திங்கள், 9 டிசம்பர், 2019

பார்ப்பானும் மாட்டுக்கறியும்!

*"பார்ப்பானும்  மாட்டுக்கறியும்"*

⚫ ஆரிய பிராமணன் பசுமாட்டை வெட்டி சமைத்து சாப்பிடுவதற்கு கூர்மையான வாள், கோடரி பயன்படுத்தினார்கள் என்று...

*ரிக்வேதம் [10/ 72/ 6] சுலோகம்* சொல்லுகிறது

⚫ ரிக்வேதகால ஆரிய பிராமணன், உணவுக்காக பசுக்களை கொன்றர்கள் என்பதையும், அவற்றின் இறைச்சியை அவர்கள் விரும்பி உணடார்கள் என்பதனை...

*ரிக்வேதம் [10/ 86/14] தெளிவுப்படுத்துகிறது*

⚫ இந்திரன் கூறுகிறான்" அவர்கள் மொத்தம் பதினைந்து பசுக்களையும் இருபது காளை மாடுகளையும் சமையல் செய்து சாப்பிட்டார்கள்".

⚫ அக்கினிக்காக குதிரைகளும், எருதுகளையும், காளை மாடுகளையும்,  கன்று ஈனாப்பசுக்களும் ஆட்டுக் கடாக்களும் கொன்றார்கள் என... 

*ரிக்வேதம் [10/ 91/14] கூறுகிறது*

⚫ அறுத்து பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன் 21 ஜென்மங்களுக்கு பலியிடும் விலங்காக உருவெடுப்பான்.

*மனு ஸ்மிருதி [பாகம் 5/ வசனம் 35]*

⚫ இறைச்சிக்குறிய மிருகங்களை உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் *பிரம்மனே படைத்தான்.*

*மனு ஸ்மிருதி [பாகம் 5/ வசனம் 30]*

⚫ பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்.

*ரிக் வேதம் [6/17/1]*

⚫ வேதகாலத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டன.  பசு வின் இந்த புனித்தன்மை காரணமாகவே பசுமாடுக்கறியை ஆரிய பிராமணனர்கள் உண்டார்கள்.

⚫ ராமாயணத்தில் ராமன் தன்னுடைய மனைவி சீதையை மடியில் படுக்க வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்த மாட்டுக்கறியை சீதைக்கு ராமன் ஊட்டினான் என்று வால்மீகி ராமாயண குறிப்பு கூறுகிறது.

⚫ *அதே வால்மீகி  ராமாயணத்தில்...* ராமனுடைய தந்தை தசரதனுக்கு மகடபேறு பாக்கியம் இல்லாத காரணத்தால் , நூற்றுக்கணக்கான பசுமாடு , குதிரை , பன்றி, பாம்பு , ஆமை போன்ற விலங்குகளை யாகத்தில் போட்டு எரித்து கொன்றார்கள். இதில் நன்றாக வெந்த மாட்டுக்கறி பாகத்தை யாகம் செய்த பிராமணன் சாப்பிட்டார்கள் என்று *[பால காண்டம்]* குறிப்பு சொல்லுகிறது.

 ⚫ "இந்து வேதங்களில் மாட்டுக்கறியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது.

*[ The Complete Work Of Swami Vivekananda Vol 3 Page 536 ]*

பட்டியலிடப்பட்ட மக்களை விட பிராமணன்தான் அதிகளவு மாட்டுக்கறியை சாப்பிட்டான் . ஏனென்றால் ? அக்காலகட்டத்தில் பட்டியலிடப்பட்ட மக்களுக்கு பசுமாட்டுக்கறி கிடைப்பது அவர்களுடைய பொருளாதார வசதிக்கு கடினம் . ஆனா பிராமணனுக்கு மாட்டுக்கறி தினதோறும் ஈசியாக கிடைத்துவிடும்.

*எப்படி என்றால்...?*

பிராமணன் எங்கெல்லாம் யாகம் செய்ய போகிறானனோ  அங்கெல்லாம் பசுமாட்டை பலி கொடுப்பதை இந்துகள் ஒரு புனிதமான காரியமாகவே கருதினார்கள். எனவே யாகத்தில் பலி கொடுக்கப்பட்ட பசுமாட்டுகறியை பிராமணனுக்கு கொடுப்பது இந்துகளின் வழக்கம்.

இன்றுகூட நம்முடைய நடமுறை வாழ்கையில் , எதாவது ஒரு இந்து வீட்டில் யாகம்  செய்தால் யாகத்தில் படைக்கப்பட்ட பொருட்களை அப்படியே பிராமணன் எடுத்துக் கொண்டு போயிவிடுவான். 

*உதாரணத்துக்கு...*

இந்து வீட்டில் யாராவது இறந்தால் , இறந்தவருக்கு 16- ஆவது நாள் காரியம் செய்வது வழக்கம். இதில் பச்சஅரிசி , தேங்காய் , வாழைபழம் , ஒன்பது வகையான காய்கறிகள் வைப்பது நடமுறை . இதில் பயன்படுத்தும் பொருட்களை அப்படியே ஆரிய பார்ப்பனீயன் கொண்டு சென்று விடுவார்கள்.

ஏன் பிராமணன் மாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்த்தான் ?

கிமு 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு வாக்கில் இந்தியாவில் *"புத்தம் மதம்"* வீரியமாக வளந்தது . புத்த மதம் வீரியமாக வளர்வதற்கு முக்கிய காரணம் புத்த மதம் கடவுளு என்கிற பெயரில் பலியிடுவதை எதிர்த்தது . இதன் காரணமாக மக்களுக்கு புத்த மதத்தின் மீது ஒருவகையான ஈர்ப்பு ஏற்பட்டு மக்கள் புத்த மதத்துக்கு மாறினார்கள் அல்லது அதனை ஏற்றுக் கொண்டார்கள். 

இதனை சகித்துக் கொள்ள முடியாத ஆரிய பார்ப்பனீய கூட்டம் புத்த மதத்தை அழிக்க முயற்சி எடுத்தது . இதன் நீட்சியாக ஆரிய பிராமணன் புத்த மதத்தை அழிக்க புத்திஸ்ட்கள் எடுக்கும் ஆயுதத்தையே கைலெடுத்தார்கள்

ஒருவனை அழிக்க அவனுடைய கோணத்திலே சென்று அவன் பயன்படுத்திய ஆயுதம் எடுத்து அழிப்பது ஒருவகையான ராஜதந்திரம்  

*"அதுதான் மாடு"*

ஆரிய பார்ப்பனீயன் புத்த மதத்தை அழிபதற்குகாக பசுமாட்டை கடவுளாக வழிபடவும் மாட்டுக்கறியை இனி திங்க மாட்டோம் என்கிற முடிவை எடுத்தார்கள். பார்ப்பனீயன் பசுமாட்டுமீதுள்ள அக்கரையால் பசுமாட்டுக்கறியை சாப்பிடுவதை தவிர்க்கவில்லை . மாறாக அவன், அவன் இறக்குமதி செய்த  கடவுளை காப்பாற்றிக் கொள்ளவும், தன் மதத்தை விரிப்படுத்துவும்தான் பசு மாட்டுக்கறியை திங்குவதை நிறுத்தினார்கள். இதற்கு ஆதாரம்தான் மேலே உள்ள ஆதாரங்கள்...

ஆரிய பிராமணன் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதனை விளக்க நாம ஒன்றும் *டாக்டர் அம்பேத்கர் நூலிருந்தோ..., அறிவுலக ஆசான்  தந்தை பெரியார் நூலிருந்தோ...,  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூலிருந்தோ ஆதாரத்தை மேற்கோள்களாக நாம் காட்டவில்லை.* 

மாறாக அவர்களுடைய புனித நூலான... (?) *மனு ஸ்மிருதி, மனுதரும சாஸ்திரம் மற்றும் விவேகானந்தர் நூலி* ருந்துதான் ஆதாரத்தை காட்டுகிறோம்.

கம்ப இராமாயணத்தில் கம்பன், ராமன் மற்றும் பிராமணன் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டார்கள் என்று சொல்லிருப்பது  பச்ச பித்தலாட்டமேயொழிய வேறொன்றுமில்லை.

வால்மீகி ராமயணத்தில் வால்மீகி ராமனையும் பார்ப்பனீயர்களை வெகுசாதாரணமான மனிதர்களாகவே காட்டியிருப்பார். ஆனா கம்ப ராமாயணத்தில் கம்பன் ராமனையும் பார்ப்பனீயர்களையும் கடவுளாக வெளிபடுத்திருப்பார்.

"இடைநிலை சூத்திர பாரப்பனர் அல்லாத சாதிகாரர்கள் ஏன் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்திக்  கொண்டார்கள்"...?

எப்போதும் மனித இனம் ஒருவன் செய்வதையே தானும் அப்படியே செய்ய வேண்டுமென நினைப்பான். பார்ப்பனீயனை போல இடைநிலை சூத்திர பிரமனர் அல்லாத சாதிகாரனும் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டுக்கறி திங்குவதை  நிறுத்திக் கொண்டார்கள். 

சில இடைநிலை சாதிகாரர்கள் பிராமணன் போல முதுகில் பூணூல் போடும் பழகத்தையும் கடைபிடித்தான். இன்றும் நம்முடைய சமகாலத்தில் சில இடைநிலை சாதிகாரன் பூணூல் அணிவதை காணமுடியும் . 

*பிராமணன் இரண்டு புரட்சிகளை செய்தார்கள் என்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொல்லுகிறார் கேளுங்கள்...*

1. பிராமணன் பசுமாட்டுக்கறியை தவிர்த்தது ஒரு புரட்சி"

2. காய்கறி உணவு உண்பவர்களாக மாறியது மற்றொரு புரட்சி" என்று *டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய "தீண்டப்பாடதவர்கள்"* நூலில் குறிப்பிடுகிறார்.

இந்திய சமூகத்தில் பட்டியலின மக்கள் மட்டுமே மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள் என்பது முழுமையான வடிகட்டிய பொய்.

மாட்டுக்கறியை பட்டியலின மக்களை விட ஆரிய பிராமணன் அதிகளவில் சாப்பிட்டான் என்பதே தவிர்க்க முடியாத உண்மை.

*- திராவிடக்குயில் -*

வெள்ளி, 8 நவம்பர், 2019

இதுதான் மனு (அ)தர்மம்!

10.03.1935, குடிஅரசிலிருந்து...

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத் திட்டங்களால் அனுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசார மில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றி யாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராம ணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன் னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லு கிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-- 115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தி லுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவ மில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங் கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட் டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

22.          சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராம ணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11.  சு.13.

23.          யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11  சு.20.

24.          பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11  சு.66.

25.          ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும். - அ.11.  சு.131.

25           (அ)       அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது -

அ.11.  சு.132.

26.          சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11  சு.285.

27.          சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமண னேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.

28.          பிராமணரல்லாதவன் உயர்குலத்தோரு டைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10  சு.96

29.          சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும். - அ.10. சு.96.

30.          பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125

31.          சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10.  சு.129.

32.          மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2.  சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறு வதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.

- விடுதலை நாளேடு 8 .11.19

வியாழன், 24 அக்டோபர், 2019

இது தான் மனு(அ)தர்மம்!

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

10.03.1935  - குடிஅரசிலிருந்து...

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட் டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதி களும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசிய மாகும். ஆதி திராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலை யைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந் துள்ள இந்து மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என் பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப் பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனா கவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத் திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனைச் சத்திய மாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச் சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன் னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லு கிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண் ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன் றவனுக்கு பாவமில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்ற லாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம் பாதித்தால், அது அவனுடைய எஜமா னாகிய பிராமணனுக்குச் சேர வேண்டு மேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப் பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங் கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில் களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக் கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்தி ரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண் டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

- விடுதலை நாளேடு 18 10 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

இந்து மதத்தில் திராவிடர் நிலை

இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.
இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு.
இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)
2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)
3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)
இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இது மற்றொரு உரைப்பு:
பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)
பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.
நீதி விசாரணை
பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டான மில்லாத பிராமணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.
சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)
எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவ தும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)
இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?
சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)
சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சியாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)
பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டு மென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).
பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித்தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண்டியது. (அ.8. சு. 279)
கையினாலாவது, தடியினாலாவது அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும் (அ.8. சு. 280)
பிராமணனுடைய ஆசனத்தில் உட்கார்ந்த சூத்திரனை இடுப்பில் சூடு போட்டாவது, ஆசன பாகத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டு விரட்டி விட வேண்டும். (அ.8 சு. 281)
சூத்திரன் பிராமணன்மீது எச்சிச் துப்பினால் சூத்திரனின் உதட்டை அறுத்துவிட வேண்டும். (அ.8. சு. 282)
இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு பிறகு இன்னம் இரண்டு உரைப்பு உரைக்கலாம்.

விடுதலை நாளேடு, 11.10.19

வியாழன், 5 செப்டம்பர், 2019

இதுதான் ஆரியர் கலாச்சாரம்



இந்துமதம் தான் ஆத்மார்த்த அரங்கம்; பாரதக் கலாச்சாரத்தின் ஊற்று என்றெல் லாம் கதையளக்கிறார்கள் பார்ப்பனர்கள்.

அவர்களது புராணங்களும் அதில் வரும் தேவர்களும் கடவுள்களும் எவ் வளவு ஆபாசத்தில் நெளியும் புழுக்களாக இருக்கின்றனர் என்பதை அவாளது புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதை அப்படியே கீழே தருகிறோம்.

யாகத்திலடிக்கும் யோகம்

அஸ்வமேதம், அஜமேதம் போன்ற யாகங்களில் யாககர்த்தாவின் பத்தினியை யாக மிருகத்துடன் புணர வைக்கும் வேலையை யாக கர்த்தாவும் யாகப் புரோகி தர்களும் சேர்ந்து செய்வர்.

பன்றியுடன் சேர்ந்த ...

பூமியை பாய்போலச்சுருட்டிக்கொண்டு கடலில் போய் ஓளித்த இரண்யாஷனைப் பன்றி வேடத்தில் சென்று விஷ்ணு கொல்ல, இப்பன்றியைக்கண்டு பூதேவி மோகித்துக் கலவி செய்ய இதன் பலனாக நரகாசுரன் பிறந்தான்

பிரம ‘லிங்க’ லீலை

பிரம்மன் சரஸ்வதியைப் படைத்தான் அவளழகைக் கண்டு மோகித்து, அவள் பயந்தோடியும் விடாமல் அவளைப் புணர்ந்து தன் மனைவியாக்கிக் கொண் டான், தான் படைத்த மகளையே இவ்வாறு மனைவியாக்கிக் கொண்டதைப் பரிகசித்த முனிவர்களாகிய மரீச புத்திரர் 6 பேரையும் சினந்து, அசுரர்களாகுமாறு சபித்தான். இதே போன்று இந்திரன் வேண்டுகோளின் மீது திலோத்தமையைப் படைத்து அவளையும் மோகித்துக் கூடினான்.

உறிஞ்சும் “சிரிஞ்” (Syringe)

பிரம்மன் இதே போன்று தாமரை மலரிலிருந்து பத்மை என்ற பெண்ணைப் படைத்து அவளைப் புணர முயல அவள் எவ்வளவோ கெஞ்சியும் விடாமல் அவளைப் பலவந்தமாகக் கற்பழிக்க அவள் அதனால் கருக்கொள்ள தேவர்கள் இதை யறிந்து நையாண்டி செய்ய இதைச்ச கிக்காத பிரம்மன் மீண்டும் அவளைப் புணர்ந்து அவள் கருவிலிருந்த தன் விந்துவைத்தான் ஆண்குறி மூலம் உறிஞ்சி இழுத்து விட்டான்

பரகதியல்ல - ஈனகதி!

(தாயை மகன் புணர்ந்தாலும் முக்தி நிச்சயம் என்பதன் மூலம் தாயைப் புணர்பவர்கள்  - ஈன சாதிப் பார்ப்பனர்கள்)

புராணத் தகவல்

பெற்ற தாய் மீது மோகங்கொண்டு அதற்குப் பாதகமாயிருக்கும் தந்தையைக் கொன்று தாயுடன் கலவி செய்து இன்ப வாழ்வு நடத்திய ஒரு பார்ப்பன பையனுக்குப் பரமசிவன் முக்தியளித்ததாகத் திருவிளை யாடல் புராணம் கூறுகிறது.

(பிறர் மனைவிகளுடன் கலவி செய்து அடையும் இன்பமே இன்பம்! இது தான் பார்ப்பனரின் ஒழுக்கம்)

அழகே! ஆபத்தே!!

தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் அழகிகள் என்பதற்காகப் பரமசிவன் அவர்களை மயக்கிப் புணர்ந்து அவர்கள் கற்பை அழித்தான்.

தாத்தா கூத்து

பிரமனோ தன் பேத்தியாகிய தாட்சா யிணியின் அழகைக் கண்டு மோகித்து வீர்யத்தை விட்டான்.

பரமசிவன் மனைவியாகிய பார்வதி தேவி மீது பிரமன் காமுற்று பரமசிவனைப் போல் 5 தலைகளுடன் சென்று அவளை அணைத்தான். கவுரி கல்யாணத்தில் அவள் தொடை அழகைக் கண்டு காமுற்று விந்தை விட்டான் . அசுவமேத யாகம் செய்யத் தொடங்கி அதற்கு வந்திருந்த தேவ பத்தினிகளைக்கண்டு காமுற்று வீர்யம் விட்டான். விந்தை விட்டனர்; ஆனால் நொந்து கெடவில்லை

இந்திர சபையில் ஊர்வசி நடனமாட பிரமன் அவளைப் பார்த்து மோகித்து வீர்யத்தை வெளியே விட்டான்.

துரோணரின் மனைவி கிருபியின் அழகினை அறிந்த பரமசிவன் அவள் மீது காம வெறிகொண்டு அவளை நிர்வாணமாக நிற்கவைத்துப் பார்த்து வீர்யத்தை விட, அதன் பலனாக அஸ்வத் தாமன் பிறந்தான்.அபலை அகலிகை?

கௌதம முனிவர் மனைவி அகலிகை அழகி எனக் கேள்விப்பட்ட இந்திரன் இரவு நடுசாமத்தில் முனிவரை ஏய்த்து வெளியேறச்செய்து, அம்முனிவர் போல் இந்திரன் வேடம் பூண்டு, அகலிகையை புணர்ந்தான். இதேபோன்று அவரவரின் கணவர்களைப் போன்று நடித்து இந்திரத் துய்மன் மனைவியையும், தேவசன்மன் மனைவியையும், கவி முனிவரின் மனை வியையும், பாரிஷதன் மனைவியையும் கற்பழித்தான்

அக்னிப் பிரவேசம்

அக்னிபகவான் சப்தரிஷிகளின் யாகத் திற்குச் சென்று அந்த ரிஷிகளின் மனை விகள் மீது மையல் கொண்டான், சுதரிசனை என்பவளைப் பலாத்காரத்தினால் மணந்தான், சலந்திரன் மனைவி விருந்தை மீது மகாவிஷ்ணு மோகங் கொண்டு சலந்திரனைச் சூதால் கொன்று அவனைப் போன்று வேடம் பூண்டு விருந்தையைக் கற்பழித்தான்.



அனுசூயாவை அனுபவிக்க எண்ணி ...

அக்னி பகவானின் மருமகளை எமதர்ம பகவான் கண்டு மோகித்து அவள் கணவன் இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்தான். அனுசூயை அழகி என்று கேள்விப்பட்டு அவளைக் கற்பழிக்கவென்று பிரம்மா, விஷ்ணு , சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் புறப்பட்டு சென்று அவளை நிர்வாண மாக்கினர்.

காமக் கட்டாரிகள்

ஆண்கள் மட்டுமா - பெண்களும் ஆணழகில் ஈடுபட்டு கட்டித் தழுவி நீண்ட புணர்ச்சி செய்து தங்கள் காமத்தைத் தீர்த்துக்கொள்ளும் காமக் கட்டாரிகளாக இருக்கிறார்கள்.

ஆசை ... அரை டஜனுக்கு!

திரவுபதி மகாபதிவிரதைகளுள் ஒருத்தி இவளுக்கு 5 கணவர்கள் இவர்கள் போதா தென்று 6வதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.

பொன் கிடைத்தாலும்

கிடைக்காத புதன் கதை

மகா பதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை. இவள் தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி. இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில் தன் கணவரிடம் படிக்க வந்திருந்த சந்திரன் என்னும் மாணவனை மோகித்து அவனுடன் கலவி செய்து நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியா யிருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவியானாள்.

‘டூப்’ ஆக்ட்(Toop act)

கவி முனிவர் மனைவி முகுந்தைக்கு ருக்மாங்கதன் மீது மோகம் வந்தது. அவனோ இவளைச்சேர மறுத்து விட்டான் அவளுக்கு ருக்மாங்கதன் மீது மட்டற்ற மையல் ஏற்பட்டு அதே விசாரத்திலிருக் கையில் இதையறிந்த இந்திரன் ருக்மாங்கதன் போல வேடம் பூண்டு அவளைப் புணர்ந்து மகிழ்வித்தான் (வாலிபத்தில் 60,000 பெண்களைப் புணர்ந் தும் காமவேகம் தணியாத - கண்ணன்தான் கடவுளா? ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர். இவன் சிறு பிள்ளையிலே வெண்ணெய் திருடி மத்தாலடிபட்டவன். வளர்ந்து பருவ வயதடைந்தவுடன் பெண் சாயல் எந்த வீட்டில் காணப்பட்டாலும் சரி உடனே திருட்டுத் தனமாக அப் பெண்ணைக் கூடியவர் இவ்வாறாகச் சுமார் 60,000 பெண்களைத் திருட்டுத்தனமாக - அவர்களுடைய  கணவர்களுமறியாமல் - கலவி செய்தவர்.

மதுவுக்கு விலக்கில்லை

தேவர்கள் சுரா-மேகா என்ற பெயரில் உயர்ந்த ரக கள்ளு குடித்தார்கள். தேவர்கள் சுராபானம் - சோமபானம் செய்தனர் (ஆதாரம்: இதிகாசங்கள் - புராணங்கள்)

சூதாடுவார்கள் - (இவர்களைக் கொண்டு தான் பார்ப்பனர்கள் ஒழுக்கம், நீதி புகட்டுகிறார்கள்)

சூதாடிகள்

கிருஷ்ண பரமாத்மாவின் ஆதரவு பெற்றவர்களும் இந்திராதி தேவர்களின் புதல்வர்களுமான தர்மராகியோர் தங்களின் மனைவியுட்பட எல்லாவற் றையும் சூதாட்டத்தில் வைத்துத் தோற்று, அதன் பலனாக, சூதாட்டத்தில் தோற்கப் பட்ட பொருளாகிய திரவுபதியை இராஜ சபையில் வைத்துச் சேலையை அவிழ்த்து மானபங்கம் செய்தனர் சூதாட்டத்தில் வென்றவர்கள்.

(பருவமடையாத சின்னஞ்சிறு சிறுமி களைக்கூட விடாமல் புணருவதா!)

கொலையைக் கற்பிக்கும் சம்பவங்கள் பல - காமவெறியால் விருந்தையின் கணவனை விஷ்ணு கொன்றான்.

பால்ய புணருத்தாரணம்

தக்கபருவமடையாத - ருதுவாகாத--மச்சகந்தி என்னும் பெண்ணைப் பட்டப்பகலில் நடு ஆற்றில் படகில் பராசரமுனி  காமுற்றுக் கற்பழித்து விட்டான்.

இதே போன்று குந்தி பருவமடையாத சிறுமியாயிருக்கையில் சூரியன் காமுற்றுக் கற்பழித்து விட்டான்.

இவ்வாறாக ஆணை ஆண் புணர்வதும் - மிருகப்புணர்ச்சி செய்வதும், மகளைத் தந்தை புணர்வதும் பெற்ற தாயைத் தனயன் புணர்வதும், பிறர் மனைவிகள் மீது மோகங்கொண்டு கற்பழிப்பதும், பிற புருஷர் மீது காமுற்றுக் கூடுவதும், திருட்டு மதுவருந்துதல், சூதாடுதல், கொலை செய்தல், பருவமெய்தாக் கன்னிப்பெண் களைக் கற்பழித்தல், அறிவுக்குப்பொருந் தாத விவாதங்களைக் கூறுதல் ஆகிய திருவிளையாடல்கள். இன்னும் ஆரியர் களுடைய புராண - இதிகாச சாஸ்திரங்களில் மலிந்து கிடப்பதையே நாம் சுட்டிக்காட்டு கிறோம். அந்த நு£ல்களை இன்னும் பார்ப்பனர்கள் தெய்வீக நூல்கள் என்றும் அந்நூல்களின் மொழியாகிய சமஸ் கிருதமே உயர்ந்த மொழி என்றும் கூறு வதை தமிழர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர்.

எனவே இந்த ஆபாசங்களையெல்லாம் கடவுள் பெயராலும் - மதத்தின் பெயராலும் சாஸ்திரங்களின்  பெயராலும் - நம் மக்களிடையே பரப்பி, தமிழர்கள் என்றும் மடமைப் படுகுழியிலிருந்து மீளா வண்ணம் தடுத்து வைக்கும் - வேலையைப் பார்ப்பனர், சனாதன வெறியர்கள் இன்றும் - செய்து கொண்டுதான் வருகின்றனர்.

- ‘விடுதலை’ (26.9.1971)

- விடுதலை ஞாயிறு மலர், 3. 8 .19

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

சனாதன தர்மத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பேசிய பேராசிரியப் பெருமக்களுக்கு சில கேள்விகள்

சனாதன தர்மப்படி பார்ப்பனர்  பிச்சை எடுத்துதான் ஜீவனம் நடத்தவேண்டும் - அதைச் செயல்படுத்தத் தயாரா?




மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பேசிய பார்ப்பனப் பேராசிரியர்கள் சனாதன தர்மம் மீண்டும் செயல் படுத்தப்படவேண்டும் என்று பேசியுள் ளனர். அத்தகையவர்களுக்கு சில வினாக்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையில் விடுத்துள்ளார். அவற் றில் ஒன்று, பிச்சை எடுத்து ஜீவனம் நடத்துவதுதான் பார்ப்பனர் தொழில் -   என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகிறாரே - அதனை நடைமுறையில் செயல்படுத்த முன்வருவார்களா என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

"தற்போதைய காலகட்டத்தில் சனாதன தர்மத்தைப் பாதுகாத்து அதன் வழி முறைகளை நிலைநாட்டவேண்டும் என்று பேராசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தி சாரதாம்பாள் சேவா சமிதி'' அறக்கட்டளை (இப்படி ஒன்றின் பெயர் பகிரங்கப்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. இந்து தமிழ் திசை' ஏடு அண்மைக் காலத்தில் இத்தகைய வைதீக சனாதன, சங்கராச்சாரிய உபதேச தர்மங் களுக்கு நன்றாக விளம்பரம் தந்து வருகிறது) சார்பில் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவது - மீள் பார்வை - முன் னோக்கிய பார்வை'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று (18.8.2019) மாலை நடை பெற்றது.

ஏற்கெனவே சனாதன தர்மத்தில் உள்ளதாம்!


கருத்தரங்கில் பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவன பேராசிரியர் பி.மகாதேவன் பேசியதாவது:

இன்றைய நவீன உலகில் வாழ்வியல் முறையில் தொடங்கி செய்யும் தொழில், உடை, உணவு என நமது தேவைகளில் அனைத்துத் தரப்பு உயிரினங்களுக்கும் ஏற்ற நிலையான வளர்ச்சி அவசியம். அதை நோக்கி நகர வேண்டும் எனப் பேசப்பட்டு, அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், இதற்கான வழிமுறைகள் எல்லாம் ஏற்கெனவேசனாதன தர்மத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. இவைதான் இன்று பல்வேறு வடிவங்களில் விவாதப் பொருட்களாகி வருகின்றன.

தர்மம் என்பது சூழலுக்கு ஏற்றாற்போல மாறாது; உதாரணமாக ராமாயணத்தில் சீதையைப் பிரிவது, வனவாசம் மேற் கொள்வது எல்லாம் அந்தந்த சூழலின் நியதிகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு களாகும். அரசன் ராஜதர்மத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சீதையை இராமன் பிரிய வேண்டியதாகிறது.

எனவே, அனைத்து உயிரினங்களும் ஒரேவிதமான நிலையான சூழலில் வாழ் வதற்கான அம்சங்கள் சனாதன தர்மத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. இது குறித்த புரிதலை நாம் அனைத்துத் தரப்பு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

புதிய தேவைகளை நோக்கி நகர்வதை விட நம்மிடம் இருக்கும் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநாட்டவேண்டும்.''

பங்கேற்றவர்கள் யார், யார்?


இதில் பிரம்மா'வின் முகத்தில் பிறந் தாலும்கூட குறிப்பிட்ட வயதுவரை கீழ்ஜாதிக்காரனாகவே இருந்து பிறகு பூணூல் கல்யாணத்திற்குப் பிறகு துவிஜ ஜாதி - இரு பிறப்பாளர்களான பல பார்ப் பனப் பேராசிரியர்கள்; மும்பை அய்.அய்.டி. பேராசிரியர் கே.ராமசுப்பிரமணியன் மற்றும் ஏ.பி.சிவசங்கர், டி.ஹேமமாலினி முதலியோர் உள்பட பலரும் பங்கேற் றனராம்!

பலே, பலே! படமெடுத்தாட பார்ப் பனியப் பாம்பு - சனாதன சதுராட்டத்தைத் தொடங்க ஆயத்தமாகிறது!

இப்போதுதானே அவாளின் முழு பரப்பிரமம்' வெளியாகி வரத் தொடங்கி யுள்ளது.

இல்லாவிட்டால், பேராசிரியர் வேங் கடகிருஷ்ணன் ஜாதி பிராமணன் - நாய் உதாரணங்கள்பற்றியெல்லாம் பேசிட முன்வருவார்களா? அவர்கள் வரட்டும் - வெளிப்படையாக!

சொரணை கெட்ட சோற்றாலடித்த சூத்திர பஞ்சமர்களின் புரியாத நம் பிண் டங்களுக்கு அப்போதாவது புரியுமல்லவா?

நாம் சில கேள்விகளை முன்வைப்பதற்கு முன் இப்படியெல்லாம் பல ரூபத்தில் பலர் பல மேடைகளில், ஊடகங்களில் பீடிகை போடுவதன் உள்நோக்கத்தை நம் மக்கள் புரிந்துகொள்ளத் தவறக்கூடாது.

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் செய்த அரசமைப்புச் சட்டம் (அதில் பல அதிருப்தியான அம்சங்கள் இருக்கின்றன) சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் தத் துவங்கள் உள்ளடக்கியது.

மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாகக் கொண்டுவரத் திட்டமா?


இந்திய அரசியல் சட்டம், இறை யாண்மை,  சமதர்மம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு என்ற அய்ம்பெரும் அணுகுமுறைகளையும் ஆட்சியின் திட்டங்களாகவும், சமுகநீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி இவைகளை மக்களின் அடிப்படை உரிமைகளாகவும் ஆக்கி யுள்ளதால், அதனை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக ஆக்கிடச் செய்யும் ஆபத்தான - அபத்தமான - முயற்சியின் தொடக்கமே இது - என்பதை தெரிந்து நாடும், ஆட்சியும், ராஜகுருக்களும் எந்தப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளனர் என் பதை மக்களுக்கு ஒடுக்கப்பட்டோர், முற் போக்காளர்கள் எடுத்துக் கூறத் தவறக் கூடாது!

