்சக்கணக்கான மக்களே சாட்சிகளாக இருக்கின்றனர்.
என்மீது பாலியல் கொடுமை குற்றச்சாட்டு என்பது உண்மையோ அல்லது புனையப்பட்டதோ என்பது குறித்து எனக்குக் கவலையில்லை, நாங்கள் தெய்வீக சக்திபெற்றவர்கள் எங்கள் மீது குற்றம் சுமத்துவதே அவசியமற்றது, மதநூல்களின் படி என்னைப்போன்ற சாதுக்கள் மீது விசாரணை நடத்துவதும், சிறையில் வைப்பதும் இந்துமதத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலே ஆகும், இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறியதாகவும்....
அதற்கு நீதிபதி இங்கு மதம் தொடர்பான சொற்பொழிவுகள் கேட்க யாரும் வரவில்லை, அரசமைப்புச் சட்டத்தின் படி விசாரணை நடந்து வருகிறது, குற்றம் செய்தவர், யாராக இருந்தாலும் அரசமைப்பு சட்டத்தின் முன்பு சமமே! ஆகவே இது போன்ற கருத்துக்களைக் கூறி நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார்.
கடவுள் கிருஷ்ணனும், ஈ.வெ.ரா.வின் பரமசீடன் திராவிட இயக்க வீரன் என்று சொல்லப் போகிறார்களா?
ஆன்மிகம் வளர்ந்ததாகக் கூறும் குருமூர்த்தி அய்யரின் பூணூல் பார்வைக்கு அர்ப்பணம்
பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை!
கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ...?
பதில்: என் அனுபவத்துல சொல்றேன்.. பக்தி அதிகமாயிட்டிருக்கு.. கோயிலுக்குப் போகிறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு?
பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல்லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்திச்சு இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூணு கோடியைத் தாண்டிடுது. பக்தி அதிகமாக இருக்கு... ஆனால் ஒழுக்கம்தான் குறைந்துப் போயிடுச்சு!
கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ளலாமே?
பதில்: ஊ... ஹூம்.. அப்படியில்லை.. பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமேயில்லை.
- கிருபானந்தவாரியார், ('ஆனந்தவிகடன்' 22.12.1991).
- விடுதலை நாளேடு, 28.4.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக