முன்னுரை:- நல்லாட்சி நடத்திய மவுரியப் பேரரசர் அசோகரின் அருமை
பெருமைகளை உலகுக்குப் பறை சாற்றும் வண்ணம் இந்தியத் தேசியக் கொடியில் அசோகச் சக்கரம்
பொறிக் கப்பட்டது. அசோகர் புத்த மதத்தையும், பாலி மொழியையும் பெரிதும் ஆதரித்தார்.
இவரது ஆட்சிக்காலம் (கிமு 268-_232) இந்தியர்களின் பொற் காலம் மவுரியர்களின் ஆட்சிக்காலம் (கிமு 322_-185)
புஷ்ய மித்ர
சுங்கன் என்ற தளபதி ஆட்சியைக் கைப்பற்றிய போது முடிவுக்கு வந்தது. இந்த புஷ்யமித்திரன்
ஆரியரின் வைதிக மதத்தை ஆதரித்தார். அசுவமேத யாகங்கள் செய்தார். இருந்தபோதிலும் புத்த
மத வரலாற்றுச் சின்னங்களை அழிக்காமல் பராமரித் தார் (ரோமிலா தாப்பர்) இந்த சுங்க வம்சத்தைத்
(கிமு 185- _ கிபி 75) தொடர்ந்து நாயக்கர்கள்
காலம் வரை (சுமார் 2000 ஆண்டுகள்) தோன்றிய பல மன்னர்கள் பெரும்பாலும் வைதிக மதத்தை ஆதரித்தனர்.
இத்தகைய வைதிக மத ஆட்சிகளுக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தது மனுதர்ம சாஸ்திரமாகும்.
இந்த மனுதர்ம சாஸ்திரம் உண்மையிலேயே நீதி நூலா அல்லது மனித நேயத்திற்கு எதிரானதா என்பதைபற்றி
இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது
சூத்திரர்களின் ஆட்சிபற்றி மனு தர்மம்:-
1. வடஇந்தியாவில்
சூத்திரர்கள் ஆட்சிகள் ஏற்பட்டன. அவைகளில் முக்கியமானவை நந்தர்களின் ஆட்சியும், மவுரியர்களின் ஆட்சியும் ஆகும். இந்த
சூத்திரர்களின் ஆட் சிகளே மனு சாஸ்திரம் உருவாகு வதற்கு காரணமாக அமைந்தன. மீண்டும்
சூத்திரர்களின் ஆட்சி இந்தியாவில் ஏற்படாத வகையில் சூத்திரர்களை அடக்கும் வகையில் பல
கடுமையான சமூகக் கட்டுப் பாடுகள் மனு சாஸ்திரத்தில் சேர்க் கப்பட்டன என வரலாற்றாளர்கள்
கருதுகிறார்கள்.
2. சூத்திர அரசர்கள்
ஆளும் நாட்டில் பிராமணர்கள் குடியிருக்கக் கூடாது விதி (61-4) (ஆதாரம்:-- Translation
of Manu Dharma by Patrick Olivelli and Oxford university Press)
மேலும் இந்த
நூலில் கீழ்க்கண்ட செய்திகள் காணப்படுகின்றன.
1. ஈ.வெ.ராமசாமி
என்பவர் மனுதர்ம சாஸ்திரத்தைக் கொளுத்தினார்
2. டாக்டர் அம்பேத்கர்
1935இல் ஒரு மாநாட்டில்
மனுதர்மத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றினார். இதன்படி மனுதர்மம் நாசிக்-இல் கொளுத்தப்
பட்டது.
3. பின்னர் 25.03.2000
இராஜஸ் தானில்
உயர் நீதிமன்ற வளாகத்தில் மனுதர்மம் எரிக்கப்பட்டது
இத்தகைய மனுதர்ம சாஸ்திரத்தை முதன் முதலாக ஆங்கிலத்தில் 1784இல் மொழி பெயர்த்தவர் வில்லியம் ஜோன்ஸ்
ஆவார். இவர் கல்கத்தாவில் நீதிபதியாக இருந்தவர். மேலும் காசியில் ஒரு பிராமணரிடம் ஜோன்ஸ்
மனு சாஸ்திரம் கற்றார்.
குறிப்பு: விதி
(61-_4 பாகம் 4) _ விதி (61-_4).
பெண்கள் பற்றி மனுதர்மம்
சமீபத்தில் சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல
41 வயதுடைய ஒரு
பெண் அனுமதி மறுக்கப்பட்டாள். காரணம் அவள் தன் மகனிடமிருந்து அனுமதிக் கடிதம் பெறவில்லை
என்பதே ஆகும். இந்த நிகழ்வினை இந்துக்கள் பலர் வலைத்தளத்தில் கண்டித்தனர். இந்த நிகழ்வின்
அடிப்படையில் பெண்கள் பற்றி மனுதர்மம் கூறுவதை கீழே உள்ளவாறு ஒப்பு நோக்கலாம்.
1. பெண்கள் சிறு
வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக் குப்பின் மகனின் பதுகாப்பிலும்
இருக்க வேண்டும. விதி (148-_5)
2. கன்னித்தன்மை
இழந்த பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவள் (விதி 226-_8). இதனால்தான் மத்தியப் பிரதேசத்தில்
அரசு நடத்திய இலவச திருமணங்களில் பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளானார்கள். மத்திய
அரசில் இந்துத்துவா ஆட்சி ஏற்பட்டால் கன்னித்தன்மை சோத னைகள் நடைமுறைக்கு வர வாய்ப்
புள்ளது.
3. திருமணத்திற்கு
முன் ஒரு பெண்ணைக் காட்டி பெண்ணின் தந்தை அடுத்த பெண்ணை மண முடித்து வைத்தால் இரு பெண்களுமே
ஒருவனுக்கு மனைவியாக வேண்டும். விதி (204-_8). இந்த விதி பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துகின்றது
4. மாதவிலக்கின்
போது ஒரு பெண் உணவு பரிமாறக் கூடாது. விதி 208_-4
5. ஒரு கணவன் தனது
மனைவி மலடியாக இருந்தாலோ அல்லது ஆண்வாரிசை பெற்றுத் தரவில்லை என்றாலோ அந்த மனைவியை
குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கலாம். விதி (81-_9). இந்தப் பழக்கம் இந்தியாவில் பல இடங்களில்
நடைமுறையில் உள்ளது. இந்த விதியில் தசரதன் மற்றும் பாண்டவர்களின தந்தை என்று சொல்லப்பட்ட பாண்டு போன்ற ஆண் மலடர்கள் பற்றி எதுவும்
கூற வில்லை. ஆண்வாரிசு வேண்டுமென் றால் தசரதன் போல் யாகம் செய்து கொள்ளலாம்
6. ஒரு அரசன் முக்கிய
ஆலோ சனையின் போது பெண்களையும், மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்கக் கூடாது.
7. ஆண்களை மயக்கும்
குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டுள்ளாள் விதி (213-_2)
8. கீழ்க்கண்ட
பெண்களைத் திரு மணம் செய்துக் கொள்ளக்கூடாது--.- நதி, நட்சத்திரங்கள், மரங்கள், மலைகள், நாகம், பறவைகள் ஆகியவற்றின் பெயர் கொண்டப்
பெண்கள் விதி(9-3).
9. ஒரு பெண் தன்னுடைய
வீட்டில் ஒரு ஆணின் அனுமதியின்றி எந்த வேலையும்செய்யக் கூடாது. (147-_5).
10. பெண், தன் கணவன் --வக்கிர குணம் பெருநோய், மோசமான நடத்தை ஆகியவற்றைக் கொண்டி
ருந்தாலும் அவனை வணங்க வேண்டும் விதி (154-_5).
11. ஒரு பெண்ணுக்கு
எந்தவித மதச் சடங்கும் செய்ய தெய்வத்தின் அனுமதி இல்லை விதி (158_--5)
12. ஒரு பெண் தன்
கணவன் இறந்த பின் இன்னொரு ஆணின் பெயரை சொல்லக்கூடாது விதி (157-_5).
13. கணவனைப் பணியாதப்
பெண், குஷ்ட ரோகியாக
மாறுவாள். இறப் பிற்குப்பின் நரியாக மாறுவாள் (164-_5).
14. ஒரு விதவை வெள்ளை
உடை அணிந்து கொண்டு, தன் கணவனின்
தம்பி (தேவர்)யுடன் மட்டும் உடல் உறவு கொண்டு கருத்தரிக்க அனுமதிக் கப்படுகிறாள். விதி
(70_-9).
15. ஒரு பெண் பலவீனமான
உடல் அமைப்பு கொண்டிருப்பதாலும் மற்றும் வேதங்களைப் படிக்காததி-னாலும் பெண்கள் சுத்தமற்றவளாகக்
(impure) கருதப்படுவதாலும் தவறுகளைச் செய்யக் கூடியவளாக (falsehood)
இருப்பதாலும்,தன் குழந்தைகளின் பெயர் சூட்டுதல், மொட்டை அடித்தல் போன்ற சடங்குகளில்
ஈடுபடத் தகுதியற்றவள் விதி (18-_9)
16. ஒரு பெண் தற்பெருமை
கொண்டு, தன் கணவனுக்கு
அடங்காத பெண்ணின்மீது அரசன் நாயை ஏவ வேண்டும், பொது இடத்தில் விதி (371-_8)
17. ஒரு பெண் தன்
கன்னித் தன்மையை இழக்க நேர்ந்தால் அவள் தலை மொட்டை அடிக்கப்பட்டு, இரு விரல்கள் வெட்டப்பட்டு, கழுதை மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்துச்
செல்லப்படுவாள். விதி (370_-8).
18. ஒரு விதவை மறுமணம்
செய்து கொள்ளவோ, அல்லது வேறுவகையில்
உடல் உறவு கொள்ளவோ புனித நூல்களில் சொல்லப்படவில்லை. விதி (65-_9).
19. ஒரு பெண் தன்
கணவனைத் தானே தேர்ந்தெடுத்தால் தந்தை வீட்டிலிருந்து ஆடை அணிகலன்கள் எதுவும் எடுத்துச்
செல்லக்கூடாது. விதி (92_-9).
பெண்களை இழிவுபடுத்துவதாலும், ஆண் வாரிசு பெற்றுத் தராத மனை விக்குக்
கொடுமை இழைப்பதாலும், மக்களாட்சி
நடைபெறும் இந்தியாவில் மனுசாஸ்திரத்தை அரசுகள் தடை செய்ய வேண்டும், மனுதர்மம் ஆண் வாரிசைப் பெற்று தராத
பெண்ணை கணவன் விலக்கி வைக்கலாம் என்று சொல்வதால் மனுதர்மத்தை நீதி நூலாகக் கருதக்கூடாது.
மேலும் மனுதர்ம சாஸ்திரத்தால் 2000 ஆண்டுகள் அடிமையாக்கப்பட்ட பெண்களுக்கு
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, கலைஞர், தமிழர் தலைவர் வீரமணி ஆகியோரின் பகுத்தறிவுப்
பிரச்சாரத்தினால் உருவான புதிய சமூக சீர்திருத்தச் சட்டங்களினால் விடுதலை கிடைத்துள்ளது.
மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும்
(2)
- பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E.,
M.B.A., M.A.
சூத்திரர்கள் பற்றி மனுதர்மம்
1.சூத்திரர்களை
(தஸ்யூக்களை) திரு டர்கள் என மனு தர்மம் குறிப்பிடுகின் றது. திருட்டுகளில் இருந்து குடி மக்களைக்
காப்பாற்றாத அரசன் பிணத்திற்கு சமம் எனக் கூறுகின்றது. விதி (143_-7)
2.பிராமணர்கள்
பிரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள். எனவே இந்த உலகம் முழுவதும் பிராமண-ர்களுக்கே
சொந்தம். இந்த விதி இந்துத் துவ ஆட்சி இந்தியாவில் அமையும் போது நிறைவேற்றப் பட வாய்ப்பு
ஏற்படும். சூத்திரர்கள் பிரம்மாவின் காலில் பிறந்ததினால் பிராமணருக்கும் சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் அடிமையாக வேலை செய்ய
வேண்டும்.
3. சூத்திரர்கள்
மேல் சாதிக்காரர் களுடன் சமமாக அமரக்கூடாது. அமர்ந்தால் அவர்களின் பின்பாகம் வெட்டி
எறியப்படும். சூத்திரர்கள் மேல் சாதிக்காரர்களை திட்டினால் சூத்தி ரனின் நாக்கை வெட்டி
எறிய வேண் டும். அதே சமயத்தில் சூத்திரர்களை மேல் சாதிக்காரர் திட்டினால் மேல் சாதியினருக்கு
எந்த வித தண்டனையும் கூறப்படவில்லை. விதி 281_-8
4.அரசன் சூத்திரனுக்கு
அபராதம் விதித்த பணத்தைக் கட்டத் தவறி னால் சூத்திரன்தன் உடல் உழைப்பால் சரி செய்ய
வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சாட்டையடி தர வேண்டும் ஆனால் இந்த விதி பிரா
மணனுக்குப் பொருந்தாது. குழந்தை களுக்கு சாட்டையடி ஆனால் பிரா மணனுக்குத் தண்டனை இல்லை
5.பிராமணன், சத்திரிய, வைசிய மற்றும் சூத்திர வருணத்தைச்
சேர்ந்தப் பெண்களை மணக்கலாம். ஆனால் ஒரு சூத்திரன் ஒரு சூத்திரப் பெண்ணைத் தான் மணக்க
வேண்டும் என்று விதி (12-_3).
6 ஒருவன் சிறப்பாக
வாழ வேண்டு மென்றால்--சத்திரியன், படித்த பிரா மணன், பாம்பு-----ஆகியவற்றைப் பகைத்துக்
கொள்ளக் கூடாது ( விதி 135_-4)
7. சூத்திரனுடன்
பிராமணன் பயணம் செய்யக் கூடாது. விதி (140-_4).
மேலும் கடவுளின் பெயராலும், வேதங்களின் பெயராலும் மக்கள் தொகையில்
சுமார் 97 சதவீதத் தினரான
சூத்திரர்களை, வரணா சிரம தர்மம்
என்ற பெயரால் அடிமை களாகவும் தாசிமகன் என்று பல ஆயிரம் ஆண்டுகள்இழிவுபடுத்திய கொடுமை
மனித வரலாற்றில் காணப் படாத ஒன்றாகும். இந்த நிலை சுதந் திரம் என்ற பெயராலும், மக்களாட்சி என்ற பெயராலும் சட்டத்தின்
ஆட்சி என்ற பெயராலும் களையப்படாமல் நீடிப்பது மாபெரும் கொடுமையாகும்
ரைனோசரஸ் மாமிசமும், மனுசாஸ்திரமும்:-
1. சிரத்தா சடங்கில்
பிராமணன், தான் சாப்பிட்டு
பின் எஞ்சிய உணவை சூத்திரனுக்கு தந்தால் பிராமணன் நரகத்திற்குப் போவான். விதி (249-_3).
2.யாகத்தில் பலியிடும்
பொருள் களாக கீழ்க்கண்டவைகள் மனுசாஸ் திரத்தில் சொல்லப் பட்டிருக்கின்றன ரைனோசரஸ் மாமிசம், ஆமை, ஆடு, கரடி, மான். ஆகியவற்றின மாமிசம் மீன், எள் தானியம், பால், பழம் மற்றும் ரிவீபீ திறீமீலீ (266 முதல் 272_-3).
3. பிராமணர் வேதம்
ஓதாமல் ஒரு போதும் மாமிசம் சாப்பிடக் கூடாது விதி (36-_5)
4.வேதம் அறிந்த
பிராமணன் சடங்கில் பலியிடுவதற்கு மிருகங்களைக் கொன்றால் அந்த பிராமணனும், மிருகமும், கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டு உயர்
பதவி அல்லது பிறவி அடைகிறார்கள். விதி (40_-5)
5. நாயால் மற்றும்
சூத்திரனால் கொல்லப்பட்ட மிருகங்களின் மாமி சத்திற்கு தீட்டு கிடையாது விதி 131_-5.
பிராமணர் பற்றி மனு தர்மம்
1. பிராமணன் குருவிடம்
36 அல்லது 18 ஆண்டுகள் மூன்று வேதங்களை கற்க வேண்டும்.
விதி 1-3
2. ரிக் வேதம்
கடவுள்களுக்குப் புனிதமானது. யஜூர் வேதம் மனிதர் களுக்குப் புனிதமானது (தேவையானது)
சாமவேதம் மனுச வடிவ தேவதை களுக்கு ஏற்றது. விதி (124_-4)
3.இடிவெள்ளம்.புயல்
மழை கடல்சீற்றம் ஆகியவற்றின்போது வேதம் ஓதக்கூடாது (விதி 103_-4)
4.சூத்திரன் அருகில்
இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது விதி (99-_4)
5.பிராமணன் தினமும்
வேதம் ஓதவேண்டும் மற்றும் கடவுள்களுக்கு உணவு படைக்கவேண்டும்.மேலும் அய்ந்து முறை தானம் செய்ய வேண்டும் விதிகள் 73 மற்றும் 75_-3
6.இரவில் படுக்கும்
கட்டிலின் கால் பகுதியில் திருமகளையும் தலைப் பகுதியில் பத்ரகாளியையும் வணங்க வேண்டும்
விதி -89-_3
7.மனைவியுடன்
கணவன் இரட் டைப்படை நாட்களில் உடல் உறவு கொண்டால் ஆண்குழந்தைப் பிறக்கும். விதி 48_-3
8. பிராமணன் கீழ்க்கண்டவர்கள்
தரும் உணவை சாப்பிடக் கூடாது---பொற் கொல்லர் தச்சர் தையல்காரர் நடிகர் வைத்தியர் பாடகர்
ஆண் உறவினரகள் யாரும் இல்லாத பெண் ஆகியோர் விதி 215-_4
9. பிராமணன் வீட்டில்
வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் வேலைக்காரர் களுடன் சாப்பிடலாம். (விதி 112-_3).
10. தானே தோன்றிய
கடவுள் மிருகங்களைப் படைத்ததின் நோக்கமே யாகங்களில் பலி கொடுப்பதற்குத் தான் விதி
(39-_5)
11. கீழ்க் கண்டவை
பாவச் செயல் கள் அல்ல மனித இயல்புகள். ஆனால் பெரும் பரிசுகள் கிடைக்காது---மாமிசம்
சாப்பிடுதல்மது அருந்துதல்காம இச்சை கொள்ளுதல் ஆகியவை-- விதி (56-_5).
12.கடவுளுக்குப்
படைக்கப் பட்ட உணவை வேதம் தெரியாதவன் சாப்பிட்டால் அவன் இறந்த பின், பழுக்கக் காய்ச்சிய இரும்பாலான ஈட்டி
கோளங்கள் முதலியவற்றை நரகத்தில் விழுங்க வேன்டும். விதி 133_-3)
13. ஒரு பிராமணன்
சூத்திரப் பெண்ணை மணந்தால் அவன் இழிவு செய்யப்பட்டு சூத்திரனாக கருதப் படுவான் விதி
(17-_3)
14. சகோதரன் மற்றும்
தந்தை இல்லாத பெண்ணை பிராமணன் மணம் செய்து கொள்ளக் கூடாது (11-3)
15. சூத்திரப் பெண்ணை
பிராமணன் மணந்தால் அவன் நரகத்திற்குப் போவான் விதி (17-3)
16. திருமணங்கள்
எட்டுவகைப்படும். அவை பிரம்மிஅரசா தெய்வாபிரகப் பத்யாஅசுர கந்தரவா ராட்சசா பைசாச என்பன
ஆகும். இவற்றில் முதல் நான்குவகை பிராமணர்கள் கடைப் பிடிக்க வேண்டும் (24_-3).
16ஏ. உறவினரைக்
கொன்று கண்ணீர விடும் ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று ஒருவன் திருமணம் செய்து கொள்வது
இராட்சச முறை திருமணம் ஆகும். விதி (33_-3). இந்த முறை சத்திரியர்களுக்கு அனுமதிக்கப்
பட்டுள்ளது.
17 பலி சடங்கின்
போது பிராமணன் வேதங்கள புராணங்கள் தரும சாஸ் திரங்கள்ஆகியவற்றை கேட்க வேண் டும். விதி
(232-_3) இந்த விதியின்படி புராணங்கள் தோன்றிய பின்னரே மனு சாஸ்திரம் தோன்றி இருக்க
வேண்டும்.
18. பிராமணன் காளை
அல்லது பசு மீது ஏறி பயணம் செய்யக் கூடாது. விதி (72-4). திருவிழாக்களில் பிராமணர்கள் பல்லக்கிலோ
அல்லது தேரிலோ பயணம் செய்யலாமா?
19. பிராமணன் சத்திரியன்
அல்லாத அரசனிடம் தானம் பெறக் கூடாது. (விதி 84-_4). பிராமணன் தர்ம சாஸ்தி ரங்களைப் பின்பற்றாத
அரசனிடம் தானம் பெற்றால் 21 நரகங்களுக்கும்
(தமிஸ்ரா தபனா ரிகிஷாஎரியும்ஆறு காலசூத்ராலோகக்காரகா---) வரிசையாக செல்லுவாரகள். விதி
(89_-4)
20. பிராமணனை தனக்குப்
பதிலாக வழக்குகளை விசாரிக்க அரசனால் நியமிக்கலாம்.விதி (9_-8)
21. பிராமணர்கள்
எண்ணிக்கையில் குறைந்தும் சூத்திரர்கள் அதிகமாகவும் உள்ள நாடு பஞ்சத்தாலும் நோய்களி
னாலும் அழியும் விதி 22-_8.
22. அரசன் சாதிக்கேற்ற
நீதி வழங்க வேண்டும் விதி 41_-8
23. வழக்கின்போது
சூத்திரன் தலையில் அடித்து சத்தியம் செய்ய வேண்டும்.
ஆனால் பிராமணன் அவ் வாறு செய்ய வேண்டியதில்லை. விதி 113_-8
மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் (3)
- பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.
24. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சூத்தி ரனின் உடலில் 10 இடங்களில் தண் டனை (காயம்) வழங்க வேண்டும். ஆனால் பிராமணனின் உடலுக்குத் தண்டனை கிடையாது. நாடு கடத்தலாம் விதி 124-_8
25. அபராதம் பணமாகவோ அல்லது தானியங்கள் எடையாகவோ (பலம் கணக்கில்) வசூலிக்கலாம். பணம் மற்றும் பலம் தமிழ் நாட்டில் புழக் கத்தில் இருந்த சொற்கள் விதி 135, 138-_8
26. பிராமணனின் பெயரையும் சாதிப்பெயரையும் ஒரு சூத்திரன் சொன்னால் அவன் வாயில் பழுக்க காயச்சிய இரும்பு கம்பியை நுழைக்க வேண்டும் விதி (271-_8)
27. ஒரு பிராமணனுக்கு அவனது கடமைகளைப் பற்றி ஒரு சூத்திரன் அறிவுரை கூறினால் சூத்திரன் வாயிலும் காதிலும் காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றவேண்டும் விதி 272-_8
28. பிராமணன் தன் பயணத்தின் போது அடுத்தவன் தோட்டத்தில் புகுந்து கரும்பு மற்றும் கிழங்குகளைப் பறித்தால் பிராமணனுக்கு தண்டனை கிடையாது. விதி 341-_8
29. பிராமணன் தன் சாதியினரைக் காப்பாற்ற ஆயுதம் ஏந்தலாம் விதி 348-_8.
30. மேல் சாதிப் பெண்ணை ஒரு தாழ்ந்த சாதி ஆண் காதலித்தால் அவ னுக்கு மரண தண்டனை வழங்கலாம் விதி 366-_8
31. மக்களிடம் வரி வசூலிக்கும் அரசன் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை என்றால் அரசன் நரகத்திற்குப்போவான் விதி 307-_8
32. கடுமையான குற்றங்களுக்கு ப்ராமணனுக்கு மொட்டை அடித்தால் போதுமானது.ஆனால் பிராமணன் அல்லாதவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.விதி 379-_8.
33. ஒரு பிராமணனைக் கொல்லுவது உலகத்திலேயே மிகக் கொடிய குற்றம். ஆதலால் ஒரு அரசன் பிராமணனைக் கொல்ல மனதாலும் நினைக்கக் கூடாது.விதி 381-_8
34. பிராமணனை அரசன் ஒரு போதும் கொல்லக் கூடாது. பிராமணனின் உடலுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காமல் அவன் சொத்துக் களைப் பறித்துக் கொண்டு நாடு கடத்தவேண்டும் விதி 380-_8.
35. சூத்திரன் உயர்ந்த சாதிப் பெண்ணைக் கற்பழித்தால அவனை எரித்துக் கொல்ல வேண்டும். ஆனால் பிராமணன் மற்ற சாதிப் பெண்ணைக் கற்பழித்தால் 1000 பணம் அபராதம் கட்டினால் போதும். விதி 377-, 385_8
36. ஒரு சூத்திரன் உயர்ந்த வர்ணத் திற்கு அடிமை சேவகம் செய்வற்கே கடவுளினால் படைக்கப்பட்டவன். சூத்திரனின் எஜமான் அவனுக்கு விடுதலை தந்தாலும் அதனை கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார். விதி 410, 413, 414_-8
37. சூத்திரனுக்கு சொத்துரிமை கிடையாது.எனவே சூத்திரனின் (அடிமையின்) சொத்துக்களை, பிராமணன் பறித்துக் கொள்ளலாம். விதி 417-_8.
38. ஒர் அரசன் பிராமணன் சத்தி ரியன் வைசியன் சூத்திரன் ஆகியோ ருக்கு வர்ணாசிரமத்தின்படி தங்கள் கடமைகளைச் செய்ய உத்தரவு இடலாம் விதி 418_-8.
பிரம்மனின் முகத்திலிருந்து பிறந்த தினால் பிராமணர்களுக்கு இந்த உலகமே சொந்தம் என்று மனு சாஸ் திரம் சொன்னாலும் அது நடக்க வில்லை. மேலும் வேதங்கள் கற்ற போதும் நிறைவேறவில்லை. உதாரணம் இராமயணத்தில் சீதையைக் கண்டு பிடிக்க வேதம் பயின்ற இராமன் அனுமன் உதவியை நாடியது ஆகும். ஆனால் பிராமணர்கள் ஆங்கிலக் கல்வியை கற்ற போது உலகெங்கும் சென்று பணி புரிய முடிந்தது.
இடுப்பில் பூணூல் அணிவதுபற்றி மனுதர்மம்:
மனுதர்மத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர்கள் பூணூலை எங்கு அணிய வேண்டும் என்று குறிப் பிடவில்லை. ஆனால் ப்யூக்ளர் என்பவர் தனது மொழிப் பெயர்ப்பில் நிவீக்ஷீபீறீமீ (இடுப்பு கயிறு) என்று குறிப்பிடுகிறார் விதி (43-2) இவ்வாறு மனுதர்ம காலத்தில் கடவுள்களும் பிராமணர்களும் பூணூலை தோளில் தான் அணிந்திருந்தார்கள் என தெரிவிக்கவில்லை பின்னாளில் கடவுள்களும், பிராமணர்களும் எவ் வாறு தங்கள் தோளில் கிராஸ் பெல்ட்டாக அணிய ஆரம்பித்தார்கள் என்பது கேள்விக்கு உரியது: ஆய்வுக்கு உரியது.
பூணூல் அணிவதற்கு முன் பிரா மணச் சிறுவன், தான் தாழ்ந்த மற்றும் பிற்படுத்தப் பட்டவரின் வீட்டில் உணவு அருந்தியதிற்கும் தாய்பால் குடித்தற்கும் கடவுளிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.. ஆனால் கடவுள் பூணூல் அணிவதற்கு முன் யாரிடம் மன்னிப்புக் கேட்டார் என்பது கேள்விக்கு உரியது.
பிராமணர்களின் தோற்றத்திலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள்
1.. தொப்புள் கொடி அறுப்பதற்கு முன் பிராமண குழந்தைக்கு ஜடகர்மன் சடங்கு நடக்கும் ( விதி 29_-2)
2. நல்ல நாளில் நல்ல முகூர்த்த நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் நாமதேயம் நடக்கும் (விதி 28-_2) 3. நல்ல நேரம் பார்த்து நிகழ்ச்சி களை நடத்தும் வழக்கம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக் கிறது. இந்த வழக்கத்தை தந்தைப் பெரியார் மாற்றினார்.
4. மூன்று வயதில் மொட்டை யடித்தல் 4_16 வயதிற்குள் உபநயனம் முடித்தபின் ப்ராமண சிறுவன் செய்ய வேண்டியவை--பூணூல் அணிதல், வில்வ மரக்குச்சியைக் கையில் பிடித்தல் ஆட்டுத் தோல் மான் தோல் எருமை போன்றவைகளின் தோல் ஆகியவற்றை மேலாடையாக அணிதல் கீழாடையாக சணல் கோணிகம்பளிஅல்லது லங் கோடு அணிதல்.
5. முதல்நாள் இரவில் செய்த பாவங் களுக்காக சூரியன் உதிக்கும் போதும் அன்றைய பகலில் செய்த பாவங் களுக்காக சூரியன் மறையும் போதும் சாவித்ரி(காயத்ரி) மந்திரத்தை(யார நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப் போமாக என்ற மந்திரத்தை) உச்சரித் தல். (விதி 102-2)
6. தினமும் அய்ந்து முறை பலிதானம் செய்தல். (இது இஸ்லாமியர் அய்ந்து முறை தொழுகை செய்தல் போன்றது) மற்றும் வேதம் ஓதுதல் காயத்ரி மந்திரம் ஓதுதல் ஆகியவை பிராமணரின் கடமை ஆகும்.
மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் (4)
- பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.
தற்காலத்தில் பிராமணர்கள் ஆங்கி லேயர் போல கல்வி கற்கிறார்கள் மற்றும் உடை அணிகிறார்கள். மனு தர்மத்தில் சொல்லியது போல் உடை அணிவதில்லை மற்றும் குருகுலத்தில் வேதம் கற்கவில்லை. வேதம் கற்க வில்லை என்றால் பிராமணர் ஆக முடியாது என உறுதிபட மனுதர்மம் கூறுகின்றது. இந்நிலையில் வேதம் கற்காத பிராமணர்கள் கோவில்களில் பூசை செய்யலாமா என்பதனை வேதம் கற்றவரகள் முடிவு செய்ய வேண்டும். மேலும் பூசை (உருவ வழிபாடு) செய் வது பற்றியோ மற்றும் கோவில் பற்றியோ மனு தர்மத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. மனுதர்ம காலத்திற்குப்பின் தான் கோவில்கள் தோன்றியிருக்க வேண்டும்.
உலகத் தோற்றம் பற்றி மனுதர்மம்:- மனுதனது நூலில் வர்ணாசிரமத் தின்படி ஒவ்வொருவரின் கடமைகளை சட்ட வடிவாகத் தந்தவர். அவர் உலகம் தோன்றியதுபற்றி முதல் அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். 1. இந்த பிரபஞ்சத்தைப் படைக்கும் சக்தி தானாகத் தோன்றிய ஒன்று. காரண காரியங்களுக்கும் ஐம்புலன் களுக்கும் அப்பாற்பட்டது. --- விதி (7).
2. அந்த சக்தி தன் உடலில் இருந்து நீரைப் படைத்தது. அதில் ஒரு விதையை விதைத்தார். (8) ஆனால் அந்த விதை வளர்வதற்கு தேவையான நிலம் ஆகாயம்காற்று மற்றும் ஒளியும் படைக்கப்படவில்லை. பின்னர் அந்த விதை தங்கமுட்டையாக மாறியது. அதிலிருந்து பிரும்மா வெளிவந்தார். நரா என்றால் தண்ணீர். அந்த தண் ணீரை வீடாகக் (அயணா) கொண் டவன் நாராயணா என்பவன்.(10)
3. பிரம்மன் உருவாக்கிய முட்டை ஒன்று ஓராண்டு கழித்து இரண்டாகப் பிளவுப்பட்டது. அதில் ஒரு பாதி பூமி மறுபாதி சொர்க்கம் இடையில் எட்டுத்திக்குகளுடன் ஆகாயம். (13)
4. பிரம்மனால்படைக்கப்பட்ட பொருள்களுக்குப் பெயர்செயல்பாடுகள் ஆகியவற்றை பிரம்மன் வேதங்களின் படி தந்தான் (21)
5. நெருப்பு காற்று. சூரியனிடமிருந்து மூன்று வேதங்களை (ருக்யஜூர சாம) யாகங்கள் செய்யப் படைத்தான். விதி (23)
அதர்வண வேதம் பிரம்மனால் படைக்கப் படவில்லை. மனிதனால் படைக்கப் பட்டிருக்கலாம்.
6. பின்னர் காலம்கிரகங்கள்ஆறுகள்( நாராயணன் இருக்கும்) கடல்கள். மலைகள் சமவெளிகள் மேடு பள்ளங்க ளை பிரம்மன் உருவாக்கினார். --விதி (24)
7. முதல் யுகத்தில் படைக்கப் பட்ட பொருள்கள் அனைத்தும் அடுத்த யுகத்திலும் சேர்க்கப்பட்டன.(28)
8. உலகம் செழிப்பதற்காகபிரம்மன் தனது வாயிலிருந்து பிராமணனையும தோளில் இருந்து சத்திரிய னையும் தொடையில் இருந்து வைசியனையும் காலில் இருந்து சூத்திரனையும் பிறக்கச் செய்தார். (31)
9. பிரம்மன் தன் உடலை இரண் டாகப் பிளந்து ஒரு பகுதியை ஆணா கவும் மறுபாதியைப் பெண்ணாகவும் படைத்தார். பெண்ணுக்கு விரகதாபம் படைத்தார். (32)
10.பின் பிரம்மன் கீழ்க்கண்டவற்றைப் படைத்தார்---மின்னல் இடி வானவில் எரி நட்சத்திரம் மற்றும் பல (38)
11. பின்னர் பிரம்மன் ---யட்சகர்கள் இராட்சசர்கள் பிசாசுகள் கந்தர்வர்கள் அப்சரஸ்கள் அசுரர்கள் நாகங்கள் பறவைத் தெய்வங்கள் மனித வடிவங்கள் (மனஸ்)---ஆகியவற்றைப் படைத்தார் --விதி (37)
12. பின்னர் பிரம்மன் --கால்நடைகள் மான் கோரப்பல் மிருகங்கள் இராட்ச சர்கள் பிசாசுகள் மற்றும் மனிதர்கள் கருப்பப்பையில் பிறக்கும் பிராணிகள் --ஆகியவற்றைப் படைத்தார் --விதி (43).
13. பிரம்மன் நான்கு யுகங்களைப் படைக்கிறார். அப்போது வெவ்வேறு (நான்கு) யுகங்களுக்கும் வெவ்வேறு வருணங்களுக்கும் வெவ்வேறு கடமைகளை நிர்ணயித்தார். ---விதி (6885)
14. பிரம்மன் படைக்காமல் தானே தோன்றிய மனு தன்னுடைய சாஸ்திரத் தில் சாதி குடும்பம் நாடு வாணிபம் போன்ற அமைப்புகளை உருவாக்கினார்.----- கடைசி விதி (115).
15. பிராமணர்கள் வசிப்பதற்காக திருஷ்டாவதி மற்றும் சரஸ்வதி நதி களுக்கு இடையே ப்ரும்ம வர்த்தம் என்ற நாட்டை கடவுள் படைத்தார் விதி (17-2).
15ஏ. இமயமலைக்கும், விந்திய மலைக்கும் இடையில் மற்றும் மறைந்த சரஸ்வதி நதிக்கும் இடையே உள்ள பகுதி மத்திய தேசம் என அழைக்கப் படுகின்றது விதி 21-2.
15பி. இமயமலைக்கும் விந்தியமலைக் கும் இடையில் மற்றும் கிழக்குக் கடலுக்கும் மேற்குக் கடலுக்கும் இடையே உள்ள பகுதி ஆரியவர்த்தம் ஆகும். விதி (22-2)
16. ஒரு அரசன் என்பவன் எட்டு தெய்வாம்சங்களைக் கொண்டவன் அவை---சந்திரன், அக்னிசூரியன், வருணன் இந்திரன், காற்று, குபேரன், எமன்--- ஆகும் விதி (96-5)
வேதங்களில்இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது என்று கூறப்பட் டுள்ளது. இதற்கு மாறாக முட்டை யிலிருந்து உலகம்ஆகாயம் மற்றும் சொர்க்கம் தோன்றியதாக மனு சாஸ் திரத்தில் கூறப்பட்டுள்ளது ஏற்க தக்கது இல்லை.
டார்வின் கொள்கையின்படி மனிதன் பரிணாம வளர்ச்சி முறையில் குரங்கி லிருந்து பிறந்ததாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால் பிரம்மனின் உடலில் இருந்து ஆணாகவும் பெண் ணாகவும் பின்னர் பிராமணனாகவும் சத்திரியனாகவும் வைசியனாகவும் சூத்திரனாகவும் மனிதர்கள் தோன்றி னார்கள் என்பது விஞ்ஞானத்தின் அடிப்படையிலும் சமூக நீதி அடிப் படையிலும் ஏற்கத்தக்கது இல்லை
இத்தகைய மனுசாஸ்திரத்தின் அடிப்படையில் மன்னர்கள் பலர் ஆட்சி செய்ததினால் இந்தியக் கண்டம் இருண்ட கண்டமாகவே இருந்தது. பிரம்மன் இந்த உலகத்தைப் படைக்கும் முன் எங்கும் இருள் சூழ்ந்து இருந் தது.ஆனால் அதே இருள் மீண்டும் இந்த உலகத்தை மனுசாத்திரத்தால் சூழ்ந்தது.இந்த இருள் நீக்கும் பகல வனாக பகுத்தறிவுக் கொள்கைகள் தற்போது சட்ட வடிவம் பெற்று வரு கின்றன..
மன்னர் ஆட்சிகளும் மனுதர்ம சாஸ்திரமும் (5)
- பொறியாளர் ப. கோவிந்தராசன் B.E., M.B.A., M.A.
மன்னர் ஆட்சிகளும் மனு தர்ம சாஸ்திரமும்:- வேத காலத்திற்குப் பின் பாரசீகர்கள் (கிமு 530) மற்றும் கிரேக்கர்கள் (அலெக்சாண்டர் கிமு 327) இந்தியா மீதுபடை எடுத்து வந்ததாலும் கிமு ஆறாம் நூற்றாண்டில் புத்த சமண மதங்கள் தோன்றியதாலும் ஆரியர் களின் வேத மதத்தில் பெரும் மாற் றங்கள் ஏற்பட்டன. மவுரியர்களின் அசோகப் பேரரசு (கிமு 268 கிமு232) புத்த மதத்தையும் பாலி மொழியையும் பயன்படுத்தி நிர்வாகத்தில் செய்த மாற்றங்களும் வேத மதத்தில் மாற் றங்களை ஏற்படுத்தின. வேத மதத்தில் பல புதிய கடவுள்கள் உருவாக்கப்பட் டனர். இலக்குமி, விஷ்ணு (வேத காலத்தில் விஷ்ணு என்ற சொல் சூரி யனைக் குறிக்கும்) சிவன், சுப்ரமண்யம் போன்ற கடவுள்கள் உருவாக்கப்பட் டனர். மேலும் விஷ்ணு மனிதனாக அவதரித்த கதைகள் எழுதப்பட்டன. மொத்தம் உள்ள 10 அவதாரங்களில் முக்கியமானவை--- பலராமன் (6) இராமன் (7) கிருஷ்ணன் (8ஏ) பல ராமன் (8பி) புத்தர் (9) கல்கி(10) ஆகும். (ஆதாரம் இந்து மத சமயக் கோட் பாடுகள் என்ற நூல். பதிப்பு இராம கிருஷ்ண மடம்). இவ்வாறு பல நாடு களில் பரவியிருந்த புத்த மதத்தை நிறுவிய புத்தரை விஷ்ணுவின் 9ஆவது அவதாரமாக சேர்த்த பின் வேத மதம் புத்துயிர் பெற்றது. புதிய வைதிக அரசு கள் தோன்றின. இந்த காலகட்டத்தில் கிமு100 கிமு200இல் மனு தர்மம் நூல் எழுதப்பட்டது. இந்த மனு உலகம் தோன்றிய போது சுயம்புவாக தோன்றிய முதல் மனிதன் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலே சொல்லப்பட்ட காரணங்களின் அடிப்படையில் பல அரசுகள் கிமு 185 முதல் கி.பி. 1857 வரை உருவாகின. அத்தகைய அரசு களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
1. புஷ்ய மித்ர சுங்கன் முதல் சுங்க வம்சம் (கிமு 185- கிபி 73) 2. சிமுகர்கள் 3. இந்தோ பாரத்தியர்கள் (கிபி 21-_130) 3. ஏ. மேற்கு சத்ரபதிகள் (35-_405) 4. குஷானர்கள் ( கிபி 60-_240) 5. சசானியர்கள் (230_360) 6. வகடகர்கள் (250-_57) 7. களப்பிரர்கள் (250-_600) 8. குப்தர்கள் (280_-550) 9. கடம்பர்கள் (345_-525) 10. மேற்கு கங்கர்கள் (350-_1000) 11. விஷ்ணு குண்டினர்கள் (420-_624) 12. சாளுக்கியர்கள் (543-_743) 13. உறர்ஷர்கள் (590-_647) 14. பால வம்சம் (750_-1154) 15. யாதவர்கள் (850-_1334) 16.சோலங்கிகள் (942-_1244) 17. உறாய்சலர்கள் (1040_-1346) 18. காகத் தியர்கள் (1083_-1323) 19.பல்லவர்கள் (575-_893) 20. சோழர்கள் (850_-1279) (டில்லியில் சுல்தான்கள் ஆட்சி தொடங்கியது) 21. விசய நகரமன்னர்கள் (1336-_1550) 22. நாயக்கர்கள் (1530_-1736) 23. மராட்டியர்கள் (1550-_1856).
இந்த மன்னர்களில் சிலர் குறுநில மன்னர்கள் சிலர் வைதிக மதத்துடன் புத்த சமண மதங்களையும் ஆதரித்தனர். சிலர் புத்த சமண மதங்களை மிகவும் கடுமையாக எதிர்த்தனர். உதாரணம் பாண்டிய மன்னன் காலத்தில் திருஞான சம்பந்தரால் ஆயிரக்கணக்கான சமணர் களை கழுவேற்றியது ஆகும். ஆதி சங்கரர் தர்க்க வாதத்தில் தோற்ற புத்த சமணர்களை கொடுமைப்படுத்தியதும் ஆகும். ஆனால் எந்த மன்னரும் வைதிக மதத்தை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குப்தர்கள் காலத்திற்கு முன்பே வைதிக மதம் மறுமலர்ச்சி துவங்கிவிட்டது என்பதையும் அறியலாம்.
