சனாதன தர்மப்படி பார்ப்பனர் பிச்சை எடுத்துதான் ஜீவனம் நடத்தவேண்டும் - அதைச் செயல்படுத்தத் தயாரா?
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பேசிய பார்ப்பனப் பேராசிரியர்கள் சனாதன தர்மம் மீண்டும் செயல் படுத்தப்படவேண்டும் என்று பேசியுள் ளனர். அத்தகையவர்களுக்கு சில வினாக்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையில் விடுத்துள்ளார். அவற் றில் ஒன்று, பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில் - என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகிறாரே - அதனை நடைமுறையில் செயல்படுத்த முன்வருவார்களா என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
"தற்போதைய காலகட்டத்தில் சனாதன தர்மத்தைப் பாதுகாத்து அதன் வழி முறைகளை நிலைநாட்டவேண்டும் என்று பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தி சாரதாம்பாள் சேவா சமிதி'' அறக்கட்டளை (இப்படி ஒன்றின் பெயர் பகிரங்கப்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. இந்து தமிழ் திசை' ஏடு அண்மைக் காலத்தில் இத்தகைய வைதீக சனாதன, சங்கராச்சாரிய உபதேச தர்மங் களுக்கு நன்றாக விளம்பரம் தந்து வருகிறது) சார்பில் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவது - மீள் பார்வை - முன் னோக்கிய பார்வை'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று (18.8.2019) மாலை நடை பெற்றது.
ஏற்கெனவே சனாதன தர்மத்தில் உள்ளதாம்!
கருத்தரங்கில் பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவன பேராசிரியர் பி.மகாதேவன் பேசியதாவது:
இன்றைய நவீன உலகில் வாழ்வியல் முறையில் தொடங்கி செய்யும் தொழில், உடை, உணவு என நமது தேவைகளில் அனைத்துத் தரப்பு உயிரினங்களுக்கும் ஏற்ற நிலையான வளர்ச்சி அவசியம். அதை நோக்கி நகர வேண்டும் எனப் பேசப்பட்டு, அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால், இதற்கான வழிமுறைகள் எல்லாம் ஏற்கெனவேசனாதன தர்மத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இவைதான் இன்று பல்வேறு வடிவங்களில் விவாதப் பொருட்களாகி வருகின்றன.
தர்மம் என்பது சூழலுக்கு ஏற்றாற்போல மாறாது; உதாரணமாக ராமாயணத்தில் சீதையைப் பிரிவது, வனவாசம் மேற் கொள்வது எல்லாம் அந்தந்த சூழலின் நியதிகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு களாகும். அரசன் ராஜதர்மத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சீதையை இராமன் பிரிய வேண்டியதாகிறது.
எனவே, அனைத்து உயிரினங்களும் ஒரேவிதமான நிலையான சூழலில் வாழ் வதற்கான அம்சங்கள் சனாதன தர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. இது குறித்த புரிதலை நாம் அனைத்துத் தரப்பு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
புதிய தேவைகளை நோக்கி நகர்வதை விட நம்மிடம் இருக்கும் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநாட்டவேண்டும்.''
பங்கேற்றவர்கள் யார், யார்?
இதில் பிரம்மா'வின் முகத்தில் பிறந் தாலும்கூட குறிப்பிட்ட வயதுவரை கீழ்ஜாதிக்காரனாகவே இருந்து பிறகு பூணூல் கல்யாணத்திற்குப் பிறகு துவிஜ ஜாதி - இரு பிறப்பாளர்களான பல பார்ப் பனப் பேராசிரியர்கள்; மும்பை அய்.அய்.டி. பேராசிரியர் கே.ராமசுப்பிரமணியன் மற்றும் ஏ.பி.சிவசங்கர், டி.ஹேமமாலினி முதலியோர் உள்பட பலரும் பங்கேற் றனராம்!
பலே, பலே! படமெடுத்தாட பார்ப் பனியப் பாம்பு - சனாதன சதுராட்டத்தைத் தொடங்க ஆயத்தமாகிறது!
இப்போதுதானே அவாளின் முழு பரப்பிரமம்' வெளியாகி வரத் தொடங்கி யுள்ளது.
இல்லாவிட்டால், பேராசிரியர் வேங் கடகிருஷ்ணன் ஜாதி பிராமணன் - நாய் உதாரணங்கள்பற்றியெல்லாம் பேசிட முன்வருவார்களா? அவர்கள் வரட்டும் - வெளிப்படையாக!
சொரணை கெட்ட சோற்றாலடித்த சூத்திர பஞ்சமர்களின் புரியாத நம் பிண் டங்களுக்கு அப்போதாவது புரியுமல்லவா?
நாம் சில கேள்விகளை முன்வைப்பதற்கு முன் இப்படியெல்லாம் பல ரூபத்தில் பலர் பல மேடைகளில், ஊடகங்களில் பீடிகை போடுவதன் உள்நோக்கத்தை நம் மக்கள் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் செய்த அரசமைப்புச் சட்டம் (அதில் பல அதிருப்தியான அம்சங்கள் இருக்கின்றன) சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் தத் துவங்கள் உள்ளடக்கியது.
மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவரத் திட்டமா?
இந்திய அரசியல் சட்டம், இறை யாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு என்ற அய்ம்பெரும் அணுகுமுறைகளையும் ஆட்சியின் திட்டங்களாகவும், சமுகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி இவைகளை மக்களின் அடிப்படை உரிமைகளாகவும் ஆக்கி யுள்ளதால், அதனை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக ஆக்கிடச் செய்யும் ஆபத்தான - அபத்தமான - முயற்சியின் தொடக்கமே இது - என்பதை தெரிந்து நாடும், ஆட்சியும், ராஜகுருக்களும் எந்தப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளனர் என் பதை மக்களுக்கு ஒடுக்கப்பட்டோர், முற் போக்காளர்கள் எடுத்துக் கூறத் தவறக் கூடாது!
'கனவான்களே!' உங்களுக்குச் சில கேள்விகள்
சனாதனத்தைப் புதுப்பிக்க களம் அமைக்கும் கல்வியில் பெரிய கன வான்களே, உங்களுக்கு சில கேள்விகள், பதில் கூறுவீர்களா?
1. வர்ணதர்மப்படி, சனாதன நெறிப்படி, வைதீக வழிப்படி, சத்திரியன், வைசியன், சூத்திரன் செய்யும் தொழில்களை இன்று பிராமணர்களும்'' செய்கிறார்களே; அதைக் கைவிட்டு பழைய முறைக்கே திரும்புவார்களா?
2. இந்து சனாதனப்படி, கடல் கடக்கக் கூடாதே; வெளிநாட்டில் கணினிப் பொறியாளர், டாக்டர், ஆடிட்டர் மற்றும் ராஜதந்திர உத்தியோகம் பார்க்க கடல் கடந்து செல்லலாமா?
3. உணவில் காய்கறி, கந்த மூலாதிகளை மட்டும்தான் புசிக்கவேண்டும் - செய்வீர்களா?
4. உடை - பஞ்ச கச்சமும், உச்சிக் குடுமியும்தானே சனாதனம் - அதற்கு மாறுவீர்களா?
5. உங்கள் வீட்டுப் பெண்கள் விதவை களானால் (மன்னிக்கவும் அவர்கள் நன்கு வாழட்டும்; உதாரணத்திற்காக சொல்கி றோம்) பழையபடி மொட்டையடித்து முண்டிதஞ்செய்து'' வெள்ளைச்சேலை களை உடுத்தி, வீட்டிற்குள்ளேயே உட்கார வைப்பீர்களா?
6. அல்லது உடன்கட்டை சதி'யைப் புதுப்பித்து - சதி மாதாக்களாக்க தயாரா வீர்களா?
7. மிலேச்ச பாஷை இங்கிலீஷ், நீஷ பாஷை' தமிழ்ப் போன்றவைகளை நீக்கி விட்டு, சர்வம் சமஸ்கிருதம் ஜகத்' என்ற முறையிலே வாழ முனைவீர்களா?
8. காலில் செருப்பு, பூட்ஸ், கழுத்தில் டை முதலியவை கட்டுவது சனாதனமா? பழைய பாதரட்சைகளையே அணி வீர்களா?
9. பால்ய விவாகம் - 8 வயதுக்குள்ள உங்கள் பெண்களையெல்லாம் தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் செய்து பாணிக் கிரகத்தை'' முடிப்பேளா?
10. வெள்ளைக்கார கிறித்துவர்களின் கண்டுபிடிப்பான விமானப் பயணங் களையும், மோட்டார் கார்களின் பயணங்களையும், ரயில் பயணங்களையும் செய்யாமல், கால்நடைப் பயணத்தையோ, புஷ்பக விமானத்தையோ எதிர்பார்ப் பீர்களா?
11. பிராமணனின் தர்மம் பிச்சை எடுப்பதுதான் என்று காஞ்சி மஹா பெரியவா' கூறுகிறார்களே தெய்வத்தின் குரலில்' அதன்படி மாறத் தயாரா?
இதில் ஒரு பகுதியை கேள்வியாகக் கேட்டதற்காகத்தானே தேசபிதா காந்தி அண்ணலின் உயிரை மதவெறி கோட்சே மூலம் பறித்தது?
சனாதனத்தைக் காப்பாற்றத்தானே வாஞ்சிநாதய்யர், ஆஷ் துரையை சுட்டுக் கொன்றார்.
அந்த சனாதன சட்டங்களை, திட்டங் களை செயல்படுத்த முற்பட்டால், அதை நாடும், மக்களும் ஜனநாயக அரசுகளும் ஏற்க முடியுமா?
அருள்கூர்ந்து பதில் கூற முடிந்தால் வரவேற்போம் - வசவுதான் பதில் என்றாலும் தாங்கிக் கொள்ளுவோம் - பகுத்தறிவாளர்களான, சுயமரியாதைக் காரர்களான நாங்கள்!
என்ன ஆணவம்?
என்னே விநோதம்!!
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்!!!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
19.8.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக