ஞாயிறு, 7 மே, 2023

வேதங்கள் - பேதங்கள் -2

  

 சு.அறிவுக்கரசு

s5

மூன்று அக்னிகளாம்புவி அக்னிபர அக்னிநடு அக்னி என மூன்றுபுவி அக்னி மனிதர் மூட்டுவதுபர அக்னியால் மனித உயிர் இறக்குமாம்மூன்றாவது அக்னியால் தான் மழை பெய்கிறதாம்எவ்வளவு முட்டாள் தனமான புளுகுகள் என்பதைக் கவனிக்கவும்புவி அக்னியில் ஜாதவேதஸன்வைசுவாநரன்இரவு - பகல்குதிரைபறவைரதம்டமாரம்வில்நுனிஇருபருவம்இந்திரன்மருந்துசோமன்பர்ஜன்யன்விஷ்ணு முதலிய குணங்களைக் காணலாம் என்கிறார்கள்திரவினோதஸன்தனூன பாதன்நரஸாம்ஸன்பவமானன்ஜாதவேதஸன் எனப் பெயர்கள் உண்டு என்கிறார்கள்பர அக்னி திரவியம் தருவதால் திரவினோதஸன் எனவும் பரம் எனும் தேவ அக்னியின் மகனானதால் தனூனபதன் எனவும் நரஸாம்ஸன் எனவும் பெயர்களாம்பிறந்தவுடன் சகலமும் தெரிந்தவன் என்பதால் ஜாதவேதஸன் என்றும் பெயராம்நடு அக்னி என்பது இந்திரனாம்இடிமுழக்கம்ஈரத்தைப் பற்றுவதுவிருத்திரனைக் கொல்வது போன்ற பயங்கரச் செயல்களைச் செய்வது இதன் வேலையாம்இவனுக்க 26 பெயர்களாம்வாயுவருணன்ருத்ரன்பிரஹஸ்பதிவிஸ்வகர்மன்ஸரஸ்வதி போன்றவை உள்பட பெயர்களாம்.

அக்னி என்றால் நெருப்புஅதை மூன்றாக்கிமுப்பதுக்கு மேற்பட்ட பெயர்கள் வைத்தது அறிவற்ற செயல்தானேஆண் பெயரும்பெண் பெயரும் சேர்த்தே வைத்தது முட்டாள்தனமல்லவாபவுதீகப் பொருளை மனிதன் போலவே பாவித்துக் கல்யாணம்கருமாதி செய்வது கடைந்தெடுத்த அறிவிலித்தனமல்லவாஅக்னி தேவனாம்வருணன் பகவானாம்வாயுவும் பகவானாம்கடவுள் அல்லவாம்மிகைப்படுத்தப்பட்ட சக்தி (Personified)  என்று அரவிந்தகோஷ் விளக்கம் தந்தார்இவர்களின் பொய்ப் பெருமைகளுக்கு அளவே இல்லை. “சதவிம்ச பிரமாணம்“ என்றொரு நூலாம்பூமிவானம்கடல் போன்றவற்றை ஆய்ந்து எழுதப்பட்ட நூலாம்ஆனால் கைவசம் இல்லையாம்இருக்கும் இடமும் தெரியாதாம்பின் பெயர் மட்டும் எப்படித் தெரிந்ததாம்கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு என்பார்கள்இவர்கள் முட்டாள்கள்இவர்களின் புளுகுக்கு அல்பாயுசுதான்.

சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளன என்றும் அது தமஸ் என்றும் ஒளிப்பகுதியை ஜ்யோதி என்றும் வேதம் கூறுகிறதுஎந்தவித விஞ்ஞான அறிவும் பெற்றிராத நிலையில் இவர்கள் கூறுவதற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் கிடையாதுகருந்துளை (Black Hole)என்று அறிவியலில் உண்டுஇந்தப் பிரபஞ்சம் எனப்படும் பகுதி 4 விழுக்காடு என்றால்கருந்துளைப் பகுதி 96 விழுக்காடு எனுமளவுக்கு மிகப் பெரும்பகுதியை கருந்துளை என அறிவியல் அழைக்கிறதுஏதும் அறியாத ரிஷிகள் தமஸூக்கும் ஜோதிக்கும் இடையில் “பரமாத்மா” இருக்கிறது என்று கதையளக்கிறார்கள்பரமாத்மா என்றால் கடவுளாம்அது படைத்த மனிதர்கள் “ஜீவாத்மாவாம்அதிதியும் தக்ஷனும் இணைந்து அனேக தேவன்களையும் தேவதைகளையும் “உற்பத்தி” செய்தார்களாம்அக்னி அப்படி உருவான முதல் தேவனாம்சோமன் அக்னியுடன் பிறந்த இரட்டைகளில் மற்றொன்றாம். (அக்னிதக்ஷனுடன் அதிதியில் கலந்தபோது 13 ஆதித்யர்கள் தோன்றினார்களாம்இவர்கள் எல்லோரும் உலகுக்கு ஒளி தருகிறார்களாம்இப்படியெல்லாம் பிதற்றியவன் அரவிந்தகோஷ்வங்காளப் பார்ப்பான்வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்து புதுச்சேரியில் பதுங்கிக் கொண்ட வீரன்இதேபோல் தப்பித்து வந்து பதுங்கிக் கொண்ட சுப்ரமணிய பாரதியின் நண்பன்இந்தக் கோழைகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் என்கிறார்கள் ஹிந்துக்கள்ஜாதிப் பாசம்தான் காரணம்.

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள்மொத்தம் 1017 சூக்தங்கள்இவற்றை அறிந்தவர்கள் 15 ரிஷிகள்ஒருவன் அறிந்ததை மற்றவன் அறிய மாட்டான்முழுவதும் அறிந்தவன் ஒருவனும் இல்லை.

ரிக்வேதக் குழப்பங்களில் சிறப்பான குழப்பம் இதுதான். “தேவர்கள் உலகங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்படைப்பு எப்படி என்பதை யார் அறிவான்அவன்தான் படைத்தானாஇல்லையாஎல்லாவற்றையும் அவனே அறிவான்ஒரு வேளை அவனும் அறியாதவனாஅவன் அறிந்தும் அறியாதது போல இருக்கிறானா?” என்ன விளங்கியதுஉங்களுக்குஇதனால்தான் கவிஞர் கண்ணதாசன் எழுதினார்படித்தால் விளங்குவது சித்தாந்தம்விளங்காதது வேதாந்தம் என்றார்.

மங்கள காரியங்களாம்சுப காரியங்களாம்அவற்றைச் செய்யும்போது மங்களகரமான மந்த்ரங்களைச் சொல்ல வேண்டுமாம்அவை சுவஸ்தி மந்த்ரங்களாம்கூடுதலாகச் சொல்லப்படும் மங்கள மந்த்ரங்களும் சில உண்டாம்அவை சாந்தி மந்த்ரங்களாம்.

அக்னிம் ஈளே புரோஹிதம் யக்ஞஸ்ய “என்று ரிக்வேதமுதல் மண்டலத்தின் முதல் பாடல் தொடங்கும்நெருப்புதான் எல்லாமே என்பது தான் ஆரியர் கொள்கைஅதை வணங்குகிறான் முதலில். “மது சந்தன விஸ்வாமித்ரன்” என்பது அடுத்த பாடல்வாயு பகவான் வணக்கம்ஸோமபானம் தயார் செய்துள்ளோம்குடிப்பதற்கு நீயும் இந்திரனும் வருணனும் வாருங்கள்யாகத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்று அழைக்கிறான்சோமபானம் மதுபானத்தில் ஒரு வகை இக்கால பிராந்திவிஸ்கிரம்ஜின் போன்ற ஒரு வகை இதைக் குடிக்கவா என்று பகவானைக் கூப்பிடுகிறானென்றால் ஹிந்து பகவான்கள் குடிவெறியர்கள் அல்லவா?

சோமபானத்தைத் தர்ப்பைப் புல்லில் நனைத்து வைத்திருக்கிறேன்வா என்று மூன்றாம் பாடல் இந்திரனைஅஸ்வினி தேவர்களை அழைக்கிறார் அத்துடன் அல்லாமல் கல்விக்கான பெண் கடவுள் ஸரஸ்வதியை அழைக்கிறான். (ஸரஸ்வதிக்கும் குடிப்பழக்கம் உண்டோ?)

அஸ்வினி தேவர்களை அழைக்கும்போதுமூன்று முறை வரச்சொல்கிறான்அவர்களின் தேர் பெரியதாம்தேருக்கு மூன்று சக்கரங்களாம். (இதை எழுதும்போதுவடுவூர் நாராயணன் அதனை மூன்று சக்கரங்கள் கொண்ட ஆட்டோ ரிக்ஷாவுடன் ஒப்பிட்டு எழுதிவிட்டு அந்தத் தொழில்நுட்பத்தை மேலை நாட்டார் எடுத்துச் சென்றுவிட்டதாக அங்கலாய்க்கிறார்இதே மாதிரிதான் ஆரியப்புளுகுகள்சூரியனின் தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன என்கிறார்கள்தேரோட்டிக்கு ஒரு கால் மட்டுமே என்கிறார்கள்அறிவியலின்படி சூரியன் நிலையாக ஒரே இடத்தில் சுழல்கிறதுவேதப் புளுகு எப்படி?) இந்த அஸ்வினி தேவர்கள்இறக்கை முளைத்த குதிரைகளாம்வான்வழியே 800 முதல் 1500 கி.மீவேகத்தில் பறக்கக் கூடிறயவைகளாம்இவை அறுவை மருத்துவர்களாம்தலையைக்கூட மாற்றி அறுவை மருத்துவம் செய்பவர்களாம்இதயமாற்று போல தலை மாற்றாம். (பிள்ளையார் தலைக்குப் பதில் யானைத் தலையை வைத்தது யார்இவர்கள் அல்லர்.

இப்படிப்பட்ட அபத்தங்கள் நிறையஅக்னிவருணன்இந்திரன்ஸரஸ்வதிருத்திரன்போற்றித்துதிப் பாடல்கள் இரண்டாம் மண்டலம் முழுக்க நிறைந்துள்ளனமூன்றாம் நான்காம் மண்டலங்களிலும் அதே பிதற்றல்களேமூன்று கடவுள்களும் முப்பது தேவர்களும் கொண்டாடப்படுகின்றனமீதி மண்டலங்களிலும் இதே மாதிரி அபத்தங்கள்அபஸ்வரங்கள்நம் ஊர்ப்பார்ப்பனர்கள் ரிக்வேதத்தில் வானியலைப் பற்றிய தெளிவான அறிவு இருந்திருப்பதாகக் கூறுகிறார்கள்விளக்க வேண்டாவாசந்திர மண்டலமும் அதனுள் அடங்கிய நட்சத்திரக் கூட்டமும் புதிய தகவல்களை அளிக்கின்றனவாம்சூரியக் குடும்பம் என்பதுதான் அறிவியல்இவர்களின் சந்திரன் குருபத்தினி தாரா மீது மையல் கொண்டு சாபம் பெற்று தேய்ந்து வளரும் கதையின் கதாநாயகன்எதை வானியல் அறிவு என்று புளுகுகிறார்கள்எல்லாமே அபத்தக் களஞ்சியம்.

இவை போதாவென்று 30 மந்த்ரங்கள் கடைசியில் உள்ளனவாம்அவற்றில் ஒன்றில் கனவுகளின் தந்தை எமன் என்கிறதுஅதிபயங்கரமான கெட்ட கனவுகளைக் காண்பவர்கள் தூக்கத்திலேயே இறந்து விடுவார்களாம்யமலோகத்தில் தோன்றும் கனவுகள் பூமியில் இறங்கி மனிதனுக்குள் நுழைகிறதாம்கனவு மனிதனைக் கொன்று விடலாமாம்எமன்தான் பூமியில் பிறந்த முதல் மனிதன் என்கிறது வேதம்முதலில் இறந்தவனும் அவன்தானாம்இறந்து வானுலகம் போனபோது எமலோகம் காலியாக இருந்ததால் அவன் மன்னன் ஆனானாம்செத்துப் போனவர்களுக்கெல்லாம் (பித்ருக்கள்அவன் அரசனாம்பித்ருக்கள் அவனது பிரஜைகளாம்க்ளைமாக்ஸ் மங்கலமாக முடிகிறதாம்.

தொடரும்....

 

சூரியைக்கும் ஸோமனுக்கும் விவாஹம் நடந்ததும் முடிகிறதுசூரியைசூரியனின் (ஸவிதாவின்மகள்ஸோமன் நட்சத்திரங்களின் நடுவே இருக்கிறான்ஸோமன் என்பது பிராந்தியோவிஸ்கியோதிருமண நாளில் யாரும் ஸோமனைக் குடிப்பது இல்லையாம்அஸ்வினிகள் மாப்பிள்ளைத் தோழர்களாம்தெய்வத் திருமணத்திற்கு எல்லாத்தேவர்களும் வாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். “தஸாஸ்யம் புத்ரா நாதேஹி பதிம் ஏகாதசம் க்ருதி” என்று வாழ்த்துகிறார்கள்இந்திரனேமணமகளுக்கும் பத்துப் பிள்ளைகளை அளித்திடுஅவளின் கணவனை அவள் பதினொன்றாம் மகனாக ஆக்கிக் கொள்வான் என வாழ்த்துகிறார்கள்பத்தும் புதல்வர்களாம்புதல்வியே வேண்டாமாம்என்ன புத்திஆண் ஆதிக்க ஆரியச் சமுதாயப் புத்தி!

10552 பாடல்களிலும் ஒரே விதமான செய்திகள்தான்சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கொண்டு... பாடியவனுக்குச் சலிப்பு தட்டவில்லைபடிக்கும் நமக்குத்தான்...

ரிக் வேதத்திற்கான உபநிஷத்அய்தரேய உபநிஷத் என்பதாம்உலகப் படைப்பு பற்றி இந்த உபநிஷத் பேசுகிறதாம்உலகம் படைக்கப்பட்டதாஉருவானதாமதவாதிகளும்மதநூல்களும் மட்டுமே படைப்பு என்கின்றனஅறிவியலோபரிணாமம் என்கிறதுஎண்பித்திருக்கிறதுஇந்த உபநிஷத் ஒரேயடியாக நான்கு லோகங்கள் படைக்கப்பட்டதாகப் புளுகுகிறது. 1) அம்பலோகம் - சொர்க்கத்திற்கு மேலே உள்ளதாம். 2) மரீசிலோகம் - ஒளி நிறைந்த இடைவெளியாம்மரீசிகா என்றால் கானல் நீர். 3) மர அல்லது மர்த்ய லோகம் - பூமியைக் குறிப்பது 4) ஆபலோகம் - பூமிக்குக் கீழே உள்ளதாம்.

கடவுள் பிரம்மதேவனைப் பற்றி நினைத்ததாம்பிரம்மதேவனின் வாய் முட்டை பிளப்பது போலப் பிளந்ததாம்வாயிலிருந்து பேச்சு வந்ததாம்அதிலிருந்து நெருப்பு வந்ததாம்மூக்கு தோன்றியதாம் மூக்குத் துவாரங்களிலிருந்து மூச்சு வந்ததாம்மூச்சிலிருந்து காற்று தோன்றியதாம்கண்கள் தோன்றினபார்வையிலிருந்து சூரியன் தோன்றினானாம்காதுகள் தோன்றினதிசைகள் தோன்றினதோல் உண்டாகியதுதோல் பிளந்துமயிர்கள் தோன்றினமயிரிலிருந்து செடிகொடிகளும் மரங்களும் இதயத்தில் துவாரங்களும் உண்டாயினஇதயத்திலிருந்து மனம் என்ற தனியான பகுதி உருவாகியதாம். (மனம் என்பதற்கும் இதயத்திற்கும் தொடர்பில்லைமூளையின் செயல்பாடுகளே மனம் என்கிறது அறிவியல்மனத்திலிருந்து சந்திரன் தோன்றியதாம்தொப்புள் தோன்றியதாம்அதிலிருந்து அபானன்அபானனிலிருந்து மரணம் தோன்றியதாம்குறி தோன்றியதாம்பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்துவிலிருந்து தண்ணீரும் உண்டாயிற்றாம்உபநிஷத்தின் உடற்கூறு வினோதமாக உள்ளதேமருத்துவ அறிவியலுக்கும் விரோதமாக உள்ளதே!

மனித உடம்பு 11 வாசல்களை உடையதாம்கண்கள் 2, காதுகள் 2, நாசித்துளைகள் 2, வாய்தொப்புள்குறிகுதமபிரம்மரந்திரம் என்பவையாம்இதயத்தின் நாடிகள் 101. அவற்றுள் ஒன்று உச்சந்தலையைப் பிளந்து செல்கிறதாம்அதன் வழியே ஆவியை விடுபவன்மரணமற்ற நிலையை அடைகிறானாம்வேறு வழிகளில் இறப்பவன் மறுபிறவியை அடைகிறானாம்ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரம் வழியே உயிரை வெளியேற்ற முடியுமாம்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு இறையுணர்வு அதிகமாம்கருப்பையிலிருந்து வெளியே வந்து க்வக்வக்வ என்று அழுகிறதுசமஸ்கிருதத்தில் க்வ என்றால் எங்கே என்று பொருளாம்பூமிக்கு வந்ததும் குழந்தை கடவுளை எங்கே என்று தேடுகிறதாம்முட்டாள் தனமான உளறல்அல்லவா?

இதுதான் ரிக் வேதம்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார் விமர்சிக்கவில்லையா!


 கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து 
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா? இது
போலத்தானே
இஸ்லாம் மதம் என்பதும்
சொல்லப்படுகிறது? முகம்மது
கடவுளுக்கு (கடவுளால்
அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத்
தூதர் எதற்கு? குரான் கடவுளால்
தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட
செய்தியாம்.கடவுள் மக்களுக்குச்
செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு
மனிதர் (தூதர்) வாயினால் தான்
சொல்லச்
செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா
மனிதருக்கும் ஏககாலத்தில்
தெரியும்படிச்
செய்ய முடியாதா? உலகில் மனிதன்
தோன்றி எத்தனையோ இலட்சம்
ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு
சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன்
சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன்
தெரிவிக்கவில்லை? முகமது நபி
என்பதை
ஏற்றுக் கொண்டு, அவரை
நம்பினவர்களுக்குத்தானே குரான்?
மற்றவர்கள் அதை
ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப்
பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள்
சொல்,
அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு
மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும்
எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி
இருக்கிறது! இதுதான் கடவுள்
தன்மையா?
இவையெல்லாம் மனிதத் தன்மையா?
மனிதக் கற்பனையா?
தெய்வத்தன்மையா? ஒரு
சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை
வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-62

சனி, 15 ஏப்ரல், 2023

கீதை – மாணவர்கள் கற்க வேண்டிய ஒன்றா?

 


மே 1-15,2022

கவிமாமணி இரா.குடந்தையான்

மாணவர்களை மூளைச் சலவை செய்து, மதவுணர்வையூட்டி, பா.ஜ.க. அரசுகள் தற்போது முயன்று மடமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

மத்தியப் பிரதேச அரசு 2011இல் செய்த அந்தத் திருப்பணியைத்தான், இன்று கருநாடக, குஜராத் அரசுகள் செய்ய முன்வந்துள்ளன. பகவத் கீதை நீதி போதனைகளைச் சொல்லும் நூலல்ல. ஆன்மா, கர்மா, வர்ணாசிரமம், உலகத் தோற்றம், படைப்பு பற்றிப் பேசும் தத்துவ நூல்.  மாணவர்களில் அறிவு வளர்ச்சிக்கு கீதை எந்த அளவில் பயன்படும் என்று தெரியவில்லை.

ஒரு நூலைப் பாடமாக வைக்க அரசு முடிவு செய்தால், அரசு கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பொருத்தமான பதிலைச் சொல்ல முன்வர வேண்டும்.

1.            நூல் எழுதப்பட்ட காலம் எது?

2.            நூலாசிரியன் யார்? அவனது கல்வித் தகுதி என்ன?

3.            மாணவர்களுக்கு நூல் மூலம் சொல்லப் போகும் செய்தி என்ன? படிப்பினை என்ன?

4.            நூல் மாணவர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நூலின் காலம் எது?: பகவத் கீதை கிருஷ்ணனால் அர்ச்சுனனுக்குச் சொல்லப்பட்ட 700 ஈரடிப் பாடல்களைக் கொண்ட நூல். மகாபாரதம் கி.மு.850இல் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்கள்.

ஆனால், கீதையின் எழுத்து நடை, சொற் பயன்பாடுகள், அமைப்பு முறை இவை வைத்துப் பார்க்கும்போது அது கி.பி.300இல் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“சேத்திரம் என்பது யாது? அது எத்தன்மையது? என்பது பற்றி ரிஷிகள் வேதத்தில் பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். பிரம்ம சூத்திரத்திலும், உபநிடதங்களிலும் ஏதுக்களை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள்.’’ (‘கீதை’ -_ 13:34)

கீதையில் பிரம்ம சூத்திரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்ம சூத்திரம் எழுதப்பட்ட காலம் கி.மு.600. கீதை கி.மு.850இல் சொல்லப்பட்டிருக்கு மானால் 250 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்படும் பிரம்ம சூத்திரத்தைப் பற்றி கிருஷ்ணனுக்கு முன்னதாக எப்படித் தெரியும்? எனவே, கீதை மகாபாரத காலத்தில் எழுதப்படவில்லை.

ஆசிரியன் யார்? அவனது ஒழுக்கம் என்ன?

வரலாற்றில் 4 கிருஷ்ணர்கள் உள்ளனர்.

1.            கி.மு.1200இல் எழுதப்பட்ட ரிக்வேதம் பழங்குடி இனத்தவனான கருப்பன், யது குல கிருஷ்ணனைப் பற்றிக் கூறுகிறது. இவனுக்கு இந்திரன் எதிரி.

2.            கி.மு.600இல் எழுதப்பட்ட சாந்தோக்கிய உபநிடதத்தில் தேவகியின் மைந்தனாகச் சொல்லப்படும் கிருஷ்ணன் ஆங்கிரச முனிவரின் சீடன். ஆனால் அவதாரமல்ல.

3.            கி.மு.850இல் பாண்டவர்கள் காண்டவா காடுகளை எரித்து நகராக்கியபோது அவர்களுக்குத் துணையாக _ நண்பனாக இருந்தவன் ஒரு கிருஷ்ணன்.

4.            இதைத் தவிர கிரேக்க நாட்டில் ஹிராக்லிஸ் என்ற கிருஷ்ணன் இருந்திருக்கிறான். இவனும் காளிங்க பாம்பைக் கொன்றவன். சூரியனின் சாபத்தால் எரிந்து கருப்பானவன்.

இந்த நால்வரில் பாண்டவர்களின் நண்பனாய் இருந்தவனையே கீதாசாரியன் என்று எடுத்துக் கொண்டால் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கோ, நீதி போதனை செய்வதற்கோ அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?

“கோபியர் புடவைகளைக் கைப்பற்றி விளையாடி, பல்வேறு பெண்களுடன் காதல் களியாட்டங்களில் ஈடுபட்டவனும், தன் சொந்த மாமனையே கொலை செய்தவனும், மகாபாரதத்தில் கபட யோசனைகளை அள்ளி வீசியவனும் ஆகிய கிருஷ்ணன் எந்த ஒரு ஒழுக்கத்துக்கும் தகுதி உடையவனாக இல்லை. அவனுக்கு 16,108 மனைவிகள் இருந்தனர்’’ என்கிறார் டி.டி.கோசாம்பி (நூல்: பண்டைய இந்தியா)

கீதையின் எட்டாவது அத்தியாயத்தில் இரவு, பகல், உத்திராயணம், தடசிணாயனம் என்பது பற்றி பேசுகிறான்.

பூமி 23.5 டிகிரி சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றி வருவதால் வடக்கு நோக்கி நகர்வது போலவும் (உத்திராயணம்), தெற்கு நோக்கி நகருவது (தட்சிணாயனம்) போலவும் ஒரு மாயத் தோற்றம் தெரிகிறது. இதைத் தவிர சூரியன் உதிப்பதுமில்லை. மறைவதும் இல்லை என்பதே அறிவியல் உண்மை!

“சித்தத்தை அடக்கியாண்ட முனிவனின் யோகநிலை காற்று இல்லாத இடத்தில் கொழுந்து விட்டெரியும் விளக்கு போன்றது’’ (கீதை 18:67) என்கிறான் கிருஷ்ணன். காற்று இல்லாவிட்டால் விளக்கே எரியாது எனும் அறிவியலுக்கு எதிரானது கீதை. அப்படிப்பட்ட கீதை பாடநூலா?

இந்த முட்டாள்தனமான வாசகங்கள் நிரம்பிய கீதையைப் படித்து மாணவர்கள் பாழாய்ப் போக வேண்டுமா?

“பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திரர்களுக்கென்று வகுக்கப்பட்ட கர்மங்கள் அவரவர் சுபாவத்தில் தோன்றும் குணங்களை வைத்தே பார்க்கப்படுகிறது. இதில் சூத்திரர்களின் பணி ஊழியம் புரிவதே; அது சூத்திர இயல்பும் காரியமும் ஆகும். (கீதை 18:4)

குணங்களின்படி பிரிவு என்றால், அது பரம்பரையாக எப்படி சாத்தியமாகும்? அப்பனுக்குள்ள குணம் பிள்ளைக்கோ, பிள்ளைக்குள்ள குணம் பேரக்குழந்தைக்கோ வராதே! எனவே, பிறப்பின் அடிப்படையில் பேதம் என்பது மனித தர்மத்திற்கு எதிர் அல்லவா?

இப்படி பிறப்பாலேயே பேதங்களைக் கற்பிக்கும் பகவத் கீதையை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கும் அரசு, ஜாதிப் பாகுபாடுகளை வளர்க்கவும், ஆணவக் கொலைகளைப் பெருக்கவும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?

“பகவத் கீதை மத நூல் அல்ல. அது ஒரு வாழும் நெறி, நன்நெறியைப் போதிக்கிறது. சமூக நீதியைக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது’’ என்றெல்லாம் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்குமானால் நீதிபதிகளின் தகுதியே அய்யத்திற்குரியதாகும்.

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “கருநாடக, குஜராத் அரசு போல அனைத்து மாநிலங்களும் கீதையைப் பாடமாக்க முன்வர வேண்டும்’’ என்று பரிந்துரை செய்கிறார். தொடக்கத்திலேயே இம்முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்!

‘ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக் கூடாது, தேர்வு எழுதக் கூடாது’ என்றெல்லாம் கட்டுப்பாடுகளை விதிக்கும் பா.ஜ.க. அரசுகள், மாநிலங்களை மத அடிப்படையில் பிரித்து வெறியர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதைத் தகர்த்து, மத நல்லிணக்கம், மனித சமத்துவம், மடமை ஒழிப்பு இவற்றை நிலைநிறுத்தி, மாணவர்களின் பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும்!ஸீ

ஞாயிறு, 19 மார்ச், 2023

மனுதர்மம் என்ன கூறுகிறது?

 

வறட்டுக் கூச்சல் போடாதீர்!

மின்சாரம்

ஹிந்து மதத்தைப் பற்றி மானமிகு ஆ. இராசா ஏதோ கூறி விட்டாராம்!

அவர் என்ன கூறினார்? அவர் கூறியதில் என்ன தவறு? ஆதாரமில்லாமல் கூறி இருக் கிறாரா? என்று அறிவு நாணயத்தோடு பதில் கூறிட வக்கற்றவர்கள், அவர்மீது மண்ணை வாரித் தூற்றுவது மதிகெட்ட, மானமற்ற செயல் அல்லாமல் வேறு என்னவாம்?

அதுவும் சங்பரிவார்க் கூட்டத்தைச் சேர்ந்த வானதி போன்ற படித்த பெண்கள் மானா வாரியாகப் பேசலாமா?

ஹிந்து மதத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றப்படும் மனுதர்ம சாஸ்திரம் பெண்களைப் பற்றி என்ன என்னவெல்லாம் கூறுகிறது? இதோ சில எடுத்துக்காட்டுகள்: 

 மனுதர்மம் - அத்தியாயம் 5

சுலோகம் 147: பாலியமாகவிருந்தாலும், யௌவனமாக  இருந்தாலும், வார்த்திபமாகவி ருந்தாலும் ஸ்திரிகள் தன்றன் வீடுகளிலும் தன் மனம் போனபடி ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது.

சுலோகம் 148:  பாலியத்தில் தகப்பன் ஆஞ்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆஞ்ஞையிலும், கணவனிறந்த பின்பு பிள்ளைகள் ஆஞ்ஞையிலும் இருக்க வேண்டிய தேயல்லது ஸ்திரிகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக்கூடாது.

சுலோகம் 154:       கணவன் துர்ராச்சாரமுள்ள வனாக விருந்தாலும், அந்நிய ஸ்திரி லோலனாயிருந்தாலும், நற்குணமில்லாதவனாயிருந் தாலும் பதிவிரதையான  ஸ்திரியானவள் அவனை தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.

சுலோகம் 162: ஸ்திரிக்குத் தன் கணவனைவிட மற்றொருவனால் உண்டாக்கப்பட்ட பிள்ளை யும் சாஸ்திரத்தினாலொப்புக் கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டு பண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரிகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒரு சாஸ்த்திரத்திலுஞ் சொல்லப்பட வில்லை.

சுலோகம் 163:       தாழ்ந்தவனான தன் புருஷனை நீக்கி உயர்ந்தவனான மற்றொரு வனை எந்த ஸ்திரியடைகிறாளோ அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்த வளென்றுஞ் சொல்லப்படுகிறாள். ஒருவராலும் கொண்டாடப்பட மாட்டாள்.

சுலோகம் 164: ஸ்திரி விபச்சாரஞ் செய்கிற தினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறதுமல்லாமல் இறந்த பின் குள்ளநரியாகவும் பிறந்து வெண் குட்டம் முதலிய கர்ம வியாதியையும் அனுபவிக்கிறாள்.

மனுதர்மம் - அத்தியாயம் 9

சுலோகம் 14: மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி அவர்களைப் புணருகிறார்கள்.

சுலோகம் 15: மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மனமும், நண்பின்மையும், இயற்கையாக வுடைய வராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப் பினும் அவர்களை விரோதிக் கின்றார்கள்.

சுலோகம் 17:   படுக்கை, ஆசன அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.

சுலோகம் 18 :  மாதர்களுக்கு ஜாதகர்ம முதலி யவை மந்திரத்தோடு கிடையாது. மனச்சுத்தியுங் கிடையாது. பாவத்தைப் போக்குகிற மந்திரோப தேசமுமில்லை. ஆகையால் அபரிசுத் தாளாயிருக்கிறார்கள்.

சுலோகம் 19:  மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷ முள்ளவர்களென்று அநேக சுருதிகளிலுஞ் சாஸ்திரங்களிலுஞ் சொல்லப்பட்டி ருக்கின்றன. அதற்கு திருஷ் டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிரயாச் சித்தத்தைத் கேளுங்கள்.

சுலோகம் 30:          கணவன் சொற்படி நட வாதவள் உலகத் தாரால் நிந்திக்கப்பட்டு நரியாய்ப் பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்.

சுலோகம் 46 : கணவன் மனையாளைத் தள்ளி விட்டாலும், விற்றாலும் அந்த மனையாள் தன்மை அவளை விட்டு நீங்காது. இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டி காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான தருமத்தை நாமறிந்திருக்கிறோம். ஆதலாலிவ்விதமான பிறன் மனையாளிடத்தில் பிறந்த பிள்ளையும் உபயோகப்படமாட்டான்.

சுலோகம் 52 :          ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந்தால் மற்றுமொருவனை யடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன். அப்பயிர் நம்மிரு வருக்கும் பொதுவாயிருக் கட்டு மென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறார்ப் போல் ஒருவன் மனையாளி டத்தில் மனையாளில்லாத  மற்றொருவன் பிள் ளையையும் உண்டு பண்ணலாம். அந்த வேற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்திய கூலமாகவேயிருக்கிறது. ஏனெனில் பிஜத்தை விட நிலமுயர்ந்ததல்லவா? 

சுலோகம் 53: நில விஷயத்தைப் போல் மாதர் விஷயத்திலும், கணவனும் மற்றொரு வனும், பயிரைக் குறித்தாற்போல் புத்திரவுற் பத்தியைக் குறிக்கும் ஏற்பாடு செய்துகொண்டால் அதில் விளைகிற தானியம்போல் பிறந்த பிள்ளையும் இருவருக்கும் சொந்தமாகவி ருப்பதை உலகத்திற் கண்டிருக்கிறோம்.

சுலோகம் 59:          பிள்ளையில்லாமல் அந்தக் குலம் நசிக்கிறதாக விருந்தால் அப்போதந்த ஸ்திரி தன் கணவன், மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழுதலை முறைக் குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்சொல் லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்.

சுலோகம் 60:          விதவையிடத்தில் பெரி யோர் களின் அனுமதிப் பெற்றுக் கொண்டு புணரப் போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக் கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையை உண்டுபண்ண வேண்டியது. இரண்டாம் பிள் ளையை ஒரு போதும் உண்டு பண்ணக்கூடாது.

சுலோகம் 69:          ஒரு பெண்ணை ஒருவ னுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத் தானம் செய்த பின் அந்த ஒருவன் இறந்து போனால் அவன் தம்பி அல்லது அண்ணன் விவாகம் செய்து மேற்சொல்லும் விதிப்படி இருக்க வேண்டியது.

சுலோகம் 70:          அவனந்தப் பெண்ணை விதிப் படி விவாகஞ் செய்து வெள்ளை வஸ் திரமுடைய வளாயும், திரிகரண சுத்தியுடைய வளாயுமிருக்கச் செய்து, ருதுஸ்நான மானவுடன் ஒரு நாள் புணர்ந்து மறுபடி ருதுகாலம் வரையிற் பார்த்து கருப்ப முண்டாகாவிடில் கருப்பமுண் டாகிறவரையில் அந்தந்த ருதுஸ்நானமான வுடன் ஒவ்வோர் நாள் புணர வேண்டியது.

சுலோகம் 77: கணவனை மனைவி பகைத்தால் அவன் ஒரு வருஷம் வரையிலும் பார்த்து அவள் வணங்காவிடில் அவளுக்குத் தான் கொடுத்த ஆடையாபரணம் முதலிய வற்றை வாங்கிக் கொண்டு  அவளோடு பேசு தலும், புணர்தலும் ஒழிக்க ஜீவனத்துக்காகக் கொடுத்தது கவரத் தக்கதன்று.

சுலோகம் 78:  கணவன் சூதாடுகிறவனயிருந்தாலும், குடியனாகவிருந்தாலும், நோயாளி யாக இருந்தாலும், அவனுக்கு மனைவி கர்வத்தால் பணிவிடை செய்யா விட்டால் அவளுக்கு அலங்காரம் வஸ்த்திரம் படுக்கை இவைகளைக் கொடாமல் மூன்று மாதம் நீக்கி வைக்க வேண்டியது.

சுலோகம் 81:  மலடியான மனைவியை எட்டு வருஷத்திற்கு மேலும், சாப்பிள்ளை பெறு பவளை பத்து வருஷத்திற்கு மேலும், பெண் ணையே பெறுபவளை பதினொரு வருஷத் திற்கு மேலும், தீங்கு சொல்பவளை அப்பொழு தேயும் நீக்கி வேறு விவாகம் செய்து கொள்க. இந்த மனைவியர்களுக்கு மனமகிழ்ச்சிப் பொருள் கொடுக்க வேண்டியதில்லை.

சுலோகம் 88: குலம், நல்லொழுக்கம் இவை களாலுயர்ந்தவனாயும், பெண்ணுக்குத் தக்க ரூபமுள்ளவனாயும், தன் ஜாதிக்குத் தக்க ஜாதியுள்ள வனாயுமிருக்கிறவானுக்கு தனது பெண் எட்டு வயதுக்குட்பட்டிருந்தாலும், விதிப்படி விவாகம் செய்து கொடுத்து விடலாம்.

சுலோகம் 94: முப்பது வயதுள்ள வரன் அழகான பன்னிரெண்டு வயதுள்ள பெண் ணையும்,  இருபத்தி நாலு வயதுள்ள வரன் எட்டு வயது பெண்ணையும் விவாகம் செய்து கொள்ளலாம். இதற்கு முன் விவாகம் செய்து கொள்ள அவசரப்பட்டால் வேதமோதல் முதலிய தர்ம காரியம் கெடும். அதனால் பின்பு துக்கப்படுவான்.

மேற்கண்ட சான்றுகள் 1919இல் வெளியிடப்பட்ட திருவைந்திபுரம், கோமாண்டூர், இளைய வில்லி இராமாநுஜாச்சாரியரால் மொழிபெயர்க்கப்பட்ட 'அசல் மனுதரும சாஸ்திரம்' நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

இந்த எடுத்துக்காட்டுகள் உண்மையா பொய்யா என்பதை இதில் கூறப்பட்டுள்ள ஆதார நூல்களுடன் ஒப்பிட்டு நாணயமான முடிவுக்கு வரட்டும்.

எடுத்துக்காட்டப்பட்டுள்ளவை உண்மை என்று தெரிந்தால், அந்த மனுதர்மத்தைக் கொளுத்துவோம் என்ற மான உணர்ச்சியோடு வெளியில் வரட்டும்.

அதை விட்டு விட்டு வறட்டுக் கூச்சல் போடு வதால் பயனில்லை - பயனில்லை.

சனி, 18 மார்ச், 2023

உண்மையிலேயே துவேஷிப்பவர்கள் யார்?

 ஒற்றைப் பத்தி

யார் துவேஷிகள்?

கேள்வி: ஹிந்து மதத்தில் பிறந்து, ஹிந்துவாக வாழ்ந்து,ஹிந்துக்கள் சடங்குகளுடன் ஹிந்துத்துவ துவேஷம் கொள்வது ஏன்?

பதில்: ஹிந்துக்களைத் துவேஷித்தால்தான் மைனாரிட்டி மக்கள் வாக்களிப்பார்கள் என்பதே அந்தச் செய்தி.

'துக்ளக்', 18.1.2023, 

பக்கம் 32

நாத்திகத்திற்கும், ஹிந்து மதத்தில் இடம் உண்டு என்று ஆனபிறகு, ஹிந்து மதத்தை விமர்சிப்பது பற்றிப் புலம்புவானேன்?

உண்மையிலேயே துவேஷிப்பவர்கள் யார்? பிறக்கும்போதே பிராமணன் என்றும், சத்திரியன் என்றும், வைசியன் என்றும், சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் வகைப்படுத்தியது எந்த மதம்? ஹிந்து மதம்தானே!

இந்த ஏற்பாட்டை பிர்மா என்ற கடவுள்தான் செய்தார் என்பதும் ஹிந்து மதம்தானே!

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று 'பகவான்' கிருஷ்ணன் சொன்னதாகக் கீதை கூறுகிறதே! (அத்தியாயம் 9, சுலோகம் 32).

இதில் துவேஷிப்பவர்கள் யார்? இவர்கள் எல்லாம் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்களாம்; குருமூர்த்தி கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் புண்ணிய யோனியிலிருந்து பிறந்தவர்களா? சீ... எவ்வளவுப் பெரிய ஆபாசக் கூட்டம் இது!

கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல், முன்யோசனையும் இல்லையே! பகுத்தறிவோடு சிந்தித்துப் பேசுபவர்களை 'துவேஷிகள்' என்று தூற்றுவது யோக்கியமான செயலா?

தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்துகொண்டு, மற்றவர்களைப் பார்த்துத் 'துவேஷிகள், துவேஷிகள் என்பார்கள்' என்று லாலா லஜபதி சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

குருமூர்த்தி கூட்டத்திற்கு ஒன்று! முதலில் உங்கள் முதுகில் தொங்கும் பூணூலைத் 'தூ' என்று சொல்லி தூக்கி எறியுங்கள் பார்க்கலாம்!

தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்கள்) என்று காட்டுவதுதானே அந்தச் சின்னம்! துவேஷம்!

பார்ப்பனப் பெண்களுக்குக்கூடப் பூணூல் அணியும் உரிமை கிடையாதே! அவர்களையும் சேர்த்து விபச்சார தோஷமுடையவர்கள் என்று உங்கள் மனுதர்ம சாஸ்திரம் (அத்தியாயம் 9, சுலோகம் 19) சொல்லவில்லையா?

பெற்ற தாயையே விபச்சார தோஷமுள்ளவர் என்று கூறும் கேடுகெட்ட கூட்டம் யாரைப் பார்த்து துவேஷிகள் என்று கூறுவது?

 -  மயிலாடன்


வியாழன், 9 மார்ச், 2023

கோயபல்சு குருமூர்த்தியே, பதில் சொல்! ( கந்தன் பிறப்பு)

 

மின்சாரம்


புராணம் என்றாலே புளுகு மூட்டைதான். புராணங்களுக்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்திகள் அதைவிடப் புளுகுணியாகத்தானே இருப்பார்கள்!

பார்வதி தேவியின் அழுக்கில் பிறந்தவன் தான் விநாயகன் என்று அவர்கள் எழுதிய புராணத்தை ஆதாரம் காட்டியே எழுதுகிறோம்.

அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை - அல்லது உண்மையை ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் இல்லை என்கிறபோது, இவர்களாகவே இன்னொரு பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவார்கள்.

இதோ ஒரு புளுகுணித்தனம்:

"மனு நீதியில் (சனா தனத்தில்) பல ஆபாசங்களும் பார்வதி தன் அழுக்கைத் திரட்டியதே விநாயகர் என்றும் - கம்யூனிஸ்டுகளும் ஹிந்து எதிர்ப்பாளர்களும் கூறுவதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை. நீங்கள் உதவ முடியுமா?" என்று கேட்டிருக்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வாசகர் ஈ. இளங்கோவன். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  சனாதனம் என்பது (சோ எழுதியது போல) ஒரு மஹா சமுத்திரம். அதில் சிறு துளிகளே இந்த நூல்கள், கதைகள். ஹிந்து மதம் பற்றிய கேவலமான ஏச்சுக்கு எப்படிப் பதிலளிப்பது என்று பார்ப்போம்.

"ஹிந்து மதத்தைக் கேவலப்படுத்த வேண்டும் என்று துவேஷ பாவத்தில் கேட்கப்படும் இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது சுலபம்." 

"பார்வதி தன்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்பது நம் அய்தீகம் - இதற்குப் பதில் நாம் எல்லோருமே கேவலமான அழுக்கில் பிறந்தவர்கள்தான், விநாயகர் அந்தக் கேவலமான அழுக்கில் பிறக்கவில்லை என்பதே, அவதாரங்கள் எல்லாம் மனிதர்களாக, நம்மை போலப் பிறந்தவர்கள் தான்! ஆனால், விநாயகர் அப்படிப் பிறக்கவில்லை என்று திருவாளர் கோணிப் புளுகர் குருமூர்த்தி எழுதித் தள்ளியுள்ளார் ('துக்ளக்' 28.9.2022 பக்கம் 8).

இது உண்மையா? விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று  Motilal Banarsidass Publishers, Delhi  வெளியிட்டுள்ள The Skanda Purana எனும் நூலின் பக்கம் 277 என்ன கூறுகிறது?

"In the meantime, the goddess cleansed her person and applied perfumes and unguents over her body. With the dirt of the cleansing therefrom she created a human body with the elephantine face"

இந்த நிலையில் , பார்வதி வாசனைத் திரவியங்களை பூசிக்கொண்டு இருந்தார். பின்னர்  குளிக்கச்செல்லும் போது தன் மேல் இருந்த அழுக்குகளைத் திரட்டி மனித உடலை உருவாக்கினார்.

இவ்வளவு வெளிப்படையாக பார்வதி தேவி தன் உடல் அழுக்கிலிருந்து (ஞிவீக்ஷீt) விநாயகனை உருவாக்கினாள் என்று இருக்கும் பொழுது - அதை மாற்றி தன் உடல்மீது பூசிய மஞ்சளை - அழுக்கை அல்ல - திரட்டி விநாயகரை உண்டு பண்ணினார் என்று எழுதுகிறார் - ஆடிட்டராக இருந்து எடிட்டரான குருமூர்த்தி என்றால், இவர்களின் மூளையில் படிந்த அழுக்கை என்னவென்று சொல்லுவது!

இன்னொரு கேள்வியும் உண்டு - அழுக்காகட்டும், மஞ்சளாகவே இருக்கட்டும் - இவற்றிலிருந்து பிள்ளை பிறக்குமா? 'கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப் பிளான் ஓட்டும்' என்பான்.

விநாயகர் அழுக்கில் பிறந்தார் என்பது கேள்வி கேட்டவருக்கே தெரிந்து இருக்கிறது. பதில் சொல்லும் குருமூர்த்தியோ - கேவலமான அழுக்கில் பிறந்தவர் அல்ல விநாயகர் என்று எழுதுகிறார்.

விநாயகர் அழுக்கில்தான் பிறந்தார் என்று அவர்களின் ஸ்கந்தபுராணத்திலிருந்தே நாம் எடுத்துக்காட்டிய நிலையில், விநாயகன் பிறப்பு கேவலமானது என்று அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்களே!

இதைப் போன்ற புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டும் போது கடைசியில் எப்படி முடிப்பார்கள் தெரியுமா?

'என்பது அய்தீகம்' என்றுதான் முடிப்பார்கள்.

அய்தீகத்தின் யோக்கியதையும் இதன் மூலம் அம்பலமாகவில்லையா?

குருமூர்த்திகளே, குருமூர்த்திகளே! ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்!

திரிநூல் தினமலரின் தில்லுமுல்லு திருகுதாளம்! (மனுதர்ம சாஸ்திரத்தில் விபச்சாரிகளின் மகன்கள்)

 

மின்சாரம்

சாரை விறுவிறுத்தால் அது யாரையோ கூப்பிடுமாம். அந்தப் பட்டியலில் 'தினமலருக்கு' முதலிடத்தைக் கொடுத்து விடலாம்.

'இது உங்கள் இடம் என்ற பகுதி' - என்பது உண்மையிலேயே வாசகர்களின் பகுதி என்பதைவிட அவாளே எழுதிக் கொள்ளும் பகுதிதான்.

(எடுத்துக்காட்டுக்கு பெட்டி செய்தி காண்க!)

இன்று வெளிவந்த 'தினமலர்' ஏட்டில் 'இது உங்கள் இடம்' என்ற பகுதியில் ஒரு கடிதம்.

(1) மனுதர்ம சாஸ்திரத்தில் ஹிந்துக்கள் அனைவரும் விபச்சாரிகளின் மகன்கள் என்று குறிப்பிட்டு இருப்பதாக புளுகுகிறார் எம்.பி. 

ஆ. ராஜா என்று குறிப்பிட்டுள்ளது 'தினமலர்'.

அறிவு நாணயம் இருந்தால் ஆதாரத்தைக் காட்டட்டும். அவர் உரை ஒலிப்பதிவு செய்யப் பட்டது 'விடுதலை' ஏட்டிலும் முழுமையாக வெளி வந்துள்ளது (12.9.2022)

அவர் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி வயிறு வளர்ப்பதும் ஒரு பிழைப்பு தானா?

அவர் பேசியது என்ன?

"இந்துவாக இருக்கின்றவரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கின்றவரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கின்றவரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கின்றவரை நீ தீண்டத்தகாதவன்" என்று தானே பேசினார்.

இதற்கு ஆதாரமாக மனுதர்மத்தையும் எடுத்துக் காட்டுகிறார் (மனுதர்ம சாஸ்திரம் 1919 பதிப்பு - திருவைந்திரபுரம் கோமாண்டூர் இளைய வில்லி இராமாநுஜாசாரியார் - ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது - பெட்டிச் செய்தி காண்க)

இந்த மனுதர்ம சாஸ்திர நூல் எட்டாம் அத்தியாயம்  - 415, 417 (பக்கம் 234) இவற்றினை ஆதாரம் காட்டி தான் பேசினார்.

தினமலருக்கு அறிவு நாணயம் இருந்தால் இந்த அத்தியாயத்தையும், சுலோகங்களையும் எடுத்துக் காட்டியல்லவா மறுக்க வேண்டும்.

இதற்கு மாறாக பொய்யில் புழுத்த கேவலத்துக்குப் பொட்டு வைத்ததுபோல "ஹிந்துக்கள் அனைவருமே விபச்சாரி மகன்கள்" என்று ஆ. இராசா பேசினார் என்று  சொல்லுவது பச்சையான அயோக்கியத்தனம் அல்லவா?

2). திராவிட கழகம் சார்பில் (அதில்கூட பித்தலாட்டம் - திராவிடர் கழகமே தவிர திராவிட கழகம் அல்ல) "கி.வீரமணி எழுதி விடுதலை பதிப்பகம் வெளியிட்ட அசல் மனுதர்மம் என்ற புத்தகத்தை காட்டுகிறார், அசல் மனுதர்மம் என்றால் "டூபிளி கேட்' மனுதர்மம் என்று ஒன்று உள்ளது போலும்" என்று 'தினமலரி'ல் எழுதப்பட்டுள்ளது.

அசல் மனுதர்மம் என்று போட்டதற்கே காரணம்   (மேலே எடுத்துக்காட்டியபடி)

திராவிடர் கழக அலுவலகத்தில் டைப் செய்யாமல் (ஞிஜிறி) ஒரிஜினல் மனுதர்மத்தை ஸ்கேன் செய்து அப்படியே வெளியிட்டது. 

'தினமலர்' உண்மையிலேயே அவர்கள் கூறும் அந்த அசல் மனுதர்மத்தைக் கொண்டு வந்த காட்டி, எடுத்துக்காட்டி, வீரமணி சொல்லுவதுபோல சூத்திரன் என்பதற்கு அந்த அர்த்தம் கிடையாது என்று நிரூபிக்கட்டுமே பார்க்கலாம் - இதனை சவால் விட்டே கேட்கிறோம்!

3) "மனுதர்ம சாஸ்திரம் சமஸ்கிருதத்தில் எழுதப் பட்ட தொகுப்பாகும். தி.க. வீரமணிக்கு சமஸ்கிருதம் எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது, புரிந்து கொள்ளவும் தெரியாது."

"ஒரு மொழியை சுத்தமாக தெரியாதவர் எப்படி அந்த மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூலின் கருத்தைப் புரிந்து கொள்ள முடியும்?" என்று அதிபுத்திசாலியாக தம்மை நினைத்துக் கொண்டு, அக்கப் போராக எழுதுகிறது இனமலர் ஏடு!

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இராமாயணம், கீதை எல்லாம் தமிழில் வெளி வரவேயில்லையா?

அவற்றை மேற்கோள் காட்டுவதே கிடையாதா?

திராவிடர் கழகம் அப்படியே அசல் எடுத்து வெளியிட்ட மனுதர்ம சாஸ்திர நூலை தமிழில் மொழி பெயர்த்து எழுதிய இராமானுஜாசாரியார் சமஸ்கிருதம் தெரிந்தவர்தானே - அதற்குச் சாற்றுக்கவி கொடுத்தவர் வே. வேதாந்தாசாரியார்தானே.

ஹிந்து மதமும், அதன் சாஸ்திரங்களும் பெரும் பாலான மக்களை சூத்திரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றால் தேவடியாள் மக்கள் என்றும் கூறி இருப்பதை அம்பலப்படுத்தி, ஹிந்து மதத்தின் மேலாதிக்க பார்ப்பனர்களின் சதியையும் வெளிப்படுத்தி வெகு மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டால், தங்கள் ஆதிக்கத்தின் ஆணிவேருக்கு ஆப்பு என்பதைப் புரிந்து கொண்டதால்தான் 'தினமலர்' 'துக்ளக்' கும்பல் 'லபோ துபோ!' என்று ஆத்திரம் கொப்பளிக்கக் குதியாட்டம் போடுகிறது.

'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!' என்ற முழக்கத்தை முன் வைத்தார் தந்தை பெரியார்.

அதற்குப் பிறகு தான் அந்த உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத் திமிர் அடங்கியது. மீண்டும் பெரும்பான்மையான பார்ப்பனர் அல்லாத மக்களை 'தினமலர்' கூட்டம் இழிவுபடுத்த ஆசைப்பட வேண்டாம் அவர்களின் ஆத்திரத்தைத் தூண்ட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

தினமலரின் பித்தலாட்டத்தைப் பாரீர்! 'தினமலர்' ஏடு, 'காலைக் கதிர்' என்ற ஏட்டையும் நடத்தி வருகிறது.

தினமலரில் உங்கள் இடம் என்ற பகுதியில் ஒரு கடிதம் வரும். அதனை எழுதியவரின் பெயர், ஊர் எல்லாம் இருக்கும். அதே கடிதம் அதன் காலைக் கதிர் ஏட்டில் வெளிவரும். அதில் எழுதியவர் பெயரும், ஊரும் வேறாக இருக்கும்.

எடுத்துக்காட்டுக்குச் சில:

தினமலர் 31.1.2004

தலைப்பு: "பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு"

எழுதியவர்: ஆர். ராஜகோபால் விருதுநகரிலிருந்து...

காலைக்கதிர் 4.2.2004

தலைப்பு: "பலத்தைக் காட்டுவோம் ராமதாசுக்கு"

எழுதியவர்: மு. ரஜினிபித்தன், கரூர்

இரண்டும் அட்சரம் பிறழாமல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர் 30.1.2004 

தலைப்பு: "ரஜினி ரசிகர்களே - எம். சுரேஷ் கடலூரிலிருந்து" 

காலைக் கதிர் 3.2.2004

தலைப்பு : "ராமதாசுக்கு பாடம் புகட்டுவோம்"

எழுதியவர்: ம. முத்துக்குமார் ஈரோடு

இரண்டும் அட்சரம் அரைப்புள்ளி மாறாமல் அதே மேட்டர். எடுத்துக்காட்டுக்கு இவை.

தினமலரின் ஆள் மாற்றுவேலை; திரிபு திரிபுதாள பித்தலாட்டம் புரிகிறதா? 

வந்தாரய்யா கோயபல்சு குருமூர்த்தி வழிக்கு!

ஆ.இராசா இப்படிப் பேசலாமா? "அத்திரிபாச்சா கொழுக் கட்டை!" என்று துள்ளிக் குதித்த கூட்டம் கடைசியில் 

ஆ. இராசா வழிக்கே வந்து சலாம் போட்டு விட்டது. 

நேற்று வெளிவந்த 'துக்ளக்' 11ஆம் பக்கத்தைப் பாருங்கள்.

கேள்வி: 'நீ கிறிஸ்தவனாக, இஸ்லாமியனாக, பெர்சியனாக, இல்லை என்றால் ஹிந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கூறியுள்ளார். அவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளதா?

பதில்: அப்படிக் கூறுவது உச்சநீதிமன்றம் அல்ல, நமது அரசியல் சாஸனம். அதற்கு விசுவாசத்துடன் இருப்பேன் என்று அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதன்கீழ் உறுதிமொழி எடுத்திருக்கிறார் ஆ. இராசா.

('துக்ளக்' 5.10.2022 பக்கம் 11)

உச்சநீதிமன்றம் சொன்னதா, அரசியல் சாசனம் சொன்னதா என்பதல்ல பிரச்சினை - இன்னும் சொல்லப் போனால் 

ஆ. இராசா சொன்னது மேலும் வலிமை பெற்றதாகி விட்டது.

ஆக, 'ஆ.இராசா சொன்னது உண்மை - உண்மை  - உண்மைதான்!'  அரசியல் சாசனத்தில் உளளதைத்தான் 

ஆ. இராசா கூறியுள்ளார் என்று சலாம் போட்டு ஒப்புக் கொண்டு விட்டார் கோயபல்சு குருமூர்த்தி. ஹி.... ஹி!