மனுசாஸ்திரத்தைப் பின்பற்றிய மன்னர்கள் பிராமணர்களுக்குப் பொன் னும் மணியும் ஆடை ஆபரணங்களும் நிலங்கள் வீடுகள் தானமாக அளித் தார்கள். மன்னர் அளித்த தானங்களை செப்பேடுகளில் கல்வெட்டுக்களில் கீழ்கண்டவாறு பொறித்தார்கள். இந்த சொத்துக்களை பிராமணர்கள் சூரிய சந்திரர்கள் உள்ளவரை அனுபவிக்க வேண்டியது.இந்த சொத்துக்களை அபகரிப்பவர்கள் ஏழு ஜென்மங்களிலும் சாக்கடைப் புழுக்களாகப் பிறப்பார்கள் மற்றும் நரகத்திற்கும் போவார்கள். இவ்வாறு தானமளித்த மன்னர்கள் இறந்த பின் அல்லது வேறு அரசுகள் அமைந்த பின்னரும் பிராமணர்கள் சொத்துக்களை அனுபவித்து வந் தார்கள். இது தற்கால அரசுகளினால் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
மேலும் வட இந்தியப் பிராமணர் களை (ஆரியவர்த்தப் பிராமணர்களை) விட பஞ்சமதிராவிட பிராமணர்கள் (குஜராத் மகாராட்டிரம்ஆந்திரா கர்நாடகம் மற்றும் தமிழ்நாடும் கேரளமும் இணைந்த பகுதியில் உள்ளவர்கள்) மன்னர்களால் தனியே அக்ரகாரம் என்ற பகுதியில் குடிய மர்த்தப்பட்டனர் (அகரம் என்றால் பார்ப்பனசேரி என்று பொருள்)
முடிவுரை
இந்த உலகம் இயங்குவது மதச் சடங்குகளாலும் அர்ச்சகர்களாலும் மட்டும் இல்லை. இதை விளக்கும் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.
1. பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்பதால் கடவுளின் காட்சிக் கிடைத்துவிடும் என்றால் வவ்வால் களுக்கும் குரங்குகளுக்கும் ஏன் கடவுளின் காட்சி கிட்டவில்லை?
2.புனித நீர்நிலைகளில் நீராடுவதால் கடவுளைக் காணலாம் என்றால் மீன்களால் ஏன் கடவுளைக் காண முடியவில்லை?
3.மனைவியைத் துறப்பதால் கடவுளை அடையலாம் என்றால் அலிகளால் ஏன் கடவுளை அடைய முடியவில்லை?
இதைச் சொல்லுபவர் தந்தைப் பெரியாரின் நாத்திக இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல. ஆனால் இந்த பாடலைப் பாடியவர் பக்தை மீராபாய் ஆவார். மேலும் அவர் கடவுளை அடைய பக்தி மார்க்கமே சிறந்தது என்கிறார். ஆனால் பக்தி மார்க்கத் தினால் சூத்திரப்பட்டத்தினால் ஏற் படும் இழிவுகள் நீங்குமா? 4.சுங்க வம்ச ஆட்சி முதல் நாயக்கர்கள் காலம் (சுமார் 2000 ஆண்டுகள்) வரை தொடர்ந்த மனுதர்ம ஆட்சிகளினால் ஏற்பட்ட மிகப் பெரும் பாதிப்புக்களை நீக்க ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நடந்த மாகாண தேர்தலில் வெற்றி பெற்ற நீதிக்கட்சியினரும் மற்றவர்களும் சூத்திரர்கள் கல்வி கற்கவும் ஏழை மாணவர்கள் மதியஉணவு பெறவும் மருத்துவப் படிப்புக்கு சமஸ்கிருதப் படிப்புத் தேவையில்லை எனவும் தேவதாசி முறையை ஒழிக்கவும் இந்துக் கோவில்களை நிர்வகிப்பதில் சூத் திரர்கள் பங்கு பெற இந்து சமய அறநிலையத்துறையை அமைக்கவும் ஆணைகள் பிறப்பித்தனர்.
5. மாறாக மாகாண தேர்தலில் வெற்றிப்பெற்ற இராசாசி சூத்திரர்கள் படித்து வந்த பல பள்ளிகளை மூடினார். புன்னர் 1952-ல் ஆட்சி அமைத்தபோது சூத்திரர்களின் பள்ளிப் படிப்பை பாதிக்கும் வகையில் குலக் கல்வி முறையைக் கொண்டு வந்தார் இதனை முறியடிக்க திராவிட இயக்கங் கள் எதிர்த்துப் போராடின. இதன் விளைவாக இராசாசி பதவி விலகினார் பச்சைத் தமிழர் காமராசர் பதவி ஏற்றார்.
6.மாகாணத் தேர்தலில் வெற்றிப் பெற்ற நீதிக்கட்சி ஆட்சியைத் தொடர்ந்து 1967 முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடை பெறுகின்றது.
7.மாகாண தேரதலில் வெற்றிப் பெற்ற காங்கிரஸ் முஸ்லீம் லீக் கட்சிகள்தான் பின்னர் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் பெற காரணமாயிருந்தன.
8. மதத்தாலும் மொழியாலும் அடிமைப்படுத்தபட்ட மக்களின் இழிவைப் போக்கும் சக்தி மக்களிடம் தான் உள்ளது. இதுதான் இலங்கையின் மாகாண தேர்தலில் நடந்துள்ளது.
9. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையைக் கடைப்பிடித்ததால் தான் இந்தியாவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. மனுதர்ம ஆட்சி அல்லது இந்துத்துவா ஆட்சி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எதிரானது மற்றும் முன்னேற்றத்திற்கு எதிரானது. மேலும்நாடு முழுவதும் ஒரே மதம் ஒரே மொழி என்ற கொள்கையால் இந்தியாவில் இராஜ பக்சேக்கள் தோன்ற வாய்ப்பு உண்டு. இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவிற்குப் பாடமாக அமையும்.
10. வீரமாமுனிவர் தனது சதுர கராதியில் பண்டை காலத்தில் இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சீனம் யவனம் சிங்களம் போன்ற தேசங்களும் அடங்கும் எனக் கூறு கின்றார். தற்போது சிங்களவர்கள் ஆளும் இலங்கையில் மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. ஏனென்றால் 1972-ல் சிறீமாவோ காலத்தில் ஒற்றைஅரசு மட்டும் நாட்டை ஆளும் வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப் பட்டது. இதனால் மாகாணங்களில் பொம்மை அரசுகளே ஆட்சிக்கு வந்தன. இதே நிலை தான் இந்தியாவில் மனுதர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் மய்ய அரசில் ஒரு மத ஆட்சி அமையும் பொழுது ஏற்படும் என உணரலாம்.
(நிறைவு)
-விடுதலை ஞா.ம.,14.12.13