தொலைக்காட்சிகளில் பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் அரட்டை அடிப்பதற்கென்றே தயாரிக்கப்பட்டு அனுப்பப் படுபவர்களாக இருப்பதை அறிய முடிகிறது.
சில நேரங்களில் சவால் விடுவார்கள்; மற்றவர்களைப் பேசவிடாமல் அவர்களே தொணதொணவென்று பேசிக் கொண்டே இருப்பார்கள்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்த் தரப்பில் விவாதம் செய்ய வந்தால் மட்டுமே கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.
மூன்று நாள்களுக்குமுன் ஒரு தனியார்த் தொலைக் காட்சியில் சங் பரிவாரைச் சேர்ந்த ஒருவர் சவால் விட் டுள்ளார். எதிர்த்தரப்பில் வாதிட் டவர் கருஞ்சட்டைக்காரராக இருந்திருந்தால் அதே இடத் தில் பளார் என்று கன்னத்தில் அறைவதுபோல பதில் சொல் லித் திக்குமுக்காட செய்தி ருப்பார்.
சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும். சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? நான் சவால் விட்டுக் கேட்கி றேன் - பேடித்தனமாக உளறக் கூடாது என்றெல்லாம் ஊளை யிட்டுள்ளார்.
அவருக்கு மட்டுமல்ல, அவரைப் போன்றவர்களுக்கும் சேர்த்து ஆதாரப்பூர்வமான தகவல்களைச் சொல்லுவது நமது கடமை.
சுவாமி சிவானந்த சரஸ்வதி சமஸ்கிருதத்தில் கரை கண்ட வர்; பல நூல்களை எழுதி இருப்பவரும்கூட.
அவரின் ஞானசூரியன் எனும் நூலும், மத விசாரணை எனும் நூலும் பிரசித்தி பெற்றவை. அவ்விரு நூல்களிலும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் கூறியுள்ளார்.
அவரின் ஞானசூரியன் எனும் நூலும், மத விசாரணை எனும் நூலும் பிரசித்தி பெற்றவை. அவ்விரு நூல்களிலும் ஆதாரப் பூர்வமாக எடுத்துக் கூறியுள்ளார்.
சூத்திரன் சிரவணத்திற்கு அதிகாரியல்லன்
ஸ்ரவணாத்ய்ய னார்த்தப் ரதிஷோத் ஸ்ம்ருதேஸ்ச
(வியாசர் பிரம்ம சூத்ரம் 1.3.38).
(வியாசர் பிரம்ம சூத்ரம் 1.3.38).
(ஸ்மிருதிகளின் படியும் சிரவணம், அத்தியனம், அர்த்த சிந்தனம் கேட்டல், ஓதுதல், பொருளை ஆராய்தல்) முதலி யன தடுக்கப்பட்டுள்ளதால்)
(இது வியாசரால் கூறப்பட் டுள்ள பிரம்ம சூத்ரம் அபசூத் ராதி கரணத்திலுள்ளது) அப சூத்ராதிகரணம் சூத்திரனைப் புறக்கணித்த இடம்.
இச் சூத்திரத்திற்குச் சங்க ராச்சாரியாரின் பாஷியமாவது:
ஸ்ரவண ப்ரதிஷேதஸ் காவத்; அதாஸ்ய வேத முபஸ் ருண்வத ஸ்த்ர புஜ துப்யாம் ஸரோத்ர ப்ரிதிபூரணம் பத்யு ஹ வா ஏதத் ஸ்மாசனம் வை சூத்ரஸ் தஸ்மாத் சூத்ர ஸமீபே நாத்யே தவ்யளஞ்ச
வேதோச்சாரணே ஜிஹ் வாச் சேதோ தாரணோ சரீ ரபேத
வேதோச்சாரணே ஜிஹ் வாச் சேதோ தாரணோ சரீ ரபேத
(சூத்திரர்களுக்குச் சிரவ ணாதிகளில் தடையாவது = வேதத்தைக் காதினால் வாங் கிய சூத்திரனின் இரு காது களிலும் ஈயத்தையும், அரக்கை யும் காய்ச்சி ஊற்றவேண்டும். சூத்திரன் சுடுகாட்டிற் கொப்பா னவனாகையால் அவனருகில் வேத மோதலாகாது).
(வேதத்தை உச்சரித்த சூத் திரனது நாக்கைத் துண்டித்தலும் வேதத்தை உருவிட்டு உறுதிப் படுத்திய நெஞ்சைப் பிளத்த லும் வேண்டும்).
வேதங்களை சூத்திரர்கள் படிக்கக்கூடாது; கேட்கக்கூடாது என்பதற்கான ஆதாரம் கூறி யாகி விட்டது.
சூத்திரன் என்றால் விபச் சாரி மகன் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று சவடால் விடுபவர்களுக்கு இதோ ஆதாரம்.
சூத்திரன் என்றால் விபச் சாரி மகன் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று சவடால் விடுபவர்களுக்கு இதோ ஆதாரம்.
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட் டவன், குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிற வன் (மனுதர்மம், அத்தியாயம் 8; சுலோகம் 415).
வே.வேதாந்தாசாரியார் என்பவரால் வெளியிடப்பட்ட மனுதரும சாஸ்திரம்தான் இத னைக் கூறுகிறது.
சவால் விட்ட சங் பரி வார்களே இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்?
- மயிலாடன்
-விடுதலை,24.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக