வியாழன், 28 மார்ச், 2019

மனுதரும_சாஸ்திரம் - சூத்திரன் பற்றி!

#மனுதரும_சாஸ்திரம்

அத்தியாயம் 10
சுலோகம் 73

["சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர ஜாதியாகமாட்டான். ஏனென்றால் அவன் ஈனத்தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்தது]" .

பிரமன் நாலு வர்ணங்களை அடிப்படையாகவே கொண்டே மனிதர்களை படைத்தார் என்று இந்து மதம் வேதநூல்கள் நமக்கு கற்ப்பிக்கிறது. [இதில் வர்ணங்கள் என்பதனை ஜாதிகள்  என்று புரிந்துக்கொள்ள வேண்டும்]  இதில் நாலு வகையான மனிதர்களில்... முதல்வகையான மனிதனே உயர்ந்தவனென்று இந்து மதம் சொல்லுகிறது .
பிரமன் மனித இனத்தை படைக்கும்போது , தன்னுடைய நெற்றியிலிருந்து பிராமணர்களை படைத்தார் என்றும்

ஷத்தியர்களை தன்னுடைய தோள்பட்டை  புஜத்திலிருந்து படைத்தார் என்றும்

வைஷியர்களை தன்னுடைய தொடைலிருந்து படைத்தார் என்றும்

சூத்திரனை தன்னுடைய கால் பாதத்திலிருந்து படைத்தார் என்றும், இந்து மத நூல்கள் நமக்கு விரிவாக விளக்கிறது .

இதில் சூத்திரன் என்கிற ஜாதியில்தான் நம் அனைவரையும் பிராமணன் வரிசைப்படுத்துகிறான். இதில்... தேவர் , கவுண்டர் , செட்டியார் , தலித் , நாடார் , அகமுடையார் , வன்னியர் , ரெட்டியார் , கோணார் , நாயுடு  போன்ற எல்லா ஜாதிகளையும் மையப்படுத்தியே பிரமன் சூத்திரன் என்கிற ஜாதியை படைத்து உள்ளான்.
நாம்தான் இங்கு பெருமைக்காக அவரவர் ஒவ்வொரு ஜாதி பெயரை வைத்துக்கொண்டு என் ஜாதிதான் உயர்ந்தது , இல்லை இல்லை என் ஜாதிதான் உயர்ந்ததென மார்தட்டிக்கொள்ளுகிறோம் . ஆனால் நிதர்சனமான உண்மை அவையல்ல. ஏனென்றால் பிராமணன் பார்வையில் பிராமண ஜாதியில் பிறந்தவர்களை தவிர்த்து மற்ற ஜாதியில் பிறந்தவர்கள் அனைவரும் கீழ்ஜாதி என்று சொல்லப்படுகிற சூத்திர ஜாதிதான் .

சூத்திரன் என்றால் யார் ?

சூத்திர ஜாதியில் பிறந்தவர்களை [நம்மை]  இந்து மத நூல்கள் இப்படி வரிசைப்படுத்திக் விளக்குகிறது.

சூத்திரன் தேவடியாள் வம்சத்தில் பிறந்தவன் என்றும்

சூத்திரன் தன்னுடை தாய்யையும் , மனைவியும் அடுத்தவனுக்கு கூட்டிக் கொடுப்பவன் என்றும்

சூத்திரன் போரில் புறமுதுகிட்டு ஓடுபவன் என்றும்

சூத்திரன் , பிராமணன்க்கு அடிமைகள் எனறும்

சூத்திரன் , பிராமண ஜாதியில் பிறந்தவனுக்கு சேவகம் செய்யவேண்டும் . அதேசமயத்தில் சூத்திரன் பிராமணனிடம் தன் செய்த வேலைக்கு கூலி எதிர்பார்க்ககூடாதென்றும்

சூத்திரன் , பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் திண்ற மிச்ச உணவைதான் திங்கவேண்டும் , மற்றும் பிராமணன் உடுத்தி கிழிந்த ஆடையைதான்  சூத்திரன் உடுத்தவேண்டும் என்று... இந்து மனுதரும சாஸ்திரம் சொல்லுகிறது.

- ரோசா ரோச கட்செவி பதிவில்
28.3.19

சனி, 23 மார்ச், 2019

ஒழுக்கத்தை ஓம்பிய பெரியார் எங்கே? ஒழுக்கக்கேடன் கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் எங்கே?



(பொள்ளாச்சி அவலமும் - பொறுப்பற்ற பார்ப்பனர்களின் விஷமமும்!'' எனும் தலைப்பில் சென்னை பெரியார் திடலில் நேற்று (22.3.2019) நடைபெற்ற அவசர சிறப்புக் கூட்டம்பற்றிய விமர்சனம் இது)


போதிய அளவுக்கு விளம்பரம் இல்லாமல் சமுக வலைதளங்கள்மூலம் செய்யப்படும் பிரச்சாரம் எவ்வ ளவு வலிமை உடையது என்பதற்கு நேற்று (23.3.2019) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அவசர சிறப்புக் கூட்டம் ஒன்றே எடுத்துக்காட்டாகும்.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகாலமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காமவெறி பிடித்த வேட்டை நாய்களால் சீரழிக்கப்பட்ட செய்தியானது - அறிவும், மானமும் உள்ள மக்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பு எரிமலைச் சீற்றத்தை ஏற்படுத்தியது.

கண்டனக் கணைகள் வெடித்துக் கிளம்பின. குற்ற வாளிகள் தப்பிவிடக் கூடாது, வழக்கு என்ற பெயரால் காலத்தை வீணடிக்கக் கூடாது.

டில்லியில் நிர்பயா என்ற பெண் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சியின் அனலைத் தாங்க முடியாமல் அவசர அவசரமாக வழக்கு நடத்தப் பட்டு, குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்ததுபோல பொள்ளாச்சிக் குரூரத்துக்குக் காரணமான பொல்லா விலங்குகளுக்கும் விரைவுத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே மானமுள்ள வெகுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

பெண்கள்பற்றிய நன் மதிப்பில்லாத ஒரு கூட்டம் இங்கு உண்டு; அது பெரும்பாலும் பார்ப்பனக் கூட்டம் என்றாலும், அதிலும் குறிப்பாக துக்ளக்' கூட்டம் முக்கியமானது. அதன் ஆசிரியராக இருந்த சோ' இராமசாமி அவர்கள் பெண்கள் குறித்துத் துக்ளக்'கில் எழுதிய பதில்கள் - இவர்கள் பெண்களோடு பிறக்க வில்லையா? இவர்கள் தாயும் பெண்தானே என்ற ஏக்கப் பெருமூச்சு வினாவை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சிப் புன்மை செயல்கள்பற்றி வெட்கப்பட் டுக் கொண்டிருக்கும் இதே தருணத்தில் துக்ளக்' கூட் டத்துக்கு - அதன் ஆசிரியரான திருவாளர் குருமூர்த்தி அய்யர் இதை எப்படியாவது திசை திருப்பிட வேண்டும் என்ற சூட்டிப்பில் குதிக்கிறார்.

பெண்களுக்காக அக்கறை கொண்டு பேசுவது என்பது இவர்களுக்குப் பிடிக்காத ஒன்று.

திசை திருப்பிட வேண்டும் - பொள்ளாச்சி சம்பவங் களுக்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? ஈ.வெ.ரா.தான் - வீரமணிதான். இவர்கள்தான் பெண்களுக்குக் கற்பு தேவையில்லை என்று சொன்னவர்கள் - தாலி கூடாது என்று அறுத்து எறியச் சொன்னவர்கள் என்று சூ' காட்டுகிறது துக்ளக்' (27.3.2019).

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இவர்கள் இப்படி எழுதுவதற்கு ஏதாவது காரணம் இருக்கவேண்டும்.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் கூறியதுபோல, பொள்ளாச்சியில் காவிக் கூட்டம் கொஞ்சம் அதிகம்தான்.  தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் காந்தி மண்டபத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். - ஷாகாக்கள் நடைபெறும்.

பெரும்பாலும் இந்தப் பிரச்சினையில் அவர்களுக் குப் பங்கு இருந்துவிடப் போகிறதோ என்ற அச்சத்தில் - திராவிட இயக்கத்தின்மீதும், அதன் தலைவர்கள்மீதும் பழி சுமத்தும் படலத்தில் இறங்கிவிட்டனர்.

தனி ஒழுக்கத்தையும், பொது ஒழுக்கத்தையும் பேணியவர் தந்தை பெரியார் - இயக்கத் தோழர் களுக்கும் அது அடிப்படைக் கட்டளை.

"கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூட அதனைச் சரி செய்துவிடலாம்; ஆனால், ஒழுக்கத் திலும், நாணயத்திலும் ஓட்டை விழுந்தால் அதனைச் சரி செய்ய முடியாது'' என்று கூறி, தன் தொண்டர்கள் ஒழுக்கவாதிகளாக இருப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி வந்தார் (விடுதலை', 11.10.1964).

ஒழுக்கம் என்பது வெறும் உடலைச் சார்ந்தது மட்டுமல்ல - பண்பு நலனைச் சார்ந்ததும்கூட!

ஒரு பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது என்றால், அந்தத் தள்ளாத வயதிலும் இருபுறத்திலும் இரு தோழர்களின் தோள்களில் கைகளைப் போட்டு, கால்கள் நடுநடுங்க அந்தக் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி முடிகின்ற வரை நிற்பவர் கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார்.

ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப் பெற்றபோது குத்துக் கல்லாக உட்கார்ந்திருந்த பொது ஒழுக்கம் பேணாத பேர்வழிதான்  அவர்கள் அகராதியில் லோகக் குரு!

ஒழுக்கம் என்பதற்கு மற்றவர்கள் சொல்லும் விளக்கமும், தந்தை பெரியார் கூறும் விளக்கமும் அடிப் படையிலேயே வேறுபாடானது.

மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர் பார்க்கிறோமோ, மற்றவர் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியே நாம் மற்றவர்களிடத்தில் நடந்துகொள்ள வேண்டும் - அதுதான் ஒழுக்கம்'' என்றார் தந்தை பெரியார்(விடுதலை', 7.2.1961).

இதனைத் தன் உரையில் சுட்டிக்காட்டினார் திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இதற்கு மேலும் மெருகேற்றிப் பெரியார் கூறுவதைக் கேண்மின்! கேண்மின்!!

"பிறருக்கு ஒழுக்கத்தைப்பற்றிச் சொல்லு வதைவிடத் தன்னிடம் அது எவ்வளவு இருக் கிறது என்று ஒவ்வொருவனும் நினைத்துப் பார்க்க வேண்டும்''(விடுதலை', 20.11.1958).



என்றும் தந்தை பெரியார் கூறுவது பொன்னெழுத் தால் பொறிக்கப்படவேண்டிய வாழ்வியல் நெறியாகும்.

பொது ஒழுக்கச் சிதைவு ஏற்படக் கூடாது என்பதில் தந்தை பெரியார் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

அந்தவிதத்தில் காந்தியாருக்கே அறிவுரை கூறியவர் பெரியார். போராட்டம் என்ற பெயராலே பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக்கூடாது என்று அன்றைக்கே காந்தியாருக்கு உபதேசம் செய்தார் பெரியார்.

இவற்றையெல்லாம் நேற்றைய சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எடுத்துக் கூறி விளக்கினார்.

ஒழுக்கத்தை  வலியுறுத்தியவர் பெரியார்; பக்தியை வலியுறுத்தியவர் பெரியவாள்!' அவர்கள் கூறும் பக்தி - அவர்கள் வழிபடச் சொல்லும் கடவுள்களுக்கே ஒழுக்கம் இல்லையே - ஒழுக்கத்தை அவர்கள்மீது இவர்கள் கற்பிக்கவும் இல்லையே!

எடுத்துக்காட்டாகக் கிருஷ்ணன் என்ற கடவுளை எடுத்துக் கொள்ளலாம். குளிக்கும் பெண்களின் ஆடை களைத் திருடிச் சென்று அவர்களை நிர்வாணமாக இரசித்த கயவாளிதானே இந்தக் கிருஷ்ணன்!

வெட்கமில்லாமல் இந்தக் கேடு கெட்ட இந்தக் காட்சியை கண்ணாடி சட்டம் போட்டு அப்பொழு தெல்லாம் வீட்டிலும் மாட்டி வைத்துப் பூசை செய்ததுண்டே!

இத்தகைய கடவுளைக் கும்பிடுபவன், நம்புபவன் எப்படி ஒழுக்கவானாக இருக்க முடியும்?

ஈவ் டீசிங் என்ற பிரிவின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவாளி உண்டு என்று சொன்னால், அவன் இந்தப் பகவான்' கிருஷ்ணனாகவேதான் இருப்பான் என்று கழகத் தலைவர் சொன்னபோது ஒரே ஆரவாரம்!

ஒழுக்கமுள்ள, யோக்கியமுள்ள ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியாத ஒரு மதம்தான் இந்து மதம் என்பதை மறுக்க முடியுமா?

இந்த ஒழுக்கம் கெட்டவனையும் கடவுளாகக் கும்பிடும் கூட்டம் யோக்கியமானதாம் - இந்த ஒழுக்கக் கேட்டை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மக்களை நல்வழிக்குக் கொண்டுவரப் பாடுபட்ட தந்தை பெரியாரால்தான் ஒழுக்கம் கெட்டுவிட்டதாம்!

பார்ப்பனர்களுக்கு எப்பொழுதும் இந்த இரட்டை அளவுகோல்தான்.

இந்து மதத்தில் ஒழுக்கக்கேட்டிற்கு இரு எடுத்துக் காட்டுகளைக் குற்றக் கூண்டில் நிறுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். அதற்குச் சாட்சியமாக மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆலோசகரும், ஒரு நூற்றாண்டை எட்டிப் பிடித்தவருமான அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரை சாட்சிக்கு அழைத்தார்.

இந்து மதம் எங்கே போகிறது?' என்ற அவரின் நூலிலிருந்தே அதையும் எடுத்துக்காட்டினார் (பக்கம் 151-153).



திருமணத்தில் வாத்யார்கள் ஓதும் முரண்பாடான மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா!

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்ஸாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்''

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல் யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால், அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவனை கட்டிப் பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாகப் பொருந்தச் செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்....

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவரது மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது

வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல....

ஸ்வாமீ....  நிறுத்துங்கோ என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.

இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?..... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை.....  நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே....

வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்ல வில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் என்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்

விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசது

ஆரிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது.... இதன் அர்த்தம்... இன்னும் ஆபாசம்....!

விஷ்ணுர் யோனி கர்ப்பயது...' எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக் கிறார்கள். இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் - உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். அதாவது.... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.''

இவ்வாறு ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார்.

இந்த ஆபாசங்கள்தான் ஒழுக்கச் சீலங்களா - குருமூர்த்திகள் சொல்லட்டும்!

புரோகிதரிலேயே மகாபெரிய புரோகிதர் பிரம்மா. அவர்தான் சிவபெருமான் - பார்வதியின் திருமணத்துக்கும் புரோகிதர். அந்தப் புரோகிதரின் யோக்கியதை என்ன?

மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி'' (பக்கம் 2-4) இதோ கூறுகிறது:

"பரமசிவன் - பார்வதி கல்யாணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை பிரதட்சணம் வருகையில் இடது கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தாள். அப்படி வருகையில், அவளுடைய இடையை ஒட்டிய தொடை பிரம்மா கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்தவுடன் பிரம்மா மோகித்ததால், இந்திரியம் ஸ்கலிதமாயிற்று; அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் அகஸ்தியன் பிறந்தான்.

அதுபோலவே பிரம்மா மறுபடியும் தொடையைப் பார்க்க மேலும் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை விருட்சபச்சை முதலிய அநேக செடிகளில்விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள் பிறந்தார்கள்.



அவ்விடம் விட்டுப் போகும்போது ஒரு சுடலைச் சாம்பலில் இந்திரியத்தைவிட, அதில் பூரிச்சிரவனென்கிற இராட்சசன் பிறந்தான்.

அவ்விடத்திலுள்ள எலும்புகளைப் பொறுக்கி ஒன்றாய்ச் சேர்த்து அதிலே இந்திரியத்தைவிட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.

அவ்விடம் விட்டுப் போகையில், சிறிது இந்திரியம் ஸ்கலிதமாகிக் கீழே விழ, அதை ஒரு பட்சி புசித்து அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

பிறகு தடாகத்தில் கொஞ்சம் இந்திரியம் விட, அதை மண்டூகம் (தவளை) புசித்து அதன் வயிற்றில் மண்டோதரியென்கிற பெண் பிறந்தாள்.

மிகுந்த இந்திரியத்தைக் குளத்தில் தாமரைப் பூவில் விட அதில் பத்மை என்கின்ற புத்திரி பிறந்தாள்.

அந்தப் புத்திரியான பத்மையின் அழகைக் கண்டு மோகித்து சேர பிரம்மன் கேட்க, அவள் சம்மதிக்க மறுக்க அவளுக்குச் சமாதானமாக வேத வாக்கியத்தைச் சொல்லுகிறார் பிரம்மா:

"மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத

சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,

ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

மாதரம், ஸூரஞ்சதி, ரோஹதி''

இதன் பொருள்: புத்திரார்த்த நிமித்தம் தாய், தமக்கை, மகள்,  பிள்ளை யாரோடாயினும் கூடலாம் என்பதாகும்.''

இதனை ஆதாரத்துடன் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லுவதற்கே தயக்கமாக இருக்கிறது என்றாலும், இந்து மதத்தின் உண்மையான யோக்கியதை என்ன? இந்து மதக் கடவுள்கள் எத்தகைய ஒழுக்கக்கேடர்கள் என்பதை எடுத்துச் சொன்னால்தானே மக்கள் புரிந்துகொள்வார்கள்!

