வெள்ளி, 11 ஜனவரி, 2019

மனுதர்மத்தைக் கொளுத்த வேண்டும் ஏன்? பிப்ரவரி 7ஆம் தேதி கொளுத்துவோம் - திரள்வீர்!

மனுதர்மம் என்ன கூறுகிறது? இதோ... இதோ...


மனுதர்மம் - அத்தியாயம் 5


சுலோகம் 147: பாலியமாகவிருந்தாலும், யௌவனமாக இருந்தாலும், வார்த்திபமாகவிருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.

சுலோகம்148: பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டியதேயல் லாது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.

சுலோகம் 154: கணவன் துர்ராச்சாரமுள்ளவனாகவிருந் தாலும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குணமில்லா தவனாயிருந்தாலும் பதிவிரதையான ஸ்திரியானவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.

சுலோகம் 162: ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொரு வனால் உண்டாக்கப்பட்ட பிள்ளையும் சாஸ்திரத்தினாலொப் புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை . பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்படவில்லை.

சுலோகம்163: தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்தவனான மற்றொருவனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்த வளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.

சுலோகம் 164: ஸ்திரி விபச்சாரஞ் செய்கிறதினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண்குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுப விக்கிறாள்.

மனுதர்மம் - அத்தியாயம் 9


சுலோகம் 14: மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பரு வத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

சுலோகம் 15: மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாகவுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின் றார்கள்.

சுலோகம்17: படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

சுலோகம் 18: மாதர்களுக்கு ஜாதகர்ம முதலியவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியும் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோபதேசமுமில்லை. ஆகையால் அபரிசுத்தாளாயிருக்கிறார்கள்.

சுலோகம்19: மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங் களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாந் திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைக் கேளுங்கள்.

சுலோகம் 30 : கணவன் சொற்படி நடவாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.

சுலோகம் 46: கணவன் மனையாளைத் தள்ளிவிட் டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத் தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன்மனை யாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.

சுலோகம் 52: ஒருவனுக்கு நிலமில்லாமல்வித்துள்ளவனா யிருந்தால் மற்றுமொருவனையடைந்து உன்னிலத்தில் 'நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிருவருக்கும் பொதுவாயிருக்கட் டுமென்று ஏற்பாடு. செய்து கொண்டு பயிரிடுகிறார்ப்போல் ஒருவன் மனையாளிடத்தில் மனையாளில்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லா விட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்திய கூலமாகவே யிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்ததல்லவா?

சுலோகம் 53: நில விஷயத்தைப் போல் மாதர் விஷயத் திலும், கணவனும், மற்றொருவனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற்பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்து கொண்டால் அதில் விளைகிற 'தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக் கும் சொந்தமாகவிருப்பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.

சுலோகம் 59: பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.

சுலோகம் 60: விதவையிடத்தில் பெரியோர்களின் அனுமதிப் பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டு பண்ண வேண்டியது. இரண்டாம் பிள்ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.

சுலோகம் 69: ஒரு பெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம் செய்த பின் அந்த ஒருவன் இறந்துபோனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.

சுலோகம் 70: அவனந்தப் பெண்ணை விதிப்படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ்திரமுடையவளாயும், திரிகரண சுத்தியுடையவளாயு மிருக்கச் செய்து, ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வரையில் பார்த்து கருப்பமுண்டாகாவிடில் கருப்பமுண்டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமானவுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது..

கொளுத்துவோர் பட்டியல் தயாராகட்டும்! தயாராகட்டும்!!

 -  விடுதலை நாளேடு, 11.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக