- கவிஞர் கலி.பூங்குன்றன்
மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
1995ஆம் ஆண்டு சிவசேனா, பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தற்போது 20 ஆண்டுகாலம் கழித்து இந்தத் தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகாராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அந்நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
மகாராட்டிர விலங்குகள் காப்பு சட்ட வரைவுக்கு ஒப்புதலை அளித்த குடியரசுத் தலைவருக்கு மகாராட்டிர முதல்வர் பட்னவிஸ் தம்முடைய டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார். மேலும், பசுக் கொலையைத் தடைசெய்யும் நம்முடைய கனவு நனவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இந்தத் தடைக்கு மாட்டிறைச்சி வணிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தடைச் சட்டம் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒன்றரைக் கோடி பேரின் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது. பசு வதைத் தடுப்பு என்று சொல்லி ஒன்றரைக் கோடி மக்களின் வாழ்வை வதை செய்துள்ளனர்.
உணவு என்பது ஒரு தனிமனிதனின் உரிமைப் பிரச்சினை. இதனைத்தான் உண்ண வேண்டும் - இதனை நீ உண்ணவே கூடாது என்று சொல்லுவதற்கு இன்னொருவருக்கு ஏது உரிமை?
மதவெறி மனிதனை எப்படியெல்லாம் தடுமாறச் செய்கிறது என்பதற்கு இந்தச் சட்டம் ஒன்று போதாதா?
குடிமகன் ஒருவனின் மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் செய்ய இயலாத வெட்கம்கெட்ட அரசு ஏழை எளிய மக்கள் மலிவான விலையில் கிடைக்கும் சத்துணவைச் சாப்பிடாமல் தட்டிப் பறிப்பது அகங்காரம் மட்டுமல்ல -_ அடுத்தவனின் மனித உரிமையைத் தட்டிப் பறிக்கும் அடாவடித்தனமே.
இந்து மதத்தில் பசு கோமாதாவாம். கோ பூஜை அனைத்துத் தேவாதி தேவர்களைச் சென்றடைகிறதாம். பசுவின் கொம்புகளுக்கு அடியில் பிர்மா, விஷ்ணு, கொம்பு நுனியில் சர்வ தீர்த்தங்கள், கொம்புகளுக்கிடையே சிவனும் இருக்கிறானாம்.
நெற்றியில் கவுரி தேவி , மூக்குத் தண்டில் முருகன், மூக்குத் துவாரங்களில் நாகர்கள், காதுகளில் அசுவினி தேவர்கள், கண்களில் சூரிய, சந்திரர், நாக்கில் வருணன், பற்களில் வசுக்கள் (அனலன், அணியன், சோமன், தரன்,
துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் முதலிய பிரமன் புத்திரர்கள்), தொண்டையில் சரசுவதி, கழுத்தில் தேவேந்திரன், குளம்பின் நடுவில் கந்தர்வர்கள், கோ மூத்திரத்தில் கங்காதேவி, கால்களில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனராம்.
பசு தோன்றியபோது அனைத்துத் தேவர்களும் பசுவின் உடம்பில் இடம் பிடித்துவிட மகாலட்சுமி தாமதமாக வந்து இடம் கேட்டாளாம். அவளுக்குப் பசுவின் பின்புறம் கிடைத்ததாம். (புரிகிறதா?) (சில கோவில்களில் விடியற்காலையில் பசுவின் புன்புறத்தைக் கடவுளுக்குக் காட்டும் வழக்கம் இன்றும் உண்டு.)
வீட்டில் செல்வம் சிறக்க விரும்புபவர்கள் பசுவைப் பூஜித்துப் பலன் அடைகிறார்களாம்.
கடுமையான தோஷங்கள் இருப்பவர்கள் பசுவைத் தானம் செய்வதன் மூலம் தங்கள் தோஷங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாமாம்.
கடுமையான தோஷங்கள் இருப்பவர்கள் பசுவைத் தானம் செய்வதன் மூலம் தங்கள் தோஷங்களுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாமாம்.
பாரதத் திருநாட்டில் பசுவை கோமாதா என்று பூஜிக்கிறார்களே அந்தப் பாரதப் பசுக்கள்தான் இப்பொழுது இருக்கின்றனவா? அதிகப் பாலைக் கறக்கச் செய்வதற்காக வெளிநாட்டுப் பொலிகாளைகளை இறக்குமதி செய்து, அதன் இந்திரியத்தை இந்தியப் பசுக்களுக்குச் செலுத்திக் கலப்பினமாக்கி விட்டார்களே! உங்கள் கோமாதாவின் கற்பு என்னாயிற்று?
இவ்வளவு தகவல்களும் எப்படித் தெரியும்? கேட்டுவிட வேண்டாம். (மாலைமலர் பொங்கல் மலர் 2008 பக்கம் 8இல் இடம்பெற்றவை இவை)
இந்தக் கேள்வியைக் கேட்கத் தெரிந்தவர்களுக்கு பசுவின் ஒவ்வொரு பாகத்திலும் இன்னின்ன கடவுள் வாசம் செய்வதாகக் கண்டவர்கள் யார்? கண்டுபிடித்து எழுதியவர்கள் யார் என்று கேட்டால் முகத்தை எங்கே தூக்கி வைத்துக் கொள்வார்களாம்.
ஓவியர்கள் ரவிவர்மாவும் கொண்டைய ராஜாக்களும் இல்லாவிட்டால் இந்தக் கடவுள்கள் எங்கே? சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் ஜோலிக்கை ஜாக்கெட்டைப் போட்ட பிர்மாக்கள் இந்த ஓவியர்கள்தானே _ வெட்கக்கேடு.
சரி, எப்படியோ தொலையட்டும் இவ்வளவு கடவுள்களும், கடவுளச்சிகளும் வாசம் செய்யும் இந்தக் கோமாதாவுக்குச் சீக்கு வருவது ஏன்? கோமாரி வருவது ஏன்? தொண்டை அடைப்பான் வருவானேன்?
கால்நடை மருத்துவமனைகளுக்குச் செல்லுவது ஏன்? நோய் வராமல் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதேன் என்று கேள்வி கேட்டால் கேட்கின்றவர்களை நாத்திகர்கள் என்று நற நற என்று பற்களைக் கடித்தால் போதுமா? யோக்கியமாகப் பதில் சொல்ல வேண்டாமா? இந்தியாவில்தான் பசு கோமாதா! மற்ற நாடுகளில் பசு எந்த மாதா?
இந்தக் கடவுள்கள் எல்லாம் உள்ளூர்க் கடவுள்கள்தானா? பசுவைக் கோமாதாவாகக் கும்பிடுகிறார்களே _ இந்தப் பாரதமாதா பெற்றெடுத்த இந்தியப் பசு நாள் ஒன்றுக்குச் சராசரியாகக் கறக்கும் அளவு என்ன தெரியுமா? 2.29 கிலோ.
பசுவைத் தெய்வமாகக் கும்பிடாத மற்ற மிலேச்ச நாடுகளில் உள்ள பசுக்களின் தரம் என்ன?
நாள் ஒன்றுக்குப் பசு தரும் பாலின் அளவு இதோ:
அமெரிக்கா 77.26 கிலோ. கனடா 69 கிலோ, நெதர்லாந்து 63.10 கிலோ, தென்ஆப்பிரிக்கா 62.79 கிலோ, ஸ்பெயின் 61.82 கிலோ, ஜெர்மனி 67.17 கிலோ, டென்மார்க் 55.16 கிலோ, பிரிட்டன் 52.10 கிலோ, பிரான்சு 52.16 கிலோ, சுவீடன் 49.69 கிலோ, இத்தாலி 49.40 கிலோ, இசுரேல் 44.46 கிலோ.
இந்த இலட்சணத்தில் இந்தியப் பசு இலட்சுமியின் அவதாரமாம். பார்வையற்ற-வனுக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைப்பதில்லையா?
இவ்வளவு பால் தரும் பசு, பால் வற்றி பலன் தராத நிலையில் உணவுக்குப் பயன்-படுத்துகிறான் மற்ற நாட்டுக்காரன்.
பாலைக் கறப்பதைவிட நம் பணத்தைக் கறக்கிற (செலவு) இந்தப் பசுவை உணவாகப் பயன்படுத்தக் கூடாதாம்.
இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. கம்பெனி பசுவை உணவுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூக்குரல் போடுகிறார்களே. அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்தால் சட்டம் போட்டுத் தடுக்கிறார்களோ?
உண்மையில் இந்து மதத்தில் புனிதமாகப் போற்றப்படுகிறதா? இந்து மத நூல்கள் பசு யாகம் நடத்தப்பட்டதுபற்றி பலபடப் பேசுகிறதே, அதற்கு என்ன பதில்?
யாகத் தீயில் உயிர்களைத் தள்ளி சித்திரவதை செய்ததைத் தடுத்தவர்தானே கவுதம புத்தர்.
கூடதந்தன் என்ற பார்ப்பான் காயடிக்காத எழுநூறு காளைகள், காயடித்த எழுநூறு காளைகள், கன்று போடாத எழுநூறு இளம் பசுக்கள், வெள்ளாடுகள் எழுநூறு, செம்மறியாடுகள் எழுநூறு முதலியவற்றை யாகத்துக்காகக் கொண்டுவந்து நிறுத்தியதைக் கேள்வியுற்ற சித்தார்த்தனான கவுதம புத்தர் அந்த இடத்திற்குச் சீடர்களுடன் சென்று வாதிட்டார்.
உங்களுக்குச் சொர்க்கம் செல்ல ஆவல் இருந்தால் நீங்களே அல்லவா பலிபீடத்தில் கழுத்தை வைக்க வேண்டும். உங்களுக்குத் தேவையானது சொர்க்கமா? சோமபானமும், ஆடுமாடுகளின் இறைச்சியா? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? என்று கேட்டார்.
காமராசர்
இவையெல்லாம் புராணக் கட்டுக்கதையல்ல -_ வரலாற்று அத்தியாயங்கள். எப்படி எப்படி எல்லாம் யாகத் தீயில் பொசுக்கப்பட்ட பசுக்களின் கறியைத் தின்று கொழுத்தார்கள் என்பதற்கு ஏராள எடுத்துக்காட்டுகள் உண்டு. (பெட்டிச் செய்தி காண்க) இதுபற்றி ராகுல சாங்கிருத்தியாயன் என்ன கூறுகிறார்?
பிராமணர்கள் பவுத்தர்களைத் தங்களது பலமான விரோதிகள் என்று கருதுகிறார்கள். எல்லா நாட்டிலும் உள்ள பவுத்தர்கள் பசு மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்ற காரணத்திற்காகவே, பசு மாமிசம் தடை செய்யப்பட்டது என்றும், பசுவையும், பிராமணர்களையும் காப்பாற்றுவது தர்மம் என்றும் பிராமணர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
என்கிறார் வரலாற்றறிஞர் ராகுல சாங்கிருத்தியாயன் (வால்காவிலிருந்து கங்கை வரை_ பாகம் 2 பக்கம் 76)
ராகுல சாங்கிருத்தியாயன்
ஆரிய வைதிக மார்க்கத்தைப் பவுத்தம் தன் அறவழிக் கொள்கையால் வீழ்த்திய நிலையில் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசம் உண்பதைத் தவிர்த்து வேறு பழக்கத்திற்கு ஆளானார்கள் என்கிறது வரலாறு.
ஆனாலும் வங்காளம் போன்ற மாநிலங்களில் பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடக் கூடியவர்களே. வங்காளப் பார்ப்பனர்களுக்கு மீன் என்றால் கொள்ளை ருசியாயிற்றே நமது குடியரசுத் தலைவர் உட்பட!.
பசுவதைத் தடுப்பு என்பது பல்வேறு பிரச்சினைப் புயல்களை வெடிக்கச் செய்யும்.
1. ஏழைகளுக்கு மலிவாகக் கிடைக்கும் சத்துணவு தடுக்கப்படுவது.
2. மாட்டுக்கறி வியாபாரத்தை நம்பி வாழும் மக்கள் இந்தியாவில் கோடானுகோடி பேர்களின் வாழ்க்கைப் பிரச்சினை.
3. மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் இந்தியா பெற்றுவந்த அந்நிய செலாவணியில் பெரும் பள்ளம் விழும்.
4. பால் வற்றிப் போன பசுக்களைப் பராமரிப்பது பொருளாதாரக் கேடுதானே?
யாரோ குறிப்பிட்ட பகுதியில் உள்ள பார்ப்பனர்கள் சாப்பிடுவதில்லை என்பதற்காக இந்தியாவில் உள்ள கோடானு கோடி மக்களின் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது பச்சையான மூர்க்கத்தனம்.
யாரோ குறிப்பிட்ட பகுதியில் உள்ள பார்ப்பனர்கள் சாப்பிடுவதில்லை என்பதற்காக இந்தியாவில் உள்ள கோடானு கோடி மக்களின் உணவுப் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது பச்சையான மூர்க்கத்தனம்.
பசுவைத் தாய் (கோமாதா) என்கிற பார்ப்பனர்கள் அந்தத்தாய் செத்தால் தூக்கிக் கொண்டு போவதுண்டா?
கோவில்களில் காணிக்கையாக அளிக்கப்-பட்டு கோ சாலைகளில் விடப்படும் பசுக்கள் சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்ற கூப்பாட்டுக்கு என்ன பதில்?
அரியானாவில் செத்த பசுமாட்டுத் தோலை உரித்த அந்த்த் தாழ்த்தப்பட்டவர்களை அடித்துக் கொன்றதும் இந்த சங் பரிவார் என்பதை மறக்க முடியுமா?
தேவேந்திர பட்னவிஸ்
பசுவதைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்ததற்-காக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பச்சைத் தமிழர் காமராசரை பட்டப்பகலில் (7.11.1966) அவர் தங்கி இருந்த வீட்டைக் கொளுத்தி, அவர் உயிரைக் குடிக்க நினைத்த அந்தக் கொலைகாரக் கும்பல் _
இன்றைக்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நிலையில் அன்று எதிர்த்தாயே இன்று பார்! நாங்கள் அதிகாரத்திற்கு வந்துவிட்டோம்.
பசுவதைத் தடை சட்டத்தைக் கொண்டுவந்து விட்டோம் _ முடிந்தால் எதிர்த்துப் பார்! தடுத்துப் பார்! என்று சவால் விடுவதுதான் இந்த முயற்சி!
அன்று காமராசரைக் கொலை செய்யத் துடித்த நாள் நவம்பர் 7 (1966) அந்தக் கொலைகாரப் பட்டியலில் இடம் பிடித்தவர் பூரி சங்கராச்சாரி.
சாது என்ற போர்வையில் நிர்வாண சாமியார்கள் ஜனசங்கத்தினர் (இன்று அதன் பெயர் பாரதீய ஜனதா கட்சி) ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான் அந்தக் கொலையைச் செய்யத் துடித்தது.
அந்த நேரத்தில் தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார். போர்ச்சங்கு ஊதினார். மாட்டுக்கறி விருந்துகளை ஆங்காங்கே திராவிடர் கழகம் நடத்தியது.
பெரும் ஊர்வலங்களை நடத்தி கத்தியை எடுப்போம்! காவல் புரிவோம்! என்ற முழக்கங்களோடு போர்ப் பரணிகளை நடத்தி, தமிழ்நாட்டில் காவிகளின் காலித்தனங்கள் முளைக்காமல் வாலை ஒட்ட வெட்டியது.
இதெல்லாம் கடந்த கால வரலாறு. அந்தக் காமராசர் கொலை முயற்சி நிகழ்வுகளைத் தொகுத்து காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற நூலை தந்தை பெரியார் ஆணைப்படி ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொகுத்து இரண்டாவது பதிப்பும் இப்பொழுது வெளிவந்துள்ளது.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் வந்துவிட்ட திமிரில் வாலை ஆட்ட ஆரம்பித்துவிட்டது. மனுதர்மக் கொடியை பூணூல் கயிற்றில் பறக்க விடுகிறது.
மாடு தின்னும் புலையா? உனக்கு மார்கழித் திருநாளா? என்று அன்று வேதியப் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கூறப்பட்ட நந்தனைப் பார்த்து ஏளனமாய்ப் பேசினார்கள்.
அதில் மாட்டுக்கறி தின்பவன் பறையன் _ அவன் புலையன் என்றவர்கள் இன்று பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வருகின்றனர் என்றால் அந்த அடித்தட்டு மக்களின் உணவில் கை வைக்கிறார்கள் என்றுதானே பொருள்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் உள்ள இந்தத் தடையை இந்தியா முழுவதும் கொண்டு வர தீவிரமாக யோசிக்கிறதாம் மத்திய அரசு!
மாட்டுக்கறி உண்பவர்கள்தான் இந்தியாவில் மட்டுமல்ல -_ உலகம் முழுவதும் அதிகம். இந்தப் பெரும்பான்மை மக்களோடு சிறு நரிக் கூட்டம் மோதிப் பார்க்கத் தயாராகிவிட்டது.
நாம் தயாராக வேண்டாமா?
............
பார்ப்பனர் நடத்திய பசுவதை
அய்தேரய ப்ராஹ்மணம் கூறுகிறது:
அய்தரேய ப்ராஹ்மணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:- யஜ்னேவை தேவா _- ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமாயம்ஸ்தே பியயுரஸ்மின் பியுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ்சானுப் ரஞ்ஞாஸ்யந்தீதி
அய்தரேய ப்ராஹ்மணம் இரண்டாம் பஞ்சிகையின் தொடக்கத்தில் சொல்லுவதாவது:- யஜ்னேவை தேவா _- ஊர்த்வம் ஸ்வர்க்கம் லோகமாயம்ஸ்தே பியயுரஸ்மின் பியுரஸ்மின் நோத்ருஷ்ட்வா மனுஷ்யாஸ்ச ரிஷ்யஸ்சானுப் ரஞ்ஞாஸ்யந்தீதி
(அய்தரேய ப்ராஹ்மணம் த்ஷதீயபஞ்சிகா பிரதம காண்டம்)
இதன் பொருள்: தேவர்கள் யாகம் செய்து ஸ்வர்க்கத்தை அடைந்தனர். ஆதலால் மனிதர்களும் ரிஷிகளும் யாகம் செய்யக்கடவர். யூபஸ்தம்பங்களையும் நாட்ட வேண்டும். யூபம்- யாகத்தில் கொல்லப்படும் உயிர்களைப் பிணிக்கும் தூண்.
தைவ்யா:- சமிதார ஆரபத்வமுத மனுஷ்யா இத்யாஹ. அன்வேனம் மாதா மன்யதாமனு பிதானுப்ராதா ஸகர்ப்யோனு ஸகா ஸயூட்ய இதிஜனித்ரை ரேவைனம் தத்ஸ மனு மதமாலா பந்த உதி சீனாம் அஸ்யபதோ நிதத்தாம ஸுர்யம் சக்ஷுர்க்ம பதாத் வாந்தப்ராண மன்வஸ்ருஜ தாந்தரி க்ஷம ஸும் திச ஸ்ரோத்ரம். ப்ருதிவீ சரீரம்
(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
இம்மந்திரத்தினால் பசுவின் தாய் தந்தையரைக் கேட்டுக் கொள்ளுவதாவது: இந்தப் பசுவை எனக்குக் கொடுங்கள்.
