இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.
இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு.
இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.
1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)
2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)
3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)
இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இது மற்றொரு உரைப்பு:
பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)
பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.
நீதி விசாரணை
பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டான மில்லாத பிராமணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.
சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)
எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவ தும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)
இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?
சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)
சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சியாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)
பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டு மென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).
பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித்தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண்டியது. (அ.8. சு. 279)
கையினாலாவது, தடியினாலாவது அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும் (அ.8. சு. 280)
பிராமணனுடைய ஆசனத்தில் உட்கார்ந்த சூத்திரனை இடுப்பில் சூடு போட்டாவது, ஆசன பாகத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டு விரட்டி விட வேண்டும். (அ.8 சு. 281)
சூத்திரன் பிராமணன்மீது எச்சிச் துப்பினால் சூத்திரனின் உதட்டை அறுத்துவிட வேண்டும். (அ.8. சு. 282)
இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு பிறகு இன்னம் இரண்டு உரைப்பு உரைக்கலாம்.
விடுதலை நாளேடு, 11.10.19
விடுதலை நாளேடு, 11.10.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக