பெண்ணை ருது காலத்திற்கு முன்பு தக்க வரனுக்குக் கல்யாணம் செய்து கொடாத தந்தை யும், மனைவியை ருது காலத்தில் புணராத கண வனும், கணவன் இறந்த பின்பு தாயைக் காப் பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப்படுவர்.
(மனுதர்மம் அத்தியாயம் - 9 - சுலோகம் 4)
8 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப் பவன் சுவர்க்க லோகத் தையும், 9 வயது பெண்ணை விவாகம் செய்து கொடுப் பவன் வைகுண்டத்தை யும், 10 வயதுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப் பவன் பிரம்மலோகத்தை யும் அடைகிறான். அதற்கு மேற்பட்டுப் பெண்ணை விவாகம் செய்து கொடுப் பவன் ரவுரவாதி நர கத்தை அடைகின்றான்.
- பராசர்
- பராசர்
இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள் அல்ல. நடைமுறையில் அவ் வாறு தான் இருந்தது. இராமகிருஷ்ண பரம ஹம்சர் என்று இந்துத் துவவாதிகள் ஏற்றிப் போற்றுவார்களே அவர் திருமணம் செய்து கொண்ட போது - அந்த சாரதா தேவியின் வயது வெறும் அய்ந்துதான் (கி.பி.1858). கஸ்தூரிபாயிக்கு 7 வயது இருக்கும்போதுதான் காந்தியார் கல்யாணம் கட்டிக் கொண்டார்.
தான் 13ஆம் வயதில் தன்னுடைய மனைவியு டன் வாழ்ந்து வந்ததாக வும், தான் பகல் வேளை யில் ஏதோ சில மணி நேரம் பள்ளிக் கூடத் திற்கு செல்லாதிருந்தால், இன்னும் அதிகமாக சிற் றின்பத்தில் உழன்று வெகு நாளைக்கு முன்பே பலவித நோய் வாய்ப்பட்டு இறந்து போயிருப்பேன் என்றார் காந்தியார்.
1921ஆம் ஆண்டு ஒரு புள்ளி விவரம் அதிர்ச் சிக்குரியது.
ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள பெண் குழந்தை கள் 20,369,
5 முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் 1,23,472,
10 முதல் 15 வயது வரை 11,76,063 சிறுமிகள் கல்யாணம் செய்து வைக் கப்பட்டவர்களாக இருந் தார்கள் என்ற கொடு மையை என்னவென்று சொல்ல! இந்தக் குழந்தைத் திருமணத்தின் காரண மாக 1921ஆம் ஆண்டில் அரசுப் புள்ளி விவரப்படி காணப்பட்ட விதவை களின் கணக்கு ரத்தக் கண்ணீரை உகுக்கும் படிச் செய்யும்.
ஒரு வய துக்குட்பட்ட 612, ஒன்று முதல் 2 வயதுக்குட்பட்ட 498, 2 முதல் 3 வயது வரை 1285, 3 முதல் 4 வயது வரை 863, 4 முதல் 5 வயது வரை 6853, 5 முதல் 10 வயது வரை 85,580, 10 முதல் 15 வயது வரை 2,33,583 பெண் குழந்தைகள் விதவை களாக இருந்துள்ளனர் - இந்த அர்த்தமற்ற ஆபாச இந்து மதத் சாத்திரத்தால்!
இந்தக் கொடுமை மாற்றி அமைக்கப்பட்டது - வெள்ளைக்காரர்கள் ஆட்சியில்தான்; இந்து ராஷ்டிரத்தை உருவாக்க நினைக்கும் அமைப்பில் உள்ள அருமைச் சகோதரிகாள்! சிந்திப்பீர்களா?
- மயிலாடன்
-விடுதலை,0.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக