ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

ஆரியர்களின் நலன் கருதி எழுதப்-பட்டவையே வேதங்கள்

ஒரு குலத்துக்கு ஒரு நீதி:
“மௌண்ட்யம் ப்ராணாந்தி கோதண்ட ப்ராஹ்ணானாம் விதீயதே
இதரேஷாம்து வர்ணானமதண்ட; ப்ராணாந்தி; கோபவேத”
மற்றவர்கள் கொலை செய்தால் அவர்களின் தலையை வெட்ட வேண்டும்; ஆரியப் பார்ப்பான் கொலை செய்தால், அவன் தலைமுடியை மட்டும் நீக்கினால் போதும் என்கின்ற மனுசாஸ்திரத்தை உடைய
இந்துமதம்தான் மனிநேயத்தைப் போதிக்கிறதா?
“சூதரந்து காரயேத் தாஸ்யம் க்ரீமதக்ரீ தமேவவா; தஸ்யாயைவ
ஹீஸ்ருஷ்டோ ஸௌப்ராஹ மணஸ்ய ஸ்வம்புவா”
அதாவது, கூலி கொடுத்தாகிலும், அல்லது கூலி கொடுக்காமலும், சூத்திரனைப் பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால், பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால்
சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.
“ஸுர்மித்ரிய ந ஆப ஒஷதய ஸந்து துர்மித்ரியா ஸ்தஸ்மை
ஸந்து யோஸ் மான்த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம” 
- (யஜுர் வேதம்)
பார்ப்பனர்கள் நாள்தோறும் பாடுகிற யஜுர் வேதப் பாடல் பகுதியே இது. இதன் பொருள் என்ன தெரியுமா?
தண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்-களுக்கு) நன்மை பயப்பனவாகவும் எங்களால் வெறுக்கப்படுகின்ற மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆகவேண்டும். வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காத பகுத்தறிவுவாதி-களுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும் என்பதே!
ஆரியர்களின் நலன் கருதி எழுதப்-பட்டவையே வேதங்கள் என்பது இதிலிருந்து புரியவில்லையா? வேதங்கள் மட்டுமல்ல வேதங்களுக்கு விளக்கம் தரவந்த ஸ்மிருதிகளின் போதனைகளை ஆராய்ந்தாலும் ஒரே அபத்தம்தான்.
“பிராஹ்மணோ ஜாயமானோ ஹிப்ருதிஸ்யாம் அபியாஜதே
ஈஸ்வர; ஸர்வ பூதானாம் ப்ரஹ்ம கோசஸ்யகுப்தயே”

“ஸர்வஸ்வம் ப்ராஹ்மணஸ்யேதம், யத்கிஞ் சீஜ்ஜகதீகதம்
ஸ்ரைஷ்டைனா பிஜனெனெதம் ஸர்வம் வைப்பிராஹ் மணோர்                             ஹதி”

“ஸ்வமேவ ப்ராஹ்மணோ புங்க்தேஸ்வம் ததால்ச:         ஆன்ருமிம்ஸ்யாத்
பிராஹ்மண ஸ்யயுஞ்ஸதே ஹிதரே ஜனா”    - (மனு ஸ்மிருதி)
அதாவது, சகல பிராணிகளுக்கும் தலைவனாயும் வேதமாகிய களஞ்சியத்தின் காவலனாயும், பிராமணன் படைக்கப்-பட்டிருப்பதால், இப்பூமியிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிராமணன் உரிமை-யுள்ளவனாவான். பிராமணான் பிச்சையெடுத்து உண்பானாயினும், பிறர் உண்பதும் கொடுப்பதும் அவன்
பொருளே ஆகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.
தாதவ்வம் ப்ரத்யஹம் பாத்ரே நிமித்தேஷுவிசேஷத்
யாசிதேனா பிதாதவ்யம், ஸ்ரத்தா பூதத்து சக்தித்     
(யக்ஞ வல்கியர்)
அதாவது, பிராமணனுக்குத் தினமும் நாணயமும் கொடுக்க வேண்டும். கையில் ஒன்றுமில்லாவிடில் பிச்சையேற்றோ வேறு எந்த வகையிலோ கொடுத்தே தீரவேண்டும் என்பதே யக்ஞ வல்கியர் கூறுவதற்கு அர்த்தம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக