ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

சமணரும்மனிதரன்றோ? - நாத்திகப்பதி


சமணர்களின் மீது சமணத் துறவி ஆச்சாரிய துளசிமீது  சனாதன இந்துமத வெறியர்கள் இன்று இந்த இருபதாம் நூற்றாண்டில் பாய்கிறார்கள். இவர்களது கொலை வெறிப் பாய்ச்சல் இன்று மட் டுமா? எத்தனையோ நூற்றாண்டுகளாக இதே பாய்ச்சலில்தான் இந்துமதவெறி பிடித்த பார்ப்பனர்கள் ஈடுபட்டிருக்கி றார்கள். இதை வரலாற்றுப் பூர்வமாக படம் பிடித்துக் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர் - படியுங்கள்!
ஆச்சாரிய துளசி அக்னிப் பரீட்சை என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதை எதிர்த்து இந்த மத வெறி பிடித்த சனாதனக் கூட்டம் ராஜஸ்தானில் வன்முறையில் ஈடுபட்டனர்.
ஆச்சாரிய துளசியையும் அவரது சீடர்களையும் கொல்லவும் அவர்களது இருப்பிடங்களைத் தீயிட்டுக் கொளுத்த வும் வெறிபிடித்துத் திரிந்தனர்.
அத்தகு மதவெறியாளர்களை அடக்க தடியடி பிரயோகமும் நடந்தது. அதோடு பலர் கைதும் செய்யபபடடனர்.
மதம் மக்களை ஒருக்காலும் இணைக் கப்பாடுபடாது என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி அல்லவா?
கண்ட இடத்தில் கழுத்தை அறு
சமணர்களை வாழ விடக் கூடாது! ஒழித் துக் கட்டியே ஆக வேண்டுமென்று எப்படி இன்றைய மதவெறியர்களுக்கு துணிவு வந்தது?
காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதி வைத்த இதிகாசங்களும் புராணங்களும் சமண ஒழிப்பை கடவுட் சேவையாகவும் சமயச் சேவையாகவும் அல்லவா வரு ணித்து இருக்கின்றன!
சமணர்களைக் கண்டவிடத்தில் கழுத்தை அறுத்துப் போட வேண்டும் என்று எவ் வளவு துணிச்சலாக அன்றே தொண்ட ரடிப் பொடியாழ்வார்- பாடியிருக்கிறார் கேளுங்கள்:=
வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில்
போவதே நோயதாகி
குறிப்பெனக்கடையு மாகில்
கூடுமேல், தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய்
அரங்கமா நகருள்ளானே
உசுப்பிவிட்டு ஒழித்தனர்
மேலும் சமணரையும் சாக்கியரையும் எவ்வளவு இழிவாகவும், கொடூரமாகவும் ஏசிப்பாடி மக்களை அவர்கள் பால் உசுப்பி ஒழித்திருக்கிறார்கள் என்பதையும் கேளுங்கள்:
தருக்கச்  சமணரும் சாக்கியப் பேய் களும் தாள்சடையோன் சொற்கற்ற சோம் பரும் குனிய வாதரும் - நான் மறையும் நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே பொற்கற்பகம் - எம் இராமானுசமுனி போந்த பின்னே என்று இரமாநுஜ நூற்றந் தாதி - பாட்டு 99இலும்)
துவரித்த உடையவர்க்கும் தூய்மையில்லாச் சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருளில்லா அருளானை - தன்னடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம்மனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டதும் தென்னரங்கத்தே.
(என்று திருமங்கையாழ்வார் 6-ஆம் திரு மொழி - கைம்மானம் பாட்டு 8லும்)
பொங்கு போதியும், பிண்டியும் உடைப்புத்தர்
நோன்பியர் பள்ளியுள்ளுறை
தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்நெஞ்ச மென்பாய்!
எங்கும் வானவர் தானவர்
நிறைந்தேத்தும் வேங்
கடம் மேவி நின்றருள்
அங்கணாயகற்கு இன்று
அடிமைத் தொழில் பூண்டாயே.
(என்று திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி இரண்டாம் பத்து - பாட்டு 1லும்)
(போதி - அரசு; பிண்டி அசோகம்  புத்தர் - பவுத்தர் நோன்பியர் - ஆர்ஹதர்)
இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும்
சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்
களும் மற்று நுந்
தெய்வ முமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி
வீசும் திருக்குரு கூரதனுள்
பொலிந்து நின்ற பிரான்
கண்டீர் ஒன்றும் பொய்யில்லை
போற்றுமினே.
(என்று நம்மாழ்வார் நான்காம் பத்து - பத்தாவது திருவாய் மொழி பாட்டு 5லும்)
சுட்டுத் தீய்க்க வேண்டாமா?
இவ்வாறெல்லாம் பாடி வைத்து இன் றுள்ளோரையும் அவைகளையே ஆதார மாகக் கொண்டு ஆடித் திரியும்படி ஊக்கு வித்திருக்கிறார்களே, அந்த ஆழ்வார்களை இன்று காண  இயலாமற் போனாலும் அவர்கள் இயற்றிய ஆட்சேபகரமான நூல்களை சுட்டுத் தீய்க்க வேண்டாமா? அல்லது குறைந்தபட்சம் தடையாவது செய்திருக்க வேண்டாமா? அன்றே அப்ப டிச் செய்யத் தவறிவிட்டாலும் இன்றா கிலும் செய்து முடிக்க வேண்டாமா?
உலகில் எங்கெங்கு நோக்கினும் முடி யாட்சி மறைந்து குடியாட்சி மலர்ந்துள்ள இக்காலத்திலுமா?
கடும் புலிவாழும் காடே நன்று
ஜனநாயகத்தின் மாட்சி மேலோங்கி யிருக்கிற இக்காலத்திலுமா?
எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், வாய்ச் சுதந்திரம், தொழில் செய் சுதந்திரம் அனைத்தும் அடுக்கடுக்காக அத்தனை மனிதரும் எவ்விதப் பாகுபாடுமின்றி அனுப விக்கலாமென்று அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டிருக்கிற இக்காலத்திலுமா?
இம்மாதிரி வன்முறைகள், எதுவா யினும் செய்தல் ஏற்புடைத்து, அவை களை ஆண்டவனே ஆமோதிப்பின் எழு மின்! சமணர்களை ஒழிமின்! என இதிகாச புராண காட்டுமிராண்டிச் செயல்கள் தாரளாமாக நடக்கின்றனவென்றால், கடும் புலி வாழும் காடே நன்றல்லவா? என்றுதானே எண்ணத் தோன்றுகிறது!
புத்தரை நினையுங்கள்
இன்னும் இப்படியெல்லாம் நடை பெறுகின்றன என்றால், இன்றைய ஆட்சி உண்மையிலேயே எல்லோராலும் அங்கீ கரிக்கப்பட்ட மதச் சார்பற்ற ஆட்சிதானா என்று சந்தேகிக்கச் செய்கிறதல்லவா?
அன்று இரண்டாயிரத்து அய்ந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே அசல் காட்டு மிராண்டித்தனம்  மண்டிக் கிடந்த அந்த நாளிலே இந்தியாவில் நாத்திகக் கருத்துக் களை சாத்வீகமாகவும், நாகரிகமாகவும் போதித்த புத்த பிரானை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? அவர்களுக்கெல் லாம், புத்தரும் எவ்வளவு தொல்லைகளுக் கிடையே ஈடு கொடுத்திருப்பார் என்ப தைச் சற்று நினைத்துப் பாருங்கள்.
சைவக் கூட்டத்தின் பசப்பல்
தமிழகத்தில் அன்பே சிவம்என்று பசப் பிய சைவத் திருக்கூட்டத்தார்கள் எண்ணா யிரம் சமணர்களை ஈவிரக்கமின்றி கழு வேற்றிக் கொன்றார்கள் மதுரையில். அதே மதுரையில்தான் அன்று அவர்கள் செய் தவை தெய்வத்திருப்பணி என மதித்து, அவர்களது செயல்களைப் போற்றி இன் றும் ஆண்டுதோறும்  விழா கொண்டாடித் திரிகிறார்கள் என்றால் இந்த நாடு உருப்படுமா?
புத்த சமணக் கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி, கொள்ளையடித்த வர லாறுகள் எல்லாம் தேவார,  திருவாசக, நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஆகிய நூல் களில் எல்லாம் மண்டிக் கிடக்கின்றனவே. உதாரணத்திற்கு திருமங்கையாழ்வாரின் அட்டகாசச் செயலைச் சற்று நோக்குங்கள்.
அவர்கள்தான் வாழப் பிறந்தவர்களா?
நாகப்பட்டணத்தில் பொன்னாற்செய்த ஒரு புத்த விக்ரஹமிருக்கிறது. அதைக் கொண்டு வந்து சின்னா பின்னமாக்கிக் கோயிலுக்குக் கோபுரம் முதலானவை கட்டலாம் என்று திருமங்கையாழ்வாரி டம் பரிஜனங்கள் யோசனை கூற, அவ் வாறே ஆழ்வாரும் நாகப்பட்டணத்திற் குப் போய்,
ஈயத்தாலாகாதோ? இரும்பினாலா காதோ? பூபயத்தால் மிக்கதொரு பூதத் தாலாகாதோ? தேயத்தே பித்தளை நற் செம்புகளாலாகாதோ! மாயப் பொன் வேணுமோ! மதித்துன்னைப் பண்ணு கைக்கே என்று அந்தப் பிம்பம் ஊளை யிடும்படி அபகரித்துக் கொண்டு வந்து பங்கப்படுத்தி, திருமதில்கள் கைங்கர்யத் துக்கு அர்ச்சிக்கும்படி உருக்கிப் பொன் னாக்கி அந்த திரவியத்தைக் கொண்டு திருமதில்கள் முதலாகிய சிகரபர்யந்த மாகப் பண்ணவேணும் என்று உபக்ர மித்து திருமதில்கள் கட்டுவித்தும் கொண்டு வந்தார்.
என்னும் பக்கம் 207ல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் டி. கோபால் நாயகரது 1925ஆம் வருட பதிப்பு. திருமங்கை யாழ்வார் வைபவம் என்ற தலைப்பில் காணப் படுவதைப் படிக்க சைவர்களும் வைண வர்களுந்தான் வாழப் பிறந்த மனிதர்களா? சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோர்களெல்லாம் சாகடிக்கப்பட வேண்டியவர்கள்தாமா?
இதுதான் அவர்கள் தொழும் கடவுளர் களின் விருப்பம் என்றால் சிவனும், விஷ்ணுவும் கடவுள்கள்தாமோ? கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை; கட வுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி; கட வுளைப் பரப்புபவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் கூறுவதில் எவ் வளவு ஆழந்த உண்மை ஜொலிக்கின்றது பார்த்தீர்களா?
பசுத்தோல் போர்த்திய புலி!
இனியாகிலும் தெய்வத் திருச்சபை என்னும் பசுத்தோல் போர்த்திக் கொண்டு ஒரு மதத்தார் பிற மதத்தார் மேல் புலி போல் பாய்ந்து பற்பல இடையூறுகளும், வன்முறைச் செயல்களும், கொலைகளும் செய்யும் ஸ்தாபனங்களைத் தடை செய்ய ஆட்சி முனையுமா?
மனிதாபிமானத்தை ஓம்பாத மதம் ஒரு மதமா? அது இந்நாட்டிற்குத் தேவை தானா என்பதை ஒவ்வொரு குடிமகனும் நன்கு சிந்தித்து அமைதிக்கும் நல்வாழ்விற் கும் பாடுபடுவார்களாக.
-விடுதலை ஞா.ம.1.3.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக