புதன், 25 அக்டோபர், 2023

திசை திருப்புவோரே இதற்கு தெளிவான பதில் உண்டா? - கி.வீரமணி (கீதை கூறுவது என்ன?)

   

பகவத் கீதையில்... 

"சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்
குணகர்ம விபாகஷ.... 

என்று கீதையில் உபதேசித்த கிருஷ்ணன் சுலோகத்தை, "ஜாதி வர்ண தர்மத்தை நானே உண்டாக்கினேன்" என்று கூறுவதை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,"The Truth About the Gita" என்ற அரிய ஆராய்ச்சி நூலை எழுதிய ஆந்திர சிந்தனையாளர் வி.ஆர். நார்ளா (V.R. Narla),  காஷ்மீரத்து புரட்சி செக்கியூலரிஸ்ட்  பிரேம்நாத் பாஸ் (Premnath Bass) போன்றவர்கள் சுட்டிக் காட்டும் நிலையில்,  அதைத் திசை திருப்ப, கீதையைப் பிரச்சாரம் செய்யும்  கீதை வியாக்கியான திரிபுவாத நிபணர்களுக்கு ஒரு கேள்வி.

(காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரரோ இதில் நாணயமாக, "ஜாதி வர்ணம் என்பது பிறப்பின் அடிப்படையில் தான்; குணத்தின் அடிப்படையில் ஒருபோதும் அமையாது" என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். "பெரியவா" என்று பய பக்தியுடன் இவர்கள் கூறும் அவரது விளக்கத்தை கீதை விளக்கக்காரர்கள் ஏனோ இதில்  ஏற்பதில்லை!)

"குணத்தை வைத்தே மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று கொள்ள வேண்டும்" என்பதையே சதுர் வர்ணம் மயாசிருஷ்டத்திற்கு"ப் பொருள் கொள்ள வேண்டும் என்றால், இதன்படி உயர்ந்த குணம் உள்ள "சூத்திரனை" பிராமணன் என்று அங்கீகரிக்க சாஸ்திரமோ, சட்டமோ அனுமதிக்கிறதா? ஒப்புக் கொள்கிறதா? பிராம்மண வர்ணத்தில் பிறந்து தவறு செய்பவன் "சூத்திர - பிராமணன்" ஆகிறார் என்றால் அப்படி ஒரு பிரிவு, ஜாதி இருந்திருக்க வேண்டுமே! 

நல்ல உயர்ந்த குணம் படைத்து வாழும் சூத்திரன் - "பிராமணோ - சூத்திரன்" என்று பிராமணோர் பெற்ற தனி ஜாதியாக - இத்தனைப் பிரிவுகள் உள்ள ஜாதிகளில் ஆகியிருக்க வேண்டுமே - அப்படி இதுவரை இல்லையே -  ஏன்? ஏன்?

பதினொன்றாவது அத்தியாயத்தில், சுலோகம் 84 :

"பிராமணன் பிறப்பினாலாயே தேவர்களுக்கும்

பூஜிக்கத் தக்கவனாய் இருக்கிறான்.

பத்தாவது அத்தியாயம் 73ஆவது சுலோகத்தில்

"பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவனுக்கு பிராமண ஜாதித் தொழிலில் அதிகாரமில்லையல்லவா?

சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் எந்தத் தொழிலைச் செய்தாலும் அவன் உயர்ஜாதி அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை பிரம்மாவும் நிச்சயம் செய்திருக்கிறார்."

இதற்கும், குணத்தை அடிப்படையாகக் கொண்டதே கீதை கூறும் வர்ணம் என்று அர்த்தம் கூறுவதற்கும் எத்தகைய முரண்பாடு?

சிந்தித்துப் பாருங்கள், "வர்ண தர்மத்தைப் பாதுகாக்கவே சொந்தங்களிடையேகூட தயங்காது போர் செய்!" என உபதேசம்.

"கடமையைச் செய்" என்பதை வார்த்தைகளால் கூறினால் அந்தக் கடமை செய்வது வர்ண தர்மப்படி விதித்த கடமையே தவிர பொதுவான அர்த்தம் கொண்டதல்ல என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

ஸநாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (4) அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்

 

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

ஸநாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (4)

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்

ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''

7

ஆலயப்பிரவேச போராட்டத்தை தடுத்த பெண்கள் தாக்கப்பட்டதற்காக அழுத சங்கராச்சாரியார்... பெண் களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டதற்கு சந்தோஷப் பட்டிருக்க வேண்டும். ஆனால்?.. 

டில்லியில் நேரு ‘ஹிந்து கோடு பில்’லில் பெண் களுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என கொண்டுவந்த செய்தி பேப்பர்களில் வந்தது.

அப்போது மடம் காஞ்சிக்கு வந்துவிட்டது. கும்ப கோணத்தில் இருந்த எனக்கு ஒரு தந்தி பறந்து வந்தது’ உடனே காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வரவும்’ - இதுதான் தந்தி வாசகம்  - கொடுத்திருந்தவர் சங்கராச்சாரியார்.

நான் புறப்பட்டு காஞ்சி போன சமயம் காஞ்சிபுரத் துக்கு அருகே உள்ள எசையனூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பச் சொத்துகளை எல்லாம் மடத்துக்கு கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவற்றை பார்வையிட எசையனூருக்கு சென்றிருந்தார் மகாபெரியவர்.

என்ன ஸ்வாமி’ என்றேன் நான் - அன்றைய பேப்பரை எடுத்து என்னிடத்தில் காட்டிய மகா பெரியவர். லோகமே அழியப்போறது ஓய்... அழியப் போறது... என படபடப்பாகப் பேசினார்.

“இதப்பார்த்தீரா... ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவாளுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்த்ரீகள் ஓடிப்போயீடுவா.... அபாண்டமா அபச் சாரமா போயிடும் ’ என அந்த பேப்பரை தட்டியபடி வியாக்யானம் தந்து கொண்டிருந்தார் மகா பெரியவர்.

நான் சிரித்தபடியே பதில் சொன்னேன். எனக்கு நல்லதுதான் ஸ்வாமி.. என் மாமனாருக்கு நிறைய சொத்துகள் இருக்கு ஒருவேளை என் ஆத்துக்காரிக்கு பங்கு வந்தால் எனக்கும் நல்லதுதான். இந்த பதிலைக் கேட்டதும்... அசட்டுத்தனமாக பேசாதீர். இந்த சட்டம் வந்தால் ஸ்திரி தர்மமே பாழாயிடும். ஸ்தீரிகளுக்கு பாத் யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

6
அங்கே தேவி உபாசனை செய்யும் ஒரு அம்மா இருந்தார். அவரிடம் போய் "இதுபோல சர்க்கார் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கு - பெண்களுக்கும் சொத்து பாத்யம் உண்டுனு சர்க்கார் கொண்டு வந்திருக்கிற சட் டத்தை பெண்கள் மூலமாகவே எதிர்க்கணும்னு மகாபெரி யவர் சங்கராச்சாரியார் சொல்லியிருக்கார். அதனால இங்க ஸ்த்ரீகள் கூட்டம்போட வந்திருக்கோம். கூட்டத் துக்கு நீங்களும் ஸ்த்ரீகளை கூட்டி வரணும்" என்றேன்.

அந்த தேவி உபாசகரோ மறுத்துவிட்டார். பிறகு ஒவ் வொரு வீடாய் போய் பெண்களை பெரிய முயற்சிக்குப் பிறகு கூட்டத்துக்கு அழைத்து வந்து... "எங்களுக்கு சொத்துரிமை வேண்டாம். மனு ஸ்மிருதியில் உள்ளபடி ஸ்த்ரீ தர்மம் பாதுகாக்கப்படணும் சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும்" என பெண்களை வைத்தே தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை நகல் எடுத்து டில்லி சர்க்காருக்கு அனுப்பி வைத்தோம் இது மட்டுமா?

திருநெல்வேலி ஜில்லாவிலிருந்தும் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் இப்படி ஸ்த்ரீகள் கூட்டம் சங்கராச்சாரி யாரின் உத்தரவுப்படி நடந்தது - என்ன ஏதென்றும் தெரி யாமலேயே பல பெண்கள் இதில் கலந்து கொண்டு எங்க ளுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என சொன்னார்கள்.

கும்பகோணத்தில் நடந்த ஸ்த்ரீகள் கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியாரின் தங்கை செண்பகத்தம்மாளை அழைத்து வந்தோம். அவரோடு இன்னும் பல ஸ்த்ரீகளும் வந்து எங்களுக்கு சொத்து பாத்யம் வேண்டாம் என தீர்மானம் போட்டார்கள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் தமிழ்நாடு பூராவும் 100 ஸ்த்ரீ கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்கள் தவிர சர்க்கார் இந்த பில்லை வாபஸ் வாங்கணும் என்று டில்லிக்கு பல தந்திகளும் அனுப்பிக் கொண்டே இருந்தோம்.இந்த கூட் டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே சங்கராச்சாரியார் மறுபடியும் என்னை அழைத்தார். "இங்கேயே கூட்டம் நடத்திக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது போலிருக் கிறது. டில்லிக்கே போய் எதிர்ப்பை தெரிவிக்கணும் - அதுக்கு நீர் டில்லி கிளம்பணும்” என்றார்.

டில்லியில் Constituion Club - இல் ஸ்த்ரீகளுக்கும் சொத்து பாத்யம் பில் பாஸ்பண்ணலாமா, வேண்டாமா என நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பெரிய அளவில் பெண்களை திரட்டிக் கொண்டு போனோம்.அங்கே, பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்யாய தலைமையில் பல பெண்கள் கூடியிருந்தனர்.

நாங்கள் கூட்டிப்போயிருந்த பெண்கள், நேரு அங்கே வருவதற்கு முன்னரே கலைந்து விட்டதால் பயன் இல்லாமல் போய்விட்டது.

8

சங்கராச்சாரியாரின் எதிர்ப்பால் கொஞ்சநாள்கள் பில்லை தள்ளிவைத்த நேரு... பிறகு பெண்களுக்கு சொத் தில் பங்கு உண்டு என்ற பில்லை பாஸ் பண்ணிவிட்டார்.

‘டில்லிவரை சென்று போராடியும் ஸ்த்ரீ தர்மத்தை பாதுகாக்க முடியவில்லையே...’ என வருத்தப்பட்ட சங்கராச்சாரியார் பில் பாஸான செய்தியை பேப்பரில் படித்துக் கொண்டே மறுபடியும் என்னிடம் சொன்னார்.

அவர்களுக்குத்தான் கல்யாணம் பண்ணும்போது சீதனம் கொடுக்கிறாளே... அப்புறம் எதுக்கு சொத்து? சொத்து இருக்கு என்ற தைரியத்துல இஷ்டப்பட்டவாகூட ஓடத்தான் போறா...

* சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு, ஏன் கோபம் என்று கேட்கிறார் காவி சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவீர்!

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். என்றால் இந்நிலைதான் என்பதைப் புரிந்துகொள்வீர்!

 

 * ‘சூத்திரன் என்றால் தேவடியாள் மகன்' என்ற பொருளிருக்கும்போது -

சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்புஏன் கோபம் என்று கேட்கிறார் காவி சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர்

தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவீர்!

aa

சூத்திரன் என்றால் இந்து தர்ம சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று பொருள் இருக்கும் நிலையில், ‘சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு - கோபம்?' என்று ஆர்.எஸ்.எஸ்சாமியாரணி மாலேகான் குண்டுவெடிப்புப் புகழ் பிரக்யா சிங் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்இது ஆர்.எஸ்.எஸின் ஜாதி ஆணவப் போக்கையும்பெரும்பாலான பார்ப்பனரல்லாதாரையும்ஒட்டுமொத்தமான பெண்களையும் ஜாதி ஆணவத்தோடு இழிவுபடுத்து வதாகும்இந்த ஆர்.எஸ்.எஸ். - பா..கும்பலுக்குத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவீர் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மும்பை மாலேகான் குண்டுவெடிப்பு - பயங்கரவாத வழக்கில் குற்றவாளியாக உள்ள பிரக்யா சிங் தாக்கூர் தன்னை ஒரு சாமியாரிணி என்று கூறிக்கொண்டுகாவி உடையுடன் ஆர்.எஸ்.எஸ்அமைப்பின் தீவிர கொள்கையாளராகஇந்துத்துவாவின் அதிதீவிர பரப்புரையாளராக அறிமுகம் செய்துகொண்டு ஜாமீனில் உள்ள ஒருவர்இடையில் பா..அவருக்குத் தேர்தல் டிக்கெட் கொடுத்துநாடாளுமன்ற உறுப்பினராகிமக்களவையில் வெளிப்படையாக கோட்சேவைப் புகழ்ந்து பேசிஎதிர்க்கட்சியினர் (தி.மு.உள்படபலரின் கண்டனத்திற்கு ஆளான ஒருவர்.

அவர் இரண்டு நாள்களுக்குமுன் போபாலில் ‘க்ஷத்திரிய மஹா சபாகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பேச்சு 13.12.2020 நாளிட்ட ‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்நாளேட்டில் வெளிவந்துள்ளது!

ஜாதி ஆணவப் பேச்சு

v1

‘‘நமது சமூகம் ‘பிராமணக்ஷத்திரியவைசியசூத்திரஎன்று நால் வருணமாக பகுக்கப்பட்டிருக்கிறது என்பது மனுதர்ம சாஸ்திரங்கள் கூறும் ஏற்பாடு.

இதன்படி க்ஷத்திரியர்களை, ‘க்ஷத்திரியர்கள்என்று அழைக்கும்போதுஅவர்கள் ஒன்றும் சங்கடப் படுவதில்லைபிராமணர்களை, ‘பிராமணர்கள்என்று அழைக்கும்போது அவர்கள் வருத்தப்படுவதில்லைவைசியர்களை, ‘வைசியர்கள்என்று அழைக்கும்போது மனம் வருந்துவது இல்லைசூத்திரர்களை, ‘சூத்திரர்கள்என்று அழைக்கும்போது மட்டும் மனம் வருந்துவதும்எதிர்ப்புக் காட்டுவதும் ஏன்இது அவர்களுக்கு உள்ள அறியாமையைக் காட்டுகிறது'' என்று ஆணவத்தோடு  கூறியுள்ளார்!

பா..எப்படிப்பட்ட ‘கோட்சே பக்தர்களையும்வருணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் வன்னெஞ்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுஎன்பதற்கு - ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்என்பதுபோல் - இது ஆதாரம் ஆகும்!

சூத்திரன் என்றால் என்ன பொருள்?

நால் வருணத்தை - ஜாதிப் பிரிவை எவ்வளவு சர்வ சாதாரணமாக - ‘சூத்திரர்என்றால்ஏன் ஆத்திரப்படவேண்டும் என்று கேட்கும் இவருக் குள்ளதுதான் ஆணவத்தின் அறியாமையின் உச்சம்!

காரணம்பிராமணன்க்ஷத்திரியன்வைசியன் எனப்படுவோர் (மூன்று பிரிவு)  மனுதர்மப்படி உயர்ந்த ஜாதியினர்அடுக்குப் படிக்கட்டு ஜாதி முறையில் மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறபடிஒருவருக்குக் கீழ் மற்றொருவர் என்ற Graded Inequality என்று அமைக்கப்பட்டுள்ளதில்சூத்திரர் மற்ற மூன்று ஜாதியினருக்கும் குற்றேவல் செய்யும் அடிமை பணிக்காகவே பிரம்மாவினால் காலில் பிறக்கப்பட்டவர்கள்.

அவன் அடிமையானபடியால்கல்விமண உரிமைசொத்துரிமையாகிய எதுவும் அவனுக்குக் கிடையாது.

சூத்திரன்என்றால் என்ன பொருள் என்பதற்கு மனுதர்மத்தின் எட்டாவது அத்தியாயம், 415 ஆவது சுலோகம் கூறுவது இதோ:

1. யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்

2. பக்தியினால் வேலை செய்கிறவன்

3. தன்னுடைய தேவடியாள் மகன்

4. விலைக்கு வாங்கப்பட்டவன்

5. குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்

6. ஒருவனால் கொடுக் கப்பட்டவன்

7. குற்றத்திற்காக வேலை செய்கிறவன்

என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.

416 ஆவது சுலோகம்:

‘‘மனையாள்பிள்ளைவேலைக்காரன் - இவர்களுக்குப் பொருள் சுவாதீனமில்லைஇவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும்அவை அவர்களின் எஜமானனையே சாரும்அதாவது எஜமானன் உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளைச் செலவழிக்கக் கூடாது'' என்ற கருத்தாகும்.

417 ஆவது சுலோகம்:

‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம்எஜமான் எடுத்துக்கொள்ளத் தக்க பொருளை உடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல.''

ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிப்பதுதானே!

இதைப் படிக்கும் மனிதர்கள் எவராயினும் ரத்தம் கொதிக்காதாரோஷம் பீறிடாதாமிகப்பெரும்பாலான உழைக்கும் மக்களை கேவலப்படுத்திமானத்தையும்அறிவையும் பறித்துஒரு உழைக்காத உயர்ஜாதி எஜமானர்கள்முன் அம்மக்கள் எப்போதும் மண்டியிட்டு ‘ததாஸ்துபாடி காலடியில் இருப்பதுதான் தர்மமா? ‘சூத்திரன்என்ற சொல் எவ்வளவு இழிதகைச் சொல்! ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!' என்று முழங்கிய தந்தை பெரியார் மண்ணில் வெடித்துக் கிளம்பியது இந்த அடிப்படையில்தான்சூத்திரன் என்பவனை மட்டும் இழிவுபடுத்தவில்லை. ‘தேவடியாள் மகன்என்று அழைப்பதன்மூலம் அந்த சமூகத்தின் பெண் குலத்தையே அவதூறுக்கும்அவ மானத்துக்கும் ஆளாக்குவதைக் கண்டு பெண்ணினம் - சொரணையுள்ளதாக இருந்தால் - வெகுண்டெழுந்து இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அநீதி என்று கண்டித்திருக்க வேண்டாமா?

அறியாமையில் உளறும் இந்த ஜாமீன் சாமி யாரிணிக்கு மற்றொன்றையும் ஆதாரத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இராமானுஜ தாத்தாச்சாரியார்

என்ன சொல்லுகிறார்?

ஹிந்து மதம் எங்கே போகிறது?' என்ற நூலை எழுதிய 101 வயது நிரம்பியஅக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார்மனுவில் உள்ள மற்றொரு சுலோகத்தையும் சுட்டிக்காட்டுகிறார்பெண்களுக்கு.

‘‘பெண்கள் எல்லோருமே சூத்திர ஜாதிதான் - பிராமணப் பெண்கள்வைசியப் பெண்கள்க்ஷத்திரியப் பெண்கள்சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாதுஅதனால்சூத்திரன் வெளியே உழைப்பதைப்போலசூத்திரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.

அதாவது,

ஸ்த்ரீனாந்த சூத்திர ஜாதி னாம்''

பெண்கள் அனைவரும் சூத்திர ஜாதி

நஸ்த்ரீ சூத்தர வேத மத்யதாம்'

அதனால் பெண்களும்சூத்திரர்களும் வேதங்களை ஓதக்கூடாது.

வேத ஓசையைக் கேட்கக் கூடாதுயாகங்கள் நடந்தால்.... அதில் ஓதப்படும் வேத மந்திரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது.

அவர்கள் வெளியில் போகவும் முடியாது.''

(இவர் சாமியாரிணி  ஆகவும் சாஸ்திரப்படி உரிமை இல்லை - எம்.பி., ஆனதும்கூட சாஸ்திர விரோதம்அதைவிட பெரிய குண்டுவெடிப்பு சதி வழக்கில் குற்றவாளியாக ஆனதும் அதைவிட எவ்வளவு பெரிய சாஸ்திர விரோதம் - சட்ட விரோதம் பிறகு!)

‘‘ஸ்திரீதாம உபநயனஸ்தானே

விவாஹம் மனு ரப்ரவீத்''

அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சமஸ்காரங்களும் கிடையாது.''

(பக்கம் 170-171)

ஆர்.எஸ்.எஸ்காவிகளைப் புரிந்துகொள்ளுங்கள்!

கோட்சே ‘பக்தை'யான இந்த சாமியாரிணி அம்மையார் இட ஒதுக்கீடுபற்றிசமூகநீதிபற்றி என்ன கூறுகிறார்அதையும் தெரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ். - பா..காவிக் கட்சியின் உண்மை உருவம் ஒடுக்கப்பட்டோருக்கு - விளங்கவே செய்யும்.

‘‘இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டும்தான் இருக்கவேண்டுமாம்!''

‘‘மக்கள் தொகைக் கட்டுப்பாடு தேச விரோத கூட்டத்தினருக்கு மட்டும்தான் இருக்கவேண்டும்தேசத்தை வளர்ப்பவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு கூடாது'' என்கிறார்.

பார்த்தீர்களா?

ஆர்.எஸ்.எஸ். - பா... - காவிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்தக் கும்பலை அடையாளம் கண்டு தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவீர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

15.12.2020