இந்த இந்து மதம்' இருக்கும்வரை மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் வளரும்? என்ற வினாவை தமிழர் தலைவர் எழுப்பினார்.

(வளரும்)

- விடுதலை நாளேடு, 23.3.19

வெள்ளி, 22 மார்ச், 2019

வேதங்களின் வண்டவாளம்

கவிஞர் இரா.கண்ணிமை


ஆடு, மாடு, முதலான மிருகங்களையும் கோழி. கொக்கு, முதலிய பறவைகளையும், மச் சங்களையும் (மீன்கள்) சாப்பிடலாம் என்பதாகும்.

பிராமணர்கள் (பார்ப்பனர்) இதற்கு மாறாய் பல சொந்த சடங்குமுறை விதிகளையும், பழக்க வழக்கங்களையும் பக்தி வழிபாட்டில் கொண்டு வந்து கலந்துவிட்டார்கள். தாங்கள் அந்த வேதங்களை படித்துஅதன்படி நடப்பதுமில்லை. மற்ற மூன்று சாதியினரும் அதைத் தொட்டுப் படித்தால் பாவம் ஏற்படும் என்று மறைத்து புதைத்துவிட்டார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இவ்வாறு பிர்மா, வசிஷ்டர், சாதிபர், பராசர், வேதவியாசரின் பிறப்பு இழிகுல பெண்களான சக்கிலிச்சி, பறைச்சி, செம்படத்திகளைச் சேர்ந்த காரணத்தால் உண்டானது கொண்டு, இவர்கள் வேதத்தை கற்பிக்கத் தகாதவர்கள் என்று வேமை யர் கூறிய தெலுங்கு வாக்கியம் பார்க்கலாம்.

தெலுங்கு சுலோகம்

தல்லி யூர்வசிலஞ்ஜ, தனயாலிமாதிக

தானு பிரா முண்டன  தகுனா சக்தி

வசிஷ்ட மாட்டலந்த வசு மாத்தியருகா

விஸ்வதா பிராம வினேரவேமா

இவருக்கு துணை ஞான சாஸ்திரியார் சொன்ன விருத்தம், 3 முதல் 7 பாடல் - வே.நா.சாஸ்திரியார்

ஒப்பில்லாத பிர்மருக் கூர்வசி

யென்ற கூத்தி வயிற்றிற் பிறந்த

ஒப்பில்லாத வசிஷ்ட ருடைய

சாதிபேதக மான தில்லையோ

 

அதட்டியதட்டி வேதங்க ளோதி

யாகம சாஸ்திரம் படிக்கின்றீர்களே

வசிஷ்டருக்கு சண்டாளி வயிற்றினில் வந்தவர் சாத்தியர் என்றறறியீர்களோ

 

சங்கை யறவே புலச்சியோடு

சாத்திபர்கூடி சேர்ந்த தினாலே

புங்கனூரின் மரபில் முனைத்துப்

போதகஞ் சொன்னவர் பராசரல்லவோ

 

உச்சமாகிய பராசர் தானென்று

மச்சகந்தி யென்றமீன் வாணிச்சியை

மிச்சமாக வைத்திருந் தல்லவோ

வேத வியாசரும் பிறந்தகாரணம்.

 

வசிஷ்டர், சாத்திபர், பராசருடனே

வளமைவேத வியாசரி னால்வருங்

குதட்டிக்கு தட்டி வேதங்களோதியே

குலத்தின் வேதியர்க் குயர்த்தியாயினர்.

இப்படி வேதத்தை கொண்டு வந்த வேதாந்த போதகத் தலைவர்களே, தங்கள் பிறப்பு வழிகளில் உயர்வு தாழ்வு என்ற வகையின்றி வழிநடத்திருக்கையில் அதனடியில் வாழையடி வாழையைப் போல் வருவோர் இடையில் நுழைந்து இழிகுலம் உயர் குலமென ஆழ்ந்து அமிழ்த்தி ஓம்பிப் பேசுவது ஓட்டைப் படகில் ஏறி கோட்டையைப் பிடிக்கப் போகும் குருடருக்கு சமம் என்பதில் சந்தேகமா?

இதுவரையில் வேதம் நான்கும் உலகத்திற்கு எப்படி யார்? யார்? மூலமாய் கொண்டு வந்து போதிக்கப்பட்டது என்பதை பார்த்தோம். இனி பின்வரும் பிரிவுகளில் நான்கு வேதங்களிலுள்ள சடங்கு முறைகளை காணலாம்.

1. இருக்கு வேதச் சுருக்கம்

இருக்கு, என்பதற்கு பெருமை, ஸ்துதி என்று பொருளாம். இதில்  தேவர்கள் ஸ்துதியும், மற்றவர்கள் ஸ்துதியும் உண்டு. இருக்கு வேதத்தில் வசிஷ்டர், திருடப்போனபோது, நாய் குரைத்ததால் நாய் வாயைக் கட்டி அடக்கு மந்திரங்களும் அடங்கியிருக்கிறது. இருக்கு வேதத்தில் அய்த்ரேய பிராஹ்மணம், என்ற நூலில் காணும் யாக சம்பந்தமான விபரங்கள் வருமாறு:-

நான்கு அக்கினிகள்

1. கார் ஹபத்தியம்; 2. ஆகவனியம்; 3. தட்க்ஷிணாக்கினி; 4. சமித்திராக்கினி - என்ற நான்கு அக்கினிகளுமாம்.

யாகப் புரோகிதர்களின் பிரிவு

அத்வாயு, பிரதிப்ரஸ்தாதா, அக்நீத்ர, உன் னேதா, ஹோதா, மைத்ராவருண, ப்ராஹ்மணாச சம்ஸு, நேஷ்டா, போதா, அஷ்டாவாக, உக்காதா, ப்ரஸ்தோதா, ப்ரதி  ஹர்த்தா, சுப்ரஹ்மண்ணிய, க்ராவஷ் தோதா, ப்ரஹ்மா, ஸதஸ்ய, சமிதா, ஸோமக்ரயீ, ஆக புரோகிதர்கள் பத்தொன்பது பெயர் ஆவார்.

யாகத்திற்குரிய பாத்திரங்கள்

இத்மா; பர்ஹி; த்ருணி; ஸ்ருசா; சமஸ்; க்ராவண; ஸ்வகு; உபவரத்ரோண கலச; வாய்வ்யகலச; கரஹ; இடாசூறு; ஸவதீதி; புரேடாச புதப்ருதா என்ப வர்கள் ஆவர்.

யாக சாலையின் பிரிவுகள்

யஜ்குசாலை; மஹாவேதி; அந்தர்வேதி பஹிர்; வேதி; சமித்ரா சாலா; சாத்வால; ஸஞ்சாத; பராக்வம்ச; ஸத; மார்காலியா; அக்நீத்ரியாகார; பத்நீசாலா; த்வார்; ப்ரதிக்வர; யூப; ஹவிர்தான ; ஸாவாமுகி; தர்ம என்பவைகளாம்.

யாகானுஷ்டானங்களின் பெயர்

திக்ஷ்ணியா இஷ்டி; ப்ராயணிய இஷ்டி; ஆதித்தப இஷ்டி; தர்ம; அக்நிஷோமியா; பசு; ஸீத்யா; ப்ராதஸ; வன; மத்யான்னஸவன; த்ரூதீயஸவன; சோமபான; ஆச்வீனபசு, அய்நா ராக்ன பசு; அவப்ருத; வருளோஷ்டி, வபாயாக; பசு உபாகரண; பசுவாலம்பனம்

அய்த்ரேய ப்ராஹ்மணம் இரண்டாம் நூலில் உள்ளதைப் பார்க்கவும்.

யாகாதி கர்மங்களை காட்டும் சுலோகங்கள்

சுலோகம்:

யஞ்ஞேனவை தேவா; ஊர்த்தனவம் ஸ்வர்க்கம்; லோகமாயம் ஸ்தே பிபயுரஸ்மின்; நோத்குஷ்ட்வா மனுஷ்யாக ரிஷ்வஸ் சானுப் (அய்த்ரேயப் ராஹ்; மணம் த்விதீய பஞ்சிகா பிரதமே கண்டம் பார்க்கவும்)

பொருள்: தேவர்கள் யாகம் செய்து சொர்க் கத்தையடைந்தார்கள். ஆகவே மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக் கடவர்கள் என்பதாகும்.

யாகத்திற்குரிய உயிர்களை தூண்களில் பிணைத்துக்கட்டி மந்திரம் சொன்ன பிறகு தலைமைப் புரோகிதனான (பார்ப்பனன்) அத்வாயுவின் கட்டளையைப் பெற்ற பின், யாகப் பசுவை சமித்ரா சாலா என்றும், பசுவைக் கொலை புரியும் இடத்திற்குக் கொண்டு போய் பசுவை கொல்லும் சமிதா என்னும் புரோகிதன் (பார்ப் பான்) முஷ்ட்டி என்னும் குறுந்தடியால் பசுவின் கழுத்தில் அடித்துக்கொலை செய்வான். அதன் பிறகு சுரா, இடா, ஸீனு, ஸவதீதி என்னும் மரப் பலகையில் பசுவைக் கிடத்தி, தோலை உரித்து, சதையை அரிந்து எடுத்து நெருப்பிலிட்டு மீதி மாமிசத்தை புரோகிதர்கள் (பார்ப்பனர்கள்) அனைவரும் பங்குபோட்டு எடுத்துக்கொள்வார் கள். யாகப் பசுவை மந்திரம் சொல்லிக் கொன்றபின் அதை அறுத்தெடுக்கும்முறை மந்திரம் பின் வருமாறு:-

மந்திரம்

அந்தரே வோஷ் மாணம் வாரயத் வாநிதி

பசுஷ் வேதத் பராணான், ததாதி ஸ்யேனமஸ்

யவக்ஷ்; ககுருணு தாத்மிர் தயா பாஹீசலா

தோஷணீகஸ்யலேவரம், ஸாச்சித்ரே ஸ்ரோணீக

வஷோரூஸ் ரேகர்ணாஷ்டி வந்தா ஷட்விம் சதி ரஷ்ய

வங்காயஸ்தா அனுஷ்டயோச்ய வயதாத்; காத்ரம்

காத்மஸ் யானூனம் (அய்த்ரேய பஞ்சிக 3 - காண்டம் 6 பார்க்கவும்)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பிறகு காலிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலி ருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டு அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமை வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்து எடுக்க வேண்டும். இவ்வாறே அந்தந்த அவையவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் இவ்வாறு அறுத்தெடுத்துக் கொள்க என்பதாகும்.

பக்தியைக் கடைப்பிடிப்போர் முக்திய டைய இவ்வாறு பலவித யாகங்களைச் செய்து முடித்தேயல்லாது, வேறு வழியில் முக்தி சேர முடியாதென்பதை இருக்கு வேதம் விளக்குகிறது.

புலால்     தின்போரை புலையர், தீண்டா தார், என்னும் பொய்க் குருக்களான கள்ளப் பார்ப்பனர்கள், பசுக்களைக் கொன்றுயாகம் செய்து, மந்திரம் சொல்லி அனைவரும் பங்கிட்டு இறைச்சியை புசிக்கும் போது - தீட்டு எவ்வாறு மறைந்ததென்பதை கேட்பார் இல்லையே!

மச்சய புராணத்தில், சொல்லியுள்ளபடி யாகத்தில் பொதுவாய் பசுவை மட்டும் அல்ல; ஆடு, மாடு, குதிரை, பாம்பு, மனிதன் ஆகிய அனைத்தையும் கொன்று யாகம் செய்வதே முறையாய் காணப்படுகிறது.

2 யசுர் வேதச்சுருக்கம்

யசுர் என்பதற்கு வணங்குதல் என்று பொருளாம். யசுர் என்றால் - யாகாதி செயல் களை உணர்த்தும் நூல் என்பது பொருள். யசுர் வேதத்தைப் படித்தவன்தான் அத்வர்யு என்னும் யாக புரோகித (பார்ப்பனர்) பதவிக்கு ஏற்றவனாம். இப்பதவியை ஏற்றவனே புரோகிதர்க்கெல்லாம் தலைமைப் புரோகி தனாம் (பார்ப்பனன்).

முன்னர் விளக்கியபடி - யசுர் வேதம், இரு பிரிவாய், கிருஷ்ண யசுர் வேதம், சுக்கில யசுர் வேதம் எனப்பெயர் கொண்டது. கிருஷ்ண யசுர் வேதத்தின், பிராஹ்மணம், தைத்திரியம், சுக்கில யசுர் வேதத்தின் பிராஹ்மணம்  வாகஸ் நேயம்.

கிருஷ்ண யசுர் வேதத்தில் விளக்கியுள்ள யாகக் கொலைகளுக்கு கணக்கேயில்லை. சில யாகங்களில் நாய், தித்திரி என்னும் பறவை வெள்ளைக் கொக்கு, கருங்குவளை முதலான பிராணிகளையும் கொன்று யாக பலி செலுத்த வேண்டும். பிராஹ்ம் தேவனுக்கு பிராஹ்மண ரையும் (பார்ப்பனர்) யாகம் செய்ய வேண்டும். (தைத்திரீயம் 3ஆம் காண்டம் 4ஆம் அத்தி யாயம் 1-ஆம் அனுபவத்தைப் பார்க்கலாம்)

வேதத்தில் - நாமேதம் (நரபலியாகும்) செய்யும் போது பல வகுப்பினரிலும் - பல தொழில்காரர் 20 பேரை தூண்களில் பிணைத்துக் கட்டி புரூஷஸீத்தம் என்னும் மந்திரத்தை உச்சரித்து தெளித்து யாகம் முடிக்க சொல்லப்பட்டுள்ளது.

1. கிருஷ்ண யசுர் வேத விளக்கம்

கிருஷ்ண யசுர் வேத தைத்திரீய ஆரண் யம் என்னும் நூல், பத்து அதிகாரங்களை யுடையது. இதன் 6ஆம் அத்தியாயம் பித்ருமேதம் என்பதை விளக்கிக் காட்டுகிறது. பிராமணர் (பார்ப்பனர்) க்ஷத்திரியர், வைசியர், இறந்தால் இவர்களைத் தகனிக்கும் விதிமுறை பிராமணர்களும் (பார்ப்பனர்) இதில் அடங்கி யிருக்கிறது.

கிருஷ்ண யசுர் வேதத்தில் காணப்படும் யாகங்களில் சிலவற்றைக் கீழே காண்க: 1. ஸௌத்ராமணி - மதுவருந்தும் யாகம்

2. சுராக்ரஹா மந்திரம் - லாகிரியருந்தும் யாகம்

3. அய்த்ரபா - இந்திரனுக்கு காட்டுபலி யாகம்

4. கோஸவம் - பசு, காளை யாகம்

5. அத்யுர்யாம - ஒருவித (கொலை) யாகத்தின் பெயர்

6. வாயுவிய ஸ்வேதபசு - வாயு தேவனுக்கு வெண்பசு யாகம்

7. காம்யபசு - எண்ணம் ஈடேற யாகம்

8. வத்ஸோபகரணம் - இளங்கன்று யாகம்

9. பௌர்ணமாஸேஷ்டி - பௌர்ணமி தின யாகம்

10. நக்ஷ்த்ரேஷ்டி - நக்ஷ்த்ர தேவதை யாகம்

11. புருஷயஜ்ரு - நரயாகம்

12. வைஷ்ண பசு - விஷ்ணுவுக்கு ஆட்டு பலி

13. அய்த்ராக்க பசு - இந்திரன், அக்கினிக்கு ஆட்டுபலி

14. ஸவித்ரபசு - சூரியனுக்கு ஆட்டு பலி

15. அஸ்வமேதம் - குதிரை பலி யாகம்

16. ரோஹிதாதிபஸ்வாலம் பணம் - செந்நிற ஆட்டு பலி

17. அஷ்டதச பசுவிதானம் - பதினென் பசுயாகம்

18. சாதுர்மாஸ பசு - மழைக் காலத்தில் ஆட்டு பலி

19. ஏகாத சீன பசு விதானம் - பதினொரு பசு யாகம்

20. க்ராமாரண்ய பசுப்ரசம்ஸா - நாட்டு, காட்டு பசு பலி

21. உபகரண மந்தரம் - யாகப்பசு சுத்திகரிப்பு மந்திரம்

22. கவ்விய பசுவிதானம் - பசு யாகம்

23. ஸத்ரம் - தொடர்ந்து செய்யும் யாகம்

24. ரிஷிபாலம் பனவிதானம் - எருது யாக விதி

25. அஸ்வாலம் பன மந்திரம் - குதிரை பலி மந்திரம்

26. அஸ்வஸம் ஜிஞபனம் - குதிரை பலி விதி

27. அஸ்வ, மனுஸ்ய அஜகோ - குதிரை, மனிதன், ஆடு, மாடு கொல்ல விதி

28. ஆதித்ய தேவதர்க பசு - சூரியனுக்கு பசு யாகம்

29. ஸொபி பசு - ஸோம தேவதை யாகம்

30. பருஹஸ்பதிவை பிரகாஸ்பதி - தேவதை பலி

கிருஷ்ண யசுர் வேத யாகங்களில் இங்கு காட்டிய யாகங்கள் அன்றி பலவித யாகங்கள் உண்டு. முக்தியடைய இவையெல்லாம் செய்து முடித்தே பக்தியை முழுமையாக்க வேண்டுமென்பது வேதத்தின் கருத்தாம்.

(தொடரும்)

-  விடுதலை ஞாயிறு மலர், 9.3.19