'கனவான்களே!' உங்களுக்குச் சில கேள்விகள்


சனாதனத்தைப் புதுப்பிக்க களம் அமைக்கும் கல்வியில் பெரிய கன வான்களே, உங்களுக்கு சில கேள்விகள், பதில் கூறுவீர்களா?

1. வர்ணதர்மப்படி, சனாதன நெறிப்படி, வைதீக வழிப்படி, சத்திரியன், வைசியன், சூத்திரன் செய்யும் தொழில்களை இன்று பிராமணர்களும்'' செய்கிறார்களே; அதைக் கைவிட்டு பழைய முறைக்கே திரும்புவார்களா?

2. இந்து சனாதனப்படி,  கடல் கடக்கக் கூடாதே; வெளிநாட்டில் கணினிப் பொறியாளர், டாக்டர், ஆடிட்டர் மற்றும் ராஜதந்திர உத்தியோகம் பார்க்க கடல் கடந்து  செல்லலாமா?

3. உணவில் காய்கறி, கந்த மூலாதிகளை மட்டும்தான் புசிக்கவேண்டும் - செய்வீர்களா?

4. உடை - பஞ்ச கச்சமும், உச்சிக் குடுமியும்தானே சனாதனம் - அதற்கு மாறுவீர்களா?

5. உங்கள் வீட்டுப் பெண்கள் விதவை களானால் (மன்னிக்கவும் அவர்கள் நன்கு வாழட்டும்; உதாரணத்திற்காக சொல்கி றோம்) பழையபடி மொட்டையடித்து முண்டிதஞ்செய்து'' வெள்ளைச்சேலை களை உடுத்தி, வீட்டிற்குள்ளேயே உட்கார வைப்பீர்களா?

6. அல்லது உடன்கட்டை சதி'யைப் புதுப்பித்து - சதி மாதாக்களாக்க தயாரா வீர்களா?

7. மிலேச்ச  பாஷை இங்கிலீஷ், நீஷ பாஷை' தமிழ்ப் போன்றவைகளை நீக்கி விட்டு, சர்வம் சமஸ்கிருதம் ஜகத்' என்ற முறையிலே வாழ முனைவீர்களா?

8. காலில் செருப்பு, பூட்ஸ், கழுத்தில் டை முதலியவை கட்டுவது சனாதனமா? பழைய பாதரட்சைகளையே அணி வீர்களா?

9. பால்ய விவாகம் - 8 வயதுக்குள்ள உங்கள் பெண்களையெல்லாம் தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் செய்து பாணிக் கிரகத்தை'' முடிப்பேளா?

10. வெள்ளைக்கார கிறித்துவர்களின் கண்டுபிடிப்பான விமானப் பயணங் களையும், மோட்டார் கார்களின் பயணங்களையும், ரயில் பயணங்களையும் செய்யாமல், கால்நடைப் பயணத்தையோ, புஷ்பக விமானத்தையோ எதிர்பார்ப் பீர்களா?

11. பிராமணனின் தர்மம் பிச்சை எடுப்பதுதான் என்று காஞ்சி மஹா பெரியவா' கூறுகிறார்களே தெய்வத்தின் குரலில்' அதன்படி மாறத் தயாரா?

இதில் ஒரு பகுதியை கேள்வியாகக் கேட்டதற்காகத்தானே தேசபிதா காந்தி அண்ணலின் உயிரை மதவெறி கோட்சே மூலம் பறித்தது?

சனாதனத்தைக் காப்பாற்றத்தானே வாஞ்சிநாதய்யர், ஆஷ் துரையை சுட்டுக் கொன்றார்.

அந்த சனாதன சட்டங்களை, திட்டங் களை செயல்படுத்த முற்பட்டால், அதை நாடும், மக்களும் ஜனநாயக அரசுகளும் ஏற்க முடியுமா?

அருள்கூர்ந்து பதில் கூற முடிந்தால் வரவேற்போம் - வசவுதான் பதில் என்றாலும் தாங்கிக் கொள்ளுவோம் - பகுத்தறிவாளர்களான, சுயமரியாதைக் காரர்களான நாங்கள்!

 

என்ன ஆணவம்?

என்னே விநோதம்!!

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்!!!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


சென்னை

19.8.2019