இவ்வாறு வேண்டிக் கொண்ட பின்னர் அத்வர்யு வென்னும் தலைமைப் புரோகிதனுடைய கட்டளையைப் பெற்றுக் கொண்டு பசுவை சமித்ரசாலா என்னுமிடத்திற்கு அழைத்துக் கொண்டுபோய் வடக்குத் திசையில் அப்பசுவின் கால்கள் இருக்கும்படியாகச் செய்து சமிதா வென்னும் பசுவைக் கொல்லும் புரோகிதன் முஷ்டி என்னும் குறுந்தடியால் பசுவினுடைய கழுத்தில் அடித்துக் கொலை செய்வான்.
அதன்பின் சுரா இடா ஸூனு ஸ்வதீதி என்னும் மரப்பலகையில் கொலையுண்ட பசுவின் பிணத்தைக் கிடத்தி தோல் உரித் துச் சதையை அறுத்தெடுத்து சிறிது நெருப்பிலிட்டு மீதியுள்ள மாமிசத்தைப் புரோகிதர்கள் யாவரும் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளுவார்கள்.
இந்தப் பசுவைப் பங்கிடும் முறை ஞானசூரியன் முதல் பாகத்தில் மேற்படி மந்திரமும் அதன் தமிழ் அர்த்தமும் எழுதியிருப்பதால் இதில் எழுதவில்லை. இம்முறை கோபத ப்ராஹ்மணம் என்னும் வேதநூலிலும் இருக்கிறது. யாகத்தில் கொலையுண்ட பசு ஸ்வர்க்கத்தை அடைகிற-தென்று கீழ்க்காணும் மந்திரம் கூறுகிறது.
பார்வை நியமான, ஸம்ருத்யும் ப்ராபஸ்யத் ஸதேவான் நான்வகாமயதைதும் தம் தேவா அப்ருவன்கம் னேஹிஸைவர்க்வத்வர் லோகம் கமயிஷ்யாம இதி
(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா காண்டம் 6)
பொருள்: யாகத்திற்குக் கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது. மரணத்தினின்றும் தேவர்களைக் காண்கின்றது.
தேவர்கள் பசுவைப் பார்த்து, நாங்கள் உன்னை ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் செல்லுகின்றோம் என்பார்கள்.
பசு கொல்லப்பட்ட பிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-
அந்தரே வோஷ் மாணம் வாரயத்வாதிதி பசுஷ்வேவதத் ப்ராணான் ததாதிஸ்யேன மஸ்யவக்ஷ கருணுதாத் ப்ரசஸா பாஹுசலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித்ரேஸ்ரோணீ வகஷோரூஸ்ரேக பர்ணாஷ்டீ வந்தாஷட் விம்சதி ரஸ்ப வங்கரயஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத். காத்ரம் காத்ரமஸ்யானூம்.
(அய்தரேய ப்ராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)
பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அந்த அவயவங்களிலிருந்து இருபத்தாறு துண்டுகள் அறுத்தெடுத்தபின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற்குப் பிரமாணம்:-
உத்ய கோஹம் பார்த்திவம் (அய்தரேய _ - பஞ்சி 2. க 6)
பசுவைக் கொல்லும்போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகாஉர் இதித்ரிர்ப் ரூயாத்
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம் சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகாஉர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்தரேய ப்பிராஹ்மணம் பஞ்சிகா 2 காண்டம் 7)
பொருள்: நன்றாக அடித்துக்கொல்! கொல், கொல்! அடிப்பதை நிறுத்தாதே!
..............
மாட்டிறைச்சி இந்தியாவில் எப்படி?
ஆந்திரா: உணவிற்காக மாடுகளை வெட்டும் சட்ட விதி 1977.
விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத காளைமாடுகள், பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த முடியாத பசுமாடுகள் போன்றவற்றை வெட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 தண்டம் மற்றும் ஓர் ஆண்டு சிறை.
அருணாசலப் பிரதேசம்: எந்தத் தடையும் இல்லை.
அஸ்ஸாம்: ஆரோக்கியமான பசுக்கள் காளைகள் போன்றவற்றை உணவிற்காக வெட்ட அனுமதி உண்டு.
பிகார்: 3 வயதிற்குட்பட்ட மாடுகளை வெட்டத் தடை. உணவிற்காக மட்டுமே மாடுகளை வெட்ட அனுமதி உண்டு.
டையூ தாமன் யூனியன் பிரதேசங்களில் மாட்டிறைச்சியை வெளியில் இருந்து கொண்டுவந்து விற்க அனுமதி. மேலும் சொந்தப் பயன்பாட்டிற்காக மாடுகளை உணவிற்காக வெட்டலாம். அவற்றை விற்பனை செய்யக்கூடாது.
டில்லி: விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத காளை மாடுகள், பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த முடியாத பசு மாடுகள் போன்றவற்றை வெட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவா: மாட்டிறைச்சி விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. கன்றுகள் மற்றும் நோயுற்ற மாடுகளை இறைச்சிக்காக வெட்டத் தடை மீறினால் 6 மாத சிறை மற்றும் ரூ.1000 தண்டம்.
குஜராத்: இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பொருளாதாரப் பயன்-பாட்டில் உள்ள மாடுகளை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு அனுமதி-யுள்ளது. மீறினால் 6 மாத சிறை மற்றும் ரூ.1000 தண்டம்.
ஹரியானா, பஞ்சாப், ஹிமாசல் பிரதேசம்: சொந்தப் பயன்பாட்டிற்கு மாடுகளை வெட்டுவது அனுமதிக்கப்-பட்டுள்ளது. பொது விற்பனை மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு மாட்டிறைச்சி விற்க அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மீறினால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 தண்டம். ஜம்மு காஷ்மீர்: தடையில்லை. மாட்டிறைச்சியை உணவிற்காக விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யலாம். சுகாதாரத்தைப் பேணாமல் இருந்தால் ரூ.500 தண்டம்.
கர்நாடகா: பால் வற்றிய பசுக்கள், விவசாயப் பயன்பாட்டிற்கு உதவாத மாடுகள் வெட்ட அனுமதி. உயிருடன் அடிமாடுகளை வேற்று மாநிலங்களுக்குக் கொண்டு செல்லத் தடை மீறினால் 6 மாத சிறை மற்றும் ரூ.1000 தண்டம்.
கேரளா: தடையில்லை.
மத்தியப்பிரதேசம்: விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத காளை மாடுகள், பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த முடியாத பசு மாடுகள் போன்றவற்றை வெட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 தண்டம் மற்றும் ஓர் ஆண்டு சிறை.
மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம்: தடையில்லை.
ஒடிசா: பால் வற்றிய பசுக்கள், விவசாயப் பயன்பாட்டிற்கு உதவாத மாடுகள் வெட்ட அனுமதி.
ஒடிசா: பால் வற்றிய பசுக்கள், விவசாயப் பயன்பாட்டிற்கு உதவாத மாடுகள் வெட்ட அனுமதி.
புதுச்சேரி: மாடுகளை இறைச்சிக்காக வெட்டத் தடையில்லை.
ராஜஸ்தான்: மாடுகளை இறைச்சிக்காக பொது இடங்களில் வெட்ட தடை செய்யப்-பட்டுள்ளது. சொந்தப் பயன்பாட்டிற்காக வெட்டலாம். விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இறைச்சிக்காக மாடுகளை வாகனங்களில் கொண்டுவருவது தடைசெய்யப்-பட்டுள்ளது. மீறினால் ரூ.10,000 தண்டனை இரண்டு ஆண்டு சிறை.
தமிழ்நாடு: மாட்டிறைச்சி விற்பனை தடை செய்யப்படவில்லை.
உத்தரப்பிரதேசம்: மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது அனுமதிக்கப்-பட்டுள்ளது. மாடுகளை வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் முழுவதுமாக மூடப்பட்டு இருக்க வேண்டும்.
மேற்கு வங்கம்: சட்ட விதிகளின்படி மாடுகளை இறைச்சிக்காக வெட்டலாம். ஏற்றுமதி செய்யலாம். பால் வற்றிய பசுக்கள் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படாத மாடுகள் வெட்ட அனுமதி.
உண்மை,16-31.4.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக